2023-ன் சிறந்த நட்சத்திரம், கிரகப் பிரவேச முகூர்த்தங்கள் – மாத வாரியாக மங்களகரமான நாட்கள்

இந்தியப் பண்பாட்டில் திருமணம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த தினங்களைக் கொண்டாட மங்களகரமான முகூர்த்த நாள், நேரம் ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம். உங்கள் புதிய வீட்டில் நீங்கள் குடியேற கிரகப் பிரவேச முகூர்த்தத்தைச் சரிபார்த்து குடிபுக வேண்டும். 2023-ம் ஆண்டுக்கான முகூர்த்தங்கள் மற்றும் கிரகப் பிரவேச நல் முகூர்த்த தினங்கள் இங்கு கொடுக்கப்படுகின்றன.

நல்ல முகூர்த்த வேளையில் கிரகப் பிரவேசம் போன்ற சிறப்பு நிகழ்வுகளை மேற்கொள்வது என்பது புதிய வீட்டு உரிமையாளர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அளிப்பதாக கருதப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் உங்கள் புதிய வீட்டில் அடியெடுத்து வைக்க மங்களகரமான முகூர்த்தம் மற்றும் சிறந்த நட்சத்திரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

Table of Contents

இந்தியப் பண்பாட்டில் எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும், திருமணம், கிரகப் பிரவேசம், புதிய வர்த்தகம் தொடங்குவது, சீமந்தம், உபநயனம், சடங்கு, சம்பிரதாயம் என்று எதுவாக இருந்தாலும் நல்ல நேரம், முகூர்த்த நேரம், மங்களகரமான வேளையைப் பார்த்துச் செய்வதுதான் வழக்கம். அதாவது, காரியத்தின் பலனையும் நோக்கத்தையும் அடைய இத்தகைய நல்ல நேரத்தில் அதை நடத்தினாலோ, தொடங்கினலோ நிச்சயம் நற்பலன் விளையும் என்பது ஐதீகம். முகூர்த்த வேளையும் மங்களகரமான நாட்களையும் வாஸ்து சாஸ்திரம் கொண்டும் இந்து நாட்காட்டியைக் கொண்டும் குறிக்கிறார்கள். புதிய வீடு ஒன்றையோ, மனை ஒன்றையோ வாங்குவது என்பது ஒருவரது வாழ்க்கையில் புதிய பயணத்தின் தொடக்கமாகும்.

கிரகப் பிரவேச விழா என்பது அந்த வீட்டில் தங்கியிருப்பவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் தன்னம்பிக்கையையும் அளிப்பதாக நம்பப்படுகிறது. கிரகப் பிரவேச பூஜை, சம்பிரதாயங்களை நல்ல முகூர்த்த வேளையில் செய்து முடிப்பது என்பது அந்த வீட்டில் தங்குவோருக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி, செல்வ வளம் மற்றும் சந்தோஷங்களை அளிக்கும். 2023-ம் ஆண்டுக்கான சிறந்த கிரகப் பிரவேச தினமும் முகூர்த்த வேளைகளும் இதோ முழுமையாக.

புதிய வீட்டுக்கு குடிபெயரும் போது நல்ல மங்களகரமான முகூர்த்த வேளையைத் தேர்வு செய்வதும் அவசியமாகும். ஒரு நல்ல முகூர்த்த வேளையில் கிரகப் பிரவேச சடங்கு செய்வது என்பது தீயச்சக்திகளை விரட்டுவதாகும். இதற்காகவென்றே இந்து சந்திர நாட்காட்டி அல்லது பஞ்சாங்கத்தில் நல்ல நாட்கள், நல்ல வேளை, சுப முகூர்த்த வேளைகள் பார்க்கப்படுகின்றன. அல்லது தெரிந்தவர்களிடம் கேட்டு பஞ்சாங்கம் மூலம் கால நிர்ணயம் செய்யப்படுகிறது.

இவற்றில் வாஸ்து சாஸ்திரம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அத்துடன் தீய சக்திகளை அகற்றி செல்வம், செழிப்பை ஈர்க்க கிரகப் பிரவேச பூஜைக்கான வழிகாட்டுதல்களை வகுக்கிறது. 2023-ம் ஆண்டில் புதிய வீடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு சிறந்த கிரகப் பிரவேச முகூர்த்தம் அல்லது வாஸ்து தேதிகளை அறிந்து கொள்ள இந்து சந்திர நாட்காட்டி அல்லது பஞ்சாங்கத்தைப் பார்க்கலாம்.

 

2023-ம் ஆண்டில் கிரகப் பிரவேச பூஜைக்கான முகூர்த்தங்கள்: புதுமனை புகுவிழாவிற்கான சுப முகூர்த்த நாட்கள்:

2023-ன் கிரகப் பிரவேச தேதி நாள்

 

திதி

 

நட்சத்திரம்

 

கிரகப் பிரவேச நல்ல நேரம்
ஜனவரி 25, 2023

 

 

புதன்கிழமை

 

பஞ்சமி உத்தரட்டாதி

 

இரவு 8:05 மணி முதல் ஜன.26 காலை 07:12 மணி வரை
ஜனவரி 27, 2023

 

வெள்ளிக்கிழமை

 

சப்தமி

 

ரேவதி

 

காலை 9:10 மணி முதல் மாலை 6:37 மணி வரை
ஜனவரி 30, 2023

 

திங்கள்கிழமை

 

தசமி

 

ரோகிணி

 

இரவு 10:15 மணி முதல் ஜன.31 காலை 7:10 மணி வரை
பிப்ரவரி 1, 2023

 

 

புதன்கிழமை

 

ஏகாதசி

 

மிருகசீரிஷம் காலை 7:10 மணி முதல் மதியம் 2:01 மணி வரை
பிப்ரவரி 8, 2023

 

 

புதன்கிழமை

 

திரிதியை உத்திரம்

 

இரவு 8:15 மணி முதல் பிப்.9 காலை 6:23 மணி வரை
பிப்ரவரி 10, 2023

 

வெள்ளிக்கிழமை

 

பஞ்சமி

 

சித்திரை

 

அதிகாலை 12:18 மணி முதல் பிப்.11 7:03 மணி வரை
பிப்ரவரி 22, 2023

 

புதன்கிழமை திரிதியை

 

உத்திரட்டாதி

 

காலை 6:54 மணி முதல் பிப்.23 அதிகாலை 3:24 மணி வரை
மார்ச் 8, 2023

 

புதன்கிழமை

 

பிரதமை, துவிதியை

 

உத்திரம்

 

காலை 6:39 மணி முதல் மார்ச் 9 காலை 4:20 மணி வரை
மார்ச் 10, 2023

 

 

வெள்ளிக்கிழமை

 

திரிதியை சித்திரை

 

காலை 6:37 மணி முதல் இரவு 9:42 மணி வரை

 

மார்ச் 13, 2023

 

திங்கள்கிழமை

 

சப்தமி

­

அனுஷம்

 

இரவு 9:27 மணி முதல் மார்ச் 14 காலை 6:33 மணி வரை
மார்ச் 17, 2023

 

 

வெள்ளிக்கிழமை­­­ தசமி, ஏகாதசி

 

உத்திராடம்

 

காலை 6:26 முதல் மார்ச் 18 காலை 2:46 மணி வரை
மே 6, 2023

 

 

சனிக்கிழமை

 

துவிதியை

 

அனுஷம் இரவு 9:13 மணி முதல் மே 7 காலை 5:36 மணி வரை
மே 15, 2023

 

திங்கள்கிழமை

 

ஏகாதசி

 

உத்திரட்டாதி

 

காலை 9:08 மணி முதல் மே 16 அதிகாலை 1:03 மணி வரை
மே 20, 2023

 

சனிக்கிழமை

 

துவிதியை

 

ரோகிணி

 

இரவு 9:30 மணி முதல் மே 21 காலை 5:27 மணி வரை
மே 22, 2023

 

திங்கள்கிழமை

 

திரிதியை

 

மிருகசீரிஷம்

 

காலை 5:27 மணி முதல் காலை 10:37 மணி வரை
மே 29, 2023

 

திங்கள்கிழமை

 

தசமி

 

உத்திரம்

 

காலை 11.49 மணி முதல் மே 30 அதிகாலை 4:29 மணி வரை

 

மே 31, 2023

 

புதன்கிழமை

 

ஏகாதசி

 

சித்திரை

 

காலை 06:00 மணி முதல் மதியம் 01:45 மணி வரை
ஜூன் 12, 2023

 

திங்கட்கிழமை

 

தசமி

 

உத்திரட்டாதி, ரேவதி

 

காலை 10:34 மணி முதல் ஜூன் 13 காலை 05:23 மணி வரை
நவம்பர் 17, 2023

 

 

 

வெள்ளிக்கிழமை பஞ்சமி

 

உத்திராடம் அதிகாலை 01:17 மணி முதல் நவ.18 காலை 06:46 மணி வரை
நவம்பர் 22, 2023

 

புதன்கிழமை

 

தசமி, ஏகாதசி

 

உத்திரட்டாதி

 

மாலை 06:37 மணி முதல் நவ.23 காலை 06:50 மணி வரை
நவம்பர் 23, 2023

 

 

வியாழக்கிழமை ஏகாதசி

 

உத்திரட்டாதி, ரேவதி

 

காலை 06:50 மணி முதல் இரவு 09:01 மணி வரை

 

நவம்பர் 27, 2023

 

புதன்கிழமை

 

பிரதமை

 

ரோகிணி

 

மதியம் 02:45 மணி முதல் நவ.28 காலை 06:54 மணி வரை
நவம்பர் 29, 2023

 

 

புதன்கிழமை துவிதியை

 

மிருகசீரிஷம்

 

காலை 06:54 மணி முதல் மதியம் 01:59 மணி வரை

 

டிசம்பர் 8, 2023

 

 

வெள்ளிக்கிழமை ஏகாதசி

 

