பெறப்படும் வாடகைக்கு கிடைக்கக்கூடிய வரி மற்றும் வரி விலக்குகள்


ஒரு நபருக்கு வருமான வரி சட்டங்கள் சில வரிகளை விதிக்கையில், அவர் வாடகைக்கு விடுத்துள்ள சொத்துகளில் இருந்து வாடகையையும் பெற்றுக்கொள்கிறார் என்றால், வரி செலுத்தும் அவர் அத்தகைய வருமானத்தில் இருந்தும் சில விலக்குகளைப் பெற அனுமதிக்கப்படுகிறார் . நாம் சட்ட விதிகள் என்னவென்று ஆராய்வோம்

பெறப்படும் வாடகைக்கு வரி விதிக்கும் முறை

இந்தியாவின் வருமான வரிச்  சட்டத்தில் குறிப்பிடபட்டுள்ள ‘வீட்டுச் சொத்துகளின் வருமானம்’  என்ற தலைப்பின் கீழ், ஒரு சொத்து உரிமையாளரால் பெறப்படும் வாடகைக்கும்   வரி விதிக்கப்படும் .

அதனால் ,இந்த சட்ட விதியின் கீழ் ,வாடகைக்கு விடப்பட்ட சொத்துகளிலிருந்து பெறப்படும்  வாடகைக்கும் ,வரி விதிக்கப்படும். வாடகைக்கு விடப்பட்டது ஒரு குடியிருப்பு வளாகமோ ,  அதுபோல வணிக வளாகமோ ,எதுவாக இருந்தாலும், அதிலிருந்து பெறப்படும் வாடகைக்கு இந்த விதியின் கீழ் வரிவிதிக்கப்படும் .உங்கள்  தொழிற்சாலை கட்டிடத்தையோ அல்லது அதை சுற்றியுள்ள நிலத்தையோ வாடகைக்கு விட்டால், அதிலிருந்து கிடைக்கும் வாடகை வருமானத்திற்கும்  , இச்சட்டத்தின் கீழ் வரிவிதிக்கப்படும் .

ஒரு சொத்தின் வருடாந்திர மதிப்பின் அடிப்படையில் அதற்கு வரி விதிக்கப்படுகிறது.  ஒரு சொத்திற்காக உண்மையாக பெறப்படும் வாடகையின் அடிப்படையிலோ அல்லது ஒரு சொத்தின்  நியாயமான வாடகை மதிப்பின் அடிப்படையிலோ அல்லது இது இரண்டில் அதிகபட்ச மாக எது உள்ளதோ, அதன் அடிப்படையில்   தான் ஒரு சொத்தின் வருடாந்திர மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது .

எனவே, நீங்கள் ஒரு சொத்தை நியாயமான வாடகை தொகைக்கு வாடகை விட்டிருந்தீர்களானால் , அத்தகைய சொத்தின்  வரி விதிப்புக்காக கருதப்படும் தொகை, சந்தை வாடகை மதிப்பாக இருக்குமேயொழிய நீங்கள் வாங்கும் உண்மையான வாடகைக்கானதாக இருக்காது . இதேபோல, உங்களுடைய சொத்துக்களுக்கு நீங்கள் வாங்குகிற  உண்மையான வாடகை, சந்தை வாடகைக்கும் அதிகமாக இருந்தால், நீங்கள் வாடகையாக பெறும் / பெறக்கூடிய வாடகைக்கு வரி விதிக்கப்படும் . வாங்கப்படும் உண்மையான வாடகை தொகையின் அடிப்படையில் தான்  அந்த வாடகையானது வருமான வரிக்கு உட்படும் , ரசீது அடிப்படையில் அல்ல, என்பதை கவனத்தில் கொள்க.

ஒரு உரிமையாளருக்கு  மட்டுமே, வாடகைக்கான வரி விதிக்கப்படும். எனவே, நீங்கள்  எந்த ஒரு சொத்தையும் கீழ்க்குத்தகைக்கு விட்டால் , அதன் மூலம் நீங்கள் பெரும் தொகைக்கு மற்ற ஆதாரங்களிலிருந்து பெறப்படும்   வருமானமாக கருதப்பட்டு வரி விதிக்கப்படும். ஒரு சொத்தை ஆக்கிரமித்துள்ள ஒருவரால் வாடகைக்கு விடப்பட்ட இடத்திற்கான வாடகை , கூட, இந்த தலைப்பின்கீழ், வரிக்கு உட்பட்டதாகிவிடும்.  இந்த நோக்கத்திற்காக தான் சொத்துரிமை பரவலாக வரையறுக்கப்பட்டுள்ளது , மற்றும் ஒரு ஒப்பந்தத்தின் பகுதியாக நீங்கள் பெற்ற சொத்தாக இருந்தாலும் சரி, அந்த சொத்து சட்டப்பூர்வமாக உங்கள் பெயரில் மாற்றப்படவில்லை என்றாலும் கூட, உங்களுக்கு வரி விதிக்கப்படும் . ஒரு நபர் தன் மனைவிக்கு சொத்தினை பரிசாக கொடுத்த பின்னரும் கூட,அவர்கள் சட்டப்படி பிரிந்து வாழாமல் இருந்தால்  ,அவர் அந்த சொத்தின் உரிமையாளராக கருதப்பட்டு , அந்த சொத்தின் வாடகை தொகையை அவர் பெறாமல் இருந்தாலும் கூட,அவருக்கு அந்த வாடகைக்கான வரி விதிக்கப்படும் ,இதேபோல், சொத்தை ஒரு மைனருக்கு (சிறுவர்களுக்கு) பரிசாக வழங்கினால் கூட, அத்தகைய நன்கொடையை வழங்கும் பெற்றோர் அந்த சொத்துக்களுக்கு தொடர்ந்து வரி செலுத்த வேண்டும்.

