தமிழ்நாட்டில் 2023-ன் முத்திரைத் தீர்வை மற்றும் பத்திர பதிவு புதிய கட்டணங்களின் முழு விவரம்

தமிழ்நாட்டில் 2023-ஆம் ஆண்டிற்கான சமீபத்திய முத்திரைத் தீர்வைக் கட்டணங்கள் மற்றும் சொத்து பத்திரப் பதிவுக் கட்டணங்கள் பற்றிய விவரத்தையும், அவற்றால் நீங்கள் சொத்துகள் வாங்கும்போது எந்த அளவுக்கு தாக்கம் ஏற்படும் என்பதையும் பார்ப்போம்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சொத்து பரிவர்த்தனைகளுக்கு முத்திரைத் தீர்வை (Stamp duty) கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. ஆகவே, நீங்கள் தமிழ்நாட்டில் ஒரு சொத்தை வாங்கும்போது, அதற்குரிய முத்திரைத் தீர்வைக் கட்டணம் மற்றும் பத்திரப் பதிவுக் கட்டணங்கள் (Registration charges) ஆகியவற்றுக்கு கட்டாயமாக ஒரு குறிப்பிடத்தக்க தொகையை தனியாக ஒதுக்கிவைக்க வேண்டியது அவசியம்.

Table of Contents

முத்திரைத் தீர்வைக் கட்டணம் என்பது உங்கள் பெயரில் ஒரு சொத்தை பதிவு செய்வதற்காக அதிகாரிகளுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் ஆகும். இதனைப் பதவு செய்வதற்கான அனைத்து பேப்பர் ஒர்க் வேலைகளையும் செய்வதற்காக அதே அதிகாரிகளுக்கு செலுத்தப்படுவதுதான் பத்திரப் பதிவு கட்டணம் ஆகும்.

இதையும் வாசிக்க: மத்தியப் பிரதேச முத்திரைத் தீர்வை கட்டண முழு விவரம்

தமிழ்நாட்டில் வீடு வாங்குபவரின் செலவினங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். மேலும், தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள பல்வேறு முத்திரைத் தீர்வைக் கட்டணம் மற்றும் நிலம் அல்லது சொத்து பத்திரப் பதிவுக் கட்டணங்கள் பற்றிய விவரங்களையும் இங்கு பகிர்கிறோம்.

இதையும் வாசிக்க: தான பத்திர முத்திரைத் தீர்வை பற்றிய முழு விவரம்

 

Stamp duty and registration charges in Tamil Nadu

 

தமிழ்நாட்டில் 2023-ன் முத்திரைத் தீர்வை மற்றும் பத்திர பதிவு கட்டணங்கள்: பல்வெறு ஆவணங்களுக்கு உரிய கட்டணங்கள்

ஆவண வகை தமிழ்நாட்டில் முத்திரை தீர்வைக் கட்டணம் தமிழ்நாட்டில் பத்திர பதிவுக் கட்டணம்
கிரையம்

(விற்பனை)