சித்திரை

 

காலை 08:54 மணி முதல் டிச.9 காலை 06:31 மணி வரை

 

டிசம்பர் 15, 2023

 

 

வியாழக்கிழமை திரிதியை

 

உத்திராடம்

 

காலை 08:10 மணி முதல் இரவு 10:30 மணி வரை
டிசம்பர் 21, 2023

 

 

வியாழக்கிழமை

 

தசமி ரேவதி

 

காலை 09:37 மணி முதல் இரவு 10:09 மணி வரை

 

கிரகப் பிரவேசம் 2023-க்கான சிறந்த நட்சத்திரங்கள்

பண்டிதர்களின் கூற்றுப்படி, கிரகப் பிரவேசத்திற்கு மிகவும் மங்களகரமான நட்சத்திரங்களில் சில:

  • அனுஷம் நட்சத்திரம்
  • ரோகிணி
  • மிருகசீரிஷம்
  • உத்திரம்
  • சித்திரை
  • உத்திரட்டாதி
  • ரேவதி
  • உத்திராடம்

மேலே குறிப்பிட்டுள்ள நட்சத்திரங்கள் கிரகப் பிரவேச பூஜைக்கான சில சிறந்த நட்சத்திரங்கள் ஆகும். இவை உங்கள் புதிய வீட்டிற்குச் செல்லவும், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் புதுமனைப் புகுவிழாவை கிரகப் பிரவேச பூஜையுடன் ஆசார அனுஷ்டானங்களுடன் செய்ய ஸ்ரேஷ்டமான மங்கள முகூர்த்தங்களாகும். வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட சாஸ்திரங்களின் படி, நட்சத்திரங்கள் சாதகமாக இருந்தால் மட்டுமே புதிய வீட்டிற்குச் சென்று கிரகப் பிரவேச பூஜை செய்வது மங்களகரமானதாக இருக்கும்.

 

2023-ன் கிரகப் பிரவேச தேதிகள்

2023 புத்தாண்டில் புதிய வீட்டுக்கு அடியெடுத்து வைக்க திட்டமிட்டுள்ளவர்கள் தங்களது வாழ்க்கையில் செழிப்பை ஈர்ப்பதற்கு கவனத்தில் கொள்ள வேண்டிய 2023-ன் ஆண்டின் மங்களகரமான கிரகப் பிரவேச தேதிகள் இங்கே.

 

கிரகப் பிரவேச முகூர்த்தம்: ஜனவரி 2023-ன் மங்களகரமான தேதிகள்

தேதி

 

கிழமை

 

2023-ன் கிரகப் பிரவேச தேதிகள்: ஜனவரி

 

ஜனவரி 25, 2023

 

புதன்கிழமை பஞ்சமி திதி, உத்தரட்டாதி நட்சத்திரம், இரவு 8:05 மணி முதல் ஜன.26 காலை 07:12 மணி வரை
ஜனவரி 27, 2023

 

வெள்ளிக்கிழமை

 

சப்தமி திதி, ரேவதி நட்சத்திரம், காலை 9:10 மணி முதல் மாலை 6:37 மணி வரை
ஜனவரி 30, 2023

 

திங்கள்கிழமை

 

தசமி திதி, ரோகிணி நட்சத்திரம், இரவு 10:15 மணி முதல் ஜன.31 காலை 7:10 மணி வரை

 

புதிய தொடக்கங்கள், கனவுகள், நம்பிக்கைகளைத் தொடங்குவதற்கு புத்தாண்டுதான் முக்கியப் பங்கு வகிக்கிறது. புதிய வீடுகளுக்கு குடிபுக விரும்புவோருக்கு, மேற்கண்டவாறு ஜனவரி 2023-ல் கிரகப் பிர்வேசத்துக்கு உகந்த மூன்று நல்ல நாட்கள் உள்ளன.

 

கிரகப் பிரவேச முகூர்த்தம்: பிப்ரவரி 2023-ன் மங்களகரமான தேதிகள்

தேதி

 

கிழமை

 

2023-ன் கிரகப் பிரவேச தேதிகள்: பிப்ரவரி

 

பிப்ரவரி 1, 2023

 

புதன்கிழமை

 

ஏகாதசி திதி, மிருகசீரிஷம் நட்சத்திரம், காலை 7:10 மணி முதல் மதியம் 2:01 மணி வரை

 

பிப்ரவரி 8, 2023

 

புதன்கிழமை

 

திரிதியை திதி, உத்திரம் நட்சத்திரம், இரவு 8:15 மணி முதல் பிப்.9 காலை 6:23 மணி வரை

 

பிப்ரவரி 10, 2023

 

வெள்ளிக்கிழமை

 

 

பஞ்சமி திதி, சித்திரை நட்சத்திரம், அதிகாலை 12:18 மணி முதல் பிப்.11 7:03 மணி வரை

 

பிப்ரவரி 22, 2023

 

புதன்கிழமை

 

திரிதியை திதி, உத்திரட்டாதி நட்சத்திரம், காலை 6:54 மணி முதல் பிப்.23 அதிகாலை 3:24 மணி வரை

 

கிரகப் பிரவேச விழா நடத்த திட்டமிட்டுள்ளவர்களுக்கு பங்குனி மாதத்துடன் ஒத்துப்போகக் கூடிய பிப்ரவரி/மார்ச் மாதங்களில் நிறைய மங்களகரமான நல்ல நாட்கள் உள்ளன. பிப்ரவரி மாதத்தில் கிரகப் பிரவேசத்துக்கு உகந்த நான்கு நல்ல நாட்கள் இருக்கின்றன.

 

கிரகப் பிரவேச முகூர்த்தம்: மார்ச் 2023-ன் மங்களகரமான தேதிகள்

தேதி

 

கிழமை

 

2023-ன் கிரகப் பிரவேச தேதிகள்: மார்ச்
மார்ச் 8, 2023

 

புதன்கிழமை

 

பிரதமை, துவிதியை திதி, உத்திரம் நட்சத்திரம், காலை 6:39 மணி முதல் மார்ச் 9 காலை 4:20 மணி வரை

 

மார்ச் 10, 2023

 

வெள்ளிக்கிழமை

 

திரிதியை திதி, சித்திரை நட்சத்திரம், காலை 6:37 மணி முதல் இரவு 9:42 மணி வரை

 

மார்ச் 13, 2023

 

திங்கள்கிழமை

 

சப்தமி திதி, அனுஷம் நட்சத்திரம், இரவு 9:27 மணி முதல் மார்ச் 14 காலை 6:33 மணி வரை

 

மார்ச் 17, 2023

 

வெள்ளிக்கிழமை

 

தசமி, ஏகாதசி திதி, உத்திராடம் நட்சத்திரம், காலை 6:26 முதல் மார்ச் 18 காலை 2:46 மணி வரை

 

மார்ச் 2023-ல் கிரகப் பிரவேசத்திற்கு உகந்த நான்கு நல்ல நாட்கள் உள்ளன. நவராத்திரியின் ஒன்பது நாள் பூஜை வரும் மாதம் இது. புதுமனைப் புக இது ஒரு சாதகமான மாதம். ஏனெனில், சைத்ர நவராத்திரி மார்ச் 22-ம் தேதி தொடங்கி மார்ச் 31-ம் தேதி முடிவடைகிறது. நவராத்திரியின்போது சிறந்த கிரகப் பிரவேச முகூர்த்த நாளையும் நேரத்தையும் அறிய நீங்கள் ஒரு சாஸ்திரிகள் அல்லது ஜோதிடரின் ஆலோசனையைப் பெறலாம்.

 

கிரகப் பிரவேச முகூர்த்தம்: ஏப்ரல் 2023-ன் மங்களகரமான தேதிகள்

ஏப்ரல் 2023-ல் மங்களகரமான கிரகப் பிரவேச தேதிகள் எதுவும் இல்லை.

 

கிரகப் பிரவேச முகூர்த்தம்: மே 2023-ன் மங்களகரமான தேதிகள்

தேதி

 

கிழமை

 

2023-ன் கிரகப் பிரவேச தேதிகள்: மே
மே 6, 2023

 

சனிக்கிழமை

 

துவிதியை திதி, அனுஷம் நட்சத்திரம், இரவு 9:13 மணி முதல் மே 7 காலை 5:36 மணி வரை

 

மே 15, 2023

 

திங்கள்கிழமை

 

ஏகாதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம், காலை 9:08 மணி முதல் மே 16 அதிகாலை 1:03 மணி வரை

 

மே 20, 2023

 

 

சனிக்கிழமை

 

துவிதியை திதி, ரோகிணி நட்சத்திரம், இரவு 9:30 மணி முதல் மே 21 காலை 5:27 மணி வரை

 

மே 22, 2023

 

திங்கள்கிழமை

 

திரிதியை திதி, மிருகசீரிஷம் நட்சத்திரம், காலை 5:27 மணி முதல் காலை 10:37 மணி வரை

 

மே 29, 2023

 

திங்கள்கிழமை

 

தசமி திதி, உத்திரம் நட்சத்திரம், காலை 11.49 மணி முதல் மே 30 அதிகாலை 4:29 மணி வரை

 

மே 31, 2023

 

புதன்கிழமை

 

ஏகாதசி திதி, சித்திரை நட்சத்திரம், காலை 06:00 மணி முதல் மதியம் 01:45 மணி வரை

 

இந்தி மாதமான பைசாகா ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து மே மாதத்தின் நடுப்பகுதி வரை வருகிறது. இந்தக் காலக்கட்டத்தில் கிரகப் பிரவேசத்திற்கான எந்த நல்ல தேதிகளும் கிடைக்காமல் போகலாம். இந்தி நாட்காட்டியின் பைசாகா மற்றும் ஜ்யேஸ்தா மாதங்கள் மே மாதத்தில் வரும். மே 2023-இல் ஆறு நல்ல முகூர்த்தத் தேதிகள் உள்ளன.

