சென்னையில் பார்க்க வேண்டிய முதல் 15 இடங்கள் மற்றும் செய்ய வேண்டிய விஷயங்கள்

ஒரு சிறந்த பயணத் திட்டத்தைத் மேற்கொள்ள உங்களுக்கு உதவ சென்னையின் சுற்றுலாத் தலங்களின் ஒரு பட்டியலும் மற்றும் சென்னையில் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றியும் இங்கே ,

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை கடலுக்கு அருகில் வசதியாக அமைந்துள்ள ஒரு பிரபலமான வணிக மையமாகும்,. மேலும் இது இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் விலங்குகிறது, மற்றும் பயணிகள் மற்றும் சாகச செயல்களை மேற்கொள்ளவிரும்பும் ஆர்வலர்களுக்கு ஏற்ற ஏராளமான சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு சுற்றுலாப் பயணியாக  இருந்தால், சென்னையில் பார்க்க வேண்டிய இடங்களுக்குப் பஞ்சமே இருக்காது. சிறந்த பயணத் திட்டத்தை மேற்கொள்ள உதவும் சென்னையின் சுற்றுலாத் தலங்களின் பட்டியலை இங்கே  நீங்கள் காணலாம் . வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்பதால் கோடை காலம் தவிர வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் வானிலை பொதுவாக வசதியாக இருக்கும் என்பதால் நீங்கள் எந்த ஒரு சமயத்திலும் சென்னைக்கு பயணம் மேற்கொள்ளலாம்.

Table of Contents

 

சென்னைக்கு எவ்வாறு செல்வது?

விமானம் மூலம்:  இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் சென்னையும் ஒன்று. இந்தியா மற்றும் வெளிநாடுகளை இணைக்கும் விமான சேவையைக் கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான மையங்கள் சென்னையில் அமைந்துள்ளது. பயணிகள் மிக எளிதாக சென்னை விமான நிலையத்துக்கு சென்றடையலாம்.  அதன் பிறகு ஒரு வாடகை கார் மூலம் நகரத்தின் எந்த ஒரு இடத்துக்கும் வசதியாக செல்லலாம்

ரயில் மூலம்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நகரின் முக்கியமான ஒரு ரயில் நிலையமாகும். இந்த நிலையம் சென்னைக்கு அருகிலுள்ள மற்ற உள்ளூர் ரயில் நிலையங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் எளிதாக இதை அணுக முடியும். மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் இருந்து வழக்கமாக ரயில்கள் தினசரி இங்கு வருகின்றன.

சாலை வழியாக:  பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் இருந்து சாலை மார்க்கமாக சென்னையை எளிதில் அடையலாம். சென்னைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் NH44 ஐப் பயன்படுத்தலாம். மாற்றாக, ஹைதராபாத்துடன் NH16 நெடுஞ்சாலையயோடும்  சென்னை இணைக்கப்பட்டுள்ளது.

 

சென்னையின் சிறந்த சுற்றுலா தலங்கள்

சென்னையில் பார்வையிட வேண்டிய சிறந்த இடங்கள் என்று எடுத்துக்கொண்டால், நீங்கள் தேர்ந்தெடுத்து வலம் வருவதற்கு பஞ்சமே இல்லாத அளவுக்கு இங்கு நிறைய தலங்கள் உள்ளன. ஆக, சென்னை சுற்றுலா தலங்கள் பட்டியலை இங்கே நீங்கள் முழுமையாக அறியலாம்.

 

சென்னையில் காண வேண்டிய இடங்கள் #1: மெரினா கடற்கரை

Top places to visit in Chennai and things to do

 

மெரினா கடற்கரை சென்னையின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்று  மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இடமாகும். செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஃபோர்ஷோர் எஸ்டேட் வரை நீண்ட கடற்கரையோரம் பூங்காக்கள் மற்றும் கடைகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் கடற்கரையில் உலாவி ஆராயலாம் மற்றும் அது வழங்கும் அற்புதமான சூரிய அஸ்தமனத்தையும் கண்டு களிக்கலாம். கூடுதலாக, கடற்கரையில் ஏராளமான சிற்றுண்டிக் கடைகள் வருகையாளர்களுக்கு பஜ்ஜி மற்றும் பானிபூரி போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றன. . கடற்கரையில் பல்வேறு வகையான சவாரிகளையும் குழந்தைகள் அனுபவிக்க முடியும்.

