Site icon Housing News

Tnreginet: TN ரெஜிநெட்டைப் பயன்படுத்தி தமிழகத்தில் EC மற்றும் கைடுலைன் மதிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி

Tnreginet: Know how to get EC, Guideline value online in Tamil Nadu

TNரெஜிநெட்  என்றால் என்ன?

மாநில அரசு தனது குடிமக்களுக்குப் பல்வேறு ஆவணங்களின் பதிவு உட்பட பல சேவைகளைத்   தமிழ்நாடு பதிவுத் துறையின் அதிகாரப்பூர்வ போர்டலான Tnreginet மூலம் வழங்குகிறது. பிறப்பு, திருமணம், இறப்பு மற்றும் சிட் ஃபண்ட் ஆகியவற்றிற்கான பதிவு செயல்முறையை TN Reginet இணையதளம் மிகவும் எளிதாக்குகிறது. இதன் மூலம் வில்லங்கச் சான்றிதழும் பெறலாம்.

நிலம் மற்றும் சொத்துப் பரிவர்த்தனை மற்றும் உரிமை தொடர்பான தகவல்களின் களஞ்சியமாகவும் Tnreginet போர்டல் செயல்படுகிறது.

தமிழ்நாடு பதிவுத் துறையின் தலைவரான இன்ஸ்பெக்டர்-ஜெனரல் ஆஃப் ரெஜிஸ்ட்ரேஷன் (IGR)  Tnreginet போர்ட்டல் வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் பொறுப்பானவர் ஆவார்.

 

Tnreginet போர்டல் வழங்கும் சேவைகள்

Tnreginet போர்டல் (https://tnreginet.gov.in/portal/) பின்வரும் சேவைகளை வழங்குகிறது:

ஆந்திரப் பிரதேசத்தில் (AP) IGRS சந்தை மதிப்பு பற்றி அறிக

 

Tnreginet: பயனர் பதிவு

Tnreginet  வழங்கும் சேவைகளைப் பெற, நீங்கள் போர்ட்டலில் பதிவு செய்தல் அவசியமானது.

Tnreginet போர்ட்டலில் பயனராகப் பதிவு செய்ய இந்த வழிகாட்டியைப் பின்பற்றவும்:

படி 1: Tnreginet இணைய போர்ட்டலில், ‘பதிவுவிருப்பத்தை கிளிக் செய்யவும்.

 

படி 2: பயனர் பதிவு படிவத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு, பதிவை நிறைவு செய்கபொத்தானை அழுத்தவும்.

 

 

 

 

பயனர் சுயவிவரத்தை உருவாக்கிய நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் Tnreginet-இல் பதிவுசெய்யப்பட்ட பயனரின் சேவைகளில் ஏதேனும் ஒன்றைப் புதிய பயனர்கள் உபயோகிக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். இல்லையெனில், அப் பயனர் ஐடி தானாகவே செயலிழக்கம் செய்யப்படும். முன்பே பதிவு செய்துள்ள பயனர்கள் Tnreginet-ஐ இறுதியாக உபயோகித்த தேதியிலிருந்து மூன்று மதங்களுக்குள் ஒருமுறையாவது போர்ட்டல் வழங்கும் சேவைகளில் ஏதேனும் ஒன்றைப் பெற வேண்டும். இல்லையெனில், அவர்களின் பயனர் ஐடி தானாகவே செயலிழக்கம் செய்யப்படும்.

 

Tnreginet EC: Tnreginet இல் வில்லங்கச் சான்றிதழை தேடுவது எப்படி?

பதிவுத் துறையானது மூன்று நாட்களுக்குள் வணிக நிறுவனங்களுக்குச் வில்லங்கச் சான்றிதழை (EC) வழங்கு வேண்டும் என்பதை  2021-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கட்டாயமாக்கியது. நீங்கள் Tnreginet அரசாங்க போர்ட்டலைப் பயன்படுத்தி வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பதிவிறக்கலாம் மற்றும் மின்னஞ்சல் மூலம் மூன்று நாட்களுக்குள் சான்றளிக்கப்பட்ட EC நகலைப் பெறலாம்.

Tnreginet EC-ஐ ஆன்லைனில் பார்க்க, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

படி 1: Tnreginet போர்ட்டலில், ‘சர்வீசஸ்என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

 

 

படி 2: நீங்கள் Tnreginet-இல் ‘என்கம்பரன்ஸ் சர்டிபிகேட்/ வில்லங்கச் சான்றிதழ்’ தேர்வில், ‘ECa– காண்கஎன்பதை கிளிக் செய்யவும்.