 

கிரகப் பிரவேச முகூர்த்தம்: ஜூன் 2023-ன் மங்களகரமான தேதிகள்

தேதி

 

கிழமை

 

2023-ன் கிரகப் பிரவேச தேதிகள்: ஜூன்
ஜூன் 12, 2023

 

திங்கட்கிழமை

 

தசமி திதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரம், காலை 10:34 மணி முதல் ஜூன் 13 காலை 05:23 மணி வரை

 

 

ஜேஷ்டம் மற்றும் ஆஷாடம் ஆகிய சந்திர மாதங்கள் ஜூன் மாதத்தில் வருகின்றன. ஆஷாட மாதம் ஜூன் 5, 2023 அன்று தொடங்குகிறது. இந்த மாதத்தில் ஒரேயொரு கிரகப் பிரவேச முகூர்த்த தேதி உள்ளது. இங்கே குறிப்பிட்ட நாள் இல்லாமல் நீங்கள் வேறொரு நாளில் புதிய வீட்டிற்கு மாற விரும்பினால் உங்கள் ஜோதிடருடன் ஆலோசிக்கலாம்.

 

கிரகப் பிரவேச முகூர்த்தம்: ஜூலை 2023-ன் மங்களகரமான தேதிகள்

ஜூலையில் நல்ல கிரகப் பிரவேச முகூர்த்தம் அல்லது தேதிகள் எதுவும் இல்லை. இருப்பினும், புதிய வீட்டிற்கு மாறுவதற்கு  உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில் எந்த ஒரு நல்ல நாளையும் பற்றி அறிய வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணரின் ஆலோசனையைப் பெற்று மாறலாம்.

 

கிரகப் பிரவேச முகூர்த்தம்: ஆகஸ்ட் 2023-ன் மங்களகரமான தேதிகள்

ஆகஸ்ட் மாதத்தில் நல்ல கிரகப் பிரவேச முகூர்த்த தேதிகள் இல்லை.

 

கிரகப் பிரவேச முகூர்த்தம்: செப்டம்பர் 2023-ன் மங்களகரமான தேதிகள்

செப்டம்பர் 2023-ல் மங்களகரமான கிரகப் பிரவேச மற்றும் புதுமனைப் புகுவிழா நல்ல நாட்கள் இல்லை.

 

கிரகப் பிரவேச முகூர்த்தம்: அக்டோபர் 2023-ன் மங்களகரமான தேதிகள்

அக்டோபர் 2023-ல் சாதகமான கிரகப் பிரவேசம் அல்லது புதுமனைப் புகுவிழா அல்லது பால் காய்ச்சுவதற்கான நல்ல நாட்கள்   எதுவும் இல்லை.

ஜூலை முதல் அக்டோபர்/நவம்பர் வரை தொடர்புடைய ஷ்ரவண, பத்ரபதா, அஷ்வினா மற்றும் கார்த்திகை மாதங்கள் அல்லது சதுர்மாதங்கள் என்று அழைக்கப்படும் நான்கு மாதங்கள் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், கிரகப் பிரவேசப் பூஜைக்கான சிறந்த நாட்கள் இம்மாதங்களில் இல்லை. இந்த நான்கு மாத காலம் நோன்பு, தவம், துறவு, விரதம் உள்ளிட்ட மதச் சடங்கு சம்பிரதாய அனுசரிப்புகளுக்கானது.

மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த காலம் என்பது அனைத்து கடவுள்களும், இறைவிகளும் உறங்கி ஓய்வு எடுக்கும் காலம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, இந்தக் காலகட்டத்தில் கிரகப் பிரவேச பூஜை நிகழ்ச்சிகள் செய்யப்படாது.

 

கிரகப் பிரவேச முகூர்த்தம்: நவம்பர் 2023-ன் மங்களகரமான தேதிகள்

தேதி

 

கிழமை

 

2023-ன் கிரகப் பிரவேச தேதிகள்: நவம்பர்
நவம்பர் 17, 2023

 

வெள்ளிக்கிழமை

 

பஞ்சமி திதி, உத்திராடம் நட்சத்திரம், அதிகாலை 01:17 மணி முதல் நவ.18 காலை 06:46 மணி வரை
நவம்பர் 22, 2023

 

புதன்கிழமை

 

தசமி, ஏகாதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம், மாலை 06:37 மணி முதல் நவ.23 காலை 06:50 மணி வரை
நவம்பர் 23, 2023

 

வியாழக்கிழமை

 

ஏகாதசி திதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரம், காலை 06:50 மணி முதல் இரவு 09:01 மணி வரை
நவம்பர் 27, 2023

 

புதன்கிழமை

 

பிரதமை திதி, ரோகிணி நட்சத்திரம், மதியம் 02:45 மணி முதல் நவ.28 காலை 06:54 மணி வரை
நவம்பர் 29, 2023

 

புதன்கிழமை

 

துவிதியை திதி, மிருகசீரிஷம் நட்சத்திரம், காலை 06:54 மணி முதல் மதியம் 01:59 மணி வரை

 

இந்து மாதங்களான கார்த்திகை மற்றும் அக்ரஹாயானம் நவம்பர் மாதத்துடன் ஒத்துப்போகின்றன. அக்ரஹாயன மாதம் நவம்பர் 28, 2023 அன்று தொடங்குகிறது. நவம்பர் 2023-ல் கிரகப் பிரவேசத்துக்கான ஐந்து முகூர்த்தத் தேதிகள் உள்ளன.

 

கிரகப் பிரவேச முகூர்த்தம்: டிசம்பர் 2023-ன் மங்களகரமான தேதிகள்

தேதி

 

கிழமை

 

2023-ன் கிரகப் பிரவேச தேதிகள்: டிசம்பர்
டிசம்பர் 8, 2023

 

வெள்ளிக்கிழமை

 

ஏகாதசி திதி, சித்திரை நட்சத்திரம், காலை 08:54 மணி முதல் டிச.9 காலை 06:31 மணி வரை
டிசம்பர் 15, 2023

 

வியாழக்கிழமை

 

திரிதியை திதி, உத்திராடம் நட்சத்திரம், காலை 08:10 மணி முதல் இரவு 10:30 மணி வரை
டிசம்பர் 21, 2023

 

வியாழக்கிழமை

 

தசமி திதி, ரேவதி நட்சத்திரம், காலை 09:37 மணி முதல் இரவு 10:09 மணி வரை

 

2023-ன் கிரகப் பிரவேச தேதிகள்: கிரகப் பிரவேசம் விழா நடத்துவதை தவிர்க்க வேண்டிய நாட்கள்

பெரும்பாலானோர் வாஸ்து மற்றும் ஜோதிடத்தின்படி தங்கள் உள்ளூர் புரோகிதரிடம் ஆலோசித்த பிறகு கிரகப் பிரவேசம் செய்ய விரும்புகிறார்கள். இந்த ஆண்டில் சில நாட்களில் சொத்து வாங்குதல், புதுமனை புகுவிழா நடத்துதல் போன்ற எந்த வகையான சுப காரியங்களுக்கும் உகந்தது அல்ல. அதன்படி நீங்கள் அவசியம் தவிர்க்க வேண்டிய நாட்கள் இங்கே கீழே:

  • சந்திர கிரகணம்
  • சூரிய கிரகணம
  • சந்திர மாதங்கள் (விதிவிலக்குகளுக்கு உள்ளூர் புரோகிதரை ஆலோசிக்கவும்).

இந்த ஆண்டு புதிய வீட்டிற்குள் நுழைவதற்கு முன், 2022-ம் ஆண்டின் கிரகப் பிரவேச முகூர்த்தத்திற்கான நல்ல தேதிகளைப் பார்க்கவும்.

குறிப்பு: முகூர்த்த சிந்தாமணி மற்றும் தர்மசிந்து போன்ற சாஸ்திர நூல்களின்படி, சுக்ர தாரா மற்றும் குரு தாரா அஸ்தமனத்தில் கிரகப் பிரவேசம் செய்தல் கூடாது. மேலும் கவனிக்க: கிரகப் பிரவேச மங்களகரமான தேதிகள் மற்றும் நேரங்கள் அந்தந்த இடத்திற்கேற்ப மாறக் கூடியவை. (சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன நேரத்தைப் பொறுத்து) எனவே, விழாவைத் தொடங்குவதற்கு முன்பு ஓர் உள்ளூர் புரோகிதரிடம் ஆலோசிக்க வேண்டும்.

 

கிரகப் பிரவேசம்: அர்த்தமும் முக்கியத்துவமும்

புதிய இல்லத்திற்குச் செல்லும் முன்பு செய்யும் மந்திர ஹோம பூஜையே கிரகப் பிரவேசம் ஆகும். கிரகம் என்றால் இல்லம், பிரவேசம் என்றால் புகுவது. எனவே புதுமனை புகுவிழா என்று அழைக்கப்படுகிறது. தீயசக்திகளை அழிக்கவும், வாஸ்து தோஷங்கள் விலகவும் கிரகப் பிரவேச ஹோம பூஜை செய்யப்படுகிறது. ஹோம பூஜையானது, இடத்தைச் சுத்தப்படுத்தி, சுத்திகரிப்பதன் மூலம் வீட்டில் ஒரு நேர்மறை அலை ஏற்படுத்துகிறது. அமைதி மற்றும் வாழ்வில் செல்வம், ஆயுள் உள்ளிட்ட வளங்களைப் பெற தெய்வீக ஆசீர்வாதங்களைக் கோருவதற்காக கிரகப் பிரவேச ஹோம பூஜை செய்யப்படுகிறது.

