ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் 2022-23 நிதியாண்டில் 1.39 கோடி நிகர உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது

மார்ச் மாதத்தில் சேர்க்கப்பட்ட 13.40 லட்சம் உறுப்பினர்களில், சுமார் 7.58 லட்சம் புதிய உறுப்பினர்கள் முதல் முறையாக ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் இணைந்துள்ளனர். புதிதாக இணைந்த உறுப்பினர்களில்,

2023 மே 20-ம் தேதியன்று வெளியிடப்பட்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தற்காலிக ஊதியத் தரவின்படி, 2023 மார்ச் மாதத்தில் 13.40 லட்சம் நிகர உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. மொத்த நிதியாண்டில் 1.39 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். முந்தைய நிதியாண்டான 2021-22 உடன் ஒப்பிடும்போது 13.22% உறுப்பினர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.

மார்ச் மாதத்தில் சேர்க்கப்பட்ட 13.40 லட்சம் உறுப்பினர்களில், சுமார் 7.58 லட்சம் புதிய உறுப்பினர்கள் முதல் முறையாக ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் இணைந்துள்ளனர். புதிதாக இணைந்த உறுப்பினர்களில், 2.35 லட்சம் உறுப்பினர்கள் 18-21 வயதுக்குட்பட்டவர்கள். 1.94 லட்சம் உறுப்பினர்கள் 22-25 வயதுடையவர்கள். பதிவு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களில் 18-25 வயதுடையவர்கள் 56.60% ஆவர்.

பாலின வாரியான ஊதியத் தரவுகள்படி, 2023 மார்ச் மாதத்தில் 2.57 லட்சம் பெண் உறுப்பினர்களின் சேர்ந்துள்ளனர். இது மார்ச் மாதத்திற்கான மொத்த உறுப்பினர்களில் 19.21% ஆகும். இதில் 1.91 லட்சம் பெண் உறுப்பினர்கள் புதிதாக இணைந்துள்ளனர். இது புதிதாக இணைந்தவர்களில் 25.16% கூடுதலாகும்.

நிகர உறுப்பினர் சேர்க்கையின் அடிப்படையில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய 5 மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. மொத்த உறுப்பினர்களில் இந்த மாநிலங்கள் 58.68% பங்கு வகிக்கின்றன. இதில் மகாராஷ்டிரா 20.63% உறுப்பினர்களுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு மாநிலம் 10.83% உறுப்பினர்களுடன் 2-ம் இடத்திலும் உள்ளது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர ஒதுக்கீடுகள் சட்டம், 1952-ன் கீழ் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட துறை பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நலன்களை வழங்கும் முதன்மையான அமைப்பாகும்.

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (0)
  • 😔 (0)

Recent Podcasts

  • மேவ் படுக்கையறை: கட்டைவிரல் மேலே அல்லது கட்டைவிரல் கீழே
  • ஒரு மாயாஜால இடத்திற்கான 10 ஊக்கமளிக்கும் குழந்தைகளின் அறை அலங்கார யோசனைகள்
  • விற்கப்படாத சரக்குகளின் விற்பனை நேரம் 22 மாதங்களாக குறைக்கப்பட்டது: அறிக்கை
  • இந்தியாவில் வளர்ச்சி சொத்துக்களில் முதலீடுகள் உயரும்: அறிக்கை
  • 2,409 கோடிக்கு மேல் ஏஎம்ஜி குழுமத்தின் சொத்துகளை இணைக்க நொய்டா ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
  • ஸ்மார்ட் சிட்டிகளில் PPP களில் புதுமைகளைப் பிரதிபலிக்கும் 5K திட்டங்கள் மிஷன்: அறிக்கை