Site icon Housing News

சரக்கு மற்றும் சேவை வரி (GST) இணைய தளம் புகுபதிகை அரசின் GST புகுபதிகை போர்டல் டாஷ்போர்டு மற்றும் ஆன்லைன் சேவைகளுக்கான வழிகாட்டி

GST login: A guide to the government’s GST portal login and online services

2017 ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி ( GST) அமைப்பு, பல மாநில மற்றும் மத்திய வரிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தது. வரி செலுத்துவோருக்கு கிடைக்கும் இணையதள ஆதரவின் காரணமாக இந்த புதிய அமைப்பு அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது. GST எண் பெற பதிவு செய்வது முதல் GST ரிட்டர்ன் தாக்கல் செய்வது வரை அனைத்தையும் இப்போது ஆன்லைனில் செய்யலாம். இது தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்களின் எண்ணிக்கையைக் குறைத்து நிர்வாக நடைமுறைகளை விரைவுபடுத்துவது மட்டுமின்றி வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய தேவையையும் அறவே ஒழிக்கிறது. https://www.gst.gov.in/ என்ற இணையதளம் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ GST புகுபதிகை போர்ட்டலாகும்.

Table of Contents

Toggle

GSTN போர்டல் எனப்படும் ஆன்லைன் இணைய தளமானது, வரி செலுத்துவோர் பல்வேறு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், ஆன்லைனில் தங்கள் வருமானத் தகவல்களை தாக்கல் செய்யவும் உதவுகிறது. GST விவரங்களை அரசாங்கத்தின் www.gst.gov-இன் புகுபதிகை போர்ட்டலில் பதிவு செய்து பயன்படுத்துவது குறித்த முழுமையான வழிகாட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இ-வே பில் உள்நுழைவு குறித்த வழிகாட்டியை காண்க

 

GST போர்டலில் உள்நுழைவு பதிவு செய்தல்

முறையாகப் பதிவு செய்தவர் GST போர்ட்டலில் புகுபதிகை செய்த பிறகு www.gst.gov.in இணையதள டேஷ்போர்டு திரையில் காணப்படும்.

பிரதான GST போர்டலின் புகுபதிகை பக்கத்தில் அளிக்கப்படும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு சேவைகள் மற்றும் ஆன்லைன் வசதிகளைப் பற்றிய தகலவல்கள் காணலாம்:

 

 

பிளாட் வாங்கும்போது செலுத்தும் GST குறித்து அனைத்தையும் அறியுங்கள்

 

GST போர்டல் புகுபதிகை : போர்ட்டலில் எவ்வாறு பதிவு செய்வது?

வணிகத்தின் வருடாந்திர வருவாயின் அடிப்படையில் GST பதிவு செய்யப்படவேண்டும். கடந்த நிதியாண்டில் 40 லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்த நிறுவனங்களுக்கு இது பொருந்தும். ஆனால் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உச்ச வரம்பு ரூ.20 லட்சம் ஆகும். வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான மாநிலங்களுக்கு விலக்கு வரம்பு ரூ.10 லட்சம்.

சரக்கு மற்றும் சேவை வரி போர்டல் புகுபதிகை பதிவு நடைமுறையை இங்கே:

GSTயின் கீழ் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ள இயலும். பதிவு செய்தவுடன், 15 இலக்க GSTN அல்லது சரக்கு மற்றும் சேவை வரி அடையாள எண் உருவாக்கப்படும்.

படி எண் 1: முதலில்  https://www.gst.gov.in/ புகுபதிகை போர்டலுக்குச் செல்லவும். அங்கு ‘சேவைகள்’ என்று காணப்படும் பகுதிக்குச் சென்று, ‘பதிவு’ என்பதன் கீழ் ‘புதிய பதிவு’ என்பதைக் கிளிக் செய்யவும். www.gst.gov.in முகப்புப் பக்கம் கீழே காட்டப்பட்டுள்ளது.

 

 

படி எண் 2: gst gov புகுபதிகை இணையதளத்தின் அடுத்த பக்கத்தில், தங்களது சுயவிவரங்கள் (உதாரணமாக, வழக்கமாக வரி செலுத்துவோர், வரி செலுத்தும் உள்நாட்டு குடியுரிமை இல்லாத நபர், முதலியன)உட்பட , மாநிலம், மாவட்டம், நிறுவனத்தின் பெயர், வருமான வரி எண், மின்னஞ்சல் முகவரி. மற்றும் கைபேசி எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து ‘தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

 

 

படி எண் 3: www.gst.gov.in புகுபதிகையின் அடுத்த பக்கத்தில், உங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ பதிவு செய்து பின் ‘தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

படி எண் 4: தற்காலிக குறிப்பு எண் (TRN) திரையில் ஒளிரும். .

