மனைவியின் பெயரில் ஒரு வீட்டை வாங்குவதால் ஏற்படும் நன்மைகள்


பெண்ணின் பெயரில் சொத்துக்களை வாங்குதலை பல மாநிலங்கள் ஊக்குவிக்கின்றனர் , ஒரு பெண்ணின் பெயரில் ஒரு சொத்து பதிவு செய்வது ஏன் நிதி அறிவு என்பதை ஆராய்வோம்

ஒரு பெண்ணின் பெயரில், சொத்துக்கள் வாங்குவதால் பல நன்மைகள் உள்ளன,  தனி உரிமையாளராக அல்லது ஒரு கூட்டு உரிமையாளராக அரசு தரப்பிலும் மற்றும் வங்கிகளிலும் பல சலுகைகளை வழங்குகின்றன.

“வீட்டை வாங்க விரும்புகின்றவா் அந்த வீடு பெண்ணின் பெயர் வாங்கப்பட்டால் வரி விலக்கு உட்பட சில நன்மைகளைப் பெறலாம்.இந்த வாய்ப்புகள் ரியாலிட்டி துறையில் நிறைய பெண் உரிமையாளர்களை ஈர்க்கின்றன “என அசோக் மோகனானி, சி.எம்.டி, ஏக்டா வேர்ல்ட் கூறுகிறார். பெண்கள் தங்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்ய ஊக்குவித்தல்,மேலும்  பெண்களின் அதிகாரம் அதிகரிக்கிறது, என்று அவர் சோ்த்துக் கொண்டாா்.

 

வரி நன்மைகள்

மனைவியின் பெயரில் வீடு வாங்குவதால்  வெளிப்படையான வரி சலுகைகள் சிலவற்றில், வீடு சுயமாக ஆக்கிரமித்திருந்தால், ஒவ்வொரு நிதியாண்டிற்கும் ரூ .1.5 லட்சம் வரை வட்டிக்கு கூடுதலான வரி விலக்கு அளிக்கப்படுமென வல்லுநர்கள் விளக்குகிறார்கள்.ஒரு கணவன், மனைவி ஆகியோர் சொத்துக்களின் கூட்டு உரிமையாளர்களாக இருந்தால், மனைவியின் தனி வருமான ஆதாரம் இருந்தால், அவர்கள் இருவரும் வரி விலக்குகளை தனித்தனியாகக் கோரலாம்.வரி நன்மை ஒவ்வொரு இணை உரிமையாளரின் உரிமையாளர் பங்கீடும் சார்ந்தது

 

ஸ்டாம்ப் வரி கட்டணங்கள் மீது தள்ளுபடி

வட இந்தியாவில் உள்ள பல மாநில அரசுகள் தற்போது ஸ்டாம்ப் வரியில் ஒரு பகுதியளவு தள்ளுபடி அளிக்கின்றன, சொத்து வாங்குபவர்கள் தனி உரிமையாளராக  அல்லது ஒரு கூட்டு உரிமையாளராக பெண்ணின் பெயரில் சொத்துக்களை பதிவு செய்யலாம்.

“ஒரு பெண்ணின் பெயரில் சொத்து இருந்தால், நீங்கள் ஸ்டாம்ப் வரியில் 1% -2% சேமிக்க முடியும்.டெல்லியில், ஸ்டாம்ப் வரி விலை விகிதம் ஒப்பிட்டு பாா்க்கும் போது பெண்களுக்கு 4% , இதுவே ஆண்கள் 6% ஆகும்.மேலும், நீங்கள் சில நிதி பின்னடைவுகளைச் சந்தித்து சில கடன்களை திருப்பிச் செலுத்துவதன் மூலம், உங்கள் மனைவியின் பெயரில் வைத்திருக்கும் சொத்து உங்கள் இழப்பின் கீழ் வராது , “ரஹிஜா ஹோம்ஸ் பில்டர்ஸ் & டெவெலப்பர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுசில் ரஹீ கூறுகிறார்.

 

பெண்கள் Vs ஆண்களுக்கான ஸ்டாம்ப் வரி  கட்டணம்

மாநிலம் / யூனியன்பெண்களுக்காகஆண்களுக்காக
டெல்லி4%6%
அரியானாகிராமப்புறங்களில் 4% மற்றும் நகர்ப்புறங்களில் 6%கிராமப்புறங்களில் 6% மற்றும் நகர்ப்புறங்களில் 8%
ராஜஸ்தான்4%*5%

* சாதாரண விகிதத்தில் 1% தள்ளுபடி

 

வீட்டுக் கடன் மீது வட்டி விகிதங்களில் தள்ளுபடி

எஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் எச்.டி.எஃப்.சி. வங்கி போன்ற பல வங்கிகள், கடன் பெறும் பெண்களுக்கு வீட்டுக் கடன்களில் தள்ளுபடி வழங்குகின்றன.கடன் பெறும் பெண்களுக்கு வட்டி விகிதங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

 

வீட்டு கடன் வட்டி விகிதம் (மிதத்தல்) -கடன் பெறும் பெண்கள்  Vs மற்றவர்கள்

வங்கிகடன் பெறும் பெண்களுக்கு வட்டி விகிதம் (சதவீதம், வருடத்திற்கு)மற்றவர்களுக்கான வட்டி விகிதம் (சதவீதம், வருடத்திற்கு)
எஸ்பிஐ8.45-8.958.5-9
ஐசிஐசிஐ வங்கி8.55-98.6-9.05
எச்.டி.எஃப்.சி. லிமிடெட்8.5-9.158.55-9.2

குறிப்பு: ஜூன் 20, 2018 ஆம் ஆண்டிற்கான மதிப்பீடு (கடன் தொகை  ஒரு கோடி ரூபாய் குறைவாக)

 

மனைவியின் பெயரில் ஒரு வீட்டை வாங்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

ஒரு மனைவியின் பெயரோ அல்லது இணை உரிமையாளரோ ஒரு வீட்டை வாங்குவது நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.இருப்பினும், மனைவி வரிச் சலுகைகளை அனுபவிக்க   தனித்தன்மை மற்றும் உண்மையான வருமான வரி ஆதாரம் இருந்தால் மட்டுமே கிடைக்கும்.மேலும், சொத்து மீது எந்த சட்டரீதியான விவாதமும் இருந்தால், கணவனும் மனைவியும் இருவரும் சோ்ந்து இந்த வழக்கில் ஈடுபட முடியும்.எனவே, வீட்டு வாங்குவோர் இறுதி முடிவு எடுப்பதற்கு முன், அனைத்து சாத்தியக்கூறுகளையும் மதிப்பீடு செய்ய வேண்டும்.

 

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (1)
  • 😔 (0)

Comments

comments