PM கதி சக்தி நேஷனல் மாஸ்டர் பிளான் என்றால் என்ன?

இந்தியாவில் சமீபத்தில் தொடங்கப்பட்ட தேசிய உள்கட்டமைப்பு மாஸ்டர்பிளான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.

பிரதம மந்திரி கதி சக்தி நேஷனல் மாஸ்டர் பிளான் என்பது
இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான
மத்திய அரசின் ஒரு புரட்சிகரமான ஒரு திட்டமாகும். பிரதம மந்திரி
இந்தியாவில் “ஒரு முழுமையான உள்கட்டமைப்பு” வசதிகளை
மேம்படுத்த ரூ. 100 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கதி சக்தி
யோஜனா திட்டத்தை நரேந்திர மோடி அவர்கள் 75 ஆவது
சுதந்திரதினத்தன்று அறிவித்தார்

 

கதி சக்தி: தொடக்க நாள்

திட்ட நடவடிக்கைகள் அமைச்சகங்களின் இடையே
முடங்கிக்கிடப்பதை தகர்த்து உள்கட்டமைப்புத் திட்டங்களின்
செயல்பாடுகளை ஒன்றிணைக்கும் குறிக்கோளோடு, பிரதம மந்திரி
மோடிஜி அவர்கள் அக்டோபர் 13,2021 அன்று பிரதம மந்திரி கதி சக்தி
(PMGS) திட்டத்தை தொடங்கிவைத்தார்.

 

கதி சக்தி: ஒரு முன்னுரிமை இயக்கம் 

2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை பிப்ரவரி 1, 2022 அன்று நிகழ்த்திய போது  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் நான்கு மிகப் பெரிய முன்னுரிமை திட்டங்களில்  கதி சக்தியும் ஒன்று என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். “மக்கள், பொருட்கள் மற்றும் திட்டங்களின் அமைவிடம் ஆகியவற்றின் பல்வேறு முறைகளில் ஒரு உலகத்தரம் வாய்ந்ததாக, நவீன கட்டமைப்புக்களோடும் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் கூட்டியக்கத்தோடு கதி சக்தி மாஸ்டர் பிளான் செயல்படும் உரைகல்லாக விளங்கும்” என்று நிதியமைச்சர் தெரிவித்தார்   

“கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளான், ஏழு உள்கட்டமைப்பு இயக்க அமைப்புக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது, திட்டமிடல், நிதியளித்தல், புதுப்புனைவு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான முழு ஆதரவுடன் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்க பன்முக நடைமுறை நெட்வொர்க்கை உருவாக்குவதில் மிக மேம்பாட்டு விளங்கும்” என்று, கோலியர்ஸ் இந்தியா, கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் சர்வீஸஸ் இன் நிர்வாக இயக்குனர்  பியூஷ் குப்தா கூறினார் 

அரசாங்கம் கவனம் செலுத்தும் முக்கிய பகுதியாக  உள்கட்டமைபு மேம்பாடு மற்றும் முன்னேற்றம்.இருக்கிறது கதி சக்தி இயக்கம் அம்மாதிரியான திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள பல்வேறு இடையூறுகளைக் அகற்றி தாமத்தை குறைக்க, அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியை மேலும் துரிதப்படுத்தும்.. திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி கூறினார் “அடுத்த 25 ஆண்டுகளுக்கான  அடித்தளத்தை நாங்கள் அமைக்கிறோம். இந்த தேசிய மாஸ்டர் பிளான் 21 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கதிசக்தி  (சக்தியின் வேகத்தை) வழங்கும், மேலும் இந்த திட்டங்களை சரியான நேரத்தில் முடிக்க உதவும், ” என்றும் . “உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு என்று  வரும்போது பிளக் அண்ட் ப்ளே அணுகுமுறையைக் கொண்ட ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்கி வழங்க விரும்புகிறோம்,” என்று பிரதமர் மேலும் கூறினார்.

மேலும் வாசியுங்கள் : தேசிய நீர்வழிகள்: இந்தியாவின் தேசீய நீர்வழிகள்  அவற்றின் முக்கியத்துவம் மற்றும் முழுமையான பட்டியல்

 

கதி சக்தி: இது எவ்வாறு வேலை செய்கிறது?

