PF balance சரிபார்ப்பு: இபிஎஃப் இருப்பு அறிய படிப்படியான வழிகாட்டுதல்

உங்களது பிஎஃப் இருப்புத் தொகையை சரிபார்க்க உதவும் முழுமையான வழிகாட்டுதல் இது.

பிஎஃப் இருப்பு சரிபார்ப்பு

இபிஎஃப் (EPF) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்காக உங்கள் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் தொகையானது காலப்போக்கில் கணிசமான தொகையாக உயர்ந்து விடுகிறது. இபிஎஃப் இருப்பை சரிபார்ப்பதன் மூலம், உங்களின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். இபிஎஃப் இருப்பை நீங்கள் ஆன்லைன் மூலமாகவோ, ஆஃப்லைன் மூலமாகவோ சரிபார்க்கலாம். இபிஎஃப் இருப்பை ஆஃப்லைனில் அறிந்துகொள்ள இபிஎஃப்ஓ-விற்கு (EPFO) நீங்கள் ஒரு மிஸ்டுகால் அல்லது எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். ஆன்லைன் மூலமாக இபிஎஃப் இருப்பை அறிந்துகொள்ள இபிஎஃப்ஓ-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும் அல்லது Umang app செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். உங்களது பிஎஃப் இருப்பை அறிந்து கொள்வதற்கு உங்களுடைய யுஏஎன் எண் (UAN number) மற்றும் பிஎஃப் உறுப்பினர் ஐடி ஆகியவை அவசியம்.

இதையும் வாசிக்க: இபிஎஃப் பாஸ்புக் குறித்த முழு வழிகாட்டுதல்கள்

 

EPFO தளத்தில் பிஎஃப் இருப்பு சரிபார்த்தல்

இபிஎஃப் இணையதளத்தல் பிஎஃப் இருப்பை சரிபார்க்க உங்களுடைய யுஏஎன் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். (உங்களது UAN லாகினை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பது பற்றிய எங்களது வழிகாட்டி முறையை படிக்கலாம்) உங்களுடைய யுஏஎன்-ஐ பயன்படுத்தி இபிஎஃப்ஓ வலைதளத்தில் பிஎஃப்  இருப்பை எவ்வாறு சரிபார்ப்பது என்ற வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

படி 1: இபிஎஃப்ஓ-வின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்குச் சென்று எங்களுயை சேவை எனப்படும் ‘Our Services’ என்ற டேபுக்குள்  செல்ல வேண்டும். இப்போது டிராப்-டவுனில் தோன்றும் பட்டியலில் இருந்து For Employees என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

 

PF balance check

 

படி 2: அடுத்து வரும் பக்கத்தில் ‘Member Passbook’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

 

EPF balance check

 

படி 3: அடுத்து வரும் புதிய பக்கத்தில், உங்களுடைய யுஏஎன் எண், பாஸ்வேர்டு கேட்கப்படும். அதனை உள்ளீடு செய்த பின் காட்டப்படும் கேப்ச்சா கேள்விக்கு பதில் அளித்தப் பின்னர் ‘Login’ பட்டனை அழுத்த வேண்டும்.

 

PF balance check: A step-wise guide for EPF balance check

 

படி 4: ஒருமுறை நீங்கள் EPF முகப்புப் பக்கத்தில் உள்நுழைந்ததும், அதில் உங்களுடைய பெயர், UAN எண் மற்றும் PAN எண் ஆகியவைக் காண்பிக்கப்படும்.

 

PF balance check: A step-wise guide for EPF balance check

 

படி 5: இப்போது நீங்கள் உங்களது ஒரு Member ID-யை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் பல்வேறு இடங்களில், வெவ்வேறு நிறுவனங்களிடம் வேலை பார்த்திருந்தால் உங்களிடம் பல Member IDகள் இருக்கும். அப்படி இருந்தால் உங்களது பிஎஃப் இருப்பைச் சரிபார்க்க விரும்பும் உறுப்பினர் ஐடி எண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

PF balance check: A step-wise guide for EPF balance check

 

படி 6: இதன்பின்னர் கீழே வரும் பல்வேறு ஆப்ஷன்கள் மூலமாக உங்களுடைய பிஎஃப் இருப்பைச் சரிபார்க்க முடியும்: பாஸ்புக்கைப் பார்த்தல் (புதியது: ஆண்டுதோறும்) அல்லது பாஸ் புத்தகத்தைப் பார்த்தல் (பழையது: முழுவதும்). இவற்றுடன் நீங்கள் பணத்தை எடுக்க விண்ணப்பித்திருந்தால், அதன் தற்போதைய நிலை என்ன என்பதை அறிய Claim Status ஆப்ஷனும் உங்களுக்கு இருக்கும். உங்களுக்கு வேண்டிய ஆப்ஷனை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

 

PF balance check: A step-wise guide for EPF balance check

 

படி 7: இப்போது நீங்கள் உங்களுடைய பிஃப் கணக்கில் இருக்கும் இருப்பை பார்க்க முடியும். திரையில் தெரியும் அந்தக் கோப்பினை பிடிஎஃப் (PDF) வடிவத்திலும் நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

 

PF balance check: A step-wise guide for EPF balance check

 

இதையும் வாசிக்க: இபிஎஃப் பாஸ்புக் டவுன்லோடு செய்வது எப்படி?

 

மொபைல் எண் மூலம் பிஎஃப் இருப்பு சரிபார்த்தல்

உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி நீங்கள் இரண்டு வழிகளில் பிஎஃப் இருப்பு பணத்தை சரிபார்க்க முடியும். அவை:

 

எஸ்எம்எஸ் குறுஞ்செய்தி மூலம் பிஎஃப் இருப்பை சரிபார்த்தல்

எஸ்எம்எஸ் மூலமாக உங்களுடைய பிஎஃப் இருப்புத் தொகையை அறிந்து கொள்ள 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதில்,‘EPFOHO UAN ENG‘ என டைப் செய்து அனுப்ப வேண்டும். இந்த செய்தியில் கடைசியாக இருக்கும் 3 எழுத்துகளும் உங்களுக்கு விருப்பமான முதன்மை மொழியைக் குறிக்கும். ஒருவேளை ஆங்கிலம் தவிர வேறு மொழியில் வர வேண்டும் என்றால் விருப்பத்திற்குரிய மொழியின் முதல் மூன்று எழுத்துகளை டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.

உங்கள் பார்வைக்காக பல்வேறு மொழிகளுக்கான அட்டவணை கீழ்வருமாறு:

ஆங்கிலத்தில் EPFO இருப்பு அறிய EPFOHO UAN ENG
தமிழில் EPFO இருப்பு அறிய EPFOHO UAN TAM
இந்தியில் EPFO இருப்பு அறிய EPFOHO UAN HIN
பஞ்சாபியில் EPFO இருப்பு அறிய EPFOHO UAN PUN
மராத்தியில் EPFO இருப்பு அறிய EPFOHO UAN MAR
குஜராத்தியில் EPFO இருப்பு அறிய EPFOHO UAN GUJ
கன்னடத்தில் EPFO இருப்பு அறிய EPFOHO UAN KAN
தெலுங்கில் EPFO இருப்பு அறிய EPFOHO UAN TEL
பெங்காலியில் EPFO இருப்பு அறிய EPFOHO UAN BEN
மலையாளத்தில் EPFO இருப்பு அறிய EPFOHO UAN MAL

 

கட்டணமில்லா எண்ணில் மிஸ்டு கால் மூலம் பிஎஃப் இருப்பு அறிக

011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும் உங்களது பிஎஃப் இருப்புத் தொகையை அறிந்துகொள்ள முடியும். பிஎஃப் இருப்பு அறிய இந்த எண்ணுக்கு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து நீங்கள் அழைத்து தகவல் பெறலாம்.

இதையும் வாசிக்க: நிதித் திட்டத்தில் ஒரு வீடு வாங்க உங்களது பிஎஃப் நிதியைப் பயன்படுத்துவது எப்படி?

