இரண்டாவது திருமணம்: இரண்டாவது மனைவி மற்றும் அவரது குழந்தைகளின் சொத்து உரிமைகள் அனைத்தும் பற்றி

இரண்டாவது திருமணம், சட்டப்படியானதாக இருக்கும் பட்சத்தில் சொத்தில் முதல் மனைவிக்கு இருக்கும் அதே உரிமைகள் இரண்டாவது மனைவிக்கும் உண்டு

இரண்டாவது மனைவிக்குள்ள சொத்துரிமை குறித்தவை இந்தியாவில் மிகச்சிக்கலான ஒன்றாக இருக்கிறது, இவை முக்கியமாக அவள் பின்பற்றும் மதத்தின் அடிப்படையிலான சட்டங்களின் படி  தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும் இரண்டாவது மனைவி தனது கணவரின் சொத்தின் மீது தனக்கிருக்கும் உரிமையை அவர்களின் திருமணம் சட்டப்படியானது என்பதை நிலைநாட்டி மெய்ப்பிக்க வேண்டும் 

Table of Contents

 

இரண்டாவது மனைவி: இரண்டாவது திருமணத்தின் சட்டபூர்வமான நிலையை ஆராய்தல்

நடந்தால், அல்லது முதல் மனைவி மற்றும் கணவருக்கு இடையேயான  விவாகரத்து அறுதி செய்யப்பட்டால். இந்தியாவின் வாரிசுரிமைச் சட்டங்கள், முதல் மனைவிக்கு சமமாக இரண்டாவது மனைவியையும்  கருதுகிறது, முதல் மனைவி கணவரை விட்டு பிரிந்த ஏழு வருடங்களுக்குப் பிறகு அல்லது கணவருக்கு அவள் இருக்கும் இடம் அல்லது வாழ்க்கை சூழ்நிலை பற்றி தெரியாது. என்ற நிலையில் இரண்டாவது திருமணம் நடந்திருந்தால் ,  சொத்து உரிமைகள் தொடர்பாகவும்  இரண்டாவது மனைவியின் சட்டபூர்வமான நிலை சரிசமமாக நிலையானது

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் முதல் மனைவி மற்றும் அவரது குழந்தைகளைப் போலவே இரண்டாவது மனைவி மற்றும்  அவரது குழந்தைகளுக்கும் அவரது  தனது கணவரின் சொத்தில் அதே உரிமைகள் உண்டு. இருப்பினும் அந்தத் திருமணம் சட்டபூர்வமானதாக இல்லை என்றால் இரண்டாவது மனைவியின் .சொத்துரிமை புறக்கணிக்கத்தக்க வகையில் அற்பமானதாக இருக்கும். இந்து திருமணச்சட்டம் 1955 இன் கீழ் “திருமணத்தின் போது எந்த ஒரு தரப்பினருக்கும் வேறு ஒரு துணைவர் உயிரோடு இருக்கக் கூடாது ” என்ற நிலையில்தான் இரண்டாவது திருமணம் சட்டபூர்வமானதாக நிலைநாட்டப்படும்.” 

மேலும் காண்க  HUF சூழலில்,  பங்குரிமையாளர் (Coparcener) என்பதற்கான அர்த்தம்   

 

இரண்டாவது மனைவி : இரண்டாவது திருமணத்தின் சட்டபூர்வமான நிலை

ஒரு திருமணத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை வழங்க, இந்து திருமணச்சட்டம் 1955 பிரிவு 5 இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள பல்வேறு நிபந்தனைகளில்  “திருமணத்தின் போது எந்த ஒரு தரப்பினருக்கும் வேறு ஒரு துணைவர் உயிரோடு இருக்கக் கூடாது ” என்பதும் ஒன்று.

