Site icon Housing News

நீண்ட கால முதலீட்டுக்கு ஆதாய வரி: பல வீடுகளை வாங்குவதற்கு விலக்குரிமை

Long-term capital gains tax: Exemption on buying multiple houses

இந்திய வரிச் சட்டப்படி, வரி விதிப்புக்குரியவர் நீண்டகால முதலீட்டுக்கு ஆதாய வரி விலக்கு உரிமைக் கோரலாம், ஒரு சொத்து அல்லது மற்ற சொத்து விற்பனை செய்வதற்கு, அவள் / அவன் ஒரு குடியிருப்பதற்கு இல்லத்தை வாங்கினால்.எனினும், இந்த விலக்குகளில்  கருப்பு பகுதிகளும் உள்ளன.

 

முதலீடு செய்யக்கூடிய வீடுகளின் எண்ணிக்கை

ஒரு கேள்வி எழுவது என்னவென்றால் என்றால், வரி விதிப்புக்குரியவர் ஒன்றுக்கு மேற்பட்ட குடியிருக்க வீடுகளில் முதலீடு செய்ய முடியுமா அல்லது பிரிவு 54 அல்லது 54Fயின் கீழ் முதலீடு ஆதாய வரி விலக்கு கோர முடியுமா.

கீதா டுகால் வழக்கில் (257 CTR 208 இல்), டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தெரிவிப்பது என்னவென்றால், கட்டடத்தைப் பற்றி நம் மனதில் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் இவை  குடியிருப்பு இல்லம் என்பது ஒரு குடியிருப்பு இல்லமாக தான் இருக்க வேண்டும் என்பதோடு, ‘a’ என்ற வார்த்தையை ஒரு தனி எண்ணாக குறிக்கக் கூடாது .நீதிமன்றம் அளித்த விளக்கத்தின் படி “ஒரு குடியிருப்பு இல்லம்” என்றால் “உங்களது எந்த குடியிருப்பாகவும் இருக்கலாம்” , எந்தவொரு ‘வணிக வீட்டின் சொத்துக்கும் முரண்பாடு உள்ளது . இதன் விளைவாக, வரி செலுத்துவோர் நீண்ட கால முதலீடு ஆதாய வரி விலக்குக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுச் சொத்துகளில் முதலீடு செய்வதன் மூலம் பெற முடிகிறது.எனினும், வருமான வரிச் சட்டத்தில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது, இதில் ‘ஒரு குடியிருப்பு இல்லம்’ என்பதற்கு பதிலாக “குடியிருப்பு இல்லம் ஒன்று ” என்று ஏப்ரல் 1, 2015 முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

 

நிலையாக, ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்கு மாடிகளில் முதலீடு செய்வது ஒற்றை குடியிருப்பு பிரிவாக பயன்படுத்தப்படுகிறது

இருப்பினும், திருத்தம் செய்யப்பட்ட பிறகு கூட, ஒரு கேள்வி எழுகிறது – ஒரு குடும்பத்திற்கு ஒரு குடியிருப்பு பிரிவாக பயன்படுத்தப்படுகிற பொழுது, ஒன்றுக்கு மேற்பட்ட குடியிருப்பு பிரிவுகள் வாங்கப்பட்டிருந்தால், ஒரு நீண்ட கால முதலீட்டி ஆதாய வரி விலக்கு பெற முடியுமா? இரண்டு முடிவுகளாக பதில் வழங்கப்பட்டது.

முதலாவது சிஐடி vs டி ஆனந்த பசப்பா 309 ஐடிஆர் 329 (kar.),ஒரே வளாகத்திற்குள் பல அடுக்குமாடி வீடுகளை வாங்கி ஒரு பிரிவாகப் பயன்படுத்தப்பட்டன.இந்த வழக்கில், வரி விலக்கு அனுமதிக்கப்பட்டது.. வருமான வரித்துறையினர் இந்த முடிவுக்கு எதிராக ஒரு சிறப்பு விடுப்பு மனு தாக்கல்செய்தனர் அது உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

எனவே, நியமாக ஆயப்பட்டப் பிறகு 54 மற்றும் 54F ன் பிரிவின் கீழ் திருத்தங்கள் செய்யப்பட்டன , நீண்டகால முதலீடு ஆதாய வரிகளில் இருந்து விதிவிலக்கு அளித்த பின்பு கூட, ஒரு குடியிருப்பு இல்லத்தில் முதலீடு செய்யப்பட்டால் மட்டுமே ஒரு வீட்டை விட அதிகமான முதலீடு செய்யலாம் , வரி செலுத்துவோர் அனைவரின் குடும்பங்கள் ஒரு ஒற்றை குடியிருப்பு பிரிவாக பயன்படுத்தப்படுகின்றன என்று நிரூபிக்க முடியும்.மேலே கூறப்பட்ட வழக்கில், இரண்டு குடியிருப்பு பிரிவுகள் வாங்கப்பட்டன, அவை ஒரு வலுவான சுவர் மூலம் பிரிக்கப்பட்டன மற்றும் இரண்டு வெவ்வேறு விற்பனையாளர்களிடமிருந்து வாங்கப்பட்டன இரண்டு வெவ்வேறு செயல்கள் மூலம் விற்கப்பட்டன.வரி செலுத்துவோருக்கு இருப்பினும் விதிவிலக்கு வழங்கப்படுகிறது, ஏனென்றால் இரு குடியிருப்புகளும் ஒரே குடியிருப்பாக தனித்து பயன்படுத்தப்படுகிறது.

ஐ.டி.ஓ.க்கு எதிராக சுசீலா எம் ஜாவேரி 26 (ஐடட் போம்) வழக்கிற்கு சிறப்பு மும்பை நடுவா்நீதிமன்றத்தால் விசாரணைக்கு பின்னர் வழங்கப்பட்ட  தீர்ப்பை இரண்டாம் முடிவு, திருத்தம் செய்த பிறகே அறிவிக்கப்பட்டது.வரி விதிப்புக்குரியவர் ஒன்றுக்கு மேற்பட்ட குடியிருப்பு வீடுகளை வாங்கியிருந்தாலும் கூட, வீடுகள் வெவ்வேறு இடங்களில் இருக்கிறது ,  வரி விதிப்புக்குரியவர்கள்ஒரு வீட்டைப் பொறுத்தவரையில் மட்டுமே வரி விலக்கு கோரலாம். இருப்பினும், வரி செலுத்துவோர் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் விதிவிலக்கு பெறும் பொருட்டு , இரண்டு அருகில் உள்ள அல்லது தொடர்ச்சியான பிரிவுகள் ஒரு குடியிருப்பு இல்லமாக மாற்றப்பட்டிருந்தால், இரு பிரிவுகளும் குடும்பத்தின் குடியிருப்புக்கான ஒரு வீடாக பயன்படுத்தப்பட வேண்டும்.

( இந்த நூலாசிரியர் ஒரு வரி மற்றும் முதலீட்டு நிபுணர், 35 ஆண்டுகள் அனுபவமிக்கவா்)

 

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (0)
  • 😔 (0)
Exit mobile version