சொத்தின் சந்தை மதிப்பில் 7% சொத்தின் சந்தை மதிப்பில் 4%
தானம் (Gift) சொத்தின் சந்தை மதிப்பில் 7% சொத்தின் சந்தை மதிப்பில் 4%
பரிமாற்றம் சொத்தின் அதிகபட்ச சந்தை மதிப்பில் 7% சொத்தின் அதிகபட்ச சந்தை மதிப்பில் 4%
ஈடு அடமானம் கடன் தொகையில் 1%, அதிகபட்சமாக ரூ.40,000 கடன் தொகையில் 1%, அதிகபட்சமாக ரூ.10,000
ஈடு அடமானம் (சுவாதீனத்துடன் கூடியது) கடன் தொகையில் 4% 1%,அதிகபட்சமாக ரூ.2,00,000-க்கு உட்பட்டது
கட்டிட ஒப்பந்த உடன்படிக்கை ரூ.20 அட்வான்ஸ் செய்யப்பட்ட பணத்தில் 1% (உடைமை / உரிமை வழங்கப்பட்டால், மொத்தமாக பரிசீலிக்கப்படும் சொத்து மதிப்பில் 1%
கட்டிட ஒப்பந்த உடன்படிக்கை கட்டுமானத்தின் பரிந்துரைக்கப்பட்ட விலை அல்லது கட்டுமானத்தின் மதிப்பு அல்லது ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ள 1%. இவற்றில் எது அதிகமாக இருக்கிறதோ அது. கட்டுமானத்தின் பரிந்துரைக்கப்பட்ட விலை அல்லது கட்டுமானத்தின் மதிப்பு அல்லது ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பில் 1%. இவற்றில் எது அதிகமாக இருக்கிறதோ அது.
ரத்து ஆவணம் ரூ.50 ரூ.50
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான பாகப்பிரிவினை சொத்தின் சந்தை மதிப்பில் 1%, ஒவ்வொரு பங்கிற்கும் அதிகபட்சமாக ரூ.25,000 1%, ஒவ்வொரு பங்கிற்கும் அதிகபட்சமாக ரூ.4,000
குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு இடையேயான பாகப்பிரிவினை தனித்தனியாக பிரிக்கப்பட்ட பங்குகளுக்கு அந்த சொத்தின் சந்தை மதிப்பில் 4% தனித்தனியாக பிரிக்கப்பட்ட பங்குகளுக்கு அந்த சொத்தின் சந்தை மதிப்பில் 1%
i) அசையா சொத்து விற்பனைக்கான பொது அதிகாரம் (ஜெனரல் பவர் ஆஃப் அட்டார்னி) ரூ. 100 ரூ.10,000
ii) அசையா சொத்து விற்பனைக்கான பொது அதிகாரம் (குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அதிகாரம் வழங்கப்படும்) ரூ.100 ரூ.100
iii) அசையும் சொத்து விற்பனைக்கும், பிற நோக்கங்களுக்காகவும் வழங்கப்படும் பொது அதிகாரம் (General Power of Attorney) ரூ. 100 ரூ. 50
iv) பரிந்துரை / பரிசீலனைக்காக வழங்கப்படும் பொது அதிகாரம் பரிசீலனையின் அடிப்படையில் 4% பரிசீலனையின் அடிப்படையில் 1%, அல்லது ரூ.10,000, எது அதிகமோ அது
குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்ற சாதகமாக ஏற்பாடு (Settlement) சொத்தின் சந்தை மதிப்பில் 1%. ஆனால் ரூ.25,000-க்கு மிகாமல் சொத்தின் சந்தை மதிப்பில் 1%, அதிகபட்சமாக ரூ.4,000-க்கு உட்பட்டது
மற்ற தரப்புகளில் செட்டில்மென்ட் சொத்தின் சந்தை மதிப்பில் 7% சொத்தின் சந்தை மதிப்பில் 4%
மூலதனம் ரூ.500 ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் பார்ட்னர்ஷிப் பத்திரம் ரூ.50 மூலதனத்தில் 1%
பார்ட்னர்ஷிப் பத்திரம் (மற்ற தரப்புகள்) ரூ.300 மூலதனத்தில் 1%
தலைப்புப் பத்திரங்களின் வைப்புத் தொகை (MODT) கடன் தொகையில் 0.5%, அதிகபட்சமாக ரூ.30,000-க்கு உட்பட்டது கடன் தொகையில் 1%, அதிகபட்சமாக 6,000 ரூபாய்க்கு உட்பட்டது
i) குடும்ப உறுப்பினார்களுக்கு இடையேயான வெளியீடு (coparceners) சொத்தின் சந்தை மதிப்பில் 1%. ஆனால் ரூ.25,000-க்கு மிகாமல் i) குடும்ப உறுப்பினர்களிடையே வெளியீடு (கோபார்சனர்கள்)
ii) குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்கு இடையேயான வெளியீடு (கோ-ஓனர் மற்றும் பினாமி வெளியீடு) சொத்தின் சந்தை மதிப்பில் 7% சொத்தின் சந்தை மதிப்பில் 1%
30 ஆண்டுகளுக்கு கீழ் குத்தகை வாடகை, பிரீமியம், அபராதம் ஆகியவற்றின் மொத்த தொகையின் மீது 1%. 1%, அதிகபட்சமாக 20,000 ரூபாய்க்கு உட்பட்டது
99 ஆண்டுகள் வரைக்குமான குத்தகை வாடகை, பிரீமியம், அபராதம் ஆகியவற்றின் மொத்த தொகையின் மீது 4% 1%, அதிகபட்சமாக 20,000 ரூபாய்க்கு உட்பட்டது
99 ஆண்டுகளுக்கு மேல் குத்தகை அல்லது நிரந்தரமாக ஒப்படைத்தல் வாடகை, அபராதம், அட்வான்ஸ் பிரீமியம், ஆகியவற்றின் மொத்த தொகையில் ஏதேனும் இருந்தால், 7% செலுத்த வேண்டும். 1%, அதிகபட்சமாக20,000 ரூபாய்க்கு உட்பட்டது
டிக்லரேஷன் ஆஃப் டிரஸ்ட்(டிரஸ்ட்டுக்கு சொத்து இருந்தால், அது விற்பனையாகக் கருதப்படும்) ரூ.180 தொகையில் 1%

ஆதாரம்: பதிவுத் துறை, தமிழ்நாடு

இதையும் வாசிக்க: குஜராத்தில் முத்திரைத் தீர்வை மற்றும் பத்திரப் பதிவுக் கட்டணங்கள்

குறிப்பு: முத்திரைத் தீர்வை (Stamp duty) எப்போதும் சதவீத அடிப்படையில்தான் காட்டப்படும். முத்திரைத் தீர்வைத் தொகை என்பது சொத்து பரிவர்த்தனை மதிப்பின் குறிப்பிட்ட சதவீதமாகும். அதாவது, வாங்குபவர் ரூ.50 லட்சத்துக்கு சொத்து வாங்கியிருந்தால், தமிழ்நாட்டில் முத்திரைத் தீர்வைத் தொகையாக 7% செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் நிலப் பத்திரப் பதிவுக் கட்டணமாக ரூ.50 லட்சத்துக்கு மேலும் 4% செலுத்த வேண்டும். எனவே, இந்த மாநிலத் தீர்வைகளை செலுத்துவதற்காக சொத்து வாங்குபவர் ரூ.50 லட்சத்துக்கு 11% தொகையை கூடுதலாக வைத்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு முத்திரைச் சட்டம், 2019 மற்றும் இந்திய முத்திரைச் சட்டம் 1899 ஆகியவற்றின்படி இக்கட்டணங்கள் பொருந்தும். இந்தச் சட்டங்களின்படி, அனைத்து சொத்து பரிவர்த்தனைகளுக்கும் தமிழ்நாட்டில் முத்திரைத் தீர்வைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்துவது கட்டாயமாகும். தமிழ்நாடு முத்திரைச் சட்டத்தின்படி, சில பத்திரங்களுக்கு முத்திரைத் தீர்வைக் கட்டணம் கட்டாயம்.

