மூன்று பெரிய நீர்நிலைகளால் சூழப்பட்ட இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி, தமிழ்நாட்டின் அழகும் அமைதியும் நிறைந்த நகரங்களில் ஒன்றாகும். வரலாறு, கலாசாரம், இயற்கை அழகு மற்றும் நவீனமயமாதல் ஆகியவற்றின் அற்புதக் கலவையாக உள்ள இந்தக் கடற்கரை நகரத்தில் ஏதோ ஒன்று அனைவரையும் ஈர்க்கிறது.
இந்த அழகான கடற்கரை நகரம் நமது விடுமுறை நாட்களைக் கழிப்பதற்கு ஏற்ற ஒரு சிறந்த இடமாகும். உங்களது பயணத் திட்டத்தில் கன்னியாகுமரியின் சிறந்த சுற்றுலா தலங்கள் பற்றிய பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரியின் 16 சிறந்த சுற்றுலா தலங்கள்
விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம்
ஒரு சிறிய தீவின் மீது அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் கன்னியாகுமரியில் உள்ள மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் ஆகும். 1892-ஆம் ஆண்டில் விவேகானந்தர் இங்குள்ள பாறையில் மூன்று நாட்கள் தொடர்ந்து தியானம் செய்த பின்பு ஞானோதயம் அடைந்தார்.
விவேகானந்தர் மண்டபம் மற்றும் ஸ்ரீபாத மண்டபம் ஆகிய இரண்டும் இந்தப் பாறை நினைவு மண்டபத்தின் மிக முக்கிய அம்சங்கள் ஆகும். இந்தியப் பெருங்கடலை பின்னணியாகக் கொண்டு எழுப்பப்பட்ட சுவாமி விவேகானந்தரின் பிரமாண்டமான சிலை பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும். ஆன்மிக சிந்தனையும் அமைதியான சுற்றுப்புறமும் கொண்ட இந்த விவேகானந்தர் நினைவு மண்டபம் கன்னியாகுமரியின் மிக முக்கியமான சுற்றுலா தலமாக அனைவரையும் ஈர்க்கிறது.
Source: Pinterest
திருவள்ளுவர் சிலை
உலகப் புகழ் பெற்ற தத்துவ ஞானி மற்றும் புலவராகத் திகழ்ந்த திருவள்ளுவரைப் போற்றும் விதமாக கன்னியாகுமரியின் ஒரு சிறிய தீவில் ஒரு சிலை எழுப்பப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்பான திருக்குறள் நூலை எழுதியவர் திருவள்ளுவர். திருக்குறளை போற்றும் விதமாக 133 அடி உயரத்துடன் 38 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது, வெகு தொலைவிற்கு தெரியும் வண்ணம் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான இந்த இடம் நமது பழம்பெரும் கலாசாரத்தை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
Source: Pinterest
புனித அலங்கார உபகார மாதா திருத்தலம்
அன்னை மேரி மாதாவைப் போற்றி வணங்கும் பொருட்டு இந்தப் புகழ்பெற்ற புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் (Our Lady of Ransom Church) கன்னியாகுமரியில் அமைந்துள்ள கத்தோலிக்க ஆலயம் ஆகும். 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தத் திருத்தலம், கோதிக் கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. தேவாலயத்தின் நீல நிறம் அதன் பின்னணியில் உள்ள கடல் அலைகளின் உடன் வேறுபட்டு தோற்றமளிப்பது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். இந்த அற்புதமான தேவாலயத்தின் உயரமான கோபுரத்தின் உச்சியில் அமைந்துள்ள தங்க நிற சிலுவையானது இந்தக் காட்சிப் பின்னணிக்கு மேலும் அழகும் கவர்ச்சியும் ஊட்டுகிறது. இந்த அற்புதமான கடற்கரை தேவாலயத்தின் அழகும் அமைதியான சுற்றுப்புறமும் மக்களை பெரிதும் கவர்கிறது.
Source: Pinterest
சுனாமி நினைவுச் சின்னம்
கன்னியாகுமரியின் தெற்கு கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுச் சின்னம், கருணைக்கு எடுத்துக்காட்டாக தனித்துவத்துடன் திகழ்கிறது. டிசம்பர் 26, 2004 அன்று இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் இறந்த ஆயிரக்கணக்கான மக்களின் நினைவாக இந்த நினைவுச் சின்னம் எழுப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி சோமாலியா, இலங்கை, மாலத்தீவுகள், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த இயற்கைப் பேரிடரில் உயிரிழந்தனர். சுற்றுலா வரும் அனைத்து மக்களும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நினைவுச் சின்னத்திற்கு வந்து மரியாதை செலுத்தி செல்கின்றனர்.
Source: Pinterest
திற்பரப்பு அருவி
கன்னியாகுமரியின் திற்பரப்பு அருவி 50 அடி உயரத்திலிருந்து விழும் ஓர் அழகான மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலம் ஆகும். மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த அருவியின் கீழ் குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அருவியில் நீராடிய பிறகு அதன் கீழே அமைக்கப்பட்டுள்ள குளத்தில் நீந்தி புத்துணர்ச்சி அடைந்து அவ்விடத்தை சுற்றியுள்ள இயற்கை காட்சிகளைக் கண்டு களிக்க படகு சவாரியும் இங்கு உள்ளது. அருவியின் நுழைவாயிலில் இறைவனின் அருள் வேண்டி வரும் பக்தர்களுக்கு என ஒரு சிறிய சிவன் கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது.
Source: Pinterest
கன்னியாகுமரி கடற்கரை
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி அழகின் இருப்பிடம் ஆகும். இதன் தூய்மையான கடற்கரை அந்த நாளின் நேரத்தை பொறுத்து பல வண்ணங்களில் நிறம் மாறும். வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் ஆகிய மூன்று கடல்களின் சங்கமத்தில் இந்தக் கடற்கரை அமைந்துள்ளது. ஆச்சரியப்படும் வகையில் இந்த மூன்று கடல்களின் நீரும் கலப்பதில்லை ஆனால், அடர்ந்த நீலம், டர்க்கியூஸ் நிலம் மற்றும் பச்சை நிறம் என அவற்றின் நிறங்களால் வேறுபடுகின்றன. மேலும், இவற்றின் நிறம் அங்கு நிலவும் பருவக் காலம் மற்றும் வானிலைக்கு ஏற்ப தினமும் மாறுபடும்.
Source: Pinterest
தாணுமாலயன் கோயில்
சுசீந்திரம் என்னும் ஊரில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்களை மூலவர்களாக கொண்டு கட்டப்பட்ட இந்த புனிதமான கோயில் ஸ்தாணுமாலயன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் குறிப்பிடுகிறது. இது 17-ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது.
கட்டிடக் கலையின் தலைசிறந்த படைப்பான இந்தக் கோயில் கட்டிடக் கலை அழகின் முன்னோடியாக திகழ்கிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அலங்காரம் மண்டபம் இந்தக் கோயிலின் சிறந்த அம்சமாகத் திகழ்கிறது. கட்டை விரல் கொண்டு அடிக்கும்போது இந்த தூண்களில் இருந்து பல்வேறு விதமான இசைகள் வெளிப்படுவதை உணரலாம். இந்த தாணுமாலயன் பெருமாள் கோயில் இந்துக்களின் சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரு பிரிவினரும் இணைந்து வழிபடும் தலமாகவும் உள்ளது.
Source: Pinterest
பத்மநாபபுரம் அரண்மனை
பத்மநாபபுரம் அரண்மனை திருவிதாங்கூரின் முன்னாள் மன்னர்களின் இருப்பிடமாக இருந்தது. இது திருவனந்தபுரத்தில் இருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ள தக்காலேகோவில் கேரள கட்டடக்கலையின் பாரம்பரியத்தையும் அழகையும் எடுத்துரைப்பதாக உள்ளது. இந்த அரண்மனை பல வருடங்களைக் கடந்த போதிலும் அதனுள் உள்ள சுவர் ஓவியங்கள், அழகான அற்புதமான சிற்பங்கள் மற்றும் கருப்பு கிரானைட் தளம் ஆகியவை இன்றளவிலும் பார்ப்போரை பிரமிக்க வைப்பதாக உள்ளது.
