உங்கள் வீட்டின் வெளிப்புற சுவர்களின் நிறம் உங்கள் வீட்டின் கட்டிடக்கலை வடிவமைப்புடன் ஒருங்கிணைய வேண்டும். மேலும், வீட்டின் வெளியே இருக்கும் சிறந்த வண்ணங்கள் வீட்டின் உரிமையாளரின் தனிப்பட்ட ரசனையை பிரதிபலிக்க வேண்டும் மற்றும் வீட்டை இதமாகவும் நல்வரவை வேண்டுவதாகவும் இருக்க வேண்டும்.
இந்தியாவில் வீட்டின் வெளிப்புறங்கள் மற்றும் சுவர்களுக்கு சிறந்த வண்ண கலவையைத் தேர்ந்தெடுப்பதற்கான உங்கள் வழிகாட்டி இதோ.
இந்திய வீட்டின் வெளிப்புற சுவர்களுக்கான சிறந்த வண்ணக் கலவை: வீட்டுக்கான தலை சிறந்த வண்ணத் தேர்வுகள்
வீட்டின் வெளிப்புற வண்ணத்தைப் பொறுத்தவரை, ஒன்று அல்லது இரண்டு அதிகபட்சமாக மூன்று வீட்டின் வெளிப்புற வண்ணங்களைப் பயன்படுத்துங்கள். பார்வைக்கு கவர்ச்சிகரமானதாகவும் ஆனால் ஒட்டுமொத்தமாக மனதுக்கு மக்ழ்ச்சியளிக்கும் வெளிப்புற வண்ணக் கலவைகளைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் அனைத்தையும் ஒரே வண்ணத்தில் அமைக்க நினைத்தால், சலிப்பூட்டும் தோற்றத்தைத் தவிர்க்க ஒரே வண்ணத்தின் பல்வேறு சாயல்களைப் பயன்படுத்துங்கள்.
இந்திய வீடுகளுக்கான சில வெளிப்புற வண்ணப்பூச்சு கலவைகள் இங்கே:
கிரீம் மற்றும் பழுப்பு வண்ணம்
வீட்டின் வெளிப்புற வண்ணப்பூச்சுக்கு இது மிகவும் சிறந்த மற்றும் நுட்பமான வண்ண கலவையாகும். வெளிப்புற க்ரீம் வண்ண செட்-அப் உடன் அடர் பழுப்பு வண்ணம் சிறப்பாக ஒன்றிணைகிறது. பழுப்பு ஒரு நடைமுறைக்கேற்ற வண்ணமாக கிரீமுடன் கலந்து நிலைத்தன்மை மற்றும் ஆதரவைக் குறிக்கிறது,. இந்திய வீடுகளுக்கான வெளிப்புற வண்ண கலவைக்கு, வீட்டின் பாணியைப் பொறுத்து சாக்லேட் பிரவுன், ஹனி பிரவுன் அல்லது வால்நட் பிரவுன் ஆகிய வண்ணங்களைத் தேர்ந்தெடுங்கள். வீட்டின் வெளிப்புறச் சுவர்களுக்கான சிறந்த வண்ணக் கலவைகளின், இந்த மத்தியமான ஜோடி ஆறுதலாகவும் இதமாகவும் உணரவைக்கிறது..
வீட்டின் முகப்பு வண்ணகலவைகள் – கீழே படம் கொடுக்கப்பட்டுள்ளது. சிறப்பான தோற்றத்திற்கு, இந்த நுட்பமான வீட்டுக்கான வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கவும், இந்தியாவில் வீட்டின் வெளிப்புறங்களுக்கு அவை மிகவும் பொருத்தமானவை
மேலும் காண்க : வெளிப்புற சுவர் டைல்கள் பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்
வெள்ளை மற்றும் நீலம்
நீல வண்ணச்சாயல்கள் வெள்ளை நிறத்துடன் கச்சிதமாகக் கலக்கின்றன, ஆகவே வீட்டின் வெளிப்புறத்தில் தீட்ட இது ஒரு மிகச் சிறந்த வண்ண கலவையாகும். குளிர்ச்சியான இண்டிகோ வண்ணம் ஒரு இதமான உணர்வை அதிகம் வழங்கக்கூடியது மற்றும் இது மன அழுத்தத்தை குறைக்கிறது என்று கூறப்படுகிறது மற்றும் அமைதியான உணர்வை ஓங்கச்செய்கிறது . வெள்ளை மற்றும் நீல நிற சாயல்கள் வீட்டின் வெளிப்புறங்களுக்கு, குறிப்பாக பங்களாக்களுக்கு அல்லது குடிசை பாணி வீடுகளுக்கு உகந்த சிறந்த வண்ண கலவையாகும்.
இந்தியாவில் வீட்டின் முன்புறத்தின் எடுப்பான தோற்றத்திற்கு இந்த வண்ண சேர்க்கைகளைச் சரிபார்க்கவும்.
