Site icon Housing News

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் நீரை பாதுகாக்கும் வழிமுறைகள் மற்றும் திட்டங்கள்: இல்லங்களில் நீரை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்த குறிப்புக்களோடான கட்டுரை

A guide to water conservation methods and its importance

நீர் பற்றாக்குறை என்பது உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளை தீவிரமான கவலைக்குள்ளாக்கும் ஒரு நிலை. 2019 ஆம் ஆண்டு சென்னையில் அனைத்து நீர்த்தேக்கங்களும் வறண்டு விட்டதால் அரசு இயந்திரம் “ ஜீரோ டே” என்று அறிவித்ததில் சென்னை சர்வதேச தலைப்புச்செய்தியில் இடம்பெற்றது. அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுவான NITI ஆயோக் அதன் அறிக்கையில் நீரைப் பாதுகாக்கும் வழிமுறைகளில் இந்தியா கவனம் செலுத்தவில்லை என்றால் பெங்களூரு, டெல்லி மற்றும் ஹைதராபாத் உட்பட மேலும் 20 நகரங்களில் அடுத்த சில ஆண்டுகளில் நிலத்தடி நீர் வற்றிவிடும் நிலை உருவாகும் என்று எச்சரித்திருக்கிறது. இந்த மோசமான சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கான ஒரே தீர்வு நீர் வளத்தைப் பாதுகாக்க அனைத்து குடும்பங்களிலும் பின்பற்றக்கூடிய கூடிய பொதுவான வழிமுறைகளை செயல்படுத்துவதுதான். நீர் பாதுகாப்பு பற்றி நீங்கள் புர்ந்து கொள்ளவும் மற்றும் ஒரு தனிமனிதனாக அது குறித்து நீங்கள் என்ன செய்யலாம் என்பதை விளக்கவும் இந்த  விரிவான வழிகாட்டி இங்கே வழங்கப்பட்டுள்ளது .

Table of Contents

Toggle

 

இந்தியாவில் நீரைப் பாதுகாக்கும் வழிமுறைகளுக்கான திட்டங்கள் மற்றும் முன் முயற்சிகள்

இந்தியா அரசின் கீழ் செயல்படும் ஜல் சக்தி அமைச்சகம் ஜல்சக்தி அபிமான் திட்டத்தை 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அது நீர்வளத்தை பாதுகாக்க  நாடுதழுவிய ஒரு பிரச்சாரம் ஆகும். அது நீர்வளத்தைப் பாதுகாக்க அடிமட்டநிலையிலிருந்தே மக்களை ஈடுபடச்செய்ய ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டம். நீர் வளத்தைப் பாதுகாக்கும் திட்டம் ஜூலை 1, 2019 முதல் செப்டம்பர் 30, 2019 வரையிலும்  மற்றும் அக்டோபர் 1, 2019 முதல் நவம்பர் 30, 2019 வரை இரண்டு கட்டங்களாக தொடங்கப்பட்டது

.வேர்ல்ட் வாட்டர் டே மார்ச் 22, 2021 அன்று, ‘மழையைப் பிடியுங்கள் அது எங்கு விழுந்தாலும் அது எப்போது விழுந்தாலும்’ என்ற  கருப்பொருளோடு ‘ஜல் சக்தி அபியான்: கேட்ச் தி ரெயின்’ (JSA:CTR) என்ற பிரச்சாரத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இது 2021 நவம்பர் 30 வரை, பருவமழைக்கு முந்தைய மற்றும் பருவமழை காலத்தில், இந்தியாவின் அனைத்து மாவட்டங்களின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை உள்ளடக்கியது.

