ஈபிஎஃப் உறுப்பினர் வலைதளத்தில் இருந்து உங்களது ஈபிஎஃப் தொடர்புடைய அனைத்து தகவல்கள் மற்றும் சேவைகளை அறிவதற்கு உங்களது யுஏஎன் லாகின் முக்கியப் பங்கு வகிக்கிறது. உண்மையில், இந்த வலைதளத்தில் யுஏஎன் லாகினைப் பயன்படுத்தி கீழ்கண்ட செயல்பாடுகளைச் செய்யலாம்:
- ஈபிஎஃப் பாஸ்புக் டவுன்லோடு செய்யலாம்
- யுஏஎன் அட்டையை டவுன்லோடு செய்யலாம்
- முந்தைய உறுப்பினர் ஐடிக்களை பட்டியலிடலாம்
- கேஒய்சி விவரங்களை சமர்ப்பிக்கலாம்
- ஈபிஎஃப்ஓ இ-நாமினேஷன் பூர்த்தி செய்யலாம்
- ஆன்லைன் டிரான்ஸ்ஃபர் க்ளைம் செய்வதற்கான தகுதியை தெரிந்துகொள்ளலாம்
- தனிப்பட்ட விவரங்களை திருத்தலாம்
- ஒரு பிஎஃப் கணக்கில் இருந்து இன்னொரு கணக்கிற்கு தொகையை டிரான்ஸ்ஃபர் செய்யலாம்
இந்த வழிகாட்டுதலில், உங்கள் யுஏஎன் லாகின் மூலம் பிஎஃப் பேலன்ஸ், இ-நாமினேஷன் நிலை, க்ளைம் நிலை, கேஒய்சி அப்டேட் உள்ளிட்ட பல தகவல்களை அறிந்துகொள்வதற்கான நடைமுறைகளை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்.
யுஏஎன் லாகின்: 2023-ன் படிகள்
குறிப்பு: யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் பற்றி ஏற்கெனவே தெரிந்துவைத்து இருப்பவர்களுக்காகவே இந்த யுஏஎன் லாகின் நடைமுறைகள் என்பதை கவனத்தில் கொள்க.
படி 1: அதிகாரபூர்வ ஈபிஎஃப்ஓ வலைதளம் செல்க.
படி 2: உங்கள் யுஏஎன் எண்கள், பாஸ்வேர்டு மற்றும் கேப்சாவை உள்ளீடு செய்யுங்கள். யுஏஎன் உறுப்பினர் வலைதளத்தில் Sign In பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
படி 3: முகப்புப் பக்கத்தில், உங்களது யுஏஎன் நம்பர், பிறந்த தேதி, ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் (எண்கள்), பான் எண், இ-மெயில் ஐடி மற்றும் இதர விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.
படி 4: முகப்புப் பக்கத்தில்:
- யுஏஎன் உறுப்பினர் வலைதளத்தில் ‘View’ ஆப்ஷனுக்குக் கீழே நீங்கள் பார்க்கக் கூடியவை:
- உங்கள் ப்ரொஃபைல்
- சர்வீஸ் ஹிஸ்டரி
- யுஏஎன் கார்டு
- பாஸ்புக்
- யுஏஎன் உறுப்பினர் வலைதளத்தில் ‘Manage’ ஆப்ஷனுக்குக் கீழே நீங்கள் பார்க்கக் கூடியவை:
- அடிப்படைத் தகவல்கள்
- தொடர்பு விவரம்
- கேஒய்சி
- இ-நாமினேஷன்
- மார்க் எக்ஸிட்
- யுஏஎன் உறுப்பினர் வலைதளத்தில் ‘Account’ ஆப்ஷனுக்குக் கீழே நீங்கள் பார்க்கக் கூடியது:
அக்கவுண்ட் செட்டிங்ஸ்
- யுஏஎன் உறுப்பினர் வலைதளத்தில் ‘Online Services’ என்ற ஆப்ஷனுக்குக் கீழே நீங்கள் பார்க்கக் கூடியவை:
- க்ளைம் ஃபார்ம் 31, 19, 10C மற்றும் 10D
- டிரான்ஸ்ஃபர் கோரிக்கை
- க்ளைம் நிலை
- அன்னெக்சர் கே
இதையும் வாசிக்க: ஈபிஎஃப் வீட்டுத் திட்டம் குறித்த முழு விவரம்
UAN Login-க்கு பதிவு செய்தல்
யுஏஎன் லாகினுக்கு, அதிகாரபூர்வ வலைதளத்தில் UAN பதிவு செய்வதும் ஆக்டிவேட் செய்வதும் கட்டாயம். உங்கள் UAN-ஐ பதிவு செய்வதற்கான வழிகள் இதோ:
படி 1: EPFO தளத்தின் முகப்பு பக்கத்தில் ‘Services’ பிரிவுக்கு கீழே உள்ள ‘For Employees’ ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.
