7 குதிரைகள் ஓவியம் (7 ஹார்ஸஸ் பெயிண்டிங்) வாஸ்து: திசை மற்றும் அது வீட்டில் அமைக்கப்படவேண்டிய இடம் குறித்த குறிப்புக்கள்

செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும் தன்மை கொண்டது எனக் கருதப்படும் 7 குதிரைகள் ஓவியத்தை வீடு அல்லது அலுவலகத்தில் வைக்கும் இடத்திற்கான சில வாஸ்து சாஸ்திரக் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

வீட்டின் அலங்காரத்தை மேம்படுத்துவதில் ஓவியங்கள் பெரிதும் பங்கு வகிக்கின்றன. வாஸ்து சாஸ்திரத்தின் படி சில ஓவியங்களை சரியான திசையில் வைக்கும்போது, அவை நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டு விளங்குவதாக உள்ளது. பழமையான வாஸ்து சாஸ்திரத்தில் குதிரைகள் அடங்கிய படங்கள், ஓவியங்கள் அதிக முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது.  குதிரைகளில் முக்கியமாக பாய்ந்து செல்லும் குதிரைகளைக் கொண்ட படங்கள் வலிமை, வெற்றி, அமைதி மற்றும் முன்னேற்றத்தை குறிப்பதாக உள்ளது. எனவே, ஏழு குதிரைகள் கொண்ட ஓவியங்கள் (7 horses painting) அல்லது அதேபோன்ற படங்களை வீடு அல்லது அலுவலகத்தில் வைப்பது ஒருவர் வாழ்வில் நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதற்கு சிறந்த வழியாகும்.

Table of Contents

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீடு அல்லது அலுவலகத்தில் 7 குதிரைகள் அடங்கிய ஓவியத்தை மாட்டுவதற்கு ஏற்ற சிறந்த இடமாக வீட்டின் தெற்கு நோக்கிய சுவர் உள்ளது.

 

ஏழு குதிரைகள் படங்களின் வாஸ்து முக்கியத்துவம்

வாஸ்து சாஸ்திரத்தில் புனிதமாக கருதக் கூடிய விலங்குகளில் குதிரைகளும் ஒன்று. அவை உறுதி, தைரியம், சக்தி, வலிமை மற்றும் நேர்மையை குறிப்பதாக உள்ளது. ஏழு குதிரைகள் அடங்கிய ஓவியத்தை வீட்டில் மாட்டி வைப்பதன் மூலம் ஒரு வாழ்வில் நேர்மறை ஆற்றகள் பல விதங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. பாய்ந்து ஓடும் குதிரைகளின் படம் வேகம் மற்றும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான குறிப்பாக உள்ளது. மேலும், ஏழு என்ற எண் அனுகூலமான எண்ணாக கருதப்படுகிறது. எனவே, வாஸ்து சாஸ்திரத்தின் படி ஏழு குதிரைகள் அடங்கிய ஓவியத்தை வீட்டில் சரியான திசையில் மாட்டி வைப்பதன் மூலம் ஒருவரது முயற்சியை ஊக்குவிக்கவும், அதற்கான சாதகமான பலன்களை கிடைக்கவும் இது பெரிதும் துணை புரிகிறது.

இதையும் வாசிக்க: நேர்மறை விளைவுகளைத் தரும் சிரிக்கும் புத்தர் சிலையை எப்படி வைப்பது?

ஒருவர் தனது வியாபாரத்தை மேம்படுத்துவதாக இருந்தாலும் அல்லது புது வியாபாரம் தொடங்குவதாக இருந்தாலும் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய இந்த வகை ஓவியங்களை அவர்கள் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் மாட்டி வைக்கலாம். பொருளாதாரத்தில் ஸ்திரத் தன்மை அல்லது தொழில் முன்னேற்றம் ஆகியவற்றில் நல்ல விளைவை ஏற்படுத்த ஒருவர் தனது வீட்டில் வாஸ்து சாஸ்திரத்தின் படி ஏழு குதிரை படத்தை மாட்டி வைக்கலாம்.