கிரகப் பிரவேசம் ஒரேயொரு முறை செய்யப்படும் வைபவமாகும். எனவே தவறுகள் இன்றி செய்யப்படுவது அவசியம். நீங்கள் சமீபத்தில் ஒரு வீட்டை வாங்கியிருந்தால், ஹோம பூஜைக்கான சரியான தேதியை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்து பாரம்பரியத்தில், இந்து நாட்காட்டியில் (பஞ்சாங்கம்) குறிப்பிட்ட நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை புதிய வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க சுப தினங்களாகக் கருதப்படுகின்றன. வாஸ்து சாஸ்திரத்தின்படி, கிரகப் பிரவேச பூஜையை ஒரு சுப முகூர்த்தத்தில் செய்வது, குடியிருப்பவர்களின் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரவல்லது ஆகும். கடைசி நிமிடத்தில் பிரச்சனைகள் வராமல் இருக்க, புதுமனைப் புகுவிழாவை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. உங்கள் கிரகப் பிரவேசத்திற்கான சிறந்த சுப முகூர்த்தத்தை கண்டடைய ஆரம்பகால திட்டமிடல் உங்களுக்கு உதவும். இல்லையெனில், தேதியை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டால், நீங்கள் சாதாரண முகூர்த்தத்தில் திருப்தியடைய வேண்டிய நிலை ஏற்படும்.

உங்களுக்கு விஷயங்களை எளிதாக்க, 2021 மற்றும் 2022-இல் கிரகப் பிரவேசத்திற்கான நல்ல தேதிகளை பட்டியலிட்டுள்ளோம்.

 

2023-ல் புதிய வீட்டிற்கு மாற எந்த நாள் நல்லது?

வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட நிபுணர்களின் கூற்றுப்படி, நல்ல சக்திகள் வலுவாக இருக்கும் நாள் சிறந்தது. அதாவது தேதி, திதி, மற்றும் நட்சத்திரம் ஆகியவை சாதகமாக அமையும் தினங்கள் கிரகப் பிரவேசம் அல்லது புதிய வீட்டுக்கு மாற சிறந்தவையாகும். இந்து நாட்காட்டி 2022-இன் படி கிரகப் பிரவேசத்திற்கு முன் நல்ல தேதி, திதி, நட்சத்திரம் மற்றும் முகூர்த்த நேரம் ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும்.

புதிய வீட்டிற்குச் செல்வதற்கான மங்களகரமான கிரகப் பிரவேச தேதிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. நீங்கள் வேறு நாளில் கிரகப் பிரவேசம் செய்ய விரும்பினால் ஜோதிடரை அணுகுவது நல்லது. கர்மாக்கள், சதுர்மாசங்கள் என்று அழைக்கப்படும் மேலே குறிப்பிட்ட நான்கு மாதங்கள் மற்றும் சிரார்த்த மாதங்கள் கிரகப் பிரவேசம் செய்வதற்கு ஏற்றதல்ல.

 

2023-ல் கிரகப் பிரவேச முகூர்த்தம்: மங்களகரமான பண்டிகைகள்

தேதி

 

கிழமை

 

பண்டிகை

 

ஜனவரி 26, 2023

 

வியாழன்

 

வசந்த பஞ்சமி
ஏப்ரல் 23, 2023

 

ஞாயிற்றுக்கிழமை

 

அட்சய திருதியை

 

அக்டோபர் 6, 2023

 

வெள்ளிக்கிழமை

 

தசரா

 

அக்டோபர் 22, 2023

 

ஞாயிற்றுக்கிழமை தனத்திரயோதசி

 

சில மங்களகரமான பண்டிகைகள் 2023-ல் சிறந்த கிரகப் பிரவேச முகூர்த்தத்திற்கு ஏற்றது என்று கருதப்படுகிறது. 2023-ல் கிரகப் பிரவேச முகூர்த்தத் திருவிழா தேதிகள் மேலே பட்டியலிடப்பட்டுள்ளன. இருப்பினும், நல்ல தேதிகள் மாறுபடலாம். உதாரணமாக, தமிழ் நாட்காட்டி அல்லது பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 2021 அல்லது 2022-ம் ஆண்டுகளின் கிரகப் பிரவேசத்திற்கான தேதிகள் விக்ரம் சம்வத் காலண்டரில் கொடுக்கப்பட்டுள்ள கிரகப் பிரவேசம் தேதிகளிலிருந்து வேறுபடலாம். எனவே, கிரகப் பிரவேச விழாவிற்கு முன், ஒரு புரோகிதரை அணுக வேண்டும். 2022-23-க்கான சிறந்த கிரகப் பிரவேச முகூர்த்தத்தை சரிபார்க்கவும்.

2022, 2021 மற்றும் 2020-ல் இந்த கிரகப் பிரவேச முகூர்த்த தேதிகள் வேறாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உதாரணமாக, அக்டோபர் 2020 கிரகப் பிரவேச தேதிகள் தசராப் பண்டிகையுடன் இணைவதால் பண்டிகை தேதிகள் மாறுபடும். எனவே, 2022 கிரகப் பிரவேச தேதிகளுக்கு தமிழ்நாடு அல்லது அதன் அண்டைப் பகுதிகளில் குடியேற பொருத்தமான முகூர்த்தத் தேதிகளுக்கு தமிழ் பஞ்சாங்கத்தைப் பார்க்கவும். தங்களுடைய புதிய வாடகை வீட்டிற்கு மாற விரும்புபவர்கள் 2022-23-இல் நல்ல முகூர்த்தங்கள் அல்லது நல்ல நாட்களைக் கருத்தில் கொள்ளலாம். தொடர்புடைய ஆண்டிற்கான கிரகப் பிரவேசத் தேதிகளை உறுதி செய்து கொள்ளவும். உதாரணமாக, வாடகை வீட்டிற்குக் குடிபெயர்பவர்கள், மாற்றத்திற்கான நல்ல தேதிகள் அல்லது நல்ல நாட்கள் 2020, 2021 மற்றும் 2022-ல் வேறுபடும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

2022 மற்றும் 2023 இல் இந்த கிரகப் பிரவேச முகூர்த்த தேதிகள் வேறாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உதாரணமாக, அக்டோபர் 2022 கிரகப் பிரவேச தேதிகள் தசராப் பண்டிகையுடன் இணைவதால் பண்டிகை தேதிகள் மாறுபடும்.

2022-23-ல் திதி, நட்சத்திரம் மற்றும் புதுமனை புகு விழா தேதிகளை அறிய நீங்கள் இந்து நாட்காட்டியைப் பார்க்கவும். (தெலுங்கில் க்ருஹப் பிரவேச முகூர்த்தம் அல்லது பெங்காலியில் க்ரிஹோப்ரோபேஷ் என்றும் அழைக்கப்படுகிறது).

 

அரிஹந்த் வாஸ்து நிபுணர் நரேந்திர ஜெயின் கூறும்போது, “கிரகப் பிரவேசத்தைப் பொறுத்தவரை, பலர் கர்மா செய்யும் மாதங்கள், சிரார்த்தங்கள், சதுர்மாதங்கள் போன்றவற்றை அசுபமாக கருதுகின்றனர். பஞ்சாங்கம் பிராந்தியத்திற்கு பிராந்தியம் மாறுபடலாம். எனவே, ஒருவர் தங்கள் பகுதியில் பின்பற்றப்படும் பஞ்சாங்கத்தின்படி தேதியை இறுதி செய்வதற்கு முன், ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது நல்லது” என்கிறார்.

2023-ம் ஆண்டுக்கான பூமி பூஜை தேதிகள் குறித்து முழுமையாக வாசிக்க

 

கிரகப் பிரவேசத்திற்கான 2023-ம் ஆண்டின் சோகாடியா:

சோகாடியா என்ற சொல் ‘சோ’ அல்லது நான்கு மற்றும் காடியா அல்லது காடி ஆகிய சொற்களிலிருந்து பெறப்பட்டது. சோகாடியா என்பது வேத ஜோதிட நேர வழிகாட்டியைக்

குறிக்கிறது. இதில் 24 மணி நேர சுப முகூர்த்தத்தைப் பற்றிய விவரங்கள் உள்ளன. ஜோதிடத்தின் படி, ஒரு காடி என்பது 24 நிமிடங்களுக்குச் சமம். சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் வரையிலான நேரம் 30 காடிகளைக் ண்டுள்ளது. இது எட்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே, எட்டு பகல் சோகாடியா முகூர்த்தங்களும் எட்டு இரவு சோகடியா முகூர்த்தங்களும் உள்ளன. ஒரு சோகாடியா என்பது நான்கு காடிகள் அல்லது சுமார் 96 நிமிடங்கள் அல்லது சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு சமம்.

காலை சூரிய உதயத்தில் இருந்து மாலை சூரிய அஸ்தமனம் வரையிலான கால அளவு ‘பகல் சோகாடியா’ என்றும், சூரிய அஸ்தமனத்தி இருந்து மறுநாள் சூரிய உதயம் வரையிலான கால அளவு ‘இரவு சோகாடியா’ என்றும் அழைக்கப்படுகிறது.

  • முக்கியமான நிகழ்வுகளுக்கு அம்ருத், சுப மற்றும் லாப (காலம்) ஆகியவை மங்களகரமான சோகாடியாக்களாகக் கருதப்படுகின்றன.
  • வெள்ளி கிரகத்தைக் குறிக்கும் சார் சோகாடியா என்பது புனிதமாகக் கருதப்படுகிறது.
  • எதிர்வரும் ஆபத்தை உணர்த்தும் ஒருவிதமான பயம் அல்லது கவலை என்கிற உத்வேக், கால மற்றும் ரோகம் ஆகியவை அமலங்கமானதும், தவிர்க்கப்பட வேண்டியதாகவும் கருதப்படுகிறது.

