படிவம் 16 என்பது இந்தியாவில் வருமான வரி தொடர்பாக ஐடிஆர் (ITR- இன்கம்டாக்ஸ் ரிட்டர்ன்) தாக்கல் செய்யும் போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு ஆவணமாகும்,. படிவம் 16 என்பது உங்கள் ஐடிஆர்(ITR) தாக்கல் செய்ய தேவைப்படும் ஒரு நிதி ஆவணமாகும். எனவே, இந்த ஆவணத்தைப் பற்றிய தெளிவான புரிதல் இருப்பது இந்தியாவில் உள்ள மாத ஊதியம் பெரும் அனைவருக்கும் மிக முக்கியமானதாகும்.. .
படிவம் 16 என்றால் என்ன?
பணியமர்த்துபவர்கள் வருமான வரி விதிப்புக்கு உள்ளாகக்கூடிய வரம்பளவுக்கு வருமானம் ஈட்டுபவர்களுக்கு சம்பளம் வழங்கும் போது TDS(சம்பளம் வழங்குமிடத்துப் பிடித்தம் செய்யப்படும் வரி) என அழைக்கப்படும் வரியை பிடித்தம் செய்ய வேண்டும். இந்த வரி பிடித்த நடவடிக்கை பணியமர்த்துனரின் தரப்பில், படிவம் 16 இல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. படிவம் 16ல் உங்கள் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்பட்டு அரசாங்கத்திடம் செலுத்தப்பட்ட TDS பற்றிய அனைத்து விவரங்களும். அடங்கியிருக்கும். படிவம் 16 என்பது ஒரு நிதியாண்டில் நீங்கள் மொத்தமாக எவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளீர்கள், மற்றும் நீங்கள் பெற்ற வருமானத்திற்கான வரி விதிப்பு வரம்புக்கு ஏற்ப, உங்கள் பணியமர்த்துனரால் உங்கள் சம்பளத்தில் இருந்து எவ்வளவு டிடிஎஸ் பிடிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் அறிக்கையாகும்.
மேலும் காண்க: சொத்து விற்பனையில் டிடிஎஸ் (TDS) பற்றிய அனைத்தும்
I-T சட்டப் பிரிவு 203 இன் கீழ் வழங்கப்படும் படிவம் 16, உங்கள் பணியமர்த்துபவர் உங்கள் சம்பளத்தில் இருந்து TDS-ஐ பிடித்தம் செய்து அதை I-T துறையிடம் செலுத்தியதாகக் அறிவிக்கிறது. நிதியாண்டின் தொடக்கத்தில் உங்கள் முதலீடுகள் குறித்து நீங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், உங்கள் வருமான வரி கட்ப்பாடு எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பது பற்றிய தகவலையும் படிவம் 16 வழங்குகிறது.
ஒரு நிதியாண்டில் நீங்கள் பலமுறை உங்கள் வேலையை மாற்றியிருந்தால் மற்றும் இந்த காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து பணியமர்த்துனர்களும் டிடிஎஸ் பிடித்தம் செய்திருந்தால், உங்கள் ஐடிஆர் ஐ தாக்கல் செய்வதற்கு முன்பாக அந்த ஒவ்வொரு பணியமர்த்துனர்களிடமிருந்தும் உங்களின் படிவம் 16ஐ நீங்கள் சேகரிக்க வேண்டும்.
மேலும் காண்க: பிரிவு 80C பற்றிய அனைத்தும்
படிவம் 16 பதிவிறக்கம்
படிவம் 16 ஐப் பதிவிறக்கம் செய்ய முடியாது, ஏனெனில் உங்கள் பணியமர்த்துனரால் மட்டுமே படிவம் 16 ஐ உங்களுக்கு வழங்க முடியும். பெரும்பாலான நிறுவனங்களில் சம்பளப் பதிவேட்டுத் தளங்கள் உள்ளன. படிவம் 16 பணீயமர்த்துனரால் வழங்கப்பட பிறகு இந்தத் தளத்தைப் பயன்படுத்தி ஒரு பணியாளர் படிவம் 16ஐப் பதிவிறக்கம் செய்யலாம். இருப்பினும், படிவம் 16 வேறு எந்த மூலாதாரத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்ய முடியாது.