முதல் திருமணம் இன்னும் நடைமுறையில் இருக்கும் போதே ஒரு கணவர் அவரது இரண்டாவது மனைவியை திருமணம் செய்து கொள்வாரேயென்றால் இரண்டாவது திருமானத்தின் போது முதல் திருமணம் “உயிரோடு” நிலைத்திருக்கிறது என்று இந்துச்சட்ட விதிகள்  வரையறுக்கிறது. அதாவது சம்பந்தப்பட்ட கணவர் இரண்டாவது மனைவியை ஒரு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையிலும்  முதல் மனைவியோடான திருமண பந்தத்தில் இன்னும் கட்டுப்பட்டிருக்கிறார் என்பது  அதன் அர்த்தம் 

இந்து திருமணச்சட்டம் 1955 பிரிவு 5 இன் படி, ஒருவர் அவள் /அவர் ஒருவருடனான திருமண பந்தத்தில் இன்னும் கட்டுப்பட்டிருக்கிறார் என்றபோது மற்ற ஒருவரோடு ஏற்ப்படுத்திக்கொள்ளும் திருமண பந்தம் இல்லாததாகிவிடுகிறது. அதாவது இந்த எடுத்துக்காட்டில் தனது கணவரோடான இரண்டாவது மனைவியின் திருமணம் இல்லாததாகிவிடுகிறது. என்பதுதான் இதன் அர்த்தம். 

 

இரண்டாவது மனைவி: சொத்துரிமைக்கு பொருந்தக்கூடிய  இந்தியச் சட்டங்கள்

இந்து வாரிசுரிமை சட்டம், 1956/2005:  இந்த வாரிசுரிமை  சட்டம் ஒரு மனிதன் எந்த ஒரு உயிலையும் விட்டுச்செல்லாமல் இறந்துவிடும் சந்தர்ப்பங்களில் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் புத்த சமயத்தை சார்ந்த அனைவருக்கும் பொருந்தும்

இந்திய வாரிசுரிமைச் சட்டம், 1925:  ஒரு உயிலை (வாரிசு விருப்ப ஆவணம்) விட்டுச்சென்று மரணமடையும் இந்துக்களுக்கு இந்த சட்டம் பொருந்தும், இந்த சட்டம் கிறிஸ்தவர்களின் சொத்து உரிமைகள் குறித்தும் கையாள்கிறது. முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒருவர் உயிலை விட்டு மரணமடைந்தால் அந்த சந்தர்ப்பத்திலும்  இந்திய வாரிசுரிமை சட்டம், 1925, பொருந்தும்

முஸ்லிம் தனிநபர் சட்டம் (ஷரீயத்) அப்ளிகேஷன் சட்டம், 1937 ஒரு உயிலை விட்டுச்செல்லாமல் மரணமடையும் இஸ்லாமிய இன மக்களுக்கு இந்த வாரிசுரிமைச்சட்டம் பொருந்தும்.

மேலும் காண்க  சொத்துரிமை குறித்து ஒரு முஸ்லீம் இனப் பெண்ணின் நிலை என்ன?

 

இரண்டாவது திருமணத்தில் இரண்டாவது மனைவியின் சொத்து உரிமைகள்

ஒரு திருமணத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லாத நிலையில், அதன் இரண்டாவது மனைவிக்கு பாரம்பரிய சொத்தின் மீது எந்த ஒரு உரிமையும் இல்லை. ஆனால், அதுவே அந்தக் கணவர் தன் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்துக்களுக்கு பொருந்தாது. அதை தனது இரண்டாம் மனைவி உட்பட எந்த ஒருவருக்கும்  விட்டுதிதரும் சுதந்திரம் அவருக்கு  உள்ளது. இருப்பினும் அவர் எந்த ஒரு உயிலையும் நிறைவேற்றாது( சட்டமொழியில் “விருப்புறுதி ஆவணம் இல்லாத நிலை”) மரணமடையும் சந்தர்ப்பத்தில்  அவரது சொத்துக்கள் அவருக்கும் பொருந்தும் வாரிசுரிமைச்சட்டங்களின் அடிப்படையில் அவரின் சட்டபூர்வமான வாரிசுகளிடையே பகிர்ந்து கொள்ளப்படும். 

