வாடகை கட்டுப்பாடு சட்டம்: வாடகைக்கு குடியிருப்பவர்கள் மற்றும் நில உரிமையாளர்களின் நலன்களை அது எப்படி பாதுகாக்கிறது


வீடுகளை குத்தகைக்கு விடுவது, வாடகைக் கட்டுப்பாட்டு சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது, ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென்று சொந்த சட்டவழிமுறைகளை கொண்டுள்ளது. அந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் ,நில உரிமையாளர்கள் மற்றும் வாடகைக்கு குடியிருப்பவர்களின் நலன்களை அது எவ்வாறு பாதுகாக்கிறது என்பதை ஆராய்வோம்

ஒரு வீட்டு உரிமையாளர் தன்னுடைய வீட்டை வாடகைக்கு விடுவது  அல்லது குத்தகைதாரர் /வாடகைக்கு குடியிருப்பவர், ஒரு வாடகை வீட்டை ஆக்கிரமிப்பது , அத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திற்குமென்று  சொந்த வாடகை கட்டுப்பாடு சட்டம் உள்ளது. உதாரணத்திற்கு, மகாராஷ்டிராவின் வாடகைக் கட்டுப்பாடு சட்டம் 1999, தில்லியின்  ‘வாடகை கட்டுப்பாட்டுச் சட்டம் 1958’, சென்னையில் ‘தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை கட்டுப்பாடு) சட்டம் 1960 உள்ளது. வாடகை கட்டுப்பாடு சட்டத்தின்  பரந்த யோசனையானது , நில உரிமையாளர் (உரிமைதாரர் ) மற்றும் வாடகைக்கு குடியிருப்பவர்/ குத்தகைதாரர் (உரிமம் பெற்றவர்) ஆகியோருக்கு இடையில் உள்ள தகராறுகளை தீர்த்துவைப்பதேயாகும்.

 

வாடகைக் கட்டுப்பாடு சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

ரமேஷ் நாயர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நாட்டின் மேலாளர் , JLL இந்தியா, “வாடகை கட்டுப்பாட்டு சட்டம்   குடியிருப்போருக்கு பாதுகாப்பு வழங்குகிறது, மேலும் உரிமையாளர் குடியிருப்பவர்ககளை வெளியேற்றும் திறனைக் கட்டுப்படுத்துகிறது. சட்டத்தின் ஓட்டைகளை கொண்டு , நில உரிமையாளர் மற்றும் வீட்டில் குடியிருப்பவர்கள்  ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் ஏமாற்றுவதையும் இது நீக்குகிறது, என்று விளக்குகிறார். வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தின் முக்கிய அம்சங்கள் :

  • சொத்துக்களை வாடகைக்கு எடுப்பதில் பல்வேறு சட்டங்களை அது விதிக்கிறது,  திறனுள்ள குடியிருப்போருக்கு பாதுகாப்பான, நல்ல வாடகை வீடுகளை அடையாளம் காண  உதவுகிறது.
  • இதன் மூலம்  நியாயமான, தரப்படுத்தப்பட்ட வாடகை வரம்புகள் நிர்ணையிக்கப்பட்டுள்ளது,  எந்த சந்தர்ப்பத்திலும் இதற்கு மேல் குடியிருப்போரிடம் வசூலிக்க முடியாது.
  • நில உரிமையாளர்கள்,  குடியிருப்பவர்களிடம் பாகுபாடு காட்டுவது  மற்றும் அவர்களை சட்ட விரோதமாக வெளியேற்றுவது ஆகியவற்றை  எதிர்த்து அவர்களை பாதுகாப்பதற்கு இது திட்டமிட்டுள்ளது.
  • நில உரிமையாளர்களின்  பொறுப்புகள் மற்றும் வாடகைக்கு விடும் வீட்டின்  பராமரிப்பு அடிப்படையில், குடியிருப்பவர்களுக்கு அவர்கள்  ஆற்ற வேண்டிய கடமைகளை வரையறுக்கிறது.
  • இது நில உரிமையாளர்களின் உரிமைகளையும் தெளிவாக வரையறுக்கிறது, குறித்த நேரத்தில் வாடகையை கொடுத்தல்  அல்லது சொத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்தாமல் இருத்தல் போன்ற தங்கள் கடமைகளை நிறைவேற்றாத குடியிருப்பவர்களிடமிருந்து அவர்களை காக்கிறது .