இந்த இயக்கம் தொடர, ரயில்வே, சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, மின்சாரம், தொலைத்தொடர்பு, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற இன்னும் பல உள்ளிட்ட 16 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட உள்கட்டமைப்பு முயற்சிகளை ஒன்றிணைக்க ஒரு மையப்படுத்தப்பட்ட போர்டல் அமைக்கப்படும்

இந்த அமைச்சகங்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், மையப்படுத்தப்பட்ட போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் கிரிட் என்ற அதே  இலக்குடனான கதி சக்தி போர்ட்டல், தடையற்ற  தகவல் பரிமாற்றத்தை செயல்படுத்தி, திட்ட அனுமதி செயல்முறையை துரிதப்படுத்தும்.

கதி சக்தி மாஸ்டர் பிளானில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளின்படி இப்போது செயல்படுத்தப்படும் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களில் பாரத்மாலா, சாகர்மாலா, உடான், ரயில்வே நெட்வொர்க் விரிவாக்கம், உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் பாரத் நெட் போன்ற முதன்மைத் திட்டங்களும் அடங்கும் .

மில்லியன் கணக்கில் வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படும், கதி சக்தி மாஸ்டர்பிளான் மூன்று அடிப்படை குறிஇலக்குகளை  எட்டி அடைய செயல்படும் – சரக்குகள் மற்றும் மக்களை எளிதாக நகர்த்துவதற்கான தடையற்ற மன்முக வழிமுறைகள் ணைப்பு; மேம்படுத்தப்பட்ட முன்னுரிமை வரிசைப்படுத்தல், வளஆதாரங்களின் உகந்த பயன்பாடு, சரியான நேரத்தில் திறன் உருவாக்கம்; மற்றும் ஒழுங்கற்ற திட்டமிடல் போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வு.

 

கதி சக்தி இயக்கம்: முக்கிய நோக்கம்

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை  போட்டித்தன்மை மிக்கதாக மாற்றும் ஒரு விரிவான நோக்கத்துடன், லாஜிஸ்டிக்ஸ் செலவுகளைக் குறைத்து, விநியோகச் சங்கிலியை மேம்படுத்தி உலகம் முழுவதிலுமிருந்து முதலீடுகளை ஈர்த்து   , நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பிரதான் மந்திரி கதி சக்தி திட்டம் இந்தியாவுக்கு உதவும்.

தற்சமயம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) லாஜிஸ்டிக்ஸ்  மற்றும் விநியோகச் சங்கிலி செலவுகள் 12% என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். உலக சராசரியான 8% உடன் ஒப்பிடும் போது இது மிக அதிகம். இந்த அதிக செலவுக்கு வழிவகுக்கும் காரணிகள், சாலை வழியாக போக்குவரத்தை அதிகளவில் சார்ந்திருப்பது மற்றும் நீர்வழிகள், விமானம் மற்றும் இரயில் நெட்வொர்க்குகளின் குறைவான பயன்பாடாகும். ஒட்டுமொத்தமாக, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய உற்பத்தி விலையை  இந்த காரணிகள் உயர்த்துகின்றன, இதனால் உலகளவில் போட்டியிடும் தகுதி குறைகிறது. 

அமைச்சகங்களுக்கிடையேயான தாமதங்கள், ஒப்புதலளிப்பதில் தாமதங்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களுக்கு இடையேயான தொடர்பு இடைவெளிகளால் இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சி தடைபடுகிறது . இது பெரும்பாலும் மெதுவாக முடிவெடுப்பதற்கும், நேரம் மற்றும் செலவு அதிகரிப்பதற்கும் வழிவகுத்தது, இதனால், உள்கட்டமைப்பு-முன்னெடுப்பு  வளர்ச்சிக்கான  வேகம் ஒளியிழந்து காணப்படுகிறது. கதி சக்தி திட்டம் குறிப்பிட்ட துறைகளின்  உள்கட்டமைப்பு திட்டங்களை ஒருங்கிணைக்கிறது, மேலும் குறிப்பிட்ட / நேரத்தைச் வீணடிக்கும் ஒப்புதல் செயல்முறைகளால் தடைபடாமல் பல்வேறு அமைச்சகங்கள் ஒன்றிணைந்து திட்டங்களைத் திட்டமிட உதவும், ”என்று உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு மாற்றமாக இந்த முழுமையான திட்டம் இருக்கும்.என்ற ஒரு குறிப்பில் பிரிக் ஒர்க்ஸ் ரேட்டிங்க்ஸ் கூறுகிறது..