 

 

படி 3: Tnreginet போர்டல் ‘வில்லங்கச் சான்றிதழ் தேடல்/ என்கம்ப்ரன்ஸ் சான்றிதழ் தேடல் திரையில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

 

  

 படி 4: மண்டலம், மாவட்டம், EC தொடக்க தேதி மற்றும் சர்வே விவரங்களை நிரப்பி, ‘சேர்பொத்தானை கிளிக் செய்யவும். கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடுஎன்பதை கிளிக் செய்யவும்.

 

Tnreginet கைடுலைன் மதிப்பு

Tnreginet கைடுலைன் மதிப்பானது தமிழ்நாட்டில் நிலம் மற்றும் சொத்து பதிவு செய்யக்கூடிய குறைந்தபட்ச விலையைக் குறிக்கிறது.

தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து நிலம் மற்றும் சொத்துக்களுக்கான மதிப்பை நிர்ணயிப்பது  மாநில அரசுகளின் பொறுப்பாகும். ஒவ்வொரு நிலத்திற்கும் சொத்துக்கும் குறைந்தபட்ச விலையை ஒதுக்கப்படுகிறது. அதாவது, அதைவிடக் குறைந்த மதிப்பில் அச்சொத்தை விற்க முடியாது என்பது இதன் பொருளாகும். இந்த குறைந்தபட்ச பரிவர்த்தனை விகிதம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது – சர்கிள் ரேட், குறைந்தபட்ச மதிப்பு, ரெடி ரெக்கனர் மதிப்பு, கைடுலைன் மதிப்பு அல்லது கைடன்ஸ் மதிப்பு, கலெக்டர் மதிப்பு போன்றவை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அடிப்படை குறைந்தபட்ச மதிப்பானது Tnreginet கைடுலைன் மதிப்பு என அழைக்கப்படுகிறது.

சொத்தின் கைடுலைன் மதிப்பை சந்தை மதிப்புக்கு ஏற்ப அமைக்க வேண்டி, மற்ற மாநிலங்களைப் போலவே Tnreginet கைடுலைன்  மதிப்பும் அவ்வப்போது திருத்தப்படுகிறது. (கைடுலைன் மதிப்பு மற்றும் சொத்தின் சந்தை விமதிப்புக்கு இடையிலான வேறுபாட்டை அறிய, எங்கள் விவரமான வழிகாட்டியை இங்கே படிக்கவும்.)

கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு வகையான சொத்தின் விற்பனை விவரங்கள் மற்றும் கள ஆய்வுகளின் அடிப்படையில் Tnreginet கைடுலைன் மதிப்பு அமைக்கப்படுகிறது 

மேலும் காண்க: தமிழ்நாட்டில் கைடுலைன் மதிப்பு: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

 

கைடுலைன் மதிப்பு Tnreginet: தமிழ்நாட்டில் உள்ள சொத்தின் கைடுலைன் மதிப்பைச் சோதிக்கும் முறை

தமிழ்நாட்டில் சொத்து வாங்க விரும்புவோர் மற்றும் விற்பனையாளர்கள் சொத்தின் கைடுலைன் மதிப்பை Tnreginet போர்டலில் சோதிக்கலாம். இதில் நிலம் மற்றும் சொத்தின் தமிழ்நாடு வழிகாட்டி மதிப்பைக் கண்டறியா பிவரும் படிகளைப் பின்பற்றவும். 

படி 1: Tnreginet போர்ட்டல் https://tnreginet.gov.in/portal/ முகப்புப் பக்கத்துக்குச் சென்று  ‘கைடுலைன் மதிப்பு’ என்பதை கிளிக் செய்யவும்.

 

 

படி 2: 2002ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் உள்ள சொத்தின் கைடுலைன் மதிப்பு அடுத்த பக்கத்தில் காண்பிக்கப்படும் (தமிழகத்தில் கைடுலைன் மதிப்பு கடைசியாகத் திருத்தப்பட்ட வருடம்).

 

 

படி 3: நீங்கள் Tnreginet கைடுலைன் மதிப்பைச் சோதிக்க காலவரையைத் தேர்ந்தெடுத்ததும் ‘கைடுலைன் மதிப்பு மற்றும் சொத்து மதிப்பீடு’ பக்கத்திற்குத் திருப்பி விடப்படுவீர்கள். தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து தேடுஎன்பதை கிளிக் செய்யவும்.