இரண்டாவது திருமணம், முதல் மனைவியை விவாகரத்து செய்த பிற்கு அல்லது முதல் மனைவியின் மரணத்திற்குப் பிறகு நடந்தால், அந்த இரண்டாம் திருமணத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் உண்டு மற்றும் இரண்டாவது மனைவிக்கு அவரது கணவரின் பாரம்பரிய சொத்து மற்றும் சுய சம்பாத்தியத்தில் பெற்ற சொத்துக்கள் அனைத்திலும் முழு உரிமை பெற்றவராக இருப்பார் (மற்றும் அவரது கணவரின் முதல் நிலை வாரிசுகளின் கீழ் அவர் இருப்பார்) 

 

All-about-property-rights-of-the-wife-and-her-children-in-a-second-marriage-tamil

மேலும் காண்க:  Legal தமிழ்நாட்டின் சட்ட பூர்வ வாரிசு சான்றிதழ் பதிவிறக்கம்   மேலும் சட்ட பூர்வ வாரிசு சான்றிதழ்  என்றால் என்ன என்பது குறித்த எங்கள் வழிகாட்டியையும் சரிபாருங்கள். 

 

இரண்டாவது மனைவி: அவரது பல்வேறு சட்ட நிலைகள் 

இரண்டாவது மனைவியின் சொத்துரிமை குறித்து பல்வேறு நீதிமன்றங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட வழக்குகளின் தன்மையின் அடிப்படையில் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. எடுத்துக்காட்டாக சில சூழ்நிலைகளையும்  மற்றும் அவை சொத்து மீதான உரிமைகள் தொடர்பான இரண்டாவது மனைவியின் சட்ட நிலையை அவை எவ்வாறு பாதிக்கின்றன. என்பதையும்  நாங்கள் இங்கு விவரிக்கிறோம் 

கணவரின்  முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாவது திருமணம் நடந்திருந்தால் 

இந்த இரண்டாவது திருமணத்திற்கு சட்டப்படியான அங்கீகாரம் இருப்பதால், இரண்டாவது மனைவியும் அவரது குழந்தைகளும் கணவரின் 1 நிலை  சட்டப்பூர்வ வாரிசுகள் என்ற தகுதியின் அடிப்படையில் சொத்துரிமையை கோரலாம். முதல் மனைவியின் குழந்தைகள், மற்றும் இரண்டாவது மனைவியின் குழந்தைகள் ஆகியோருக்கு  சொத்தில் சம உரிமை இருக்கும்.

முதல் மனைவியை  விவாகரத்து செய்த பிறகு இரண்டாவது மனைவி தனது கணவரை மணந்தால்

இந்த சந்தர்ப்பத்திலும் இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லும். எனவே, இரண்டாவது மனைவிக்கு அவரது  கணவரின் சொத்தின் மீது இது உரிமையை வழங்குகிறது. முதல் மனைவி விவாகரத்து செய்யப்பட்டுவிட்டதால் , தற்போதுள்ள சட்டத்தின்படி அவரது முன்னாள் கணவரின்  சொத்தில் அவருக்கு உரிமை இருக்காது. இருப்பினும், அவருடைய  குழந்தைகள் கணவரின் 1 நிலை சட்ட வாரிசுகளாக இருப்பார்கள் மற்றும் பாரம்பரிய சொத்தில் தங்கள் உரிமைகளைப் கோரலாம்

மேலும் காண்க:  வாரிசு என்பவர் யார் மற்றும் வாரிசுரிமை என்பது என்ன? .

சொத்தின் மீது கணவர் மற்றும் முதல் மனைவி இருவருக்கும் கூட்டு உடைமை உரிமை இருந்தால் 

சொத்தின் மீதான உரிமையை கணவனும் முதல் மனைவியும் சேர்ந்து சொத்து வைத்திருப்பதால், முதல் மனைவி அந்த சொத்தில் தனது பங்கின் மீதான உரிமையை  கோர முடியும். இரண்டாவது திருமணத்தின் சட்டப்பூர்வமான அங்கீகாரம் எவ்வாறாக இருப்பினும்,  இரண்டாவது மனைவி அத்தகைய சொத்துக்கள் மீது எந்த உரிமையையும் கோர முடியாது. இருப்பினும், முதல் மனைவியின் மரணத்திற்கு பிறகு , இரண்டாவது மனைவி அத்தகைய சொத்துக்களுக்கு  உரிமை கோரலாம்.