இதையும் வாசிக்க: ஐஜிஆர் மகாராஷ்டிரா குறித்த முழு விவரம்

செட்டில்மென்ட் பத்திரப் பதிவு

ஏற்பாடு பத்திரம் (செட்டில்மென்ட் பத்திரம் – Settlement Deed) என்பது நிலம் முதலான அசையாச் சொத்துகள் தொடர்பான விவகாரங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் அல்லது தகராறுகளைத் தீர்த்துக் கொள்ளும் விதமாக வரையறுக்கப்படும் சட்ட ஆவணத்தைக் குறிக்கிறது. இந்த ஆவணம் செல்லுபடியாக, அதனைப் பதிவு செய்வது அவசியமாகும். தமிழ்நாட்டில் ஏற்பாடு பத்திரத்தைப் பதிவு செய்யும்போது, அசல் உரிமை ஆவணம் (மற்றும் பட்டா), சொத்து மீதான வில்லங்கச் சான்று, அடையாளச் சான்று மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஆதார் அட்டை சான்று ஆகியவற்றை அவசியம் வழங்க வேண்டும்.

செட்டில்மென்ட் பத்திரப் பதிவுக்கு செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணங்கள் பற்றிய விவரங்கள்:

  • சொத்தின் சந்தை மதிப்பில் 1%-ஐ, அதிகபட்சமாக ரூ.25,000 தொகை முத்திரை தீர்வைக் கட்டணமாக செலுத்த வேண்டும். சொத்தின் சந்தை மதிப்பில் 1%-ஐ பதிவுக் கட்டணமாக, அதிகபட்சமாக ரூ.4,000 செலுத்த வேண்டும். இவை குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான செட்டில்மென்ட் பத்திரப் பதிவுக்கு பொருந்தக் கூடிய கட்டணமாகும்.
  • சொத்தின் சந்தை மதிப்பில் 7% முத்திரைத் தீர்வைக் கட்டணம், அதேபோல சொத்தின் சந்தை மதிப்பில் 4% பதிவுக் கட்டணம் ஆகியவை இதர சூழல்களில் செட்டில்மென்ட் பத்திரத்திற்கு பொருந்தக் கூடிய கட்டணங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: தமிழ்நாட்டில் பட்டா சிட்டா ஆவணம் பற்றிய முழு விவரம்

 

தமிழ்நாட்டில் பெண்களுக்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் 2023

பெரும்பாலான மாநிலங்களும் பெண்கள் பெயரில் சொத்துகள் பதிவு செய்யும்போது சில சலுகைகளை வழங்குகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அவ்வாறு இல்லை. தமிழ்நாட்டில் ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியான முத்திரை தீர்வைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதற்கு நேர்மாறாக, தேசிய தலைநகர் டெல்லியில் வீடு வாங்கும் பெண்கள், இங்கு ஆண் செலுத்த வேண்டிய 6% முத்திரை வரிக்கு பதிலாக 4% முத்திரை வரிக் கட்டணத்தை மட்டுமே செலுத்துகிறார்கள்.

இதையும் வாசிக்க: தமிழ்நாட்டில் வழிகாட்டி மதிப்பு பற்றிய அனைத்து தகவல்களும். தமிழ்நாடு அரசு வலைதளத்தைப் பயன்படுத்தி மாநிலத்தின் வழிகாட்டி மதிப்பு மற்றும் பலேறு தகவல்களை தகவல்களைப் தெரிந்துகொள்ள TNREGINET-ஐ பயன்படுத்த உதவும் எங்கள் வழிகாட்டியையும் படிக்கலாம்.

 

தமிழ்நாட்டில் மறுவிற்பனை சொத்துக்கான நில பதிவுக் கட்டணம்

தமிழ்நாட்டில் ஒரு மறுவிற்பனைச் சொத்துக்கான பதிவுக் கட்டணம், அந்த சொத்தின் சந்தை மதிப்பில் 1% அல்லது சொத்தின் ஒப்பந்த மதிப்பாகும். இதற்கு 7% முத்திரைத் தீர்வையும் விதிக்கப்படும்.

 

தமிழ்நாடு முத்திரைத் தீர்வை சட்டம் குறித்து

இந்திய முத்திரைச் சட்டம், 1899 மற்றும் தமிழ்நாடு முத்திரைச் சட்டம், 2019 ஆகியவற்றின்படி, தமிழ்நாட்டில் சொத்து வாங்குபவர் முத்திரை தீர்வைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்களை மாநில அரசுக்குச் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் முத்திரைத் தீர்வைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்கள் செலுத்துதல் என்பது சொத்து பரிவர்த்தனைகள் தொடர்பான சொத்து விற்பனை, குத்தகை, பகிர்வு மற்றும் மறுவிற்பனை நடைமுறைகளுக்கு பொருந்தும்.

 

தமிழ்நாட்டில் முத்திரை தீர்வை கணக்கிடப்படுவது எப்படி?

தமிழ்நாட்டில் சொத்து வாங்குபவர், அம்மாநில அரசு நிர்ணயித்தபடி முத்திரைத் தீர்வைக் கட்டணம் செலுத்த வேண்டும். ரெடி ரெக்கனர் ரேட் அல்லது சர்க்கிள் ரேட் (தமிழ்நாட்டில் மதிப்பு வழிகாட்டி என்றும் அழைக்கப்படுகிறது) அல்லது சொத்து பரிசீலனை மதிப்பு ஆகியவற்றில் இதில் எது அதிக மதிப்பாக இருக்கிறதோ, அந்த தொகையில் முத்திரை தீர்வை விதிக்கப்படுகிறது.

