Site icon Housing News

PMJJBY: பிரீமியம் தொகை அட்டவணை, தொகை, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் பலன்கள்

மே 9, 2015 அன்று துவங்கப்பட்ட மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் பங்கேற்கும் பங்கேற்பாளர் ஏதேனும் காரணத்திற்காக 55 வயதிற்குள் இறந்தால், இத்திட்டத்தின் கீழ் அவர்களது குடும்ப நாமினிக்கு அரசாங்கம் இரண்டு லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக வழங்கும். லைப் இன்ஸ்யூரன்ஸ் கார்பரேஷன் மற்றும் பிற தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இத்திட்டத்தைப் பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் மூலம் வழங்குகின்றன.

 

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆன்லைனில் விண்ணப்பித்தல்

ஜீவன் ஜோதி பீமா யோஜனாவிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்.

 

 

 

 

 

 

இது பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா pdfக்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யும் செயல்முறை ஆகும்.

 

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா 2022: கண்ணோட்டம்

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) உங்கள் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவும் காப்பீட்டுத் திட்டமாகும். இது காப்பீட்டாளர் அகால மரணமடையும் நிலையில் அவரது குடும்பத்தை நிதி இழப்பிலிருந்து பாதுகாக்கும் ஒரு வருட ஆயுள் காப்பீடு ஆகும். PMJJBY பாலிசிக்கு அரசாங்க மானியமும் கிடைப்பதால் குறைந்த பிரீமியமே வசூலிக்கப்படுகிறது. நீங்கள் பாலிசியைத் தொடர விரும்பினால், ஒரு வருடத்திற்குப் பிறகு பாலிசியைத் தொடரலாம்.

 

PMJJBY பிரீமியம் தொகை

இந்த திட்டத்தின் கீழ் பாலிசிதாரர் ஆண்டுக்கு ரூ.330 பிரீமியம் செலுத்த வேண்டும், இது ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் பாலிசிதாரரின் சேமிப்புக் கணக்கில் இருந்து தானாகவே கழிக்கப்படும். இந்தத் திட்டம் EWS மற்றும் BPL உட்பட அனைத்து குடிமக்களுக்கும் குறைந்த பிரீமியத்தில் வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் காப்பீடு ஜூன் 1 மற்றும் அடுத்த ஆண்டு மே 31 வரை நீடிக்கும். PMJJY காப்பீட்டுக்கு, மருத்துவப் பரிசோதனை தேவையில்லை.

 

PMJJBY: கட்டணம் செலுத்தும் முறை

காப்பீட்டு பிரீமியம் கணக்கு வைத்திருப்பவரின் சேமிப்புக் கணக்கிலிருந்து வங்கியால் தானாகப் பற்று வைக்கப்படும். வாடிக்கையாளர் வங்கியிடம் ரத்துசெய்யும் கோரிக்கையை வழங்காத பட்சத்தில், பாலிசி புதுப்பித்தல் கட்டணம், மே-25 முதல் மே-31 வரை வங்கியால் டெபிட் செய்யப்படும். பிரீமியத்திற்கான ஆட்டோ-டெபிட் வசதி அஞ்சல்அலுவலகக் கணக்கு மூலமும் கிடைக்கும்.

 

PMJJBY: கவரேஜ் தொகை

பாலிசிதாரருக்கு மரணம் சம்பவிக்கும் பட்சத்தில், பாலிசிதாரர் குறிப்பிட்டுள்ள பயனாளிக்கு ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

 

PMJJBY: கவரேஜ் காலம்

இத் திட்டம் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கும் மற்றும் இதை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கலாம்.

 

PMJJBY சிறப்புக் கூறுகள்

திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா
தொடங்கி நடத்துபவர் மத்திய அரசு
பயனாளிகள் நாட்டின் குடிமக்கள்
குறிக்கோள் காப்பீடு வழங்குதல்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.jansuraksha.gov.in/

 

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா: நோக்கம் மற்றும் குறிக்கோள்

இத் திட்டம் இந்நாட்டின் குடிமக்கள் தங்கள் குடும்பங்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பாலிசிதாரருக்கு காப்பீட்டுக் களத்தின் போது மரணம் சம்பவிக்கும் நிலையில் அவரது குடும்பத்திற்கு ( நியமிக்கப்பட்ட பயனாளிகள்) இந்திய அரசு ரூ.2 லட்சம் வழங்கும். அனைத்து இந்திய குடிமக்களும் PMJJBY மூலம் காப்பீடு பெற தகுதி பெறுவர்.