மேலும் காண்க :மன எழுச்சிபெற கிராமப்புற வீட்டின் வடிவமைப்பு
மஞ்சளுடன் பழுப்பு நிறம்
வீட்டின் வெளிப்புறம் வண்ணம் தீட்ட இது மிகவும் சிறந்த மற்றும் நுட்பமான வண்ண கலவையாகும். அடர் பழுப்பு நிறத்தை வீட்டின் மேற்கூரை, ஜன்னல் பிரேம்கள், கதவு, முன் வராண்டா பகுதிகளில் தீட்டி அதை , இதமான மஞ்சள் நிற வெளிப்புற பெயிண்ட் செட்-அப்புடன் கச்சிதமாக கலக்கலாம். ஒரு அழுத்தத்தைக் கொடுக்கும் வண்ணமாக மஞ்சள் வண்ணத்தின் ஒரு நுட்பமான தீற்றல் வெளிப்புறத்திலிருந்து எடுப்பாகக் தோற்றமளிக்கச்செய்யும் . அம்மாதிரியான வெளிப்புற வண்ணபூச்சு கலவைகள் குடிசை பாணி வீடுகளுக்கு பொருத்தமாக அமைந்து வெளியில் ஒரு ஒரு சிறு தோட்டத்துடன் அமைந்த வீடுகளை படக்காட்சி போலத் தோன்றச்செய்யும் .
மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களின் நுட்பமான சாயல்களை உள்ளடக்கிய இந்த வீட்டின் வெளிப்புறத்தில் தீட்டப்பட்ட வண்ண கலவைகளை பாருங்கள்.
சிவப்பு மற்றும் கிரீம்
பெரிய மர ஜன்னல்கள் மற்றும் தூண்கள் கொண்ட பாரம்பரிய சிவப்பு ஓடுகளை மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய கிரீம் வண்ணச்சுவர்களுடன் பொருந்தச்செய்யலாம். மேலும் இந்த வெளிப்புற வண்ணப்பூச்சு கலவைகள் தென்னிந்திய வீடுகளில் பிரபலமாக காணப்படுகின்றன. வீட்டின் வெளிப்புற வடிவமைப்பிற்கான சிவப்பு மற்றும் கிரீம் வண்ணப்பூச்சு சிறப்பாக இருக்கும் , குறிப்பாக காட்சிப்படும் செங்கல் சுவர்கள் கிரீம் நிறத்துடன் இணைந்திருந்தால்.மிகச்சிறப்பாக இருக்கும் தொழில்துறை மற்றும் ஸ்காண்டிநேவிய பாணியில் வடிவமைக்கப்பட்ட வீட்டு வெளிப்புறங்களுக்கான வண்ணங்களுக்கும் சிவப்பு மற்றும் கிரீம் வண்ண சேர்க்கைகளை கருத்தில் கொள்ளலாம். வீட்டின் வெளிப்புற அமைப்பின் மீது கவனத்தை ஈர்க்கவும் கவர்ச்சியை அதிகரிக்கவும் வீட்டின் வெளிப்புற சமச்சீரான வண்ணத்திற்கு சிவப்பேறிய மெரூனை வண்ணத்தைப் பயன்படுத்தவும்.
கீழே உள்ள படத்தில் வீட்டுமுகப்பின் எடுப்பான சிவப்பு மற்றும் க்ரீம் வண்ணங்களோடு வீட்டின் வெளிப்புற வண்ணக்கலவை காட்டப்பட்டுள்ளது.
மேலும் காண்க : ஜன்னல் கம்பி வடிவமைப்பு அனைத்தும் பற்றி
பீச் மற்றும் வெள்ளை
பீச் நிறம் வீட்டின் வெளிப்புற வண்ணப்பூச்சுக்கு மிகவும் அத்கமாக விரும்பக்கூடிய வண்ணங்களில் ஒன்றாகும், ஏனெனில் இது புத்துணர்ச்சி மற்றும் ஆறுதலை வழங்கும் . வீட்டின் வெளிப்புற வண்ணப்பூச்சுக்களுக்கு வெள்ளை நிறத்துடன் இணைந்து, பழங்கால மற்றும் நவீன பாணி வீடுகளுக்கு சிறப்பான தோற்றத்தை அளிக்கிறது . வெளிர் பீச் வண்ணம் மென்மையாகத் தோற்றமளிப்பதால் வீட்டை பெரிதாக தோற்றமளிக்கச் செய்து கண்கவர் நளினத்தையும் சேர்க்கிறது.
மேலே உள்ள வீட்டின் வண்ணப் படம், கிளாசிக் பீச் மற்றும் வெள்ளை நிறசாயல்கள் சிறிய வீட்டின் முகப்பு வண்ண கலவையைக் காட்சிப்படுத்துகிறது.
