Site icon Housing News

EPFO claim status: ஈபிஎஃப் க்ளைம் நிலையை தெரிந்துகொள்ள 5 வழிகள்

ஈபிஎஃப்ஓ (EPFO) கணக்கில் சேமிக்கப்படும் உங்கள் ஓய்வூதியத் தொகையை அவசர காலங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை மட்டுமல்லாமல், சில எளிய வழிமுறைகளின் மூலம் ஆன்லைனிலும் ஈபிஎஃப்ஓ க்ளைம் ஸ்டேட்டஸை அறிய முடியும்.‌ ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் உங்கள் ஈபிஎஃப் உரிமைகோரல் நிலையைத் தெரிந்து கொள்வதற்கான படிப்படியான செயல்முறைக்கு இந்தக் கட்டுரை உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

Table of Contents

Toggle

 

இபிஎஃப்ஓ உரிமைகோரல் நிலை: படிப்படியாக சரிபார்க்கும் செயல்முறை

உங்கள் பிஎஃப் (PF) கணக்கிலிருந்து பிஎஃப் தொகையை திரும்பப் பெறுவதற்காக விண்ணப்பித்தவுடன் (பிஎஃப் தொகையை திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகளை புரிந்து கொள்வதற்கு பிஎஃப் தொகையை திரும்பப் பெறுவதற்கான எங்களது வழிகாட்டி கட்டுரையை படிக்கவும்) பின்வரும் தளங்களில் பிஎஃப் க்ளைம் ஸ்டேட்டஸை தெரிந்து கொள்ளலாம்:

  1. ஈபிஎஃப்ஓ உறுப்பினர் வலைதளம்
  2. UMANG மொபைல் ஆப்
  3. எஸ்எம்எஸ் மூலம்
  4. மிஸ்டு கால் மூலம்
  5. ஈபிஎஃப்ஓ டோல் ஃப்ரீ எண் மூலம்

PF balance சரிபார்ப்பு: ஈபிஎஃப் இருப்பு அறிய படிப்படியான வழிகாட்டுதல்

 

ஈபிஎஃப் க்ளைம் ஸ்டேட்டஸ்: ஈபிஎஃப்ஓ வலைதளத்தில் சரிபார்ப்பது எப்படி?

படி 1: ஈபிஎஃப்ஓ-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘Services’ எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அதில் ‘For Employees’ எனும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

 

படி 2: அடுத்த பக்கத்தில் ‘Services’ செக்‌ஷனுக்கு கீழ் உள்ள ‘Know Your Claim Status’ எனும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

 

படி 3: அடுத்து வரும் பக்கத்தில் ‘Click here to get redirected to passbook application’ எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

 

 

படி 4: யுஏஎன் (UAN) பாஸ்வேர்டு மற்றும் கேப்ச்சா குறியீட்டை பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும். (லாகின் செய்வதற்கான வழிமுறையை அறிய UAN லாகின் பற்றிய எங்களது கட்டுரையை படிக்கவும்).

 

 

படி 5: நீங்கள் லாகின் செய்ததும் முகப்புப் பக்கத்தில் உங்களது உறுப்பினர் ஐடியை காண்பிக்கும். நீங்கள் செட்டில்மென்ட் விண்ணப்பம் எதற்கு விண்ணப்பித்து உள்ளீர்களோ அந்த உறுப்பினர் ஐடியை தேர்வு செய்ய வேண்டும்.

 

 

படி 6: உறுப்பினர் ஐடியை தேர்வு செய்த பின்பு, ‘View Claim Status’ எனும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

 

 

படி 7: ஈபிஎஃப்ஓ க்ளைம் செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸ்‌ மற்றும் உங்கள் பிஃப் கணக்கின் மற்ற விவரங்களும் திரையில் காண்பிக்கப்படும்.

 

இதையும் வாசிக்க: ஈபிஎஃப் பாஸ்புக்கை சரிபார்ப்பது எப்படி?

 

EPF claim status- மிஸ்டு கால் மூலம் சரிபார்க்கும் வழிமுறை

011-22901406 என்னும் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் ஈபிஎஃப் உரிமைகோரல் நிலையை சரிபார்க்கலாம்.

நீங்கள் அளித்த மிஸ்டு காலுக்கான பதில் எஸ்எம்எஸ் மட்டுமே அனுப்பப்படும். மாறாக, உங்கள் எண்ணுக்கு திருப்பி அழைப்பு வராது என்பதை நினைவில் கொள்க. மிஸ்டு கால் கொடுக்கும்போது அந்த அழைப்பு இரண்டு ரிங்குகளுடன் தானாகவே துண்டிக்கப்பட்டு விடும்.

இதையும் வாசிக்க: வீடு வாங்க விண்ணப்பிக்கப்படும் பிஎஃப் திரும்பப் பெறுதலுக்கான விதிமுறைகள்

 

ஈபிஎஃப்ஓ டோல் ஃப்ரீ எண் மூலம் பிஎஃப் க்ளைம் ஸ்டேட்டஸை சரிபார்ப்பது எப்படி

ஈபிஎஃப்ஓ டோல் ஃப்ரீ எண்ணான 1800 118 005 என்ற எண்ணுக்கு அழைத்து உங்களது பிஎஃப் க்ளைம் ஸ்டேட்டஸை தெரிந்து கொள்ளலாம். 

இதையும் வாசிக்க: ஈபிஎஃப்ஓ இ-நாமினேஷன் குறித்த முழு விவரம்

 

எஸ்எம்எஸ் மூலம் ஈபிஎஃப்ஓ க்ளைம் ஸ்டேட்டஸ் அறிவது எப்படி

நீங்கள் பிஎஃப் தொகையை திரும்பப் பெறுவதற்காக விண்ணப்பித்த பிறகு ஈபிஎஃப்ஓ-வில் இருந்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அந்தத் தகவல் தெரிவிக்கப்படும். ஓய்வூதிய நிதி அமைப்புக்கு உங்கள் விண்ணப்பம சென்றடைந்த பின்பு உங்களது பிஎஃப் க்ளைம் ஸ்டேட்டஸை‌ அறிந்து கொள்ள முடியும். அதாவது, உங்கள் ஈபிஎஃப் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.

 

ஒருவேளை உங்கள் யுஏஎன் எண் ஆக்டிவேட் செய்யப்பட்டு, உங்கள் மொபைல் எண் ஆனது ஈபிஎஃப்ஓ உடன் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருந்தால், நீங்கள் உங்களது பிஎஃப் க்ளைம் ஸ்டேட்டஸை குறுஞ்செய்தியாக அனுப்பி தெரிந்து கொள்ள முடியும். பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் 7738299899 என்ற எண்ணிற்கு EPFOHO UAN ENG என்று செய்தி அனுப்ப வேண்டும். இதில் ENG என்பது பயனர் தனக்கு தேவைப்படும் தகவலை ஆங்கிலத்தில் அறிய விரும்புவதாக கருதப்படுகிறது. ஒருவேளை தமிழ் மொழியில் நீங்கள் தகவலை அறிய விரும்பினால் ENG-க்கு பதிலாக TAM என்று மாற்ற வேண்டும். வெவ்வேறு மொழிகளுக்கு வெவ்வேறு குறியீடுகளை பயன்படுத்த வேண்டும். அவை:

 

மொழி குறியீடு
ஆங்கிலம் ENG
இந்தி HIN
பஞ்சாபி PUN
மராத்தி MAR
தமிழ் TAM
தெலுங்கு TEL
மலையாளம் MAL
கன்னடா KAN
குஜராத்தி GUJ

 

ஈபிஎஃப்ஓ உரிமைகோரல் நிலையை எஸ்எம்எஸ் வசதி மூலம் தெரிந்துகொள்ள நீங்கள் உங்களது யுஏஎன் எண், ஆதார் எண் மற்றும் பான் எண் ஆகியவற்றை உங்கள் வங்கிக் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இதையும் வாசிக்க: ஈபிஎஃப் வீட்டு வசதி திட்டம் பற்றிய முழு விவரம்

 

UMANG app மூலம் ஈபிஎஃப் க்ளைம் ஸ்டேட்டஸ் அறிவது எப்படி

இந்த செயலியில் லாகின் செய்த பின் ‘Employee Centric Services’ எனும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் ‘Track Claim’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். க்ளைம் ஸ்டேட்டஸை பார்ப்பதற்கான பக்கத்திற்கு அது உங்களைக் கொண்டு செல்லும்.

 

பிஃப் க்ளைம் ஸ்டேட்டஸ் சரிபார்ப்புக்கு உங்களுக்குத் தேவையான விவரங்கள்:

 

ஈபிஎஃப் க்ளைம் ஸ்டேட்டஸ் நிலைகள்

ஈபிஎஃப்ஓ உரிமைகோரல் நிலையில் 4 நிலைகள் உள்ளன. அவை:

 

ஈபிஎஃப் க்ளைம் ஸ்டேட்டஸ் செட்டில்மென்ட் ஆக எவ்வளவு காலம் ஆகும்? 

பிஎஃப் தொகையை திரும்பப் பெறுவதற்கான செயல்பாட்டை தொடங்கிய பின் இக்கட்டுரையில் விரிவாக வழிகாட்டப்பட்டுள்ள ஐந்து நடைமுறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் பிஎஃப் க்ளைம் 5-10 நாட்களுக்குள் செட்டில் செய்யப்படும்.

இதையும் வாசிக்க: ஈபிஎஃப் பற்றிய உங்கள் குறையை எவ்வாறு தெரிவிப்பது?

 

ஈபிஎஃப்ஓ க்ளைம் ஸ்டேட்டஸ் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

ஒருவேளை பிஎஃப் க்ளைம் ஸ்டேட்டஸ் 20 நாட்களுக்குள் செட்டில் செய்யப்படவில்லை எனில் நான் எங்கு புகார் அளிப்பது?

புகார் பிரிவு அதிகாரியான பிராந்திய பிஎஃப் கமிஷனரை அணுகலாம். மேலும் இணையத்தில் EPFiGMS எனும் அம்சத்தை பயன்படுத்தி அதில் ‘For Employees’ எனும் ஆப்ஷனை தேர்வு செய்து, உங்கள் புகார் மனுவை அளிக்கலாம். ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி நடைபெறும் 'நிதி ஆப்கே நிகத்' எனும் குறைதீர் கூட்டத்தில் கமிஷனரிடம் நேரில் சென்றும் புகார் மனு அளிக்கலாம்.

வைப்பு நிதி நிலுவைகளை திரும்ப பெறுவதற்கு ஏதேனும் கால வரம்பு உள்ளதா?

உறுப்பினர் தங்கள் பணியை ராஜினாமா செய்யும்போது (நிறுவனம் மூலம் சான்றளிக்கப்படாமல்) அவர் தனது பிஎஃப் தொகையை திரும்ப பெற இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

பிஎஃப் தொகையை திரும்ப பெற விண்ணப்பிக்கும்போது நிறுவனம் சான்றளிக்காத பட்சத்தில், வருங்கால வைப்புநிதியை திரும்பப் பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

நிறுவனம் ஆனது பிஎஃப் தொகை திரும்பப் பெறும் விண்ணப்பத்தில் கண்டிப்பாக சான்று அளிக்க வேண்டும். ஒருவேளை அதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், பணியாளர் தனது வங்கிக் கணக்கை பராமரிக்கும் வங்கியில் இருந்து சான்றொப்பம் பெறலாம் மற்றும் அதை பிராந்திய பிஎஃப் கமிஷனரிடம் சமர்ப்பித்து நிறுவனத்தின் கையொப்பத்தை பெறாததற்கான காரணங்களைக் கூற வேண்டும். தேவையெனில் கமிஷனர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இவ்விஷயத்தை விவாதிப்பார். பணியாளர் தனது UAN-ஐ (யுனிவர்சல் அக்கௌன்ட் எண்) முன்கூட்டியே ஆக்டிவேட் செய்திருந்தால் அல்லது செய்யமாலிருந்தால் அதனை ஆக்டிவேட் செய்து, தனது வங்கிக் கணக்கையும் ஆதார் எண்ணையும் இணைத்து அவர் காம்போசிட் க்ளைம் (ஆதார்) விண்ணப்பிக்கலாம். ‌இதற்கு உறுப்பினரின் கையொப்பம் மட்டுமே தேவைப்படும்.

Was this article useful?
  • ? (1)
  • ? (0)
  • ? (0)
Exit mobile version