 

சென்னை சுற்றுலா தலங்கள் #2: சென்னை கலங்கரை விளக்கம்

Chennai lighthouse

 

மெரினா கடற்கரையில் ஒரு முக்கிய அடையாளமாக இருப்பது  சென்னை கலங்கரை விளக்கம் மேலும் இந்தியாவில் நகர எல்லைக்குள் அமைந்திருக்கும்  ஒரே கலங்கரை விளக்கமாகவும் இது திகழ்கிறது.  இடையில் சிறிது காலம் மூடப்பட்டிருந்த நிலையில்,  நவம்பர் 2013 இல் சென்னை கலங்கரை விளக்கம்  பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. இது 1976 இல் ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் எனும் நிறுவனத்தால் கட்டப்பட்டு 1977 முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது என்று சென்னை கலங்கரை விளக்கத்தின் ஆரம்பகால வரலாறு  குறிப்பிடுகிறது. வரலாற்று ஆர்வலர்களுக்கு, சென்னையில் பார்வையிட இதைவிட சிறந்த இடம் வேறு எதுவும் இல்லை.

 

சென்னை சுற்றுலா தலங்கள் #3: சென்னை அருங்காட்சியகம்

Top places to visit in Chennai and things to do

 

எழும்பூரில் உள்ள சென்னை மத்திய அருங்காட்சியகம் வருகையாளர்கள் காணவேண்டிய புகழ்பெற்ற ஒரு  அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம் 1851 இல் நிறுவப்பட்டது மற்றும் இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகம் ஆகும், ஓர் இடத்தின் வரலாறு குறித்து அறிய விரும்புவோருக்கு சென்னையில் உள்ள மிகச் சிறந்த இடங்களில் இதுவும் ஒன்று. இந்த அருங்காட்சியகம் ரோமானிய கலைப்பொருட்கள் மற்றும் பழங்கால வெண்கல சிலைகளுக்கு  பிரபலமானது. இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பழைய சிற்பங்கள் கிமு 1000 மற்றும் அதற்கும் முந்தைய காலத்தை சேர்ந்தவை .

சென்னையின் இந்த அருங்காட்சியகத்தின் சுவர்களை அலங்கரிக்கும் கலைப்பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் பழங்காலப் பொருட்களை கண்டு ஆராய  சென்னையின் மிகச் சிறந்த இடங்களில் ஒன்றாக இது விளங்குவதால் இதன், வளாகம் மற்றும் காட்சியகங்களை நீங்கள் சுற்றிப் பார்த்து கண்டு மகிழலாம். . வளாகத்திற்குள் பரிசுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்கும் ஒரு நினைவு பரிசுகள் விற்பனை செய்யும்  கடையும் உள்ளது. நீங்கள், உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தமிழ்நாட்டில் இருந்து ஒரு நினைவுப் பரிசுப்பொருளை வாங்கிச்செல்லலாம் . வெள்ளிக்கிழமை தவிர, மற்ற அனைத்து நாட்களிலும் தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த அருங்காட்சியகம் திறந்திருக்கும்..

 

 

சென்னையில் காண வேண்டிய இடங்கள் #4: தென்றல் வீசும் கடற்கரை

Top places to visit in Chennai and things to do

 

வால்மீகி நகரில் உள்ள தென்றல் வீசும் அற்புதமான கடற்கரை சென்னையில் பார்க்க தலைசிறந்த இடங்களில் ஒன்றாகும். இந்த அமைதி தவழும் கடற்கரை சென்னை சுற்றுலா தலங்களில் முதன்மையானது. கடல் மற்றும் அதன்  இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரைப் பகுதிகளை புகைப்படம் எடுக்க வரும் புகைப்படக் கலைஞர்களின் ஒன்று கூடும் ஒரு மையம் இது. ஒப்பீட்டளவில் இங்கு  கூட்டம், சற்றுக் குறைவாக இருக்கும் என்பதால்  சூரிய உதயத்தைப் கண்டு ரசிக்க  அல்லது ஒரு நீண்ட நாளை அமைதியாக களிக்க இங்கே நீங்கள் வருகை தரலாம். .இதன் அருகிலேயே  ஏராளமான ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகளை நீங்கள் காணலாம். நீங்கள் சற்றுத் தொலைவில் தங்கியிருந்தாலும் இங்கு வருவதற்கு நீங்கள் எப்போதும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். உங்களுக்கான சில நினைவுப் பொருட்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல சுற்றுலா ஸ்தலத்தில் சில அற்புதமான காட்சிகளை எடுக்கவும். உங்களுக்கான நினைவுகளை உங்கள் இல்லத்திற்கு கொண்டு செல்ல அற்புதமான புகைபடங்கள் சிலவற்றை நீங்கள் எடுக்கத் தவறாதீர்கள்.

