நீங்கள் பல வீடுகளை வைத்திருந்தால் உங்களுக்கு வீட்டு கடன் மற்றும் வரி சலுகைகள்


ஒரு நபரால் பல வீட்டுக் கடன்களைப் பெறமுடியும் என்றாலும், இரண்டாவது வீட்டின் கடனுக்கான வட்டி மீதான வரி நன்மைகள், முதல் வீட்டின் வீட்டுக்கடன் வட்டியை விட வேறுபட்டிருக்கும்

ஒருத்தர் எவ்வளவு சொத்துக்கள் வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாம், ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுக்கடன் மட்டும் வாங்க முடியாது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மை இல்லை .நீங்கள் சொந்தமாக வைத்திருக்கும் சொத்துக்களின் எண்ணிக்கைக்கு  வரம்பு இல்லாதது போல , நீங்கள் சொந்தமாக வைத்திருக்கும் வீடுகளின் எண்ணிக்கையிளும் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை, அந்த வீடுகளுக்குரிய வீட்டு கடனையும் எடுத்துக் கொள்ளலாம் மற்றும் வரி சலுகைகளும் பெறலாம் . உங்களின் வருவாய் மற்றும் கடனைச் செலுத்துவதற்கான திறனைப் பொறுத்து,  நீங்கள் எடுத்துக் கொள்ளும் வீட்டுக் கடன் தொகைக்கு , உங்களின் எல்லா சொத்துக்களும் ஒன்றாக கணக்கிடப்படும். 

 

வட்டி செலுத்துதலின் மீதுள்ள வரி ஆதாயம்

வாங்கும் கடனுக்கான வட்டியில், ஒரு சொத்தின்  கொள்முதல், கட்டுமானம், பழுது பார்த்தல் அல்லது மறுசீரமைத்தல் ஆகியவற்றிற்காக பெறப்பட்ட கடன் தொகையின் வட்டியில் ,வட்டிவிகிதத்தை குறைப்பதற்கு 24b  பிரிவின் கீழ், நீங்கள் உரிமை கோரலாம். நீங்கள் குடியிருக்கும் ஒரே ஒரு குடியிருப்பு வீட்டை மட்டுமே சொத்தாக வைத்திருக்கிறீர்கள் என்றால் , அந்த சொத்துக்கான கடன் மீதுள்ள  வட்டியின் திருப்பிச் செலுத்துதலின் மீது அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 2 இலட்சம் வரை குறைக்கலாம் என்று வரையறுக்கப்படுகிறது .இருப்பினும், 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு கடன் வாங்கப்பட்ட  ,அந்த சொத்தின் கட்டுமானமானது ,அடுத்த ஐந்து நிதியாண்டுகளுக்குக்குள் முடியவில்லையென்றால், வீ ட்டு கடன் வட்டியில் வழங்கப்படும் கழிவானது ரூபாய் 30,000 வரை மட்டுமே என்று வரையறுக்கப்பட்டுள்ளது .

உங்களுக்கு சொந்தமான சொத்து அல்லது சொத்துக்களை நீங்கள்  வாடகைக்கு விட்டிருந்தால், அத்தகைய சொத்துக்களை பொறுத்தவரை, நீங்கள் வாங்கும் வாடகைக்கு எந்தவித மேல் உச்சவரம்பும்  இல்லாமல், நீங்கள் முழு வட்டிகுறைப்புக்கு உரிமை கோரலாம்.இருப்பினும், நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டைக் சொந்தமாக கொண்டிருப்பின் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை நீங்கள் ஆக்கிரமித்துள்ளீர்கள் என்றால், நீங்கள் சுயமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு சொத்து ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும், மற்ற சொத்துகள் / சொத்துக்களை  வாடகைக்கு விட்டிருக்கிறீர்கள் என்றால் , அது ஒரு உத்தேச வாடகை வருமானமாக கருதப்பட்டு ,அதற்கேற்றாற்போல் வரி விதிக்கப்பட வேண்டும் .எனவே, அத்தகைய சொத்துகள், வாடகைக்கு விடப்பட்டதக கருதப்பட்டு , அந்த வாடகைக்கு விடப்பட்ட சொத்திற்காக வாங்கிய கடனில்,முழு வட்டிக்கும் நீங்கள் வரிச் சலுகைகள் கோரலாம் .

இந்த வட்டி குறைப்பானது உங்களுக்கு சொந்தமான குடியிருப்பு அல்லது வணிக சொத்துக்களுக்கு மட்டுமே கிடைக்கும் .பழுது பார்த்தல்,  கட்டுமானமக் கொள்முதல், புனரமைப்பு போன்றவற்றிற்காக ஒரு வங்கி அல்லது வீட்டுக்கடன் தரும் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட கடனாகவோ, அல்லது நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து பெறப்பட்ட கடனாக வேறு எதுவாக இருந்தாலும் இந்த வட்டிக்குறைப்பு பொருந்தும்.

கட்டுமானம் நிறைவடைந்து, வீட்டைக் கைப்பற்றும் ஆண்டிலிருந்து தொடங்கி ,கட்டுமானக் காலத்தில்   செலுத்தப்படும் எந்தவொரு வட்டியையும் மாற்றியமைக்கலாம், மேலும் அதை ஐந்து சம தவணைகளாக கோரப்படலாம் .

திருத்தப்பட்ட சட்டத்தின் படி  ஏப்ரல் 1, 2017, மொத்த இழப்பை “இன்கம்  பிராம் ஹவுஸ்” கீழ் ஒரு வருடத்திற்கு 2 லட்சம் மேல் செலுத்த முடியாது. மீதம் உள்ள செலுத்தப்படவேண்டிய தொகையை   அடுத்த வருடத்திற்கு எடுத்து செல்லலாம் , அதை 8 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்

 

மொத்த கடன் தொகை திருப்பிச் செலுத்துவதன் மீதான வரி நன்மைகள்

பிரிவு 80C இன் படி,குறிப்பிட்ட நிறுவனங்களிலிருந்து எடுக்கப்பட்ட வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு ரூ 1.5 லட்சம் வரை நீங்கள் கோரலாம்.ஒரு குடியிருப்பு வீட்டு பதிவு மற்றும் முத்திரை கட்டணம் உட்பட.ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகளுக்கு வீட்டுக் கடன்களை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், கழித்தல் தொகை 1.5 இலட்சம் வரை மட்டுமே கட்டுப்படுத்தப்படும்.

வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பு ,ஆயுள் காப்பீட்டு பிரீமியம்,கல்விக்  கட்டணம்,பிபிஎப் பங்களிப்பு ,என் எஸ் சி ,இ எல் ஸ் எஸ் எஸ் ,போன்றவை ஒட்டு மொத்த வருமானத்தில் வரிக்குறைப்புக்கு ஏதுவாக கருதப்படுகிறது .

நீங்கள் வீட்டின் உடைமை எடுத்துக்கொள்வதற்கு முன், மொத்த வீட்டுக் கடன்தொகையை திருப்பிச் செலுத்த ஆரம்பித்திருந்தால், இந்த நன்மை உங்களுக்கு கிடைக்காது . உங்கள் நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் வாங்கப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்துதல் , இந்த வட்டி குறைத்தலுக்கு  தகுதியற்றது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

(இதன் ஆசிரியர் 35 ஆண்டுகள் அனுபவமிக்க ,  வரி மற்றும் வீட்டு நிதி நிபுணர்)

 

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (0)
  • 😔 (0)

Comments

comments