முதல் மனைவி விவாகரத்து செய்யப்பட்ருந்தால்  

இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருந்தாலும் முன்பு திருமண வாழ்வின் போது, கணவரின் சுய  சம்பாதியத்தின் மூலம் வாங்கிய சொத்தின் மீது  முதல் மீது முதல் மனைவி உரிமை கோரலாம். முதல் மனைவி மற்றும் அவரது கணவரின் இருவர் பெயரிலும்  சொத்து பதிவு செய்யப்பட்டிருந்தால்,  அவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்புக்கு உகந்த பங்கை நீதிமன்றம் முடிவு செய்து, அதற்கேற்ப விவாகரத்தின் போது சொத்தை பிரித்தளிக்கும். 

சொத்து கணவரின் பெயரில் பதியப்பட்டிருந்தால் மற்றும் அது அவரால் தனிப்பட்டு வாங்கப்பட்டிருந்தால், விவாகரத்து சமயத்தில் இந்து திருமணச்சட்டம் 1955 இன் கீழ் முதல் மனைவி அந்த சொத்தில் உரிமை கோர முடியாது. அந்தச்சொத்து திருமணத்திற்குப் பிறகு வாங்கப்பட்டது என்பது அந்த விஷயத்தில் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. ஆனால் இரண்டாவது மனைவி அந்த குறிப்பிட்ட சொத்தில் உரிமை கோரலாம். 

முதல் மனைவியை  விவாகரத்து செய்யாது நடத்தப்பட்ட  இரண்டாவது திருமணம்

முதல் மனைவி  விவாகரத்து செய்யப்படாத நிலையில் இரண்டாவது திருமணம் நடந்தால், இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லாது என்ற காரணத்தினால்,  இரண்டாவது மனைவி தனது கணவரின், சொத்தில் உரிமை கோர முடியாது.

இஸ்லாம் மதத்தில் இருதார திருமணம் அனுமதிக்கப்பட்ட ஒன்று ( ஆண்கள் சட்டப்பூர்வமாக நான்கு மனைவிகளை மணந்து கொள்ளலாம்) என்றாலும், முகமதியர்களில் ஆண்கள் தங்களின் முதல் மனைவி மற்றும் குழந்தைகளை பராமரிக்க இயலாதவராக இருந்தால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளமுடியாது.

“ஒரு முகமதிய  ஆண்  தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகளை பராமரிக்க இயலாதவராக இருந்தால் அப்போது மேலே குறிப்பிட்ட புனித குரானின் ஆணையின் படி அவரால் இன்னொரு பெண்ணை மணந்து கொள்ளமுடியாது”  என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒரு சமீபத்திய வழக்கில் தீர்ப்புக் கூறியிருந்தது

 

கணவன் சுயமாக சம்பாதித்த சொத்தில் இரண்டாவது மனைவிக்கு உள்ள உரிமை

சுயமாக சம்பாதித்த சொத்து ஒரு நபரின் வாழ்நாளில் அவருக்கு மட்டுமே சொந்தமாகும் மற்றும் அவர்களின் மறைவுக்குப் பிறகு அதை அவருக்கு விருப்பமான யாருக்கு வேண்டுமானாலும் ஒரு உயில் மூலமாக விட்டுச்செல்லலாம். அவர்களின் வாழ்நாளின் போதும் கூட அந்த சொத்துக்களை அவருக்கு விருப்பமான யாருக்கு வேண்டுமானாலும் தானமாக எழுத்தித்தரலாம்.. இதற்கு அர்த்தம் என்னவென்றால், இரண்டாவது மனைவியும் அவரது கணவர் எந்த ஒரு உயிலையும் எழுதாது மரணமடைந்து விட்டால் அவரது கணவனின் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தில் உரிமை கோரலாம் மற்றும் குறிப்பிட்ட சமய விதிகளுக்கு பொருத்தமான வகையில் அந்த சொத்து பிரிக்கப்படும்.

