டிடிசிபி DTCP : உங்கள் வீட்டடி மனை நகர ஊரமைப்பு இயக்ககத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட(approved) ஒன்று என்பதை நீங்கள் எவ்வாறு தெரிந்து கொள்வீர்கள்?

இந்தியாவிலுள்ள நிலைச்சொத்து (ரியல் எஸ்டேட்) மேம்பாட்டாளர்களுக்கு மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்ள அரசுத்துறையான டி‌டி‌சி‌பி யின் ஒப்புதல் தேவைப்படுகிறது

ஒரு குறிப்பிட்ட பகுதியில் கட்டிடக் கட்டுமானங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பவர்கள் அந்தத் திட்டத்திற்கான அனுமதியை உள்ளாட்சி அமைப்புக்களிடமிருந்து பெறவேண்டும். நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) அம்மாதிரியான அமைப்புக்களில் ஒன்று. கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள அதன் ஒப்புதலைப் பெறுவது கட்டாயம்  

டிடிசிபி (DTCP) என்றால் என்ன?

இது ஒரு மாநிலத்தில் திட்டமிடல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்காக நிறுவப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) திட்டமிட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை நோக்கிய கொள்கைகளை உருவாக்குகிறது. டிடிசிபி (DTCP) மேலும் வணிகம், குடியிருப்பு நிலைச்சொத்து கட்டுமானம் மற்றும் நகர திட்டமிடல் தொடர்பான  இதர துறைகள் மற்றும் திட்டப்பிரிவுகளுக்கும் ஆலோசனை வழங்கிவருகிறது

ஒப்பீட்டளவில் ஒரு மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்ள விரும்பும் இந்தியாவிலுள்ள அனைத்து நிலைச்சொத்து மேம்பாட்டாளர்களும் சம்பந்தப்பட்ட மாநில அரசின்  டிடிசிபி (DTCP) யின் ஒப்புதலை பெறவேண்டும். ஒவ்வொரு மாநிலமும் அதற்கென தனிப்பட்ட டிடிசிபி (DTCP) துறையைக் கொண்டுள்ளது

எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு மாநிலத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் திட்ட அமைவுவரைபடம்  2.47 ஏக்கர் நிலப் பரப்பளவுகளுக்கு மேலாக இருக்கும் பட்சத்தில் நிலைச்சொத்து மேம்பாட்டாளர்கள் டிடிசிபி (DTCP) யின் ஒப்புதலை பெறவேண்டும். சிறு அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு உள்ளூர் வளர்ச்சித்திட்ட அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ளூர் வளர்ச்சித்திட்ட அமைப்புகள், அதிக உயரம் இல்லாத பிரிவுகளின் கீழ்  26,910 சதுர அடி பரப்பளவு  உள்ள  குடியிருப்பு, வணிக மற்றும் நிறுவன கட்டிடங்களுக்கான வளர்ச்சிதிதிட்டங்களுக்கு  ஒப்புதல் அளிக்கலாம்.  அந்த வரம்பிற்கு அப்பால் உள்ள திட்டங்களுக்கு ஒரு கட்டுமான நிறுவனம்  DTCP இன் அனுமதியைப் பெற வேண்டும்.

மேலும் காண்க  வில்லங்கச்சான்றிதழ் பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்

 

DTCP அனுமதிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

பெரும்பாலான மாநிலங்கள் கட்டிடத் திட்ட அனுமதிக்கான செயல்முறையை ஆன்லைனில் கொண்டு வந்துவிட்டதால் கட்டுமான நிறுவனங்கள் அவர்களின் தொடர்புடைய அந்தந்த இணையதளங்க.ளில் அவர்களது திட்டங்களுக்கான DTCP அனுமதி வேண்டி விண்ணப்பிக்கலாம். இருப்பினும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது, அவர்கள் தங்களை இணையதளத்தில் பதிவு செய்து, அதற்கான அனைத்து தாள்களையும் தயாராக கையில் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை அனுப்பும்போது ஆன்லைனில் ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட DTCP ஆல் வகுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் அனைத்து ஆவணங்களின் மென்படிவ நகல்களும் அவர்களிடம் இருக்க வேண்டும்.

