ஒருவருடைய சொத்தின் வாரிசுரிமைக்கு, சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் அவசியமான ஒன்று. ஒரு குடும்பத்தில் எவருக்கேனும் மரணம் சம்பவித்து, அந்த உறுப்பினருக்குச் சொந்தமான சொத்தைக் குடும்பத்தினர் பெறுவதற்கு, அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் இரண்டு முக்கியமான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்: ஒன்று, இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் இரண்டாவது, இறந்த உரிமையாளரின் சொத்தை வாரிசாகப் பெறத் தகுதியுள்ள எஞ்சியிருக்கும் உறுப்பினர்களைக் குறிக்கும் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ். இந்த கட்டுரையில், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் என்றால் என்ன, இறந்த நபரின் சட்டப்பூர்வ வாரிசுகள் அதை எவ்வாறு பெறுவது என்பதைப் பற்றி அறிவோம்.
வாரிசு சான்றிதழ் என்றால் என்ன?
ஒரு குடும்பத்தின் சட்டப்பூர்வ தலைவருக்கு மரணம் சம்பவிக்கும் நிலையில் அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக தகவல் தெரிவித்து இறப்புச் சான்றிதழைப் பெற வேண்டும். இறந்தவரின் அனைத்து உரிமைகளும் பொறுப்புகளும் இனி இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு அளிக்கப்படும் என்பதால், மரபு வாரிசு உரிமையைப் பெறுவதற்காக ‘எஞ்சியுள்ளோர் சான்றிதழ்’ எனப்படும் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழுக்கு வாரிசுகள் விண்ணப்பிக்க வேண்டும்.
சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் என்பது இறந்தவருக்கும் அவரது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கும் இடையிலான உறவை விளக்கும் சட்டப் பூர்வ ஆவணமாகும். இறந்தவரின் அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களையும் குறிப்பிடும் இந்த ஆவணம், எஞ்சியிருக்கும் உறுப்பினர்கள் தங்கள் மறைந்த உறவினரின் சொத்தில் உரிமை கோருவதற்கு அவசியமான ஒன்று. சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை வழங்குவதற்கு முன், அதிகாரிகள் முறையான விசாரணையை மேற்கொள்வர்.
மேலும் அறிக: வாரிசு சான்றிதழ்: தமிழ்நாட்டில் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை ஆன்லைனில் விண்ணப்பித்து பதிவிறக்கவும்
வாரிசு சான்றிதழின் உபயோகங்கள்
பல்வேறு நோக்கங்களுக்காக இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகள் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது. அவையாவன:
- இறந்தவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மற்றும் சொத்துக்களை மாற்றுதல்.
- இறந்தவரின் காப்பீட்டுக் கொள்கைகளின் பலன்களைப் பெறுதல்.
- பயன்பாட்டு இணைப்புகள் போன்றவற்றை வாரிசுகளின் பெயரில் மாற்றுதல்.
- இறந்தவரின் வாரிசாக வேலை வாய்ப்பு கோருதல்.
- இறந்தவரின் சம்பள பாக்கியைப் பெற.
- இறந்தவர் தற்போது வேலையில் இருந்திருந்தால், பணிசார் பலன்களைப் பெற.
- இறந்தவரின் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடையைப் பெற.
- இறந்தவரின் வைப்புத்தொகை, நிலுவைகள், முதலீடுகள், பங்குகள் போன்றவற்றை மாற்றுவதற்கு.
- இறந்தவரின் சார்பாக வரிக் கணக்கு தாக்கல் செய்ய.
சட்டப் பூர்வ வாரிசு சான்றிதழுக்கு யார் விண்ணப்பிக்கலாம்?
இறந்த நபரின் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற வாரிசுகள் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்களில்:
- இறந்தவரின் துணைவர்.
- இறந்தவரின் குழந்தைகள் (மகன் அல்லது மகள்).
- இறந்தவரின் உடன் பிறப்புகள் (சகோதர சகோதரிகள்).
- இறந்தவரின் பெற்றோர்.
மேலும் காண்க: வாரிசு யார், மரபு வாரிசு உரிமை என்றால் என்ன?
வகை-II வாரிசுக்கு சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை வழங்குவதில் தடை இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்
சமீபத்திய தீர்ப்பில், இரண்டாம் வகை வாரிசுக்கு சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை வழங்குவதில் தடையேதுமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இறந்தவரின் வகை–II வாரிசுகளில் அவரது தந்தை, பேரக்குழந்தைகள், கொள்ளு பேரக்குழந்தைகள், சகோதரர், சகோதரி மற்றும் பிற உறவினர்கள் அடங்குவர்.
சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழிற்குத் தேவையான ஆவணங்கள்
எந்தவொரு சட்டப்பூர்வ வாரிசும் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் அல்லது எஞ்சியுள்ளோர் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம் என்றாலும், விண்ணப்பம் செய்யும் போது அனைத்து எஞ்சியிருக்கும் உறுப்பினர்கள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களைச் சேர்க்க வேண்டும். சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைப் பெற விண்ணப்பதாரர் பின்வரும் ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும்:
- முறையாகப் பூர்த்தி செய்து கையொப்பமிட்ட விண்ணப்பப் படிவம்.
- விண்ணப்பதாரர்/களின் அடையாளம் மற்றும் முகவரிச் சான்றுகளின் நகல்கள்.
- அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பிறந்த தேதிக்கான சான்று.
- நான்கிற்கு மேல் இருந்தால் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களின் பட்டியல்.
- அனைத்து விண்ணப்பதாரர்களின் புகைப்படங்கள்.
- சுய உறுதிமொழி / சுய அறிவிப்பு படிவம்.
- இறந்த நபரின் இறப்பு சான்றிதழ்.
- இறந்தவரின் முகவரி ஆதாரம்.
மேலும் அறிக: 2005–ஆம் ஆண்டுக்கு முன்னர் தந்தை இறந்திருந்தால் தந்தையின் சொத்தில் மகள் உரிமை கோர முடியுமா?
அடையாளச் சான்றாக எந்த ஆவணங்களை அளிக்கலாம்?
ஆதார் கார்டு, பான் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை அடையாளச் சான்றாகச் சமர்ப்பிக்கலாம்.
ஆதார் கார்டு, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், தொலைபேசி பில் (லேண்ட்லைன் அல்லது போஸ்ட்பெய்ட்), வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, மின் கட்டண ரசீது, காஸ் ரசீது, ஓட்டுநர் உரிமம், பதிவு செய்யப்பட்ட வாடகை ஒப்பந்தம ஆவணம் மற்றும் தண்ணீர் ரசீது ஆகியவற்றை முகவரி சான்றாகச் சமர்ப்பிக்கலாம்.
முகவரிச் சான்றாக எந்த ஆவணங்களை அளிக்கலாம்?
ஆதார் கார்டு, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், தொலைபேசி பில் (லேண்ட்லைன் அல்லது போஸ்ட்பெய்ட்), வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, மின் கட்டண ரசீது, காஸ் ரசீது, ஓட்டுநர் உரிமம், பதிவு செய்யப்பட்ட வாடகை ஒப்பந்தம ஆவணம் மற்றும் தண்ணீர் ரசீது ஆகியவற்றை முகவரி சான்றாகச் சமர்ப்பிக்கலாம்.
பிறந்தநாள் சான்றாக எந்த ஆவணங்களை அளிக்கலாம்?
விண்ணப்பதாரர் இறுதியாகப் படித்த பள்ளியின் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் வழங்கிய பள்ளி படிப்பு சான்றிதழ் / மேல்நிலைப் பள்ளி படிப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், கல்லாதவர் மற்றும் பகுதியளவு கற்றவர் எனில் \பிறந்த தேதியைக் குறிப்பிட்டு மாஜிஸ்திரேட் முன் எடுத்த சத்திய பிரமாணம் மற்றும் பான் கார்டை, பிறந்த தேதிக்கான சான்றாகச் சமர்ப்பிக்கலாம்.
