வாடகை ரசீது வடிவமைப்பு

வாடகை சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் மற்றும் மாதாந்திர வாடகைத் தொகை பற்றிய முக்கிய விவரங்களைக் வாடகை ரசீதுகள் உள்ளடக்கியிருக்கும்..

வீட்டு வாடகை படித் தொகை  என்பது குறிப்பிடத்தக்க வகையில்  ஒரு பணியாளரின் மாத சம்பளத்தின் ஒரு பகுதியாகும். வாடகைதாரர்கள் ரூ.3,000க்கு மேல் மாத வாடகையாக செலுத்தினால், வாடகை செலுத்தியதற்கான ஆதாரங்களை சமீபத்தில் செலுத்தப்பட்ட தொகைக்கான ரசீதாக காட்ட வேண்டும். உங்கள் சம்பளத்தின் HRA கூறுகளுக்கு எதிராக வரி விலக்குகளைப் பெற இது முக்கியமானது.

எனவே, ஒவ்வொரு காலாண்டிலும் வாடகை செலுத்தியதற்கான ஆவணச் சான்றிதழை சமர்ப்பிக்கச் சொல்லி உங்கள் பணியமர்த்துனர் வலியுறுத்துகிறார். அவ்வாறு செய்யத்தாவறினால், உங்கள் சம்பளத்திலிருந்து ஒரு பெரும் தொகை வாரியாகப் பிடித்துக் கொள்ளப்படும்.

ஆன்லைன் பரிவர்த்தனை முறைகளைப் பயன்படுத்தி உங்கள் வாடகையை நீங்கள்  செலுத்தியிருந்தாலும், வாடகை ரசீதுகள் பனியமர்த்துபவரிடம்  சமர்ப்பிக்கப்பட வேண்டும். வாடகை ரசீது எளிதான வடிவமைப்பைக் கொண்டது. வாடகை ரசீது வடிவம்  வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைதாரரின்  அடையாள விவரங்கள், மாதாந்திர வாடகைத் தொகை மற்றும் வாடகை சொத்தின்  முகவரி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.

வாடகை ரசீது மற்றும் HRA வரி விலக்கு  குறித்து மேலும் வாசிக்க

 

வாடகை ரசீது வடிவமைப்பு

வாடகை ரசீதுக்கான அடிப்படை வடிவம் இங்கே.

Rent receipt

வாடகை ரசீது வடிவம் (நிரப்பப்பட்டது)

வாடகை ரசீது மற்றும் வரி விலக்கு பலன்கள் குறித்து மேலும் வாசியுங்கள்

 

வாடகை ரசீதிலுள்ள விவரங்கள்

  • வாடகைதாரரின் பெயர்
  • வீட்டு உரிமையாளரின் பெயர்
  • மாதாந்திர/காலாண்டு/வருட வாடகை
  • வாடகைதாரரின் கையொப்பம்
  • வீட்டுஉரிமையாளரின் கையொப்பம்
  • வாடகைக்கு எடுத்த சொத்தின் முகவரி
  • 5,000 ரூபாய்க்கு மேல் ரொக்கப் பணமாக செலுத்தியிருந்தால் அவ்வாறான ஒவ்வொரு ரசீதுக்கும் வருவாய் முத்திரை வில்லை(ரெவின்யூ ஸ்டாம்ப்) ஒட்டப்படவேண்டும்
  • செலுத்தப்படும் உங்கள் ஆண்டு வாடகைத்தொகை ரூ. 1 லட்சத்துக்கு மேல் அல்லது மாதாந்திர வாடகைத் தொகை ரூ. 8,300 க்கு மேல்  இருந்தால் வீட்டு உரிமையாளரின் பான் கார்டு எண் வழங்கப்படவேண்டும்.
  • தேதி
  • ரசீது எண்
  • செலுத்தப்படுவதற்கான காலம்

 

வாடகை ரசீது எப்போது தேவைப்படும் ?

வாடகை செலுத்தியதற்கு ஆதாரமாக வாடகை ரசீதுகளை
வழங்கினால் மட்டுமே வீட்டு வாடகைப் படி அல்லது HRA
கோரமுடியும். 3,000 ரூபாய்க்கு மேல் மாதாந்திர வாடகை
செலுத்த வேண்டிய தங்குமிடத்திற்கு செலுத்திய வாடகைத்
தொகையை வீட்டுவாடகைப் படி, (HRA) யாகத் திரும்பப்பெற
பெற விரும்பினால், உங்கள் பணியமர்த்துனரிடம் அதற்கான
வாடகை ரசீதை வழங்கவேண்டியது கட்டாயமாகும். தங்கள்
பெற்றோருக்காக வாடகைத் தொகையை செலுத்துபவர்கள்
HRA இன் கீழ் உரிமை கோர விலக்கு பெறுவதற்கு அந்தத்
தொகை செலுத்தியதற்கான வாடகை ரசீதுகளை ஆதாரமாக
வழங்க வேண்டும்.

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

வாடகை ரசீதை ஆன்லைனில் உருவாக்க முடியுமா?

முடியும், வாடகைதாரர்கள் பல்வேறு இயங்கு தளங்களில் உள்ள ஆன்லைன் வாடகை ரசீது உருவாக்கும் வசதிகளைப் பயன்படுத்தி ரசீதுகளை ஆன்லைனில் இலவசமாக உருவாக்கலாம்.

ஆன்லைன் வாடகை ரசீதின் நகல்கள் செல்லுபடியாகுமா?

செல்லுபடியாகும், வாடகை ரசீதில் வீட்டு உரிமையாளரின் அனைத்து தகவல்களும் கையொப்பமும் இருந்தால், அதை ஒரு மென் படி (சாப்ட்காப்பி) நக்கலாக பணியாமர்த்துனரிடம் சமர்ப்பிக்கலாம்.

Was this article useful?
  • ? (0)
  • ? (0)
  • ? (0)

Recent Podcasts

  • மஹாதா சத்ரபதி சம்பாஜிநகர் போர்டு லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல் ஜூலை 16 அன்று
  • மஹிந்திரா ஹேப்பினெஸ்ட் கல்யாண் – 2 இல் 3 டவர்களை மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் அறிமுகப்படுத்துகிறது
  • குர்கானின் செக்டார் 71ல் 5 ஏக்கர் நிலத்தை பிர்லா எஸ்டேட்ஸ் கையகப்படுத்துகிறது
  • குர்கானில் ரூ.269 கோடி மதிப்பிலான 37 திட்டங்களை ஹரியானா முதல்வர் தொடங்கி வைத்தார்
  • ஹைதராபாத்தில் ஜூன்'24ல் 7,104 குடியிருப்பு சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன: அறிக்கை
  • இந்திய அல்லது இத்தாலிய பளிங்கு: எதை தேர்வு செய்ய வேண்டும்?