மேலும் காண்க: சொத்துக்கான ஆணை உரிமை வழங்கல் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

 

திட்ட ஒப்புதலைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உங்களுக்கு உதவும் பொருட்டு, சில மாநில DTCP-களின் இணையதள முகவரிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

மாநிலம் (DTCP) டிசிடிபி இணைய முகப்பு
ஆந்திரப்பிரதேசம் dtcp.ap.gov.in/dtcpweb/DtcpHome.html
ஹரியானா tcpharyana.gov.in/
கர்நாடகா www.dtcp.gov.in/kn
மத்தியப்பிரதேசம் www.emptownplan.gov.in
ராஜஸ்தான் https://urban.rajasthan.gov.in/
தமிழ்நாடு https://www.tn.gov.in/tcp/

 

DTCP அனுமதிக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஒரு நில அமைப்பில்  உள்ள வீட்டடி மனையின்  உரிமையாளர், குடியிருப்பு உரிமையாளர்களின் சங்கம், ஹவுசிங் சொசைட்டிகள் மற்றும் கட்டுமான தொழில் மேம்பாட்டாளர்கள் ஆகியோர் டிடிசிபி அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்

 

எனது வீட்டடி மனை DTCP ஆல்அங்கீகரிக்கப்பட்டதா என்பதை நான் எப்படி அறிவது?

மாநில DTCP இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் இணைய முகப்பில்  அதன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வீட்டடி மனைகளின் பட்டியலையும் கொண்டுள்ளது. DTCP ஒப்புதல் பற்றிய தகவலைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும். இல்லையென்றால், DTCP அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று தகவல்களைப் பெறலாம்.

மேலும் காண்க :  உரிமையாளரின் மரணத்திற்குப் பிறகு சொத்தின் உரிமை மாற்றநடைமுறைகள்  பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

 

வீட்டுக் கடன் பெறுவதற்கு வீட்டு மனைக்கு DTCP (approval) அனுமதி கட்டாயமா?

கட்டுமானம் நடைபெற்றுவரும் குடியிருப்பு கட்டிட திட்டம் அல்லது வீட்டுமனை அடிப்படையிலான  வீட்காட்டும் திட்டம் ஆகியவற்றுக்கு அல்லது DTCP(approval)  ஒப்புதல் உட்பட அனைத்து அனுமதிகளும் முறையாக இருந்தாலே ஒழிய இந்தியாவில் உள்ள எந்த வங்கியும் அந்த சொத்துக்கான வீட்டுக் கடனுக்கான கோரிக்கையை அங்கீகரிக்காது. கட்டிடம் கட்டும் ஒருவர் அவரது திட்டத்தைத் தொடங்க மாநில டிடிசிபியிடம் அனுமதி (DTCP approval)பெற வேண்டும். அத்தகைய திட்டங்களில் வீடு வாங்க முதலீடு செய்யும் ஒருவர்  கடன் பெறுவதற்கு DTCP ஆல் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத் திட்டத்திற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்

 

DTCP ஆல் அங்கீகரிக்கப்பட்ட (DTCP approved) வீட்டு மனைகளை தளங்களை வாங்குவது நல்லதா?

உங்கள் முதலீடுகளை பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் விரும்பினால், சம்பந்தப்பட்ட DTCP யிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு, குடியிருப்பு அல்லது வணிகக்கட்டிடத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

 

DTCP அனுமதி பெற எவ்வளவு செலவாகும்?

DTCP அனுமதிக் கட்டணங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். தமிழ்நாட்டில், DTCP கட்டணம் ரூ 500 முதல் ரூ 1,000 வரை இருக்கும், ஒப்புதலுக்கான கட்டணம் அது அமைந்துள்ள (கிராமப்புறம்/நகர்ப்புறம்) இடத்தின் அட்டைப்படையில் இருக்கும்.

 

DTCP அனுமதி பெற எவ்வளவு கால அவகாசம் ஆகும்?

எளிதாக வணிகம் செய்வதற்கான குறியீட்டின் (ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்) உலகளாவிய  அளவில் உயரிய இடத்தைப் பிடிப்பதற்கான மத்திய அரசின் திட்டத்திற்கு இணங்க  கட்டிட கட்டுமானத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான நேரத்தைக் குறைக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும், டிடிசிபியிடமிருந்து அனுமதி (DTCP approval) பெற ஆறு மாதங்கள் வரை ஆகலாம்

மேலும் காண்க:    சொத்துரிமை மாற்றச்சட்டம் பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்

 

DTCP ஒப்புதலுக்கு தேவைப்படும் ஆவணங்கள் எவை ?

மாநில DTCP இலிருந்து திட்ட ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கும் ஒரு கட்டுமானவியலாளருக்கு  பல்வேறு ஆவணங்கள் தேவைப்படலாம். அத்தகைய ஆவணங்களின் முழுமையான பட்டியலை நாங்கள் கீழே தொகுத்துத் தந்துள்ளோம். இருப்பினும், திட்டத்தின் தன்மையைப் பொறுத்து (குடியிருப்பு, வணிக அல்லது நிறுவனம்) ஆவணங்களின் பட்டியல் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடலாம்.

