உங்கள் வீட்டிற்கு எளிதான வாஸ்து மற்றும் ஃபெங் சுய் குறிப்புகள்


பழையன மீண்டும் வருவதையே இப்பொழுது நடைமுறை, அது நாகரீகம், மறைபொருட்கள், இசையோடு நின்றுவிடாமல், பழைய நம்பிக்கைகள், வழக்கங்கள், மரபு போன்றவற்றிற்கும் பொருந்துகிறது. வாஸ்து வழிமுறைகள் மற்றும் ஃபெங் சுய் முறைகள்  பின்பற்றுகின்ற வாழ்க்கை வழிகள் மீண்டும் வழக்கத்திற்கு வந்துவிட்டது, “திருமண முஹூர்த்தம்” முதல் “கிரஹ பிரவேசம்” வரை நாம் செய்யும் அனைத்து நிகழ்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து வளர்கிறோம். உட்புற அலங்காரம் முதல் எந்த திசையில் மரப்பொருட்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்பது வரை, பெரும்பாலானோர், வாஸ்து அல்லது  ஃபெங் சுய் அல்லது 2 முறையையும் உபயோகிக்கின்றனர்.

நாட்டில் 8 பெரிய நகரங்களில் உள்ள வீடுகள் மூலம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வீடு  வீடுவாங்குபவர்கள் 90% க்கும் மேல் வாஸ்து-இணக்கமான வீட்டிற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். வாஸ்துவின் கொள்கைகளுக்கு பொருந்துமாறு வீட்டின் அளவு மற்றும் வடிவமைப்பில் மக்கள்  சமரசம் செய்து கொள்வது ஆச்சரியமளிக்கிறது. இதைப்பற்றி இந்த வலைப்பதிவில் நாம் இன்னும் ஆழமாக விவாதிப்போம்.

முன்னதாக, வாஸ்து சாஸ்திரத்தின் கொள்கைகள் பழமைவாதமாக  இருந்தன, ஆனால் ஃபெங் சுய் நவீன மனநிலையை கொண்டிருந்தது; ஆனால் இப்பொழுது ஜோதிடர்கள் மற்றும் பண்டிதர்கள் இரண்டு கலவைகளையும் பரிந்துரைக்கின்றனர். வாஸ்து முறைப்படி படுக்கைஅறைகளும், சோபாக்களும் அமைந்திருக்கும் வீடுகளை பார்க்கின்றோம், ஃபெங் சுய் முறையில் அலங்கரிக்கப்பட்ட உட்புற முறைகளும், புத்தர் சிலை கதவை நோக்கி இருப்பதை போன்றும், ஜன்னல் ஓரங்களில் காற்று மணி தொங்கவிடுவதும் கூட காண்கிறோம்.இந்த இரண்டு பழங்கால விஞ்ஞானங்களும் எந்த ஒரு பரிஹானைக்கும் ஏதோ ஒரு தீர்வைக் கொண்டுள்ளன, மேலும் , இணையத்தில் கொட்டிக்கிடக்கும் குறிப்புகள், வழிகாட்டிகள் , “எப்படி தொடங்குவது” போன்ற வலைப்பதிவுகளால், நீங்க தொடங்க நினைத்ததிலிருந்து திசைதிருப்பப்படலாம். இங்கே உங்களுக்கு 101 வாஸ்து -ஃபெங் சுய் பரிந்துரைகள், அதாவது எத்திசையில் மரச்சாமான்கள் இருக்க வேண்டும், அலங்கார தேர்வு, கோவில் அமைவிடம், மற்றும் வேலைப்பாடுகள் போன்றவைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 