மரணமடைந்த் கணவர் தனது சுய சம்பாத்தியத்தில் சேர்த்த சொத்தை எந்த ஒருவருக்கும் ஒரு உயில் மூலமாக விட்டுச்செந்திருந்தால் அது குறித்து அந்த இரண்டாவது மனைவிக்கு அவரது மரணத்திற்குப் பின்னர் தெரியவந்தால், அம்மாதிரியான சொத்தில் சட்டப்பூர்வமாக பங்கு கோரும் உரிமை ஆருக்கு இல்லை. ஆனாலும் அந்த உயிலை வேறு இதர காரணங்களுக்காக எதிர்த்து வழக்குத் தொடரும் தேர்வு எப்போதும் இருக்கிறது.

 

இரண்டாவது திருமணம்: இரண்டாவது மனைவியின் பராமரிப்புக்கான உரிமை

கணவருடனான இரண்டாவது மனைவியின்  திருமணம், சட்டத்தின் பார்வையில் செல்லத்தாக்காததாக  கருதப்படுவதால்,  1974 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டபிரிவு  125 இன் கீழ் இரண்டாவது மனைவி, தனது கணவரிடமிருந்து பராமரிப்பு உரிமையை பெறமுடியாது. “ சட்டப்படி செல்லத்தகாத திருமண பந்தத்தின் இரண்டாவது மனைவியின் குழந்தைகள் மைனர்களாக இருக்கும் வரை தங்களைத் தாங்களே பராமரிக்க முடியாத நிலையில் பராமரிப்பைக் கோரலாம். மேலும் அவர்களுக்கு உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மற்றும் அவர்களால் தங்களைத் தாங்களே பராமரிக்க முடியாமல் இருக்கும் பட்சத்தில் வயது வந்த பிறகும் (அதாவது, 18 வயதுக்குப் பிறகு), தங்கள் தந்தையிடமிருந்து அவர்கள் பராமரிப்பை கோரலாம். இருப்பினும், இந்த விதி, இரண்டாவது மனைவியின் திருமணமான மகளுக்குப் பொருந்தாது,” என்று லக்னோவைச் சேர்ந்த சொத்துச் சட்ட நிபுணர் வழக்கறிஞர் பிரபன்சு மிஸ்ரா விளக்குகிறார்.

கணவருடனான திருமணம் செல்லாததாக இருக்கும் நிலையிலுள்ள  இரண்டாவது மனைவி, தனது கணவரின் முந்தைய திருமணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்பதை நிரூபிக்க முடிந்தால், அவர் பராமரிப்புக்கான செலவுகளைக் கோரலாம் என்று சில வழக்குகளில் தீர்ப்பு வழங்கும்போது நீதிமன்றங்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றன 

அத்தகைய சூழ்நிலையில், பராமரிப்பு வழங்க மறுத்த தனது கணவரை இரண்டாம் மனைவி நீதிமன்றத்தின் முன் நிறுத்தலாம். இழுக்கலாம். இருப்பினும் இரண்டாவது திருமணம் நடந்தபோது, ​​ முதல் திருமணம் குறித்து தனக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டது என்பதை அவர்  நிரூபிக்க வேண்டியதிருக்கும் என்று  மிஸ்ரா மேலும்  கூறுகிறார்.

இருப்பினும், வெவ்வேறு நீதிமன்றங்கள் இந்த அம்சத்தை வெவ்வேறு விதமாகக் கையாண்டிருக்கின்றன.  2021 ஆம் ஆண்டில், மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் அமர்வு, தனது முதல் திருமணத்தை வெளியிடாமல் மறைத்திருந்தாலும், இரண்டாவது மனைவியை சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டவராக அழைக்க முடியாது என்று தீர்ப்பளித்தது

“எதிர்மனுதாரரின் (கணவர்) முதல் திருமணம் மேல்முறையீட்டாளருக்கு (இரண்டாவது மனைவி) தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்று ஒரு வாதத்திற்காக கருத்தில் கொண்டாலும், அதன் அடிப்படையில் எதிர்மனுதாரரின் சட்டப்பூர்வமான மனைவி என்ற என்ற மேல்முறையீட்டாளரின் வாதத்தை ஏற்க முடியாது” என்று அதில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது

 

இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகளின் சொத்து உரிமைகள்

இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும்  – அந்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியானதாகவோ அல்லது செல்லத்தகாததாகவோ எப்படி இருந்தாலும் – அவர்கள் இந்து திருமணச் சட்டப் பிரிவு 16 இன் கீழ் சட்டபூர்வமான வாரிசுகள் என்று அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், முதல் மனைவியின் குழந்தைகளுக்கு அவர்களின் தந்தையின் சொத்தின் மீதுள்ள  அதே சம உரிமை அவர்களுக்கும்உண்டு, அவர்கள் தங்கள் தந்தையின் -1 நிலை  சட்டப்பூர்வ வாரிசுகள்  மற்றும் மரணமடைய நேர்ந்தால், இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 இன் விதிகளின்படி சொத்தின் வாரிசுரிமையைப் பெறுவார்கள். 