படி எண் 5: GST ஆன்லைன் புகுபதிகை முகப்புப் பக்கத்திற்குச் சென்று ‘வரி செலுத்துவோர்’ என்பதன் கீழ் ‘இப்போதே பதிவு செய்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

படி எண் 6: தற்காலிகக் குறிப்பு எண் ‘TRN’ ஐப் பயன்படுத்தி, ‘தொடரவும்’ (‘Proceed’) என்பதைக் கிளிக் செய்யவும்.

படி எண் 7: உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணில் நீங்கள் பெற்ற OTP க்களை பதிவு செய்யவும்..

படி எண் 8: இங்கு உங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் செய்யலாம் அத்துடன் தொடர்புடைய மற்ற ஆவணங்களைப் பதிவேற்றலாம்.

படி எண் 9: ‘சரிபார்ப்பு’ பக்கத்திற்குச் சென்று உறுதி ஆவணம் என்னும் கட்டத்தை க்ளிக் செய்யவும். கொடுக்கப்பட்ட முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும் – மின்னணு சரிபார்ப்புக் குறியீடு (EVC), மின்-கையொப்ப முறை அல்லது நிறுவனங்களுக்கான டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ் (DSC) போன்ற கொடுக்கப்பட்ட முறைகள் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

படி எண் 10: விண்ணப்பத்தை வெற்றிகரமாகச் சமர்ப்பித்த பிறகு, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணுக்கு விண்ணப்பக் குறிப்பு எண் (ARN) அனுப்பப்படும். இந்த எண்ணைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் காண்க:  GST வகைகள்: CGST, SGST,IGST பற்றிய முழு விவரங்களுக்கு

 

GST பதிவு செய்யத் தேவையான ஆவணங்கள்

 

GST போர்டலில் உள்நுழைவு செய்யும் முறை

அதிகாரப்பூர்வ GSTN போர்ட்டலைத் திறந்து, வலது மேல்புற மூலையில் உள்ள ‘புகுபதிகை’ விருப்பத்தேர்வை கிளிக் செய்யவும். டாஷ்போர்டைப் பார்க்க பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் போன்ற புதிய GST உள்நுழைவு சான்றுகளைப் பதிவிடவும்.

 

 

ஆன்லைன் GST போர்ட்டலில் முதன்முறையாக புகுபதிகை செய்பவர்கள் , www gst gov இன் புகுபதிகைப் பக்கத்தில், ‘நீங்கள் ஏற்கனவே பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை எடுத்திருந்தால்’ என்னும் விருப்பத்தேர்வுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள ‘இங்கே’ என்னும் கட்டத்தில் கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர், உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட தற்காலிக ID/GSTIN/UIN மற்றும் கடவுச்சொல்லைப் பதிவிடவும்.

 

 

உங்கள் புதிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பதிவு செய்து ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர், மீண்டும் புகுபதிகை பக்கத்திற்குச் சென்று உங்கள் புதிய GST போர்டல் புகுபதிகை கடவுச்சொல்லை உள்ளிடவும்.

இணையதளத்தில் வெற்றிகரமாக புகுபதிகை செய்த பிறகு, பயனர்கள் www.gst.gov.in புகுபதிகை டாஷ்போர்டைப் பார்க்கவும் அங்கு காணப்படும் தங்களின் சுயவிவரங்கள், அறிவிப்புகள் மற்றும் ஆர்டர்களை அணுகலாம். ரிட்டன்களை தாக்கல் செய்வதற்கும் வரி செலுத்தும் சலான் உருவாக்குவதற்கும் அங்கு வசதி உள்ளன.

மேலும் அறிக: கட்டுமானம் மற்றும் கட்டுமானப் பொருள்களின் மீதான GST

 

GST போர்டல் உள்நுழைவு: பேமெண்ட்

GST ஆன்லைனின் புகுபதிகை பக்கத்தில் காணப்படும் அடுத்த விருப்பத்தேர்வு ‘பேமெண்ட்’. பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோர் www.gst.gov.in புகுபதிகை போர்ட்டலில் உள்ள இந்தப் பகுதிக்குச் சென்று வரி செலுத்தத் தேவையான சலானை தயார் செய்து மின்னணு கட்டண முறையில் பணம் செலுத்தலாம். மேலும் இந்தப் பக்கத்தில், ‘கட்டிய பணம் தற்போது எங்கு இருக்கிறது என்று கண்காணிக்கவும்’ என்ற விருப்பத்தையும் மற்றும் ‘கட்டணத்திற்கு எதிரான புகார் (GST PMT 07)” ஆகிய விருப்பத்தேர்வுகளையும் காணலாம்.