 

சென்னையில் காண வேண்டிய இடங்கள் #5: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா

Top places to visit in Chennai and things to do

 

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா (சுருக்கமாக AAZP) அல்லது வண்டலூர் உயிரியல் பூங்கா, என்றழைக்கப்படும் இது சென்னை வண்டலூரில் அமைந்துள்ளது. இது நகரத்தின் மையப்பகுதியில் இருந்து ஒரு குறுகிய பயண தூரத்தில் அமைந்துள்ளது  மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து வெறும் 31 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது. 1855 இல் நிறுவப்பட்ட இந்த உயிரியல் பூங்கா இந்தியாவின் முதல் பொது உயிரியல் பூங்காவாகும். 1,490 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த உயிரியல் பூங்கா  ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விடமாகும். பூங்காவில் பல்வேறு வகையான பாலூட்டிகள், ஊர்வன, மீன்கள் மற்றும் பறவையினங்களை நீங்கள் காணமுடியும். நுழைவுக் கட்டணம் மிகக் குறைவு. மேலும் இது சென்னையில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய தேசிய பூங்காவாகும். மிருகக்காட்சிசாலையில் உள்ள அனைத்து விலங்குகளையும் பார்த்து மகிழும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்குச் செல்ல இந்தச் சிறந்த இடம் சென்னைக்கு ஏற்றது. சென்னையில் காண வேண்டிய ஒரு சிறந்த இடமாக இருக்கும் இது குழந்தைகளோடு வரும் குடும்பத்தினருக்கு மிக உகந்த சுற்றுலா இடமாக விளங்கும் . குழந்தைகள் இங்குள்ள அனைத்து விலங்கினங்களையும் கண்டு மகிழவும் மற்றும் அவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் வசதியாக இருக்கும்.

 

சென்னையில் உள்ள பிரபலமான இடங்கள் #6: வள்ளுவர்கோட்டம்

Top places to visit in Chennai and things to do

 

வள்ளுவர்கோட்டம் என்பது தமிழ் செம்மொழிக் கவிஞர் வள்ளுவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மகத்தான நினைவுச் சின்னமாகும். இந்த மைல்கல் நினைவுச்சின்னம் தமிழ்நாட்டின் கலாச்சார மையமாக உள்ளது மற்றும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுவாக இது அமைந்துள்ளது. இது 20 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது மற்றும் சென்னை சுற்றுப்பகுதியில் உள்ள கோடம்பாக்கம் பிரதான சாலை மற்றும் நுங்கம்பாக்கம் வில்லேஜ் சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மனதைக் கொள்ளை கொள்ளும் 39 மீட்டர் உயர கற்ச்சிற்பம், கண்களுக்கு ஒரு விருந்தாகும் மற்றும் அற்புதமான இந்திய கட்டிடக்கலையின் ஒரு அடையாளமாகும். வழக்கமான கைவினைப் பொருட்கள் கண்காட்சிகளும் இங்கு நடத்தப்படுகின்றன, எனவே நீங்கள் அவற்றின் அழகை கண்டு மகிழ்வதோடு , அவற்றையும் இங்கே வாங்கவும் செய்யலாம்.. சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த சென்னை சுற்றுலாத்தலத்தை ஆட்டோ அல்லது கார் சேவைகள் மூலம் எளிதில் அணுகலாம்

 

சென்னையில் உள்ள சுற்றுலாத் தலங்கள் #7: ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயில்

 

View this post on Instagram

 

A post shared by India Tourism (@indiararephotos)

 