உதாரணமாக, குடியிருக்கும் வீட்டின் சொத்து மதிப்பானது, ஒப்பந்த மதிப்பின் அடிப்படையில் ரூ.50 லட்சமாகவும், வழிகாட்டி மதிப்பின்படி ரூ.40 லட்சமாகவும் இருந்தால், முத்திரை வரித் தொகை அதிகபட்ச மதிப்பில்தான், அதாவது ரூ.50 லட்சத்துக்கு கணக்கிடப்படும்.

தமிழ்நாட்டில் முத்திரைத் தீர்வையில் தாக்கம் ஏற்படுத்தும் காரணிகள்

  • சொத்தின் சந்தை மதிப்பு
  • சொத்து வகை மற்றும் தளங்களின் எண்ணிக்கை
  • சொத்து அமைந்துள்ள இடம்
  • பயன்படுத்தப்படும் நோக்கம் (குடியிருப்பு அல்லது வணிகமாக இருந்தாலும்)
  • சொத்தின் வயது

 

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் முத்திரைத் தீர்வைக் கட்டணம் என்பது நகரின் நகராட்சி எல்லைக்கு உட்பட்டும், அதற்கு வெளியேவும் உள்ள சொத்துகளின் அடிப்படையில் மாறுபடும். நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் சொத்து இருந்தால், அதற்கு கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

சொத்துடன் அமைந்துள்ள வசதிகளும் கூட முத்திரைத் தீர்வை கட்டணத்தை நிர்ணயிக்கும் முக்கிய அம்சம அகும். உதாரணமாக, சென்னையில் நீச்சல் குளம், எலவேட்டர்கள், கம்யூனிட்டி ஹால், க்ளப் ஹவுஸ், ஜிம் முதலான வசதிகளுடன் கூடிய ஹவுசிங் ப்ராஜக்ட் கொண்ட ஒரு ஃப்ளாட்டுக்கு அதிகமான தொகையில் முத்திரைத் தீர்வை செலுத்த வேண்டிவரும்.

அதைப்போலவே, வணிக சொத்துகள் மீது நீங்கள் முதலீடு செய்தால், அதற்கான முத்திரைத் தீர்வை கட்டணம் என்பது வீடு சொத்துகளுக்கு செலுத்த வேண்டியதை விட அதிகமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் பதிவுக் கட்டணங்களில் தாக்கம் தரக்கூடிய காரணிகள்

நீங்கள் ஒரு சொத்து வாங்கும்போது, நீங்கள் எந்த வகையான சொத்துகளை வாங்குகிறீர்கள் என்ற அடிப்படையிலான பல்வேறு காரணிகளைப் பொறுத்து, நீங்கள் பதிவுக் கட்டணங்களை செலுத்த வேண்டிவரும். பல மாடிகளைக் கொண்ட அலுவலகமோ அல்லது அடுக்குமாடி குடியிருப்போ, சூப்பர் பில்டப் ஏரியாவின் அடிப்படையில் இது கணக்கிடப்படும்.

ஒருவேளை, மனைகளாவோ அல்லது நிலங்களாகவோ இருந்தால், நிலத்தின் மொத்த சதுர அடிகளின் மடங்குகளின் அடிப்படையில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு இருக்கும்.

சொத்து என்பது ஒரு இண்டிபெண்டெண்ட் வீடாகவோ அல்லது ஒரு வில்லாவாகவோ இருந்தால், மொத்த கட்டுமானப் பகுதியின் அடிப்படையில் பதிவுக் கட்டணத் தொகை கணக்கிடப்படும்.

முத்திரைத் தீர்வை செலுத்துவது பற்றி மேலும் அறிந்துகொள்ள TNREGINET என்ற பதிவுத் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்

இதையும் வாசிக்க: சொத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால் முத்திரைத் தீர்வைக் கட்டணத்தை திரும்பப் பெற முடியுமா?

 

இறுதி சொத்து விலையை நிர்ணயிப்பதில் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்களின் தாக்கம்

தமிழ்நாட்டில் சொத்து வாங்குபவர்கள், சொத்து அல்லது நிலப் பதிவுக் கட்டணம் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், இது சொத்து வாங்குவதற்கான ஒட்டுமொத்த செலவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

தமிழகத்தில் முத்திரைத் தீர்வைக் கட்டணம் மற்றும் சொத்து பத்திரப் பதிவுக் கட்டணங்கள், சொத்தின் இறுதி விலையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கணக்கிடுவோம்:

கோகுல் என்பவர் சென்னையில் வழிகாட்டி மதிப்பின்படி ஒரு சொத்தை ரூ.40 லட்சதிற்கு வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் பின்வரும் கட்டணங்களை அவர் செலுத்த வேண்டும்:

  • பதிவு கட்டணம்: ரூ.40 லட்சத்துக்கு 4% = ரூ.1,60,000
  • முத்திரைத் தீர்வை: ரூ.40 லட்சத்தில் 7% = ரூ.2,80,000

எனவே, இந்த சொத்தை வாங்குவதற்கான மொத்த செலவு – ரூ.44.40 லட்சம்.

இதையும் வாசிக்க: தமிழ்நாட்டில் EC சான்றிதழ் பெறுவது பற்றிய முழு விவரம்

 

தமிழ்நாட்டில் முத்திரைத் தீர்வையை ஆன்லைனில் செலுத்துவது எப்படி?