ஒரு பணியமர்த்துனர் https://www.tdscpc.gov.in/app/login.xhtml. இல் உள்ள TRACES போர்டல் வழியாக படிவம் 16 ஐ உருவாக்கி பதிவிறக்கம் செய்கிறார். படிவம் 16 ஐ பணியாளருக்கு வழங்குவதற்கு முன் அதன் உள்ளடக்கங்களை பணியமர்த்துனர் அங்கீகரிக்க வேண்டும்.
படிவம் 16 க்கான தகுதி
வருமான வரி வரம்பிற்குட்பட்ட அளவு சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்களும், தங்கள் பணியமர்த்துனரிடமிருந்து படிவம் 16 ஐப் பெரும் தகுதியுடையவர்கள். வருமான வரி வரம்பிற்குள் வராத அளவு சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கும் சில நிறுவனங்கள் படிவம் 16 ஐ வழங்குகின்றன, எனவே அவர்களின் சம்பளத்தில் டிடிஎஸ் பிடிக்கப்பட்டிருக்காது
படிவம் 16: நீங்கள் காணக்கூடிய விவரங்கள்
படிவம் 16 இல் பின்வரும் விவரங்களை நீங்கள் காண்பீர்கள்
- பணியமர்த்துனரின் TAN & PAN விவரங்கள்
- பணியாளரின் விவரங்கள்
- செலுத்தபட்ட வருமான வரி பற்றிய விவரங்கள்
- சட்டப் பிரிவு 191A இன் படி பிடித்தம் செய்யப்பட்ட வரிகள்
- சம்பள விவரங்கள்
- டிடிஎஸ் ரசீது
- திரும்ப வழங்கப்படும் அல்லது மீதம் கூடுதலாக செலுத்த வேண்டிய வரி
மேலும் காண்க: இந்தியாவில் வரி படிமுறை(டாக்ஸ் ஸ்லாப்) பற்றி அனைத்தும்
படிவம் 16 இன் பிரிவுகள்
படிவம் 16 இல் இரண்டு பிரிவுகள் உள்ளன: படிவம் 16 A மற்றும் படிவம் 16 B
படிவம் 16 பிரிவு A விவரங்கள்
- பணியமர்த்துனரின் PAN மற்றும் TAN விவரங்கள்
- பணியாளரின் PAN எண்
- பணியாளரின் பெயர் மற்றும் முகவரி
- வரி பிடித்தம் செய்யப்பட்டு காலாண்டுக்கு ஒருமுறை டெபாசிட் செய்யப்பட்ட விவரம்
படிவம் 16 பிரிவு A – மாதிரி
படிவம் 16 பிரிவு B விவரங்கள்
- விரிவான சம்பள விவரக் கூறுகள்
- வருமான வரிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட விலக்குகள்
- பிரிவு 10 இன் கீழ் வழங்கப்படும் படித்தொகையின் கூறுகள்
- அத்தியாயம் VI A இன் கீழ் வழங்கப்பட்ட பிடித்தங்கள்
- பிரிவு 89 இன் கீழ் நிவாரணம்
படிவம் 16 பிரிவு B – மாதிரி
படிவம் 16, படிவம் 16A மற்றும் படிவம் 16B
படிவம் 16 உங்கள் சம்பள டிடிஎஸ் சான்றிதழாக இருக்கும், படிவம் 16 A என்பது சம்பளம் தவிர்த்து இதர வருமானங்களுக்கான சம்பள டிடிஎஸ் சான்றிதழாகும். அதே சமயம், படிவம் 16 B என்பது அசையாச் சொத்துக்களை விற்பதன் மூலம் ஈட்டிய வருமானத்திற்கான டிடிஎஸ் சான்றிதழாகும்.