 

பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா மூலம் கிடைக்கும் பலன்கள்

 

பிரதமர் நரேந்திர மோதி துவக்கியா ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் சில சிறப்பம்சங்கள்

 

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனாவில் பங்கேற்க தகுதிகள்

 

ஜீவன் ஜோதி பீமா யோஜனாவிள் பங்கேற்க வழங்கவேண்டிய ஆவணங்கள்

 

PMJJBY: பதிவு செயல்முறை  

சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்று படிவங்களைச் சமர்ப்பித்து இத்திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்திற்கு LIC மற்றும் பிற தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்ள் பொறுப்பேற்கின்றனர். வருடாந்திர பிரீமியத்தைச் செலுத்தி, ஆண்டின் எந்த நேரத்திலும் பதிவு செய்யலாம். இந்தத் திட்டத்தில் இருந்து விலகியவர்கள், வருடாந்திர உறுப்பினர் கட்டணத்தைச் செலுத்துவன் மூலம் மீண்டும் சேரலாம்.

 

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் கீழ் உரிமை கோரலை எவ்வாறு சமர்ப்பிப்பது?

பாலிசிதாரரின் மரணத்திற்குப் பிறகு சம்பந்தப்பட்ட LIC ஓய்வூதியங்கள் மற்றும் குழுக்கள் திட்டம் (P&G) அலுவலகம்/யூனிட் மூலம் இழப்பீடு வழங்கப்படும். உரிமைகோரலுக்கான செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

பின்னர் உரிமைகோரல் படிவம் மற்றும் டிஸ்சார்ஜ் ரசீது படிவம் மற்றும் இறப்புச் சான்றிதழ் மற்றும் ரத்து செய்யப்பட்ட காசோலையின் புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், பாலிசிதாரரின் இணைக்கப்பட்ட PMJJBY சேமிப்புக் கணக்கிற்கான வங்கி விவரங்களை அவர்கள் வழங்க வேண்டும்.

 

PMJJBY: உரிமைகோரல்களுக்கான காத்திருப்பு காலம்

PMJJBY திட்டத்தில் சேரும் புதிய உறுப்பினர்கள், பதிவுசெய்த முதல் 30 நாட்களுக்குப் பிறகே காப்பீட்டுத் தொகைக்குத் தகுதி பெறுவார்கள். அதாவது, பதிவு செய்த நாளிலிருந்து முதல் 30 நாட்களில் செய்யப்பட்ட எந்தவொரு உரிமை கோரலையும் காப்பீட்டாளர் தீர்க்கமாட்டார். இருப்பினும், விபத்துக்களால் மரணம் ஏற்படும் பட்சத்தில், இதற்கு பற்றுரிமை பிரிவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பயனாளிக்கு பணம் வழங்கப்படும்.

 

PMJJBY: உரிமைகோரல் சரிபார்ப்பு

வங்கி மூலம்

 

நியமிக்கப்பட்ட P&GS யூனிட்டுகள் மூலம்

 

PMJJBY விளம்பரம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கான நடைமுறை

 

 

 

 

 

PMJJBY படிவங்கள் பதிவிறக்கும் செயல்முறை

 

 

 

 

 

 

 

PMJJBY விதிகளைக் காணும் நடைமுறை

 

 

 

 

 

PMJJBY மாநிலம் சார்ந்த கட்டணமில்லா எண்களைப் பதிவிறக்கம் செய்தல்

 

 

 

 

 

2020-21 நிதியாண்டில், 2,50,351 இறப்புசார் உரிமை கோரல்கள் பெறப்பட்டுள்ளன.

2020-21 நிதியாண்டில், 2,50,351 இறப்புசார் உரிமை கோரல் விண்ணப்பங்கள் பெறப்பட்டது, அவற்றில் 13100 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது மற்றும் 2346 கவனத்தில் கொள்ளப்பட்டது. மத்திய அரசு ஏற்ற 2,34,905 இறப்புசார் உரிமை கோரல்கள் சார்ந்து 2020-21 நிதியாண்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4698.10 கோடி இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நீமுச்-இன் RTI ஆர்வலர் சந்திரசேகர் கோண்ட் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றுள்ளார்.

PMJJBY நிதி ஆண்டு PMJJBY இல் பதிவுசெய்தோரின் மொத்த எண்ணிக்கை P MJJBY பெற்ற உரிமை கோரல் விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கை PMJJBY திட்டத்தின் கீழ் தீர்வு வழங்கப்பட்ட உரிமைகோரல்களின் எண்ணிக்கை
2016-17 3.10 கோடி 62,166 59,118
2017-18 5.33 கோடி 98,163 89,708
2018-19 5.92 கோடி 145,763 135,212
2019-20 6.96 கோடி 190,175 178,189
2020-21 10.27 கோடி 250,351 234,905

 

PMJJBY உரிமைகோரல் தீர்வு விவரங்கள்

ஆண்டு PMJJBY பெற்ற மரணம் சார் உரிமைகோரல்கள் PMJJBY மூலம் விநியோகிக்கப்பட்ட தொகை
2016-17 59,118 ரூ.1,182.36 கோடி
2017-18 89,708 ரூ.1,794.16 கோடி
2018-19 1,35,212 ரூ.2,704.24 கோடி
2019-20 1,78,189 ரூ 3563,78 கோடி
2020-21 2,34,905 ரூ 4698.10 கோடி

