அடுத்த மூன்று மாதங்களுக்கு ஆதார் அட்டை விவரங்களை இணையம் மூலம் இலவசமாக புதுப்பிக்கலாம். மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை இந்த இலவசச் சேவை கிடைக்கும். இந்த சேவையை மைஆதார் ‘myAadhaar’ எனும் இணையத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும். ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுபித்தால் வழக்கம்போல் ரூ.50/- கட்டணமாக வசூலிக்கப்படும்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பயனாளர்கள் https://myaadhaar.uidai.gov.in/ எனும் இணையத்தில் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தங்களின் தரவுகளை புதுப்பித்துக்கொள்ளலாம்.
ஏற்றுக்கொள்ளக்கூடிய முகவரி மற்றும் அடையாள ஆவணங்களின் பட்டியல் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது.