Site icon Housing News

TNEB வலைதளம் மூலம் தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பிப்பது எப்படி?

How to apply for new electricity connection in Tamil Nadu?

நீங்கள் தமிழ்நாட்டில் புதிதாக ஒரு வீடு வாங்கியிருக்கிறீர்கள் அல்லது கட்டியிருக்கிறீர்கள் என்றால், அந்தப் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெற நீங்கள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் புதிதாக வழங்கப்படும் TNEB மின் இணைப்புகள் அனைத்தும் TANGEDCO என அறியப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தனது சமீபத்திய சுற்றிக்கை ஒன்றில், தமிழ்நாட்டில் நிரந்தர மின் இணைப்பினை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள், இணைப்பு பெற விரும்பும் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதற்கான நிறைவுச் சான்றிதழை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. TNEB-ன் விதிகள் மற்றும் நெறிமுறைகளை (TNEB rules and regulations) முழுமையாக அறிந்து புதிய இணைப்பு பெறுவது பற்றி தெரிந்துகொள்வோம்.

தமிழ்நாடு அரசு வலைதளத்தைப் பயன்படுத்தி மாநிலத்தின் வழிகாட்டி மதிப்பீடு மற்றும் ஏனைய தகவல்களைப் பெறுவதற்கு TNREGINET-ஐ பயன்படுத்துவது பற்றிய நமது வழிகாட்டியையும் வாசிக்கலாம்.

 

TNEB புதிய மின் இணைப்பு பெற தேவையான ஆவணங்கள்

புதிய TNEB இணப்புகளைப் பெறுவதற்கு கீழ்கண்ட ஆவணங்கள் தேவை:

 

TNEB புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பித்து, படிவங்களை சமர்ப்பிக்கலாம்.

 

 

 

 

 

 

இதையும் வாசிக்க: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் (TNSCB) குறித்து நீங்கள் அறிய வேண்டிய முழு விவரம்

 

TANGEDCO பற்றி தெரிந்துகொள்ள வேண்டிவை

 

TNEB ஆன்லைனில் கட்டணம் செலுத்துதல்

கட்டணங்களை ஆன்லைன் மூலமாக செலுத்தும்போது உங்களுடைய விண்ணப்ப எண்ணை பயனர் பெயராகவும் (username), உங்களுடைய மொபைல் எண்ணை பாஸ்வேர்டாகவும் பயன்படுத்த வேண்டும்.

உங்கள் வீட்டுக்கு புதிய LPG இணைப்பு பெறவும், டிரான்ஸ்ஃபர் செய்யவும் விண்ணப்பிப்பது எப்படி? என்பதை முழுமையாக வாசித்து அறியலாம்.

 

மின் கட்டண நிலையை தெரிந்துகொள்வது எப்படி?

வாடிக்கையாளர்கள் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி தங்களுடைய மின்சார கட்டண நிலையை ஆன்லைன் மூலம் சரிபார்த்துக் கொள்ள முடியும்.

படி 1: முதலில் TANGEDCO இணையதளத்திற்குச் செல்லுங்கள். அதில் Billing Services > Bill Status பகுதிக்குச் செல்லுங்கள்.

 

 

படி 2: அடுத்து வரும் பக்கத்தில், உங்களுடைய சர்வீஸ் எண்  (உங்களுடைய பில்லில் குறிப்பிடப்பட்டிருக்கும்), மொபைல் எண் போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து வரும் டிராப்-டவுன் பட்டியலில் உங்களுடைய மண்டலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் கேப்ச்சா குறியீட்டை பதிந்த பிறகு ‘Proceed’ என்பதனை க்ளிக் செய்ய வேண்டும்.

 

 

TNEB-யில் ஆன்லைன் மூலம் பெயர் மாற்றம் செய்தல்

வாடிக்கையாளர்கள் TANGEDCO இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். பெயர் மாற்ற விண்ணப்பத்துடன் தடையில்லாச் சான்று (no objection certificate) உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன், உரிய கட்டணங்களுடன் TANGEDCO-வின் செயல் மற்றும் பராமரிப்பு உதவிப் பொறியாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மின் வாரியத்தின் முகப்பு பக்கத்திற்குச் சென்று, அதிலுள்ள மெனு பட்டியலில் ‘Apply’ என்பதன் கீழ் உள்ள ‘Name Transfer’ என்பதனை க்ளிக் செய்ய வேண்டும்.

 

 

உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து, பக்கத்தில் தொடர ‘Generate OTP’ என்பதனைக் க்ளிக் செய்ய வேண்டும்.

 

 

குடிமக்கள் தங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க https://nsc.tnebltd.gov.in/nsconline/nametransfer.xhtml என்ற இணைப்பை பயன்படுத்த முடியும்.  பின்னர், தங்களுடைய நுகர்வோர் எண்ணையும், மண்டலக் குறியீட்டையும் பதிவு செய்து ‘Enter’ என்பதனை க்ளிக் செய்ய வேண்டும்.

 

 

பின்னர் பெயர் மாற்றம் செய்தவற்கான காரணம் மற்றும் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்பின் வரக்கூடிய ஒரு அக்னாலஜ்மென்ட்டை குடிமக்கள் தங்களது எதிர்காலத் தேவைக்காக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

TNEB புதிய இணைப்பு பெற என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

இந்தக் கட்டுரையின் TNEB புதிய மின் இணைப்பு பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் என்ற பத்தியை வாசிப்பதன் மூலமாக புதிய மின் இணைப்பு பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் TNEB மின் கட்டணம் செலுத்துவது எப்படி?

TANGEDCO இணையதளத்திற்குச் சென்று, அதன் மேல் பகுதியின் மத்தியில் உள்ள ‘Pay Online’ என்பதனைத் க்ளிக் செய்து TNEB மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

நான் TNEB கன்ஸ்யூமர் எண்ணை எப்படி பெறுவது?

TNEB வாடிக்கையாளர் எண் என்பது சேவை எண் என்றும் அறியப்படுகிறது. இது உங்களுடைய மின் கட்டண ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

 

Was this article useful?
  • ? (3)
  • ? (2)
  • ? (0)
Exit mobile version