மும்பையில் வாழ 10 மலிவான பகுதிகள்

மும்பையில் வாழ்வது என்பது இந்தியாவின் பிற சிறிய நகரங்களில் உள்ளவர்களுக்கு ஒரு கனவு என்பதோடு மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்வோருக்கும் மும்பையில் வசிப்பது என்பது பெருங்கனவு. ஏனெனில், அங்கு குறைந்த விலையிலோ, வாடகையிலோ வீடுகள் கிடைப்பது குதிரைக் கொம்பு. ஆனால், இந்தியாவின் செல்வந்த வணிக நகரமான மும்பையிலும் வாழ சில மலிவான பகுதிகள் உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்

மும்பையில் உள்ள வீட்டுச் சந்தை உலகிலேயே மிகவும் விலை உயர்ந்தது. டோக்கியோ அல்லது நியூயார்க்கில் உள்ளதை விட விலை அதிகம். மும்பை போன்ற ஒரு நகரத்தில் தங்குவதற்கு மலிவான இடத்தைக் கண்டுபிடிப்பது, அங்கு இடம்பெயர்வதில் மிகவும் சவாலான அம்சங்களில் ஒன்றாகும். மும்பையில் நடுத்தரக் குடும்பம் வாழ சிறந்த இடத்தைத் தேடுகிறீர்களா?

எங்கு வசிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும்போது, ​​உள்ளூர் போக்குவரத்து, பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், சுகாதார வசதிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் மற்றும் பிற வசதிகள் ஆகியவை முக்கியமான பரிசீலனைகளாகும். இந்த தளங்கள் ஒவ்வொன்றிலும் வழங்கப்படும் சிறந்த, மலிவான வாழ்விடங்கள் மற்றும் சேவைகள், வசதிகள் ஆகியவற்றைத் தீர்மானிக்க இது உங்களுக்கு உதவும்.

உங்களை நீங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். மும்பையில் வசிக்க மலிவான இடங்களைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.

 

 

நடுத்தரக் குடும்பம் மும்பையில் வாழ 10 சிறந்த இடங்கள்

01. கோரேகாவ்

மேற்குக் கோட்டத்தில் அமைந்துள்ள கோரேகாவ் (Goregaon) முன்பு ஒரு சில குடியிருப்பு வளாகங்களை மட்டுமே கொண்டிருந்தது. இருப்பினும், இப்போது நிலைமை மாறிவிட்டது. மேலும், பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இந்தப் பகுதி வழங்கும் பலன்களைப் பயன்படுத்துவதால் நன்கு வளர்ந்து வருகிறது. கோரேகாவின் விரிவாக்கத்திற்கான முதன்மைக் காரணம், பாந்த்ரா – அந்தேரி பெல்ட் போன்ற பிற பகுதிகள் வேறு இடங்களில் வசிக்கும் பலருக்கு நினைத்துப் பார்க்க முடியாதவை. குறைந்த சொத்து செலவுகள் காரணமாக, இதனால் கட்டிட நிறுவனங்கள் பெரிய டவுன்ஷிப் திட்டங்களையும், சிறிய வளாகங்களையும் கட்டுகிறார்கள். அவை நீண்ட காலத்திற்கு நடுத்தர வர்க்கத்தினருக்கு வசதிகளுடன் கூடிய உயர்தர வீடுகளை வழங்கும்.

இதையும் வாசிக்க: மும்பை மேல்தட்டு பகுதிகள் குறித்த முழு விவரம்

 