 

கிரகப் பிரவேச விழாவிற்கு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

A2Zvastu.com-ன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் புரொமோட்டர் விகாஷ் சேத்தி கூறுகையில், “புதிய வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னும், கிரகப் பிரவேசத்தை முடிப்பதற்கும் முன்னும் உங்கள் வீடு குடிபெயர்வதற்குத் தயாராக இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். கிரகப் பிரவேச விழா முடிந்த உடனேயே, வீட்டைக் காலியாக விடக் கூடாது, குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அதில் வசிக்கிறார் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கிரகப் பிரவேசம் செய்வதற்கு முன்பு பின்வரும் விஷயங்களை கருத்தில் வைத்துக் கொள்ளுமாறு விகாஷ் சேத்தி அறிவுறுத்துகிறார்:

  • உங்கள் வீட்டின் முன் நுழைவாயிலில் தடுப்பு எதுவும் இருக்கக் கூடாது.
  • விட்டு வாயிற்படியில் வாழை மரம், மாயிலை, புத்தம் புதிய பூக்களைக் கட்டித் தொங்கவிட வேண்டும். அருமையான கோலமிடுவதும் அவசியம்.
  • பிரதான நுழைவாயிலின் வழியாகத்தான் நாம் செழுமையையும் வளமையையும் நல்லதிர்வுகளையும் வரவேற்கிறோம். எனவே, அதன் மீது மா இலைகள் மற்றும் பூக்களைத் தோரணமாகத் தொங்க விடுங்கள். பிரதான நுழைவாயில் சிம்ம துவாரம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது முன்னேற்றத்திற்கும் நேர்மறை ஆற்றலுக்குமான ஒரு வளைவாகக் கருதப்படுகிறது. வீட்டிற்குள் நுழையுமாறு லட்சுமி பாதங்களை எப்போதும் வாசலில் வரையுங்கள். சுவரின் வெளிப்புறத்தில் ஸ்வஸ்திக் மற்றும் ஓம் ஆகியவற்றை வரையுங்கள்.
  • கிரகப் பிரவேச நாளில் வீட்டை சுத்தமாகவும் சுத்தமாகவும் வைத்திருங்கள்.
  • வீட்டை அலங்கரிக்கும்போது, ​​விளக்குகளால் ஜொலிக்கச் செய்யுங்கள். வாசனைக்காக மலர்களைக் கொத்துக் கொத்தாகப் பயன்படுத்துங்கள்.
  • ஜோதிடர்/நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட சரியான முகூர்த்த நேரத்தில் கிரகப் பிரவேசத்தைச் செய்யவும்.
  • வீட்டுக்குள் நுழைவதற்கு முன் சதுர் தேங்காய் உடைக்கவும். இப்படிச் செய்வது அனைத்துத் தடைகளையும் நீக்கவல்லதாகும்.
  • எப்போதும் வீட்டிற்குள் வலது காலை வைத்து நுழையவும். இது செல்வம் உள்ளிட்ட பிற வளங்களுக்கான குறியீடாகும்.
  • எதிர்மறைத் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கவும் அமைதியான சூழலை உருவாக்கவும் கிரகப் பிரவேசப் பூஜை செய்யப்படுகிறது.
  • கிரகப் பிரவேச பூஜையில் ஹோமம், விநாயகர் பூஜை, நவக்கிரக சாந்தி மற்றும் வாஸ்து பூஜை ஆகியவை செய்யப்படும்.

ஒருவேளை நீங்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே கிரகப் பிரவேசம் விழா கொண்டாட நேர்ந்தால், பின்னர் உங்கள் வசதிக்கேற்ப, உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து, மற்றொரு தேதியில் பெரிய விருந்துக்கு நீங்கள் ஏற்பாடு செய்யலாம். ஆனால், மீண்டும் அதே வீட்டிற்கு இன்னொரு முறை கிரகப் பிரவேசம் செய்யக் கூடாது. எனவே, திட்டமிடப்படாத நுழைவைத் தவிர்த்து விடுங்கள். மற்ற எல்லா விவரங்களையும் மனதில் வைத்து, உங்கள் நேரத்தை எடுத்து, தேதியை கவனமாக முடிவு செய்யுங்கள்.

 

Griha-Pravesh-Muhurat-2023 Best-dates-for-a-house-warming-ceremony-image-01-ta

இதையும் வாசிக்க: கிரகப் பிரவேச அழைப்பிதழ் அட்டைக்கான வடிவமைப்பு யோசனைகள்

 

கிரகப் பிரவேச நிகழ்ச்சியில் செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்

  • இந்து நாட்காட்டி அல்லது பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஒரு புதிய வீட்டிற்குச் செல்ல சிறந்த நாளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, கிரகப் பிரவேசத்திற்கான மங்களகரமான தேதிகளைக் கண்டறியும்போது பஞ்சாங்க சுத்தி முக்கியமானது. பஞ்சாங்கத்தின் ஐந்து கூறுகளான வரா, திதி, நட்சத்திரம், யோகம் மற்றும் கர்ண ஆகிய தூய்மைப்படுத்துதல்கள் இதில் அடங்கும்.
  • கிரகப் பிரவேச விழாவைச் செய்வதற்கு, சுக்ர தார அஷ்ட மற்றும் குரு தார அஷ்ட நேரத்தைக் கருத்தில் கொள்ளக் கூடாது. இது கிரகங்கள் சூரியனுக்கு மிக அருகில் வரும் நேரம், கிருஷ்ண பக்‌ஷம் மற்றும் லீப் சந்திர ஆண்டு மற்றும் லீப் சந்திர மாதங்கள் ஆகும்.
  • துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவதியை மற்றும் அமாவாசை, பவுர்ணமி தவிர்த்த சுக்ல பக்‌ஷாவின் திரயோதசி போன்ற திதிகள் யாவும் கிரகப் பிரவேசம் செய்ய சாதகமானவை ஆகும்.
  • புதுமனை புகுவிழாவுக்கான ஒரு நல்ல நாளைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​சுப முகூர்த்த தேதிகள், நேரங்கள் நகரத்திற்கு நகரம் மாறுபடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • அபூர்வ கிரகப் பிரவேசம் நடத்தும்போது சூரியன் உத்தராயண ஸ்தானத்தில் இருக்க வேண்டும். இருப்பினும், வியாழன் (குரு) மற்றும் சுக்கிரன் (சுக்ரா) அமைவது சபூர்வ கிரகப் பிரவேசத்திற்கு ஏற்றது.

2022-ஆம் ஆண்டு மங்களகரமான கிரகப் பிரவேச தேதிகளில் ஒன்றை புதுமனை புகுவிழாவிற்காக நீங்கள் திட்டமிட்டிருந்தால், நீங்கள் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்:

  • வாஸ்து சாஸ்திரத்தின்படி குடிபுகுவதற்குத் தயாராக இருக்கும் வீட்டிற்கே கிரகப் பிரவேசம் செய்ய வேண்டும். அதாவது வீடு மேற்கூரை, ஜன்னல்கள், கதவுகள் என்று முழுமை பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமானதாகும்.
  • கிரகப் பிரவேச முகூர்த்தத்தில் வலது காலை முன் வைத்து வீட்டினுள் நுழையவும்.
  • கிரகப் பிரவேச பூஜைக்கு முன்பு வீட்டின் ஃபர்னிச்சர்களின் இடத்தை மாற்றக் கூடாது. இருப்பினும், கிரகப் பிரவேச பூஜையின் மூன்று நாட்கள் வரை வீட்டை காலியாக வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
  • கிரகப் பிரவேச பூஜை மற்றும் வாஸ்து சாந்திக்கு முன்னதாகவே சமையல் எரிவாயு சிலிண்டரையும், அடுப்பையும் உரிய இடத்திற்கு கொண்டு செல்லலாம்.
  • குடும்பத்தில் ஏதேனும் மரணம் நிகழ்ந்திருந்தால் கிரகப் பிரவேசம் செய்யக் கூடாது.
  • இல்லத்தில் பெண் ஒருவர் கர்ப்பவதியாக இருந்தால் கிரகப் பிரவேச பூஜை செய்வதை தவிர்க்கவும்.
  • கிரகப் பிரவேச ஹோமத்தின்போது பேசுவதைத் தவிர்க்கவும். கிரகப் பிரவேச விழாவை அனைத்து குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையிலும், ஒவ்வொரு உறுப்பினரும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையூட்டும் அதிர்வுகளை வரவேற்கும் நிலையில் செய்யவும்.

இதுவும் வாசிக்க: உங்கள் புதிய வீட்டுக்கான இந்தப் பண்டிகை சீசனுக்கான கிரகப் பிரவேச குறிப்புகள்

 

கிரகப் பிரவேச பூஜை ஏற்பாடு செய்ய உதவும் குறிப்புகள்:

  • நல்ல முகூர்த்த நாளைத் தேர்ந்தெடுக்கவும்: கிரகப் பிரவேசத்திற்கான நல்ல தேதி மற்றும் நேரத்தைக் கண்டறிய, உங்கள் ஜோதிடர்/புரோகிதரை அணுகவும். இது எல்லாவற்றையும் முன்கூட்டியே தயார் செய்து, உங்களுக்கு நெருக்கமான மற்றும் அன்பானவர்களை அழைப்பதன் மூலம், அவர்கள் இந்த மங்களகரமான தருணத்தின் ஓர் அங்கமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சந்திர நாட்காட்டியின்படி நான்கு மாதங்களுக்குள் ஒரு நபருக்கு அதிர்ஷ்டமும் வளமும் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது.
  • வீட்டு அலங்காரம்: புதிய வீட்டின் பிரதான நுழைவாயிலைத் தோரணங்கள், ஸ்வஸ்திகா மற்றும் பிற மங்கள சின்னங்களால் அலங்கரிக்கவும். வீட்டின் நுழைவாயில் வாஸ்து புருஷனின் முகம் என்று கருதப்படுகிறது. இதுதான் நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் அழைத்து வருகிறது. வீட்டுப் பெண்கள் பொதுவாக நுழைவாயிலை வண்ணக் கோலங்கள் இட்டு அலங்கரிக்கிறார்கள். இது நம்பிக்கை மற்றும் உத்வேகத்தை ஈர்க்க உதவுகிறது.
  • வாஸ்து பூஜை: புரோகிதர் மந்திரங்களை உச்சரிப்பதன் வாயிலாக வாஸ்து பூஜை செய்யப்படுகிறது. இந்தச் சடங்கு குடும்பத்திற்கு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை உறுதி செய்கிறது. பொதுவாக, குடும்பத் தலைவர் வீட்டின் முன்புறத்தில் தேங்காய் மற்றும் சாம்பல் சுரைக்காயை உடைத்து வழிபடுவது வழக்கம்.
  • கலச பூஜை: ஒரு செப்புக் குடத்தில் தண்ணீர், பல்வேறு தானியங்கள், நாணயம் ஆகியவற்றை நிரப்பவும். குடத்தின் மேல் ஒரு தேங்காயை வைத்து சிவப்புத் துணியால் மூடி வைக்கவும். குடத்தைச் சுற்றி மா இலைகள் மற்றும் உரித்த தேங்காயை வைக்கவும். குடும்பத் தலைவர் தன் மனைவியுடன் குடத்தை ஏந்தி புதிய வீட்டிற்குள் நுழைகிறார். முதலில் வலது பாதத்தை வைக்க வேண்டும். செப்புக் குடத்தை ஹோம குண்டம் இருக்கும் இடத்திற்கு அருகில் வைக்கவும்.
  • ஓம சாந்தி: ஓம குண்டத்தைத் தயார் செய்து, அந்தப் பகுதி முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஓம அக்னிப் பூஜை சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இந்து மரபுப்படி, வீடு கட்டும்போது, ​​மண் தோண்டுதல், கல் உடைத்தல், மரம் வெட்டுதல் போன்றவற்றின்போது அக்னி பூஜை சடங்கு செய்யப்படுகிறது. இது பாவங்களை நீக்குவதாகவும் ஐதீகம். இந்தச் சடங்கில் விநாயகர் பூஜை மற்றும் லட்சுமி தேவி பூஜைகளும் அடங்கும். மேலும் மஞ்சள், பால், நெய் போன்றவை அக்னிக்கு வார்க்கப்படுவதும் அடங்கும்.
  • பொங்கும் பால்: கிரகப் பிரவேச பூஜைக்குப் பிறகு பால் காய்ச்சப்படுகிறது. சம்பிரதாயத்தின்படி, பால் பொங்கி வழிய வேண்டும். பால் பொங்கி வழிதல் செல்வ வளமையையும் செழிப்பையும் குறிக்கிறது.
  • புரோகிதர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு உணவு வழங்குதல்: கிரகப் பிரவேச விழாவிற்குப் பிறகு, புரோகிதர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. சமையலறையில் அல்வா அல்லது கீர் போன்ற பிரசாதங்களைச் செய்து, அதை முதலில் கடவுளுக்கு நிவேதனம் செய்து, பின்னர் விருந்தினர்களுக்கு பிரசாதம் கொடுங்கள். கிரகப் பிரவேச நாளில் எந்த விருந்தினரும் வெறுங்கையுடன் செல்லக் கூடாது என்பது முக்கியம்.

 

கிரகப் பிரவேச பூஜையில் சாமகிரியை என்றால் என்ன?

இந்து நாட்காட்டி அல்லது பஞ்சாங்கம் மற்றும் வீட்டு உரிமையாளரின் ஜாதகத்தின் அடிப்படையில் ஒரு சாதகமான நாளில் புரோகிதர் மற்றும் வீட்டு உரிமையாளர்களால் கிரகப் பிரவேச பூஜை செய்யப்படுகிறது. பூஜை சடங்குகளுக்கு பூஜை சாமகிரியைக்கு ஏற்பாடு செய்வது அவசியம். பூஜைக்குத் தேவையான முக்கிய சாமகிரியை அல்லது பொருட்களில் தேங்காய், பித்தளை கலசம், பூக்கள், மா இலைகள், தூபக் குச்சி / தூப தீபம், மண் தியா, பால், பழங்கள் மற்றும் இனிப்புகள் இருக்க வேண்டும்.

 

2023-ம் ஆண்டு கிரகப் பிரவேசத்திற்கான சுப முகூர்த்த் தேதிகள்: மாதங்களும் அவற்றின் முக்கியத்துவமும்

மாதங்கள் முக்கியத்துவம்
மாசி (ஜனவரி – பிப்ரவரி)

 

செல்வ ஆதாயத்திற்கு வழிவகுக்கிறது

 

பங்குனி (பிப்ரவரி – மார்ச்)

 

செல்வம் மற்றும் குழந்தைகள் வழியாக நன்மை பயக்கும்
வைகாசி (ஏப்ரல் – மே)

 

செல்வம் மற்றும் செழிப்பை மேம்படுத்துகிறது
ஆனி (மே – ஜூன்)

 

கால்நடைகள் வகையில் நன்மை பயக்கும்

 

மேலே குறிப்பிடப்பட்டவை இந்து புதுமனைப் புகுவிழா அல்லது கிரகப் பிரவேசத்திற்கான நல்ல மாதங்களாகும். இந்த மாதங்களில் 2022-ஆம் ஆண்டின் புனிதமான கிரகப் பிரவேச தேதிகளில் கிரகப் பிரவேச விழாவிற்கு நீங்கள் திட்டமிடலாம்.

புதிதாக கட்டப்பட்ட வீட்டில் சூரியன் உத்தராயண ஸ்தானத்தில் இருக்கும்போது உரிமையாளர்கள் முதலில் அடியெடுத்து வைக்கலாம். இது சுபம் என்று கருதப்படுகிறது. பழைய வீடுகளில் அல்லது புதுப்பிக்கப்பட்ட வீடுகளில் முதலில் அடியெடுத்து வைக்க வியாழன் (குரு) அல்லது சுக்கிரன் (வெள்ளி) அஸ்தமிக்கும்போது சிறந்தது (இந்த விஷயத்தில் நட்சத்திரம் முக்கியமில்லை).

 

கிரகப் பிரவேச முகூர்த்தங்களைக் கணக்கிடுவது எப்படி?

கிரகப் பிரவேச முகூர்த்தத்தை கணக்கிடுவதற்கு வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட வல்லுநர்கள் தேதிகள், நாள், நட்சத்திரம், ஒன்பது கிரகங்களின் நிலை, லக்னம், சுப யோகம், ஆதிக்க மாதம் அல்லது காலண்டரில் சேர்க்கப்பட்ட கூடுதல் மாதம், பத்ரா, ராகு காலம் போன்ற பல்வேறு காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சாதகமான நேரம் அல்லது முகூர்த்த நேரம் அல்லது நாள் புதிய வீடுகளுக்குச் செல்வோருக்கு நல்ல பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது.

கிரகப் பிரவேசத்திற்கான சுப முகூர்த்தம் மற்றும் புதுமனை புகுவதற்கான மங்களகரமான தேதிகள் பஞ்சாங்க சுத்தி செய்த பிறகு கணக்கிடப்படுகிறது. இதன்மூலம் பிரவேச பூஜை, ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தி பூஜைக்கான நல்ல நேரத்தைக் குறிக்கிறார்கள். வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணர்களின் கூற்றுப்படி, சுக்கிரன் மற்றும் வியாழன் கிரகங்கள் எரிவதாகக் கருதப்படும் சுக்ர தாரா அஷ்டம் மற்றும் குரு தாரா அஷ்ட நேரத்தை ஒருவர் தவிர்க்க வேண்டும். சுக்ரன் மற்றும் குரு கிரக எரி நாளைத் தவிர்த்துவிட்டுத்தான் கிரகப் பிரவேச சுப முகூர்த்த நாள் குறிக்கப்படுகிறது. சுப முகூர்த்த நேரம் குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் இருக்க வேண்டும். இது சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனத்திற்கான இடைப்பட்ட நேரத்தில் முகூர்த்தம் குறிக்கப்படுவதை உறுதி செய்கிறது.

வாஸ்து நிபுணர்களின் சொல்வதன்படி, ஒரு குறிப்பிட்ட லக்னம் அல்லது லக்கினத்தில் கிரகப் பிரவேச விழா நடத்தப்பட வேண்டும். ஒருவரின் பிறந்த நட்சத்திரத்தில் சூரியனின் நிலையைக் கருத்தில் கொண்டே மங்களகரமான முகூர்த்தம் உறுதி செய்யப்படுகிறது. உதாரணமாக, ஒருவரின் ராசியில் ஐந்தாவது அல்லது ஒன்பதாவது வீட்டில் சூரியன் இருந்தால், அந்தக் காலக்கட்டம் சாதகமானதாக இருக்காது. எனினும், ஒருவரது ராசியில் ஆறாவது மற்றும் எட்டாவது வீட்டில் இருந்தால் மிகவும் சாதகமானதாக இருக்கும்.

 

கிரகப் பிரவேச பூஜை வகைகள்

இந்து மத மரபின்படி 3 வகையான கிரகப் பிரவேசங்கள் உள்ளன. அவை வருமாறு:

அபூர்வா: நீங்கள் உங்கள் புதிய வீட்டிற்குள் அடியெடுத்து வைப்பது அபூர்வ கிரகப் பிரவேசம் ஆகும்.

சபூர்வா: நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் மீண்டும் உங்கள் வீட்டிற்குள் நுழைந்தால், அது சபூர்வ கிரஹ பிரவேசம் என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வேலை நிமித்தமாக நீண்ட காலம் வெளியூர் சென்று உங்கள் வீட்டை காலியாக விட்டுவிட்டு வீடு திரும்பினால் இந்த வகையான கிரகப் பிரவேசம் செய்யப்படுகிறது. பூஜைக்கு முன் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

த்வந்தவ்: இயற்கைப் பேரிடர் காரணமாக நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேறி, நீண்ட காலத்திற்குப் பிறகு இப்போது மீண்டும் உங்கள் வீட்டிற்குள் நுழைந்தால், நீங்கள் கிரகப் பிரவேச பூஜை விதியை செய்ய வேண்டும். இது த்வந்தவ் கிரகப் பிரவேசம் என்று அழைக்கப்படுகிறது.

