Site icon Housing News

வாஸ்து அடிப்படையில் உங்கள் வீட்டிற்க்கான சரியான வண்ணங்களை எப்படித் தேர்வு செய்வது

How to choose the right colours for your home, based on Vastu

வண்ணங்களால் மக்களுக்கு உளவியல் மாற்றம் ஏற்படும் என்பது  நிரூபிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க உண்மை ஆகும்.ஒரு மனிதன் தனது வாழ் நாளின் முக்கிய பகுதியை செலவிடுகிற இடம் அவனது வீடே ஆகும்.குறிப்பிட்ட வண்ணங்கள் மக்களில் தனித்துவமான உணர்ச்சிகளை தூண்டுகின்றன,ஒரு வீட்டிலுள்ள நிறங்கள் சரியான சமநிலையைக் கொண்டிருப்பதால், புதியதாக உணரவும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும் முக்கியமானதாக இருக்கும்.

 

திசைகளுக்கு ஏற்ப,உங்கள் வீட்டிற்க்கான நிறங்கள்

விகாஸ் சேத்தி, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் A2ZVastu.com- ன்  நிறுவனர் , திசை மற்றும் வீட்டின் உரிமையாளரின் பிறந்த தேதி அடிப்படையில் நிறங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்.

“ஒவ்வொரு திசையும் ஒவ்வொரு குறிப்பிட்ட நிறத்தை கொண்டிருக்கிறது, ​​சில நேரங்களில் அது வீட்டின் உரிமையாளருக்கு பொருந்தாது. ஆகையால், வீட்டின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியது  வாஸ்து சாஸ்த்ராவின் வண்ணங்களின் பொதுவழிக்காட்டுதல் ஆகும்,நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான இன்றியமையாத புள்ளிகள்.

கருப்பு , சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு போன்ற வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது வீட்டு உரிமையாளர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையோடு இருக்கவேண்டும், இந்த நிறங்கள் ஒவ்வொரு நபருக்கு பொருந்தாது, “என சேத்தி விளக்குகிறார்.

 

உங்கள் வீட்டின் பகுதிக்கு ஏற்ப  வண்ண வழிகாட்டுதல்கள் தேவை

உங்கள் வீட்டின் ஒவ்வொரு பிரிவுக்கும் ஆற்றல் , அளவு மற்றும் திசைக்கு ஏற்ப நிறங்கள் தேவை என்று   வல்லுநர்கள்சுட்டிக்காட்டுகின்றனர்.உங்கள்வீட்டின் பிரிவின் நிறம் , அதன் பயன்பாட்டிற்கேற்ப இருக்க வேண்டும்.ஆஸ்ட்ரோ-எண்கணிதா், கௌரவ் மித்தால் கூறியதாவது, “ஒரு வீட்டில் வசிக்கும் மக்கள் வீட்டிற்கு வண்ணம் பூசும் போது பின்வரும் புள்ளிகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்:

பிரதான படுக்கையறை:வெறுமனே, பிரதான படுக்கையறை தென்மேற்க்கு திசையில் இருக்க வேண்டும், எனவே, நீல நிறத்தால் வரையப்பட்டிருக்க வேண்டும்.

விருந்தினர் அறை / வரவேற்பரை:வடமேற்கு திசை விருந்தினர் அறை / வரவேற்பு அறைக்கு சிறந்த இடமாகும், எனவே, இந்த திசையில் உள்ள  விருந்தினர் அறைக்கு வெள்ளை நிறத்தைக் கொண்டு வண்ணம் பூச வேண்டும்.

குழந்தைகள் அறை:வடமேற்கு திசை வளரும்  குழந்தைகளுக்கு மற்றும் படிப்பதற்கு வெளியே செல்லும் குழந்தைகளுக்கு உகந்த இடமாக உள்ளது.வடமேற்கு திசை சந்திரனால் ஆளப்படுகிறது,எனவே, இந்த திசையில் உள்ள குழந்தைகளின் அறைக்கு வெள்ளை நிறத்தால் வண்ணம் பூசப்பட வேண்டும்.

சமையல் அறை:தென்கிழக்கு மண்டலம் சமையலறைகளுக்கு ஏற்றதாகும், எனவே சமையலறையின் சுவர்களுக்கு ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தால் வண்ணம் பூசப்பட வேண்டும்.

குளியல் அறை:வடமேற்கு திசை குளியலறைக்கு சிறந்த இடம். எனவே குளியலறைக்கு வெள்ளை நிறத்தால் வண்ணம் பூச வேண்டும்.

முகப்புக் கூடம்:வெறுமனே, முகப்புக் கூடம் வடக்கு கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் தான் இருக்க வேண்டும், எனவே அதனை  மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தால் வண்ணம் பூசப்பட வேண்டும்.

வீட்டின் வெளிப்புற நிறம்:வீட்டின் வெளிப்பகுதி நிறம், அதன் உரிமையாளர்களைச் சாா்ந்தது. அதுப்போல மஞ்சள்கலந்த-வெள்ளை அல்லது வெள்ளை அல்லது மெல்லிய ஊதா நிறம் அல்லது ஆரஞ்சு போன்ற நிறங்கள், அனைத்து ராசி மக்களுக்கு ஏற்றது. “

 

நீங்கள் உங்கள் வீட்டில் தவிர்க்க வேண்டிய நிறங்கள்

லேசான நிறங்கள் எப்போதும் நல்லது என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனா். சிவப்பு, பழுப்பு, சாம்பல் மற்றும் கருப்பு போன்ற இருண்ட நிழல்கள் அனைவருக்கும் பொருந்தாது, ராகு, சனி, செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய உமிழ்ந்த கோள்களைக் குறிக்கின்றன. “சிவப்பு, அடா்ந்த மஞ்சள் மற்றும் கருப்பு தவிர்க்கப்பட வேண்டிய நிறங்கள். பொதுவாகவே, இந்த வண்ணங்கள் அதிக சக்திவாய்ந்தது , உங்கள் வீட்டில் உள்ளே உள்ள ஆற்றல் முறையை அது  தொந்தரவு செய்யலாம் ,என்று சேத்தி எச்சரிக்கிராா்”.

 

Was this article useful?
  • 😃 (3)
  • 😐 (0)
  • 😔 (0)
Exit mobile version