ஸ்ரீ அஷ்டலட்சுமி கோவில் சென்னை பெசன்ட் நகரில் உள்ளது. செல்வம் மற்றும் செழுமையின் கடவுளான லட்சுமி தேவிக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் ஒப்பீட்டளவில் புதியது மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது. இக்கோயில் சுற்றுலாப் பயணிகளுக்கும் பக்தர்களுக்கும் அவர்கள் விரும்பினால் இங்கு பூஜைகள் செய்யும் வகையில் திறந்து வைக்கப்பட்டு செலபட்டுவருகிறது. நீங்கள் கோயிலுக்குச் சென்று வழிபடலாம் அல்லது அதன் கட்டிடக்கலையைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்து போய்  நேரத்தை செலவிடலாம். இதன் அருகிலேயே எலியட்ஸ் கடற்கரை அருகில் அமைந்துள்ளது மிக எளிதாக அங்கு பயணிக்க முடியும். நீங்கள் அதை ஒரு சிறிய சுற்றுலாவாக மாற்றி, பெசன்ட் நகரின் அமைதியான சூழலை அனுபவிக்கலாம்.

 

சென்னையில்  செல்ல வேண்டிய இடங்கள் #8: எலியட்ஸ் கடற்கரை

Top places to visit in Chennai and things to do

 

பெசன்ட் நகரில் உள்ள பாரம்பரிய கலைநயத்தோடு கூடிய எலியட்ஸ் கடற்கரை, நகரத்தின் மையத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு விசித்திரமான கடற்கரையாகும். இந்த கடற்கரை மெரினா கடற்கரையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது,.

ஏனெனில் இது  கூட்டமும் இரைச்சலும் இல்லாத ஒரு சிறிய அமைதியான கடற்கரை; கூட்டத்தைத் தவிர்க்க விரும்பும் மக்களுக்கும், தண்ணீரை அடைய மணலில் நீண்ட தூரம் நடந்து செல்ல விரும்பாதவர்களுக்கும் இந்த கடற்கரை உகந்ததானது.  குறைந்த செலவில் தனியார் மற்றும் பொது போக்குவரத்து மூலம் கடற்கரையை அடையலாம். நீங்கள் கடற்கரையில் ஒரு சிறிய சுற்றுலா மையத்தை அமைத்துக்கொண்டு  மாலை மற்றும் சூரிய அஸ்தமன நேரத்தை அமைதியாகவும் ஆனந்தமாகவும் செலவிடலாம். நீங்கள் இதன் அருகில் உள்ள ஹோட்டல்களில் ஒன்றில் தங்கியிருந்தால் காலையில்  சூரிய உதயத்தைப் பார்க்கவும், புதிய கடல் காற்றை அனுபவித்து உணரவும் கடற்கரையில் ஒரு சிறிய நடைபயணத்தை மேற்கொள்ளலாம். னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் இதுவும் ஒன்று.

 

சென்னைக்கு அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள் #9: விஜிபி கோல்டன் பீச்

 

View this post on Instagram

 

A post shared by Some Alleys (@enroute_map)

 

கோல்டன் பீச் பிரதான நகரத்திலிருந்து சிறிது தொலைவில்தான்  அமைந்துள்ளது. கடற்கரையில் ஒரு ரிசார்ட் உள்ளது, இது சுற்றுலாப் பயணிகளை நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடவும், இங்குள்ள  பொழுதுபோக்க்கு அம்சங்களை அனுபவிக்கவும்  அழைப்பு விடுகிறது. வளாகத்திற்குள் பல ஆர்கேட்கள் மற்றும் சவாரிகள் உள்ளன,  அவற்றை கூடுதல் கட்டணம் செலுத்தி  அனுபவிக்க முடியும். நீங்கள் கோல்டன் பீச்சில் ஒரு நாள் பயணத்தை மேற்கொண்டு நாள் முழுவதையும் உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி  மாலையில் கடற்கரையில் ஓய்வெடுக்கவும் முடியும். விஜிபி கோல்டன் பீச் கண்டிப்பாக சென்னையின் சிறந்த இடங்களில் ஒன்றாகும், இதை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவராலும் ரசிக்க முடியும்.