இந்த பிரச்சாரத்தின் கீழ், நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்குதல்/பராமரித்தல், பல்வேறு பாரம்பரிய நீர்நிலைகளைப் புதுப்பித்தல், ஆழ்குழாய் கிணறுகளின் மறுபயன்பாடு மற்றும் மீள் ஊட்டம் அளித்தல், நீர்ப்படுகைகளின் மேம்பாடு மற்றும் தீவிர காடு வளர்ப்பு ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது

மேலும் காண்க:  வீட்டிற்கான தண்ணீர்த் தொட்டி  வாங்க ஒரு வழிகாட்டி

ஜல் சஞ்சய்

ஜல் சஞ்சய் திட்டம் என்பது பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் தொடங்கப்பட்ட நீர் பாதுகாப்பு முன் முயற்சியாகும். நீர் வளத்தைப் பாதுகாக்கும்  திட்டமானது தடுப்பு அணைகளைக் கட்டுதல் மற்றும் நீர்ப்பாசன அமைப்பு மற்றும் பாரம்பரிய நீர்நிலைகளை தூர்வாருதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. நீர்ப்படுகைகளில் நீர்வளத்தை பாதுகாக்கும் நோக்கில் பாரம்பரிய நீர் பாதுகாப்பு வழிமுறைகள்  மற்றும் மழைநீர் சேகரிப்பு தொழில் நுட்பக்கூறுகள் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்துவதிலும் கவனம் செலுத்தியது உள்ளூர் விவசாயிகளின்

ஆதரவுடனும் பிரச்சாரங்கள் மூலமாகவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் வாய்ப்புத் திட்டத்தின் (MGNREGP) கீழ் இந்தத் திட்டம் 2017 ஆம் ஆண்டின், சிறப்பு மிக்க திட்டமாக தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேலும் காண்க:  MCGM வாட்டர் பில் பற்றிய அனைத்துத் தகவல்களும்

 

நீரைப்பாதுகாக்கும் வழிமுறைகள்

நீர் பாதுகாப்பு திட்டங்களை எங்கு வேண்டுமானாலும்  எந்த விதமான கட்டமைப்புக்களிலும்  செய்யலாம். எந்தவிதப் பிரச்சினைகளுமின்றி மிகப் பெரிய அளவில் சேமிப்புகளை மேற்கொள்ள  பல்வேறு நீர் பாதுகாப்பு முறைகள் இங்கே கொடுக்கபப்ட்டுள்ளன

 

மழைநீர் சேகரிப்பு

மழைநீர் சேகரிப்பு என்பது இயற்கை நீர் வளத்தை பாதுகாப்பதற்கும் நிலத்தடி நீரை நிறைவு செய்து  நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும்  மிகவும் பயனளிக்கும் ஒரு முறையாகும். நீர் வளத்தை பாதுகாக்கும் இந்த முறையில்  மழைநீர் சேகரிக்கப்பட்டு, ஆழமான குழி அல்லது நீர்த்தேக்கத்தில் கசிந்து நிலத்தினுள் ஊடுருவச்செய்யப்படுகிறது இதன் விளைவாக  நிலத்தடி நீர்மட்டம்  உயருகிறது .

மேலும் காண்க:  நீர் பற்றாக்குறையை தவிர்க்க  நீர் சேகரிப்பு  மிகச்சிறந்த முறையாக ஏன் விளங்குகிறது.

 

நீர் அளவீட்டுக் கருவிகள் (மீட்டரிங்)

 

நீர் வீணாவதை தடுப்பதற்கு வாட்டர் மீட்டர்கள் நிறுவுதல் பயனளிக்க வல்ல மற்றொரு மிகச்சிறந்த வழி, இதன் மூலம் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் நீரின் அளவு கணக்கிடப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட நீரின் கொள்ளளவு கணக்கிடப்பட்டு அதற்கு சமமான நீரின் கட்டணம் வசூலிக்கப்படும். வழக்கத்துக்கு மாறாக அதிக நீர் பயன்பாட்டை கண்டறிய நீர் கட்டண ரசீதுகளை எப்போதுமே கண்காணித்துவாருங்கள். அது ஏதாவது கசிவுகள் இருந்தால் அதை கண்டறிய உதவும்  

மேலும் DJB பில் வியூ  பற்றி படியுங்கள்: டெல்லி ஜல்போர்ட் நீர் கட்டணத்தை பிணையம் வழியாக எவ்வாறு செலுத்துவது?