படி 2: ‘Services’ பிரிவுக்கு கீழே ‘Member UAN/Online Services’ என்ற ஆப்ஷனில் க்ளிக் செய்யுங்கள்.
படி 3: அடுத்தப் பக்கத்தில் ‘Important Links’-க்கு கீழே உள்ள ‘Activate UAN’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.
படி 4: அடுத்த பக்கத்தில், உங்களுடைய பான் நம்பர் அல்லது உறுப்பினர் ஐடி, ஆதார் எண், பெயர், பிறந்த தேதி, செல்பேசி எண் ஆகியவற்றுடன் கேப்ச்சாவை சமர்ப்பிக்கவும். மேலும், ‘Get authorization PIN’ மீது சொடுக்குவதற்கு முன்பு உங்கள் ஆதார் நம்பரை அளிப்பதற்கான ஒப்புதலை அளிப்பதற்கு உரிய பெட்டியை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
படி 5: உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி அனுப்பப்பட்டிருக்கும். அந்த ஓடிபியை பயன்படுத்தி, ‘Validate OTP and Activate UAN’ என்ற ஆப்ஷனை சொடுக்குங்கள். பி.எஃப் கணக்கை ஆக்சஸ் செய்வதற்காக யுஏஎன் ஆக்டிவேஷன் தொடர்பாக உங்களுக்கு ஈபிஎஃப்ஓ ஒரு எஸ்எம்எஸ் அனுப்பும்.
உங்கள் UAN-ஐ தெரிந்துகொள்வது எப்படி?
படி 1: ஈபிஎஃப்ஓ அதிகாரபூர்வ வலைதளத்தை நாடுங்கள்.
படி 2: பக்கத்தின் வலதுபுறம் உள்ள ‘Important Links’ ஆப்ஷனுக்குக் கீழே ‘Know your UAN’ என்பதன் மீது க்ளிக் செய்யுங்கள்.
படி 3: உங்கள் மொபைல் எண்கள் மற்றும் கேப்ச்சாவை சரிபார்த்தலுக்காக வழங்குங்கள். இந்த விவரங்களை நிரப்பிய பிறகு, ‘Request OTP’ பட்டன் மீது க்ளிக் செய்யுங்கள்.
படி 4: உங்கள் மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் மூலமாக 6 இலக்க ஓடிபி வரும். இந்த ஓடிபியை உள்ளீடு செய்து ‘Validate OTP’ ஆப்ஷன் மீது க்ளிக் செய்யுங்கள்.
படி 5: உங்கள் ஓடிபி சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்த உடனே ‘OK’ மீது க்ளிக் செய்து நடைமுறையைத் தொடருங்கள்.
படி 6: கேப்ச்சா உடன் உங்கள் பெயர், பிறந்த தேதி, ஆதார் எண் ஆகியவற்றை உள்ளீடு செய்யுங்கள். அதன்பின் ‘Show UAN’ பட்டன் மீது க்ளிக் செய்யுங்கள்.
உங்கள் UAN-ஐ தெரிந்துகொள்ள ஆதார் என்ற இடத்துக்கு பதிலாக உங்களுடைய பான் அல்லது மெம்பர் ஐடியை பயன்படுத்தலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
படி 7: உங்கள் யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் இப்போது திரையில் தெரியும்
உங்களது சேலரி ஸ்லிப்பில் யுஏஎன் எண்ணை சரிபார்ப்பது எப்படி?
மாற்று வழியாக, உங்களது சேலரி ஸ்லிப் எனும் சம்பளச் சீட்டின் மூலமும் உங்களது யுஏஎன் எண்ணை தெரிந்துகொள்ள முடியும். உங்களது சேலரி ஸ்லிப்பில் உங்களது விவரம் மற்றும் உங்களது நிறுவனத்தின் விவரங்களுடன் PF UAN என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் உங்களது யுஏஎன் எண்ணும் இடம்பெற்றிருக்கும்.
யுஏஎன் லாகின் பாஸ்வேர்டை அறிவதும் மாற்றுவதும் எப்படி?
படி 1: யுஏஎன் வலைதளம் சென்று பாருங்கள்.
படி 2: முகப்புப் பக்கத்தில் ‘Forgot Password’ ஆப்ஷன் மீது க்ளிக் செய்யுங்கள்
படி 3: அதன் அடுத்தப் பக்கத்தில் உங்களது UAN மற்றும் Captcha ஆகியவற்றை உள்ளீடு செய்ய கேட்கப்படும். அவற்றை நிரப்பிய பிறகு, Submit மீது க்ளிக் செய்யுங்கள்.