 

சென்னையில் காண வேண்டிய இடங்கள் #10: செயின்ட் தாமஸ் கதீட்ரல் பசிலிக்கா

Top places to visit in Chennai and things to do

 

சென்னையில் உள்ள செயின்ட் தாமஸ் கதீட்ரல் பசிலிக்கா அல்லது சாந்தோம் கதீட்ரல் கிறிஸ்தவர்களின் முக்கிய புனிதத் தலமாகும். புனித தாமஸ் அடக்கம் செய்யப்பட்ட இடமாகக் கூறப்படும் இந்த , பசிலிக்கா கி.பி 72 இல் கட்டப்பட்டது. பசிலிக்காவின் தற்போதைய கட்டமைப்பு போர்த்துகீசியர்களாலும் பின்னர் அந்த அசல் தேவாலயக் கட்டிடத்தை மாற்றியமைத்து அதன் வளாகத்தை விரிவு படுத்திக் கட்டிய மற்றும் ஆங்கிலேயர்களாலும் நியோ-கோதிக் பாணியில் உருவாக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த தேவாலயத்திற்கு வருகை தருகிறார்கள். இந்த பசிலிக்கா,  சரவிளக்குகள் மற்றும் வண்ணக் கண்ணாடி ஜன்னல்களுடன், ஈர்க்கக்கூடிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதில் அமைந்துள்ள செயின்ட் தாமஸ் அருங்காட்சியகத்திற்குச் சென்று புனிதரின் நினைவுச்சின்னங்களை ஆராயலாம் மற்றும் உள்ளே தரைக்குக் கீழே அமைந்துள்ள  தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யலாம். நீங்கள் கட்டிடக் கலை ஆர்வலராகவோ அல்லது ஆன்மிகத்தில் நாட்டத்துடன் பல விஷயங்களை அறிவதில் ஆர்வமுள்ளவராகவோ இருந்தால், சென்னையில் நீங்கள் பார்க்க வேண்டிய மிகச் சிறந்த தலங்களில் இந்த தேவாலயமும் ஒன்று.

 

சென்னையில் காண வேண்டிய  இடங்கள் #11: ஆயிரம் விளக்கு மசூதி

Top places to visit in Chennai and things to do

ஆதாரம்: Pinterest

 

சென்னையில் அமைந்துள்ள ஆயிரம் விளக்கு மசூதி 19 ஆம் நூற்றாண்டில் உம்ததுல்-உமாராவால் கட்டப்பட்டது. அண்ணாசாலையில் இஸ்லாமியர்களுக்கான ஆன்மீக ஸ்தலமாக அமைந்துள்ள இந்த மசூதி, இந்தியாவின் முகலாய கட்டிடக்கலை பாணியை பிரதிபலிக்கிறது. நீங்கள் மசூதியைப் பார்வையிடும் போது   அதன் வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றி மேலும் அறிந்துகொண்டு  அதன் அழகைக் கண்டு வியக்கலாம். இது நகரத்திற்குள் வசதியாக அமைந்துள்ளதால் சாலை வழியாக எளிதில் அணுகக்கூடியது. சென்னையில் எந்த ஒரு இடத்திலிருந்தும்  நீங்கள் ஒரு தனியார் வாகனத்தில் அல்லது உள்ளூர் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டு  சென்று விரைவிலேயே  அந்த இடத்தை சென்று அடையலாம்.

 

சென்னையில் காண வேண்டிய இடங்கள் #12: கபாலீஸ்வரர் கோவில்

Top places to visit in Chennai and things to do

 

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில், சென்னையில் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான தலம். கபாலீஸ்வரர் கோயில் சிவன் மற்றும் பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் இந்து ஆன்மீகப் பயணிகள்  மற்றும் சைவ பக்தர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வழிபாட்டு தலமாகும். 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயம், கடவுள்கள் மற்றும் அசுரர்களின் சிற்பங்களுடன் முழுமையான திராவிட கட்டிடக்கலைப் பாணியைக் கொண்டுள்ளது.

சென்னையின்  ஒரு முக்கிய ஆன்மீக ஸ்தலமான இந்த கோவிலில் பக்தர்கள் கலந்துகொள்ள வழக்கமான பூஜைகள் நடைபெறுகின்றன. சென்னை நகரப் பயணத்தின் ஒரு பகுதியாக நீங்கள் இந்தக் கோயிலுக்கு வருகை தந்து அதன் அமைதி ததும்பும் வளாகத்தில் சிறிது நேரம் செலவிடலாம்.

 

சென்னையில் காண வேண்டிய  இடங்கள் #13: அருள்மிகு மருந்தீஸ்வரர் கோவில்

Top places to visit in Chennai and things to do

சென்னையிலுள்ள அருள்மிகு மருந்தீஸ்வரர் கோயில் இந்துக்களின்  மற்றொரு  ஆன்மீகத் தலமாகும். இந்துக் கடவுளான சிவனை வழிபடும் சைவர்கள் மத்தியில் இந்த கோயில் பிரபலமானது. அழகான வெளிப்புற தோற்றம் மற்றும் வளாககத்தைக் கொண்ட இந்தக் கோவில் கோவில்  சுத்தமாக தோற்றமளிக்கிறது. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல்களில் இக்கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது . ராமாயண காவியத்தை எழுதிய ரிஷி வால்மீகியின் சன்னதியும் இந்தக் கோவில் வளாகம் சோழப் பேரரசு காலத்தில் அவர்களால் புதுப்பிக்கப்பட்டது அவர்களின் கட்டிடக்கலையின் பாரம்பரியத்தை பின்பற்றியுள்ள இந்தக் கோவிலின் பழமையான கட்டிடக்கலையை நீங்கள் ஆராயலாம்,

 

சென்னைக்கு அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள் #14: கொல்லிமலை

.Top places to visit in Chennai and things to do

 

கொல்லிமலை சென்னைக்கு அருகில் ஒரு சிறு பயண தூரத்தில்  அமைந்துள்ளது. சென்னைக்கு அருகிலுள்ள சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இந்த இடம், மலைபகுதிகளில்  சிறிது நேரம் செலவிட விரும்புபவர்களுக்கு உகந்தது. . ரிசார்ட் கிராமத்துக்கு செல்லும் பாதை  தமிழ்நாட்டின் மிக அழகிய சாலைகளில் ஒன்றாகும், மேலும் உங்கள் சென்னை சுற்றுலா பயணத்திட்டத்தில் கண்டிப்பாக முதலிடத்தில் இருக்க வேண்டும். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலம், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பசுமையான காட்சிகளை பிரமிக்கவைக்கும் வகையில் வழங்குகிறது. ஒரு நாள் பயணமாக நீங்கள் கிராமத்திற்குச் வருகை தரலாம்  அல்லது அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்கி உங்கள் சுற்றுலா நாட்களை நீட்டிக்கலாம். மற்றும். அருகில் உள்ள இதர சுற்றுலா தலங்களுக்குச் செல்வதை இதோடு இணைக்கலாம். சென்னையில் இருந்து கொல்லிமலைக்கு செல்ல, சுற்றுலா பயணிகள் சென்னை-தேனி நெடுஞ்சாலை அல்லது சென்னை-விழுப்புரம்-திருச்சி-கன்னியாகுமரி சாலை வழியாக செல்ல வேண்டும்.

 

சென்னையில் காண வேண்டிய இடங்கள்#15: பார்த்தசாரதி கோவில்

பார்த்தசாரதி கோவில் மெரினா கடற்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ளது மற்றும் அதன் கட்டிடக்கலைநயம்  காரணமாக நகரத்தின் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இது விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கோயிலாகும், மேலும் இது ராஜகோபுரம் என்று அழைக்கப்படும் பிரமிடு வடிவ குவிமாட அமைப்பைக்  கொண்டுள்ளது. யோக நரசிம்மர், ராமர், கஜேந்திர வரதராஜா, ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர் ஆகிய மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்கள்  இக்கோயிலில் பார்த்தசாரதியாக காட்சியளிக்கிறது.

 

Top places to visit in Chennai and things to do

 

சென்னையில் காண வேண்டிய இடங்கள் #16: காமாட்சி அம்மன் கோவில்

சென்னையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் காமாட்சி அம்மன் கோயிலும் இடம்பெற்றுள்ளது.  7 ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு 14 ஆம் நூற்றாண்டில் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டு கட்டப்பட்ட இந்த கோயில் காமாட்சி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது சென்னைக்கு அருகிலுள்ள காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது.

 

Top places to visit in Chennai and things to do

 

சென்னையில் காண வேண்டிய இடங்கள் #17: அண்ணா நூற்றாண்டு நூலகம்

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள இந்த நூலகம்  தெற்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாகும் மற்றும் அதிகளவிலான புத்தகப் பிரியர்களை தன்னை நோக்கி இது ஈர்க்கிறது. 172 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த நூலகத்துக்கு , முன்னாள் தமிழக முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

Top places to visit in Chennai and things to do

மூலாதாரம்: விக்கி மீடியா

 

சென்னையில் செய்ய வேண்டியவை

சென்னையில் செய்ய வேண்டியவை #1: சென்னையில் ஷாப்பிங்

Top places to visit in Chennai and things to do

 

