Site icon Housing News

தமிழ்நாடு மின்சார வாரியம்: TNEB பில் (மின்சாரக் கட்டணம்) குறித்த அனைத்தும்

Tamil Nadu Electricity Board: All about TNEB bill

1957 ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி , தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB), நிறுவப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) துணை நிறுவனமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் லிமிடெட் (TANGEDCO) 18,732.78 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. மார்ச் 31, 2020 நிலவரப்படி நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான 30.75 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாநில மின்சார வாரியம் சேவை வழங்கிவருகிறது. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர்கள் செலுத்த வேண்டிய மின்கட்டணத்தை உருவாக்கும் பொறுப்பு TNEB ஐ சேர்ந்தது.  செயல்முறைகளை ஒழுங்குபடுத்தி காகித பயன்பாடுகளைக் குறைக்கும் விதமாக உங்கள் மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு நாம் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்குத்தான் நன்றி சொல்லியாகவேண்டும்.

 

TN மாநில மின் வாரியத்தின் பெயர் தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB)
நிறுவப்பட்ட ஆண்டு 1957
இயக்கச்செயல்பாடு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் லிமிடெட் நிறுயானம்
இயக்குபவர் தமிழ்நாடு அரசு
சேவை வழங்கும் பகுதிகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி
பிணையம் https://www.tangedco.gov.in/

மேலும் காண்க : TNEB புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு?

 

தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB): நுகர்வோருக்கு வழங்கப்படும் முக்கிய சேவைகள் 

மேலும் காண்க டெல்லி ஜல் போர்ட் பில்  செலுத்தல்  

 

TNEB கட்டணம் செலுத்தும் முறைகள்

உங்கள் மின் கட்டணத்தை செலுத்த உங்களுக்குப் பல விருப்பதிதேர்வுகள்  உள்ளன. நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் நெட் பேங்கிங், எலக்ட்ரானிக் வாலட்கள் அல்லது UPI வசதியை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தலாம்,  TNEB இன் இணையதளம் அல்லது மொபைல் செயலியைப் பயன்படுத்தாமல் உங்கள் மின்சக்தி கட்டணத்தைச் செலுத்த விரும்பினால், TNEB அலுவலகத்திற்குச் சென்று ரொக்கப் பணம், காசோலை அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலம் செலுத்தலாம்.

 

TNEB பில்களை ஆன்லைனில் செலுத்துவதற்கான படிநிலைகள்

உங்கள் TNEB மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

 

 

 

 

 

 

மேலும் காண்க  : தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்(TNPCB) குறித்த அனைத்தையும் தெரிந்து கொள்ள

 

TNEB ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கான பிராந்திய குறியீடு

பிராந்திய குறியீடு பிராந்தியத்தின் பெயர் மாவட்டம் அல்லது மண்டலத்தின் பெயர்
01 சென்னை வடக்கு மணலி, தொண்டியார்பேட்டை, ராயபுரம், மாதவரம், திரு-வி-க நகர், திருவொற்றியூர், தேனாம்பேட்டை, அம்பத்தூர் மண்டலங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதி
02 விழுப்புரம் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம்
03 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் , திருப்பூர், நீலகிரி
04 ஈரோடு ஈரோடு, நாமக்கல், சேலம்
05 மதுரை மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி
06 திருச்சி அரியலூர், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி
07 திருநெல்வேலி கன்னியுமாரி, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி
08 வேலூர் திருப்பத்தூர், காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதி
09 சென்னை தெற்கு அண்ணாநகர், அம்பத்தூர், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, கோடம்பாக்கம், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் மண்டலங்கள், செங்கல்பட்டு மாவட்டம், திருவள்ளூரின் ஒரு பகுதி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம்

TNREGINET  பற்றி மேலும் வாசியுங்கள்

 

TNEB பில்களை மாற்று முறைகளைப் பயன்படுத்தி எவ்வாறு செலுத்துவது

மொபைல் ஆப் மூலம் தமிழ்நாடு மின்சார வாரிய கட்டணம் செலுத்துதல்

 

கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து TANGEDCO மொபைல் செயலியைப் பதிவிறக்கி உங்கள் மின் கட்டணத்தைச் செலுத்தலாம். அவ்வாறு செய்ய, பின்வரும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

சென்னையின் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் வாடகை குறித்து அறிந்து கொள்ள

 

TNEB மின் கட்டணத்தை பிணையத்துக்கு வெளியே நேரடியாக செலுத்துதல்

உங்கள் மின் கட்டணங்களை பிணையத்துக்கு வெளியே  நேரடியாக  TNEB அலுவலகத்தில் செலுத்துவதற்கான விருப்பத்தேர்வும் உள்ளது. அங்கு  நீங்கள் செல்லலாம். TNEB அலுவலகத்திற்குச் செல்லும்போது, உங்களின் சமீபத்திய மின் கட்டணசீட்டை எடுத்துச்செல்ல மறக்காதீர்கள். ரொக்கத்தொகை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, UPI, காசோலை அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலம் பணம் செலுத்தும் விருப்பத்தேர்வுகள்  உங்களுக்கு உள்ளது. பரிவர்த்தனை முடிந்ததும் தொகை செலுத்தப்பட்டதற்கான ரசீது ஒன்று உங்களுக்கு வழங்கப்படும் அதை நீங்கள் எதிர்கால குறிப்புக்களுக்காக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

 

TNEB பில் நிலையை ஆன்லைனில் எவ்வாறு சரிபார்க்கலாம்

 

TNEB உதவி எண்கள்/ வாடிக்கையாளர் சேவை

உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமானால், 1912 என்ற உதவி எண்ணில் மின்சார விநியோகத் துறையைத் தொடர்பு கொள்ளலாம். இந்த வசதியை பயனர்கள் 24×7 மணிநேரமும் அணுகலாம்.