 

 

GST போர்டல் புகுபதிகை : இ-வே பில்

GST இ-வே பில் எனப்படும், எலக்ட்ரானிக் வே பில் சிஸ்டத்தில், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லப்படும் சரக்குகளின் நகர்வைக் கண்காணிக்கப் பயன்படும் மின்னணு பில் GSTபோர்டலில், உருவாக்கப்படுகிறது. ரூ. 50,000 அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள சரக்குகளை ஏற்றிச் செல்லும் அனைத்து போக்குவரத்து நபர்களும் இ-வே பில், நகலை தவறாது வைத்திருக்க வேண்டும்.

இதை அணுக GST போர்ட்டலில் புகுபதிகை செய்து , ‘சேவைகள்’ என்பதன் கீழ் உள்ள ‘இ-வே பில் சிஸ்டம்’ எனும் விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

 

 

 

மேலும் அதிக தகவல்களைப் பெற, இ-வே பில் அமைப்பு தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை இங்கே காணலாம். இ-வே பில் போர்ட்டலுக்குச் செல்ல பயனர்கள் அதற்கான இணைப்பைக் கிளிக் செய்து அங்கு இ-வே பில் பதிவு உட்பட பல்வேறு விருப்பங்களைக் காணலாம். https //www.gst.gov.in புகுபதிகை போர்ட்டலில் இ-வே பில் உருவாக்கப்படும் போது, பயனருக்கு பிரத்யேகமான இ-வே பில் எண் (EBN) வழங்கப்படும். டிரான்ஸ்போர்ட் செய்பவர், சரக்கைப் பெறுபவர் மற்றும் வழங்குனர் அனைவரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு பிரத்யேகமான இ-வே பில் அல்லது EBN-ஐ பெறுவார்கள்.

பயனர்கள் பின்வரும் விவரங்கள் அல்லது ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

 

 

GSTயை அமல்படுத்தப்படுவதற்கு முன், வே பில் எனப்படும் வழிப்பத்திரங்கள் அந்தந்த மாநிலங்களின் விதிகளுக்கு உட்பட்டு மாநில போர்டல்கள் மூலம் உருவாக்கப்பட்டன.

 

GST போர்டல் உள்நுழைவு: பிற சேவைகள்

அரசாங்க GST புகுபதிகை போர்டலில் கீழ்க்கண்ட பல்வேறு பயனர் சேவைகள் அதற்குண்டான விரைவு இணைப்புகளுடன் காணப்படும்.

‘சேவைகள்’ எனப்படும் விருப்பத்தின் கீழ் ‘ரீஃபண்டுகள்’ என்ற விருப்பமும் உள்ளது. பணத்தைத் திரும்பப்பெறும் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை தெரிந்துகொள்ள ஒருவர் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

மேலும் தகவல்களுக்கு எங்கள் வழிகாட்டியை இங்கு பார்க்கவும் GST search and GST verification

 

GST புகுபதிகை போர்டல்: வருமான ரிட்டர்ன் எவ்வாறு தாக்கல் செய்வது?

வர்த்தகர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய GSTயின் கீழ் முதலில் பதிவு செய்ய வேண்டும். பல்வேறு தேவைகளுக்கு 11 வகையான வருமான கணக்கு ரிடர்ன்கள் அவற்றிற்கான நிலுவைத் தேதியுடன் உள்ளன. வருமானத்தைப் பதிவு செய்ய GST போர்ட்டலில் புகுபதிகை செய்து GST வருமானத்தை இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம்.

எளிதில் புரிந்துகொள்ள படிப்படியான வழிகாட்டியைக் கீழே காணாலாம்.

 

GST போர்டலில் கொடுக்கப்பட்டுள்ள ஆஃப்லைன் கருவிகள் மற்றும் படிவங்கள்

வரி செலுத்துவோர் GST வருமானத்தைத் தாக்கல் செய்வதற்கான ஆஃப்லைன் நடைமுறைகளைப் பின்பற்ற உதவுவதற்கு அதிகாரப்பூர்வ GST போர்டல்  https://www.gst.gov.in/ புகுபதிகை பக்கம் சில ஆஃப்லைன் கருவிகளை வழங்குகிறது. GST படிவங்கள் மற்றும் ரிட்டர்ன்களின் பயன்பாடு அவர்களுக்கு ஆஃப்லைன் மூலமும் அணுகலை வழங்குகிறது.

 

 

GST புள்ளிவிவரங்கள்

அதே ‘பதிவிறக்கங்கள்’ டாப் பகுதி அதன் மூலம் வெவ்வேறு நிதியாண்டுகளுக்கான புள்ளிவிவரங்களைக் காணும் வகையில் . “ GST புள்ளிவிவரங்கள்” என்னும் இணைப்பையும் காட்டுகிறது

 

 

GST புகுபதிகை : உதவி மற்றும் வரி செலுத்துவோருக்கான வசதிகள்

‘உதவி மற்றும் வரி செலுத்துவோர் வசதிகள்’ எனப்படும் தலைப்பின் கீழ், GST தொடர்பான பயனருக்கான பல கையேடுகள், வீடியோக்கள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், பல்வேறு சேவைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் போன்றவற்றைக் வரி செலுத்துவோர் காணலாம். மேலும், புதியதாக மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகள் பற்றிய செய்தி வெளியீடுகள் மற்றும் ஆலோசனைகளின் பட்டியல் போன்றவையும் போர்ட்டலில் ஒருவர் காணமுடியும். வரி செலுத்துவோர் மற்றும் பிற பங்குதாரர்கள் தங்கள் புகார்களை சமர்ப்பிக்கக்கூடிய குறை தீர்க்கும் போர்ட்டலுக்கான இணைப்பு வசதியும் உள்ளது. மேலும் இதர வரி செலுத்துவோர் சேவைகளுக்கு GST சுவிதா வழங்குநர்கள் (ஜிஎஸ்பி) மற்றும் இலவச கணக்கியல் மற்றும் பில்லிங் சேவைகளின் பட்டியலை காணலாம்.

 

GST போர்ட்டலில் மின்னணு விலைப்பட்டியல்- e-ல் invoice

GST அரசு புகுபதிகை உள்நுழைவு போர்ட்டலில் சமீபத்தில் கொடுக்கப்பட்ட இணைப்பு மூலம் பயனர்கள் மின்னணு விலைப்பட்டியல் போர்ட்டலை எளிதில் அணுகமுடியும்.

 

வரி செலுத்துவோர்GST போர்டல் புகுபதிகை தேடல்

வரி செலுத்துவோரின் விவரங்கள் அல்லது குறிப்பிட்ட PAN எண்ணின் கீழ் பதிவு செய்யப்பட்ட GSTIN களைச் சரிபார்க்க, ‘வரி செலுத்துவோர் தேடல்’ என்னும் பகுதியின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு விருப்பத்தேர்வுகளில் இருந்து ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி GSTN போர்ட்டலில் தேடலாம்:

www gst gov போர்ட்டலில் ‘வரி செலுத்துவோர் தேடல் ‘ என்பதன் கீழ் இதர விருப்பத்தேர்வு, , காம்போசிஷன் திட்டத்தை தேர்வு செய்த மற்றும் அந்தத் திட்டத்திலிருந்து வெளியேறிய வரி செலுத்துபவரைத் கண்டுபிடிப்பதற்கான இணைப்பைக் கொண்டுள்ளது. ஒருவர் GSTIN/UIN விவரங்களை உள்ளிட்டோ அல்லது பதிவு செய்யப்பட்ட மாநிலத்தின் அடிப்படையிலோ அங்கு தேட வேண்டும்.

 

GST சட்டம்

www.gst.gov.in போர்ட்டலில் உள்ள இந்தப் பிரிவின் கீழ், பயனர்கள் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC), மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வணிக வரி இணையதளங்களை அணுக பல்வேறு இணைப்புகளைக் காணலாம். மேலும் இந்த இணைப்புக்கள் CGST சட்டம் மற்றும் விதிகள், SGST சட்டம் மற்றும் விதிகள், மற்ற சட்டங்கள் அதன் தொடர்புடைய GST விதிகள் ஆகியவற்றையும் கொண்டுள்ளன . GST குறித்த சமீபத்திய அறிவிப்புகள், திருத்தங்கள் மற்றும் சுற்றறிக்கைகளையும் இங்கு காணலாம்.

 

GST போர்டல்: ஆன்லைனில் கிடைக்கும் பிற தகவல்கள்

gst.gov.in போர்ட்டலில் உள்ள மற்ற பிரிவுகள் பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

இந்தியாவிற்கு வெளியே இருந்து GST போர்ட்டலை அணுக முடியுமா?

இந்தியாவிற்கு வெளியே உள்ள நெட்வொர்க்குகளில் உள்ள பயனர்களால் அதிகாரப்பூர்வ GST உள்நுழைவு போர்ட்டலை அணுக முடியாது.

எனது GST டாஷ்போர்டை எவ்வாறு அணுகுவது?

GST போர்ட்டலில் பதிவு செய்து புகுபதிகை செய்த பிறகே டாஷ்போர்டைப் பார்க்க முடியும்.

 

Was this article useful?
  • ? (1)
  • ? (0)
  • ? (0)
Exit mobile version