NREGA வேலை அட்டை 2023: மாநில வாரியான பட்டியலை சரிபார்த்து பதிவிறக்கவும்

மத்திய அரசின் NREGA திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள தகுதியான கிராமப்புற குடும்பங்களுக்கு NREGA வேலை அட்டை வழங்கப்படுகிறது. அரசின் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை தேட இந்த அட்டை அவசியம் தேவை. . 2022-23 நிதியாண்டில் இந்தியாவில் இதுவரை 5 கோடியே 41 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பைப் பெற NREGA வேலை அட்டை உதவியுள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Table of Contents

 

 

MG NREGA என மறுபெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தின் வாய்ப்பளவு என்ன என்பதைப் புரிந்து கொள்ளவும் மற்றும் தனக்கான MGNREGA  வேலை அட்டையை  ஒருவர் எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் என்பதற்கும் இந்த வழிகாட்டி உங்களுக்கு உதவும்.

 

NREGA வேலை அட்டை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், 2005ன் படி, இத்திட்டத்தின் பயனாளிகள், அந்தந்த கிராம பஞ்சாயத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட வேலை அட்டையை வைத்திருப்பது கட்டாயமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் வேலை கோரும் வயது வந்த உறுப்பினர்கள் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் MG NREGA இன் கீழ், NREGA  வேலை அட்டை வழங்கப்படுகிறது,. MGNREGA வேலை அட்டை வைத்திருப்பவருக்கு 100 நாட்கள் உடலுழைப்பு வேலை வழங்கப்படுவதற்கான  உரிமை உண்டு.

ஒவ்வொரு பயனாளிக்கும் ஒவ்வொரு ஆண்டும், ஒரு புதிய NREGA வேலை அட்டை வழங்கப்படுகிறது. MGNREGA வேலை அட்டையை MGNREGA இன் அதிகாரப்பூர்வ இணையதளமான nrega.nic.in  லிருந்து எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.

MGNREGA வேலை அட்டைப் பட்டியலை நாடு முழுவதும் உள்ள 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2010-11 முதல் மத்திய அரசு வழங்கி வருகிறது. தகுதியின் அடிப்படையில், NREGA  வேலை அட்டைப்  பட்டியலில் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுகிறார்கள், அதே நேரத்தில் குறிப்பிட்ட சில பழைய பயனாளிகள் நீக்கப்பட்டுகின்றனர்.

தகுதியுடைய ஒவ்வொரு தனிநபருக்கும் வேலை செய்வதற்கான உரிமையை NREGA வேலை அட்டை வழங்குகிறது மற்றும் அவருடைய/அவளுடைய அடையாளச் சான்றாகவும் அது செயல்படுகிறது.

 

மாதிரி NREGA வேலை அட்டை எண்

16 இலக்க எண்ணெழுத்துடன் கூடிய NEGA வேலை அட்டை எண் இப்படி இருக்கும்:

WB-08-012-002-002/270 

 

NREGA வேலை அட்டையில் காணப்படும் விவரங்கள்

NREGA வேலை அட்டையில் பின்வரும் விவரங்கள் காணப்படும்:

  1. வேலை அட்டை எண்
  2. குடும்பத் தலைவரின் பெயர்
  3. தந்தை/கணவரின் பெயர்
  4. வகைப்பாடு
  5. பதிவு செய்யப்பட்ட தேதி
  6. முகவரி: கிராமம், பஞ்சாயத்து, வட்டாரம், மாவட்டம்
  7. BPL குடும்பமா
  8. வேலை கோரப்படும் நாட்களின் எண்ணிக்கை
  9. ஒதுக்கீடு செய்யப்பட்ட வேலை நாட்களின் எண்ணிக்கை
  10. பணியாளர் வருகை பட்டியல்(மஸ்டர் ரோல்) எண்ணுடன், ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியின் விவரம்,
  11. அளவீட்டு விவரங்கள்
  12. வேலையின்மை உதவித்தொகை, ஏதேனும் இருந்தால்
  13. வேலை செய்த தேதிகள் மற்றும் வேலை நாட்களின் எண்ணிக்கை
  14. தேதி வாரியாக வழங்கப்பட்ட ஊதியம்
  15. தாமதம் காரணமாக வழங்கப்பட்ட இழப்பீடு, ஏதாவது இருந்தால்

 

NREGA வேலை அட்டைக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் விவரங்கள்