தமிழ்நாட்டில் முத்திரைத் தீர்வை மற்றும் நிலம் அல்லது சொத்துப் பதிவு கட்டணம் இ-ஸ்டாம்பிங் வசதி மூலம் ஆன்லைனில் செலுத்தலாம். ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SHCIL) என்பது நாட்டில் இ-ஸ்டாம்ப் சான்றிதழ்களை வழங்குவதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மத்திய பதிவுக் காப்பீட்டு நிறுவனம் (CRA).

ஒருவர் SHCIL இணையதளத்தைப் பார்வையிட்டு, முத்திரையிடலுக்கு தேவைப்படும் பரிவர்த்தனைகள் மற்றும் சேகரிப்பு மையங்களின் முகவரிகள் போன்ற தகவலைப் பெறலாம். ஒருவர் ACC (அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பு மையம்)-க்கு சென்று, விண்ணப்பப் படிவத்தை நிரப்பி முத்திரைச் சான்றிதழுக்கான கட்டணத்துடன் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இ-ஸ்டாம்பிங் முறையில் முத்திரைத் தீர்வை கட்டணத்தை, NEFT, RTGS, பே ஆர்டர், டிமாண்ட் டிராஃப்ட், காசோலை, ரொக்கம் மற்றும் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு பரிமாற்றம் என பல்வேறு முறைகளில் செலுத்தலாம். மேலும், ஒருவர் மின்னணு பணப் பரிமாற்றம் மூலம் கட்டணத்தை செலுத்த விரும்பினால், முதலில் அவர் அருகில் உள்ள இ-ஸ்டாம்பிங் மையத்தைத் தொடர்புகொள்ள வேண்டும்.

இதையும் வாசிக்க: இ-ஸ்டாம்பிங் என்றால் என்ன, அது செயல்படுவது எப்படி?

 

தமிழ்நாட்டில் முத்திரைத் தீர்வை கட்டணத்தை நேரடியாக செலுத்துவது எப்படி?

சொத்து வாங்குபவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று தமிழ்நாடு முத்திரைத் தீர்வைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்களை செலுத்தலாம். விண்ணப்பப் படிவத்தைத் தாக்கல் செய்வது, ஆவணத்தைச் சமர்ப்பித்தல் மற்றும் நிலம் அல்லது சொத்துப் பதிவுக்கு தேவையான கட்டணங்களைச் செலுத்துதல் ஆகியவை இந்த நடைமுறையில் அடங்கும். பணம், டிமாண்ட் டிராப்ட், காசோலை, NEFT, RTGS அல்லது டெபிட் / கிரெடிட் கார்டு மூலம் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பதாரர்கள் முத்திரைத் தீர்வை கட்டணச் சான்றிதழைப் பெறலாம்.

ஒருவர் சொத்து ஆவணத் தகவல்களை முத்திரைத் தாளில் நிரப்ப தேவைபடும் முத்திரைத் தாளை கருவூலத்திலிருந்து அல்லது ஃபிராங்கிங் மெத்தெட் செயல்முறையில் பெறலாம். அதற்காக செலுத்தப்படும் கட்டணமானது ஃபிராங்கிங் கட்டணம் எனப்படுகிறது. ஆவணம் முத்திரையிடப்பட்டவுடன் அது சட்டபூர்வமாக செல்லுபடியானதாக மாறும்.

 

தமிழ்நாட்டில் சொத்து பதிவு செய்யும்போது தேவைப்படும் ஆவணங்கள்

தமிழ்நாட்டில் சொத்து வாங்கி பதிவு செய்யும்போது பின்வரும் ஆவணங்களை வழங்க வேண்டும்:

  • பான் கார்டு
  • சொத்து உரிமையாளர் மற்றும் சாட்சிகளின் அடையாளச் சான்றுகள்
  • இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்
  • முத்திரைத் தீர்வைக் கட்டண ரசீது
  • நோ அப்ஜெக்‌ஷ்ன் சான்றிதழ் (NOC)
  • விற்பனைப் பத்திரம்
  • அதிகாரம் பெற்ற நபர் (பவர் ஆப் அட்டார்னி)
  • நகராட்சி வரி செலுத்திய ரசீது

 

தமிழ்நாட்டில் முத்திரைக் கட்டணம் செலுத்துவதற்கான வரிச் சலுகைகள்

சொத்து வாங்குபவர்கள் முத்திரை தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும், இது அவர்களின் ஒட்டுமொத்த செலவை கணிசமாக அதிகரிக்கிறது. அரசு விதிகளின்படி, முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் செலுத்துவதற்கு விதிக்கப்பட வரையறுக்கப்பட்ட அதிகபட்ச வரி ரூ.1,50,000 மட்டுமே. இந்த பலன்களை  இந்து கூட்டுக் குடும்பங்கள் (HUFs) மற்றும் தனிநபர்கள் கோரிப்பெறலாம். தமிழ்நாட்டில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்களைச் செலுத்தும் முன் ஒருவர் மாநில வரிவிதிப்பு அதிகாரிகளை அணுகிச் சரிபார்க்க வேண்டும்.