 

சாம்பல் நீர் (கிரே வாட்டர்) மறுசுழற்சி

 

கிரேவாட்டர் மறுசுழற்சி என்பது சமையலறை கழுவு தொட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் குளியலறை ஷவர்களில்  பயன்படுத்தப்பட்ட  மற்றும் கழிவு நீரைச் சேமிக்கும் ஒரு முறையாகும், கழிவறைகளில் பயன்படுத்த , தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய மற்றும் இதுபோன்ற இன்னும் பலவற்றுக்காகப் பயன்டுத்தப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. மழைநீரை நம்பியிருக்கும் மழைநீர் சேமிப்பு முறை போலல்லாமல், சாம்பல் நீர் (கிரே வாட்டர்) அளவுக்கு அதிகமாக கிடைக்கிறது. இந்த மறுசுழற்சி முறையை  பயன்படுத்துவதன் மூலம்  வீட்டு நீர் உபயோகம் கிட்டத்தட்ட 70% குறைந்துள்ளதை சுற்றுச்சூழல் வல்லுநர்கள் நிரூபித்துள்ளனர். 

மேலும் படிக்க நீடித்த நிலையான வாழ்விற்கு மூங்கில் வீடு வடிவமைப்பு  மற்றும் கட்டுமானத்திற்கான ஆலோசனைகள்

 

அழுத்தம் குறைக்கும் வால்வுகள்

அழுத்தத்தைக் குறைக்கும் வால்வுகள்  அடிப்படையில் ஹைட்ராலிக் அமைப்பில் கொடுக்கப்படும் அழுத்தத்தின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இந்த வால்வுகள் பயன்படுத்தப்பட வேண்டிய நீரின் முன் விரையறுக்கப்பட்ட அளவை உறுதி செய்கின்றன. இந்த வகையில் , நீர்வழிப்பாதையில்  கீழ்நிலைகளில்  உள்ள நீர் அமைப்புக்கள்  நீண்ட காலம் நீடித்து உழைப்பதோடு  மற்றும் நீர் பயன்பாட்டு அளவும் குறைக்கப்படுகிறது. தொழில்துறை, குடியிருப்பு, வணிக மற்றும் நிறுவன கட்டிடங்களில் நீர் பாதுகாப்புக்கான மிக செயல்திறன்மிக்க தீர்வாகும்

மேலும் காண்க: BWSSB பற்றிய அனைத்தும்

 

நீர் பாதுகாப்புச் செயல்திறன் மிக்க குளியலறை சாதனங்கள்

தற்போது, நீர் நுகர்வை 60% வரை குறைக்க குறைக்க வல்ல நீர்- சேமிப்புத் திறன் மிக்க கழிப்பறை தொட்டிகள், குழாய்கள் மற்றும் குளியலறை ஷவர் ஹெட்கள் போன்றவை சந்தையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. . குழாய்கள் மற்றும் ஷவர்களில் நீர் தெளிப்பு முறை மற்றும் கழிப்பறைகளில் அதிக அழுத்தத்தோடு நீர் வெளிப்படுத்துதலில் மேற்கொள்ளப்பட்ட நூதனமான மாற்றங்கள் போன்ற பயன்பாட்டு பழக்கவழக்கங்களில் சமரசம் செய்யாமல், நீர் பாதுகாப்பு வழிமுறைகளின் எல்லைகளை விரிவடையச்செய்கின்றன.

மேலும் காண்க : குடிமக்கள் மற்றும் வீட்டு வசதி சங்கங்கள் போன்றவைகள் நீரை சேமிப்பதற்கான பல்வேறு வழிமுறைகள்

 

இந்தியாவின்  பல்வேறு பாரம்பரிய நீர் பாதுகாப்பு  முறைகள்

அதி விரைவான நகரமயமாக்கல் மற்றும் நீர் மாசுபடுதல் ஆகியவற்றால்  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலத்தின் மேற்பரப்பு நீர் நிலைகள் மற்றும் நிலத்தடி நீரின் அளவு மற்றும் தரம் மீது கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் விவசாய அமைப்பு பெரும்பாலும் இன்னும் மழையை நம்பியே உள்ளது. பருவமழை மாற்றங்களின் காரணமாக பாரம்பரிய நீர் பாதுகாக்கும் வழிமுறைகளைப் மீண்டும் புதுப்பிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