02. காட்கோபர்

நிம்மதியானதும் அமைதியானதுமான சுற்றுப்புறத்தின் நடுவில் அமைந்துள்ள காட்கோபர் (Ghatkopar) பகுதியில் பழைய மற்றும் புதிய குடியிருப்புக் கட்டமைப்புகள் உள்ளன. அந்தேரி – காட்கோபர் மெட்ரோ மேற்கு புறநகர் பகுதிகளுக்குச் செல்ல  நேரடியான அணுகலை வழங்குகிறது. இதனால், இந்தப் பகுதி முக்கியத்துவம் பெறுகிறது. அதிவேக பயண வசதிகள் இங்கு வளர்ந்துள்ளதால் முன்பு 70 நிமிடங்கள் ஆகும் இடங்களுக்கு இப்போது 20 நிமிடங்களில் சென்று விட முடியும். கிழக்குத் தனிவழிப்பாதை மற்றும் சியோன் – பன்வெல் விரைவுச்சாலைக்கு அருகாமையில் உள்ளதால், தெற்கு மற்றும் வடக்குப் பகுதியை எளிதாக அணுக முடியும். நீங்கள் ஒரு ஸ்டுடியோ அமைக்க ஒற்றைப் படுக்கை அறை அல்லது இரு படுக்கையறை அடுக்குமாடி வாடகைக் குடியிருப்புகளைத் தேடுகிறீர்களானால், காட்கோபர் மும்பையின் மிகவும் மலிவு மற்றும் உங்களால் அளிக்க இயன்ற வாடகைப் பகுதிகளில் ஒன்றாகும்.

இதையும் வாசிக்க: மும்பையில் வாழ்வினச் செலவுகள்   

 

03. தானே

தானே (Thane) பகுதி வளர்ந்து வரும் நன்கு வளர்ந்த குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாகும். தினசரி பல மாற்றங்களை தானே பகுதி சந்திக்கிறது. இது நல்ல பள்ளிகள், சில்லறை வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு நிறுவனங்கள் மற்றும் பிற வசதிகளின் தாயகமாகும். பேருந்துகள், ரயில்கள் மற்றும் மெட்ரோ அமைப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து காரணமாக தானே நகர் மற்ற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் ஓய்வு நேரத்தில் நீங்கள் பார்த்து மகிழும் பல அழகானதும் அற்புதமானதுமான இடங்களுக்கு தானே பெயர்பெற்ற மாவட்டமாகும்.

 

04. விக்ரோலி

வங்கிகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற உயர்தர சமூக உள்கட்டமைப்பு, விக்ரோலி (Vikhroli) பகுதியை ‘ஆண்டின் சிறந்த ரியல் எஸ்டேட் துறை’ என பிரபலமாக்கியுள்ளது. இப்பகுதி அமைந்திருக்கும் வசதியான இடம் காரணமாக, இது மும்பையில் மிகவும் மலிவான சுற்றுப்புறங்களில் ஒன்றாகும். விக்ரோலி சாலை மற்றும் ரயில் போக்குவரத்துகள் வசதிகள் கொண்டது. லால் பகதூர் சாஸ்திரி சாலை, ஆக்ரா சாலை மற்றும் கிழக்கு விரைவு நெடுஞ்சாலை ஆகியவை விக்ரோலி நகரத்தை இணைக்கும் முக்கிய வழிகளாகும். விக்ரோலியில் குடியிருப்பு மேம்பாடுகளுக்கான தேவை அதிகரிப்புக்குக் காரணம் என்னவெனில், இங்கு முழு வசதியுடன் கூடிய உடற்பயிற்சி கூடங்கள், தோட்டங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சிறந்த உணவகங்கள் போன்ற வசதிகள் இருப்பதே.

 

05. ஐரோலி

ஐரோலி (Airoli) என்பது மும்பையில் உள்ள ஒரு பிரபலமான குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதி ஆகும். இது கல்வா பாலம் மற்றும் முலுண்ட் – ஐரோலி பாலம் வழியாக தானேவுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகச் செல்ல முடியும். ஐரோலி நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் மாணவர்களுக்கான பிரபலமான குடியிருப்புப் பகுதியாகும். ஏனெனில் இந்தப் பகுதியில் குறைந்த விலைக்கு நீங்கள் ஒரு சொத்தை வாங்கலாம் அல்லது  வாடகைக்குப் பெறலாம். இந்த இருப்பிடத்தின் மற்றொரு நன்மை என்னவென்றால், இது கல்வி வாய்ப்புகளுக்கான மையமாக உள்ளது. மேலும், இது சமகால வாழ்க்கையின் அனைத்து அத்தியாவசிய விஷயங்களும் இங்கு கைக்கு அருகில் உள்ளன.