 

பெறப்படும் வாடகைத்  தொகைக்கு கிடைக்கும் வரிவிலக்குகள்

பெறப்படும்  மொத்த வாடகையும்  வரிக்கு உட்பட்டது அல்ல.

சொத்திலிருந்து பெறப்படும் /பெறப்பட்ட வாடகைத் தொகையில்,  நீங்கள் நகராட்சிக்கு செலுத்தும் வரி நீங்கலாக மீத தொகைக்கு உங்களுக்கு வரி விதிக்கப்படும். நீங்கள் உண்மையாக  வாங்கும் வாடகை தொகை யின் அடிப்படையில் உங்களின் வரி விதிப்பு மதிப்பிடப்படுகிறது, சில நிபந்தனைகளை பூர்த்திசெய்யும் பொழுது உங்களால் பெறமுடியாமல் போன வாடகை தொகைக்கு வரிவிலக்கு கோர சட்டம் அனுமதிக்கிறது .

மேலே உள்ள இந்த இரண்டு  காரணங்களை கழித்தபிறகு , நீங்கள் பெறும் வருடாந்திர மதிப்பிலிருந்து , பழுதப்பார்ப்பு செலவினைகளை கருத்தில் கொண்டு ,30% வரிவிலக்கு அளிக்கப்படும் .

 

30% வரிச்சலுகையானது,கணக்கிடப்பட்டுள்ள வருடாந்திர காலத்திற்குள் நீங்கள்   மேற்கொண்ட சொத்தின் பழுதுபார்ப்பு அல்லது மறுசீரமைப்பிற்கான எந்தவொரு செலவும் உண்மையாக இல்லாத பட்சத்திலும் கூட வரிச்சலுகை உண்டு, என்பதை நினைவில் கொள்ளவும்.

ஒரு சொத்தை வாங்குவதற்காகவோ, அதன்  கட்டுமானத்திற்காகவோ, பழுது பார்த்தல் / மறுசீரமைப்பதற்க்காகவோ  நீங்கள் பணத்தை கடனாக பெற்றிருந்தால், நீங்க செலுத்தும் வட்டிக்கான வரிச் சலுகையை பெறலாம் . நீங்கள்   யாரோ ஒருவரிடமிருந்துகடன் தொகையை பெற்றிருந்தாலும் பரவாயில்லை , வீட்டுகடனாக பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.தற்பொழுது ,அந்த கடனின் வட்டி தொகைக்கு உச்ச வரம்பு ஏதும் இல்லை ,அதனால்  உங்கள் வாடகை வருமானத்திற்கு எதிராக நீங்கள் வரிச்சலுகையைக் கோரலாம்.

எனினும், 2017-18 க்கான வரவு செலவுத் திட்டத்தில், ‘ வீட்டுச் சொத்துகளிலிருந்து வரும் வருமானத்தில் ‘ கீழ் ஏற்படும் இழப்பிற்காக   2 லட்சம் ரூபாய் வரிச்சலுகையின் உச்சவரம்பாக நிர்ணயிக்க முன்வைத்துள்ளது, இது உங்கள் பிற வருமானங்கலக கருதப்படும் சம்பளம், வணிக வருவாய் அல்லது மூலதன ஆதாயங்கள் ஆகியவற்றிற்கு எதிராக அமைக்கப்படலாம்.  ரூ .2 லட்சத்திற்கு மேலாக ஏற்படும் இழப்பு அடுத்த எட்டு ஆண்டுகளில், முன்னெடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட உள்ளது . இந்த ஏற்பாடு மக்களை மோசமாக பாதிக்கும், ஏனென்றால் , வீட்டுக்கடனில் வீடு வாங்குவோர் ,அந்த வீட்டை வாடகைக்கு விடும்பொழுது , அதன் வாடகை மதிப்பு பொதுவாக மூலதன மதிப்பில் 3% – 4% ஆகும். அதேசமயம், அத்தகைய கடன் மீதான வட்டி விகிதம் 9% ஆகும். வீட்டுக் கடன்கள் பொதுவாக நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதால், இந்த தலைப்பின் கீழ் ஏற்படும் வட்டி  இழப்பு ,பொதுவாக நீண்ட காலம் நீடிக்கும், மேலும் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேலாக அதிகமான வட்டி செலவுகள் நிரந்தரமான இழப்பாக கருதப்படும் .

நீங்கள் குடியிருக்கக்கூடிய வீட்டையும் சேர்த்து , உங்களிடம் வீட்டு கடனில் வாங்கப்பட்ட ஒன்றுக்கும்  மேற்பட்ட வீடுகள் இருந்தால், நீங்கள் கடுமையாக பாதிக்கப்படுவீர்கள், ஏனெனில் அடுத்த ஆண்டு முதல் உங்கள் வரி  விலக்கு அதிகரிக்கும்.

( இதன் ஆசிரியர் 35 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, வரி மற்றும் வீட்டு நிதி நிபுணர்)

 

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (0)
  • 😔 (0)

Comments

comments