பச்சை மற்றும் பழுப்பு வெள்ளை
பச்சை என்பது புத்துணர்ச்சி மற்றும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையைக் குறிக்கிறது. இந்தியாவில் உள்ள வீட்டின் வெளிப்புற வண்ணப்பூச்சுகளுக்கு, அடுத்துவரும் ஆண்டுகளில் முன்பெப்போதையும் விட பச்சை நிறத்தையே அதிகம் விரும்புவார்கள் என்று வண்ணப்பூச்சுக்களின் வல்லுநர்கள் நம்புகின்றனர். உங்கள் வீட்டிற்கு பச்சை நிறத்தோடு பழுப்பு வெள்ளை நிறத்தையும் சேர்த்து வண்ணம் தீட்டுவது, இயற்கையின் ஆற்றலுடன் அதை சீரமைத்து நேர்மறையை எண்ணங்களை உருவாக்கும் ஒருவர் கூரைக்கு பச்சை வண்ணத்தை பூசி மற்றும் வீட்டின் வெளிப்புறச்சுவர்களை சுவர்களை பழுப்பு வெள்ளையாக வைக்கலாம். மென்மையான முகப்பு மற்றும் இருண்ட கூரை ஒரு உன்னதமான இந்திய பாணி எளிய வீட்டின் வண்ண கலவையாகும்.
இந்த வண்ண கலவையில் ஒரு இந்திய வீட்டின் வெளிப்புறம் எப்படி இருக்கிறது என்பது இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இந்த வீட்டின் வண்ண கலவையுடன் புதுமையான வெளிப்புற வடிவமைப்புகளுடன் சமகாலச் சாயலை நீங்கள் சேர்க்கலாம்.
மேலும் காண்க : சுவர் எல்லை வடிவமைப்பு குறித்த அனைத்தும் தெரிந்து கொள்ளுங்கள்
பழுப்பு, வெள்ளை மற்றும் சாம்பல்
பிரவுன், வெள்ளை மற்றும் சாம்பல் நிறங்கள் ஒன்றிணைந்து வீட்டின் வெளிப்புறத்திற்கு ஒரு இணக்கமான வண்ண கலவையை வழங்குகின்றன. அடர் சாம்பல் நிறத்துடன் வெள்ளை வண்ணப்பூச்சு எடுப்பாகத் தோற்றமளிக்கும். நவீன வீட்டின் வெளிப்புற வண்ணப்பூச்சு வடிவமைப்பின் ஒரு பகுதியாக, பழுப்பு நிற கூரை வீட்டிற்கு ஒரு இதமான இயற்கை உணர்வைத் தருகிறது; வீட்டின் வெளிப்புற நிறம் போன்ற ஒரு மண்போன்ற பழுப்பு வண்ணச்சாயல் வரவேற்ப்பு மனநிலையை அளிக்கிறது. வீட்டின் வெளிப்புற வண்ணத்திற்கு சாம்பல் வண்ண கலவையை பூச்சுத்தட்டில் சேர்க்கலாம்
வீட்டின் வெளிப்புறத்திற்கான வெளிப்புற வண்ண கலவையின் எடுத்துக்காட்டு இங்கே. இந்த வடிவமைப்பு ஒரு வழக்கமான இந்திய கிராமத்தின் வீட்டின் வெளிப்புற நிறத்திற்கு உகந்தது.
சாம்பல், வெள்ளை மற்றும் ஆரஞ்சு
சாம்பல் மற்றும் வெள்ளை போன்ற நடுநிலையான நிறங்களோடு ஆரஞ்சு வண்ணத்தின் ஒரு தீற்று வீட்டின் வெளிப்புற வண்ணத்துக்கு அழகான கலவையாக இருக்கும் . இந்த நவீன வீடுகளின் வெளிப்புற வண்ணக் கலவைகள் நுட்பமாகதோன்றும் அதேநேரத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, மேலும் வீட்டின் புத்துணர்வுக்குப் பங்களிக்கின்றன. வீட்டின் வெளிப்புற வண்ணப்பூச்சுக்கான வெள்ளை நிற கலவையுடன், அதற்கொரு அழுத்தத்தைக் கொடுக்கும் ஆரஞ்சு நிறத்தை வெளிப்புறங்களில் ஒரு சிறிய அளவில் சேர்க்கலாம். ஆரஞ்சு அனுசரணை மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது, மற்றும் மந்தமான சாம்பல் நிற சாயலுடன் ஒன்று சேர்ப்பது சிறப்பாக இருக்கும். இந்த மூவரும் வீட்டின் வெளிப்புற சுவர்களுக்கு ஒன்றோடொன்று இசைவிணக்கமான வண்ண கலவையாகும்.
மேலே உள்ள வீட்டின் வெளிப்புற வண்ணப்பூச்சுப் படத்தில் ஆரஞ்சு, சாம்பல் மற்றும் வெள்ளை நிறங்களின் கூட்டுக்கலவையை முகப்புப்பக்கத்தில் காணுங்கள்.
ஆலிவ் பச்சை மற்றும் வெள்ளை
வண்ணப்பூச்சுக்காக ஆலிவ் பச்சை போன்ற மியூட்டட் வண்ணத்தொனி வெள்ளை போன்ற நடுநிலை வண்ணங்களோடு இணைந்தால் வீடு மற்றும் வெளிப்புற அலங்கார வண்ணங்களாக சிறப்பாக தோற்றமளிக்கின்றன. உங்கள் வீட்டுக்கு சிறந்த மனநிறைவைத் தரும் தோற்றத்தை உருவாக்கும் கம்பீரமான வடிவமைப்பைப் பெற அதில் நுணுக்கமான கட்டடக்கலை விவரங்களை ஒன்றிணைக்கவும். ஒரு மண்வாசனையோடு கூடிய தாக்கத்தை நீங்கள் எதிர்பார்த்தீர்களானால் அதற்கு பொருத்தமான ஒரு சிறந்த கட்டிட வண்ண கலவையாகும் இது.
