இந்த பண்டிகை காலத்தில், உங்கள் புதிய வீட்டிற்கான கிரகப் பிரவேச குறிப்புகள்

சொத்து முதலீடு என்று வரும் பொது, வீட்டு உரிமையாளர்கள் பொதுவாக நல்ல நாள் பார்த்து கிரகப்பிரவேசம் செய்வார்கள் ,குடியேறுவதற்கு முன். இந்த விழாவின் முக்கியத்துவத்தையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டியவற்றையும் காணலாம்

இந்தியர்கள் பொதுவாக  சுப முகுர்த்த நாட்களில் தான் பொருட்கள்  வாங்குவது அல்லது புது வீட்டுக்கு செல்வது போன்றவற்றை செய்வார்கள். ஒரு நல்ல நாள் அன்று  கிரகப் பிரவேச விழாவை நடத்தினால் , அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

கிரகப் பிரவேச  விழா எப்போது நடக்கும் என்றால்  ஒருவர் முதல் முறையாக புது வீட்டுற்குள் குடியேறும்  பொது நிகழும் நிகழ்வு . “இது மிகவும் முக்கியமானது, உரிமையாளருக்கு  மட்டுமல்ல, முழு குடும்பத்திற்கும் “,என்கிறார் மும்பை சேர்ந்த ஜெய்ஸ்ரீ தமணி, வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட நிபுணர்.வாஸ்துவின் படி,வீடு என்பது ஆகாயம், பூமி, நீர், நெருப்பு மற்றும் காற்று ஆகிய பஞ்ச பூதங்களைக் கொண்டு கட்டப்படுகிறது. இவற்றை முறையாக அமைத்தால்தான் வீட்டில் மகிழ்ச்சியும் நல்ல உடல்நலமும் சகல வளங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில், ஒரு புதிய வீட்டிற்குள் நல்ல நேரத்தில் குடியேறும்போது வாழ்க்கை எளிதானதாக மாறுகிறது, குடும்பத்தின் கஷ்டங்கள் குறைகிறது என்று கருதப்படுகிறது.

“ஒரு நல்ல நேரத்தில் புது வீட்டிற்குள் நுழைவதால் ,அவர்கள் வாழ்க்கையை எளிதாகும் மற்றும் அவர்கள் வாழ்க்கையில் குறைந்தபட்ச போராட்டம் தான் இருக்கும்   என்று நம்பப்படுகிறது கிரகப் பிரவேசத்திற்கான சிறந்த நாட்களாக வசந்த பஞ்சமி, அக்‌ஷய த்ரிதியை, சித்திரை முதல் தேதி(குடி படுவா ), தசரா என்று அழைக்கப்படும் விஜயதசமி ஆகியவை அமைந்துள்ளன.

உத்தராயன காலக்கட்டத்திலும் ஹோலி பண்டிகை தினத்திலும் அதிக்மாஸ் மற்றும் சாராத பக்ஷா தினங்களிலும் கிரக பிரவேசத்தை தவிர்ப்பது நல்லது. என்று கூறுகிறார் தமனி .
கிரகப் பிரவேசம் தசரா அன்று செய்வதென்றால்  அதற்கு நல்ல நேரம் தேவையில்லை , அந்த நாளில் ஒவ்வொரு கணமும் நல்ல நேரம் தான்கிரகப் பிரவேசத்திற்கு  முன்பு ஒரு கலச பூஜை நிகழ்த்தப்படுகிறது.

கிரகப் பிரவேசத்தின்போது ஒரு வெண்கல சொம்பு பாத்திரத்தில் தண்ணீரும் நவ தானியங்களும் நாணயங்களும் நிரப்பி அதன்மீது தேங்காயை வைத்து மந்திரங்களை உச்சரித்தபடி வீட்டிற்குள் நுழைவது முக்கியமான சடங்காகும்.

 

கிரகப் பிரவேசத்தின் போது செய்யவேண்டியவையும் மற்றும் செய்யக்கூடாதவையும்:

கிரகப் பிரவேசம்  எப்போது செய்யவேண்டும் என்றால் , உங்கள் புது வீடு  குடும்பத்தோடு குடியேற தயாரான நிலையில் இருக்க பட்சத்தில் தான்.வீட்டில் குடியேறும்போது அது முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு கூரை தயாரான நிலையில் இருக்க வேண்டியது அவசியமாகும்.(தனி வீடாக இருக்கும்பட்சத்தில் ) நிலை, கதவு, ஜன்னல்கள் ஆகிய வேலைகளும் முடிந்திருந்தால் மிகவும் நல்லது என்று கூறுகிறார் வாஸ்து பிளஸ் -ன் வாஸ்து நிபுணர்  நிதின் பர்மார் .