படி 4: அடுத்தப் பக்கத்தில், உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம் ஆகியவை கேட்கப்படும். இந்த தகவல்களைப் பதிவு செய்த பின்னர் Verify மீது க்ளிக் செய்யுங்கள்.
படி 5: இப்போது உங்களை நீங்களே வெரிஃபை செய்துகொள்ளலாம். அதன் பின், உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ச்சா ஆகியவற்றை உள்ளீடு செய்யுங்கள். அத்துடன், undertaking to allow verification என்று கேட்கப்பட்டுள்ள கட்டத்தில் க்ளிக் செய்யுங்கள்.
படி 6: உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டது. உங்களது மொபைல் எண்களை பதிவு செய்யக் கோரப்படும்; உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.
அத்துடன் நீங்கள் க்ளிக் செய்ய வேண்டிய ஒப்புதல் விவரம்: “என் அடையாளத்தை தெரிவித்து, ஆதார் சார்ந்து உறுதிபடுத்தும் நோக்கத்துக்காக, என் ஆதார் எண், பயோமெட்ரிக் அல்லது ஒன் டைம் பாஸ்வேர்டை அளிக்க நான் ஒப்புதல் தெரிவிக்கிறேன்.”
படி 7: உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அந்த ஓடிபி மற்றும் கேப்ச்சாவை உரிய இடங்களில் நிரப்புங்கள். இப்போது, Verify மீது க்ளிக் செய்யுங்கள்.
படி 8: இப்போது உங்களிடம் புதிய பாஸ்வேர்டு கேட்கப்படும். குறைந்தது ஒரு எழுத்து கேப்பிடலிலும், ஒரு குறியீட்டு எழுத்தும் இருக்குமாறு 8 எழுத்துகளில் பாஸ்வேர்டு ஒன்றை உருவாக்குங்கள். அதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
படி 9: உங்கள் யுஏஎன் லாகின் பாஸ்வேர்டு வெற்றிகரமாக மாற்றப்பட்டது.
யுஏஎன் லாகினில் உங்கள் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?
படி 1: ஈபிஎஃப்ஓ அதிகாரபூர்வ வலைதளம் சென்று ‘Our Services’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து ‘For Employees’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.
படி 2: ‘Services’ மெனுவின் கீழ் தற்போது ஓபன் ஆன பக்கத்தில் ‘Member UAN/Online Service (OCS/OTCP)’ என்ற இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.
படி 3: இப்போது, உங்களது யுஏஎன், பாஸ்வேர்டு மற்றும் கேப்ச்சா ஆகியவற்றை அளித்து சைன் இன் செய்யுங்கள்.
படி 4: இப்போது, ‘Manage’ என்ற பட்டனுக்குச் சென்று ‘Contact Details’ என்ற ஆப்ஷனில் க்ளிக் செய்யுங்கள்.
படி 5: இப்போது திறந்திருக்கும் அந்தப் பக்கம், உங்களது செல்பேசி எண்ணையோ அல்லது இமெயில் ஐடியையோ மாற்றுவதற்கான வசதியை காட்டும்.
படி 6: செல்பேசி எண்ணை மாற்றும் ஆப்ஷனில் நீங்கள் சரிபார்த்த பிறகு, உங்களது புதிய செல்பேசி எண்களை இருமுறை கேட்டு கூடுதலான பெட்டிகள் திறந்திருக்கும். அவற்றை நிரப்பிய பிறகு, ‘Get Authorization Pin’ பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
படி 7: உங்களது புதிய மொபைல் எண்ணுக்கு ஓடிபி வந்த பிறகு, அதை இங்கே பயன்படுத்திய பின்னர், ‘Submit’ பட்டனை க்ளிக் செய்யுங்கள். இதுவே ஈபிஎஃப்ஓ வலைதளத்தில் உங்கள் செல்பேசி நம்பரை மாற்றுவதற்கான நடைமுறையின் நிறைவுப் பகுதியாகும்.
வாசித்து அறிய: பிஎஃப் லாகின்
பான் எண்ணுடன் யுஏஎன் இணைப்பது எப்படி?
படி 1: ஈபிஎஃப்ஓ உறுப்பினர் வலைதள முகப்பு பக்கம் செல்லுங்கள். உங்களது யுஏஎன் மற்றும் பாஸ்வேர்டு கொண்டு லாகின் செய்யுங்கள்.
படி 2: மெயின் மெனுவில் இருந்து ‘Manage’ ஆப்ஷன் மீது க்ளிக் செய்யுங்கள்.
படி 3: Manage ஆப்ஷனுக்கு கீழே ‘KYC’ ஆப்ஷனை நீங்கள் காண்பீர்கள். அதில் க்ளிக் செய்யுங்கள்.
படி 4: ‘Document type’ ஆப்ஷனுக்கு கீழே அப்டேட் செய்ய வேண்டிய ஆவணங்களின் பட்டியலைக் காண்பீர்கள்.
படி 5: PAN மீது க்ளிக் செய்யுங்கள். அதன்பின், உங்கள் பான் நம்பரையும், உங்கள் பெயரையும் உள்ளீடு செய்யுங்கள்.
படி 6: ‘Save’ மீது க்ளிக் செய்யுங்கள்.
படி 7: இந்த விவரங்களை வருமான வரித் துறையினர் சரிபார்த்த பிறகு, பான் உடன் உங்கள் யுஏஎன் இணைக்கப்பட்டுவிடும்.
யுஏஎன் வலைதளத்தில் PAN சரிபார்ப்பு ஃபெயிலியரை சரிசெய்வது எப்படி?
வலைதளத்தில் நீங்கள் அளித்த விவரங்களில் எந்த பொருத்தமின்மை சிக்கலும் இல்லாத பட்சத்தில், பான் – யுஏஎன் சரிபார்ப்பு ஃபெயிலியரை அணுகும் விதம் இதுதான்:
படி 1: EPFiGMS அதிகாரபூர்வ வலைதள பக்கத்துக்குச் செல்லுங்கள்.
படி 2: பக்கத்தின் மேல் பகுதிக்கு இடது பக்கம் உள்ள ‘Register Grievance’ ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.
படி 3: பக்கத்தின் மேல் பகுதிக்கு வலது பக்கத்தில் உங்கள் மொழியை ஆங்கிலத்தில் இருந்து இந்தி அல்லது வேறு மொழிகளுக்கு மாற்றிக் கொள்ளும் ஆப்ஷன் உள்ளது.
படி 4: ‘Register Grievance’ ஆப்ஷன் மீது க்ளிக் செய்த பிறகு, புதிய பக்கம் ஒன்று திறக்கும். அது உங்களுக்கான ஸ்டேட்டஸ் எது என கேட்கும்: PF member, EPS pensioner, Employer or ‘Others’. இதில் PF member என்ற ஸ்டேட்டஸை தேர்ந்தெடுங்கள்.
படி 5: உங்கள் க்ளைம் ஐடி பற்றி check Yes or No என கேட்கப்படும். Check No தேர்ந்தெடுக்கவும்.
படி 6: Check No என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்த பிறகு, உங்களது யுஏஎன் மற்றும் செக்யூரிட்டி கோடு கேட்கப்படும். அதன்பிறகு ‘Get Details’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.
படி 7: அப்போது, உங்கள் பெயர், இ-மெயில் ஐடி மற்றும் மொபைல் எண் ஆகியவை திரையில் வெளிப்படும். ‘Get OTP’ ஆப்ஷன் மீது க்ளிக் செய்து நடைமுறையை தொடருங்கள்.
படி 8: உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்பேசியில் வரும் ஓடிபி எண்களை உள்ளே பதிவு செய்யுங்கள்.
படி 9: இப்போது பாலினம், முகவரி முதலான உங்களது தனி விவரங்கள் கேட்கப்படும்.
படி 10: ‘Grievance Details’ பிரிவுக்குக் கீழே உங்கள் பிரச்சினையை பதிவு செய்ய பிஎஃப் எண்ணை தேர்ந்தெடுக்க கேட்கப்படும்.
படி 11: புது பாக்ஸ் ஒன்று திறக்கும். அது, உங்கள் பிரச்சினைகளை பதிவு செய்யும்படி கேட்கும். (பிஎஃப் அலுவலகம், ஊழியர், ஈடிஎல்ஐ அல்லது ப்ரீ-பென்ஷன்).
- பிரச்சினைகள் தொடர்பான ஆப்ஷனில் PF office என்பதை தேர்வு செய்யுங்கள்.
- பிஎஃப் அலுவலகம் சார்ந்த பிரிவில் KYC Related Issues of Subscriber என்பதை தேர்வு செய்யுங்கள்.
- உங்கள் பிரச்சினை விவரிக்கவும்.
- பான் நம்பர் வெரிஃபிகேஷன் ஃபெயிலியர் மெசேஜ் மற்றும் ஆவணச் சான்றை சரியான புரூஃப் விவரத்துடன் நீங்கள் இணைக்கலாம்.
படி 12: Add என்பதை க்ளிக் செய்து பின்னர் Submit செய்யலாம்.