மூலம்: பின்டெரெஸ்ட்- Pinterest
கிரீம் மற்றும் மஞ்சள்
க்ரீம் மற்றும் வெளிர் மஞ்சளின் நுட்பமான வண்ணச்சாயல் வீட்டின் வெளிப்புற வண்ணக் கலவைக்கான உகந்த ஆலோசனையை உருவாக்குகிறது மற்றும் இந்திய வீடுகளுக்கு மிகச்சிறப்பாகச் செயல்படுகிறது.. வெளிர் மஞ்சள், கடுகு, காவி, அம்பர் மற்றும் தங்கம் போன்ற பல மஞ்சள் வண்ண சாயல்களைக் கொண்டு நீங்கள் பரிசோதனை செய்யலாம்.
மூலம்: பின்டெரெஸ்ட்- Pinterest
மெரூன், பழுப்பு மற்றும் வெள்ளை
மெரூன் அல்லது அடர் சிவப்பு வண்ணச்சாயல்கள் உங்கள் வீட்டின் வெளிப்புற சுவர்களை அழகாகவும் கவர்ச்சியாகவும் மாற்றும். பொதுவாக, இந்தியாவில் பிரபலமாக விளங்கும் கூரைக்கு செங்கல் ஓடுகளைப் பயன்படுத்தும் செயல்பாட்டை மேற்கொண்டு இந்த விளைவை அடைய முடியும். வெள்ளை நிறத்துடன் மெரூன் இணைந்தால் கச்சிதமாக இருக்கும். இந்த வெளிப்புற வண்ண கலவையில் நீங்கள் பழுப்பு நிறத்தை சேர்க்கலாம். உங்கள் வீட்டிற்கு வெளியே உள்ள கதவுகளுக்கு இந்த நிறத்தை தேர்வு செய்யவும். நாட்டுப்புற மாளிகை போன்று வடிவமைக்கும் போது இந்த வண்ண கலவைகளின் கூட்டு இந்திய வீட்டின் வெளிப்புறங்களுக்கு சிறப்பாக உகந்ததாக இருக்கலாம்
மூலம்: பின்டெரெஸ்ட்- Pinterest
பழுப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் வெள்ளை
ஆரஞ்சு கலந்த பழுப்பு நிற சாயலோடு பச்சை மற்றும் வெள்ளை நிறங்களைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் வீட்டின் வெளிப்புற வண்ணப்பூச்சு கலவைகளுக்கு நவீனத் திருப்பத்தைக் கொடுங்கள். பச்சை மற்றும் வெள்ளை ஒரு இதமான விளைவை சேர்க்கும் அதே வேளையில், பிரகாசமான பழுப்பு நிறத்தின் இருப்பு பார்வைக்கு ரசனையைக் கூட்டலாம் மற்றும் உங்கள் வீட்டுக்கு மிகவும் அதிநவீன மற்றும் மனதைக்கவரும் தோற்றத்தை அளிக்கும்.
மூலம்: பின்டெரெஸ்ட்- Pinterest
ரீகல் வெள்ளை மற்றும் சிவப்பு
உங்கள் வசிப்பிடத்திற்கு ஒரு உன்னதமான தோற்றத்தை உருவாக்கக்கூடிய மற்றும் இந்திய வீடுகளின் அறுதி வெளிப்புற வண்ணப்பூச்சு வண்ண கலவையானது ரீகல் வெள்ளை மற்றும் சிவப்பு கலவையாகும். இந்த தோற்றம் ஒப்பிடமுடியாதது மற்றும் கூரைக்கு சிவப்பு மற்றும் வெளிப்புற சுவர்களுக்கு வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எளிதாக உருவாக்க முடியும். தகுந்த வெளிச்சம் மற்றும் தங்க வானத்தின் சாயல்களை சேர்ப்பதன் மூலம் சூழலை மேம்படுத்துங்கள் .
மூலம்: பின்டெரெஸ்ட்- Pinterest
இந்திய பாணி எளிய வீட்டின் வெளிப்புற வண்ண யோசனைகள்
ஆக , ஒரு வீட்டின் வெளிப்புறச் சுவர்களுக்கு எந்த வண்ணம் சிறந்தது? உங்கள் வீட்டின் வெளிப்புற சுவர்களை வடிவமைக்க பல விருப்பத்தேர்வுகள் உள்ளன. வீட்டின் வெளிப்புறத்திற்கு வண்ணம் பூச சிறந்த ஒன்றை தேர்ந்தெடுக்க ஒரு வழிகாட்டி இங்கே. . மேலும், வீட்டின் வெளிப்புற வடிவமைப்புகளின் படங்களில் வீட்டின் முகப்புப்பகுதிக்கு வண்ணம் பூச பயன்படுத்தப்படும் வண்ணங்களைப் பாருங்கள்.