  1. விண்ணப்பதாரரின் பெயர்
  2. விண்ணப்பதாரரின் வயது
  3. விண்ணப்பதாரரின் பாலினம்
  4. விண்ணப்பதாரரின் புகைப்படம்
  5. விண்ணப்பதாரரின் கையொப்பம்/கட்டைவிரல்/ரேகைப் பதிவு
  6. விண்ணப்பதாரர் மற்றும் வேலை செய்ய விருப்பமுள்ள பிற குடும்ப உறுப்பினர்களின் கையொப்பம்,/கட்டைவிரல் ரேகைப் பதிவு
  7. கிராமத்தின் பெயர்
  8. கிராம பஞ்சாயத்தின் பெயர்
  9. விண்ணப்பதாரர் SC/ST/IAY/LR இன் கீழ் ஒரு பயனாளியா

 

NREGA வேலை அட்டையை  பதிவுசெய்தல்

NREGA வேலை அட்டைக்கு விண்ணப்பிக்க, ஒரு விண்ணப்பதாரர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்:

படிநிலை 1: உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வருகை தரவும்.

படிநிலை  2: நீங்கள் NREGA வேலை அட்டையைக் கோரி அதற்காகப் பதிவு செய்யலாம் அல்லது வகுத்துரைக்கப்பட்ட  முறையான படிவத்தை பூர்த்தி செய்து கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் சமர்பிக்கலாம்.

படிநிலை  3: உங்களது விவரங்களைச் சரிபார்த்த பிறகு, உங்களுக்கு வேலை அட்டை வழங்கப்படும்.

இந்த வேலைவாய்ப்புத் திட்டம் கிராமப்புற குடும்பங்களுக்கானது என்பதால், NREGA வேலை அட்டை பதிவு செயல்முறை முற்றிலும் பிணையத்துக்கு வெளியே இருக்கிறது என்றாலும் வகுத்துரைக்கப்பட்ட படிவத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

 

NREGA வேலை அட்டை விண்ணப்பப் படிவம்

NREGA job card application

 

NREGA வேலை அட்டை விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம்

NREGA வேலை அட்டை விண்ணப்பப் படிவத்தை  பதிவிறக்கம் செய்ய இங்கே  கிளிக் செய்யவும்

 

மாநில வாரியான NREGA வேலை அட்டை பட்டியல் 2023

NREGA வேலை அட்டைப் பட்டியல் 2023 இல் உள்ள பயனாளிகளின் பெயர்களைக் கண்டறிய, அந்தந்த மாநிலங்களுக்கு எதிரான ‘காண்க’ என்ற விருப்பத்தேர்வில் கிளிக் செய்யவும்.

மாநிலம் NREGA வேலை அட்டை பட்டியல்  2023
அந்தமான் நிக்கோபார் தீவுகள் காண்க
ஆந்திரப்பிரதேசம் காண்க
அருணாச்சலபிரதேசம் காண்க
அஸ்ஸாம் காண்க
பீகார் காண்க
சண்டிகர் காண்க
சட்டீஸ்கர் காண்க
தாத்ரா நாகர் ஹவேலி காண்க
டாமன், டையூ காண்க
கோவா காண்க
குஜராத் காண்க
ஹரியானா காண்க
இமாச்சலப்பிரதேசம் காண்க
ஜம்மு காஷ்மீர், லடாக் காண்க
ஜார்கண்ட் காண்க
கர்நாடகா காண்க
கேரளா காண்க
லட்சத்தீவுகள் காண்க
மத்தியப்பிரதேசம் காண்க
மகாராஷ்ட்ரா காண்க
மணிப்பூர் காண்க
மேகாலயா காண்க
மிசோரம் காண்க
நாகாலாந்து காண்க
ஓடிஷா காண்க
புதுச்சேரி காண்க
பஞ்சாப் காண்க
ராஜஸ்தான் காண்க
சிக்கிம் காண்க
தமிழ்நாடு காண்க
தெலுங்கானா காண்க
திரிபுரா காண்க
உத்திரப்பிரதேசம் காண்க
உத்தர்காண்ட் காண்க
மேற்குவங்களம் காண்க

 

NREGA வேலை அட்டைகள் 2023 ஐச் சரிபார்க்க மாநிலத்தின் முழுப் பட்டியலைக் காண, இங்கே  கிளிக் செய்யவும்

 

NREGA வேலை அட்டை பட்டியலில் உங்கள் பெயரை எவ்வாறு கண்டறிவது?

