Site icon Housing News

மதுரை மாநகராட்சி சொத்து வரி: நீங்கள் அறிய வேண்டிய முழு விவரம்

Madurai Corporation property tax: All you should know

கோயில் நகரமான மதுரையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தாங்கள் வசிக்கும் வீடு மற்றும் சொத்துகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மதுரை நகராட்சி கார்ப்பரேஷனில் சொத்து வரி செலுத்த வேண்டும். மதுரை மாநகராட்சி சொத்து வரி வசூல் மூலம் கணிசமான தொகையை வருவாக ஆண்டுதோறும் ஈட்டுகிறது. இது அந்நகரின் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவிகரமாக உள்ளது. மொத்தமாக 148 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகளுடன் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மதுரை மாநகராட்சியில் மண்டலம் 1 என்பது வார்டு 1 முதல் 23 வரையிலும், மண்டமல் 2 என்பது வார்டு 24 முதல் 49 வரையிலும், மண்டலம் 3 என்பது வார்டு 50 முதல் 74 வரையிலும், மண்டலம் 4 என்பது வார்டு 75 முதல் 100 வரையிலும் கொண்டுள்ளன. மதுரை மாநகராட்சி (Madurai Corporation) வளர்ச்சிப் பணிகள் மற்றும் அனைத்து சேவைகளையும் குடிமக்கள் பயன்பெறும் வகையில் செயலாற்ற உறுதுணைபுரிவதற்கு, மதுரையில் வசிக்கும் ஒவ்வொருவரும் தமது சொத்துக்கான வரியை மாநகராட்சியில் செலுத்துவது கடமையாகும்.

இதையும் வாசிக்க: பிசிஎம்சி சொத்து வரி மசோதா 2021-22 பற்றிய முழு விவரம்

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி (Property tax) எப்படி செலுத்துவது என்பதைப் பற்றி விவரிக்கிறது இந்தக் கட்டுரை. மதுரை கார்ப்பரேஷனில் சொத்து வரியை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் செலுத்தும் வசதிகள் உள்ளன. குறிப்பாக, தற்போது நிலவும் பெருந்தொற்று காரணமாக ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதையே மதுரை மாநகராட்சி ஊக்குவிக்கிறது.

இதையும் வாசிக்க: சென்னை சொத்து வரி கால்குலேட்டரை பயன்படுத்துவது எப்படி?

 

மதுரை மாநகராட்சி சொத்து வரி கணக்கீடு

மதுரை மாநகராட்சியில் தனிநபர்கள் சொத்து வரி செலுத்துவதற்காக கணக்கிடும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய காரணிகள் உள்ளன. வசிப்பிடம் அல்லது வணிக இடம் எதுவாக இருந்தாலும், வரி செலுத்தப்பட வேண்டிய சொத்து அமைந்துள்ள அல்லது கட்டபட்டுள்ள இடம், சொத்தின் சராசரி மதிப்பு, சொத்தின் வயது, கட்டப்பட்ட கட்டிடத்தின் வகை, அதாவது ஒற்றை அல்லது பல தளங்கள் கொண்டவை மற்றும் ஆக்குபன்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு சொத்து வரி கணிகக்கிடப்பட வேண்டும். மதுரை சொத்து வரி இணையதளத்தில் உள்ள சொத்து வரி கால்குலேட்டர் மூலம் குடிமக்கள் தங்களது சொத்துக்களை சுயமதிப்பீடு செய்த பின் சொத்து வரி செலுத்தலாம்.

கேரள சொத்து வரி பற்றிய முழு விவரம் அறிக

 

ஆன்லைன் மூலம் மதுரை மாநகராட்சி சொத்து வரி

மதுரை மக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியை, https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் செலுத்தலாம்.

 

 

மதுரை மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் வீட்டு வரி செலுத்த மதுரை சொத்து வரி இணையதளத்தில் பதிவு செய்த பயனர்களாக இருப்பின் தங்கள் மொபைல் எண் அல்லது இமெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொண்டு லாக் இன் செய்ய வேண்டும். அவ்வாறு அல்லாமல் முதல் முறையாக ஆன்லைன் கட்டணம் செலுத்துவோர்களாக இருப்பின், முதலில் மதுரை மாநகராட்சி கார்ப்பரேஷனில் தங்கள் விவரங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். இதற்கு பதிலாக, மேற்கண்டவாறு பதிவு செய்யாமல் ஆன்லைனில் சொத்து வரி செலுத்த மதுரை சொத்து வரி வலைதளத்தின் https://tnurbanepay.tn.gov.in/IntegratedPaymentNew1.aspx இணைப்பில் உள்ள ‘Quick Pay’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து வரியை செலுத்தலாம்.