 

  

குறிப்பு: முன்னேற்றம் அடைந்த பகுதிகளில் தெரு எண் மற்றும் முன்னேறி வரும் பகுதிகளில் நிலம் மற்றும் சொத்துக்கான சர்வே எண் அடிப்படையில் கைடுலைன் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Tnreginet-இல் உங்கள் தேடலைத் தொடர பொருந்தக்கூடிய விருப்பத்தை கிளிக் செய்யவும். சுமார் 2.19 லட்சம் தெருக்கள் மற்றும் 4.46 கோடி சர்வே எண்களின் கைடுலைன் மதிப்பு பற்றிய தகவல்கள் Tnreginet-இல் கிடைக்கின்றன.

 

படி 4: தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டலம் மற்றும் பதிவு விவரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு தெருவிற்கும் தமிழ்நாடு கைடுலைன் மதிப்பு Tnreginet-இல் காண்பிக்கப்படும்.

 

 

Tnreginet: அதிகார வரம்பு அறியும் செயல்முறை

உங்களது சொத்துள்ள சார்ந்த உள்ளூர் அதிகார வரம்பு மட்டுமே நிலம் மற்றும் பிற தொடர்புடைய விவரங்களை உங்களுக்கு வழங்க முடியும். Tnreginet போர்ட்டலில் பின்வரும் படிகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் பகுதியின் உள்ளூர் அதிகார வரம்பைக் கண்டறியலாம்:

 

 

Tnreginet: கட்டிட மதிப்பு கணக்கீடு

தமிழ்நாட்டில் சொத்துப் பதிவு செய்கையில் போது செலுத்தவேண்டிய முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் பற்றி அறிந்து கொள்ள சொத்து மதிப்பைக் கணக்கிடுவது அவசியம். Tnreginet போர்ட்டலில் கட்டிட மதிப்பு கணக்கீட்டை நீங்களே கணக்கிடமுடியும்.

Tnreginet போர்ட்டல் முகப்புத் திரையில் கீழே உள்ள கட்டிட மதிப்பு கணக்கீடுவிருப்பத்தை கிளிக் செய்யவும்.

 

 

உங்கள் கட்டிடத்தின் மதிப்பை அறிய படிவத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் உள்ளிடவும்.

 

 

 

மேலும் அறிக: தமிழ்நாட்டில் EC பட்டா சிட்டாவை ஆன்லைனில் பெறுவது எப்படி?

 