“வாஸ்து புருஷ் மற்றும் மற்ற தெய்வங்களையும் வழிபடவேண்டும்

“வீட்டிற்குள் நுழையும் முதன்மை கதவு வளங்களையும் செல்வத்தையும் வரவேற்கிறது என்பது நம்பிக்கை, அதை  நாம் எப்படி அலங்காரம் செய்யவேண்டும் என்றால் , மங்களகரமான சின்னங்களான ஸ்வஸ்திக் மற்றும் லட்சுமி பாதம்  (நுழைவாயில் தொடக்கத்தில் வரையவேண்டும் ).தோரணம் கட்டவேண்டும் (சமஸ்கிருத வார்த்தையான ‘தோராண’ என்பதிலிருந்து உருவானது, அதாவது புனித நுழைவாயில் என்று பொருள்), இது புதிய மாவிலை மற்றும் சாம்பல் பூக்கள் தயாரிக்கப்பட்டு, வாசலிலேயே தொங்கவிட வேண்டும். குடியேறும் தினத்தன்று வீட்டின் பூஜையறை வடகிழக்கு பாகத்தில் அமைப்பது நலம் சேர்க்கும் என்று பர்மார் அறிவுறுத்துகிறார்.

வழக்கமாக, ஹோமம்  நடத்தப்படுகிறது, இடத்தை சுத்தப்படுத்துதல் எதிர்மறை சக்திகள் அதை சுத்தப்படுத்தும். கணேஷ் பூஜை, நவகிரக சாந்தி  அப்படியென்றால் நவகிரகங்களுக்கு வணங்கும் நவகிரக பூஜை, வாஸ்து பூஜை ஆகியவை கிரகப் பிரவேசத்தின்போது செய்யப்படுபவை. இந்த நாளில் அழைக்கப்பட்ட குருக்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உணவு வழங்க வேண்டும்.வீட்டில் கிரகப் பிரவேச விழா நடத்தப்பட்டவுடன்,  உரிமையாளர்கள் புதிய வீட்டிற்குள் செல்லலாம்.

 

உங்கள்  புது வீடு கிரகப் பிரவேசத்தின்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

  • கிரகப் பிரவேசம் சுப முகூர்த்த தினத்தில் தான் நடத்த வேண்டும் . வீட்டில் தெய்வங்களை  கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
  • கிரகப் பிரவேம் செய்வதற்கு முன்பு வீடு முழுவதையும் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தரையை சுத்தம் செய்யும்போது உப்பை பயன்படுத்துவது நல்லது.
  • வீட்டிற்குள் முதல் தடவையாக நுழையும்போது வலது கால்
  • எடுத்து வைத்து நுழையவும்.
  • வீட்டிற்குள் நுழையும் முதன்மை கதவு அலங்கரிக்கப்பட வேண்டும்,  அதை “சிம்ஹா த்வாரா” என்று அழைப்பார்கள் , மற்றும் அது வாஸ்து புருஷனின் முகமாகவும் கருதப்படுகிறது. கதவை பூக்களைக் கொண்டும் தோரணங்களைக் கொண்டும் அலங்கரிக்க வேண்டியது அவசியம். மாவிலை தோரணங்களைக் கொண்டு வீட்டின் கதவை அலங்கரிப்பது மிகவும் நல்லது.
  • வாசலில் மாக்கோலமிட்டு மலர்களைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும். வீட்டு வாசலில் கோலமிடுவது திருமகளை வரவேற்பதன் அடையாளம்.
  • ஒரு ஹோமம் (மூலிகைகள் மற்றும் மரத் துண்டுகளை தீயில் போட்டு ), அவை சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் இடத்தை சுத்தப்படுத்துவதாக கூறப்படுகிறது.

 

கிரகப்பிரவேச பூஜையை ஏன் நடத்த வேண்டும்?

  • கிரகப்பிரவேச சடங்குகளைச் செய்வது பார்வை திருஷ்டி படுவதை மற்றும் எதிர்மறை ஆற்றல்களிலிருந்து வீட்டைப் பாதுகாக்கிறது மற்றும் வீட்டில் நேர்மறை ஆற்றல்களின் ஓட்டத்தை உறுதி செய்கிறது.
  • பூஜையை நடத்துவது தெய்வங்களையும் ஒன்பது கிரகங்களையும் மகிழ்விக்கிறது மற்றும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளிலிருந்து பாதுகாப்பை அளித்து அவற்றை தடுக்கும் வகையில் அவர்களின் ஆசீர்வாதங்களை கிடைக்கச்செய்கிறது.
  • இது குடும்ப உறுப்பினர்களுக்கு அதிர்ஷ்டம், நல்ல ஆரோக்கியம் மற்றும் செல்வச் செழிப்பை ஈர்த்து வழங்குகிறது. புதிய வீட்டில் ஒருவர் எதிர்கொள்ளக் கூடிய தடைகளை அகற்றும்.
  • கிரகப்பிரவேச பூஜை வீட்டையும் அதன் சுற்றுப்புறத்தையும் தூய்மைப்படுத்தவும் ஆன்மீகமயமாக்கவும் உதவும் வகையில் புனிதமான அதிர்வலைகளை உருவாக்குகிறது

 

கிரஹ பிரவேச பூஜை மந்திரங்கள்

மந்திரங்கள் என்பது தியானம் மற்றும் மத சடங்குகளின் போது மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும் சமஸ்கிருத வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள் ஆகும். அவை புனிதமானதாகவும், அமைதியான சூழலை ஏற்படுத்த வல்லதாகவும் கருதப்படுகிறது. இதனால் வீட்டிற்கு நேர்மறை ஆற்றல்களை விளைகிறது. ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட அர்த்தம் உள்ளது, அது விதிகளின்படி ஒலிக்கப்பட வேண்டும். 