மகோகனி மரத்தால் ஆன இசை வில், வண்ணங்கள் குழைத்து மைக்காவால் செதுக்கப்பட்ட ஜன்னல்கள், கிழக்கு நோக்கி வெகு தூரத்திற்கு செதுக்கப்பட்ட அரச சபை நாற்காலிகள் மற்றும் ராஜமாதா அவர்களின் பல வண்ணங்களில் அமைக்கப்பட்ட கூரைகள் கொண்ட அரண்மனை ‘தைக் கொட்டாரம்’ ஆகியவை பார்ப்போரை, அம்மாளிகையின் மாயாஜாலத் தோற்றத்தை கண்டு வியக்க வைக்கிறது.
Source: Pinterest
பகவதி அம்மன் கோயில்
3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பகவதி அம்மன் கோயில் தேவி கன்னியாகுமரி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. கன்னியாகுமரியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இந்து மதத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. தேவி கன்னியாகுமரி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 51 சக்தி பீடங்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். சிவபெருமான் சக்தி தேவியை தன் தோள்களில் சுமந்து ருத்ர தாண்டவ நடனம் ஆடியபோது அவரது தோள்களில் இருந்து தேவி உயிரற்ற சடலமாக இந்த இடத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
தேவி கன்னியாகுமரி அம்மன் கோயிலினுள் தேவி அழகிய மூக்குத்தி அணிந்து கையில் ருத்ராட்ச மாலையுடன் உள்ள நிலையில் ஒரு படம் வைக்கப்பட்டுள்ளது. நீலக் கடலின் பின்னணியில் அமைந்திருக்கும் மயக்கம் தரும் இக்காட்சி அதன் பழங்கால கட்டிட அமைப்புக்கு மிகவும் புகழ்பெற்றது. மேலும், ஆன்மிகச் சிந்தனை உள்ளவர்களின் இதயத்தில் ஆன்மிக ஒளி ஏற்றும் ஞானப் பெருங்கடலாக இக்கோயில் விளங்குகிறது.
Source: Pinterest
மாயபுரி மெழுகு அருங்காட்சியகம்
கன்னியாகுமரி மெழுகு அருங்காட்சியகம் லண்டனில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தின் மற்றொரு பிரதி பிம்பமாக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து புகழ்பெற்றுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரபலங்களான அப்துல் கலாம், மகாத்மா காந்தி, சார்லி சாப்ளின், அன்னை தெரசா மற்றும் மைக்கேல் ஜாக்சன் போன்றோரின் மெழுகுச் சிலைகள் இந்த அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நகரின் முக்கிய அம்சமாக காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையிலும், இந்தியா மற்றும் பிற நாடுகளின் வரலாறு கலாசாரம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் அருங்காட்சியமாகவும் இது திகழ்கிறது.
Source: Pinterest
வட்டக்கோட்டை
ஆங்கிலத்தில் ‘சர்குலர் ஃபோர்ட்’ என அழைக்கப்படும் வட்டக்கோட்டை இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியின் கடலோரத்தில் அமைந்துள்ளது. கிரானைட் கற்கள் கொண்டு கோட்டையின் பெரும்பாலான பகுதி கட்டமைக்கப்பட்டுள்ளது. இக்கோட்டையின் சில பகுதிகள் கடல் வரை நீண்டு கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் கோட்டையில் பெரிய அளவில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று தற்போது இது இந்திய தொல்லியல் ஆய்வு துறையின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
Source: Pinterest
புனித சேவியர் தேவாலயம்
நாகர்கோவிலுக்கு அருகில் புனித பிரான்சிஸ் சேவியர் என்பவரால் 1600-களில் கட்டப்பட்ட இந்தப் புனித சேவியர் தேவாலயம் வரலாற்று சிறப்புமிக்கதும், கிறிஸ்துவ மதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் தேவாலயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த தேவாலயம் கட்டப்பட்ட காலத்தில் இருந்தே இது பல அற்புதங்களை நிகழ்த்தி மக்களிடையே பெரும் புகழையும் மரியாதையையும் பெற்றுள்ளது. ஆன்மிகம், சக்தி மற்றும் தெய்வீகத் தன்மையின் காரணமாக நாகர்கோவிலின் சுற்றுலா தலத்தில் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக புனித சேவியர் தேவாலயம் விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.
