ஜிஎஸ்டி மற்றும் டி.டி.எஸ், வாடகை வருவாயை எவ்வாறு பாதிக்கிறது

வாடகைக் கட்டணங்கள் சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் சேவை வரிக்கு உட்பட்டுள்ளன.முன்மொழியப்பட்ட பொருட்கள் மற்றும் சேவை வரி மற்றும் ஆதாரத்தில் வரி விலக்குகளுக்கான விதிகள் எவ்வாறு ஒரு வாடகை வருமானத்தை பாதிக்கும் என்பதை ஆராய்வோம்

ஒரு ரியல் எஸ்டேட் முதலீட்டிலிருந்து வரும் வாடகை வருமானம்,”வீட்டு சொத்தின் மூலம் வருமானம்” தலைமை

வருமான வரி சட்டங்களின் கீழ், இது நாட்டின் நேரடி வரி சட்டம் ஆகும். வாடகைக்கு விடப்பட்ட சொத்துக்களும், தற்போது சேவை வரி வடிவத்தில் மறைமுக வரி விதிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சொத்து வாங்கியவரின் டி.டி.எஸ் (ஆதாரத்தில் கழிக்கப்பட்ட வரி) கழிக்க வேண்டியதன் அவசியமும் , முன்மொழியப்பட்ட ஜிஎஸ்டி (பொருட்கள் மற்றும் சேவைகள் வரி) வாடகை வருவாயில் வரிக் கணக்கை பாதிக்கும்.

 

நடைமுறையில் உள்ள சேவை வரி சட்டங்கள்

தற்பொழுது உள்ள நிலையில், ஒரு உரிமையாளரின் மொத்த  வாடகை வருமானம் ஓராண்டுக்கு 10 லட்சத்திற்கு மேலிருந்தால், சேவை வரி பதிவு கட்டாயம் பெற வேண்டும்.  எனவே, இந்தியாவில் உங்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளிலிருந்தும் உங்கள் வாடகை வருமானம் , 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இல்லையெனில், நீங்கள் சேவை வரி நிகரத்திற்கு வெளியில் இருக்கிறீர்கள்.

தற்பொழுதுள்ள சட்டம், குடியிருப்புக்காக குத்தகைக்கு  / வாடகைக்கு விடப்பட்டுள்ள சொத்தின் மூலம் வரும் வருமானத்திற்கு சேவை வரியிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.வெறும் வணிக சொத்துக்களுக்கு மட்டுமே சேவை வரி இப்பொழுது நடைமுறையில் உள்ளது. ரூ. 10 லட்சம் வரையிலான வரம்பு, வரிக்குரிய சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும். எனவே குடியிருப்பு சொத்துக்களின் மதிப்பு ரூ .10 லட்சம் மேல் இருந்தாலும், அதன் மூலம் வரும் வாடகையின் நிகர வருவாய் ஆண்டுக்கு ரூ .10 லட்சம் மேல் இல்லையென்றால், உங்களுக்கு சேவை வரி இல்லை. ஆண்டுதோறும்  ரூ. 10 லட்சம் போன்ற உச்ச வரம்பு தொகை மாற்றி அமைக்கப்படும். தற்பொழுது, வணிக வாடகையில் 15% சேவை வரியாக வசூலிக்கப்படுகிறது.

 

ஜிஎஸ்டியின் கீழ் பரிந்துரைக்கப்பட்டவை

ஜிஎஸ்டியின் சேவை மற்றும் பொருட்களுக்கான வரிகளை ஒன்றாக்கியதன் மூலம், தனி தனியாக சேவை மற்றும் பொருள்களுக்கான வரி விதிப்பில் இருந்த குழப்பம் நீங்கியது.

தற்பொழுதுள்ள சேவை வரி சட்டம் போல் அல்லாமல்,ஜிஎஸ்டி செலுத்துவதற்கான அதிகபட்ச உச்ச வரம்பு ரூ. 10 லட்சம் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆகையால் ஜூலை 1 , 2017   முதல் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டியின் கீழ், மறைமுக வரி நிகரத்தில் இருந்த பல நிலஉரிமையாளர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

இதில் சுவாரசியம் என்னவென்றால், ஜிஎஸ்டின் கீழ் ரூ. 20 லட்சம் உச்ச வரம்பை கணக்கிடுவதன் நோக்கத்திற்காக, வரிக்கு உட்பட்ட அனைத்து, அதேபோல விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்  என்பதை கவனத்தில் கொள்க. சேவை வரி விதிப்பின் கீழ், வெறும் வரிவிதிப்பிற்குட்பட்டவை மட்டுமே நீங்கள் உச்ச வரம்பை மீறிவிட்டீர்களா என்பதை கண்காணிக்க உதவும், ஆனால் ஜிஎஸ்டியின் கீழ் இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து சேவை மற்றும் பொருட்களின் மதிப்பு, ஏற்றுமதி செய்யப்பட்டது, வரிவிதிப்பு அல்லது விலக்கு, போன்ற இவை அனைத்தும் ரூ.20 லட்சம் வரம்பிற்குள் அடங்கும். வணிக சொத்திற்கான ஜிஎஸ்டி, 18 % விதிக்கப்படுகிறது.