படிவம் 16, படிவம் 16A மற்றும் படிவம் 16B ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு
படிவம் வகைகள் | படிவம் 16 | படிவம் 16 A | படிவம் 16 B |
வழங்கப்படுவதின் நோக்கம் | சம்பளத்தில் TDS | சம்பளம் அல்லாத இதர எந்த வருமானத்திலும் பிடிக்கப்பட்ட TDS. இதில் வாடகை மற்றும் டெபாசிட்டுகள் மூலமாக ஈட்டப்படும் வட்டி ஆகியவை அடங்கும் | அசையாச் சொத்தை விற்றதன் மூலம் ஈட்டிய வருமானத்தின் மீதான TDS |
வழங்குனர் | பணியமர்த்துனர் | வங்கிகள், வாடகைதாரர் போன்ற இன்னும் பலர் | சொத்து வாங்குபவர் |
ஒரு வேளை, உங்கள் பணியமர்த்துனர் TDS பிடித்தம் செய்து அதை I-T துறையில் செலுத்தியிருந்தால், அது குறித்த விவரங்களைப் படிவம் 26AS-ல் உங்களால் கண்டறிய முடியும். I-T துறையால் வழங்கப்பட்ட, படிவம் 26AS என்பது குறிப்பிட்ட வருடத்தில் முன்கூட்டியே செலுத்தப்பட்ட அல்லது சுய மதிப்பீட்டு வரி, சொத்து விற்பனை மற்றும் வாங்குதல், பரஸ்பர நிதிகள், ரொக்க வைப்புத்தொகைகள் மற்றும் ரொக்கம் திரும்பப் பெறுதல் ஆகியவை உட்பட.உங்கள் பணியமர்த்துனர் மற்றும் வங்கிகளால் உங்கள் வருமானத்தில்,பிடித்தம் செய்த வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வரவு வைக்கப்பட்ட வருடாந்திர வரித்தொகை பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ஒரு அறிக்கையாகும்,.
மேலும் UAN புகுபதிகை பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்
படிவம் 16 வழங்கப்படும் நாள்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 அல்லது அதற்கு முன்பாக உங்கள் பணியமர்த்துனரால் படிவம் 16 வழங்கப்படுகிறது. வரி பிடித்தம் செய்யப்பட்ட நிதியாண்டு முடிந்த பிறகு உடனடியாக படிவம் 16 வழங்கப்படுகிறது.
படிவம் 16: பலன்கள்
சம்பளம் பெறும் ஒரு பணியாளர் அவரது படிவம் 16 இல் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களைப் பின்வரும் சூழ்நிலைகளில் பயன்படுத்தலாம்:
- வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய
- எந்த வகையான கடனுக்காகவும் விண்ணப்பிக்க
- வெளிநாட்டு விசாவிற்கு விண்ணப்பிக்க
- புதிய நிறுவனத்தில் சேரும் சமயத்தில்
- வருமானச் சான்று காட்ட
- உங்கள் நிதிசார் ஆவணங்களின் வரி சேமிப்பு செயல்திறனை சரிபார்க்க
மேலும் காண்க : ITR அல்லது வருமான வரி தாக்கல் குறித்து நீங்கள் அறிய விரும்பிய அனைத்தும் பற்றி
ஐடிஆர்(ITR) தாக்கல் செய்ய தேவைப்படும் படிவம் 16ல் உள்ள தகவல்கள்
- பணியமர்த்துனரின் TAN விவரம்
- பணியமர்த்துனரின் PAN எண்
- பணியமர்த்துனரின் பெயர் மற்றும் முகவரி
- தற்போதைய வருமான வரி கணக்கீட்டு ஆண்டு
- வரி செலுத்துபவரின் PAN எண்.