“பிரதம மந்திரி கதி சக்தி திட்டம் பல்வேறு அமைச்சகங்கள், மாநிலங்கள் மற்றும் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை செயல்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகும், அத்தோடு திட்டமிடலை எளிதாக்குகிறது மற்றும் நடைமுறைப்படுத்தலுக்கான ஒட்டுமொத்த செலவுகளையும் குறைக்கிறது.இந்தத் இயங்குதளத்தில் தொடக்கத்தில்  இடையூறுகளைச் சந்திக்க நேரிடலாம்  இருக்கலாம், இருப்பினும், இவற்றை சரிசெய்து கொண்டவுடன்  உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு மாற்றத்தைத்தரும் ஒரு அமைப்பாக இது விளங்கும் ,” என்கிறார் பிரிக்வொர்க் ரேட்டிங்ஸ் (BWR) மதிப்பீடுகளின், மூத்த இயக்குநர் விபுலா ஷர்மா. 

 

PM கதி சக்தி திட்ட இலக்குகள்

கதி சக்தி திட்டத்தின் கீழ் சாதித்து அடைய வேண்டிய பல்வேறு குறியிலக்குகள் கீழே குறிப்பிப்பட்டிருக்கின்றன:

*தேசிய நெடுஞ்சாலை பிணைய அமைப்பு  2 லட்சம் கி.மீ-ஐ தொடும் வகையில் சாலைகளின் இயல்திறன் அதிகரிக்கப்படும்

*திட்டத்தில் சுமார் 200 புதிய விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள் மற்றும் நீர் ஏரோட்ரோம்கள் ஆகியவற்றை அமைப்பதை கருத்தில் கொண்டு விமானப் போக்குவரத்து ஒரு மிகப் பெரிய ஊக்கத்தைப் பெறும்  

* 2025 நிதியாண்டுக்குள் ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து திறன் 1,600 டன்னாக அதிகரிக்கப்படும்

* பரிமாற்ற வலையமைப்பு 454,200 சுற்று கி.மீ ஆக அதிகரிக்கப்பட்டு மின்சார வசதியை அணுகுதல் எளிதாக்கப்படும் 

*25 ஆம் நிதியாண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க மின் திறன் 225 GW ஆக அதிகரிக்கப்படும்.

*அதே ஆண்டில் சுமார் 17,000 கிலோமீட்டர் எரிவாயு குழாய்கள் அமைக்கப்படும்.

* 22 ஆம் நிதியாண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் 4G இணைப்பு

*20 புதிய மெகா உணவு பூங்காக்கள்

*தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் 11 தொழில்துறை வரிசை அமைப்புக்கள்  மற்றும் இரண்டு புதிய பாதுகாப்புதுறை வரிசை அமைப்புக்கள் 

*202 மீன்பிடிக் கூட்டமைப்பு/துறைமுகங்கள்/சேருமிட மையங்கள்

மேலும் வாசிக்க கென் பெட்வரிவார் லிங்க்கிங் ப்ராஜக்ட் ,  திட்ட வரைபடம், செலவு மற்றும் சமீபத்திய புத்தாக்கங்கள் 

Was this article useful?
  • 😃 (8)
  • 😐 (1)
  • 😔 (0)

Recent Podcasts

  • ஒரு பில்டர் திவால்நிலைக்கு தாக்கல் செய்தால் என்ன செய்வது?
  • இன்ஃப்ரா திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக IIFCL உடன் PNB புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
  • NHAI இந்தியா முழுவதும் டோல் கட்டணத்தை 5% அதிகரிக்கிறது
  • கரீம்நகர் சொத்து வரி செலுத்துவது எப்படி?
  • நவீன வீடுகளுக்கான ஸ்டைலான 2-கதவு நெகிழ் அலமாரி வடிவமைப்பு யோசனைகள்
  • ஆக்கிரமிப்பாளர்களுக்கு அபராதம் விதிப்பதற்கான விதிகளை உருவாக்குமாறு DDA, MCD ஐ உயர் நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது