இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB – ஐஓபி) தனது வாடிக்கையாளர்களுக்காக பேலன்ஸ் செக்கிங், பணப் பரிமாற்றம், பில் கட்டணம் செலுத்துதல் போன்ற பல வசதிகளுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேவைகளை வழங்கி வருகிறது. ஆஃப்லைன் வங்கி சேவைகளான ஏடிஎம் (ATM) சேவையைப் பெறுவது அல்லது வாடிக்கையாளர்கள் நேரடியாக ஐஓபி வங்கிக்குச் சென்று சேவைகளைப் பெறுவது மற்றும் ஐஓபி வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆன்லைன் சேவைகளான வங்கியின் நெட் பேங்கிங் இணையதள சேவை அல்லது மொபைல் ஆப் சேவையை பெறுவது போன்ற பல ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேவைகளை ஐஓபி வங்கி வழங்கி வருகிறது.
ஐஓபி பேலன்ஸ் செக் மிஸ்டு கால் சேவைக்காக பதிவு செய்தல்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் எந்த ஒரு கிளையின் வாடிக்கையாளரும் ஐஓபி-யின் மிஸ்டு கால் பேலன்ஸ் செக் சேவையை, அந்தந்த வங்கிக் கிளைக்குச் சென்று ஒன்-டைம் ரெஜிஸ்ட்ரேஷன் முறையில் பதிவு செய்வதன் மூலம் பெற முடியும்.
ஐஓபி இருப்பு சரிபார்ப்பு எண்
டோல்-ஃபிரீ எண்களின் விவரம்:
ஐஓபி சேவைகள் | டோல்–ஃபிரீ எண்கள் |
ஐஓபி பேலன்ஸ் சரிபார்ப்பு எண் | மிஸ்டு கால் தர 04442220004 |
மினி ஸ்டேட்மென்ட் | மிஸ்டு கால் MINI ஸ்பெஸ் விட்டு அக்கவுண்ட் எண்களின் கடைசி 4 எண்கள் |
IOB-யில் பேலன்ஸ் செக் செய்யும் வழிமுறைகள்:
வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வங்கி சேவைகளில், அவர்களது வங்கி கணக்கு இருப்பு தொகை பற்றிய தகவல்களுக்கான சேவை மிகவும் முக்கியமான ஒன்று என்பதால் வங்கி தமது வடிக்கையாளர்களுக்கு பல்வேறு வழிகளில் சேவைகளை வழங்கி வருகிறது.
அவை பின்வருமாறு:
ஐஓபி இருப்பு சரிபார்ப்பு சேவை | விளக்கம் |
ஐஓபி பாஸ்புக் | வங்கி சேவையை நேரடியாக பெற விரும்பும் அல்லது நெட் பேங்கிங் சேவையில் பதிவு செய்யாதவர்கள், அவர்களது பாஸ்புக் கொண்டு தங்களது வாங்கிக் கணக்கை செக் செய்வதன் மூலம் தங்கள் IOB பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம். ஏனெனில், மக்கள் அவர்களது பாஸ் புக்கை வீட்டிலிருந்து கொண்டு வருவதால் இது அவர்களது வாங்கி இருப்புத் தொகையை தெரிந்துகொள்ள எளிதாக உள்ளது.
இருப்பினும் வாடிக்கையாளர்கள் தங்கள் பாஸ்புக்கை அடிக்கடி புதுப்பித்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் அவர்களது தற்போதைய இருப்பு தொகை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள முடியும். அத்துடன் அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து பரிவர்த்தனைகளின் விவரங்களையும் அடிக்கடி புதுப்பிப்பதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் வங்கிக்கு சென்று தங்கள் பாஸ் புக்கை அடிக்கடி புதுப்பிக்காதவரக்ளுக்கும், அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும் இது சிறந்த வழியாக இருக்க வாய்ப்பில்லை. |
ஐஓபி ஏடிஎம் | இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஐஓபி ATM சென்று தங்கள் பேலன்ஸ்
இருப்புத் தொகை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இது IOB வாடிக்கையாளர்கள் தாங்களாகவே ஐஓபி ஏடிஎம் சென்று அவர்களின் பேலன்ஸ் கணக்கு விவரங்களை தெரிந்து கொள்ளும் நேரடி செயல் முறையாகும். ஐஓபி பயனாளர்கள் அனைவரும் தங்கள் ATM கார்டை ஏடிஎம் மெஷினில் ஸ்வைப் செய்து ATM PIN கொண்டு லாக் இன் செய்து “Balance Enquiry” எனும் ஆப்ஷனை தேர்வு செய்யலாம். மேலும், அவர்களது சமீபத்திய 10 பணப் பரிமாற்ற விவரங்களை மினி ஸ்டேட்மென்ட் ஆப்ஷன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த பணப் பரிமாற்ற விவரங்கள் ஒரு ரசீதாக ATM மெஷினில் இருந்து வெளிவரும். IOB ATM அல்லாத மற்ற வங்கி ATMகளிலும் IOB வாடிக்கையாளர்கள் தங்கள் பேலன்ஸ் இருப்பு தொகையை தெரிந்து கொள்ளலாம். |
ஐஓபி SMS பேங்கிங் | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து 8424022122 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் தங்கள் பேலன்ஸ் இருப்பு தொகையை தெரிந்து கொள்ளலாம். “BAL கணக்கு எண்ணின் கடைசி 4 டிஜிட் எண்கள்>” என்ற விவரம் அளித்து 8424022122 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
வங்கி தங்கள் வாடிக்கையாளர்களின் அக்கவுண்ட் பேலன்ஸ் விவரங்களை எஸ்எம்எஸ் சேவை மூலம் வழங்குகிறது. |