தாலாப் அல்லது பந்தி

தலாப் அல்லது குளங்கள் குடிப்பதற்கும் வீட்டு உபயோகத்திற்கும் நுகரப்படுவதற்காக நீர் சேமித்து வைக்கப்படும் நீர்த்தேக்கங்கள். இந்த நீர்த்தேக்கங்கள் இயற்கையானதாக அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டவைகளாக இருக்கலாம். ஒரு ஐந்து பிகாஸ் சுற்றளவுக்குள் அடங்கியுள்ள நீர்த்தேக்கங்கள் தலாப் என்று அறியப்படுகின்றன ஆனால் ஒரு நடுத்தர அளவுள்ள ஏரி பந்தி என்று அறியப்படுகிறது

 

ஜலாரஸ்

கடந்த காலங்களில் சமூக பயன்பாட்டிற்காகவும், மத சடங்குகளுக்காகவும், அரச விழாக்களுக்காகவும் வழக்கமாகத் தொடர்ந்து  நீர் விநியோகம் செய்ய  ஜலாரஸ்கள்  கட்டப்பட்டன. இவை மூன்று அல்லது நான்கு புறங்களிலும் அடுக்கடுக்கான படிகளைக் கொண்ட செவ்வக வடிவ படிகிணறுகள். ஒரு ஏரி அல்லது ஆற்றின் எதிர் நீரோட்டத்திலிருந்து கசிந்து வரும் வரும் நிலத்தடி நீர் இந்த படிக்கிணறுகளில் சேகரிக்கப்படுகிறது.

 

பாவோலி

ஆளும் வர்க்கத்தினரால், யுக்திபூர்வமான, குடியுரிமை சார்ந்த அல்லது தர்ம காரியங்களுக்காக பாவோலிகள் கட்டமைக்கபட்டன. இந்தக் கட்டமைப்புக்கள் சமூகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான பயன்பாட்டுக்காக அமைந்தவை. பாவோலிகள், வளைவுகள் மற்றும் அலங்கார வேலைப்பாடுகளுடன் மிக அழகாக வடிவமைக்கப்பட்ட படிக் கிணறுகள். பாவோலிகள்  அமைக்கப்பட்ட இடத்தைப்பொருத்து அவற்றின் பயன்பாடுகள் தீர்மானிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, வணிக பயணப்பாதைகளில் அமைக்கப்பட்ட பாவோலிகள் இளைப்பாறுவதற்கான இடங்களாகக் கருதப்பட்டன அதே சமயம் கிராமத்தினுள் அமைக்கப்பட்டவை பயன்பாட்டுத் தேவைகளுக்காகவும் மற்றும் சமூக கூட்டங்களுக்காகவும் சந்திப்புக்களுக்காகவும் பயன்படுத்தபப்ட்டன

 

குந்த்

முக்கியமாக குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் குடிநீர் தேவைகளுக்காக நீர் வளத்தைப் பாதுகாக்கவும் மழைநீரை சேகரிக்கவும் குந்த்கள் கட்டப்பட்டன. இது அடிப்படையில் மையத்தில் உள்ள வட்டமான நிலத்தடி கிணற்றை நோக்கி சரிவாக ஒரு குழிவான தட்டு போன்ற  அமைப்பையுடைய நீர்ப்பிடிப்புப் பகுதியாகும்,. நவீன கால குந்த்கள் சிமெண்ட் கொண்டு கட்டப்படுகின்றன. பண்டைய காலத்தில் அவை கிருமிநாசிகளாக சுண்ணாம்பு மற்றும் சாம்பல் கொண்டு பூசப்பட்டன.

 

பவாரி

இந்தியாவின் பாரம்பரிய நீரை பாதுகாக்கும் வழிமுறைகளுக்கு ஒரு உதாரணமமாகத் திகழும்  பவாரிகள் ராஜஸ்தானில் ஆரம்பகால நீர் நிலை கட்டமைப்புக்களை உருவாக்கிய படிகிணறுகள் ஆகும். இப்பகுதி பெறும் குறைந்தபட்ச மழை நீரை  புறநகர்ப்பகுதிகளில்  மலைப்பாங்கான நிலப்பரப்பில் கட்டப்பட்ட கால்வாய்கள் வழியாக செயற்கை நீர் நிலைகளுக்கு திருப்பி விடுவதற்காக  தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டவைகள்