வெள்ளை
இந்திய வீடுகளின் வெளிப்புறங்களில் வெள்ளை மற்றும் வெள்ளை நிற சாயல்கள் பொதுவாக பூசப்படுபவை. இந்த உன்னதமான வண்ணம் ஒரு செய்தியை நமக்குத் தருகிறது , இது மற்ற வண்ணங்களுடன் நன்றாக இணைக்கப்படக்கூடியது வெள்ளை நிறம் இந்தியாவில் எந்த அளவியான வீட்டிற்கும் வெளிப்புறத்தில் சிறப்பாகக் காட்சியளிக்கிறது அதன் காரணமாக இது மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. பழுப்பு வெள்ளை நிறம், இப்போது பிரபலமாக உள்ளது, குறிப்பாக முகப்பில், பல வடிவமைப்பு யோசனைகளுக்கு நிறைய வாய்ப்பை வழங்குகிறது. வெளிப்புற வெள்ளை வண்ணச்சாயல்கள் ஒரு எளிய வீட்டு முகப்புப்பக்க வண்ணமாக செயல்படலாம், ஆனால் அவை வீட்டின் வெளிப்புறத்திற்கு ஒரு அதிநவீனத்துவம் , புத்துணர்ச்சி மற்றும் பிரகாசத்தை அளிக்கும்
பீஜ் (மஞ்சள் நிறைந்த பழுப்பு)
பீஜ் நிறம் ஒரு அமைதியான மனநிலையை உருவாக்கும் மற்றும் அதில் பண்டய கால வசீகரம் உள்ளது. ஒரு இந்திய வீட்டிற்கு வெளிப்புற வண்ணப்பூச்சுக்கான வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, வீட்டின் கட்டிடக்கலை பாணியுடன் இணைந்திருக்குமாறு பழுப்பு நிற பீஜ் இன் சாயல்களை கவனமாக தேர்த்தெடுங்கள் (காக்கி, மொச்சா, டான் போன்றவை) வீட்டின் வெளிப்புறத்திற்கு , பீஜ் நிறத்தை பல வெளிப்புற வண்ணங்கள் மற்றும் வடிவமைப்பு பாணிகளுடன் இணைத்து பயன்படுத்தலாம். இந்திய பாணியில் அமைந்த சிறு வீடுகளின் வடிவமைப்புக்களில் வெளிப்புற நிறமாக பீஜ் பயன்படுத்தப்படுவது ஜன்னல்கள் மற்றும் கதவுகளின் இதமான மரத் தொனியோடு அழகாக கலக்கிறது.
கீழே உள்ள படம், ஒரே தளம் கொண்ட இந்திய வீட்டின் வெளிப்புற நிறமாக பழுப்பு நிறத்தைக் காட்டுகிறது.
மேலும் காண்க : இந்தியாவில் ஒரு வீட்டுக்கு வண்ணம் பூச ஒரு சதுர அடிக்கு ஆகும் செலவு
கிரே (சாம்பல் நிறம்)
வெளிப்புற வண்ணங்களைப் பொறுத்த வரையில் கிரே வண்ணம் அது வெளிர் நிறமோ அல்லது அடர்த்தியான நிறமோ எதுவாக இருந்தாலும் வீட்டு உரிமையாளர்களுக்கு கிரே ஒரு பிரபலமான விருப்பத்தேர்வாகும் . கிரே நிறம் குறிப்பாக அதன் வெளிர் சாயல்களில் மிகச்சிறப்பாக காட்சியளிக்கும் மற்றும் உயர்த்திக்காட்டும் வெள்ளை, ஆரஞ்சு அல்லது பச்சை வண்ணங்களோடு சிறப்பாக இணையக்கூடியது. இந்தியாவில் வீட்டின் வெளிப்புற வண்ணங்களுக்கு கிரே ஒரு பிரபலமான தேர்வாக விளங்குகிறது வெளிப்புறத்திற்கு அடர்த்தியான நிறத்தையும், பக்கவாட்டிற்கு அதிக நிறைவுற்ற கிரே வண்ணத்தையும் மற்றும் நேர்த்தி செய்வதற்கு மிகவும் வெளிர் கிரே வானத்தையும் தேர்வு செய்யவும். இந்த அடர்ந்த வண்ணச் சாயல்கள் எந்த பாணியிலான வீடுகளையும் உன்னதமானதாகவும், கம்பீரமாகவும் தோற்றமளிக்கச்செய்யும்
வீட்டின் வெளிப்புற வண்ணத் திட்டங்களில் நவீன கிரே நிறத்தைச் சேர்க்கவும், அவை கண்ணாடிக் கதவுகள் மற்றும் ஜன்னல்களுடன் ஒரு அற்புதமான கவர்ச்சியை அளிக்கின்றன.