 

செயலி மூலம் பிஎஃப் இருப்பு சரிபார்த்தல்

இரண்டு மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம் நீங்கள் உங்களுடைய பிஎஃப் இருப்புத் தொகையை அறிந்துகொள்ள முடியும்.

EPFO-ன்  m-Sewa செயலி

உங்களுடைய மொபைலில்  m-Sewa செயலியை தரவிறக்கம் செய்து, அதில் ‘Member’ என்பதற்குள் சென்று ‘Balance/Passbook’ என்பதை அழுத்தி உங்களின் EPF இருப்பைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

Umang செயலி

உங்களுடைய மொபைலில் Umang செயலியை பதிவிறக்கம் செய்த பின்னர் Employee Centric Services என்பதற்கு கீழ் இருக்கும் EPFO ஆப்ஷனுக்குச் சென்று உங்களுடையை EPF இருப்பை சரிபார்க்கலாம்.

 

PF இருப்பு சரிபார்ப்பு குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

UAN என்றால் என்ன?

யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் எனப்படும் UAN என்பது ஒரு தனிப்பட்ட 12 இலக்க அடையாள எண் ஆகும். உங்களுடைய இபிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி குறி்த்து அறிந்து கொள்வதற்கு இது பயன்படுகிறது.

பிஎஃப் மெம்பர் ஐடி என்றால் என்ன?

ஒவ்வொரு முறையும் ஒழுங்கமைக்கபட்ட நிறுவனத்தில் நீங்கள் வேலைக்குச் சேரும்போதும், அந்த நிறுவனம் உங்களுக்கு வருங்கால வைப்பு நிதி கணக்கைத் தொடங்கி, உங்களுக்கென ஒரு உறுப்பினர் அடையாள எண்ணை ஒதுக்குகிறது. அதாவது நீங்கள் பணிபுரிந்த நிறுவனங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து உங்களிடம் பல வருங்கால வைப்பு நிதி அடையாள எண்களை நீங்கள் வைத்திருக்கலாம். UAN-ன் கீழ் உங்களுடைய அனைத்து பிஎஃப் அடையாள எண்களும் தொகுக்கப்பட்டிருக்கும்.

மிஸ்டுகால் கொடுப்பதன் மூலம் இபிஎஃப் இருப்பை அறியலாமா?

முடியும். உங்களுடைய பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்க வேண்டும். மேலும், உங்களின் பிஎஃப் இருப்பை அறிந்துகொள்வதற்கு UAN மற்றும் PF member ID ஆகியவை உங்கள் வசம் வைத்திருக்க வேண்டும்.

எஸ்எம்எஸ் மூலம் எனது இபிஎஃப் இருப்பை அறிய முடியுமா?

குறுஞ்செய்தி மூலமாக உங்களுடைய பிஎஃப் இருப்பை அறிந்துகொள்ள 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதற்கு முன்பாக EPFO வலைதளத்தில் உங்கள் KYC நடைமுறையை முடித்துவிட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

Was this article useful?
  • ? (0)
  • ? (0)
  • ? (0)

Recent Podcasts

  • மஹாதா சத்ரபதி சம்பாஜிநகர் போர்டு லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல் ஜூலை 16 அன்று
  • மஹிந்திரா ஹேப்பினெஸ்ட் கல்யாண் – 2 இல் 3 டவர்களை மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் அறிமுகப்படுத்துகிறது
  • குர்கானின் செக்டார் 71ல் 5 ஏக்கர் நிலத்தை பிர்லா எஸ்டேட்ஸ் கையகப்படுத்துகிறது
  • குர்கானில் ரூ.269 கோடி மதிப்பிலான 37 திட்டங்களை ஹரியானா முதல்வர் தொடங்கி வைத்தார்
  • ஹைதராபாத்தில் ஜூன்'24ல் 7,104 குடியிருப்பு சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன: அறிக்கை
  • இந்திய அல்லது இத்தாலிய பளிங்கு: எதை தேர்வு செய்ய வேண்டும்?