 

தான்கா

.குறிப்பாக  ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனப் பகுதிக்கு உகந்தக் வகையில் மழைநீர் சேகரிப்பு உத்தியை  உள்ளடக்கிய பாரம்பரிய நீர் பாதுகாப்பு வழிமுறை அமைப்புக்களில் தான்காவும்  ஒன்றாகும். தாங்கா என்பது ஒரு உருளை வடிவ நிலத்தடி குழியாகும், வீட்டு முற்றங்கள், கூரைகள் மற்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட  நீர்ப்பிடிப்பு அமைப்புக்களில் இருந்து வடியும் மழைநீர் அதற்குள் பாய்கிறது.

 

நதி

நதிகள் என்பன கிராமத்தில் உள்ள குளங்களைக் குறிக்கிறது, அதில் அருகிலுள்ள இயற்கை நீர் பிடிப்புப் பகுதியிலிருந்து மழை நீர் வந்து சேர்கிறது. இந்த நீர் நிலைகளுக்கு  ஒழுங்கற்ற வகையில் இடைவிடா மழைகாலங்களின் போது நீர் வருவதால் தொடர்ந்து வண்டல் மணல் அதில் சேருவதால் விரைவாக அதிகளவு சேறு படிந்துவிடும்

 

மூங்கில் குழாய் சொட்டு வடிநீர் அமைப்பு

இந்தியாவில் உள்ள பல்வேறு நீர் பாதுகாப்பு வழிமுறைகளில், மூங்கில் சொட்டு நீர் பாசன முறையானது நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் நடைமுறையில் உள்ளது. இது பழங்குடியின விவசாயிகளால் அடுக்கு நிலா வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட 200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான தொழில்நுட்பமாகும். இந்த அமைப்பில், நீர் மூங்கில் குழாய்களைப் பயன்படுத்தி வற்றாத நீரூற்றுகளில் இருந்து நீர் கடத்தப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.

 

ஸிங்க்ஸ்

ஜிங்ஸ் என்பது லடாக்கில் காணப்படும் நீர் சேமிக்கும் கட்டமைப்புகள். இவை பனிப்பாறை உருக்குவதால் வரும் நீரை சேகரிக்க கட்டப்பட்ட சிறிய நீர்நிலைகள். அம்மாதிரியான மலைப் பிரதேசங்களில் எளிதான நீர் சேமிப்பு மற்றும் மேலாண்மை முறைகளில் இது ஒன்றாகும். பனிப்பாறையிலிருந்து வரும் நீர்  வடிந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட  வாய்க்கல்களின் கட்டமைப்புக்கள் மூலம் நீர் நிலைகளுக்குத் திருப்பி விடப்படுகிறது.

 

குஹ்ல்ஸ்

பனிப்பாறைகள் உருகி  ஆறுகள் மற்றும் நீரோடைகள் வழியாக  வரும் நீரை மேற்பரப்பில் உள்ள வாய்க்கால்கள்  மூலம் சேகரிப்பது ஹிமாச்சலப் பிரதேசத்தின் மலைப்பாங்கான நிலப்பரப்பில் தொன்றுதொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும்  நீரை பாதுக்காக்கும் பழமையான வழிமுறைகளில் ஒன்றாகும். இப்பகுதியில் உள்ள 30,000 ஹெக்டேர் வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்த வாய்க்கால்கள் குஹ்ல்ஸ் என்று அறியப்படுகின்றன. இப்பகுதியில் நூற்றுக்கணக்கான குஹ்ல்ஸ் உள்ளன

 

ஜாக்வெல்ஸ்

இது இந்தியாவின் பழமையான நீர் பாதுகாக்கும் வழிமுறைகளில் ஒன்று . ஜாக்வெல்ஸ் என்பது மழைநீரை சேகரிக்கப் பயன்படும் சிறிய பள்ளங்களாகும்.. முந்தைய காலங்களில், கிரேட் நிக்கோபார் தீவுகளின் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் மூங்கில் மற்றும் மரக் கட்டைகளைப் பயன்படுத்தி இவற்றைக் கட்டமைத்தார்கள்