இந்த சாம்பல் நிற முகப்புப் பக்கத்தை சரிபார்க்கவும். சமகால வீட்டில் முயற்சி செய்து பார்க்கவும்
நீலம்
இந்திய பாணி எளிய வீட்டு வடிவமைப்பின் வெளிப்புற நிறத்தைப் பொறுத்தவரை அவை ஒரு அமைதியான மற்றும் நடுநிலை உணர்வைக் கொண்டிருப்பதால் நீலம் ஒரு அற்புதமான தேர்வாகும். நேவி ப்ளூ வெளிப்புறங்கள் நேர்த்தியாகத் தோன்றும் மற்றும் பெரும்பாலும் கடல் சார்ந்த , கடலுக்குரிய அல்லது கடற்கரை மனநிலையை அளிக்கும் , வலிமையான எண்ணங்களை வளர்க்கும். வீட்டின். லைட் ப்ளூ வண்ணம் புலன் கடந்த ஒரு கனவு நிலைக்கு கொண்டுசெல்லும். வீட்டின் சமகால தோற்றத்துக்கு வெளிப்புறங்களுக்கு ஸ்கை ப்ளூ நிறத்தை தேர்வு செய்யலாம்.
பழுப்பு
மண்ணின் சாயல் கொண்ட இயற்கை வண்ணங்களின் மறுமலர்ச்சியுடன், பழுப்பு நிறம் வீட்டின் வெளிப்புறங்களுக்கு மிகவும் பிரபலமானது. பழுப்பு நிறம் வெளிப்புறச் சுவர்களுக்கு இயற்கையான மரத் தோற்றத்தை அளிக்கிறது மற்றும் வரவேற்கும் விதமான மற்றும் மென்மையான உணர்வை அளிக்கிறது. பிரவுன் ஒரு வீட்டின் வெளிப்புறத்திற்குப் பொருத்தமானது, ஏனெனில் அது இதமான உணர்வை அளித்து நிலைத்தன்மை, வசதி, வளர்ச்சி மற்றும் திறன் ஆகியவற்றின் உணர்வையும் அளிக்கிறது மற்றும் வீட்டிற்கு உறுதியான அடித்தளத்தை அடையாளப்படுத்துகிறது.
மஞ்சள்
வீட்டின் வெளிச் சுவர்களில் ஒரு வண்ணத் தேர்வாக மஞ்சள் அந்த இடத்திற்கு உடனடி நேர்மறையானவற்றை கொண்டுவரும் திறனைக் கொண்டுள்ளது, ஏனெனில் அது நம்மை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும், ஈர்க்கும் இடமாகவும் உணர வைக்கிறது. தங்கள் வீட்டை தனித்து காட்ட விரும்பும் வீட்டு உரிமையாளர்கள், ஒருவரின் தனிப்பட்ட புகலிடத்தின் சுவர்களில் நுட்பமான அதே சமயத்தில் மகிழ்ச்சிகாரமான தாக்கத்தை உருவாக்க, வீட்டின் வெளிப்புறத்துக்கு பிரகாசமான மஞ்சள் நிறத்தை அல்லது கடுகு மஞ்சள் நிறத்தை தேர்வு செய்யலாம்.
மேலும் காண்க :வீட்டிற்கான மஞ்சள் நிற கூட்டுக் கலவைகள்
பச்சை
பெருந்தொற்று காலத்தில் சக்திக்காக மக்கள் வெளிப்புற இயற்கைக்காகவும், பசுமைக்காகவும் ஏங்கிக்கொண்டிருந்த நேரம். இயற்கையால் ஈர்க்கப்பட்டு, வீட்டின் வெளிப்புற நிறத்திற்கான மிகப்பெரிய ஆர்வப் போக்கில் பச்சை நிறம் உள்ளது, ஏனெனில் இது அமைதியான மற்றும் இனிமையான மன உணர்வுகளை அளிக்கிறது. ஆலிவ் பச்சை , ஃபெர்ன் பச்சை, மரகதப்பச்சை மற்றும் மங்கற் பச்சை போன்ற பிரம்மிக்கவைக்கும் பச்சை நிற சாயல்களில் வீட்டின் வெளிப்புறங்கள் இப்போது வர்ணம் பூசப்படுகின்றன. கீழே காட்டப்பட்டுள்ளபடி, வீட்டின் எல்லையோர வண்ண வடிவமைப்புகளில் வெள்ளை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
சிவப்பு
செங்கல் சிவப்பு என்பது இந்திய வீடுகளுக்கான வெளிப்புற வண்ணப்பூச்சுகளில் ஒன்றாகும், இது துடிப்பான மற்றும் புதுப்பாணி தோற்றத்தைக் அளிக்கும் . சிவப்பு போன்ற அடர்த்தியான நிறங்கள் வீட்டிற்கு நவீனத்துவத்தை வழங்கும் கட்டிட வண்ண வடிவமைப்பு வீட்டின் முக்கிய அம்சங்களை எளிதாக முன்னிலைப்படுத்தி உயர்த்திக்காட்டும். சிவப்பு நிறம் வெள்ளை நிறத்துடன் சிறப்பாகப் பொருந்தும், அதுவே வீட்டின் மிகச்சிறந்த வெளிப்புற வண்ணப்பூச்சுகளில் ஒன்றாகும்.