 

தமிழ்நாடு முத்திரைத்தாள்: அறிந்து கொள்ள வேண்டியவை

தமிழ்நாட்டில் சொத்து வாங்குபவர்கள் ஒரு சொத்தை பதிவு செய்யும் போது பின்வரும் விவரங்களை  கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். எந்தவொரு சொத்தின் பதிவு ஒப்பந்தத்தையும் சரிபார்க்க முத்திரை தீர்வுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முத்திரை தீர்வுக் கட்டணம் செலுத்தாமல் ஒருவர் சொத்து உரிமை கோர முடியாது. சொத்து உரிமைக்கான சட்டபூர்வமான ஆவணமாக இது செயல்படுகிறது மற்றும் சட்ட பிரச்சைனைகளுக்கு  நீதிமன்றத்தில் இது ஒரு செல்லத்தக்க ஆவணமாக கருதப்படும்

நீதிமன்றம் மற்றும் கருவூலத்தில் இருந்து நீதித்துறை சாராதமுத்திரைத் தாளைப் ஒருவர் பெற வேண்டும்.

 

தமிழ்நாட்டில் முத்திரைத் தீர்வை மற்றும் பத்திரப் பதிவுக் கட்டணங்கள்: சமீபத்திய செய்திகள்

ஜூன் 16, 2022-ல் பதிவானது

2022 நிதியாண்டில் சொத்துப் பதிவுகள் மூலம் ரூ.13,914 கோடி வருவாய் ஈட்டிய தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வருவாயை சொத்துப் பதிவுகள் மூலம் ஈட்டியுள்ளது. நிதியாண்டு 2022-ல் சொத்துப் பதிவுவுகள் மூலம் ரூ.13,913.65 கோடியை ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டில் வசூலான வருவாயான ரூ.10,643.08 கோடியை விட இது 31% அதிகம் ஆகும்.

மேலும், தமிழ்நாட்டின் வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறையால் தயாரிக்கப்பட்ட முத்திரைகள் மற்றும் பதிவுக் கொள்கைக் குறிப்பின்படி, 2020-21 நிதியாண்டில் 26,95,650 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை 2022 நிதியாண்டில் 29,98,048 ஆக உயர்ந்துள்ளது.

ஜனவரி 3, 2022-ல் பதிவானது

ரியல் எஸ்டேட் வழிகாட்டி மதிப்பை திருத்தியமைக்க அரசு திட்டம்

ரியல் எஸ்டேட் வழிகாட்டி மதிப்பை (Real estate guideline value) திருத்தியமைக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ளது. 18-வது முறையாக சந்தை மதிப்பு வழிகாட்டுதலை பகுப்பாய்வு செய்து நடைமுறப்படுத்த உயர்மட்ட குழு மற்றும் வழிகாட்டுதல் குழுவை அமைக்க அரசு உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழிகாட்டி மதிப்பு முதன்முதலில் செப்டம்பர் 1, 1981 அன்று திருத்தப்பட்டது. தமிழ்நாடு முத்திரை (மதிப்பு வெளியீடு மற்றும் சொத்துகளின் சந்தை மதிப்பு வழிகாட்டுதல்களை திருத்துவதற்கான மதிப்பீட்டுக் குழு) விதிகள், 2010, நடைமுறைக்கு வந்தது. ஏப்ரல் 2012-இல், வழிகாட்டி மதிப்பு 16-வது முறையாக திருத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் வலுவான நிலையில் முத்திரைத் தீர்வை மற்றும் சொத்து பதிவுக் கட்டண வருவாய்

மாநிலப் பதிவுத் துறையின் தகவலின்படி, 2021-22 நிதியாண்டில் முத்திரைத் தீர்வைக் கட்டணம் மற்றும் சொத்துப் பதிவுக் கட்டணங்கள் மூலம் தமிழ்நாட்டில் வலுவான நிலையில் தொடர்ந்து வருவாய் கிடைக்கிறது. ஏப்ரல் முதல் நவம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தின் ரூ.8,448.42 கோடி வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 9, 2021-ல் பதிவானது

செப்டம்பர் 2021-ல் சொத்துப் பதிவுகள் மூலம் தமிழ்நாட்டில் வரலாறு காணாத வருவாய்

கோவிட்-19 இரண்டாம் அலைக்குப் பிறகு ரியல் எஸ்டேட் துறை வலுவாக மீண்டு வந்த சூழலில், தமிழ்நாட்டில் வரலாறு காணாத அள்வில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சொத்துப் பதிவுகள் மூலம் வருவாய் ஈட்டப்பட்டது. மாநிலம் முழுவதும் நிலம் மற்றும் சொத்துப் பதிவுகள் மூலம் கிட்டத்தட்ட ரூ.1,500 கோடி அளவுக்கு செப்டம்பர் மாதத்தில் வருவாய் கிட்டியது. இது முந்தைய ஆண்டுகளில் எந்த மாதத்திலும் இல்லாத அளவுக்கு உச்சபட்ச வசூல் சாதனையாகும். பதிவுத் துறையின் தகவல்படி, 2021-22 நிதியாண்டில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சேர்ந்து பெறப்பட்ட மொத்த வருவாயில், செப்டம்பர் மாத வருவாய் மட்டும் 25% ஆகும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலம் மேற்கண்ட மொத்த வருவாயில் 45% தனது பங்களிப்பாக கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 இரண்டாம் அலைக்குப் பிறகு சொத்துப் பதிவுகள் மூலம் வரும் வருவாயை அதிகரிக்க தமிழ்நாடு அரசு திட்டம்

ஆகஸ்ட் 9, 2021: கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலைக்குப் பிறகு, சொத்துப் பதிவுகள் மூலம் வரும் வருவாயை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து விவாதிக்க, வணிக வரி மற்றும் பதிவுத்துறை மாநில அமைச்சர் பி.மூர்த்தி சமீபத்தில் பதிவுத்துறை அதிகாரிகளுடன் ஓர் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரை முத்திரைத் தீர்வைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் ரூ.10,643 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