இந்த மங்களகரமான ஓவியம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றுகிறது. ஆகவேதான் வீட்டை அலங்கரிப்பதற்கு ஏற்ற சிறந்த அலங்காரப் பொருளாக இந்த ஏழு குதிரைகள் ஓவியத்தை வாஸ்து பரிந்துரைக்கிறது. மேலும், இது ஒருவரது பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தொழில் முன்னேற்றத்தில் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கக் கூடியதாகவும் உள்ளது.

இதையும் வாசிக்க: வாஸ்து திசைகளின்படி வீட்டில் யானை உருவங்களை எந்த திசையில் வைக்க வேண்டும்?

 

வீட்டில் ஏழு குதிரை படங்கள் எந்த திசையில் மாட்ட வேண்டும்?

வீட்டினுள் நேர்மறை அதிர்வுகளை ஈர்த்து அதிர்ஷ்டம் தரக்கூடிய ஏழு குதிரை ஓவியத்தை லிவிங் ரூமின் சுவற்றில் மாட்டி அலங்கரிக்கலாம். இந்த ஏழு குதிரைகள் படத்தை ஒரு சரியான திசையில் மாட்டி வைத்தால் மட்டுமே அதற்கு உண்டான சரியான பலனை நாம் பெற முடியும் என்பதை புரிந்து கொள்வது மிகவும் அவசியமானது. வீடு அல்லது அலுவலகத்தில் ஏழு குதிரைகள் ஓவியத்தை மாட்டுவதற்கான சிறந்த திசையாக தெற்கு நோக்கிய சுவர் உள்ளது. இந்த திசையானது ஒருவருக்கு வெற்றி மற்றும் புகழ் ஆகியவற்றை ஈட்டித் தரவல்லது. அத்துடன், ஓவியத்தை இந்த திசையில் வைப்பதன் மூலம் இது அதிக பயனுள்ள விளைவுகளை கொடுக்கக் கூடியதாக உள்ளது. ஒருவேளை இந்த திசையில் ஓவியத்தை மாட்டுவதற்கான வாய்ப்பு இல்லை எனில், கிழக்கு அல்லது வடக்கு நோக்கிய சுவற்றில் ஓவியத்தை மாட்டலாம். வடக்கு திசையானது செல்வச் செழிப்பு மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான திசையாகும். எனவே 7 குதிரைகள் படத்தை வடக்கு பார்த்த சுவற்றில் மாட்டி வைப்பதன் மூலம் அது குடும்பத்திற்கு ஐஸ்வர்யங்களை வழங்கக் கூடியதாக இருக்கும். கிழக்கு திசையானது முன்னேற்றத்திற்கான திசையாகும். எனவே, தொழிலில் மென்மேலும் முன்னேற்றத்தை அடைய விரும்பும் ஒருவர் கிழக்கு திசை நோக்கிய சுவற்றில் இந்த ஓவியத்தை மாட்டுவது சிறந்தது.

 

வாஸ்துப்படி ஏழு குதிரைகள் படத்தை மாட்டும் இடம்

7 horses painting direction in home and Vastu Shastra tips

இதையும் வாசிக்க: அலுவலக வேலையில் ஏற்றம் பெறுவதற்கான வாஸ்து குறிப்புகள்

 

நாம் படுக்கையறையில் 7 குதிரை படத்தை மாட்டலாமா?

வீட்டினுள் பலவிதமான அழகானப் பொருட்களை வைத்து அலங்கரிக்கும்போது, குறிப்பாக வாஸ்து விதிகளின் படி அலங்கரிக்கும்போது, செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி வாஸ்துவில் கூறியுள்ள குறிப்புகளை நினைவில் கொள்ள வேண்டும். அதிர்ஷ்டம் எனக் கருதப்படும் 7 குதிரைகள் ஓவியத்திற்கும் இதே விதி பொருந்தும். ஏனெனில் இந்த ஓவியத்தின் மூலம் நாம் நேர்மறை விளைவுகளைப் பெற விரும்புவதால், அவற்றை வாஸ்து விதிகளின் அடிப்படையில் வைப்பது சிறந்தது.