மேலும் காண்க : வீட்டின் உட்புறங்களுக்குக்கான சிறந்த வண்ணங்கள்
இந்திய வீடுகளில் வெளிப்புற பூச்சுக்களுக்கான வண்ண சேர்க்கைகள்: பயனுள்ள குறிப்புகள்
- வீட்டின் வெளிப்புறம்தான் ஒருவரால் முதல் முதலாகக் கவனிக்கப்படுகிறது மற்றும் அது எப்பொழுதும் கவர்ச்சிகரமானதாகவும் ஈர்க்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். வீட்டின் வெளிப்புறத வண்ணப்பூச்சுக்காக வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, வீட்டு வண்ண கருத்துரு ஒரு ஒருங்கிணைந்த மற்றும் எளிமையான வகையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- கட்டிடத்தின் வெளிப்புற வண்ணங்கள் கூரையின் நிறத்துடன் இணக்கமாக இருக்க வேண்டும். மேலும், வெளிப்புற வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுக்கும்போது வீட்டு நிறத்திற்கான கதவுகள், ஜன்னல்கள் ரெயில்கள் போன்றவற்றின் வண்ணங்களைக் கவனியுங்கள்.
- கட்டிடத்தின் வெளிப்புற வண்ணங்கள் அதன் சுவார்களோடு மட்டுமே நிறுத்திவிடக்கூடாது. கதவுகள், ஜன்னல்கள் கைப்பிடிகள் போன்ற குறிப்பிட்ட கட்டடக்கலை விவரங்களில் பிரகாசமான வண்ணங்களுடன் கவர்ச்சியை கூட்டவும் .
- வெளிப்புற வண்ணங்கள் வீட்டின் பாணியுடன் ஒன்றிணைந்து பொருந்த வேண்டும் மற்றும் கட்டிடக்கலை அம்சங்களின் அழகை மேம்படுத்த வேண்டும் . எனவே வீட்டின் வெளிப்புற நிறத்தை தேர்ந்தெடுக்கும் போது வீட்டின் வடிவமைப்பில் தேவைப்பட்டால் செங்கற்கள் அல்லது கண்ணாடி போன்ற பொருட்களை கருத்தில் கொள்ளுங்கள்.
- எந்த வண்ணம் என்பதை பொருட்படுத்தாமால் பயன்படுத்தப்படும் வீட்டின் வெளிப்புற வண்ணம் அதன் நீடித்த தன்மையை தீர்மானிக்கும். கச்சிதமான வெளிப்புற சுவர் வண்ணத்துக்கு , சாடின் மற்றும் முட்டை ஓடு நிறங்கள் நல்லது. வீட்டின் வெளிப்புற வண்ணத்திற்கு எமல்ஷன், அக்ரிலிக் அல்லது சிமென்ட் பெயிண்ட் ஆகியவற்றிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- இந்தியாவில் சிறந்த வீட்டின் வெளிப்புற பூச்சுக்கான வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, எப்போதும் நல்ல தரமான பெயிண்ட் தயாரிப்புகளையே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள் மற்றும் வீட்டிற்கு வெளியே சுவர்களுக்கு வண்ணம் பூச முன்பாகவே மேற்பரப்பைத் தயார் செய்யும் பணிகளை மேற்கொள்ளும் நம்பகமான வண்ணம் பூசும் நிறுவனத்தைத் தேர்வுசெய்யவும்.
- , வீட்டின் முன்புற வண்ண கலவையாக பயன்படுத்தப்படும் வெளிர் நிற பெயிண்ட்கள் , நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் அடர் நிறங்களை விட மெதுவாகவே மங்கத்தொடங்கும் . வெளிர் நிறங்களைவிட அடர்த்தியான நிறங்கள் வெப்பத்தை உறிஞ்சி, ஈரப்பதம் தொடர்பான அதிக சிக்கல்களைக் கொண்டுள்ளன.
- வண்ணமயமான வண்ணங்களைத் வீட்டில் பூசுவதைத் தவிர, கூடுதலாக ஒரு கண்ணைக்கவரும் வகையில் அதன் நயத்தை பயன்படுத்தலாம் ஆகவே வீட்டிற்கு வெளியே பூச தேர்ந்தெடுக்கப்பட்ட வண்ணத்தை முழுமையாக்க வெளிப்புற வண்ணப்பூச்சுகளுடன் வீட்டு வண்ணங்களின் நயஅமைப்பை ஒருங்கிணைக்க வேண்டும்.
- வீட்டிற்கு வெளியே உள்ள சுவர் வண்ணங்கள் மழைநீர், ஈரப்பதம் மற்றும் நீர் ஆகியவற்றுக்கு வெளிப்படும், அவை படுகைகள் வழியாக உட்சென்று உட்புற சுவர்களை பாதிக்கலாம். எனவே, நீர் கசிவைத் தடுக்க வெளிப்புற சுவர்களில் வண்ணம் தீட்டுவதற்கு முன் நீர்ப்புகா பூச்சை மேற்கொள்ளுங்கள். ஒரு இந்திய வீட்டைப் பொறுத்தவரை, இந்தியாவின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்து, சிறந்த நீர் எதிர்ப்பைக் கொண்ட வெளிப்புற சுவர் வண்ணங்களை தேர்ந்தெடுப்பது நல்லது.