 

2020-21 இல் மொத்தம் 56716 குடிமக்களுக்கு உரிமை கோரல் தீர்வு வழங்கப்பட்டது

பிரதான் மந்திரி பீமா யோஜனாவை வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே அணுக முடியும். இந்தத் திட்டத்தில் இருந்து விலகிய ஒரு நபர் மீண்டும் சேர விரும்பினால், த்ச்னது சுக ஆரோக்கியத்தைப் பற்றிய சுய அறிக்கையை வழங்கி, வருடாந்திர பிரீமியத்தைச் செலுத்தி, மீண்டும் இணையலாம். 2020-21 நிதியாண்டில், இத்திட்டத்தின் கீழ் 56716 குடிமக்களின் உரிமை கோரல் சார்ந்து மொத்தம் ரூ.1134 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், இத்திட்டத்தின் கீழ் உரிமை கோரல் விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தேர்வு வழங்கப்பட்ட உரிமை கோரல்களில் பாதிக்கும் மேல் கொரோனா வைரஸ் தொற்று காரணமான இறப்பு சார்ந்தவை. இந்த திட்டத்தில் 2021 நிதியாண்டின் இறுதிக்குள் 102.7 மில்லியன் மக்கள் பதிவு செய்து இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 330 எதற்காகக் கழிக்கப்பட்டது என்பதை அறி

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனாவில் பதிவு செய்த குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து மே மாதம் ரூ. 330 பற்று வைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 அன்று, இத்திட்டம் புதுப்பிக்கப்படுவதால், மே மாதத்தில் வங்கிகளால் புதுப்பித்தல் பிரீமியம் பற்று வைக்கப்படுகிறது.

பாலிசிதாரருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருந்தால் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில் இருந்து பிரீமியம் தொகை பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், உங்கள் வங்கியில் இருந்து பணத்தைத் திரும்பப்பெறக் கோரலாம். இந்த திட்டத்தின் பலன்கள் ஒரு வருட காலத்திற்கு கிடைக்கும்.

 

COVID நோய்த்தொற்றின் விளைவாக மரணம் ஏற்பட்டால், கீழே பட்டியலிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து திட்டத்தின் பலனைப் பெறலாம்.

PMJJBY பாலிசி/திட்டம் (பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா) ஓர் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் பதிவு செய்த நபர் கொரோனா வைரஸ் தொற்று அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் இறந்திருந்தால், இந்தத் திட்டத்தின் கீழ் $200,000.00 வரையிலான காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். பாலிசிதாரர் இந்தத் திட்டத்தை 2020-21இல் வாங்கினால் மட்டுமே இந்த நன்மையைப் பெற முடியும்.

 

45 நாட்களுக்குப் பிறகே ரிஸ்க் கவரேஜ் கிடைக்கிறது

பதிவுசெய்த நாள் முதல் 45 நாட்கள் வரை, இந்தத் திட்டத்தின் கீழ் உரிமை கோரதலுக்கு விண்ணப்பிக்க முடியாது. 45 நாள் கால அவகாசம் கடந்த பிறகே உரிமைகோரல் பெற தகுதி உண்டு. முதல் 45 நாட்களுக்குள் சமர்பிக்கப்படும் எந்தவொரு உரிமை கோரலுக்கும் தீர்வு வழங்கப்படாது. இருப்பினும், விண்ணப்பதாரரின் மரணம் விபத்து காரணமாக ஏற்படும் நிலையில், முதல் 45 நாட்களுக்குள் கூட இழப்பீடு வழங்கப்படும்.

 

இந்தத் திட்டத்தின் பலன்கள் எச் சூழலில் மறுக்கப்படும்/நிறுத்தப்படும்?

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

PMJJBY இன் முழு விளக்கம் என்ன?

பிரதான்மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனாவின் சுருக்கமே PMJJBY. 55 வயதிற்குள் பாலிசிதாரருக்கு அகால மரணம் நேரும் பட்சத்தில், அவரது குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் பலனாகச் செலுத்தும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கையாக இது இந்திய மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும்.

PMJJBY எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

PMJJBY திட்டம் முதன்முதலில் 2015-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

PMJJBY திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியுமா?

இல்லை, PMJJBY திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. இதில் இணைய விரும்புவோர், அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அச்சிட்டு, விவரங்களை நிரப்பி, தேவையான ஆவணங்களை இணைத்து உங்கள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

PMJJBY திட்ட உதவி மையத்தின் தொலைபேசி எண் என்ன?

PMJJBY திட்டம் சார்ந்து உதவி பெற 1800-180-1111 / 1800-110-001 கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்கவும்.

Was this article useful?
  • 😃 (2)
  • 😐 (0)
  • 😔 (0)
Exit mobile version