இந்தியாவில் சொத்து பரிவர்த்தனைகளின் பதிவு தொடர்பான சட்டங்கள்

அசையாச் சொத்து விற்பனை மற்றும் வாங்கும் ஆவணங்களை பதிவு செய்தல் கட்டாயமாகும், ஆதாரங்கள் பாதுகாப்பதை உறுதிப்படுத்துகிறது,மோசடியிலிருந்து தடுக்கிறது மற்றும் தலைப்பு உத்திரவாதம் அளிக்கிறது

ஆவணங்களை பதிவு செய்யும் சட்டம், இந்திய பதிவு சட்டத்தில் அடங்கியுள்ளது.  இந்தச் சட்டம் பல்வேறு ஆவணங்களை பதிவு செய்ய உதவுவதன் மூலம் சான்றுகள் பாதுகாத்தல், மோசடிதடுப்பு  மற்றும் தலைப்பு உத்தரவாதம் தருகிறது.

 

பதிவுக்கு  தேவைப்படும் கட்டாய  சொத்து ஆவணங்கள்

1908 ஆம் ஆண்டின் பதிவு சட்டத்தின் 17 வது பிரிவின்படி,100  ரூபாய்க்கு மேல் விற்கப்படும் அணைத்து அசையா சொத்துக்களும் பதிவு செய்யப்பட வேண்டும். அசையாச் சொத்தினை விற்பனை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே இதன் பொருள். எந்தவொரு அசையா சொத்துக்களும் ரூ. 100 க்கு குறைவாக வாங்க முடியாது.கூடுதலாக, அசையா சொத்தின் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளை, 12 மாதங்களுக்கு  மேல் குத்தகைக்கு விடும் இடமும் பதிவு செய்யப்பட வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில், சம்மந்தப்பட்ட நபர் துணை பதிவாளர் அலுவலகத்திற்கு வரமுடியாமல் போனால், அந்த சம்மந்தப்பட்ட நபருடைய  இடத்துக்கே சென்று ஆவணங்கள் பதிவு செய்ய துணைபதிவாளருக்கு அதிகாரம் உண்டு. அசையா சொத்து என்பது, நிலம், கட்டிடம் , இவைகளுடன் இணைக்கப்பட்ட அணைத்து உரிமைகளையும் குறிக்கும்.

 

செயல்முறை மற்றும்  தேவையான ஆவணங்கள்

பதிவு செய்ய வேண்டிய சொத்து ஆவணங்கள், சொத்து இருக்கும் எல்லைக்கு உட்பட்ட துணை பதிவாளர் அலுவலகத்தில்  சமர்ப்பிக்கபட வேண்டும். சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர் இருவரும், இரண்டு சாட்சியங்களோடு, ஆவணங்கள் பதிவு செய்யும்பொழுது நேரில் வரவேண்டும்.

கையொப்பமிடுபவர்கள் , அடையாளத்தையுடன் வர வேண்டும். ஆதார் கார்டு, பான் கார்டு , மற்றும் அரசாங்க அதிகாரத்திற்கு உட்பட்டு அளிக்கப்பட்ட எந்த ஒரு அடையாள அட்டையையும் கொண்டு வரலாம். கையெழுத்திடுபவர்கள் வேறு யாருக்காவது உரிமையை கொடுக்க விரும்பினால், அதையும் கூற வேண்டும்.

ஒருவேலை, உடன்படிக்கை செய்வது ஒரு நிறுவனமாக இருந்தால், அந்நிறுவனத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் நபர் அந்த பதிவினை மேற்கொள்ள அங்கீகாரம் / அதிகாரியின் கடிதம், மற்றும் நிறுவனத்தின் ஒப்புதல் போன்ற ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும்.

நீங்கள் சொத்து அட்டை, அசல் ஆவணங்கள் , முத்திரை தாள் வரி செலுத்திய ரசீது ஆகியவற்றை துணை பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களை பதிவு செய்யும் முன்பு, துணை பதிவாளர் சரியான முத்திரை தாள் வரி செலுத்தப்பட்டுள்ளதை என்று உறுதிசெய்வார். அதில் எதாவது பற்றாக்குறை இருந்தால், துணை பதிவாளர் அதை பதிவு செய்ய மறுத்து விடுவார்.

 

கால அளவு மற்றும் கட்டண தொகை

கட்டாயமாக பதிவு செய்ய வேண்டிய ஆவணங்கள், கட்டணத்தொகையுடன் நான்கு மடங்களுக்கு முன்பே சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒருவேலை, குறித்த நேரத்தில் பதிவு செய்ய இயலாவிட்டால், நீங்கள் அதை அடுத்த 4 மாதத்திற்குள்  மீண்டும் பதிவு செய்வதற்கு துணை பதிவாளரிடம் விண்ணப்பிக்கலாம், ஆனால்கட்டணத்தொகை அபதாரத்துடன் 10 மடங்கு அதிகமாகும். பதிவு கட்டணமாக சொத்துமதிப்பின் மொத்த தொகையிலிருந்து 1% அல்லது அதிகபட்சமாக30,000. ருபாய் வசூலிக்கப்படும்.

முன்னாட்களில், கொடுக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் 6 மடங்களுக்கு பின்னரே திருப்பி அளிக்கப்படும். ஆனால் துணை பதிவாளர் அலுவலகங்கள், கணினிமயமாக்கப்பட்டதால், அணைத்து ஆவணங்களும்(பதிவு எண், அடையாள அட்டைகள், பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ) உடனடியாக திருப்பி கிடைத்துவிடுகிறது.

 

பதிவு செய்யப்படாததால் வரும் விளைவுகள்

நீங்கள் வாங்கிய சொத்தை பதிவு செய்யாவிடில் அது பேராபத்தில் சென்று முடியும். கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் பதிவு செய்யப்படாமல் போனால், பின்னாட்களில் அதை ஒரு ஆதாரமாக  எந்த ஒரு நீதிமன்றமும் ஏற்காது.

(இக்கட்டுரை ஆசிரியர், முகப்பு நிதி மற்றும் வரிவிதிப்பு  துறையில் 35 வருடங்கள் அனுபவமுள்ள வல்லுநர்)

 

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (0)
  • 😔 (0)

Recent Podcasts

  • Casagrand சென்னையில் பிரெஞ்சு கருப்பொருள் குடியிருப்பு சமூகத்தை அறிமுகப்படுத்துகிறது
  • கொச்சி வாட்டர் மெட்ரோ படகுகள் உயர் நீதிமன்றம்-ஃபோர்ட் கொச்சி வழித்தடத்தில் சேவையைத் தொடங்குகின்றன
  • மெட்ரோ வசதிகள் கொண்ட அதிகபட்ச நகரங்களைக் கொண்ட மாநிலமாக உ.பி
  • உங்கள் இடத்தை மேம்படுத்த நேர்த்தியான மார்பிள் டிவி யூனிட் வடிவமைப்புகள்
  • 64% HNI முதலீட்டாளர்கள் CRE இல் பகுதி உரிமை முதலீட்டை விரும்புகிறார்கள்: அறிக்கை
  • பாக்டீரியா எதிர்ப்பு வண்ணப்பூச்சு என்றால் என்ன, அது எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?