இரண்டாவது திருமணம் சட்டவிரோதமானதாக இருந்தாலும், இரண்டாவது திருமணத்தி மூலம் பிறக்கும் குழந்தைகள் தந்தையின் சொத்துக்களுக்கு உரிமை கோரலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றமும்  கருத்துத் தெரிவித்திருக்கிறது. 

இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகள் பாரம்பரிய சொத்தை மற்ற 1 ஆம் நிலை வாரிசுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும் அதே வேளையில், அவர் சுய சம்பாத்தியத்தில்  வாங்கிய சொத்துக்களுக்கு அத்தகைய நோக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு  உயிலை விட்டுச் சென்றால், அவற்றின் முழு  உரிமையாளர்களாகவும் அவர்கள் மாறலாம்.

அம்மாதிரியான ஒரு உயில் இல்லாவிட்டால், சுய சம்பாத்தியத்தில்  வாங்கிய சொத்துக்கு இறந்தவரின் அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளாலும் உரிமை கோரப்படும்.

மேலும் காண்க:   இந்து வாரிசுரிமைச்சட்டம்  2005 இன் கீழ் ஒரு இந்து குடும்ப பெண் குழந்தைக்கு உள்ள சொத்துரிமை.

 

1 ஆம் நிலை சட்டபூர்வமான வாரிசுகள் யார்?

உயில் எதுவும் விட்டுச்செல்லாமல்(இண்டஸ்டேட்-intestate) மரணமடையும் ஒரு ஹிந்து நபரின் சொத்துக்கள் முதலாவதாக அவரது 1 ஆம் நிலை வாரிசுகளுக்கு வழங்கப்படும். ஒரு 1 ஆம் நிலை வாரிசு எனும் நபர்களில் உள்ளட்ங்குபவர்கள்:

  • மகன்கள்
  • மகள்கள்
  • விதவை
  • அம்மா
  • இறந்து போன மகனின் மகன்
  • இறந்து போன  மகனின் மகள்
  • இறந்து போன  மகளின் மகன்
  • இறந்து போன  மகளின் மகள்
  • இறந்து போன  மகனின் விதவை மனைவி
  • இறந்து போன  மகனின் இறந்து போன மகன் பேரன்
  • இறந்து போன  மகனின் இறந்து போன மகன் பேத்தி
  • இறந்து போன  மகனின் இறந்துபோன மகனின் விதவை மனைவி
  • இறந்து போன  மகளின் இறந்து போன மகள் பேரன்
  • இறந்து போன  மகளின் இறந்து போன மகள்  பேத்தி
  • இறந்து போன  மகனின்  இறந்து போன மகள் பேத்தி
  • இறந்து போன  மகளின் இறந்து போன மகன் பேத்தி

2 ஆம் நிலை சட்டபூர்வமான வாரிசுகள் யார்

1 ஆம் நிலை வாரிசுகள் அவன்/அவள் சொத்துக்கு உரிமை கொண்டாட இல்லாத நிலையில் மரணமடைந்த ஒருவரின் சொத்துக்கள் அவரது 2 ஆம் நிலை வாரிசுகளிடையே பகிர்ந்து கொள்ளப்படும்.