சென்னையில் ஷாப்பிங் பயணத்தைத் தவற விட்டுவிட வேண்டாம் என்று நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். பிராண்டட் மற்றும் கையால் செய்யப்பட்ட உள்ளூர் பொருட்களை விற்கும் பல்வேறு கடைகளைக்  கொண்ட சில அற்புதமான வணிக வளாகங்கள்  மற்றும் சந்தைகள் சென்னையில் உள்ளன. எக்ஸ்பிரஸ் அவென்யூ மால், ஃபோரம் மால், ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி போன்ற இடங்களுக்குச் சென்று தென்னிந்திய மற்றும் மேற்கத்திய பிராண்டுகளின் சிறந்த தயாரிப்புக்களை ஷாப்பிங் செய்யலாம். பட்டுப் புடவைகள், காஞ்சிபுர பட்டு, கெம்ப் நகைகள், தங்க நகைகள், வீட்டு அலங்காரங்கள் போன்ற சில பாரம்பரிய தென்னிந்தியப் பொருட்களுக்காக உள்ளூர் சந்தைகளுக்குச் செல்லலாம். கபாலீஸ்வரர் கோயிலுக்கு அடுத்துள்ள சந்தையிலும்  சில உண்மையான கைவினைப் பொருட்கள் மற்றும் நகைகளை நீங்கள் வாங்கலாம்.

 

சென்னையில் செய்ய வேண்டியவை #2: உள்ளூர் உணவு வகைகள்

Top places to visit in Chennai and things to do

 

உங்கள் சென்னை பயணத்தில் தென்னிந்திய உள்ளூர் உணவகங்களுக்குச் செல்வதற்கு முன்னுரிமை கொடுங்கள்.  தென்னிந்திய உணவுகளில் சைவம் மற்றும் அசைவ வகைகளில் பல்வேறு வகை உணவுகள் உள்ளன. தெரு உணவுக்கடைகள் முதல் வழக்கமான உணவகங்கள் வரை, உண்பதற்கு சுவையான உணவு வகைகளை வழங்கும் உணவகங்களால் சென்னை நிரம்பியுள்ளது. சென்னைக்கு வருகை தரும் போது சென்னையில் உள்ள கடலோர மற்றும் கடல் உணவுகள் உண்டு மகிழவேண்டியவை. . மெரினா கடற்கரையில் உள்ள தெருக் கடைகளில் இருந்து பொரித்த உணவுகளை நீங்கள் அனுபவிக்கலாம் அல்லது சென்னையின் சிறந்த உணவகங்கள் வழியாகச் சென்று முழுமையான உணவை உண்ணலாம். அன்னலட்சுமி உணவகம், தக்ஷின், தி ஃப்ளையிங் எலிஃபண்ட், தி வாட்டர்ஃபால் ரெஸ்டாரன்ட் மற்றும் ஆவர்த்தனா ஆகியவை சில பிரபலமான உணவகங்கள்.

 

சென்னையில் செய்ய வேண்டியவை #3 தாழங்குப்பம் கப்பல்துறையில் உலா வாருங்கள்

எல்லா பக்கமும் இயற்கை எழில் சூழ, ஒரு சிறிய அமைதியானதும் ரம்மியமானதுமான இடத்தில் நீங்கள் உலா வர விரும்பினால், அழகுமிகு தாழங்குப்பம் (Thalankuppam) கப்பல்துறை பகுதிக்கு வாருங்கள். வட சென்னையில் உள்ள தாழங்குப்பம் என்ற சிறு மீனவ கிராமத்தில் இந்த கப்பல்துறை உள்ளது. பேரமைதியும் இயற்கையின் பேரழகும் கொண்ட இந்த இடத்தில்தான் தாழங்குப்பம் வழியில் பாயும் ஆறானது பெருங்கடலைச் சந்திக்கிறது. இயற்கையின் எழிலை ரசித்து விரும்புவோர் நிச்சயம் தவறாமல் சென்று பார்த்து பேரனுபவத்தை தங்களுக்குள் புதைத்துக்கொள்ளக் கூடிய மிகச் சிறந்த இடம்தான் இந்த தாழங்குப்பம் கப்பல்துறை

 

Things to do in Chennai

 