வாரிசு சான்றிதழ் விண்ணப்பத்தின் மாதிரி
வாரிசு சான்றிதழ் விண்ணப்பத்தின் மாதிரியை இங்கே காண்க
வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி?
படி 1: நகராட்சி / தாலுகா / தாலுகா அலுவலகத்தை அணுகவும்
முன்பே குறிப்பிட்டபடி, குடும்பத்தில் எஞ்சியிருக்கும் அனைத்து உறுப்பினர்களின் சார்பாக எவரேனும் ஒருவர் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இந்த நடைமுறை பெரும்பாலான மாநிலங்களில் நேரில் சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைப் பெற, முனிசிபல் கார்ப்பரேஷன் அலுவலகம் (நகர்ப்புறங்களில்) அல்லது தாலுகா அலுவலகத்தை (கிராமப்புறங்களில்) அணுக வேண்டும்.
படி 2: விண்ணப்பம் கவனமாக நிரப்பப்பட்டிருப்பதையும், அனைத்து சார்பு ஆதார ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதையும் உறுதிசெய்யவும்
ஒரு அங்கீகரிக்கப்பட்ட வடிவ மாதிரியைப் பின்பற்றி விண்ணப்பத்தை உருவாக்க வேண்டும் மற்றும் உங்கள் விண்ணப்பத்தில் அனைத்து விவரங்களையும் கவனமாக நிரப்ப வேண்டும். அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்கள், அவர்களின் முகவரி மற்றும் இறந்தவருடனான அவர்களின் உறவு ஆகியவை சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் விண்ணப்பத்தில் வழங்க வேண்டிய தகவல்களில் அடங்கும். மேலே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் நகல்களையும் தயாராக வைத்திருக்கவும். இந்த ஆவணங்கள் அனைத்தும் விண்ணப்பிக்கும் சட்டப்பூர்வ வாரிசு மூலம் சுய சான்றளிக்கப்பட வேண்டும்.
படி 3: வாரிசு சான்றிதழுக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்
நீங்கள் அனைத்து அசல் ஆவணங்களையும் கைவசம் கொண்டிருக்க வேண்டும். முன்பே குறிப்பிட்டபடி, விண்ணப்பத்துடன் ஒரு பிரகடனம் அல்லது சுய அறிவிப்பையும் சமர்ப்பிக்க வேண்டும்.
படி 4: ஆவணங்கள் பரிசோதிப்பு
நீங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்ததும், வருவாய் ஆய்வாளர்/நிர்வாக அலுவலர் போன்ற அதிகாரிகளால் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டவுடன் உங்களுக்கு சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் வழங்கப்படும், அதை நீங்கள் அலுவலகத்தில் இருந்து சேகரிக்க வேண்டும்.
See also: All about probate meaning when it comes to a will
ஆன்லைனில் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ்
சில மாநிலங்கள், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை ஆன்லைனில் பெறும் வசதியை வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் பின்வரும் செயல்முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஆன்லைனில் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைப் பெறலாம்:
- தமிழ்நாட்டைப் பொறுத்தவரை http://www.tnesevai.tn.gov.in/Citizen என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- தங்களின் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை ஆன்லைனில் பெற, புதிய பயனர்கள் தங்களை பதிவு செய்தபின் சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சேர்த்து, ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- வாரிசு சான்றிதழுக்கான உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டதும் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை நேரில் சென்று சேகரிக்க வேண்டும்.
வாரிசு சான்றிதழ் மாதிரி ?
வாரிசு சான்றிதழ் மாதிரியை இங்கே காணலாம்.
மேலும் காண்க: NOC சான்றிதழ்
வாரிசு சான்றிதழ் கட்டணம்
மிகக் குறைந்த கட்டணத்தில் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைப் பெறலாம். உதாரணமாக, உத்தரபிரதேசத்தில், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின் விண்ணப்பப் படிவத்தின் நகலுக்கு அரசாங்கம் ரூ.2 வசூலிக்கிறது.
வாரிசு சாரிதழ் பெற எவ்வளவு காலம் எடுக்கும்?
தோராயமாக 30 நாட்களுக்குள் பெறமுடியும்.