இதையும் வாசிக்க: ஜிவிஎம்சி சொத்து வரி செலுத்தும் வழிமுறைகளை தெரிந்துகொள்க

 

 

மதுரையில் ஆன்லைன் மூலமாக வீட்டு வரி செலுத்த மேலே கொடுக்கபட்டுள்ள இணையதள முகவரிக்குச் சென்று அங்கு ‘Property Tax’ ஆப்ஷனில் கிளிக் செய்து, மதிப்பீட்டு எண் மற்றும் பழைய மதிப்பீட்டு எண் இரண்டையும் கொடுத்து search பட்டன் மீது க்ளிக் செய்ய வேண்டும். அந்தப் பக்கத்தில், கொடுக்கபட்ட அசெஸ்மென்ட் நம்பர் தொடர்பான மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சொத்து வரிக்கு உண்டான கட்டண விவரங்கள் காணக் கிடைக்கும். கொடுக்கபட்ட அசெஸ்மென்ட் நம்பருக்கு ஏற்ற சொத்து வரி விவரங்களை அந்த வலைதளப் பக்கத்தில் சரிபார்த்த பின்பு ‘View Payment History’ எனும் ஆப்ஷன் மீது க்ளிக் செய்து கட்டண விவரங்களைப் பார்க்கலாம்.

இதையும் வாசிக்க: கேஎம்சி சொத்து வரி பற்றிய முழு விவரம்

அடுத்த பக்கத்தில், ‘My Properties’ எனும் பிரிவை க்ளிக் செய்து சொத்துப் பட்டியல், அசெஸ்மென்ட் நம்பரை சேர்த்தல், சொத்துகளை டெலிட் செய்தல் ஆகிய ஆப்ஷன்களில் சரிபாருங்கள். ‘My Tax’ எனும் பிரிவை க்ளிக் செய்து உங்கள் சொத்துக்காக மதுரை மாநகராட்சியில் விதிக்கப்பட்டுள்ள சொத்து வரியை ‘Tax Calculator’ மூலம் கணக்கிட்டு மற்றும் தேவைபடும் விவரங்களை அளிக்க வேண்டும்.

இதையும் வாசிக்க: மைசூர் மாநகராட்சி எம்சிசி சொத்து வரியை ஆன்லைனில் செலுத்துவது எப்படி?

பிறகு ‘Make Payment’ எனும் பிரிவை கிளிக் செய்து, அங்கு தரப்பட்டுள்ள ஆன்லைன் பேமன்ட் ஆப்ஷன்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து மதுரை சொத்து வரியை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். NEFT, நெட் பேங்கிங், UPI மற்றும் கிரெடிட், டெபிட் கார்டுகள் ஆகியவை மூலம் கட்டணங்களைச் செலுத்தலாம். ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் புகார்கள் இருப்பின் ‘My Grievances’ எனும் பிரிவை கிளிக் செய்து சொத்து வரி செலுத்துவது குறித்து புகார் அளிக்கலாம். ஏதேனும் சேவைக்கான வேண்டுகோள் அல்லது முந்தைய வேண்டுகோள் எந்தளவு நிறைவேற்றபட்டுள்ளது என்பனவற்றுக்கு ‘My Request’ எனும் பிரிவை க்ளிக் செய்ய வேண்டும். மேலும், இணையதளத்தை பார்வையிட்டு, தாங்கள் அடுத்து சொத்து வரி செலுத்த வேண்டிய தேதியையும் தெரிந்துகொள்ளலாம்.

இதையும் வாசிக்க: ஆன்லைன் மூலம் ஜிவிஎம்சி தண்ணீர் வரி பற்றிய முழு விவரம்

 

 

இதையும் வாசிக்க: சென்னை சொத்து வரி பற்றிய முழு விவரம்

 

மதுரை மாநகராட்சி சொத்து வரி செலுத்துவதற்கான தொடர்பு விவரங்கள்

மதுரை மாநகராட்சி சொத்து வரி தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள:

மதுரை மாநகராட்சி ஆணையர்

தொலைபேசி எண்: 0452253521

வாட்ஸ்அப் எண்: 8428425000

இமெயில் ஐடி:  commr.madurai@tn.gov.in

இதையும் வாசிக்க: ஜிஎச்எம்சி சொத்து வரி பற்றிய முழு விவரம்

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

மதுரை மாநகராட்சி இணையதளத்தில் செலுத்தப்படக் கூடிய மற்ற வரிகள் என்னென்ன?

மதுரை மாநகராட்சி வலைதளத்தில் சொத்து வரி மட்டும் அல்லாமல் தண்ணீர், பாதாள வடிகாலுக்கான கட்டணங்கள், தொழில் வரி, வரிகள் அல்லாத மற்ற வருவாய்களுக்கானவை செலுத்தலாம்.

ஆன்லைனில் சொத்து வரி செலுத்தவே பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஆன்லைனில் கட்டண சேவை என்பது ஆரம்பம் முதல் இறுதி வரை அடுத்தவர் தலையீடு இல்லாமல், நாமே முழுமையாக செய்து முடிக்க வழிவகுக்கிறது. மேலும், வரிசைகளில் நிற்பதை தவிர்த்து நேரத்தை மிச்சப்படுத்தவும் உதவுகிறது.

 

Was this article useful?
  • ? (0)
  • ? (0)
  • ? (0)
Exit mobile version