வாஸ்து சாஸ்திரத்தில் ஏழு குதிரைகள் ஓவியத்தை படுக்கையறை, கோயில் அல்லது பூஜை அறை, படிக்கும் அறை அல்லது வாஷ்ரூமை நோக்கிய சுவற்றில் மாட்டுவது அல்லது பிரதான வாயிலில் மாட்டுவது ஆகியவை பரிந்துரைக்கப்படவில்லை. ஏழு குதிரைகளின் படத்தை லிவிங் ரூம் மற்றும் டைனிங் ஹாலில் மாட்டி வைக்கலாம்.

இதையும் வாசிக்க: படுக்கையறைக்கான வாஸ்து குறிப்புகள்

 

வீட்டில் ஏழு குதிரை ஓவியங்களை எங்கு மாட்டுவது?

பாய்ந்தோடும் ஏழு குதிரை ஓவியங்களை மாட்டுவதற்கான சிறந்த இடம், வீட்டின் லிவிங் ரூம் ஆகும். அந்த ஓவியத்தை வாஸ்து பரிந்துரைத்துள்ள திசைகளில் மட்டுமே மாட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்க. பிரதான நுழைவாயில் அல்லது ஜன்னல் அருகே மாட்டுவதை தவிர்க்கவும்.

7 குதிரைகள் (7 ஹார்ஸஸ்) படம் அல்லது ஓவியத்தை படுக்கை அரை, படிப்பறை, பூஜை அறை
அல்லது முன்வாயில் கதவுக்கு மேல்புறமாக வைக்காதீர்கள்.  7 குதிரைகள் (7 ஹார்ஸஸ்)
ஓவியத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குளியல் அறை அல்லது கழிப்பறைக்கு
அருகே வைக்காதீர்கள்

 

அலுவலகத்தில் ஏழு குதிரை படத்தை எங்கு வைப்பது?

பாய்ந்து ஓடும் ஏழு குதிரைகளின் சுவரோவியத்தை அலுவலகம் அல்லது வணிக வளாகங்களில் மாட்டி வைப்பதால் அதிர்ஷ்டம் மற்றும் நேர்மறை ஆற்றல் ஈர்க்கப்படுகிறது என நம்பப்படுகிறது. வியாபாரத்தில் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரும்  ஏழு குதிரைகளின் ஓவியத்தை தங்கள் அலுவலகத்தின் தெற்கு நோக்கிய சுவற்றில் மாட்டி வைப்பது சிறந்தது. வாஸ்துப்படி தெற்கு திசையானது வெற்றி மற்றும் புகழ் வரவை குறிப்பதாக உள்ளது. இந்த திசையில் வைப்பதற்கான வாய்ப்பு இல்லை எனில், கிழக்கு நோக்கிய சுவற்றில் ஓவியத்தை மாட்டலாம்.

அதிர்ஷ்டம் தரக்கூடிய இந்த ஏழு குதிரைகள் ஓவியத்தை வாஸ்துப்படி வரவேற்பு அறையிலும் மாட்டி வைக்கலாம். இருப்பினும், ஏழு குதிரைகள் ஓவியத்தை அலுவலகம் அல்லது வணிக வளாகத்தில் மாட்டும்போது அதற்கென உள்ள வாஸ்து குறிப்புகளை நினைவில் கொள்ள வேண்டும். ஓவியம் அலுவலகத்தின் உட்புறத்தை நோக்கியவாறு இருக்க வேண்டும்; வெளிப்புறத்தை நோக்கியவாறு இருக்கக் கூடாது.

இதையும் வாசிக்க: வீட்டில் நல்ல அதிர்ஷ்டத்தை தரவல்ல ஃபெங் சூயி ஆமை சிலைகளை அலங்கரிப்பதற்கான குறிப்புகள்

 