படி 13: உங்கள் புகார் தொடர்பாக உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைலில் ஒரு எஸ்எம்எஸ் வரும். அதுவே உறுதி செய்வதற்காக உங்கள் பதிவு செய்யப்பட்ட ஐடியில் ஒரு இ-மெயில் வரும். பான் சரிபார்ப்பு ஃபெயிலியர் என்பது 48 மணி நேரத்துக்குள் சரிசெய்யப்பட்டுவிடும்.
ஒரு பிஎஃப் கணக்கில் இருந்து இன்னொன்றுக்கு யுஏஎன் லாகின் உடன் தொகையை மாற்றுவது எப்படி?
படி 1: ஈபிஎஃப்ஓ ஒருங்கிணைந்த வலைதளத்துக்குச் செல்லுங்கள். உங்கள் யுஏஎன், பாஸ்வேர்டு மற்றும் கேப்ச்சாவை வைத்து லாகின் செய்யுங்கள்.
படி 2: லாகின் செய்த பிறகு Online Services டேபுக்கு கீழே One Member-One EPF Account (Transfer Request) என்ற ஆப்ஷன் மீது க்ளிக் செய்யுங்கள்.
படி 3: ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் உங்கள் தனி விவரம் அனைத்தும் தெரியும். அந்தப் பக்கத்தில், உங்களது பிஎஃப் தொகை மாற்றப்பட வேண்டிய கணக்கு விவரமும் தெரியும்.
படி 4: டிஎஸ்சி ஆத்தரைஸ் சிக்னேட்டரிக்காக நீங்கள் முன்பு பணிபுரிந்த நிறுவனம் மற்றும் தற்போது பணிபுரியும் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே தேர்வு செய்யுங்கள்.
படி 5: சரிபார்ப்புக்காக உங்கள் மொபைலுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த ஓடிபி-யை உரிய இடத்தில் இட்டு Submit என்பதை க்ளிக் செய்யுங்கள்.
படி 6: இப்போது ஆன்லைனில் Form 13-ஐ நிரப்பி, பிஎஃப் டிரான்ஸ்ஃபருக்கு கோருக்கள்.
படி 7: ஆன்லைனில் படிவத்தை நிரப்பிய பிறகு, அதை ஒரு பிரின்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கையெழுத்திட்டு, 10 நாட்களுக்குள் உங்கள் நிறுவனத்தின் சமர்ப்பித்துவிடுங்கள். உங்கள் பிஎஃப் தொகை விரைவில் உங்களது புதிய கணக்கில் டிரான்ஸ்ஃபர் ஆகிவிடும்.
ஆதார் உடன் யுஏஎன் எண்ணை இணைப்பது எப்படி?
பாதுகாப்பு விதிமுறை, 2020 பிரிவு 142-ன் கீழ், ஆதார் எண்ணுடன் தங்களது யுஏஎன் எண்ணை இணைத்த ஈபிஎஃப் சந்தாதாரர்கள் மட்டுமே எலக்ட்ரானிக் சலான் உடனான ரிட்டர்ன் வசதிக்கு அனுமதிக்கப்படுவர். இந்த விதிமுறை ஜூன் 1, 2021-ல் இருந்து அமலுக்கு வந்தது.
படி 1: யுஏஎன் உடன் உங்கள் ஆதார் எண்ணை இணைக்க, https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ தளத்துக்குச் செல்லுங்கள்.
படி 2: உங்கள் யுஏஎன் மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி லாகின் செய்யுங்கள்.
படி 3: உறுப்பினர் முகப்புப் பக்கத்தில் ‘Manage’ என்ற டேபுக்குக் கீழே ‘KYC’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
படி 4: ‘Aadhaar’ ஆப்ஷனை தேர்வு செய்து KYC ஆவணத்தை இணையுங்கள்.
படி 5: கேட்கப்படும் இடத்தில் உங்கள் ஆதார் எண்களைப் பதிவு செய்து Save ஆப்ஷனில் க்ளிக் செய்யுங்கள்.
படி 6: இந்த மாற்றங்களை நீங்கள் சேவ் செய்த பிறகு, ஆதார் நிலை என்பது not approved என்பதில் இருந்து ‘Pending’ என்ற நிலைக்கு மாறும்.
உங்கள் நிறுவனம் மற்றும் ஈபிஎஃப்ஓ ஆகியவை இந்த மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்த பிறகே, உங்களுடைய யுஏஎன் எண்கள், உங்களுடைய ஆதார் உடன் இணைக்கப்படும்.
ஆதார் உடன் UAN இணைந்துவிட்டது என்பதை தெரிந்துகொள்வது எப்படி?
