கார்பெட் ஏரியாவின் வரையறை ஆர்.இ.ஆர்.ஏ-விற்கு பிறகு எப்படி மாறுகிறது

ரியல் எஸ்டேட் சட்டம், டெவலப்பர்கள் ஒவ்வொரு வீட்டின் அலகுகளுக்கும் கட்டட உட்பரப்பின்(கார்பெட் ஏரியாவின்) சரியான சதுர அடிகளை வீடு வாங்குவோருக்கு வெளியிட வேண்டும் என்ற சட்டத்தை கட்டாயமாக்கியுள்ளது. .நாம் கட்டட உட்பரப்பு பகுதியின் வரையறை மற்றும் அது எப்படி வீடு வாங்குவோர் மற்றும் சொத்துகளின் விலைகளில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை தெளிவாக கீழே பார்ப்போம்

ஒரு சொத்தின் பரப்பளவு பெரும்பாலும் மூன்று வெவ்வேறு வழிகளில் கணக்கிடப்படுகிறது அதாவது கார்பெட் ஏரியா, பில்ட் அப் ஏரியா மற்றும் சூப்பர் பில்ட் அப் ஏரியா. எனவே ஒரு சொத்தை நீங்கள் வாங்கும் போது இதைப்பற்றி ஏதும் தெரியாததால் நம்மில் பலர் செலுத்தும் பணத்திற்கு தக்க மதிப்புடைய இடத்தையோ அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒன்றையோ வாங்க முடிவதில்லை. இதில் பெரிய இழப்பீடே நாம் அடைகிறோம். ஆச்சர்யதிற்க்கு இடமின்றி இன்று நுகர்வோர் நீதிமன்றங்களில்  டெவலப்பர்களுக்கு எதிராக ஏமாற்று மோசடி வழக்குகளிலும் அதாவது பிளாட் அளவில் பெரு மோசடி செய்ததற்கான அதிகபட்ச வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ரியல் எஸ்டேட் (ரெகுலேஷன் மற்றும் டெவெலப்மென்ட்) ஆக்ட்,2016 (ஆர்.இ.ஆர்.ஏ)-ன் படி இப்போது வீடு வாங்குவோர் ஒவ்வொருவருக்கும் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் கார்பெட் ஏரியா பற்றி தெளிவாகவும் மேலும் அதன் அடிப்படையிலேயே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் சூப்பர் பில்ட் அப் ஏரியாவைப் பொறுத்து இனி விலை நிர்ணயம் செய்தல் குற்றம் என்ற சட்டத்தை கட்டாயப்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் ஆர்.இ.ஆர்.ஏ தலைவரான கௌதம் சாட்டர்ஜி கூறுகையில்  , “தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து நடப்பு வீட்டு திட்டங்களுக்கும் டெவலப்பர்கள்  தங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளின் அளவுகளை கார்பெட் ஏரியா அடிப்படையிலேயை (அதாவது, நான்கு சுவர்களுக்குள் உள்ள பகுதி)சதுர அடிகளை  வெளியிட வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள கட்டாயம் என்று கூறுகிறார். சமையலறை மற்றும் கழிப்பறை போன்ற நாம் பயன்படுத்தக்கூடிய இடங்கள் இதில் அடங்கும். இந்த நடைமுறை சட்டத்தால் முன்பு இல்லாததை விட தெளிவான புரிதல் ஏற்படும்.

 

ஆர்.இ.ஆர்.ஏ வின்  கீழ் கார்ப்பெட் ஏரியா: அதற்குள் என்னென்ன அடங்குகிறது

கார்பெட் ஏரியா என்பது  உண்மையில் தளப்பரப்பு அல்லது கட்டட உள்ளுறை பரப்பால்  மூடப்பட்ட ஒரு கம்பள விரிப்பு பகுதியாகும். கட்டட உட்பரப்பு பகுதி மற்றும் சுவர் பகுதிகளைச் சேர்ப்பதன் பின் வரும் பகுதி என்பது கட்டடப்பரப்பு அல்லது பில்ட் அப் ஏரியா ஆகும்.  இதில் பொதுவான இடங்களான முகப்பு அறை படிக்கட்டுகள், லிஃப்ட், விளையாட்டு இடம் போன்றவை அடங்கும். சூப்பர் பில்ட் அப் ஏரியாவில் கார்பெட் ஏரியா, பில்ட் அப் ஏரியா, அத்துடன் முழு கட்டிடத்தினால் பயன்படுத்தக்கூடிய பகிர்ந்துகொள்ளும்  இடங்களான மாடிகள், முகப்பறைகள் மற்றும் காட்சியகங்கள் போன்ற பொதுவான பகுதிகளை கொண்டது சூப்பர் கட்டடப்பரப்பு ஆகும்.