 

ராம்டெக் நீர் சேகரிப்பு கட்டமைப்புகள்

பாரம்பரிய நீர் பாதுகாப்பு செயல்திட்டங்கள் மற்றும் யுக்திகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவது மகாராஷ்டிராவில் உள்ள ராம்டெக் மாதிரி. இந்த அமைப்பு நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீர்நிலைகளின் பிணைய அமைப்புக்களைப் பயன்படுத்துகிறது, இதில் அடிவாரத்திலிருந்து சமவெளி வரை நிலத்தடி மற்றும் மேற்பரப்பு கால்வாய்களால் இணைக்கப்பட்ட நீர் நிலைகள் ஒரு இணைப்பாக உருவாகின்றன.. மலைப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பியவுடன், அது அடுத்தடுத்த சேமிப்பிடங்களுக்குச் செல்கிறது.

 

நீர் வளத்தைப் பாதுகாத்தல் என்றால் என்ன ?

எளிதாகச்சொல்வதென்றால், நீர் பாதுகாப்பு  என்பது நீரை வீணாக்காமல் அல்லது தேவையற்ற வழிகளில் பயன்படுத்தாமல்  நீரை திறம்பட பயன்படுத்தும் நுட்பமாகும்  தெளிந்த சுத்தமான நீர் இப்போது அரிதானவளமாகக் கருதப்படுவதால், நீர் பாதுகாப்பு என்பது முக்கியமானதும் மற்றும் தவிர்க்க முடியாததும் ஆகும்

மேலும் காண்க  பெண்ட்ஹவுஸ் குறித்த அனைத்தையும் பற்றி

 

நீர் வளப் பாதுகாப்பு : ஏன் மிகமுக்கியமான ஒன்று?

நீர் வளப் பாதுகாப்பு பல்வேறு காரணங்களுக்காக முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது.:

  1. நீர் பகிர்மானம் சரிசமமற்று இருப்பதால், இந்தியாவின் பெரும் பகுதிகள் மழை மற்றும் நிலத்தடி நீர் பற்றாக்குறையை அனுபவித்து வருகின்றன.
  2. இந்தியா முழுவதுமான இந்த சரிசமமற்ற பகிர்மானம் பெரும்பாலான மக்களை நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வைக்கிறது
  3. நகர் பகுதிகளில் நீரின் இருப்பைவிட அதன் தேவை மிக அதிகளவில் உள்ளது
  4. இந்தியாவில் மழைப்பொழிவு பருவ காலநிலை சார்ந்திருப்பதால், பயிர்களுக்கு பாசனம் மேற்கொள்ள நீர் தேவைப்படுகிறது. நீர் சுற்றுச்சூழலையும் வன விலங்குகளையும் பாதுகாக்கிறது.
  5. மேலும், நீரை சேமிப்பதன் மூலம் சக்தியும் சேமிக்கப்படுகிறது. அதாவது, நீர் மற்றும் சக்தி சேமிப்புத் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட் உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நீர் பயன்பாட்டைக் குறைப்பதுடன் சக்தியையும் சேமிக்க முடியும்.

 

சமையலறையில் நீர் வளத்தைப் பாதுகாப்பதற்கான எளிய குறிப்புகள் 

 

குளியலறையில் நீர் வளத்தைப் பாதுகாப்பதற்கான எளிய குறிப்புகள்

 

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

நீர் வளப் பாதுகாப்பு ஏன் மிகமுக்கியமான ஒன்று?

எதிர்கால சந்ததியினருக்கு தெளிந்த சுத்தமான நீர் கிடைப்பதை உறுதி செய்ய நீர் வளப் பாதுகாப்பு முக்கியம்.

நீர் வளப்பாதுகாப்பு என்றால் என்ன ?

நீர்வளப்பாதுகாப்பு என்பது நீரை சேமிப்பதும் அதை தேவையற்ற வழிகளில் பயன்படுத்தூவதைக் குறைப்பதும் ஆகும்

(சுர்பி குப்தாவிடமிருந்து கூடுதல் தகவல்களுடன்)

 

Was this article useful?
  • ? (4)
  • ? (1)
  • ? (0)
Exit mobile version