மேலும் 044-28521109 என்ற எண்ணில் அழைத்து அவர்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம் அல்லது 9445850811 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பலாம். 044-24959525 என்ற எண்ணில், முகாம் அலுவலகத்தை தொடர்பு கொள்ளும் விருப்பத்தேர்வும் உள்ளது.

TANGEDCO இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, ‘நுகர்வோர் சேவைகள்’ என்ற பகுதியைத் கண்டு அதில்  உங்கள் கேள்விகள் அல்லது கவலைகளைப் பதிவு செய்யலாம். நீங்கள் அதைக் கண்டவுடன், ‘நுகர்வோர் புகார்’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். நீங்கள் புகார் அளித்தவுடன், மின் வாரியத்தின் வாடிக்கையாளர் சேவைத் துறை உறுப்பினர் உங்களைத் தொடர்புகொள்வார்.

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

TNEB இல் எனது பயனர்பெயரை மாற்றுவதற்கான படிநிலைகள் என்ன?

நீங்கள் ஒரு கணக்கில் பதிவு செய்தபிறகு உங்கள் பயனர்பெயரை உங்களால் மாற்ற முடியாது.

எனது முகவரி எப்போதும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருப்பதை நான் எவ்வாறு உறுதிப்படுத்துவது?

உங்கள் முகவரியைத் திருத்தவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ விரும்பினால்,, சரியான செல்லத்தக்க முகவரிச் சான்றுடன் உள்ளூர் அலுவலக பிரிவை தொடர்புகொள்ள வேண்டும்.

எனது TNEB மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது?

முகப்புப்பக்கத்தில் உள்ள 'பில்லிங் சேவைகள்' என்பதன் கீழ் 'மொபைல் எண் பதிவு' என்பதில் கிளிக் செய்யவும். இந்த இணைப்பு உங்களை ஒரு புதிய பக்கத்திற்கு அழைத்துச் செல்லும், அங்கு நீங்கள் ஒரு பிராந்தியத்தை தேர்ந்தெடுத்து சேவை இணைப்பு எண்ணை உள்ளிடலாம். இப்போது பரிவர்த்தனை ரசீது எண்ணை உள்ளிட்டு உங்கள் தொலைபேசி எண்ணைப் பதிவு செய்யவும் அல்லது புதுப்பிக்கவும்.

TNEB இல், ACCD என்பது எதைக் குறிக்கிறது?

ACCD என்பது திரும்பப்பெறக்கூடிய வைப்புத் தொகையான, கூடுதல் மின் நுகர்வு வைப்புத்தொகை (Additional current consumption Deposit) என்பதன் சுருக்கமாகும்.

எனது TNEB மின் கட்டணத்தின் மீதான அபராத தொகையை நான் ஆன்லைனில் செலுத்த முடியுமா?

மின் கட்டணத்தைச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் வாரியம் உங்கள் மின் இணைப்பைத் துண்டித்துவிடும். அந்த சந்தர்ப்பத்தில் உங்கள் இணைப்பு தொடர்ந்து செயல்பாட்டில் இருந்தால், வாடிக்கையாளர் தளத்தில் நீங்கள் லாக் இன் செய்து, மதிப்பீடு செய்யப்பட்ட தண்டத்தொகை உட்பட, உங்கள் மின் கட்டணத்தைச் செலுத்தி முடிக்க முடியும். இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டால், கட்டணத்தை செலுத்தி முடிக்க நீங்கள் அருகிலுள்ள பிரிவு அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டும்.

எனது TNEB மின் கட்டணத்தின் PDF பதிப்பைப் பெற முடியுமா?

பெறமுடியும், உங்கள் TNEB மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திய பிறகு, PDF வடிவத்தில் கட்டண ரசீதைப் பெறுவீர்கள் அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எனது பரிவர்த்தனையை முடிக்க முடியவில்லை. நான் மீண்டும் முயற்சி செய்தால், அது ஏற்கனவே செலுத்தப்பட்டதாக எனக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?

இந்த நிகழ்வில், ஒரு தவறான பரிவர்த்தனை நடைமுறை மூன்று வேலை நாட்களுக்குள் தானாகவே சரிசெய்யப்பட்டுவிடும். உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தொகை ஏற்கனவே கழிக்கப்பட்டிருந்தால், அதே சேவை எண்ணுக்கு மீண்டும் பணம் செலுத்த முயற்சிக்காதீர்கள். உங்களுக்கு ஏதேனும் கேள்வி அல்லது புகார் இருந்தால் வாடிக்கையாளர் சேவை தொடர்பு எண்கள் வழியாக வாரியத்தைத் தொடர்பு கொள்ளவும்.

TNEB மின் இணைப்புக் கணக்கு எண்ணை எவ்வாறு கண்டுபிடிப்பது?

நுகர்வோர் எண் என்பது TNEB இன் முந்தைய பில்லின் ரசீதில் வெள்ளை மீட்டர் அட்டையில் காணப்படும் மின் இணைப்பு சேவை எண்ணைக் குறிக்கிறது.

TNEB ஆன்லைன் கணக்கை நீக்குவது எப்படி?

TNEB இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாடிக்கையாளர் சேவை என்பதில் கிளிக் செய்யவும். 'நான் எனது ஆன்லைன் கணக்கை நீக்க விரும்புகிறேன்' என்ற விருப்பத்தேர்வை தேர்ந்தெடுக்கவும். அடுத்த படிநிலையில், பயனர் கணக்கை நீக்கு என்பதில் கிளிக் செய்து சமர்ப்பியுங்கள். கணக்கு நீக்கப்பட்டுவிடும்.

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (0)
  • 😔 (0)
Exit mobile version