 

06. செம்பூர்

வாழ விரும்பத்தக்க இடமாகும் செம்பூர் ( Chembur). அதன் சிறந்த போக்குவரத்து இணைப்புகள், ஏராளமான வேலை வாய்ப்புகள், சமூக உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மையங்கள் செம்பூரை வாழ்வதற்கு விருப்பத்திற்குரிய இடமாக்கியுள்ளது. இங்கிருந்து விமான நிலையம் 15 மைல் தொலைவிலும், செம்பூர் ரயில் நிலையம் 6 மைல் தொலைவிலும் உள்ளது. செம்பூரிலிருந்து பல இடங்ளுக்கான வசதியான இணைப்பு இருப்பதால் இது விருப்பத்திற்குரிய முதன்மையான இடமாக உள்ளது. டாக்டர் அம்பேத்கர் கார்டன், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் மற்றும் டயமண்ட் கார்டன் உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க இடங்கள் செம்பூரில் உள்ளன. செம்பூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சாஃப்ட்வேர் மையமாக கருதப்படுகிறது. மேலும், பாலிவுட் ரசிகர்களின் பிரபலமான இடமான ஆர்கே ஸ்டுடியோவும் இங்குதான் உள்ளது.

 

07. போவாய்

போவாய் (Powai) பகுதி விக்ரோலி பார்க்சைட் பகுதியின் மலைகளை எல்லையாகக் கொண்டுள்ளது. இது போவாய் ஏரியின் கரையில் உள்ளது. இந்தப் பகுதியில் பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளன. இது மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு சரியான இடம். சூரிய அஸ்தமனத்தின்போது, ​​போவாய் நிர்வாணா ஏரி, அதைச் சுற்றியுள்ள மலைகளின் கண்களுக்கினிய காட்சியை வழங்குகிறது. ஏரியைப் பார்ப்பதே ஒரு பிரமிக்க வைக்கும் அனுபவம்தான். உலகப் புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) பாம்பே, எஸ்டிஏ பொக்கானி, ஐபிஎஸ் போவாய் மற்றும் ஏதீனா ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் உட்பட பல மதிப்புமிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களை இந்தப் பகுதியில் காணலாம்.

 

08. போரிவலி

மும்பையின் வடக்கு புறநகர்ப் பகுதியான போரிவலி (Borivali) பல புதிய வீடுகளைக் கொண்ட குடியிருப்புப் பகுதியாகும். மும்பையில் முற்றிலும் தாவரங்கள் மற்றும் பரந்த சதுப்பு நிலங்களால் சூழப்பட்ட சில பகுதிகள் உள்ளன. அவற்றில் போரிவலியும் ஒன்றாகும். உள்ளூர் மற்றும் வெளியூர் ரயில்கள் இரண்டிற்கும், போரிவலி ரயில் நிலையம் புறப்படுவதற்கான ஒரு சவுகரியமான தளமாக செயல்படுகிறது. அந்தேரி, மலாட், கோரேகான் மற்றும் பாந்த்ரா குர்லா வளாகம் (BKC) ஆகியவை மும்பை புறநகர் ரயில்வே நெட்வொர்க்கின் மேற்குப் பாதையின் மூலம் அடையக் கூடிய வணிக மற்றும் தகவல் தொழில்நுட்பப் பகுதிகளில் சிலவாகும். உணவு விடுதிகள், நிறைய பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ வசதிகள் போரிவலியின் கூடுதல் சிறப்பு. அதன் சிறந்த சமூக உள்கட்டமைப்பு, வணிக மையங்கள் மற்றும் இணைப்பின் விளைவாக, போரிவலி மும்பையின் மிகவும் மலிவான வீட்டிற்காக நம்மை அழைக்கும் இடமாக உள்ளது. தினசரி அவசிய, அவசர பயணங்கள் இப்பகுதியில் நம்மை சோர்வடையச் செய்வதில்லை என்பது முக்கியம்.