- வரி செலுத்த வேண்டிய சம்பளம்
- பணீயமர்த்துனரால் வழங்குமிடத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வரி
- பிரிவு 16 இன் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட வரி கூறுகள்
- பிரிவு 10ன் கீழ் நிவாரணம்
- TDS க்காக வழங்கப்பட்ட வீட்டுச் சொத்திலிருந்து ஈட்டிய வருமானம்
- TDS க்காக வழங்கப்பட்ட பிற மூலாதாரங்களில் இருந்து ஈட்டிய வருமானம்
- பிரிவு 80C, பிரிவு 80CCC, பிரிவு 80CCD (1), பிரிவு 80CCD(1B), பிரிவு 80CCD (2), பிரிவு 80D மற்றும் பிரிவு 80E உட்பட, அத்தியாயம் VI-A இன் கீழான பிடித்தங்களின் கூறுகள்
- பிரிவு 10(a), பிரிவு 10(b), பிரிவு 10(c), பிரிவு 10(d), பிரிவு 10(e), பிரிவு 10(f) பிரிவு 10(g), பிரிவு 10(h), பிரிவு 10(i), பிரிவு 10(j), மற்றும் பிரிவு 10(l) ஆகியவற்றை உள்ளடக்கிய இன் கீழ் துப்பறியும் தொகையை உள்ளடக்கிய அத்தியாயம் VI-A இன் கீழ் பிடித்தம் செய்யப்படும் மொத்தத் தொகை ,
படிவம் 16 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
படிவம் 16 என்பதன் அர்த்தம் என்ன?
படிவம் 16 என்பது ஒரு பணியமர்த்துனரால் அவரது பணியாளர்களுக்கு வழங்கப்படும் வருமான வரி படிவமாகும், அதில் சம்பளம் வழங்குமிடத்தில் பிடித்தம் செய்யப்பட வரி (டிடிஎஸ்) பற்றிய தகவல்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். .
படிவம் 16 ஐ யார் உருவாக்குகிறார்கள்?
படிவம் 16 ஐ உருவாக்கும் பொறுப்பு மத்திய செயலாக்க TDS பிரிவு (TDS CPC) ஐ சார்ந்தது நீங்கள் சம்பளம் ஒரு நபர் என்றால், உங்களுக்கான படிவம் 16 ஐ உருவாக்கும் கோரிக்கையை அதிகாரப்பூர்வ TRACES போர்ட்டலில் TDS பிடித்தம் செய்பவர், அதாவது உங்கள் பணியமர்த்துனரால் மட்டுமே எழுப்ப முடியும்.
எனது பணியமர்த்துனர் படிவம் 16 ஐ ஏன் எனக்கு வழங்கவில்லை?
உங்கள் சம்பளம் அடிப்படை வரி விலக்கு வரம்புக்குக் குறைவாக இருந்தால், உங்கள் பணீயமர்த்துனர் படிவம் 16 ஐ வழங்க மாட்டார்.
படிவம் 16 இல்லாமல் என்னால் ITR தாக்கல் செய்ய முடியுமா?
வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தேவையான அனைத்துத் தகவல்களும் உங்களிடம் இருந்தால், படிவம் 16 இல்லாமலேயே நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யலாம்.
எனது பணியமர்த்துனர் டிடிஎஸ் பிடித்தம் செய்திருக்கும் நிலையில் நான் அவசியம் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டுமா?
உங்கள் பணியமர்த்துபவர் TDS-பிடித்தம் செய்து படிவம் 16-ஐ வழங்கியிருந்தாலும் உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது உங்கள் பொறுப்பு. எனது படிவம் 16 ஐ நான் இழக்க நேர்ந்தால் என்ன செய்வது? படிவம் 16 இன் மற்றொரு நகலை வழங்குமாறு உங்கள் பணியாமர்த்துனரிடம் நீங்கள் கேட்கலாம்.