வீட்டிலுள்ள பூஜையறையின் வாஸ்து சாஸ்திரக் குறிப்புகள்


வீட்டிலுள்ள பூஜையறை அல்லது பிரார்த்தனை பகுதி, என்று வரும் போது, வீட்டில் குடியிருப்பவர்களுக்கு அதிகபட்ச நேர்மறை விளைவுகளை உறுதி செய்யவதற்க்காக ,பல வாஸ்து சாஸ்திர வழிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. நாம் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி இங்கு ஆராய்வோம்

வீட்டிலுள்ள  பூஜையறை , நாம் கடவுளை வணங்கும் ஒரு புனித இடமாகும்.  எனவே, இயல்பாகவே, அது ஒரு நேர்மறை மற்றும் அமைதியான இடமாக இருக்க வேண்டும்.  பூஜையறை வாஸ்து சாஸ்திரப்படி , வைக்கப்பட்டால், வீட்டிற்கும் அதில் வாழ்பவர்களுக்கும்  ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வர முடியும். பூஜையறை தனியாக இருப்பது சிறந்தது என்றாலும், பெருநகரங்களில்  இட நெருக்கடி இருப்பதால் இது எப்பொழுதும் சாத்தியப்படாது .

 பூஜையறை தெய்வீக ஆற்றல் நிறைந்த அமைதியான ஒரு மண்டலமாக இருக்க வேண்டும், என்று வாஸ்து பிளஸின் மும்பையைச் சேர்ந்த  நிதின் பார்மர் கூறுகிறார். மேலும் இந்த இடத்தில்  தான், ஒருவர் எல்லாம் வல்ல இறைவனிடம் சரணடைந்து வலிமை பெறுகிறார்.  பூஜையறைக்கென்று ஒரு முழு அறை ஒதுக்கீடு செய்ய இடம் இல்லையென்றால், வீட்டின் கிழக்கு சுவர் மீது ஒரு சிறிய  பீடத்தை அமைத்து ,அது வீட்டின் வடகிழக்கு மண்டலத்தை நோக்கி இருக்குமாறு பூஜையறை அமைத்து வணங்கலாம் . வீட்டின் தெற்கு,தென்-மேற்கு ,தென்-கிழக்கு பகுதிகளில் பூஜையறை  வைப்பதைத் தவிர்ப்பது நல்லது , “என்று பார்மர் கூறுகிறார் .

 

வாஸ்து சாஸ்திரத்தின் படி பூஜையறை அமைக்க சிறந்த திசைகள்

“வியாழன் வடகிழக்கிற்கு அதிபதி, இது ‘இஷான் கோனா’ என்றும் அழைக்கப்படுகிறது”, என்று  வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட நிபுணர் ஜெயஸ்ரி தாமணி விளக்குகிறார் .இஷான் என்பது ‘ஈஷ்வர் அல்லது கடவுள்’. அதனால் தான் அது கடவுள் / வியாழனுடைய  திசை.எனவே, அங்கு பூஜையறையை வைக்க அறிவுறுத்தப்படுகிறது.மேலும், பூமியின் சாய்வு நிலை வடகிழக்கு திசையில் தான் உள்ளது, மேலும் அது வடகிழக்கு ஆரம்ப புள்ளியுடன் நகர்கிறது. எனவே, இந்த மூலை , ஒரு  முழு ரயிலை இழுக்கும் ஒரு ரயில் எஞ்சின் போன்றது .அதுபோலவே , பூஜையறை என்பது ஒரு வீட்டின் முழு ஆற்றலையும் தன்னைநோக்கி இழுத்துக்கொண்டு பின்னர் அதை முன்னெடுத்துச் செல்கிறது, “என்கிறார் தாமணி. மேலும், பிரம்மஸ்தான் என அழைக்கப்படும் வீட்டின் மையத்தில் உள்ள ஒரு பூஜையறையை அமைத்தால் அது மிகவும் புனிதத்தன்மை வாய்ந்ததாகவும்,  வீட்டில் வாழ்பவர்களுக்கு செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தரும்,” என்றும் தாமணி கூறுகிறார்.