  1. சாலைகளின் அகலம் மற்றும் அமைப்பு , கட்டிட உள்ளடங்கு வரம்பு, மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் ஆக்கியற்றை காட்டும் மன அமைப்புத் திட்டப் படம்.
  2. முன்மொழியப்பட்ட திட்டப்பகுதியை முறையாகக் காட்டும் சர்வே வரைபடநகல்/கிராமத் திட்ட நகல்/நில அளவீட்டின் நகல்/ சர்வே எண் புத்தகம்
  3. முன்மொழியப்பட்ட மனையைக் காட்டும் முழுமையான திட்டபகுதி/ நில பயன்பாட்டை குறிப்பிடும் திட்டம் நகல்
  4. முன்மொழியப்பட்ட மனையிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் குடியிருப்பு காலனிகள்/கல்வி/மருத்துவ/மத நிறுவனங்கள் போன்ற தற்போது அமைந்துள்ள  அம்சங்களைக் காட்டும் விரிவான திட்டம்
  5. அணுகல் சாலைகளின் அகலம் மற்றும் தன்மை/அமைப்பைக் காட்டும் உள்ளூர் அதிகாரஅமைப்பின் (ஆணையர்/ஊராட்சி செயலாளர்) சான்றிதழ்
  6. முன்மொழியப்பட்ட கட்டிடம் எந்த நீர்நிலைகளுக்கும் அருகில் இல்லை என்று உறுதிப்படுத்தும் தகுதிவாய்ந்த அதிகாரியினால் வழங்கப்பட்ட சான்றிதழ்
  7. அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியினால் உறுதிச்சான்று அளிக்கப்பட்ட அந்த மனையின் உடைமை உரிமையைக் காட்டும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள், சர்வே எண், அளவு மற்றும் எல்லைகளின் அட்டவணை ஆகியவற்றைக் காட்டும் சான்றிதழ்
  8. ஆய்வு மற்றும் நுண்ணாய்வு மேற்கொள்ள DTCP க்கு கட்டணம் செலுத்திய  விவரங்கள்
  9. முன்மொழியப்பட்ட நிறுவல் கொள்திறன்(தொழில்துறை பயன்பாடுகளுக்கு)
  10. ஆலை மற்றும் இயந்திரங்களின் மொத்த திட்ட செலவு (தொழில்துறை பயன்பாடுகளுக்கு)
  11. வருவாய் அதிகாரியால் வழங்கப்பட்ட நில மாற்ற சான்றிதழ்
  12. தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை துறையிடமிருந்து பெற்ற தடையில்லா  சான்றிதழ் (NOC).
  13. மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பெற்ற தடையில்லா  சான்றிதழ் (NOC). (பொருந்தும் இடங்களில்)
  14. நீர்ப்பாசனத் துறையின் தடையில்லா  சான்றிதழ் (NOC). (பொருந்தும் இடங்களில்)
  15. வருவாய்த் துறையிடமிருந்து தடையில்லா  சான்றிதழ் (NOC. (பொருந்தும் இடங்களில்)
  16. வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்துக்கு அருகில் இல்லாததை உறுதிப்படுத்த வனத்துறையின் தடையில்லா  சான்றிதழ் (NOC).

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

DTCP இன் முழு விரிவாக்கம் என்ன?

நகர் ஊரமைப்பு இயக்ககம் (Directorate of Town and Country planning) என்பதன் சுருக்கம்தான் DTCP

DTCP ஒப்புதலுக்கு நான் எப்படி விண்ணப்பிக்கலாம்?

டிடிசிபி அனுமதிக்கு நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 

 

 

Was this article useful?
  • 😃 (2)
  • 😐 (0)
  • 😔 (0)

Recent Podcasts

  • டெல்லி-டேராடூன் எக்ஸ்பிரஸ்வே பிரிவின் முதல் கட்டம் ஜூன் 2024 க்குள் தயாராக இருக்கும்
  • கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் நிகர லாபம் 27% அதிகரித்து 725 கோடி ரூபாயாக உள்ளது.
  • சித்தூரில் சொத்து வரி செலுத்துவது எப்படி?
  • இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் பார்க்க வேண்டிய 25 சிறந்த இடங்கள்
  • சிம்லா சொத்து வரிக்கான காலக்கெடு ஜூலை 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
  • ஒப்பந்தம் கட்டாயப்படுத்தினால், டீம்ட் கன்வேயன்ஸை மறுக்க முடியாது: பாம்பே உயர்நீதிமன்றம்