ஆர்.இ.ஆர்.ஏ கூற்று படி கார்பெட் ஏரியாவிற்குள் அடுக்குமாடி குடியிருப்புகளில் பயன்படுத்தக்கூடிய இடமே அடங்கும். இதில் வெளிப்புற சுவர்கள், சேவைகளுக்கென ஒதுக்கப்பட்ட பிரிவு, தனிப்பட்ட பால்கனி அல்லது வராண்டாக்கள் பகுதி மற்றும் தனிப்பட்ட திறந்தவெளி மாடிப்பகுதி பகுதி ஆகியவை அடங்காது. ஆனால் குடியிருப்புகளின் நான்கு சுவர்களுக்குள்  உள்ள அல்லது கட்டட உள்ளுறை பரப்பு மட்டுமே அடங்கும்’.

மிக எளிதான வரையறை வேண்டுமெனில் அடுக்குமாடி குடியிருப்புகளின் வெளிப்புற சுவற்றிற்குள் உள்ள அனைத்தும் அனால் பால்கனி, வராண்டா பகுதி, சேவைப்பகுதி மற்றும் மாடிப்பகுதி தவிர்த்து என்று  டிக்பிஜோய் போமிக், ஆர் .ஐ.சி.எஸ் கொள்கை தலைவர், , தென் ஆசியா. கூறுகிறார்”

இப்போது மாடியின் பால்கனி பகுதியும் இதனுள் அடங்காது அது தனிப்பட்ட குடியிருப்பு வீட்டுக்கென்று அமைந்திருந்தாலும் சரியே. லிஃப்ட் அமைந்துள்ள பகுதி மற்றும் மாடிபடிக்கட்டுகள் அமைந்துள்ள முற்பகுதி, சொல்லப்போனால் நீங்கள் வீட்டின் தலைவாசலில் நுழைவதற்கு முன் உள்ள எந்த பகுதியும் கார்பெட் ஏரியாவில் வராது. அதுமட்டுமில்லாமல் தனிப்பட்ட பொதுவான சேவகளைக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள அதாவது சமையலறையிலிருந்து வாயுக்களை வெளியேற்ற ஏற்படுத்தப்பட்டுள்ள பகுதியும் சேராது. எனினும் ஒரு நடைபாதையில் உள்ள அலமாரி பகுதி சேர்க்கப்படும் என்று விவரிக்கிறார்

 

 

கார்பெட் ஏரியாவின் பரப்பளவு கட்டாய வெளியீட்டின் தாக்கம்

சந்தீப் சிங், ஷெல்ட்ரெக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி, பிரிக்  ஈகிள் கம்பெனி கூறுகையில்  “வீடு வாங்குவோர் தற்போது தங்கள் அடுக்கு மாடி குடியிருப்பின் ஃபிளாட்டின் சதுர அடிகளின் உண்மையான அளவீடுகளை  புரிந்து கொள்வார்கள். அதுமட்டுமில்லாமல் எந்த பகுதி பிளாட்டில் உள்ளடங்கும் மற்றும் எந்தெந்த பகுதி வெராண்டா மற்றும் மொட்டை மாடி பகுதியில் அடங்கும் என்றும் தெரிந்து கொள்வார்கள்.  கூடுதலாக டெவலப்பர்களும் இனி தங்கள் வீட்டின் திட்டங்களை கடுமை வாய்ந்த பாதுகாப்பு நடவடிக்கையுடன் சட்டத்திற்குட்பட்டு மேற்கொள்வார்கள். உண்மையான கார்பெட் ஏரியாவின் அளவை சரியான முறையில் வழங்குவதை இது உறுதி செய்கிறது. “

  • பால்கனி, மொட்டை மாடி, வெராண்டா, மலர் படுக்கைகள் மற்றும் பல வெற்றிடங்களை கார்பெட் ஏரியாவின் பரப்பளவுக்குள்  உள்ளடக்கிய டெவெலப்பர்களின் முந்தைய நடைமுறை இப்போது முடிவுக்கு வரும்.
  • சில சந்தர்ப்பங்களில், மூலையில் அமைந்துள்ள  அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது வேறு சில அடுக்குமாடி குடியிருப்புகளில் சாதகமான அல்லது அனுகூலமற்ற நிலைகளில் அமையும்பொழுது கார்பெட் ஏரியா பகுதிகள் பொதுவாக கொஞ்சம் கூடுதலாகவோ அல்லது குறைந்தோ அமையும் அவ்வாறு அதிக கார்பெட் ஏரியா பரப்பளவு கொண்ட சாதகமான நிலையில் இருக்கும் குடியிருப்புகள் எப்பொழுதும் மிக அதிக பிரீமிய விலைக்கு விற்கப்படுகின்றன, கார்பெட் ஏரியா குறைவாக இருக்கும் குடியிருப்புகளுக்கு சலுகை அளிக்க இயலாததால் அது பெரும்பாலும் விடுபட்ட கார்பெட் ஏரியா  சூப்பர் பில்ட் அப் ஏரியாவிற்குள் சேர்க்கப்படுகிறது
  • நல்ல வடிவமைப்பு மற்றும் செயல்திறன் இப்போது முக்கியமானதாகிவிடும்.முன்னதாக, பொதுவான பகுதிகள் அதிகம்   உள்ளடக்கிய ஒரு திறனற்ற வடிவமைப்பு, ஒரு நல்ல வடிவமைப்பிற்க்கான கார்பெட் ஏரியாவைப் போலும் அனால் அது உண்மையில் சூப்பர் பில்ட் அப் ஏரியாவிலேயே சேர்க்கப்படுகிறது மற்றும் அதற்கான விலையிலேயே விற்கப்படுவது தடுக்கப்படும்.