 

ஜிஎஸ்டியின் கீழ், வணிக சொத்துக்களுக்கான வருமானத்தின் மீது மேலுமொரு பெரிய வரி தாக்கல் உள்ளது. பாராளுமன்றம், சேவை வரி ஆட்சியிலிருந்து, ” தலைகீழ் வசூலிப்பு முறையை” ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவந்துள்ளது. சேவை வரி ஆட்சியின் கீழ், ” தலைகீழ் வசூலிப்பு முறை” சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும், மேலும் அது உற்பத்தி , விற்பனைக்கு பொருந்தாது, ஆனால்  ஜிஎஸ்டியின் கீழ் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் பொருந்தும். ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நபர், ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்படாத ஒரு நபரிடம் பொருள் அல்லது சேவை பெற்றால், அவர் ஜிஎஸ்டியின் கீழ் “தலைகீழ் வசூலிப்பு முறை” பின்பற்றி வரி செலுத்த வேண்டும். சேவை வரி ஆட்சியின் கீழ், குத்தகையாளர் செலுத்தும் வாடகை தொகைக்கு, எந்த கோட்பாடும் இல்லை. ஆனால் முன்மொழியப்பட்டுள்ள ஜிஎஸ்டியின் கீழ், வணிக இடத்தை வாடகைக்கு எடுப்பது மிகவும் அதிக செலவு செய்வதற்கு ஈடாகும்.

 

வாடகை சொத்துக்களின் வருமான வரி மீதான வரிக் குறைப்பு  ஒதுக்கீடு

சேவை வரி / ஜிஎஸ்டியின் கீழ், குத்தகைக்காரரிடம் இருந்து வாடகை வாங்குவது நிலஉரிமையாளரின் கடமையாகும். அதேபோல், வருமான வரி சட்டங்களின் கீழ் , ஓராண்டுக்கு வாடகை தொகை ரூ. 1 . 80 லட்சத்திற்கு மேல் இருந்தால், மூலதனத்தில் 10 % வருமான வரியை குறைத்துக்கொள்ள வேண்டும். ரூ. 1.80 லட்சம் வரையிலான வரம்பு , உரிமையாளர் மீது பொருந்தும்,  குத்தகைக்கு உட்படுத்தப்பட்ட சொத்து மீது அல்ல. இந்த டீடிஎஸ் விதிகள் குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்கள் இரண்டிற்குமே பொருந்தும். வருமான வரிச் சட்டத்தின் 44AB பிரிவின் கீழ், குத்தகையாளர் தனது சொத்து கணக்கை தணிக்கை செய்ய விரும்பினால் மட்டுமே இது பொருந்தும்.

வாடகை வருமான வரிவிலகிற்கு ,2017 வரவுசெலவுத்திட்டம் இன்னும் ஒரு விதியை அறிமுகப்படுத்தியுள்ளது, அது தனிநபரும், இந்து பிரிக்கப்படாத குடும்பங்களுக்கும் பொருந்தும். தனிநபர் மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள், வருட கடைசியிலோ, வாடகை பருவம் முடியும் தருவாயிலோ, ஒருவேலை குறிப்பிட்டகாலத்திற்கு முன்பே வாடகை பருவம் நின்றுவிட்டாலோ , 5 %வாடகை ஓராண்டிற்கு செலுத்தி இருந்தாலோ, ரூ 50,000 /மாதம் வீதம் ஓராண்டிற்கு செலுத்தியிருந்தாலோ, வரிவிலக்கு மூலதனத்திலிருந்து பெற்று கொள்ளலாம்.

(இக்கட்டுரை ஆசிரியர்,வரிவிதிப்பு மற்றும் முகப்பு நிதி துறையில் 35 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ள  வல்லுநர்)

 

Was this article useful?
  • 😃 (1)
  • 😐 (0)
  • 😔 (0)

Recent Podcasts

  • பாக்டீரியா எதிர்ப்பு வண்ணப்பூச்சு என்றால் என்ன, அது எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?
  • உங்கள் வாழ்க்கை அறைக்கான சிறந்த 31 காட்சி பெட்டி வடிவமைப்புகள்
  • 2024 இல் வீடுகளுக்கான சிறந்த 10 கண்ணாடி சுவர் வடிவமைப்புகள்
  • வீடு வாங்குபவருக்கு முன்பதிவுத் தொகையைத் திருப்பித் தருமாறு ஸ்ரீராம் சொத்துக்களுக்கு KRERA உத்தரவிட்டது
  • உள்ளூர் முகவர் மூலம் செயல்படாத சொத்து (NPA) சொத்தை எப்படி வாங்குவது?
  • பட்ஜெட்டில் உங்கள் குளியலறையை எவ்வாறு புதுப்பிப்பது?