படி 1: உங்கள் பி.எஃப் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டதா என்பதை அறிய நீங்கள் நாட வேண்டிய வலைதளம் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/
படி 2: உங்கள் யுஏஎன் மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி லாகின் செய்யுங்கள்.
படி 3: உறுப்பினர் முகப்புப் பக்கத்தில் ‘Manage’ என்ற டேபுக்குக் கீழே ‘KYC’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
படி 4: verified documents பக்கத்தின் கீழ் உள்ள திரையில் உங்களது ஆதார் எண்கள் டிஸ்ப்ளே செய்யப்பட்டிருந்தால், ஆதார் உடன் உங்கள் யுஏஎன் இணைக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம். அப்படி இல்லை என்றால், உங்கள் யுஏஎன் எண்ணுடன் ஆதார் எண்களை நீங்கள் இணைக்க வேண்டும்.
யுஏஎன் உறுப்பினர் வலைதள சேவைகள்
‘View’ ஆப்ஷனுக்கு கீழே1. Profile 2. Service history 3. UAN Card 4. Passbook
‘Manage’ ஆப்ஷனுக்கு கீழே1. Basic details 2. Contact details 3. KYC 4. e-Nomination
‘Account’ ஆப்ஷனுக்கு கீழே1. Change password 2. Account setting
‘Online Services’ ஆப்ஷனுக்கு கீழே1. Claim (Form 31, 19, 10C and 10D) 2. One member one EPF account-transfer request 3. Track claim status 4. Download Annexure K |
யுஏஎன் லாகின்: முக்கிய தகவல்கள்
யுஏஎன் என்றால் என்ன?
யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் என்பதன் சுருக்கமே ‘UAN’. யுஏஎன் என்பது ஒவ்வொருவரும் தங்களது ஈபிஎஃப் (EPF) எனும் வைப்புநிதித் திட்ட கணக்கில் பங்களிப்பதற்காக ஒதுக்கப்பட்ட 12 இலக்க தனித்துவ எண் ஆகும்.
இதையும் வாசிக்க: யுஏஎன் எண்ணுடன் பிஎஃப் இருப்பை தெரிந்துகொள்வது எப்படி?
எந்த EPFO வலைதளத்தில் யுஏஎன் லாகின் அனுமதிக்கப்படுகிறது?
இபிஎஃப்ஓ வெவ்வேறு அதிகாரபூர்வ வலைதளங்களைக் கொண்டுள்ளது. இவை உள்பட:
www.epfindia.gov.in
https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface.
https://iwu.epfindia.gov.in/caiu
https://epfoportals.epfindia.gov.in/iwu
இந்த அதிகாரபூர்வ வலைதளங்கள் அனைத்துமே வெவ்வேறு பிரிவு பயனர்களைக் கொண்டுள்ளது. ஊழியர்கள் தங்களது பிஎஃப் தொடர்புடைய தகவல்களைப் பெறவோ அல்லது பிஎஃப் சார்ந்து விண்ணப்பிக்கவோ மேற்கண்ட இணைப்புகளில் உள்ள வலைதளங்களை மட்டுமே நாடலாம்.
யுஏஎன் லாகினுக்கு நாடி பயன்படுத்த வேண்டிய வலைதளம்:
https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/.
மொபைல் போன் மூலம் யுஏஎன் எண் பெறுவது எப்படி?
யுஏஎன் உறுப்பினர் வலைதளத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மாதம்தோறும் பிஎஃப் பங்களிப்பு, பிஎஃப் கணக்கின் மொத்த இருப்புத் தொகை உள்ளிட்ட விவரங்கள் குறுந்தகவல்கள் மூலம் வரும். இந்த குறுந்தகவல்கள் அனுப்பப்படும் ஐடிக்களின் விவரம்:
VM-EPFOHO
VK-EPFOHO
BP-EPFOHO
BV-EPFOHO
இந்தக் குறியீட்டு எழுத்துகள் உங்கள் சிம் நிறுவனப் பெயருடன் (முதல் 2 எழுத்துகள்), ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் என்பதன் சுருக்கமான எழுத்துகளையும் தாங்கி வரும்.
UAN தொடர்பான தகவல்களை மிஸ்டு கால் மூலம் பெறுவது எப்படி?
யுஏஎன் வலைதளத்தில் பதிவு செய்துள்ள பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது தகவல்களை கீழ்கண்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் பெறலாம்:
011-22901406
இந்த எண்ணுக்கு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களில் இருந்து மிஸ்டு கால் கொடுத்தால் மட்டும் தவல்களைப் பெற முடியும். இந்த எண்ணுக்கு அழைக்கும்போது இரண்டு ரிங்குகளில் கால் கட் ஆகிவிடும். இந்த எண்ணை அழைக்க எந்தக் கட்டணமும் இல்லை.
உங்கள் வங்கிக் கணக்கு அல்லது ஆதார் அல்லது உங்கள் பான் எண்ணுடன் உங்களது யுஏஎன் இணைக்கப்பட்டிருந்தால், கடைசியாக அளிக்கப்பட்ட பங்களிப்பு மற்றும் பிஎஃப் பேலன்ஸ் உள்ளிட்ட விவரம் அனைத்தும் நீங்கள் பெறலாம்.
மிஸ்டு கால் வசதியைப் பெற செய்ய வேண்டியவை
- அதிகாரபூர்வ வலைதளத்தில் யுஏஎன் உடன் மொபைல் எண் கட்டாயமாக ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- யுஏஎன் எண்களுக்கான கேஒய்சி-க்கு கீழ்கண்டவற்றில் ஏதாவது ஒன்று கட்டாயம்:
- வங்கி கணக்கு எண்
- ஆதார்
- பான் (PAN)
UAN உள்நுழைவு வலைதளம் தொடர்பாக சந்தேகங்கள்
யுஏஎன் லாகின் வலைதளம் தொடர்பான சந்தேகங்களுக்கு நீங்கள் தொடர்புகொள்ள:
யுஏஎன் ஹெல்ப்டெஸ்க் எண் : 18001-18005
யுஏஎன் ஹெல்ப்டெஸ்க் இ–மெயில் ஐடி : uanepf@epfindia.gov.in
யுஏஎன் லாகின்: சமீபத்திய செய்திகள்
ஈபிஎஃப்ஓ சந்தாதாரர்கள் இனி அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்யலாம்
ஊழியர் ஓய்வூதிய திட்டத்தின் (EPS) கீழ் ஈபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாதம்தோறும் ஓய்வூதியத்திற்காக உண்மையான அடிப்படை சம்பளத்தில் 8.33%-க்கு சமமான தொகையை நிறுவனங்கள் கழிக்கும் நிலையில், ஒரு மாதத்துக்கு ரூ.15,000 என்ற வரம்புக்கு உட்பட்ட ஓய்வூதிய சம்பளத்தை தாண்டிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான டெபாசிட், பென்ஷன் கணக்கீடு முதலான விவரங்களை விரைவில் ஈபிஎஃப்ஓ அலுவலகம் சுற்றறிக்கையாக வெளியிடும்.
2021-22 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டி வழங்கப்படவில்லை
கடந்த ஜூன் 2022-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டபோதிலும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டி இன்னும் வரவு வைக்கப்படாதது குறித்து ஈபிஎஃப்ஓ அறங்காவலர்கள் கவலை எழுப்பியுள்ளனர். 2021-22 நிதியாண்டில் பிஎஃப் மீது 8.1% வட்டி வழங்க ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அறங்காவலர்களின் மத்திய வாரியம் மார்ச் 2022-ல் ஒப்புதல் அளித்திருந்தது. இது கடந்த 40 ஆண்டுகளில் மிகவும் குறைந்த வட்டி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர் ஓயூவூதியம் – ரூ.15,000 உச்சவரம்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
நவம்பர் 4, 2022: ஊழியர் ஓய்வூதிய (திருத்த) திட்டம்-2014-இன் செல்லுபடித் தன்மையை நவம்பர் 4, 2022 அன்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஆயினும், ஓய்வூதிய நிதியில் சேருவதற்கான மாத ஊதியம் ரூ.15,000 என்ற உச்சவரம்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தில் ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பள உச்சவரம்பாக (அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி சேர்ந்து) மாதச் சம்பளம் ரூ.15,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சட்டத் திருத்தத்திற்கு முன்னர் ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பள உச்ச வரம்பாக மாதச் சம்பளம் ரூ.6,500 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மேலும், மாதம் ரூ.15,000-க்கும் அதிகமாக சம்பளம் பெறும் ஊழியர்கள் ஓய்வூதிய நிதியில் 1.16% கூடுதல் பங்களிப்பை செலுத்த வேண்டும் என்ற 2014-ஆம் ஆண்டின் திட்டத்தில் இடப்பட்ட நிபந்தனை செல்லாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு டிசம்பர் 29, 2022 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
யுஏஎன் – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
நான் இரண்டு யுஏஎன் எண்கள் வைத்திருக்க முடியுமா?
ஓர் ஊழியர் ஒரே ஒரு யுஏஎன் மட்டுமே வைத்திருக்க முடியும். அதேநேரத்தில், அவர் பல்வேறு பிஎஃப் ஐடிக்களை வைத்திருக்கலாம்.
யுஏஎன் எண்ணை ஒதுக்கிடு செய்வது யார்?