 

ஒரு வீட்டில் பூஜையறையை   வாஸ்துவின் படி எப்படி கட்டப்பட வேண்டும்

பூஜையறை கட்டும் போது, ​​அதை நேரடியாக தரையில் வைக்கக்கூடாது . மாறாக, அதை உயர்த்திய மேடையில் அல்லது  பீடத்தில் வைக்கவேண்டும் ,என்று பார்மர் ஆலோசனை கூறுகிறார். ” பூஜையறை பளிங்கு அல்லது மரத்தால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். கண்ணாடி அல்லது அக்ரிலிக்கால்  செய்யப்பட்ட பூஜையறைகளை தவிர்க்கவும். வேண்டாத பொருட்களைக்கொண்டு பூஜையறையை சீர்குலைப்பதை தவிர்க்கவும். பூஜையறையில் அமர்ந்து அல்லது நின்று கொண்டிருக்கும் ஒரே கடவுள் அல்லது தேவதையின், பல சிலைகளை நீங்கள்  வைத்திருக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பூஜையறையில் வைக்கப்பட்டுள்ள சிலை அல்லது புகைப்படங்கள், வெடிப்பு விட்டோ அல்லது சேதமடைந்திருக்கவோ கூடாது,ஏன்னென்றால், அது அமங்களமாக கருதப்படுகிறது ,” என்று பார்மர் அறிவுறுத்துகிறார்.

ஒருவர் , பூஜையறை எங்குவைக்கப்பட்டிருந்தாலும் , அங்கு பூஜை செய்ய வேண்டும் .சிறப்பு பூஜைகளின் போது, ​​முழு குடும்பமும் ஒன்றாக பிரார்த்தனை செய்ய முனையவேண்டும். எனவே, ஒரு குடும்பம் உட்கார்ந்து பிரார்த்தனை செய்வதற்கு  போதுமான இடம் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் . பூஜையறை இருக்கும் பகுதியில் நல்ல ஆற்றல் மற்றும் ஆரோக்கியமான ஓட்டம் இருக்க வேண்டும். எனவே, அதை சுத்தமாகவும் மாசில்லாமலும் வைக்கவும், தூசி அல்லது ஒட்டடை இல்லாமலும் வைக்க வேண்டும் , மேலும்  தேவையற்ற அணிகலன்கள், பொருட்கள் கொண்டு அடைத்து வைப்பதை தவிர்த்திடுங்கள் .

எல்லாவற்றிற்கும் மேலாக, பூஜையறை அமைதியாகவும், அங்கு நீங்கள் நல்ல மனஅமைதியையும்   உணர வேண்டும்.

 

வீட்டின்  பூஜையறையை அலங்கரிக்க செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

 • விளக்கு அல்லது அகல் ,பூஜை செய்யும் நபரின் வலது பக்கமாக வைக்கப்பட வேண்டும்.
 • புதிய மலர்களால்  பூஜையறையை அலங்கரிக்வேண்டும் . சில வாசனை மெழுகுவர்த்திகள்,  சாம்பிராணி அல்லது ஊதுபத்திகளை ஏற்றிவைவைக்க வேண்டும் , இது அந்தப்பகுதியை மேலும் சுத்தப்படுத்தி, தெய்வீக கலையை உருவாக்கும் .
 • இறந்த / மூதாதையர்களின் புகைப்படங்கள், பூஜையறையில்  வைக்கக்கூடாது.
 • பூஜையறையில் ஊதுபத்தி, பூஜை பொருட்கள் மற்றும் புனித நூல்களை வைப்பதற்கு  ஒரு சிறிய அலமாரியை உருவாக்கவேண்டும்.
 • பூஜையறை அருகே மின்சார புள்ளிகள் இருப்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள் ஏனென்றால் பண்டிகை நாட்களில் பூஜையறையை மின் விளக்குகளால் அலங்கரிக்கலாம் .
 • பூஜையறையில் தேவையற்ற பொருட்கள் அல்லது குப்பைக்கூடைகள் வைப்பதை தவிர்க்கவும்.
 • சிலர் படுக்கையறை அல்லது சமையலறையில்  பூஜையறையை வைத்திருக்கிறார்கள். இத்தகைய சந்தர்ப்பங்களில், பூஜையறையை பயன்படுத்தாத சமயங்களில் ,பூஜையறை முன்பு ஒரு திரையைக் கொண்டு மூடவேண்டும் .
 • பூஜையறையின் பின்னால் கழிப்பறையின் சுவர் இருக்கக்கூடாது . மேல் மாடியில் இருக்கும் கழிப்பறையின் கீழும் பூஜையறை  இருக்கக்கூடாது.
 • பூஜையறை அல்லது அது இருக்கும் இடங்களுக்கு, வெள்ளை, பழுப்பு, லாவெண்டர் அல்லது  வெளிர் மஞ்சள் நிறங்கள் பயன்படுத்தவேண்டும் .

 

Was this article useful?
 • 😃 (1)
 • 😐 (1)
 • 😔 (0)

Comments

comments