  • தந்தை
  • மகனின் மகளின் மகன் (அல்லது பேரன்)
  • மகனின் மகளுடைய மகள் (அல்லது கொள்ளுப் பேத்தி)
  • சகோதரன்
  • சகோதரி
  • மகளுடைய  மகனின் மகன்
  • மகளுடைய மகளின் மகள்
  • மகளுடைய  ‘மகளின் மகன்
  • மகளின் மகளுடைய  மகள்
  • சகோதரரின் மகன்
  • சகோதரியின் மகன்
  • சகோதரரின்  மகள்
  • சகோதரியின் மகள்
  • தந்தையின் தந்தை (தாத்தா)
  • தந்தையின் தாய்(பாட்டி)
  • தந்தையின் விதவை
  • சகோதரனின் விதவை
  • தந்தையின் சகோதரர்
  • தந்தையின் சகோதரி
  • தாயின் தந்தை (தாத்தா)
  • தாயின் தாய்(பாட்டி)
  • தாயின் சகோதரர்
  • தாயின் சகோதரி (சித்தி/பெரியம்மா)

மேலும் காண்க:  உரிமையாளரின் மரணத்திற்குப் பிறகு சொத்து உரிமை மாற்றம்  குறித்து அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்

 

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள் (FAQs) 

இரண்டாவது மனைவியின் சட்டபூர்வமான உரிமைகள் என்ன?

இரண்டாவது மனைவியின் சட்டபூர்வமான உரிமைகள் அவரது திருமணத்தின் சட்டபூர்வமான அங்கீகாரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. திருமணம் சட்டப்பூர்வமாக செல்லத்தக்கதாக இருந்தால், இரண்டாவது மனைவியும் முதல் மனைவிக்குரிய அனைத்து உரிமைகளையும் பெறுவார்

இரண்டாவது மனைவிக்கு அவரது கணவனின் சொத்து மீது உள்ள உரிமைகள் என்ன?

இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி, முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு பிறகு அல்லது முதல் மனைவியின் மறைவுக்குப் பிறகு இரண்டாவது திருமணம் நடந்திருந்தால், அப்போது இரண்டாவது மனைவிக்கும் அவரது கணவரின் சொத்தில் முதல் மனைவிக்குள்ள அதே உரிமை உண்டு.

இரண்டாவது மனைவி முதல் மனைவியின் சொத்தில் உரிமை கோர முடியுமா?

முடியாது. முதல் மனைவிக்கு சட்டப்படியான சொந்தமாக உள்ள சொத்துக்களில் இரண்டாவது மனைவி உரிமை கோர முடியாது

முதல் மனைவி உயிரோடிருக்கும் போதே ஒரு இந்து இரண்டாவது திருமணம் செய்து கொள்வது சட்டப்படி செல்லுமா?

முதல் மனைவி உயிரோடிருக்கும் போது அல்லது முதல் மனைவியுடனான விவாகரத்து தீர்வாகாமல் நிலுவையில் இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கவில்லை.

இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு உள்ள சொத்துரிமைகள் என்ன?

முதல் மனைவியின் குழந்தைகளுக்கு உள்ள அதே உரிமைகள் இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கும் உள்ளது. அந்த நபரின் குழந்தைகள் அனைவரும் 1 நிலை வாரிசுகளின் வகைப்பாட்டில் அடங்குவார்கள் மற்றும் பாரம்பரிய சொத்துக்களில் சரிசமமான பங்கைப் பெறுவார்கள்

Was this article useful?
  • 😃 (4)
  • 😐 (1)
  • 😔 (0)

Recent Podcasts

  • 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 693 மில்லியன் டாலர்கள் கொண்ட ரியல்டி முதலீடுகளின் வருகைக்கு குடியிருப்புத் துறை தலைமை வகிக்கிறது: அறிக்கை
  • இந்தியாவின் முதல் வந்தே பாரத் மெட்ரோவின் சோதனை ஓட்டம் ஜூலை'24ல் தொடங்கும்
  • மைண்ட்ஸ்பேஸ் பிசினஸ் பார்க்ஸ் REIT FY24 இல் 3.6 msf மொத்த குத்தகையை பதிவு செய்தது
  • 24ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 448 உள்கட்டமைப்பு திட்டங்களின் சாட்சிச் செலவு 5.55 லட்சம் கோடி ரூபாய்: அறிக்கை
  • அதிர்ஷ்டத்தை ஈர்க்க உங்கள் வீட்டிற்கு 9 வாஸ்து சுவர் ஓவியங்கள்
  • செட்டில்மென்ட் பத்திரத்தை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்