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) தான் ஊழியர்களுக்கு யுஏஎன் எண்கள் அனைத்தையும் ஒதுக்கீடு செய்கிறது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு அளித்துள்ளது.
ஆன்லைன் க்ளைம்களுக்கு யுஏஎன் கட்டாயமா?
ஆம், ஆன்லைன் க்ளைம்களுக்கு யுஏஎன் கட்டாயம்தான்.
பிஎஃப் எண் ஐடிக்கும், யுஏஎன் எண்ணுக்கும் இடையிலான வேறுபாடு என்ன?
ஒரு மெம்பர் ஐடி அல்லது பிஎஃப் நம்பர் என்பது ஒரு நிறுவனத்தால் ஓர் ஊழியருக்கு வழங்கப்படுகிறது. இந்த மெம்பர் ஐடி ஆல்ஃபநியூமரிக் குறியீட்டில் இருக்கும். யுஏஎன் என்பதை எடுத்துக்கொண்டால், அது ஒவ்வொரு ஊழியருக்குமே தனித்துவமான எண்ணாக இருக்கும். ஓர் உறுப்பினர் பல்வேறு உறுப்பினர் ஐடிக்களை வைத்திருக்கலாம்; ஆனால், ஒரே ஒரு யுஏஎன் எண்ணை மட்டுமே அவர்கள் வைத்திருக்க முடியும்.
யுஏஎன் என்பது ஊழியரின் பான் எண்ணும் இணைத்திருக்கப்பட வேண்டுமா?
ஆம், ஊழியரின் பான் எண்ணுடன் யுஏஎன் இணைத்திருக்க வேண்டும்.
என் யுஏஎன் எண்ணை நான் எப்படி கண்டறிவது?
உங்களது யுஏஎன் எண்ணை கண்டறிய epfindia.gov.in/memberinterface என்ற தளத்தின் பக்கத்தை நாடலாம். 'Know your UAN Status' என்ற ஆப்ஷனுக்குச் சென்று ட்ராப் டவுன் மெனு மூலம் உங்கள் மாநிலம், ஈபிஎஃப்ஓ அலுவலகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுடைய பிஎஃப் எண்/உறுப்பினர் ஐடி, உங்கள் பெயர், பிறந்த தேதி, தொலைபேசி எண்கள் ஆகியவற்றுடன் கேப்ச்சாவை டைப் செய்து தொடரலாம்.
யுஏஎன் எண்ணும், பிஎஃப் எண்ணும் ஒன்றா?
இல்லை, யுஏஎன் என்பது ஒரு ஈபிஎஃப்ஓ உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் ஒரு யுனிவர்சல் ஐடி ஆகும். அதேநேரத்தில், அவர் பல பிஎஃப் ஐடிக்களை வைத்திருக்க முடியும். யுஏஎன் என்பது 12 இலக்க தனித்துவ எண்ணாகும். பிஎஃப் கணக்கு எண் என்பது 22 இலக்க தனித்துவ எண்ணாகும்.
யுஏஎன் எண்ணுக்கு உதாரணம் என்ன?
யுஏஎன் எண்ணுக்கான சில உதாரணங்கள் இதோ: 100904319456; 100985112956; 100920263757; 100896312605; 100296386154; 100419534363
யுஏஎன் எண்ணும், ஆதார் எண்ணும் ஒன்றா?
இல்லை, உங்கள் யுஏஎன் என்பது ஈபிஎஃப்ஓ சார்ந்த செயல்பாடுக்கான யுனிவர்சல் ஐடி ஆகும். உங்களது ஆதார் என்பது உங்களது பயோ-மெட்ரிக் ஐடி ஆகும்.
பணி மாற்றம் ஏற்பட்டால் பிஎஃப் பணம் என்னவாகும்?
ஒன்று, புதிய வருங்கால வைப்பு நிதி கணக்கைத் தொடங்கலாம் அல்லது புதிய பணியிட உரிமையாளரிடம் ஏற்கெனவே இருக்கும் வருங்கால வைப்பு நிதிக் கணக்கை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோரலாம்.
பி.எஃப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு யுஏஎன் லாகின் தேவையா?
உங்கள் யுஏஎன் லாகினை பயன்படுத்தி பிஎஃப் பரிமாற்றம் மற்றும் வரவேண்டிய தொகைக்கான உரிமைக் கோரல்கள் உட்பட உங்கள் அனைத்து பிஎஃப் தகவல்களையும் ஆன்லைனில் உள்நுழைந்து பெற முடியும். யுஏஎன் லாகின் இல்லாமல் பி.எஃப். பணம் திரும்பப் பெறும் நடைமுறை சாத்தியமில்லை.