கிரகப் பிரவேச பூஜையின் போது விநாயகப் பெருமானை வழிபடுகிறார்கள். பூக்கள் மற்றும் அரிசி சமர்ப்பித்து பின்வரும் மந்திரம் சொல்லப்படுகிறது 

  • ஓம் கணேசாய நமஹ ஆவாஹயாமி

 

பின்வரும் மந்திரங்களை உச்சரிக்கும் போது கடவுளுக்கு மலர்கள் அர்ப்பணிக்கப்பட்டு, சந்தானம் பூசப்படுகிறது:

  • ஓம் கணேசாய நமஹ கந்தம் சமர்பயாமி
  • ஓம் கணேசாய நமஹ புஷ்பம் சமர்பயாமி

 

அடுத்து, பின்வரும் மந்திரம் உச்சரிக்கப்படும் போது தீபம் மற்றும் அகர்பத்தி தெய்வத்திற்கு சமர்பிக்கப்படுகிறது:

  • ஓம் கணேசாய நமஹ தீபம் தர்சயாமி

 

இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது விநாயகப் பெருமானுக்கு உணவு வழங்கப்படுகிறது

  • ஓம் கணேசாய நமஹாம்ர்த-மஹா-நைவேத்யம் இவேதயாமி
  • ஓம் கணேசாய நமஹ சர்வோபசாரம் சமர்பயம்

 

பூக்கள் மற்றும் பிரசாதம் வழங்கும்போது விநாயகப் பெருமானின் பின்வரும் நாமங்கள் உச்சரிக்கப்படுகின்றன

  • ஓம் ஏகதந்தாய நம
  • ஓம் கபிலாய நம
  • ஓம் கஜகர்ணகாய நம
  • ஓம் லம்போரராய நம
  • ஓம் விகடாய நம
  • ஓம் விக்னராஜாய நம
  • ஓம் விநாயகஹா நம
  • ஓம் தூமகேதவே நம
  • ஓம் கணாத்யக்ஷ்யாய நம
  • ஓம் பாலசந்த்ராய நம
  • ஓம் கஜானநாய நமஹோம் வக்ரதுண்டாய நம
  • ஓம் சூர்பகர்ணாய நம
  • ஓம் ஹேரம்பாய நம
  • ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம
  • ஓம் ஸ்ரீ சித்திவிநாயகாய நமஹ ஓம் ஸுமுகாய நமஹ

 

கலச பூஜையின் போது, பின்வரும் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன:

  • ஓம் வர்தினி-வருந்த்யாவஹிதா தேவதாப்யோ நமஹ ஆவாஹயாமி
  • ஓம் வர்தினி-வருந்த்யவஹிதா தேவதாப்யோ நமஹ கந்தம் சமர்பயாமி
  • ஓம் வர்தினி-வருந்த்யாவஹிதா தேவதாப்யோ நமஹ புஷ்பம் சமர்பயாமி
  • ஓம் வர்தினி-வருந்த்யாவஹிதா தேவதாப்யோ நமஹ தூபம் அக்ரபயாமி
  • ஓம் வர்தினி-வருந்த்யவஹிதா தேவதாப்யோ நமஹ் தீபம் தர்சயாமி
  • ஓம் வர்தினி-வருந்த்யவஹிதா தேவதாப்யோ நமஹாம்ர்த- மஹா-நைவேத்யம் நிவேதயாமி
  • ஓம் வர்தினி-வருந்த்யவஹிதா தேவதாப்யோ நமஹ ஸர்வோபசாரம் ஸமர்பயாமி
Was this article useful?
  • ? (0)
  • ? (0)
  • ? (0)

Recent Podcasts

  • மஹாதா சத்ரபதி சம்பாஜிநகர் போர்டு லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல் ஜூலை 16 அன்று
  • மஹிந்திரா ஹேப்பினெஸ்ட் கல்யாண் – 2 இல் 3 டவர்களை மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் அறிமுகப்படுத்துகிறது
  • குர்கானின் செக்டார் 71ல் 5 ஏக்கர் நிலத்தை பிர்லா எஸ்டேட்ஸ் கையகப்படுத்துகிறது
  • குர்கானில் ரூ.269 கோடி மதிப்பிலான 37 திட்டங்களை ஹரியானா முதல்வர் தொடங்கி வைத்தார்
  • ஹைதராபாத்தில் ஜூன்'24ல் 7,104 குடியிருப்பு சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன: அறிக்கை
  • இந்திய அல்லது இத்தாலிய பளிங்கு: எதை தேர்வு செய்ய வேண்டும்?