இதையும் வாசிக்க: வாஸ்து முறைப்படி வீட்டின் பூஜை அறை திசை குறித்த முழு விவரம்

 

கிரகப் பிரவேச பூஜைக்கான வாஸ்து சாஸ்திரத் தேவைகள்

கிரகப் பிரவேச பூஜை செய்யும்போது அனைத்து வாஸ்து தேவைகளையும் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது தன்னம்பிக்கையையும் உறுதிப்படுத்தும், புதிய வீட்டிற்கான மேலான ஆசீர்வாதங்களை வரவேற்கும்.

  • இந்த ஆண்டு புதிய வீட்டிற்கு செல்வதற்கு முன்பு 2022-ம் ஆண்டில் மங்களகரமான வாஸ்து சாந்தி முகூர்த்தத்தை ஒருமுறை பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.
  • இந்து நாட்காட்டி அல்லது பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டபடி கிரகப் பிரவேசம் பொருத்தமான முகூர்த்தத்தில் செய்யப்பட வேண்டும்.
  • கிரகப் பிரவேசம் அல்லது புதுமனைப் புகுவிழாவிற்காக ரங்கோலி போன்ற வண்ணக் கோலங்கள், மலர்கள், புனித சின்னங்களான ஸ்வஸ்திக் அல்லது லட்சுமிதேவியின் பாதங்கள் போன்ற அலங்காரப் பொருட்களைக் கொண்டு வீட்டின் முன்பக்க நுழைவாயிலை அலங்கரிக்கவும்.
  • ரங்கோலி போன்ற வண்ணக் கோலங்கள், மலர்கள், புனித சின்னங்களான ஸ்வஸ்திக் அல்லது லட்சுமிதேவியின் பாதங்கள் போன்ற அலங்காரப் பொருட்களைக் கொண்டு வீட்டின் முன்பக்க நுழைவாயிலை அலங்கரிக்கவும்.
  • வீட்டின் முன்பக்க நுழைவாயில் அல்லது பிரதான வாயிலில் எந்தத் தடையும் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • புதிய மா இலைகள் அல்லது பூக்களின் தோரணத்தால் கதவை அலங்கரிக்கவும்.
  • நேர்மறையான உத்வேக அதிர்வுகளை வரவேற்க வண்ணக் கோலங்கள் மற்றும் இழைமாவுக் கோலம் போடவும்.
  • ஈசான மூலை என்றும் அழைக்கப்படும் வடகிழக்கு மூலையில் கிரகப் பிரவேச பூஜை மற்றும் ஹோமம் செய்ய வேண்டும். இது பூஜை அறை மற்றும் சாமிப் படங்களை வைப்பதற்கான இடமும் ஆகும்.
  • ஒரு புரோகிதரின் மந்திரங்கள் மூலம், வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை அகற்ற வாஸ்து பூஜை அல்லது ஹோமம் (நவக்கிரகம் அல்லது விநாயகருக்கு) செய்யுங்கள்.
  • கிரகப் பிரவேச பூஜை முடிந்ததும் செய்து வைத்த உணவுகளை புரோகிதர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
  • கிரகப் பிரவேசம் செய்யும் அறை மற்றும் ஒட்டுமொத்த வீடுமே திறந்திருக்க வேண்டும், காற்றோட்டமாக இருக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின்படி புதிய இல்லத்திற்குள் நல்ல சக்திகளை வரவேற்க இது முக்கியமானதாகும். கிரகப் பிரவேச பூஜையை மூடிய கதவுகள் ஜன்னல்களுடன் செய்யக் கூடாது.
  • இந்த ஆண்டில் உங்கள் புதிய வீட்டிற்கு குடியேறுவதற்கான 2022-ம் ஆண்டின் நல்ல தேதிகளைப் பார்த்து குடியேறுங்கள்.

 

கிரகப் பிரவேச அழைப்பிதழ்

புதுமனைப் புகுவிழா அல்லது கிரக பிரவேச பூஜைக்கு அழைப்பிதழ் அனுப்ப திட்டமிட்டால், ஓர் அழகான அழைப்பிதழை வடிவமைக்க இந்த உதவிக் குறிப்புகளைப் பின்பற்றலாம். கிரகப் பிரவேச வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் பெற உங்கள் உற்றார், உறவினர்களுக்கு அழைப்பிதழை அனுப்புங்கள்:

  1. அழைப்பிதழ் வடிவத்தில் தற்போதைய ஃபேஷன் என்ன என்பதை அறிய சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அழகான டிசைனைத் தேர்வு செய்யுங்கள். மேலும், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் ஆயிரக்கணக்கான தளவமைப்புகளில் இருந்தும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
  1. கேன்வா போன்ற சுய வடிவமைப்பு தளங்களில் உங்கள் சொந்த அழைப்பிதழ் அட்டைகளை வடிவமைக்கலாம். விமியோ (Vimeo) அல்லது இன்ஷாட் (Inshot) போன்ற வீடியோ எடிட்டிங் தளங்களைப் பயன்படுத்தி எளிதான வீடியோ அட்டைகளையும் நீங்கள் முயற்சி செய்யலாம்.
  1. வடிவமைப்பிற்கு, நீங்கள் உங்கள் குடும்ப உருவப் படத்தை பின்னணி படமாக தேர்வு செய்யலாம். இது தவிர, அட்டையை அலங்கரிக்க பாரம்பரிய வடிவங்களை நீங்கள் தேர்வு செய்யலாம். உதாரணமாக, கிரகப் பிரவேச நடைமுறைகளை விளக்கும் வடிவங்களை அழைப்பிதழின் பின்னணி உருவமாகப் பயன்படுத்தலாம்.
  1. சுபகாரியம் நடைபெறும் புதிய இல்லத்தின் முகவரி, நிகழ்வின் தேதி மற்றும் நேரம் உள்ளிட்டவை பற்றிய முழு விவரங்களையும் தெளிவாகக் குறிப்பிடவும். நிகழ்வுக்கு வருகை தரும் உறவினர்கள், நண்பர்கள் இடத்தைக் கண்டுப்பிடிக்க வசதியாக அழைப்பிதழிலேயே கூகுள் வரைபடத்தை இணைக்கலாம். நீங்கள் நேரில் சென்று அழைப்பிதழை வழங்குகிறீர்கள் என்றால், கூகுள் வரைபடத்துடன் இணைக்க, அதில் ஒரு கியூஆர் (QR code) குறியீட்டை வைக்கலாம்.
  1. அழைப்பிதழில் ஒரு குடும்ப உறுப்பினரின் தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டால் நல்லது, எனவே, அவர் விருந்தினர்களுக்கு நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வழிகாட்ட இது உதவும்.

 

கிரகப் பிரவேசப் பூஜைகளைச் செய்வதில் புதிய ட்ரெண்டுகள்

நாம் வாழும் இன்றைய அதிவிரைவு கதி வாழ்க்கையில் அனைவரும் ஓர் இடத்தில் சங்கமிப்பது என்பது கடினமே. எனவேதான் நமக்கு இன்றைய அசுர வளர்ச்சி தொழில்நுட்பம் நமக்குக் கைக்கொடுக்கின்றது. ஆன்லைனிலேயே கிரகப் பிரவேச பூஜையை நடத்த ஏற்பாடு செய்துவிட முடியும். இதன் மூலம் அனைத்தும் சுலபமாவதோடு சுபதினத்துடன் வாழ்வைத் தொடங்குவதும் எளிதாகின்றது. புரோகிதர்கள் கிரகப் பிரவேச பூஜை சடங்கை ஆன்லைனில் நடத்தும்போது, உலகெங்கிலும் உள்ள உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆன்லைனில் பூஜையில் கலந்துகொள்ள முடியும்.

எந்த மொழியில் பூஜை செய்ய வேண்டுமோ அந்த மொழிக்குரிய, அந்த மொழி தெரிந்த புரோகிதரை, பண்டிதரை ஆன்லைனிலேயே நாம் தேர்வு செய்து, அவரையே முன் பதிவு செய்து கொள்ளலாம். ஒட்டுமொத்த பூஜை சாமகிரியையையும் ஆன்லைனிலேயே ஏற்பாடு செய்யலாம். இப்போதெல்லாம் வெப்-கேம்கள் மூலம் ஆன்லைன் பூஜை சேவைகள் ட்ரெண்டாகி வருகின்றன.

கோவிட்-19 தொற்றுக்குப் பின் வீட்டு உரிமையாளர்கள் இப்போது தங்கள் கிரகப் பிரவேச பூஜையை தாங்களே செய்யத் தேர்வு செய்கிறார்கள். ஒரு புரோகிதர் வீடியோ கால் மூலம் மெய்நிகர் முறையில் வழிகாட்டுகிறார். அத்துடன், ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினி மூலம் மந்திரங்களைச் சொல்லி நடத்தி வைக்கிறார். ஸ்மார்ட் போனிலோ, மடிக்கணினியிலோ பூஜையை செய்துவைக்கும் புரோகிதர் மந்திர உச்சாடணம் முதல் சடங்கு செய்யும்போது செய்ய வேண்டியவற்றை செய்து காட்டக் காட்ட நாம் செய்ய வேண்டியதுதான். இப்போதெல்லாம் டிஜிட்டல் பூஜை முறை பிரபலமாகி வருகிறது. பூஜை செய்வது எப்படி, ஹோமம் செய்வது எப்படி, மலர்களை எப்படி வைப்பது, எங்கு வைப்பது, கலச பூஜை எப்படி செய்வது என்று படிப்படியான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை புரோகிதர்கள் இப்போது ஆன்லைன் மூலம் மேற்கொள்கிறார்கள்.