சான்றிதழ் வழங்க தாமதம் ஏற்பட்டால் என்ன செய்வது?
சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுவதாக நீங்கள் உணர்ந்தால், வருவாய் கோட்ட அதிகாரி அல்லது சப்–கலெக்டரை அணுகலாம்.
வாரிசு முறை சான்றிதழ்(இறங்குரிமை சான்றிதழ்) மற்றும் சட்டப் பூர்வ வாரிசு சான்றிதழ் இவற்றிடையே உள்ள வித்தியாசம்
சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழானது, இறந்த நபருடன் உயிருள்ள சட்டப்பூர்வ வாரிசுகளின் உறவை குறிப்பிடும் மற்றும் அடையாளம் காணும் ஆவணமாக இருக்கும் நிலையில், வாரிசு முறைச் சான்றிதழானது(இறங்குரிமை சான்றிதழ்) ஒரு சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழில் அறியப்பட்டவற்றை அங்கீகரித்து இறந்தவரின் சொத்துக்கள் மற்றும் கடன்களை வாரிசுகள் ஏற்பதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்குகிறது.
அந்த வகையில், பொது நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட சட்டப்பூர்வ ஆவணமான வாரிசு முறைச் சான்றிதழுக்கு (இறங்குரிமை சான்றிதழ்) சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் உட்படுகிறது. சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின் சட்டப்பூர்வ அதிகாரம் கட்டுரையில் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது, \இது வாரிசு சட்டத்தின் விதிகளின் கீழ் சட்டப்பூர்வ ஆதாரமாக செயல்படாது. இறந்தவரின் சொத்து தொடர்பாக ஏதேனும் தகராறு அல்லது வழக்கு இருந்தால், வாரிசு முறைச் சான்றிதழ்(இறங்குரிமை சான்றிதழ்) மட்டுமே சட்டப்பூர்வ ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
சட்டபூர்வ வாரிசு சான்றிதழைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டிய முக்கியத் தகவல்கள்
அனைத்து வாரிசுகளுக்கும் சான்றிதழ் அவசியம்: இறந்தவரின் சொத்தின் மீது உரிமை கோர, தகுதியான அனைத்து வாரிசுகளும் இச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
இறப்புச் சான்றிதழ் நகராட்சி அமைப்பால் வழங்கப்படுகிறது: இறந்த நபரின் இறப்புச் சான்றிதழுக்கு உங்கள் பகுதியின் தாலுகா அலுவலகத்தின் பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கவும்.
சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் திரும்பப் பெறக்கூடியது: இந்த ஆவணத்தை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை எழுப்பப்பட்டால், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் ரத்து செய்யப்படலாம். எனவே சட்டப்பூர்வ வாரிசுகள் உண்மையான விவரங்களை மட்டுமே வழங்க வேண்டும் மற்றும் விண்ணப்பிக்கும் போது அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளையும் சேர்க்க வேண்டும்.
இறந்தவரின் சார்பாக சட்டப்பூர்வ வாரிசுகள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்: வருமான வரி (IT) சட்டத்தின் பிரிவு 15– இன் கீழ், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் வைத்திருப்பவர்கள், இறந்தவரின் பிரதிநிதியாக அவரதயு சார்பில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஏப்ரல் 1 முதல் அவர் இறந்த தேதி வரை இறந்தவரின் வருமானத்திற்கு சட்டப்பூர்வ வாரிசு வருமான வரி செலுத்த வேண்டும். இருப்பினும், சட்டப்பூர்வ வாரிசு தனது சொந்த ஆதாரங்களில் இருந்து வரி செலுத்த வேண்டியதில்லை.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
முனிசிபல்/தாலுகா/வட்ட அலுவலகத்தை அணுகி அல்லது கிடைக்கக் கூடிய மாநிலங்களில் ஆன்லைனில் விண்ணப்பிப்பதன் மூலம் ஒருவர் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைப் பெறலாம்.
வாரிசு சான்றிதழ் பெற யார் தகுதி பெறுகிறார்?
இறந்த நபரின் துணைவர், குழந்தைகள், உடன்பிறந்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்