நல்ல நாட்களில் சொத்துப் பதிவுக்கு தமிழ்நாடு அரசு அனுமதிக்க வாய்ப்பு

அதிக வருவாய் ஈட்டும் நோக்கில், தமிழ் நாட்காட்டியின்படி மங்களகரமானதாகக் கருதப்படும் மூன்று நல்ல நாட்களில் சொத்துப் பதிவுகளை தமிழ்நாடு அரசு அனுமதிக்கலாம் என எதிர்பாரக்கபடுகிறது. இதுவரை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் இந்த நாட்களில் மூடப்பட்டிருக்கும். தைப்பூசம் மற்றும் ஆடிப்பெருக்கு உள்ளிட்ட நாட்களில் சொத்துப் பதிவுக்கு அனுமதி வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இருப்பினும், இந்த நாட்களில் சொத்து பதிவு செய்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

கூட்டுத்திட்டங்களுக்கு பத்திரப் பதிவை தமிழ்நாடு கட்டாயமாக்க உத்தேசம்

தமிழ்நாட்டில் கூட்டுத் திட்டங்களுக்கு (Joint ventures – JVs) பதிவுக் கட்டணத்தைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு பதிவுத் துறை மற்றும் நிதித் துறை ஆலோசித்து வருகின்றன. தற்போது, மாநிலத்தில் குடியிருப்பு மற்றும் வணிகத் திட்டங்களில் 75% முதல் 80% வரை கூட்டுத்திட்டங்களாக எடுத்துக்கொள்ளபட்டுள்ளது. எனினும், வழிகாட்டி மதிப்பின்படி பதிவுக் கட்டணங்கள் 11% அதிகமாக இருப்பதால், இவை பதிவு செய்யப்படுவதில்லை. இதுவரை, கூட்டுத் திட்டங்களுக்கான பதிவு கட்டாயமாக்கப்படவில்லை. இந்தப் பதிவுகளை ஊக்குவிக்கும் வகையில், வழிகாட்டி மதிப்பில் 2% கட்டணத்தை குறைக்க அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். இதனால் கூட்டுத்திட்ட முயற்சிகளுக்கு பதிவு செய்வதும் கட்டாயமாகிவிடும், எனவே, இது சட்டபூர்வமாக பிணைக்கப்படும்.

இந்த மாற்றத்தை நடைமுறைபடுத்த 1908-ஆம் ஆண்டு ஏற்படுத்தபட்ட பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்படுகிறது. மாநில அரசுக்கு நல்ல வருவாயை உறுதி செய்வதும் இந்த நடவடிக்கையை மேற்க்கொள்வதற்கு முக்கிய காரணம் ஆகும்.

கோவிட்-19-க்கு மத்தியில் சென்னையில் சொத்துப் பத்திரப் பதிவுகள்

கொரானா பெருந்தொற்று மற்றும் அதன் காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் தாக்கத்தால் 2020-ஆம் ஆண்டின் முற்பகுதியில் சொத்துப் பதிவுகள் சரிவைக் கண்டன. எனினும், ஆகஸ்ட் 2020 முதல் சொத்து விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதால், அந்த மாதத்தில் சொத்துப் பதிவுகள் மூலம் ரூ.793 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டப்பட்டது. 2019-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17,000 பதிவுகள் அதிகமாக இருந்ததாக பதிவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனைகள் மேம்பாட்டுத் திட்டங்களும், நில விற்பனையும் ஒப்பீட்டளவில் வேகம் கண்டு வருகிறது” என்று உள்ளூர் ரியல் எஸ்டேட் கான்ட்ராக்டர் டி.பாலபாஸ்கர் தெரிவிக்கிறார். மேலும், மாநிலங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் அதிகரித்து வரும் கோவிட்-19 பாதிப்புகளின் எதிரொலியால் விற்பனை இதுவரை வெகுவாக பாதிக்கப்பட்டு வந்ததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். தற்போது நிலம் வாங்குவதற்கான விசாரிப்புகள் அதிகரித்துள்ளதால், வழக்கமான விற்பனை அதிகரிக்கத் தொடங்கும் என்று உள்ளூர் தரகர்கள் நம்புகின்றனர். வீடு வாங்க விரும்வோர் சொத்து விலையில் தள்ளுபடி, சலுகைகள் மற்றும் கஸ்டமைஸ்டு பேக்கேஜுகள் பற்றி விசாரித்து வருகின்றனர். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தை தங்களது எதிர்கால முதலீட்டுக்கான வாய்ப்பாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

சென்னையில் விற்பனைக்கான சொத்துகள் குறித்து பார்க்க

புதிய மற்றும் குடிபுகுவதற்கு தயாராக உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களுக்கு முத்திரைத் தீர்வைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று மே 2020-ல் தமிழக அரசின் பதிவுத் துறை விளக்கம் அளித்திருந்தது.

இது சொத்தின் முதல் விற்பனையின்போது மட்டுமே பொருந்தும். மேலும் நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (UDS) மட்டுமே முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்களுக்கு உட்படுத்தப்படும். சூப்பர் பில்ட்-அப் பகுதிக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 2020-இல் வரலாறு காணாத பதிவுகள்

2020-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதியன்று பதிவுத் துறையானது 575 சார் பதிவாளர் அலுவலகங்களைக் கொண்டு 20,307 ஆவணங்களை பதிவு செய்தது. அன்றைய தினம் மட்டும் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் விற்பனை மூலம் ரூ.123.35 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அக்டோபர் மாதத்தில் பதிவுத் துறைக்கு ரூ.1,096 கோடி வருவாய் ஈட்டி தந்த சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் முத்திரைத் தீர்வை கட்டணம் குறையுமா?