சென்னையில் செய்ய வேண்டியவை #4: உப்பலமடுகு அருவியில் புகைப்படங்கள் க்ளிக்குங்கள்

நீங்கள் போட்டோகிராஃயில் ஆர்வம் மிக்கவராக இருந்தாலோ, சென்னையின் இயற்கை அதிசயங்களைக் கண்டு வியக்க விரும்புவோராகவும் இருந்தால், நீங்கள் சென்று ரசிக்க வேண்டிய இடம்தான் எழில்மிகு உப்பலமகுடு அருவி (Ubbalamadugu Falls). பசுமை போர்த்திய சித்துலியா கோனா வனத்தில் இந்த அழகிய சுற்றுலா தலத்தில் தெளிந்த நீர் கொட்டுவதை ரசித்து அனுபவிக்கலாம். இது, இன்ஸ்டாகிராம் அப்டேட்களுக்காக ஈர்க்கத்தக்க புகைப்படங்களை எடுக்க விரும்புவோர் நாட வேண்டிய இடமும் கூட.

 

Things to do in Chennai

 

சென்னையில் செய்ய வேண்டியவை #5: எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்டில் களித்து மகிழுங்கள்

தீம் பார்க்குகளை யாருக்குதான் பிடிக்காது? உங்கள் நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ சென்னை வந்தால், அவர்களுடன் ஜாலியாக நாள் முழுக்க பொழுதைக் கழிக்கக் கூடிய தீம் பார்க் தான் எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்டு (MGM Dizzee World). நமக்கு உற்சாகம் தரும் ராட்டிணங்கள், வாட்டர் ஸ்லைடுகள், குறிப்பாக குழந்தைகளை மகிழ்விக்கும் பல அம்சங்கள் கொண்ட ரைடுகள் இங்கே எக்கச்சக்கம்.  இந்த கேளிக்கைப் பூங்காவில் உள்ள அனைத்து ரைடுகளிலும் வலம் வந்து மறக்க முடியாத உற்சாக அனுபவம் பெற மறந்துவிடாதீர்கள். மேலும், உள்ளூர் விலையில் கிடைக்கக் கூடிய ஃபுட் கோர்ட் வழங்கும் உணவு வகைகளையும் சுவைத்துப் பார்க்கலாம்.

 

Things to do in Chennai

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

சுற்றுலா செல்ல சென்னை தகுதியானதா?

சென்னை ஒரு அழகான நகரம் மற்றும் தமிழ்நாட்டின் தலைநகரம். இந்த நகரத்தில் சில அழகான மற்றும் அமைதியான கடற்கரைகள் உள்ளன, மேலும் சில பிரபலமான சுற்றுலா தலங்களும் உள்ளன, அவை பார்வையிடத் தகுந்தவை.

வாங்குவதற்கு சென்னையில் எது பிரசித்தி பெற்றது?

சென்னை அதன் அழகிய மற்றும் பாரம்பரிய கோயில் நகைகள் மற்றும் பட்டு புடவைகளுக்கு பிரபலமானது. சென்னை கோயம்புத்தூரின் ஜவுளி உற்பத்திநிலையங்களுக்கு அருகில் அமைத்திருப்பதால் , காட்டன் புடவைகள் மற்றும் பிற ஆடைகள் மிகப் பெரிய அளவில் கிடைக்கின்றது.

சென்னைக்கு பயணம் மேற்கொள்ள சிறந்த மாதம் எது?

சுற்றுலாப் பயணிகள் எப்போது வேண்டுமானாலும் சென்னைக்கு வரலாம் என்றாலும், கோடை மாதங்களைத் தவிர்க்கலாம்.

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (0)
  • 😔 (0)

Recent Podcasts

  • Mhada Konkan FCFS திட்டம் பிப்ரவரி 2 வரை நீட்டிக்கப்படுகிறது
  • 2,367 கோடி மதிப்பிலான 9 நெடுஞ்சாலைத் திட்டங்களை ம.பி.யில் கட்காரி தொடங்கி வைத்தார்
  • டேராடூன், பித்தோராகர் இடையே உடான் விமானத்தை சிந்தியா தொடங்கி வைத்தார்
  • சிறிய அறைகளுக்கு வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டி
  • மும்பையின் ஆடம்பரமான பகுதிகளில் திட்டங்களை உருவாக்க Sunteck
  • 3டி டைல்ஸ் மூலம் படுக்கையறை தோற்றத்தை எப்படி உயர்த்துவது?