ஏழு குதிரைகள் படத்தை வைக்க வாஸ்து குறிப்புகள்

  • வாஸ்துவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள திசையில் ஓடும் ஏழு குதிரைகள் படத்தை வைக்கும்போது, படத்தினுள் குதிரைகள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அல்லது சமச்சீராக இடையில் எந்த தடையும் இல்லாமல் ஓடுவது போன்று இருக்க வேண்டும். அவை தண்ணீரில் ஓடாமல் திறந்தவெளியில் ஓடுவது போன்று காட்டப்பட்டிருக்க வேண்டும்.
  • ஒற்றைப்படை எண்ணிக்கையிலாக ஏழு குதிரைகள் ஓடுவது போன்ற படத்தை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
  • ஒரே ஒரு குதிரை ஓடுவது போன்ற படமோ அல்லது ஓவியமோ வாஸ்துவில் பரிந்துரைக்கப்படவில்லை.
  • குதிரைகள் முழுமையாக வரையப்பட்டிருந்த நிலையில் ஒரு முழுமை அடைந்த ஓவியத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • வாஸ்து படி ஏழு குதிரைகள் படத்தை மாட்டும் சுவர் அல்லது அதன் பின்னணி நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும். எனவே, அது சுத்தமானதாகவும் மந்தமானதாக இல்லாமல் இருப்பதும் அவசியம்.
  • பாய்ந்து ஓடும் ஏழு குதிரைகள் ஓவியம் என்பது வாஸ்துபடி நேர்மறை உணர்வையும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்க வேண்டும். ஒருவேளை அந்த ஓவியம் நேர்மறை எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை எனில், அதனை பயன்படுத்த வேண்டாம்.
  • சிவப்பு நிற பின்னணியுடன் கூடிய ஏழு குதிரைகளின் ஓவியம் செவ்வாய்க் கிரகத்தின் தாக்கத்தை கொண்டது. இது ஒருவரின் சுயமரியாதையை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
  • நீல நிற பின்னணியுடன் கூடிய ஏழு குதிரைகளின் ஓவியம் சனி கிரகத்தை குறிக்கிறது. மேலும், இது வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கு வழி வருகிறது.
  • ஓவியத்தின் அளவானது அறையின் அளவுக்கு ஏற்ற விகிதத்தில் இருக்குமாறு தேர்ந்தெடுக்க வேண்டும். பெரிய மற்றும் விசாலமான வீட்டிற்கு சிறிய அளவில் ஓவியத்தை தேர்ந்தெடுப்பதை தவிர்க்கவும்.
  • குதிரை படம் அல்லது ஓவியத்திற்கு ஏற்ற சரியான ஃப்ரேமாக வலிமையான மற்றும் வாஸ்து ஃப்ரெண்ட்லியான, வாஸ்துவுக்கு ஏற்றதான கேன்வாஸ் மற்றும் மரத்தாலான ஃப்ரேம்களை பயன்படுத்த வாஸ்து பரிந்துரைக்கிறது. பேப்பரில் வரையப்பட்ட குதிரை ஓவியம் அல்லது பாய்ந்தோடும் குதிரை வால்பேப்பர் போன்றவற்றை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.

 

வண்ணங்கள் அடிப்படையில் ஏழு குதிரைகள் வாஸ்துவில் முக்கியத்துவம் பெறும் வண்ணங்கள்

ஏழு குதிரைகள் படத்தின் வண்ணங்கள் முக்கியத்துவம்
சாம்பல் நிறம் கிரே நிறம் ராகு கேது கிரகத்தை குறிக்கிறது
வெள்ளை வெள்ளை நிறம் சந்திரன் கிரகத்தை குறிக்கிறது. மேலும், இந்த நிறம் அமைதியை குறிக்கும் நிறமாகும்.
ஆரஞ்சு ஆரஞ்சு நிறம் சூரிய கிரகத்தை குறிக்கும்.
நீலம் நீல நிறம் சனி கிரகத்தை குறிக்கிறது. அத்துடன், இது வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியது.

 

சூரிய உதயத்துடன் கூடிய ஏழு குதிரைகள் படம்

சூரிய உதயத்தை பின்னணியாகக் கொண்டு வரையப்பட்ட ஏழு குதிரைகளின் ஓவியம் மிகவும் அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. ஏழு குதிரைகள் அடங்கிய ஓவியமானது ஒருவர் வாழ்வில் வெற்றியை அளிப்பதற்கும். அவரது பொருளாதார நிலையில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தவதற்கும் பெரிதும் துணை புரிகிறது. இவ்வகையான ஓவியத்தை வீடு அல்லது அலுவலகத்தில் வைக்கும்போது அதற்கான வாஸ்து சாஸ்திர விதிகளை நினைவில் வேண்டும்.