ஐஓபி நெட் பேங்கிங் | ஐஓபி-யில் கணக்கு வைத்திருப்பவர்கள் நெட் பேங்கிங்கிற்கு பதிவு செய்திருந்தால் அதன் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொண்டு நெட் பேங்கிங் வசதியை பெறலாம். நெட் பேங்கிங் மூலம், IOB பேலன்ஸ் சரிபார்ப்பது, கணக்கு ஸ்டேட்மென்ட்ஸ் பார்ப்பது, பண பரிமாற்றங்கள் செய்தல், பணம் செலுத்துதல், மொபைல் பில் செலுத்துதல் போன்ற பல சேவைகளைப் பெறலாம். |
ஐஓபி மிஸ்டு கால் சேவை | IOB பயனாளர்கள் தங்கள் கணக்கு இருப்பை தெரிந்துகொள்ள தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 04442220004 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். தொடர்ந்து சில நிமிடங்களுக்குப் பிறகு மொபைல் அழைப்பு முடிவடைந்ததும் IOB வங்கியிலிருந்து பயனாளர்களுக்கு அவர்களது அக்கவுண்ட் பேலன்ஸ் விவரத்தை எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கிறது. |
UPI மூலம் ஐஓபி இருப்பு சரிபார்த்தல் | · உங்களது ஸ்மார்ட் ஃபோனில் ஏதேனும் ஒரு UPI ஆப் இன்ஸ்டால் செய்யவும்
· உங்கள் விருப்ப குறியீட்டு எண்ணை அதில் சேர்க்க வேண்டும். · அக்கவுண்ட் பேலன்ஸ் தெரிந்துகொள்ள விரும்பும் கணக்கு எண்ணைத் தெரிவு செய்யவும். · செக் பேலன்ஸ் என்ற விருப்பத்தை செலக்ட் செய்யவும். · நீங்கள் உருவாக்கிய UPI PIN எண்ணை டைப் செய்யவும். · UPI PIN-ஐ உள்ளிட்ட பிறகு உங்கள் மொபைல் திரையில் அக்கவுண்ட் பேலன்ஸ் விவரங்களை பார்க்க முடியும். |
ஐஓபி மொபைல் பேங்கிங் ஆப்கள் | IOB அக்கவுண்ட் பயனாளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கொண்ட மொபைல் ஃபோனிலிருந்து இந்தியன் ஓவர்சீஸ் பேங்கின், IOB mPassbook, IOB மொபைல், IOB நண்பன் போன்ற மொபைல் பேங்கிங் ஆப்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். அவற்றைப் பற்றிய விவரங்கள் சுருக்கமாக இங்கே தரப்பட்டுள்ளன:
IOB mPassbook: IOB பயனாளர்கள் தங்கள் அக்கவுண்ட் விவரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆகியவற்றை ஆன்லைன் மூலமாக தெரிந்துகொள்வதற்கான ஆன்லைன் பாஸ்புக் சேவை. IOB வாடிக்கையாளர் மேற்கொண்ட அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்களை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இது நேரிடியாக வங்கிக்கு சென்று புதுப்பிக்கும் நமது வழக்கமான பாஸ்புக் போலல்லாமல் ஆன்லைன் மூலம் IOB-யில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது தற்போதைய அக்கவுண்ட் பேலன்ஸ் விவரங்களை இருந்த இடத்திலிருந்தே தெரிந்து கொள்ள உதவுகிறது. IOB மொபைல்: தங்கள் மொபைல் ஃபோன் மூலம் வங்கி பரிவர்த்தனைகளை செய்து பழகிய IOB வாடிக்கையாளர்கள் Mobile App-ஐ எளிதாகப் பயன்படுத்தலாம். IOB மொபைல், IOB பேலன்ஸ் சரிபார்த்தல், அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட், பண பரிவர்த்தனைகள், IMPS. NEFT, RTGS, பில் செலுத்துதல் போன்ற பல பேங்கிங் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் மொபைல் பேங்கிங்கில் பதிவு செய்திருக்க வேண்டும். IOB நண்பன்: பல வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவையை பயன்படுத்த விரும்புகின்றனர். ஆனால் இதில் பலருக்கு ஆங்கிலத்தில் சரிவர பயனபடுத்த தெரிவதில்லை. இதற்காக ஏற்படுத்தப்பட்ட செயலிதான் IOB நண்பன். இது ஒரு பன்மொழி செயலி ஆகும். ஆங்கில மொழி பிரச்சனையாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள செயலியாக உள்ளது. ஏனெனில் இதில் தங்களது விருப்ப மொழியிலேயே பண பரிமாற்றங்களை மேற்கொள்ள இயலும். |
IOB பேலன்ஸ் செக் சேவைகளின் முக்கியத்துவம்
வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளும் செயல்முறையில் தங்களது அக்கவுண்டின் பேலன்ஸ் இருப்புத் தொகை பற்றிய விவரங்களை அறியும் செயல்பாடு மிகவும் பொதுவான ஒன்றாக உள்ளது. பின்வரும் காரணங்களுக்காக அவர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பேங்க் பேலன்ஸ் செக் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்:
- பிறருக்கு பணத்தை மாற்றுவதற்கு முன் தங்கள் அக்கவுண்டில் போதுமான அளவு தொகை உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.
- பணம் அவர்கள் அக்கவுண்டிற்கு மாறியதா என்று சரிபார்க்கலாம்.
- தங்களுக்கு வழங்கப்பட்ட காசோலை சரிபார்க்கப்பட்டு பணம் தங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
- தங்கள் கணக்கில் சேர்ந்துள்ள பணம் எதிர்பார்த்த அதே அளவில் வரவாக உள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளலாம். அவ்வாறு இல்லையெனில், தங்கள் கணக்கில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்துகொள்ள அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட்டை சரிபார்க்கலாம்.