தமிழ்நாடு மாநில துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், முத்திரைத் தீர்வை கட்டணத்தைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் தொழில் கூட்டமைப்பு சங்கம் (CREDAI) தெரிவித்துள்ளது. 2015-இல் மழை – வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு மாநிலமும், அதன் பொருளாதாரமும் பெரிதும் பாதித்து பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அதுபோலவே 2020-இல் கோவிட்-19 பெருந்தொற்று மேலும் ஒரு பேரிடியைக் கொடுத்துள்ளது. எனவே, வருங்காலத்தில் வீடு வாங்குபவர்களுக்கு சில சலுகைகளை வழங்க, அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில் அமைப்பினர் வலியுறுத்தினர்.

11%-ல் (முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் ஆகிய இரண்டும்) இருந்து முத்திரைத் தீர்வை 5% ஆகவும், பதிவுக் கட்டணம்  1% ஆகவும் நிரந்தரமாகக் குறைக்கக் கோரியுள்ளோம். குறுகிய கால நடவடிக்கையாக, மார்ச் 31, 2021 வரை 4% முத்திரைத் தீர்வைக் கட்டணம் மற்றும் 1% பதிவுக் கட்டணமாக குறைக்குமாறு கேட்டுள்ளோம் என்று CREDAI-இன் தமிழ்நாடு பிரிவின் தலைவர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். இதற்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதையும் வாசிக்க: தெலங்கான EC தேடல் குறித்த முழு விவரம்

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

தமிழ்நாட்டில் சொத்து பத்திரப் பதிவு செய்வது கட்டாயமா?

ஆம், பதிவுச் சட்டம், 1908-இன் படி, உங்கள் சொத்தைப் பதிவு செய்வது கட்டாயமாகும்.

சென்னையில் முத்திரைத் தீர்வை கட்டணத்தை எங்கு செலுத்த வேண்டும்?

பதிவாளர் / சார்ப் பதிவாளர் அலுவலகத்தில் முத்திரைக் கட்டணத்தைச் செலுத்தலாம் அல்லது இ-ஸ்டாம்பிங் வசதியை அணுகலாம்.

சொத்துப் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன?

உங்களுக்கு முத்திரைத் தீர்வைக் கட்டண ரசீது, பான் கார்டு, சாட்சிகள் உட்பட அனைத்துத் தரப்பினரின் அரசு அடையாளச் சான்றுகள், இரண்டு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், நோ அப்ஜக்ஷன் சான்றிதழ் (NOC), நிலுவைத் தொகை இல்லை / நோ டியூஸ் சான்றிதழ், விற்பனைப் பத்திரம், பிஏஓ (POA), பட்டாதாரின் பாஸ்புக் போன்றவை தேவைப்படும்.

தமிழ்நாட்டில் கிரெடிட் கார்டு மூலம் முத்திரைத் தீர்வைக் கட்டணம் செலுத்த முடியுமா?

பதிவாளர் அலுவலகங்களில் PoS (Point of Sales) சாதனங்கள் மற்றும் டெபிட் கார்டுகள் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி குடிமக்கள் தங்கள் சொத்துப் பதிவுக் கட்டணத்தைச் செலுத்த வழிவகை செய்வதறக்கான முன்முயற்சிகளை தமிழ்நாடு பதிவுத் துறை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் வழிகாட்டி மதிப்பீடு என்றால் என்ன?

வழிகாட்டி மதிப்பீடு என்பது அரசால் நிர்ணயிக்கப்படும் சொத்தின் மதிப்பு ஆகும். அதற்குக் குறைவாக சொத்தை பதிவு செய்ய முடியாது. முத்திரைத் தீர்வை தொகையை ஏய்ப்பு செய்திடாமல் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும். ஒரு குறிப்பிட்ட தெரு அல்லது சர்வே நம்பரில் கடந்த கால பரிவர்த்தனைகள், சொத்து உள்ள பகுதியின் வளர்ச்சி உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இது மதிப்பிடப்படுகிறது.

 

Was this article useful?
  • 😃 (2)
  • 😐 (0)
  • 😔 (0)

Recent Podcasts

  • இந்த அன்னையர் தினத்தில் இந்த 7 பரிசுகளுடன் உங்கள் தாய்க்கு புதுப்பிக்கப்பட்ட வீட்டைக் கொடுங்கள்
  • அன்னையர் தின சிறப்பு: இந்தியாவில் வீடு வாங்கும் முடிவுகளில் அவரது செல்வாக்கு எவ்வளவு ஆழமானது?
  • 2024 இல் தவிர்க்கப்பட வேண்டிய காலாவதியான கிரானைட் கவுண்டர்டாப் ஸ்டைல்கள்
  • 2025-க்குள் இந்தியாவின் நீர் உள்கட்டமைப்புத் தொழில் 2.8 பில்லியன் டாலர்களை எட்டும்: அறிக்கை
  • டெல்லி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஏரோசிட்டி 2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மிகப்பெரிய வணிக வளாகத்தை உருவாக்க உள்ளது
  • குர்கானில் அறிமுகப்படுத்தப்பட்ட 3 நாட்களுக்குள் அனைத்து 795 பிளாட்களையும் 5,590 கோடி ரூபாய்க்கு DLF விற்பனை செய்கிறது.