- உங்கள் வீடு தனித்து காட்சியளிக்க வேண்டும் என்று வேண்டும் என நீங்கள் விரும்பினால், அப்பகுதியின் தட்பவெப்பநிலை, அக்கம்பக்கத்து நடைமுறைகள் மற்றும் ஒட்டுமொத்த பின்புலத்துடன் சிறப்பாக ஒத்துப்போகும் வகையில் வீட்டின் வெளிப்புற வண்ணங்களை நிச்சயம் செய்யுங்கள். .
உங்கள் வீட்டிற்கு தனித்துவமான தோற்றத்தைக் கொடுக்க, பாரம்பரிய பாணியிலான வடிவமைப்பை தேர்ந்தெடுங்கள் இந்த அழகான கேரள வீடு சிறந்த சிறிய வீட்டின் வெளிப்புற வண்ணப்பூச்சுக்களுக்கான யோசனைகளை உங்களுக்கு வழங்கும்.
மூலம்: பின்டெரெஸ்ட்- Pinterest
நவீன வீட்டின் வெளிப்புற வண்ணப்பூச்சு மற்றும் வாஸ்து வழிகாட்டுதல்கள்
உங்கள் வீட்டைப் புதுப்பிக்கும் போது, வீட்டின் வெளிப்புறத்திற்கான சிறந்த வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கும் சமயம் சில வாஸ்து வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியம்.
வாஸ்து படி ஒரு வீட்டின் வெளிப்புறம் வெளிர் மஞ்சள், வெள்ளை, பீஜ் மாவ் போன்ற இன்னும் பல வெளிர் நிற வண்ணங்களாக இருக்க வேண்டும். சில நேரங்களில், இந்திய வீட்டின் வண்ணங்கள் வீட்டு உரிமையாளர்களுக்கான வீட்டின் திசையின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும், வீட்டிற்கு வெளியே ஒருபோதும் கருப்பு நிறத்தை வைத்திருக்க வேண்டாம், ஏனெனில் அது எதிர்மறையையான விஷயங்களை உள்ளிழுத்து மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். வாஸ்து படி, வீடு தென்கிழக்கு முகமாக இருந்தால், வீட்டு நிறங்களாக ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, பச்சை போன்றவை நல்லது தென்மேற்கு நோக்கிய வீடுகளுக்கு, வெளிர் பழுப்பு அல்லது பீச் பயன்படுத்தலாம். வடக்கு நோக்கிய வீடுகளுக்கு, வாஸ்து படி பச்சை நிறம் பரிந்துரைக்கப்படுகிறது. வடமேற்கு முகமாக இருக்கும் வீட்டிற்கு வெளிர் சாம்பல் மற்றும் க்ரீம் வண்ணம் பூசப்படுவது நேர்மறையானவற்றை வரவேற்கும் ஒரு வண்ணக்கலவையாக இருக்கும் . மேற்கு நோக்கிய வீட்டிற்கு வீட்டின் வெளிப்புறத்தில் பூச சிறந்த நிறம் நீலம் அல்லது வெள்ளை.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
எந்த வெளிப்புற நிறங்கள் வேகமாக மங்குகின்றன?
புற ஊதா கதிர்வீச்சு (UV) தாக்கம் காரணமாக வெளிப்புற பிரகாசமான வண்ணப்பூச்சுகள் மங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். வெளிப்புறம் பூசப்பட்ட வண்ணங்களில் அடர்த்திக்குறைவாக்கப்பட்ட வண்ணங்களைக் காட்டிலும் அதிக பிரகாசமான மஞ்சள் வண்ணங்கள், நீலம் அல்லது சிகப்பு போன்ற வண்ணங்கள் விரைவாகவே மங்கிவிடும்.
எந்த நிறங்கள் வீட்டை பெரிதாக தோற்றமளிக்கச் செய்கின்றன?
வீடு சிறியதாக இருந்தால், வீட்டு வெளிப்புற பூச்சுக்கான மத்தியமான வெளிர் நிறங்கள் வீட்டைப் பெரிதாக்கிக் காட்டும். வெளிர் சாம்பல், பால் வெண்மை, வெளிர் மஞ்சள் மற்றும் பீஜ் போன்ற வெளிர் வண்ணங்களை தேர்ந்தெடுங்கள்.
கூரைக்கான மிகவும் பிரபலமான நிறம் எது?
கூரைக்கான மிகவும் பிரபலமான நிறங்கள் கருப்பு, பழுப்பு, சாம்பல், சிவப்பு மற்றும் நீல நிறங்கள்.
வீட்டின் வெளிப்புறத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வண்ணப்பூச்சுகளை நான் பயன்படுத்தலாமா?
ஆம், நச்சுத்தனிமங்கள் இல்லாத குறைந்த ஆவியாகும் தன்மை கொண்ட கரிமப் பொருட்களையுடைய வண்ணப்பூச்சுக்களை தேர்ந்தெடுங்கள்.
(ஹரிணி பாலசுப்ரமணியனின் கூடுதல் உள்ளீடுகளுடன்)