கிரகப் பிரவேச பூஜையில் இன்னொரு பெரிய புதுமை என்னவெனில், ஆங்கில மொழியிலும் சிலர் செய்கின்றனர். அயல்நாடு வாழ் இந்தியர்களில் சிலர் கிரகப் பிரவேச பூஜை நடைமுறைகளை ஆங்கிலத்தில் சொல்ல விரும்புகிறார்கள். எனவே மந்திரங்களின் அர்த்தங்களை ஆங்கிலத்தில் புரோகிதர்கள் சொல்வதும் நடந்து வருகிறது. பெரும்பாலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் இத்தகைய சடங்கு சம்பிரதாயங்களில் தற்போது பெண்களும் புரோகிதர்களாக வலம் வருகின்றனர். பெண் புரோகிதர்கள் திருமணம், கிரகப் பிரவேச பூஜைகளை செய்துவிப்பதும் நடைபெறுகிறது.

 

தீபாவளியன்று கிரகப் பிரவேச பூஜை செய்யலாமா?

தீபாவளிப் பண்டிகை இந்துப் பண்டிகைகளிலேயே மிகவும் உற்சாகமான பண்டிகை. இந்தத் திருநாளில் சிலர் கிரகப் பிரவேச பூஜை செய்வதை விரும்புகின்றனர். நிலம், நீர், ஆகாயம், தீ, காற்று என்ற ஐம்பூதங்கள் சமச்சீராக இருக்கும் மகாவாஸ்து யோக நாளாகும் தீபாவளித் திருநாள். ஆகவே, இந்தத் திருநாளில் புதுமனைப் புகுவிழா செய்வதில் நலன்களே அதிகம்.

 

கிரகப் பிரவேச வீட்டு அலங்காரம்

வீட்டு நுழைவாயில் அலங்காரம்

வாஸ்துப்படி, புதிய வீட்டின் நுழைவாயில் சாமந்திப் பூக்கள் மற்றும் மா இலைகள் மற்றும் அதிர்ஷ்டத்தை அழைக்கும் மங்கள சின்னங்களால் அலங்கரிக்கப்பட வேண்டும்.

ரங்கோலி

இந்திய பாரம்பரியத்தின் முக்கிய அங்கமான மாவுக் கோலங்கள் மற்றும் அழகான ரங்கோலியை வடிவமைத்து, கிரகப் பிரவேச அலங்காரத்தை வேறு மட்டத்திற்கு உயர்த்துங்கள்.

ஒளி விளக்குகள்

வீட்டை விளக்குகளால் ஒளிரச் செய்யுங்கள். தேவதை விளக்குகள் மற்றும் எல்.இ.டி விளக்குகள் போன்ற நவநாகரீக விளக்குகளைத் தேர்வு செய்யலாம் அல்லது குத்து விளக்குகள், தீப ஒளி விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளுடன் பாரம்பரிய விளக்குகள் மூலமும் மங்களகரமாக வீட்டை ஒளிரச் செய்யலாம்.

வீட்டுக் கோயிலை அலங்கரித்தல்

கிரகப் பிரவேச முகூர்த்த பூஜைக்கு வீட்டுக் கோயில் அல்லது பூஜை மந்திர் அமைக்கவும். தெய்வங்களின் சிலைகளுக்கு மலர் மாலைகள், விளக்குகள் மற்றும் புதிய ஆடைகளை இட்டு அலங்கரிக்கவும்.

 

கிரகப் பிரவேசம்: பரிசுப் பொருட்களைத் தேர்வு செய்ய ஆலோசனைகள்

கிரகப் பிரவேசம் போன்ற ஒரு மங்களகர நிகழ்வுக்கு சரியான வீட்டு அலங்கார பரிசைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். வீட்டு உரிமையாளர்கள் தங்கள் புதிய வீடுகளை அலங்கரிக்க விரும்புவார்கள். எனவே, அவரை ஈர்க்கக் கூடிய மற்றும் அவரின்  தனிப்பட்ட விருப்ப பாணிக்கு ஏற்ற பரிசுகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.

விநாயகர்லட்சுமி சிலைகள்: இந்து பாரம்பரியத்தின்படி, எந்தவொரு சுபகாரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வணங்க வேண்டும். விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் வெள்ளி சிலைகளை பரிசளிப்பது அதிர்ஷ்டத்தை தரும்.

மின்னணு சாதனங்கள்: வேக்குவம் கிளீனர், மைக்ரோவேவ் அடுப்பு, மிக்சி, கிரைண்டர், சாத குக்கர், பால் குக்கர் போன்ற பொருட்களை பரிசாக வழங்கலாம்.

ஓவியங்கள்: வாஸ்து சாஸ்திரப்படி, நல்ல சக்திகளை அழைக்கும் மங்களகரமான ஓவியங்களை பரிசளிக்கலாம். இயற்கை, மலர்கள், பறவைகள் போன்றவற்றின் அழகான ஓவியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆடம்பர படுக்கை மற்றும் விரிப்புகள்: கிரகப் பிரவேச விழாவிற்கு ஆடம்பர படுக்கைகளை தேர்ந்தெடுங்கள். இது வீட்டு அலங்காரத்தை அதிகரிக்கும். புதிய வீட்டை பிரகாசமாக்கும். அதேபோல் வீட்டிற்கு ஏற்றாற் போன்ற வரவேற்பறை தரை விரிப்புகளையும் பரிசாக அளிக்கலாம்.

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

கிரகப் பிரவேசத்திற்கு முன்பு வீட்டு உபயோகப் பொருட்களை புதிய இல்லத்திற்கு மாற்ற முடியுமா?

கூடாது. கிரகப் பிரவேசத்திற்கு முன்பு எரிவாயு சிலிண்டரைத் தவிர வேறு எதையும் உங்கள் புதிய வீட்டிற்கு மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.

வாடகை வீட்டில் கிரகப் பிரவேச பூஜை செய்வது எப்படி?

பொதுவாக வாடகை வீட்டிற்கு செய்வது வழக்கமில்லை, ஆனாலும், ஒரு கணபதி பூஜை செய்தால் நல்லது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் சொந்த வீட்டிற்கு நீங்கள் செய்வது போலவே உங்கள் வாடகை வீட்டிற்கும் கிரகப் பிரவேச பூஜை செய்யலாம்.

புது வீட்டில் பால் காய்ச்சுவது ஏன்?

இந்து சம்பிரதாயங்களின்படி, பொங்கும் பால் என்பது செழிப்பைக் குறிக்கிறது.

கிரகப் பிரவேச பூஜையில் ஹோமம் அவசியமா?

ஹோம பூஜை செய்வது வீட்டில் உள்ள தீயசக்திகளை விரட்டுகிறது, நல்ல சக்திகளை வரவேற்கிறது. அதனால்தான் சுத்திகரிப்புக்காக ஹோமம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் ஐதீகம்.

கிரகப் பிரவேச தினத்தன்று பிரதான வாசலுக்கு அருகில் தரையில் ரங்கோலி போடுவது ஏன்?

லட்சுமி தேவியை (வளமை) வீட்டிற்கு வரவேற்க அரிசி மாவு, பூக்கள் மற்றும் பிரகாசமான வண்ணங்களைப் பயன்படுத்தி தரையில் வண்ணமயமான ரங்கோலி இடப்படுகிறது.

சனிக்கிழமையன்று கிரகப் பிரவேசம் செய்யலாமா?

சனிக்கிழமை நல்ல முகூர்த்தமாக அமைந்தால் சனிக்கிழமைகளிலும் உங்கள் புரோகிதரை கலந்தாலோசித்து கிரகப் பிரவேசம் செய்யலாம். அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன? அது ஏன் அப்படி அழைக்கப்படுகிறது? ஜோதிட சாஸ்திரத்தின்படி, அபிஜித் முகூர்த்தம் என்பது நகரத்தில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் முகூர்த்தத்தைக் குறிக்கிறது. எனவேதான் முகூர்த்தங்கள் இடத்திற்கு இடம் மாறுபடும். அபிஜித் என்ற சொல்லுக்கு ‘வெற்றி’ என்று பொருள். எனவே, அபிஜித் முகூர்த்தத்தில் எந்தச் செயலை மேற்கொண்டாலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள். உபநயனம் மற்றும் திருமணம் தவிர மற்ற காரியங்களுக்கு அபிஜித் முகூர்த்தம் உகந்தது.

அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன? அது ஏன் அப்படி அழைக்கப்படுகிறது?

ஜோதிட சாஸ்திரத்தின்படி, அபிஜித் முகூர்த்தம் என்பது நகரத்தில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் முகூர்த்தத்தைக் குறிக்கிறது. எனவேதான் முகூர்த்தங்கள் இடத்திற்கு இடம் மாறுபடும். அபிஜித் என்ற சொல்லுக்கு ‘வெற்றி’ என்று பொருள். எனவே, அபிஜித் முகூர்த்தத்தில் எந்தச் செயலை மேற்கொண்டாலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள். உபநயனம் மற்றும் திருமணம் தவிர மற்ற காரியங்களுக்கு அபிஜித் முகூர்த்தம் உகந்தது.

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (0)
  • 😔 (1)

Recent Podcasts

  • தோட்டங்களுக்கான 15+ அழகான குளம் இயற்கையை ரசித்தல் யோசனைகள்
  • வீட்டில் உங்கள் கார் பார்க்கிங் இடத்தை எப்படி உயர்த்துவது?
  • டெல்லி-டேராடூன் எக்ஸ்பிரஸ்வே பிரிவின் முதல் கட்டம் ஜூன் 2024 க்குள் தயாராக இருக்கும்
  • கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் நிகர லாபம் 27% அதிகரித்து 725 கோடி ரூபாயாக உள்ளது.
  • சித்தூரில் சொத்து வரி செலுத்துவது எப்படி?
  • இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் பார்க்க வேண்டிய 25 சிறந்த இடங்கள்