 

09. கண்டிவலி

இந்தப் புறநகர் பகுதியில் தினமும் யாராவது ஒருவரேனும் வீட்டையோ குடியிருப்பையோ வாடகைக்கு விடுகிறார். மும்பை புறநகர் ரயில்வேயின் மேற்குப் பாதையில் அமைந்துள்ள கண்டிவலி ( Kandivali) நிலையம், போரிவலிக்கு அருகில் உள்ளது, இது மிகவும் பரபரப்பாக இயங்கும் இடமாகும். முதியோர்கள், இல்லத்தரசிகள் மற்றும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு, கண்டிவலியில் பரந்த அளவிலான சேவைகள் மற்றும் வசதிகள் உள்ளன. சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் இங்கிருந்து குறைந்த தொலைவிலேயே உள்ளன. காண்டிவலி இரண்டு விமான நிலையங்களிலிருந்தும் 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேற்கு மற்றும் மத்திய புறநகர் பகுதிகளை இணைக்க, கோரேகான் – முலுண்ட் இணைப்பு சாலை கண்டிவாலி வழியாக செல்கிறது. கண்டிவலி மும்பையின் மிகவும் நியாயமான விலையுள்ள இடங்களில் ஒன்றாகும்.

 

10 நவி மும்பை

மும்பையில் வசிக்கும் யாரிடமும் நீங்கள் கேட்டாலும் நவி மும்பையா, மிகவும் மலிவான பகுதியாயிற்றே என்றுதான் கூறுவார்கள். மும்பையின் சத்ரபதி சிவாஜி டெர்மினஸில் இருந்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவான ரயில் பயணம், நவி மும்பை நகரத்திற்கு ஒருவரை அழைத்துச் செல்கிறது. இது பெரும்பாலும் நகரின் பெருநகரப் பகுதியில் சொத்துகளை வாங்க முடியாத நடுத்தர வர்க்கத்தின் வசிப்பிடமாகக் கருதப்படுகிறது. நவி மும்பையின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று அதன் நன்கு திட்டமிடப்பட்ட தளவமைப்பு ஆகும். இதில் கணிசமான தரைப் பகுதிகளுடன் கூடிய ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. சமீபத்திய ஆண்டுகளில், மும்பை மற்றும் புனேவுக்கு வசதியாக செல்ல முடிவதாலும். குறைந்த வாடகையினாலும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதிச் சேவைத் தொழில்கள் நவி மும்பைக்கு வந்தவண்ணம் உள்ளன.

நவி மும்பையின் நடுத்தர மற்றும் மேல் – நடுத்தர வருமானம் கொண்ட மக்கள் வாஷி, பேலாபூர் மற்றும் நெருல் ஆகிய இடங்களில் வசிக்கத் தேர்வு செய்கிறார்கள். அதேநேரத்தில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்கள் உல்வி, துர்பே மற்றும் காமோத் போன்ற வளரும் பகுதிகளில் வாழ விரும்புகின்றனர்.

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (0)
  • 😔 (0)

Recent Podcasts

  • உங்கள் கோடையை பிரகாசமாக்க 5 எளிதான பராமரிப்பு தாவரங்கள்
  • நடுநிலை கருப்பொருள் இடைவெளிகளுக்கான நவநாகரீக உச்சரிப்பு யோசனைகள் 2024
  • உங்கள் வீட்டிற்கு 5 சூழல் நட்பு நடைமுறைகள்
  • Rustomjee குழுமம் மும்பையில் ரூ.1,300 கோடி GDV திறனுடன் திட்டத்தைத் தொடங்கியுள்ளது
  • இந்தியாவின் கிரேடு A கிடங்குத் துறை 2025-க்குள் 300 msf-ஐத் தாண்டும்: அறிக்கை
  • 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகளவில் சொத்து விலை உயர்வில் 3வது இடத்தை மும்பை பதிவு செய்கிறது: அறிக்கை