வழிபாடு இடம்

Vastu Remedies and Feng Shui Tips for Your New Home

வழிபாட்டு இடம் என்பது இந்திய வீடுகளின் ஒருங்கிணைந்த ஒன்று. வாஸ்து -ஃபெங் சுய் போன்றவற்றில் சிலர் நம்பிக்கையின்றி இருக்கலாம், ஆனால் புனிதமான இடமான கோவிலில், ஆற்றல் ஓட்டம் கண்டிப்பாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அது ஒன்றும் கடினமல்ல; சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தால்,நேர்மறை ஆற்றல் உங்களை இல்லம் தேடி வரும். வீட்டிற்கான வாஸ்து சாஸ்த்ரா அடிப்படையில், வழிபாட்டு அறைகள், பிரார்த்தனை மற்றும் தியான அறைகள் ஆகியவை பெரும்பாலும் வீட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்க வேண்டும். மாற்றாக வீட்டின் கிழக்கு அல்லது வட திசையில் இருக்கலாம் .வழிபடும் போது ஒருவர் கிழக்கு நோக்கி பார்க்க வேண்டும், மேலும் சிலையின் உயரம் 6 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். வழிபடும் அறையில் தூங்க கூடாது. பிராத்தனை செய்யும்போது கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருப்பது சிறந்தது. வீட்டில் வழிபடும் முறைகள் வாஸ்து -ஃபெங் சுய் இரண்டிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.

 

படுக்கையறை மற்றும் செல்வம்

வீட்டின் பிரதான படுக்கைஅறை தெற்குதிசையில் அமைந்திருக்க வேண்டும், அது வடக்கு நோக்கி இருந்தால் குடும்பத்தில் அமைதியின்மை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. படுக்கை தலை பகுதி தெற்கு , மேற்கு திசை நோக்கி இருத்தல் அவசியம், வடக்கு நோக்கி எப்பொழுதும் தூங்கக்கூடாது. படுக்கையறையில் உணவு அருந்த கூடாது, அவ்வாறு செய்தால் உடல்நல குறையும். ஒன்றுக்கும் மேற்பட்ட  தளங்களை கொண்ட வீடாயிருப்பின் பிரதான படுக்கையறை இருப்பதிலேயே உயர்ந்த தளத்தில் அமைதல் வேண்டும். மேற்கூரை உடையாமல் ஒரே மாதிரி இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வீடு முழுவதும் ஒரே நேர்மறை ஆற்றல் பரவி இருக்கும், மேலும் ஒருவர் நிலையான மனநிலையுடன் இருக்க முடியும். அடிப்படை வாஸ்துக்களின் கூற்றுப்படி, குழந்தைகளின் படுக்கையறை வடமேற்கு அல்லது மேற்கு திசையில் இருப்பதோடு, அதையொட்டி படிக்கும்அறை தனியாக இருக்கவேண்டும். செல்வம் மற்றும் பணம் ஆகியவை வடக்கு திசையில் வைக்க வேண்டும், அதாவது நீங்கள் பணம் வைத்து எடுக்குமிடம் வடக்கு நோக்கி இருக்க வேண்டும். செல்வதை அதிகரிக்கும் என நம்புவதால், நகைகளை தெற்குநோக்கி வைக்க வேண்டும்.

 

வீட்டின் மற்ற பகுதிகள்

  • சாப்பிடும் அறை சனிபகவான் ஆட்சி செய்யும் மேற்கு நோக்கி இருக்க வேண்டும்,மேலும் அது பசி கடவுளான  பகாசுரன் வழி ஆகும்.
  • வீட்டில் செடி வளர்க்க விரும்பினால், கேக்ட்ஸ், முள் செடிகள் வளர்ப்பதையும்  வடக்கு , கிழக்கு திசைகளில் வளர்ப்பதையும் தவிர்க்கவும்.

Vastu Remedies and Feng Shui Tips for Your New Home

  • வடகிழக்கு, வடமேற்கு , வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு திசைகள் படிக்கும் அறைக்கு சிறந்தவை. இத்திசையில் புதன் மூளை சக்தியையும், வியாழன் ஞானத்தையும் , சூரியன் லட்சியத்தையும், செவ்வாய் படைப்பாற்றலையும் புது யுத்திகளை வளர்க்க உதவும் என்று கூறப்படுகிறது. மாற்றாக படுக்கையறை போலவே படிக்கும் அறையும் அமைந்திருக்கலாம் . படிக்கும் அறையும் , வழிபடும் அறையும் அருகருகில் இருப்பது அல்லது ஒரே அறையாக இருப்பது மிக சிறந்ததாகும்.
  • வீட்டின் பிரதான வாசல் இரண்டு பகுதியாக இருக்க வேண்டும். வெளிப்புறத்திலுள்ள பிரதான வாசல் கதவு வீட்டின் உள்ளே திறக்கப்படக் கூடாது, வீட்டில் உள்ள எந்த கதவும் பிளந்து இருக்கக்கூடாது.
  • வாஸ்து கொள்கைகளுக்கு இணங்க சரியான திசையில் உங்கள் வீட்டின் பல்வேறு அம்சங்களை அமைத்து கொள்ள உதவும் ஒரு கையளவு வழிகாட்டி:
vastu3