தமிழ்நாடு முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் 

ஆவண வகை முத்திரைக் கட்டணம் பதிவுக் கட்டணம் 
விற்பனை பத்திரம் சொத்தின் சந்தை மதிப்பில் 7% சொத்தின் சந்தை மதிப்பில் 4%
பரிசுப் பத்திரம் சொத்தின் சந்தை மதிப்பில் 7% சொத்தின் சந்தை மதிப்பில் 4%
பரிமாற்ற பத்திரம் அதிக பட்ச சந்தை மதிப்பில் 7% அதிக பட்ச சந்தை மதிப்பில் 4%
எளிய அடமான பத்திரம் 1% (கடன் தொகையில்) அதிகபட்சம் ரூ. 40,000 கடன் தொகையில் 1%, அதிகபட்சம் ரூ.10,000 
உடைமை பத்திரத்துடன் அடமானம் கடன் தொகையில் 4% கடன் தொகையில் 1%, அதிகபட்சம் அதிகபட்சம் ரூ.2,00,000 
விற்பனை ஒப்பந்தம் ரூ 20 முன் பணத்தில் 1% (உடைமை வழங்கப்பட்டால், மொத்த மதிப்பில் 1%)
கட்டிடம் கட்டுவது தொடர்பான ஒப்பந்தம் முன்மொழியப்பட்ட கட்டுமான செலவு அல்லது கட்டுமான மதிப்பு அல்லது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பு இதில் அது அதிகமோ அதில்  1% முன்மொழியப்பட்ட கட்டுமான செலவு அல்லது கட்டுமான மதிப்பு அல்லது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பு இதில் அது அதிகமோ அதில்  1%
ரத்து பத்திரம் ரூ. 50 ரூ. 50
பகிர்வு பத்திரம்
I) குடும்ப உறுப்பினர்களிடையே பங்கீடு சொத்தின் சந்தை மதிப்பில் 1%, ஒவ்வொரு பங்கிற்கும் அதிகபட்சமாக ரூ.25,000 1%,  அதிகபட்சமாக ஒவ்வொரு பங்கிற்கும் ரூ.4,000.
II) குடும்பம் அல்லாத உறுப்பினர்களிடையே பங்கீடு பிரிக்கப்பட்ட பங்குகளுக்கான சொத்தின் சந்தை மதிப்பில் 4% பிரிக்கப்பட்ட பங்குகளுக்கான சொத்தின் சந்தை மதிப்பில் 1%
அங்கீகாரம் பெற்ற நபர்
I) அசையாச் சொத்தை விற்பதற்கான பொது அதிகாரம் ரூ 100 ரூ.10,000
II) அசையாச் சொத்தை விற்பதற்கான பொது அதிகாரம் (அதிகாரம் குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படுகிறது) ரூ 100 ரூ.1,000
III) அசையும் சொத்து விற்பனை மற்றும் பிற நோக்கங்களுக்காக பவர் ஆஃப் அட்டர்னி ரூ 100 ரூ 50
IV) மதிப்பு சார்ந்து வழங்கப்பட்ட பவர் ஆஃப் அட்டர்னி மதிப்பில் 4% மதிப்பில் 1% அல்லது ரூ. 10,000, எது அதிகமோ அது
தீர்வு பத்திரம்
I) குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவாக சொத்தின் சந்தை மதிப்பில் 1% ஆனால் ரூ.25,000க்கு மிகாமல் சொத்தின் சந்தை மதிப்பில் 1%, அதிகபட்சம் ரூ 4,000/-க்கு உட்பட்டது
II) பிற வழக்குகளில் சொத்தின் சந்தை மதிப்பில் 7% சொத்தின் சந்தை மதிப்பில் 4%
கூட்டாண்மை பத்திரம்
I) மூலதனம் 500 ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் ரூ 50 முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தில் 1%
II) பிற வழக்குகளில் ரூ 300 முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தில் 1%
உரிமைப் பத்திரங்களைப் பணையம் வைப்பதற்கான  கோரிக்கை மனு கடன் தொகையில் 0.5%, அதிகபட்சம் ரூ.30,000. கடன் தொகையில் 1%, அதிகபட்சம் ரூ.6,000
விடுதலை பத்திரம்
I) குடும்ப உறுப்பினர்களிடையே விடுவிப்பு (உடன்பிறப்பு/பங்காளி) சொத்தின் சந்தை மதிப்பில் 1%, ஆனால் ரூ.25,000க்கு மிகாமல் சொத்தின் சந்தை மதிப்பில் 1%, அதிகபட்சம் ரூ.4,000
II) குடும்பம் அல்லாத உறுப்பினர்களிடையே விடுவிப்பு (இணை உரிமையாளர் மற்றும் பினாமி விடுவிப்பு) சொத்தின் சந்தை மதிப்பில் 7% சொத்தின் சந்தை மதிப்பில் 1%
குத்தகை
30 ஆண்டுகளுக்குக் கீழ் குத்தகை வாடகை, பிரீமியம், அபராதம் போன்றவற்றின் மொத்தத்தில் 1%. 1%, அதிகபட்சம் 20,000 ரூபாய்
99 ஆண்டுகள் வரை குத்தகை வாடகை, பிரீமியம், அபராதம் போன்றவற்றின் மொத்தத்தில் 4%. 1%, அதிகபட்சம் 20,000 ரூபாய்
99 ஆண்டுகளுக்கு மேல் குத்தகை அல்லது நிரந்தர குத்தகை வாடகை, அபராதம், பிரீமியம் முன்பணம், ஏதேனும் இருந்தால் இவற்றின் மொத்தத் தொகையில் 7% 1%, அதிகபட்சம் 20,000 ரூபாய்
நம்பிக்கைப் பிரகடனம் (ஒரு சொத்து இருந்தால், அது விற்பனையாகக் கருதப்படும்) ரூ 180

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

தமிழ்நாட்டில் எத்தனை துணைப் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன?

தமிழகத்தில் 575 துணைப் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் கைடுலைன் மதிப்பு இறுதியாக எப்போது திருத்தப்பட்டது?

தமிழகத்தில் கைடுலைன் மதிப்பு கடந்த 2017-ம் ஆண்டு திருத்தப்பட்டது. மீண்டும் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் 2022-இல் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சொத்து உரிமையாளரின் பெயரை மாற்றுவதற்கான ஆவணங்களை வழங்குவதற்கு எத்தனை நாட்கள் ஆகும்?

சொத்து உரிமையாளரின் பெயரை மாற்றுவதற்கான ஆவணங்களை வழங்க 15 நாட்கள் எடுக்கும்.

தமிழ்நாட்டில் கைடுலைன் மதிப்பு பற்றி நான் எங்கு தகவலறிவது?

தமிழ்நாட்டில் கைடுலைன்ல் மதிப்பு பற்றி தகவலறிய: 044-24640160; 044-24642774 ஆகிய எண்களில் அழைக்கலாம் அல்லது helpdesk@tnreginet.net என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

Was this article useful?
  • ? (8)
  • ? (0)
  • ? (0)
Exit mobile version