Site icon Housing News

கார்பெட் ஏரியா, பில்ட் அப் ஏரியா & சூப்பர் பில்ட் அப் ஏரியா என்றால் என்ன?

Real Estate Basics Part 1 - Carpet Area, Built-Up Area & Super Built-Up Area

ஒவ்வொன்றும் உண்மையில் என்னவென்று தெரியாமல்  டெவலப்பர்கள் உங்களை ஒரு வீடு வாங்கும் பயணத்திற்கு எவ்வாறு சரியாக அழைத்து செல்ல முடியும்? எனினும், அது ஒரு ராக்கெட் அறிவியல் அல்ல. ஒரு சிறிய வாசிப்பு அல்லது படித்தலின் மூலம் அக்கூற்றுகளை முழுமையாகவும் தெளிவாகவும்  புரிந்துகொள்ளலாம். இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ரியல் எஸ்டேட் அடிப்படைகளில் சில.

 

கட்டட உட்பரப்பு / கார்பெட் ஏரியா :

கார்பெட் ஏரியா என்பது  உண்மையில் தளப்பரப்பு அல்லது கட்டட உள்ளுறை பரப்பால்  மூடப்பட்ட ஒரு பகுதியாகும், அல்லது அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உட்சுவர்கள் தடிமனை தவிர்த்து மீதம் உள்ள இடமாகும். கார்பெட் ஏரியாவில் பொதுவான இடங்களான முகப்பு அறை படிக்கட்டுகள், லிஃப்ட், விளையாட்டு இடம் போன்றவை உள்ளடங்காது. கார்பெட் ஏரியா என்பது ஒரு குடியிருப்பு பிரிவில்  உங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள வாழ்வதற்கான இடம் ஆகும். எனவே, நீங்கள் எப்பொழுதும் ஒரு வீட்டைத் தேடும்போது, கார்பெட் பகுதியை ஆராய்ந்து முடிவை எடுப்பது உங்களுக்கு நன்மை பயக்கும், ஏனெனில் அந்த சதுர அளவே உங்களுக்கென்று பிரத்யோகமாக ஒதுக்கப்பட்ட மணை பரப்பளவாகும். கார்பெட் ஏரியாவில் கவனத்தை செலுத்தினால் தான் சமையலறை, படுக்கையறை, வாழறை போன்றவற்றிற்காக எவ்வளவு சதுர அடி ஒவ்வொன்றிற்கும் வழங்கப்பட்டிருக்கிறது என்று நம்மால் புரிந்துகொள்ள உதவும். இப்போதெல்லாம்,  கட்டுநர்கள் பலர் அடுக்கு மாடிக் கட்டிடங்களின் முதலில் கட்டட உட்பரப்பு பகுதிகளைக்கூட குறிப்பிடுவதில்லை, பொதுவாக கட்டப்பட்ட பகுதி அல்லது சூப்பர் கட்டடப்பரப்பு பகுதியின் அடிப்படையிலையை கட்டணத்தை வசூலிக்கின்றன. கட்டடப் பரப்பின் 70% பகுதியே கட்டட உள்ளுறை(கார்பெட் ஏரியா) பரப்பின் அளவாகும்.

 

கட்டடப்பரப்பு / பில்ட் அப் ஏரியா

கட்டட உட்பரப்பு பகுதி மற்றும் சுவர் பகுதிகளை  இரண்டும் சேர்ந்த பின் வரும் பகுதி என்பது கட்டடப்பரப்பு அல்லது பில்ட் அப் ஏரியா ஆகும். இங்கு, சுவர் பகுதி என்பது தரையின் மேற்பரப்பு பகுதியை குறிப்பதல்ல மாறாக, வீட்டுப் பிரிவின் சுவர்களின் தடிமன் பகுதியாகும். கட்டடப்பரப்பில் சுமார் 20%  சுவர்கள் கொண்டிருக்கும் பகுதி என்பதால் முற்றிலும் கண்ணோட்டத்தை மாற்றுகிறது. கட்டடப்பரப்பில் மேலும் அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்பட்ட மற்ற பகுதிகளான உலர் பால்கனி, மலர் படுக்கைகள் போன்றவற்றையும் உள்ளடக்கியது. இது இன்னும் 10% வரை கட்டடப்பரப்பில் சேர்க்கிறது. எனவே நீங்கள் வீட்டின் சதுர அளவு பற்றி நினைக்கும் போது, உங்களெக்கென்ற பயன்படுத்தக்கூடிய பகுதி கட்டடப் பகுதியில் 70% மட்டுமே. உதாரணத்திற்கு 1200 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு இடம் அமைக்கப்பட்டிருந்தால், அதில் சுமார் 30% (360 சதுர அடி) வரை உண்மையில் பயன்படுத்தக்கூடிய அல்ல, நீங்கள் பயன்படுத்தக்கூடிய உண்மையான பகுதி மீதமுள்ள 840 சதுர அடி மட்டுமே.