 

ஃபெங் சுய் வீடுகளுக்கான உட்புற மற்றும் அலங்கார கட்டமைப்பு 

இதுவரை வாஸ்து மற்றும்  ஃபெங் சுய் முறையை உபயோகிக்காதவர்களுக்கு இது சற்று வித்யாசமாகதான் தெரியும், ஆனால் தற்பொழுது உங்களை விருப்பதுக்கேற்றார் போல் நீங்கள் அவற்றை அமைத்துக்கொள்ளலாம். முன்பெல்லாம் ஒரே ஒரு வடிவிலான குபேர பொம்மை(சிரிக்கும் புத்தர் ) மட்டுமே பரிசாக பரிமாறிக்கொள்ளப்பட்டது, ஆனால் இப்பொழுது அதில் பல வகை வந்துவிட்டது. உதாரணமாக, நீர்வீழ்ச்சி போன்ற அலங்காரம்,தண்ணீர் வெளியே கொட்டாமல்  உள்ளெ கொட்டுவதைபோல் வடிவமைகாட்டுள்ளது , அதேபோல் , ஆரோக்கியம் , செல்வம், மகிழ்ச்சி போன்ற அனைத்தும் வீட்டிற்கும் இருக்கும் என நம்பப்படுகிறது.

ஃபெங் சுய் அடிப்படையில், மூங்கில் செடி அல்லது குபேரர் பொம்மை அல்லது புத்தர் போன்றவற்றை ஏதாவது சுபநிகழ்வின் போது, வேறு யாராவதுனுங்களுக்கு வாங்கி தர வேண்டும், நீங்களே கடைக்கு சென்று வாங்க கூடாது.உங்கள் வீட்டு வாசலில் புத்தர் சிலை இருந்தால், அது உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சியை கொண்டு வரும். படுக்கையறையில் வைக்கப்படும் காற்று மணிகள், சண்டைகளை குறைக்கும்.

Vastu Remedies and Feng Shui Tips for Your New Home

90% க்கும் மேற்பட்ட மக்கள் வீடு வாங்கும்பொழுது வாஸ்து இணக்கமுள்ள வீட்டையே தேர்ந்துஎடுக்கின்றனர் – ஒரு ஆய்வு முடிவு

நாட்டில் 8 பெரிய நகரங்களில் உள்ள வீடுகள் மூலம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வீடு  வீடுவாங்குபவர்கள் 93% க்கும் மேல் வாஸ்து-இணக்கமான வீட்டிற்கு முன்னுரிமை அளிக்கின்றனர் என தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 33 % மக்கள், ஒரு சொத்து வாங்கும்போது  அதன் திசைகள் மிக முக்கியம் என்கின்றனர். வாஸ்து இணைக்க வெட்டிற்காக அலங்காரதிலும் கூட சமரசம் அடைகின்றனர்.

கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கபட்ட அனைத்தையும் பார்க்க : http://bit.ly/1RBrkzZ

Vastu Remedies and Feng Shui Tips for Your New Home

இரண்டு விஞ்ஞானங்களிலும் பல கோட்பாடுகள் மற்றும் போதனைகள் உள்ளன,ஆகையால் எதை தேர்ந்தேடுப்பது என்பது ஒருவருக்கு குழப்பம் அளிக்கலாம். சில வாஸ்து பரிகாரங்களையும், ஃபெங் சுய் குறிப்புகளையும் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலையும் அமைதியும் கொண்டுவர முயற்சி செய்து பாருங்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் நம்புவதைதான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள்!

 

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (1)
  • 😔 (0)

Comments

comments