வீடு வாங்குபவரான நிதி ஷர்மா சதுர அடி ஒன்றுக்கு சொத்து விகிதங்கள், நிச்சயமாக உயரும் என்று சுட்டிக் காட்டுகிறார்,மொத்த விலையானது குறைவாக  (சூப்பர் பில்ட் அப் ஏரியாவிற்க்கு எதிராக சேர்க்கப்படுகிறது கார்பெட் ஏரியா அடிப்படையில் வகுக்கப்படுவதால்) உள்ளது. ஆயினும்கூட, இப்போது, நாம் எதைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்று நாம் அறிவோம். நாங்கள் இனி,  700 சதுர அடியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்க்கு பணம் செலுத்தி 500 சதுர அடியில் குடியிருப்பை பெரும் நிலை எங்களுக்கு இனி வராது என்று கூறுகிறார் .

 

கார்பெட் ஏரியா பற்றிய அறிவு வீடு வாங்குபவர்களுக்கு எவ்வாறு உதவி செய்கிறது?

பல திட்டங்களில், மொத்த பகுதியில் சுமார் 30% -35% கணக்குகளே காட்டப்படுகிறது. “ஒரு திட்டத்தின் தளம், வடிவமைப்பு மற்றும் வீட்டின் மனை  பற்றி துல்லியமான தகவல் மட்டுமே, வீடு வாங்கிவோருக்கு ஒரு தெளிவான மற்றும் சாதகமான முடிவுகளை எடுக்க அதிகாரம் கொடுக்கும் என்று நிப்ரந்த் ஷா, இஸ்பிரவா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகிறார்.

இது பெரிய மற்றும் ஒரு பொதுவான அமைப்பு அல்லது கட்டிடத்தின் பகுதி என்று வரும்பொழுது உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்கள் மீதான சொத்து வரி மற்றும் ஒரு சொத்துடன் தொடர்புடைய உரிமைகள் மற்றும் விருப்பங்களை உரிமையாளர்களைப் புரிந்துகொள்வதென்பது எளிதாக இருக்கும்.

சுமேர் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஷா, ஆர்.இ.ஆர்.ஏ வழிகாட்டுதல்கள் படி, ஒரு கட்டுநர்  சரியான கார்பெட் ஏரியாவின் சதுர அடிகளை வெளியிட வேண்டும், அதனால் ஒரு வாடிக்கையாளர் அவர் செலுத்தும் பணத்திற்கு தகுந்தவாறு என்ன சதுர அடிகளில் பெறுகிறார்  என்று தெரியும். இருப்பினும், கட்டுநர்களை கார்பெட் ஏரியாவின் அடிப்படையில் ஒரு பிளாட் விற்பனையை செய்ய வேண்டும் என்ற இந்த சட்டம் கட்டாயமாகாது. “சாய் எஸ்டேட் ஆலோசகர் மற்றும்  இயக்குனர் அமித் வத்வானி, விழிப்புணர்வை உருவாக்க நிறைய முயற்சிகள் தேவை என்று கூறுகிறார்.

“வங்கியாளர்கள், முதலீட்டாளர்கள், டெவலப்பர்கள் மற்றும் தரகர்கள்,ஆர்.இ.ஆர்.ஏ வை கட்டாயம் பின்பற்ற வேண்டும் மற்றும் அதன் பற்றிய  தகவல் பரப்புதலை தொடங்க வேண்டும். அனைத்து மாற்றியமைக்கப்பட்ட வரையறைகளும் ரியல் எஸ்டேட் துறையால் அடிப்படையாக நடைமுறைப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும், இதனால் இறுதி பயனர்களுக்கு தெளிவு மற்றும் நன்மை இருக்கிறது “என்று அவர் முடித்தார்.

 

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (0)
  • 😔 (0)

Recent Podcasts

  • கோடைகாலத்திற்கான உட்புற தாவரங்கள்
  • பிரியங்கா சோப்ராவின் குடும்பம் புனேவில் உள்ள பங்களாவை இணை வாழும் நிறுவனத்திற்கு குத்தகைக்கு எடுத்துள்ளது
  • HDFC கேப்பிட்டலில் இருந்து பிராவிடன்ட் ஹவுசிங் ரூ.1,150 கோடி முதலீட்டைப் பெறுகிறது
  • ஒதுக்கீடு கடிதம், விற்பனை ஒப்பந்தம் பார்க்கிங் விவரங்கள் இருக்க வேண்டும்: மஹாரேரா
  • சுமதுரா குழுமம் பெங்களூருவில் 40 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துகிறது
  • Casagrand சென்னையில் பிரெஞ்சு கருப்பொருள் குடியிருப்பு சமூகத்தை அறிமுகப்படுத்துகிறது