 

7 horses painting direction in home and Vastu Shastra tips for its placement

 

நிலவுடன் உள்ள 7 குதிரைகள் வண்ண ஓவியம் (7 ஹார்ஸ்
பெயிண்டிங் வித் மூன்)

பின் புலத்தில் நிலா ஒளிர குதிரைகள் ஓடும் ஒரு ஓவியத்தை
நீங்களும் பார்த்திருப்பீர்கள். வாஸ்துவின் படி அந்த அதிருஷ்டகரமான
7 குதிரைகளின் (7 ஹார்ஸஸ்) படம் அமைதி, முன்னேற்ற மற்றும்
வெற்றியைக் குறிக்கும்.

 

கடல் அருகே உள்ள ஏழு குதிரைகள் ( செவன் ஹார்ஸஸ் நியர் சீ)

கடற்கரை ஓரமாக ஓடும் குதிரைகளின் ஓவியத்தை நீங்களும்
சுவற்றில் தொங்கவிடலாம். இது வீட்டினுள் நேர்மறையான சக்திகளை
கொண்டுவரும் மற்றும் உங்கள் பணியின் முன்னேற்றத்தை
ஊக்குவிக்கும். ஒரு நேர்மறையான விளைவுகளுக்கு 7 குதிரைகள்
படத்தை வீட்டில் அல்லது அலுவலகத்தில் நீங்கள் தொங்கவிடலாம்.

 

ஃபெங் சூயி வாஸ்துவில் ஓடும் ஏழு குதிரைகள் படம்

ஃபெங் சூயி வாஸ்து முறைப்படி குதிரைகள் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய விலங்காகவும், அது வேகம், வளர்ச்சி, வலிமை, நேர்மை ஆகியவற்றை குறிப்பதாகவும் கூறப்படுகிறது. குதிரைகள் யாங் எனர்ஜிக்கு இணையான ஒன்றாக கருதப்படுகிறது. அத்துடன், இது நெருப்பின் முக்கியத்துவங்களாக கருதப்படும் அங்கீகாரம், புகழ், உத்வேகம் மற்றும் பேரார்வம் ஆகியவற்றை குறிப்பதாகவும் உள்ளது. குதிரை ஓவியங்களை வீட்டில் லிவிங் ரூமில் வைத்து வீட்டினுள் நேர்மறை ஆற்றல்களை வரவேற்கலாம்.

மேலும், பாய்ந்து ஓடக்கூடிய குதிரை படங்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளதால் பெரும்பாலான வீடுகளில் ஓடும் குதிரை ஓவியத்தை அலங்கார பொருளாக வைத்துள்ளனர்.

ஃபெங் சூயி வாஸ்து முறைப்படி குதிரையின் ஒவ்வொரு செயலும் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அவை:

  • அதிர்ஷ்டத்தை தரும் ஏழு குதிரைகள் படத்தில் குதிரைகள் ஓடும் நிலையில் உள்ளது போன்ற காட்சி என்பது வேகத்தை குறிப்பதாகும். மற்றொரு விதத்தில், குதிரை நான்கு கால்களில் நிற்பது போன்ற காட்சி என்பது வலிமை மற்றும் சக்தி வாய்ந்த ஆற்றலை குறிப்பதாக உள்ளது.
  • ஏழு பாய்ந்து ஓடும் குதிரை ஓவியங்களை நமது வீட்டிற்காக தேர்ந்தெடுக்கலாம். இரண்டு குதிரைகள் மட்டும் வரையப்பட்ட ஓவியங்களையும் தேர்ந்தெடுக்கலாம். ஃபெங் சூயி வாஸ்து முறைப்படி இரண்டு குதிரைகள் இருப்பது போன்ற காட்சியானது இரண்டு தனிப்பட்ட நபர்கள் நல்ல வலிமையான பிணைப்பில் இருப்பதை குறிக்கும்.
  • ஏழு வெள்ளை நிற குதிரை ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றவை. வெள்ளை நிறம் மெட்டலை குறிப்பதாக உள்ளது. ஆகவே, இவ்வகை ஓவியத்தை வீட்டில் வைத்திருப்பது செல்வ வளத்தை ஈர்க்க உதவும்.

இதையும் வாசிக்க: வீட்டின் மீன்தொட்டி வாஸ்துக்கு உகந்த நல்ல மீன் எது?