 

 

வாடகை கட்டுப்பாட்டு சட்டம் குடியிருப்பவர்களின் நலன்களை எப்படி பாதுகாக்கிறது

குடியிருப்பில் இருந்து குடியிருப்பவர்களை  போதுமான காரணமின்றி வெளியேற்ற முடியாது என்பதை இந்த சட்டம் உறுதிப்படுத்துகிறது. கட்டாய வெளியேற்றத்தை எதிர்கொள்ளும் குடியிருப்போரை  இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. இதேபோல், இந்த சட்ட அமலின் படி, எந்த நில உரிமையாளரும் எந்தவொரு அத்தியாவசியமான சேவையோ, அத்தியாவசிய வழங்களையோ  வெறுமனேவோ அல்லது போதிய காரணமில்லாமலோ ஒரு குடியிருப்பவர் அனுபவிப்பதைத் தடுக்கவோ அல்லது நிறுத்தவோ முடியாது.

அமீத் ஹரியானி , நிர்வகிக்கும் பங்குதாரர், ஹரியானி & கோ இந்த சட்டத்தின் கீழ் எந்த ஒரு வளாகத்தையும் வாடகை விடுவதற்கு மற்றும் அனுமதி அளிப்பதற்கு  அல்லது விடுப்பு ஒப்பந்தம் பதிவுசெய்வதற்கு , நில உரிமையாளர் முழு பொறுப்பேற்க வேண்டும் . நில உரிமையாளர், குடியிருப்பவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை பதிவு செய்யாவிட்டால்,வாடகை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குடியிருப்பவரின் வாதத்தில் ஏற்கப்படும்,இல்லையென்றால் இந்த வாதத்தை நில உரிமையாளர் நிரூபிக்கவேண்டும்  .இந்த சட்டப்படி , குடியிருப்பவர்கள் செலுத்தும் அனைத்து கட்டணங்களுக்கும் நில உரிமையாளர் உரிய எழுதப்பட்ட ரசீது வழங்க வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது .ஒரு குடியிருப்பவர் இறந்துவிட்டால், நில உரிமையாளர் அந்த குடும்ப உறுப்பினரின் பெயரில் ரசீது வழங்க வேண்டும்(சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி). நில உரிமையாளர், எழுதப்பட்ட ரசீது வழங்காத  பட்சத்தில், அது ஒரு தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது”, என்று விவரித்தார் .

 

வாடகை கட்டுப்பாட்டு சட்டம் எப்படி நில உரிமையாளர்களின் நலன்களை பாதுகாக்கிறது

இந்த சட்டத்தின் கீழ், நில உரிமையாளர் தங்கள் நலனுக்கான தேவைகளுக்காக வளாகம்  தேவைப்பட்டால், தங்கள் வாடகைக்குரிய வளாகத்தின் உரிமையை மீட்டெடுக்க முடியும், என்பதை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதேபோல், ஒரு  குடியிருப்பவருக்கு மாற்று குடியிருப்பு கிடைக்கின்ற நிலையில், ஒரு உரிமையாளர் அவர்களது உரிமையை நடைமுறைப்படுத்தலாம் மற்றும் வாடகை வளாகத்தை மீட்கவும் முடியும் என்று சட்டம் கூறுகிறது.

“பெரும்பாலும் வாடகைக்கு விடப்படும் வளாகங்கள் பழையவையாக  மற்றும் பாழடைந்த நிலையில் இருக்கலாம்.எனவே இந்த சட்டம், நில உரிமையாளர்கள் தங்கள் உரிமைகளை நிறைவேற்றவும், இந்த கட்டிடங்களின் புனரமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ளவும், மேலும்  புதிய கட்டடங்களை கட்டவும் அனுமதிக்கின்றது “என்று ஹரியானி கூறுகிறார் .

 

வாடகைக் கட்டுப்பாட்டு சட்டத்தைப் பயன்படுத்த முடியாத சந்தர்ப்பங்கள்

வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது எந்தவொருமாநில அல்லது மத்திய சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நிறுவனங்கள்  அல்லது வெளிநாட்டு பணிகள், பன்னாட்டு நிறுவனங்கள், சர்வதேச முகவர் நிலையங்கள் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி அல்லது துணை அனுமதி அளித்த  வளாகங்களுக்கு, இச்சட்டத்தின் பயன்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது .ரூபாய் ஒரு கோடி அல்லது அதற்கு மேல், பங்கு மூலதனம் வழங்கப்பட்ட  தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்காக வழங்கிய வளாகத்திற்கு இந்த சட்டம் பொருந்தாது.

 

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (0)
  • 😔 (0)

Comments

comments