Source: Wikimedia
சன்செட் பாயின்ட்
இயற்கை எழில் பொங்கும் இடத்தில் அமைதியான நேரத்தை கழிக்க விரும்புபவர்கள் சன்செட் பாயின்ட்டுக்கு கட்டாயம் செல்ல வேண்டும். கன்னியாகுமரியில் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகவும், மறக்க முடியாத அனுபவத்தை தரும் விதமாகவும், மாலை நேர இளஞ்சிவப்பு ஆகாயத்தில் வலிமையான கடலுக்கு மத்தியில் சூரியன் மறைவதை காணும் விதமாகவும் இங்கு பல மக்கள் கூடி ரசிக்கின்றனர். பௌர்ணமி அன்று அல்லது அதை ஒட்டிய தினங்களிலோ இந்த சன்செட் பாய்ன்டில் சூரியன் அஸ்தமனம் ஆகும்போது அதன் சூரியக் கதிர்கள் வானம் எங்கும் பரவி மறையும் அதேசமயத்தில் முழு நிலவின் உதயம் ஆகும் காட்சியை நாம் காண முடியும். மேலும், விவேகானந்தர் மண்டபம் மற்றும் அதைச் சுற்றி உள்ள இடங்களில் உள்ள பல அற்புதமான காட்சி அமைப்புகளை புகைப்படம் எடுக்க முடியும். ஆகவே, இது புகைப்படக் கலைஞர்களின் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற ஓர் இடமாக திகழ்கிறது.
Source: Pinterest
சிதறால் ஜைன மலை கோயில்
சமண யாத்திரிகர்கள் மற்றும் கட்டிடக் கலை நிபுணர்கள் ஆகியோரின் மத்தியில் இந்த சிதறால் ஜைன நினைவுச் சின்னம் நெடுங்காலமாக ஒரு புகழ்பெற்ற இடமாக திகழ்ந்து வருகிறது. இந்தக் கோயில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதோடு அல்லாமல், பலவிதமான மதங்கள் நம் நாட்டில் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. திகம்பர சமண முனிவர்களின் இடமாக இந்த சிதறால் ஒரு காலத்தில் இருந்து வந்தது. ஆகவேதான் ஒன்பதாம் நூற்றாண்டில் இந்த கோயிலைச் சுற்றியுள்ள பாறைகளில் பல குகை கோயில் மற்றும் பல விதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அமைதியான தோற்றம், பார்ப்போரை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்ட இந்த கம்பீரமான நினைவுச் சின்னங்கள் கன்னியாகுமரியில் பார்க்கப்பட வேண்டிய இடங்களில் முக்கியமான ஒன்றாகும்.
காந்தி மண்டபம்
நமது தேசத் தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது 12 அஸ்தி கலசங்களில் ஒன்று, கன்னியாகுமரியில் உள்ள இந்த மிகப் பெரிய மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் காந்தியின் அஸ்தி திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்பட்டது. இந்த மண்டபத்தில் உள்ள புகைப்படத் தொகுப்பில் மகாத்மா காந்தியின் பல புகைப்படங்கள் முதன்மையானவையாக தொகுக்கப்பட்டுள்ளன. சுதந்திர இந்தியாவிற்கு முன்பு வெளிவந்த மாத இதழ்கள், புத்தகங்கள் மற்றும் இதர படைப்புகள் கொண்ட நூலகம் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
Source: Pinterest
சங்குத்துறை கடற்கரை
கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் இந்த சங்குத்துறை கடற்கரை பார்க்கப்பட வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்று. இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இந்த சங்கத்துறை கடற்கரையில் அமர்ந்தபடி, மிகத் தீவிரமான அலைகளைக் கொண்ட இந்திய பெருங்கடலின் அழகை ரசிக்கலாம். அதன் வெண்மையான கடற்கரை மணலும், வியத்தகு கடற்கரையும் சங்கத்துறை கடற்கரையை அமைதியின் இருப்பிடமாக முன்னிறுத்துகிறது.
Source: Pinterest