 

7 குதிரைகள் ஓவியம்(7 ஹார்ஸஸ் பெயிண்டிங்) வாஸ்து : 7 வெள்ளை
வண்ணக் குதிரையின் ஓவியத்தை நீங்கள் எங்கே வைக்கவேண்டும்?

உலகத்தின் பல்வேறு கலாச்சாரங்கள் முழுவதும் புராண
இதிகாசங்களின் படி வெள்ளைக் குதிரைகளுக்கென்றே ஒரு சிறப்பு
மிக்க முக்கியத்துவம் உள்ளது. அவை களங்கமின்மை, தூய்மை,
நற்பேறு, மற்றும் வளம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறது.
நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டுவருகிறது என்று அறியப்படுவதால்

அதிகளைவிலான மக்கள் ஏழு வெள்ளை நிற குதிரைகள்
ஓடிக்கொண்டிருக்கும் படத்தை தங்கள் வீட்டில் அல்லது
அலுவலகத்தில் அமைத்துக் கொள்கிறார்கள். முந்தைய நாட்களில்
குதிரைகள் போக்குவரத்து செயல்பாடுகளுக்கு மட்டுமே
பயன்படுத்தப்பட்டு வந்தன. மேலும் அவை வீனஸ் கடவுளின்
நேரடியான வெளிப்பாடு.

 

7 horses painting direction in home and Vastu Shastra tips for its placement

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

ஏழு குதிரை படங்கள் வீட்டிற்கு நல்லதா?

வாஸ்து சாஸ்திரத்தில் ஏழு குதிரைகள் படத்தை வீட்டில் மாட்டி வைப்பது அதிர்ஷ்டத்தை தரக்கூடியது ஆகும். சரியான திசையில் ஓவியத்தை வைப்பதன் மூலம் வீட்டில் செல்வ வளத்தை ஈர்க்கவும், வீட்டில் நிலவும் ஆற்றலில் சமநிலையை உருவாக்கவும் இது துணை புரிகிறது.

எந்த வண்ணத்தில் குதிரை ஓவியம் வைப்பது வீட்டிற்கு சிறந்தது?

வாஸ்து சாஸ்திரத்தின்படி வெள்ளை நிறத்தில் ஏழு குதிரைகள் ஓவியத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. வெள்ளை நிறம் அமைதி மற்றும் சுத்தத்தை குறிப்பதாகும். மேலும், இது நேர்மறை ஆற்றலை ஈர்க்கவும் உதவுகிறது.

ஏழு குதிரைகள் படத்தை அலுவலகத்தில் எங்கு வைப்பது?

செல்வ வளம் மற்றும் தொழில் வளர்ச்சியை ஈர்ப்பதற்கு, ஏழு குதிரைகள் படத்தை அலுவலகத்தின் தெற்கு நோக்கிய சுவற்றில் மாட்டி வைப்பது சிறந்தது. அந்த ஓவியமானது அலுவலகத்தின் உட்புறத்தை நோக்கியபடி இருக்க வேண்டும்.

மூன்று ஓடும் குதிரைகள் படம் வீட்டிற்கு ஏற்றதா?

குதிரை ஓவியங்களை தேர்ந்தெடுக்கும்போது, ஏழு என்ற எண் வாஸ்து சாஸ்திரத்தின் படி அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி, நிதி பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதாக கருதப்படுகிறது. எனவே, மூன்று ஓடும் குதிரை ஓவியத்திற்கு பதிலாக ஏழு ஓடும் குதிரை படங்கள் அல்லது ஓவியங்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (1)
  • 😔 (0)

Recent Podcasts

  • தோட்டங்களுக்கான 15+ அழகான குளம் இயற்கையை ரசித்தல் யோசனைகள்
  • வீட்டில் உங்கள் கார் பார்க்கிங் இடத்தை எப்படி உயர்த்துவது?
  • டெல்லி-டேராடூன் எக்ஸ்பிரஸ்வே பிரிவின் முதல் கட்டம் ஜூன் 2024 க்குள் தயாராக இருக்கும்
  • கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் நிகர லாபம் 27% அதிகரித்து 725 கோடி ரூபாயாக உள்ளது.
  • சித்தூரில் சொத்து வரி செலுத்துவது எப்படி?
  • இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் பார்க்க வேண்டிய 25 சிறந்த இடங்கள்