NREGA வேலை அட்டையைப் பார்க்க முதலில் உங்கள் மாநிலப் பக்கத்திற்குச்சென்று அதன் பிறகு கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிநிலைகளைப் பின்பற்றவும்:

படிநிலை 1: https://nrega.nic.in/netnrega/statepage.aspx?check=R&Digest=+qXIRymgwwUBieh6Mf3EUg பக்கத்தை நீங்கள் அடைந்ததும், அங்குள்ள  பட்டியலில் உங்கள் மாநிலத்தின் பெயரைக் கண்டறிந்து அதைக் கிளிக் செய்யவும்., நாங்கள் UP NREGA  வேலை அட்டை பட்டியல் 2022 ஐ இந்த எடுத்துக்காட்டுக்காகப் பயன்படுத்தியிருக்கிறோம். .

 

NREGA job card

 

படிநிலை 2: அடுத்த பக்கத்தில், நிதியாண்டு, மாவட்டம், வட்டாரம், மற்றும் பஞ்சாயத்தை தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதில் கிளிக் செய்யவும்.

 

NREGA job card

 

படிநிலை 3: புதிய பக்கத்தில், வேலை அட்டை/ வேலை வாய்ப்பு பதிவேடு  என்பதில் கிளிக் செய்யவும்.

 

NREGA job card

 

படிநிலை 4: NREGA வேலை அட்டை பட்டியல் 2023 பெயர்களுடன் காட்சியளிக்கும்.

 

NREGA job card

 

முழுப் பட்டியலையும் பார்க்க, அதற்கு மாற்றாக, படிநிலை  3 இன் போது ஆதார் எண்ணுடன் கூடிய தொழிலாளர்களின் பட்டியல் என்ற விருப்பத்தெரிவின் மீதும் கிளிக் செய்யலாம்.

 

NREGA job card

 

நிதியாண்டு 2023க்கான NREGA வேலை அட்டையின் முழுப் பட்டியலையும் இப்போது உங்களால் காண முடியும்.

 

NREGA job card

 

முழு பட்டியலையும் பார்க்க பக்கத்தின் கீழே ஒவ்வொன்றாக இறக்கி பார்க்கவும்

 

NREGA வேலை அட்டை பதிவிறக்கம்

படி நிலை 1: MGNERGA வேலை அட்டையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை நேரடியாக அடைய  இங்கே  கிளிக் செய்யவும். இப்போது, அறிக்கை உருவாக்கு என்ற விருப்பத்தெரிவின் மீது கிளிக் செய்யவும்.

 

NREGA jobcard: How to check and download MGNREGA job card list 2022

 

படிநிலை2: பட்டியலில் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

 

NREGA jobcard: How to check and download MGNREGA job card list 2022

 

படிநிலை 3: அடுத்த பக்கத்தில் நிதியாண்டு, மாவட்டம், வட்டாரம் மற்றும் பஞ்சாயத்தை தேர்ந்தெடுத்து, ‘தொடரவும்’ என்பதில் கிளிக் செய்யவும்.

 

NREGA jobcard: How to check and download MGNREGA job card list 2022

 

படிநிலை 4: அடுத்த பக்கத்தில் உள்ள , ‘R1 ஜாப் கார்டு/பதிவு டாப்’ இன் கீழ் ‘வேலை அட்டை/வேலைவாய்ப்புப் டாப்’ என்ற விருப்பத்தேர்வை மேற்கொள்ளுங்கள்.

 

NREGA jobcard: How to check and download MGNREGA job card list 2022

 

படிநிலை 5: NREGA தொழிலாளர்களின் பட்டியல் மற்றும் NREGA வேலை அட்டைகள் திரையில் தோன்றும். MGNREGA வேலை அட்டை எண் மீது  கிளிக் செய்து வேலை அட்டையை காணவும் மற்றும் பதிவிறக்கவும்.

 

NREGA jobcard: How to check and download MGNREGA job card list 2022

 

படிநிலை 6: MGNREGA வேலை அட்டை திரையில் தோன்றும். இந்தப் பக்கத்தில் வேலை விவரங்கள் அனைத்தையும்  நீங்கள் காணலாம்.

 

NREGA jobcard: How to check and download MGNREGA job card list 2022

 

2023 இல் NREGA வேலைக்கான தொகை வழங்கல்களை எவ்வாறு சரிபார்க்கலாம்?

படி நிலை 1: MGNERGA வேலை அட்டையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை நேரடியாக அடைய  இங்கே  கிளிக் செய்யவும். இப்போது, அறிக்கை உருவாக்கு என்ற விருப்பத்தெரிவின் மீது கிளிக் செய்யவும்.

 

NREGA jobcard: How to check and download MGNREGA job card list 2022

 

படிநிலை 2: இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலில் இருந்து உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

 

NREGA jobcard: How to check and download MGNREGA job card list 2022

 

படிநிலை 3: அடுத்த பக்கத்தில் நிதியாண்டு, மாவட்டம், வட்டாரம் மற்றும் பஞ்சாயத்தை தேர்ந்தெடுத்து, ‘தொடரவும்’ என்பதில் கிளிக் செய்யவும்.

 

NREGA jobcard: How to check and download MGNREGA job card list 2022

 

படிநிலை 4: அடுத்த பக்கத்தில் உள்ள , ‘R1 ஜாப் கார்டு/பதிவு டாப்’ இன் கீழ் ‘வேலை அட்டை/வேலைவாய்ப்புப் டாப்’ என்ற விருப்பத்தேர்வை மேற்கொள்ளுங்கள்.

 

NREGA jobcard: How to check and download MGNREGA job card list 2022

 

படிநிலை 5: NREGA தொழிலாளர்களின் பட்டியல் மற்றும் NREGA வேலை அட்டைகள் திரையில் தோன்றும். MGNREGA வேலை அட்டை எண் மீது  கிளிக் செய்து காணவும்

 

NREGA jobcard: How to check and download MGNREGA job card list 2022

 

படிநிலை 6: MGNREGA வேலை அட்டை திரையில் தோன்றும். இந்தப் பக்கத்தில் வேலை விவரங்கள் அனைத்தையும் நீங்கள் காணலாம்.

 

NREGA jobcard: How to check and download MGNREGA job card list 2022

 

படிநிலை 7: இப்போது, தொகை வழங்கிய  விவரங்களைச் சரிபார்க்க விரும்பும் அந்த  வேலை மீது கிளிக் செய்யவும்.

படிநிலை 8 : ஒரு புதிய பக்கம் காட்சியளிக்கும். பயன்படுத்தப்பட்ட வருகைப் பதிவேடு (மஸ்டர் ரோல்ஸ்) என்ற விருப்பத்தேர்வுக்கு எதிராக  குறிப்பிடப்பட்டுள்ள எண் மீது  கிளிக் செய்யவும்.

 

NREGA job card payment

 

படிநிலை 7: இப்போது, நீங்கள் தொகை வழங்கிய விவரங்களைச் சரிபார்க்க விரும்பும் அந்த வேலை மீது  கிளிக் செய்யவும்.

 

NREGA job card payment

 

படி நிலை 8: தொகை வழங்கப்பட்டதேதி, வங்கியின் பெயர் போன்றவற்றுடன் அனைத்து வழங்கப்பட்ட  தொகைகளின் விவரங்களும் இப்போது உங்கள் திரையில் தெரியும்.

 

NREGA job card payment

 

NREGA வேலை அட்டைக்கான சரிபார்ப்பு நிலுவையில் உள்ளதா என்று எவ்வாறு சரிபார்க்கலாம்?

படி நிலை 1: MGNERGA வேலை அட்டையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை நேரடியாக அடைய  இங்கே  கிளிக் செய்யவும். இப்போது, அறிக்கை உருவாக்கு என்ற விருப்பத்தெரிவின் கீழுள்ள வேலைச்சீட்டு (ஜாப் ஸ்லிப்) என்பதன்  மீது கிளிக் செய்யவும்.

 

NREGA jobcard: How to check and download MGNREGA job card list 2022

 

படிநிலை 2: இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலில் இருந்து உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

 

NREGA jobcard: How to check and download MGNREGA job card list 2022

 

படிநிலை 3: இப்போது, அதில் நிதியாண்டு, மாவட்டம், வட்டாரம் மற்றும் பஞ்சாயத்தை தேர்ந்தெடுத்து, ‘தொடரவும்’ என்பதில் கிளிக் செய்யவும்.

 

NREGA

 

படிநிலை 4: புதிய பக்கத்தில், சரிபார்க்கப்படவேண்டிய நிலுவையிலுள்ள வேலை அட்டைகள் என்ற விருப்பத்தெரிவில் கிளிக் செய்யுங்கள்.

 

NREGA 1

 

படி 5: சரிபார்க்கப்படவேண்டிய நிலுவையில் உள்ள அனைத்து வேலை அட்டைகளையும் காட்டும் புதிய பக்கம் திரையில் தோன்றும். அனைத்து உள்ளீடுகளையும் கீழே வரிசையாக காணவும்.

 

NREGA 2

 

பயன்பாட்டில் இல்லாத NREGA வேலை அட்டைகளின் பட்டியலை எவ்வாறு சரிபார்ப்பது?

படிநிலை 1: அதிகார பூர்வ பக்கத்திற்கு செல்லுங்கள்.

படிநிலை 2: முகப்புப் பக்கத்தில், ‘அறிக்கைகளை உருவாக்கு என்ற விருப்பத்தேர்வில் கிளிக் செய்யவும்.

படிநிலை 3: மாநிலங்களின் பட்டியலிலிருந்து, உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

படிநிலை 4: இப்போது நிதியாண்டு, மாவட்டம், வட்டாரம் மற்றும் பஞ்சாயத்தை தேர்ந்தெடுத்து, ‘தொடருங்கள்’ என்பதில் கிளிக் செய்யவும்.

படிநிலை 5: ‘வேலை அட்டை தொடர்பான அறிக்கைகள்’ என்ற விருப்பத்தெரிவின் கீழ், ‘ பயன்பாட்டில் இல்லாத வேலை அட்டை என்ற விருப்பத்தேர்வைக் காண்பீர்கள். அதில் கிளிக் செய்யவும்.

படிநிலை  6: பயன்பாட்டில் இல்லாத NREGA வேலை அட்டைகளின் பட்டியல் உங்கள் திரையில் தோன்றும்.

 

jobcard

 

NREGA போர்ட்டலில் எவ்வாறு புகார் அளிப்பது?

படிநிலை1:அதிகார பூர்வமான NREGA வலைத்தளத்துக்கு செல்லுங்கள்.

 

 

படிநிலை  2: முகப்புப் பக்கத்தில், கீழே வரிசையாக காணும் போது, ஸ்க்ரோல் பொதுமக்கள் குறைகள் (பப்ளிக் கிரீவன்ஸ்) என்ற விருப்பத்தேர்வைக் காண்பீர்கள். அந்த விருப்பத்தேர்வில் கிளிக் செய்யுங்கள்.

 

 

படிநிலை 3: உங்கள் புகாரை பதிவு செய்வதற்கான மாநிலங்களின் பட்டியலை உங்களுக்கு வழங்கும் ஒரு . புதிய பக்கம் தோன்றும் , அதில் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

 

 

படிநிலை 4: இப்போது மற்றொரு படிவம் காட்சிப்படுத்தப்படும் அதில், அங்கு உங்கள் NREGA தொடர்பான புகாரை பதிவு செய்ய தேவையான பல விவரங்களை வழங்க வேண்டும்.

 

 

 

 

படிநிலை 5: அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, புகாரைச் சேமி என்ற விருப்பத்தேர்வின் மீது கிளிக் செய்யவும்.

 

உங்கள் NREGA வேலை அட்டை எண்ணை நீங்கள் மறந்துவிட்டால் என்ன செய்வது?

பின்வரும் எளிய அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் உங்களின் NREGA வேலை அட்டை எண்ணை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்:

படிநிலை1: அதிகாரப்பூர்வ NREGA பக்கத்துக்கு செல்லவும். முகப்புப் பக்கத்தில், தொழிலாளர்கள் (ஒர்கர்ஸ்) என்ற விருப்பத்தேர்வில் கிளிக் செய்யவும்.

 

NREGA job card

 

படிநிலை 2: காட்சிப்படும் அடுத்த பக்கத்தில், வேண்டப்படும் விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் NREGA வேலை அட்டை எண் திரையில் தெரியும்.

 

NREGA job card

 

NREGA 2022-23 ஊதிய பட்டியல்

2022-23 ஆம் ஆண்டிற்கான NREGA ஊதியப் பட்டியல் இங்கே. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள NREGA  ஊதியங்கள் ஏப்ரல் 2022 முதல் பொருந்தும்.

 

NREGA rate list

 

NREGA rate list

 

NREGA rate list

 

NREGA வேலை அட்டை செயலியை(ஜாப் கார்ட் ஆப்) பதிவிறக்கம் செய்வது எப்படி?

  1. உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில், ப்ளேஸ்டோரைப் பார்வையிடவும்.
  2. NREGA ஐத் தேடவும்.
  3. NREGA வேலை அட்டை தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள NREGA ஆப் ஐ நிறுவவும்.

 

NREGA பற்றி கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்

NERGA என்பது என்ன?

தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (NREGA) என்ற தொழிலாளர்களை மையப்படுத்தி இயற்றப்பட்ட ஒரு சட்டம்,  பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MGNREGA)  என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது . NREGA  என்பது இந்தியாவின் பயிற்சித் திறனற்ற  தொழிலாளர்களுக்கு ‘வேலை செய்வதற்கான உரிமை’ க்கு உத்தரவாதமளிக்கும்  ஒரு சமூக பாதுகாப்பு நடவடிக்கைக்கான சட்டமாகும். .

செப்டம்பர் 2005 இல் இயற்றப்பட்டு  2006 இல் அமல்படுத்தப்பட்ட MGNREGA உடலுழைப்புப் பணியை மேற்கொள்ள விருப்பம் தெரிவிக்கும் ‘ஒவ்வொரு குடும்பத்திலுமுள்ள வயது வந்த  உறுப்பினர்களுக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் கிராமப்புறங்களில் வாழ்வாதார பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டம் தற்போது ஆண்டுக்கு 100 வேலை நாட்களை இந்தியாவில் உள்ள 14.89 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு வழங்கிவருகிறது

2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு ரூ.73,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2.4 கோடிக்கும் கூடுதலான  குடும்பங்கள் MGNREGA இன் கீழான  வேலைகளை விரும்பி  தேடுகின்றன.

 

மேலும் காண்க: இந்த வழிகாட்டியில் EPF அல்லது தொழிலாளர் வருங்கால வாய்ப்பு நிதித் திட்டம் பற்றிய அனைத்தும் மற்றும் EPF passbook  பற்றிய அனைத்தையும்.

 

NREGA jobcard: How to check and download MGNREGA job card list 2022

 

MGNREGA இன் முக்கிய அடிப்படை நோக்கங்கள்

  • தேவைக்கேற்ப ஒரு நிதியாண்டில் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் 100 நாட்கள் பயிற்சித் திறனற்ற உடலுழைப்பு வேலைகளை வழங்க உத்தரவாதமளித்தல், அதன் மூலம்  வகுத்துரைக்கப்பட்ட தரம் மற்றும் நீடித்து நிலைக்கும் வளர்ச்சிக்கான சொத்துக்களை  உருவாக்குதல்.
  • சமூக உள்ளடக்குதலை முனைப்போடு உறுதி செய்தல்.
  • ஏழைகளின் அடிப்படை வாழ்வாதாரத்தை வலுப்படுத்துதல்.
  • பஞ்சாயத்து ராஜ் அமைப்புக்களை வலுப்படுத்துதல்.

மேலும் காண்க :  e panchayat இயக்கம் என்றால் என்ன ?

 

NREGA வேலை அட்டைதாரரின் உரிமைகள்

  • திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் உரிமை.
  • வேலை அட்டை பெறுவதற்கான உரிமை.
  • வேலைக்கு விண்ணப்பிப்க, மற்றும் விண்ணப்பத்திற்கான தேதியிட்ட ரசீதைப் பெறுவதற்குமான உரிமை.
  • விண்ணப்பித்த வேலைக்கான காலம் மற்றும் நேரத்தை தேர்வு செய்யும் உரிமை .
  • விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அல்லது முன்னரே விண்ணப்பித்திருந்தால், வேலைக்கான விருப்பம் தெரிவித்த  தேதியிலிருந்து, இதில் எது பிந்தையதோ அதற்குப் பொருத்தமாக வேலை வழங்கப்படும்
  • வேலை செய்யும் இடத்தில் குடிநீர், குழந்தை காப்பகம் மற்றும் முதலுதவிக்கான வசதிகள்.
  • 5-கிமீ சுற்றளவிற்கு அப்பால் பணியிடம் அமைந்தால் 10% கூடுதல் ஊதியத்திற்கான உரிமை.
  • வருகைப் பதிவேடுகளை (மஸ்டர் ரோல்களை) சரிபார்த்து வேலை அட்டையில் உள்ளிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுவதற்கான உரிமை.
  • வாராந்திர ஊதியம் வழங்கப்படுவதற்கான உரிமை.
  • விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அல்லது முன்னரே விண்ணப்பித்திருந்தால், வேலைக்கான விருப்பம் தெரிவித்த  தேதியிலிருந்து, அதற்கிணங்க வேலை வழங்கப்படாவிட்டால்  வேலையில்லா நிலைக்கான ஊக்கத் தொகைக்கான  உரிமை,
  • வருகைப் பதிவேடு (மஸ்டர் ரோல்) முடித்து வைக்கப்பட பிறகு மூடப்பட்ட ஊதியம் வழங்குவது 16 வது நாளுக்கு மேல் தாமதமாகும் பட்சத்தில் ஒரு நாளைக்கு செலுத்தப்படாத ஊதியத்தின் 0.05% வீதத்தில், கூடுதல் தொகை இழப்பீடாக வழங்கப்படவேண்டும்
  • வேலையின் போது காயம் ஏற்பட்டால், மருத்துவமனையில் சேர்ப்பதற்கான செலவு உட்பட மருத்துவச்செலவுகள் மற்றும் தேவைப்பட்டால் வேலையின் போது ஊனம் அல்லது இறப்பு ஏற்பட்டால் கருணைத் தொகை வழங்குதல்

மேலும் காண்க : Mahabocw or மகாராஷ்ட்ரா கட்டுமானம் மற்றும் கட்டிடத்தொழிலாளர் நல வாரியம் பற்றிய அனைத்தும்

 

MGNREGA இன் கீழ் வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஊதியத்துடன் கூடிய திறனற்ற கூலி வேலை தேட விரும்பும் வயதுவந்த உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள் MGNREGA இல் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் வகுத்துரைக்கப்பட்ட படிவத்தில் அல்லது சாதாரண தாளில் எழுத்துப்பூர்வமாக உள்ளூர் கிராம பஞ்சாயத்தில் சமர்ப்பிக்கப்படலாம். இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வாய்ப்புகள் இருப்பதை உறுதிசெய்ய, கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் NREGA பதிவுக்கான வாய்ப்பு ஆண்டு முழுவதும்  திறந்திருக்கும்.

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

வேலை அட்டை என்பது ஒரு பட்டியலா?

இல்லை, NREGA வேலை அட்டை என்பது MNREGA இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட வயதுவந்த உறுப்பினரின் விவரங்களைக் கொண்ட ஒரு அட்டை ஆகும். NREGA வேலை அட்டையில் அட்டைதாரரின் புகைப்படமும் இருக்கும்.

வேலை அட்டை எண்ணை நான் எவ்வாறு சரிபார்க்கலாம்?

உங்கள் வேலை அட்டை எண்ணைச் சரிபார்க்க, அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு வருகை தரவேண்டும் மற்றும் மாநிலம், மாவட்டம், வட்டாரம் பஞ்சாயத்து, கிராமம் மற்றும் குடும்ப ஐடி போன்ற பல்வேறு விவரங்களை வழங்க வேண்டும்.

எனது NREGA கணக்கை நான் எவ்வாறு சரிபார்க்கலாம்?

உங்களின் NREGA வேலை அட்டையிலுள்ள விவரங்களைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்கள் NREGA கணக்கைச் சரிபார்க்கலாம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் அல்லது MGNREGA இன் உரிமை ஆணை என்ன?

MGNREGA இன் உரிமை ஆணை என்பது ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு உத்தரவாதமான ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்குவதாகும்

NREGA என்ற பெயர் MGNREGA என எப்போது மாற்றப்பட்டது?

தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், 2005, அக்டோபர் 2, 2009 அன்று திருத்தம் செய்யப்பட்ட போது அது, NREGA என்பதிலிருந்து MGNREGA என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

NREGA வேலை அட்டை என்றால் என்ன?

NREGA வேலை அட்டை என்பது MGNREGA இன் கீழ் தொழிலாளர்களின் உரிமைகளைப் பதிவு செய்யும் ஒரு முக்கிய ஆவணமாகும். பதிவு செய்யப்பட்ட குடும்பங்கள் வேலைக்கு விண்ணப்பிபதை இது அனுமதிக்கிறது, மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து தொழிலாளர்கள் மோசடிக்கு ஆளாகாமல் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

MGNREGA இன் கீழ் ஒரு 'குடும்பம்' என்பதற்கு என்ன பொருள்?

குடும்பம் என்பது இரத்த சம்பந்தம், திருமணம் அல்லது தத்தெடுத்தல் மூலம் ஒருவருக்கொருவர் உறவுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒன்றாக சேர்ந்து வசிப்பவர்கள் மற்றும் ஒன்றாக உணவைப் பகிர்ந்துகொள்வது அல்லது பொதுவான குடும்ப அட்டையை வைத்திருப்பவர்கள் என்று பொருள்படும் .

MGNREGA வேலை அட்டைப் பதிவிற்கான கால இடைவெளி என்ன?

MGNREGA வேலை அட்டைக்கான பதிவு ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறும். ஒரு குடும்பத்தின் சார்பாக வேலை அட்டைக்கு யார் விண்ணப்பிக்க வேண்டும்? குடும்பத்தின் எந்தவொரு வயது வந்த உறுப்பினரும் (18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்) அவர்கள் குடும்பத்தின் சார்பாக விண்ணப்பிக்கலாம். ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து வயது வந்த உறுப்பினர்களும் வேலை அட்டைக்கு பதிவு செய்ய முடியுமா? முடியும், திறனற்ற உடலுழைப்பு வேலையைச் செய்யத் தயாராக இருக்கும் ஒரு குடும்பத்திலுள்ள உள்ள அனைத்து வயது வந்த உறுப்பினர்களும் , MGNREGA இன் கீழ் வேலை அட்டையைப் பெற தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். NREGA வேலை அட்டையின் பதிவு எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்? NREGA பதிவு ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் மற்றும் வகுத்துரைக்கப்பட்ட செயல்முறையைப் பின்பற்றுவதன் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம்/மீண்டும் செல்லத்தக்கதாக்கலாம். . NREGA வேலை அட்டைகளை வழங்குவதற்கான கால வரம்பு என்ன? ஒரு குடும்பத்தின் தகுதியைப் பற்றிய சரியான தகவல்கள் குறித்த சரிபார்ப்பு முடிந்த பிறகான பதினைந்து நாட்களுக்குள் தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் NREGA வேலை அட்டைகள் வழங்கப்பட வேண்டும். NREGA வேலை அட்டையை தொலைத்து விட்ட ஒரு நபருக்கு அதன் நகல் ஒன்றை வழங்க ஏதேனும் வசதி உள்ளதா? அசல் அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ நகல் அட்டைக்கு NREGA வேலை அட்டைதாரர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் கிராம பஞ்சாயத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

ஒரு குடும்பத்தின் சார்பாக வேலை அட்டைக்கு யார் விண்ணப்பிக்க வேண்டும்?

குடும்பத்தின் எந்தவொரு வயது வந்த உறுப்பினரும் (18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்) அவர்கள் குடும்பத்தின் சார்பாக விண்ணப்பிக்கலாம்.

ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து வயது வந்த உறுப்பினர்களும் வேலை அட்டைக்கு பதிவு செய்ய முடியுமா?

முடியும், திறனற்ற உடலுழைப்பு வேலையைச் செய்யத் தயாராக இருக்கும் ஒரு குடும்பத்திலுள்ள உள்ள அனைத்து வயது வந்த உறுப்பினர்களும் , MGNREGA இன் கீழ் வேலை அட்டையைப் பெற தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

NREGA வேலை அட்டையின் பதிவு எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்?

NREGA பதிவு ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் மற்றும் வகுத்துரைக்கப்பட்ட செயல்முறையைப் பின்பற்றுவதன் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம்/மீண்டும் செல்லத்தக்கதாக்கலாம்.

NREGA வேலை அட்டைகளை வழங்குவதற்கான கால வரம்பு என்ன?

ஒரு குடும்பத்தின் தகுதியைப் பற்றிய சரியான தகவல்கள் குறித்த சரிபார்ப்பு முடிந்த பிறகான பதினைந்து நாட்களுக்குள் தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் NREGA வேலை அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.

NREGA வேலை அட்டையை தொலைத்து விட்ட ஒரு நபருக்கு அதன் நகல் ஒன்றை வழங்க ஏதேனும் வசதி உள்ளதா?

அசல் அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ நகல் அட்டைக்கு NREGA வேலை அட்டைதாரர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் கிராம பஞ்சாயத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும் .

Was this article useful?
  • 😃 (1)
  • 😐 (0)
  • 😔 (0)

Recent Podcasts

  • செட்டில்மென்ட் பத்திரத்தை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்
  • ஜூன் மாத இறுதிக்குள் துவாரகா சொகுசு அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தை முடிக்க DDA பணியாளர்களை அதிகரிக்கிறது
  • மும்பை 12 ஆண்டுகளில் இரண்டாவது அதிக ஏப்ரல் பதிவு: அறிக்கை
  • செபியின் உந்துதல் ரூ 40 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை பகுதி உரிமையின் கீழ் முறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது: அறிக்கை
  • பதிவு செய்யப்படாத சொத்தை வாங்க வேண்டுமா?
  • 2025 நிதியாண்டில் கட்டுமான நிறுவனங்களின் வருவாய் 12-15% அதிகரிக்கும்: ICRA