 

சூப்பர் கட்டடப்பரப்பு / சூப்பர் பில்ட் அப் ஏரியா:

சூப்பர் பில்ட் அப் பகுதி ஒரு பில்டரின் எப்போதும் உள்ள சிறந்த நண்பர்களைப் போன்றது!கட்டடப்பரப்பு, தூக்கும் லாபி, லிஃப்ட், முதலியவற்றை உள்ளடக்கிய பகுதி மற்றும் பொதுவான பகுதியை  சேர்ப்பதன் மூலம் கணக்கிடப்படும் பகுதி சூப்பர் பில்ட் அப் பகுதியாகும். சில சந்தர்ப்பங்களில் கட்டுநர்கள் குளம், தோட்டம் மற்றும் கிளப்ஹவுஸ் போன்றவற்றையும் பொதுவான பகுதியில் சேர்த்து விடுகிறார்கள். ஒரு டெவலப்பர் / கட்டுநர்கள் உங்களிடம் சூப்பர் பில்ட் அப் பகுதியின் அடிப்படையிலேயே வசூலிக்கிறார், இதுவே “விற்பனைக்குரிய பகுதி” என்றும் அறியப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தை இப்போது பார்க்கலாம், ஒரு சதுர அடியின் விலை ரூ. 2000 என்றும்  சூப்பர் கட்டடப்பரப்பு 1,200 சதுர அடிகளும் உள்ளதென்றால் அதன் அடிப்படை செலவு மட்டும் ரூ.24 லட்சம் வரை வரும்.

ஒரே மாடியில் ஒன்றுக்கும் மேற்பட்ட அடுக்குகள் இருந்தால், சூப்பர் கட்டடப் பகுதி வேறு விதமாக கணக்கிடப்படுகிறது. அது எவ்வாறு என்று இங்கே பார்ப்போம்.

– அபார்ட்மென்ட் 1-ன் பரப்பு 1000 சதுர அடி ஆகும்.

– அபார்ட்மென்ட் 2-ன் பரப்பு 2000 சதுர அடி ஆகும்.

-மொத்த பரப்பளவு 1500 சதுர அடி ஆகும், இதில் அபார்ட்மென்ட் 1 இன் பொதுவான பகுதி 500 சதுர அடியில் உள்ளது, அதே நேரத்தில் அபார்ட்மென்ட் 2 இன் பொதுவான பகுதி 1,000 சதுர அடியில் உள்ளது.

இதன்படி, அபார்ட்மென்ட் 1 இன் சூப்பர் சூப்பர் கட்டடப்பரப்பு 1,500 சதுர அடியாகவும் மற்றும் அபார்ட்மென்ட் 2 இன் சூப்பர் சூப்பர் கட்டடப்பரப்பு 3,000 சதுர அடியாகவும் கருதப்படும். இந்த உதாரணத்தில் காட்டபட்டுள்ள சூப்பர் கட்டடப்பரப்பானது அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடப்பரப்பு பகுதிகளின் (இந்த சந்தர்ப்பங்கள் 1: 2) விகிதத்தில் பிரிக்கப்பட்டுள்ளது.

கார்பெட் ஏரியா பில்ட் அப் ஏரியா  & சூப்பர் பில்ட் அப் ஏரியா மற்றும் பிற ரியல் எஸ்டேட் சொற்களுக்கு இடையில் உள்ள அடிப்படை வித்தியாசத்தை நாம் பலரில் அறியாமலேயே உள்ளதால் , டெவலப்பர்களும் கட்டுனர்களும் நம்மிடத்தில் சூப்பர் பில்ட் அப் ஏரியா அல்லது விற்பனை பகுதிக்கே  அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பணத்தை வசூல் செய்கிறார்கள். பெரும்பாலும் நம் பயன்படுத்தக்கூடிய பகுதியானது சூப்பர் கட்டடப்பரப்பளவில் காட்டப்பட்டுள்ளதை விட மிக மிக குறைவாகும். சில கட்டுனர்கள் பணத்தை உங்களிடம் வசூல் செய்யும்போது கட்டட உட்பரப்பு அதாவது கார்பெட் பகுதிக்கு  மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் இது அரிதிலும் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாகும். உண்மையில் 90% டெவலப்பர்கள் சூப்பர் கட்டடப்பரப்பின் அடிப்படையிலையே செலவுகளை கணக்கிடுகின்றனர். அதிக வசதிகள், அதிக சூப்பர் கட்டடப்பரப்பை குறிக்கிறது.

ரியல் எஸ்டேட் சிக்கலானது, மற்றும் விதிகள் மற்றும் நடைமுறைகளை நீங்கள்  மாற்ற முடியாது., ஆனால் சதுர அடிகளை அளப்பதற்கான பல்வேறு வகையான கணக்கீடுகளை நீங்கள் அறிந்திருக்கும்போது, ஒரு தெளிவான மற்றும் தீர்க்கமான முடிவை உங்களால் எடுக்க முடியும்.பார்ப்பதற்கு வேண்டுமானால் பெரிதாக இருந்தாலும் உண்மையில் இது மிக எளிதான வேலையே ஆகும்.

இதன் வாயிலாக பலதரப்பட்ட கட்டட பரப்புகளையும் அதன் உட்பிரிவிகளையும் மேலும் அவை ஒவ்வொன்றுக்கும் எவ்வாறு வீலை நிர்ணயம் செய்படுகிறது என்பதை பற்றிய குழப்பத்தையும் தீர்த்து உங்களை சிறந்த முடிவுகளை எடுப்பதற்கு உதவியுள்ளோம் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் கேள்விகள் உள்ளதா? கீழே அதற்கான இடத்தில் எங்களிடம் கேளுங்கள்!

இங்கே ரியல் எஸ்டேட் அடிப்படை பகுதி 2-ல், எங்கள் ஒ.எஸ்.ஆர், எஃப்.எஸ்.ஐ , ஏற்றுதல் மற்றும் கட்டுமான நிலைகள் பற்றி பேசுகிறோம்.

உங்கள் வீடு காத்திருக்கிறது.

 

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (0)
  • 😔 (0)
Exit mobile version