தென்னிந்தியாவில் பெண்களுக்கான முக்கியமான பண்டிகைகளில் ஒன்று வரமஹாலக்ஷ்மி பூஜை. கிரிகோரியன் நாட்காட்டியின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுடன் ஒத்துப்போகும் இந்து மாதமான ஷ்ரவணாவின் பூர்ணிமாவுக்கு முந்தைய ஒரு வெள்ளிக்கிழமை அன்று இந்தப் பண்டிகை வருகிறது. திருமணமான பெண்கள் தங்கள் கணவர்களின் நல்வாழ்வுக்காக மகாலட்சுமி தேவியை வணங்கி பிரார்த்தனை செய்யும் இந்த நாளில் வரலக்ஷ்மி விரதம் அல்லது லக்ஷ்மி தேவிக்கான சபதம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த சீசனில் உங்கள் வீட்டை மிக நேர்த்தியாக அழகாக அலங்கரிப்பதன் மூலம் மகாலட்சுமி தேவியை உங்கள் வீட்டிற்கு அழையுங்கள். வீடுகளில் வரமஹாலக்ஷ்மி அலங்கார ஆலோசனைகள் மற்றும் வரலக்ஷ்மி பூஜை பற்றிய இந்த குறிப்புகளைப் பாருங்கள்.
வரமஹாலக்ஷ்மி பூஜை அலங்காரம்
வரமஹாலக்ஷ்மியை வழிபடுவது தேவியின் எட்டு அவதாரங்களான அஷ்டலட்சுமிகளையும் வழிபடுவதற்கு சமமாக கருதப்படுகிறது. செல்வம், பூமி, ஞானம், அன்பு, புகழ், அமைதி, மனநிறைவு மற்றும் வலிமை ஆகியவற்றின் தெய்வீக குணங்களை வெளிப்படுத்தும் லக்ஷ்மியின் எட்டு வடிவங்கள்தான் அஷ்டலக்ஷ்மி .
வரமஹாலக்ஷ்மி பண்டிகை அலங்காரங்களுக்கான ஆலோசனைகளுடன் படைப்பாற்றலை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டை பூஜைக்காக அழகுபடுத்த சில அலங்கார அமைப்பு ஆலோசனைகளை உங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.
வீட்டின் நுழைவாயில்
வரமஹாலக்ஷ்மி பூஜைக்காக உங்கள் வீட்டின் நுழைவாயில் மற்றும் நுழைவாயில் பகுதியை அலங்கரித்து அழகுபடுத்துங்கள். . இந்திய பண்டிகைகளில் ஒரு பாரம்பரிய அலங்காரங்களுக்கு மலர்கள் ஒரு உன்னதமான விருப்பதிதேர்வாக விளங்குகிறது. கதவுச் சட்டங்கள், படிக்கட்டுகள் மற்றும் நடைகூடச் சுவர்களில் சாமந்தி மலர் மாலைகளைத் தொங்க விடுங்கள். மலர் ரங்கோலிகளுடன் தரை மேற்பரப்புக்களுக்கு கவர்ச்சிகரமான ஈர்க்கும் தோற்றத்தைக் கொடுங்கள் மற்றும் விளக்குகள் அல்லது பாரம்பரிய தீபங்களை ஏற்றி அந்தப் பகுதியை மகிழ்ச்சியாகவும் பிரகாசமாகவும் ஒளிரச்செய்யுங்கள் .
மூலம்: Pinterest
வாழும் அறை
பண்டிகை காலங்களில் வீட்டை அலங்கரிப்பதை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ள வாழும் அறை உங்களுக்கு பலவகையில் போதுமான அளவு ஆலோசனைகளை வழங்கக்கூடிய ஒரு பகுதியாகும். மூலைபகுதிகளைத் தேர்ந்தெடுத்து, குறிப்பிட்ட கருப்பொருள்கள் மற்றும் கூறுகளைப் பயன்படுத்தி அவற்றை மாற்றியமைக்கவும். முதலில்காபி மேஜையில் தொடங்குங்கள். பாரம்பரிய இனிப்புகள் மற்றும் தீபங்கள் அடங்கிய ஒரு ஒரு பூஜை தட்டை வைக்கவும். சோஃபாக்கள் மற்றும் பிற இருக்கை பகுதிகளுக்கு ஒரு மாறுபட்ட நூதன வடிவத்தைக் கொடுங்கள். தலையணை உறைகள் , சோஃபாக்கள் மற்றும் சாப்பாட்டு அறை நாற்காலிகள் உள்ளிட்ட வீட்டுத் தளவாடங்களுக்கு எழில் மிகு தோற்றமளிக்கும் அலங்காரமான நவநாகரீக பண்டிகை கொண்டாட்ட துணிவகைகளைத் தேர்ந்தெடுங்கள்.
மூலம்: Pinterest
Wall decoration for Varamahalakshmi puja
வரமஹாலக்ஷ்மி பூஜைக்கான சுவர் அலங்காரம்
பண்டிகைக் காலத்தில் மங்கிய சுவர்களுக்கு புதிய பளிச்சென்ற தோற்றத்தை அளிக்க அலங்காரங்களை மேற்கொள்ள நீங்களாகவே (DIY do it yourself) முயற்சிகளை மேற்கொள்ளவும். காகிதத்தாலான தியாக்களின் வரிசையை உருவாக்கி, அவற்றை வாழும் அறை சுவர் அலங்காரமாகத் தொங்க விடுங்கள். ஒட்டுமொத்த சூழமைப்பையும் மேம்படுத்தும் விதமாக வண்ண விளக்குகளை தேர்ந்தெடுங்கள். அலங்காரங்களை பூர்த்தி ஸிய்ய தேவதை விளக்குகளோடு பாரம்பரிய தீபங்களையும் காட்சிப்படுத்தவும் மற்றும். எண்ணெய் விளக்குகளுக்குப் பதிலாக மின் விளக்குகளையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். பண்டிகை அலங்காரத்திற்கு மாறுபட்ட நவீன தோற்றத்தை அளிக்க, வாழும் அறைகளின் சுவர்களில் கேன்வாஸ் ஓவியங்களைத் தொங்கவிடுங்கள்.
மூலம்: Pinterest
இந்த அற்புதமான திவா அலங்கார ஆலோசனைகளையும் காணுங்கள்
வரமஹாலக்ஷ்மி பூஜைக்கான கோவில் அலங்காரம்
லக்ஷ்மி தேவி தாமரை மலரில் அமர்ந்து செல்வத்தையும் ஆசிகளையும் பக்தர்களுக்கு வழங்குவது போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வரலக்ஷ்மி பூஜையில் வரம் என்பது நற்பேறுகளையும் , லக்ஷ்மி என்பது செல்வத்தையும் குறிக்கும், லட்சுமி தேவியின் உருவச் சிலை ஒரு மரப் பலகையில் அரிசி, தேங்காய், உலர்ந்த பழங்கள் மற்றும் பிற பொருட்களால் நிரப்பப்பட்ட கலசத்துடன் வைக்கப்படுகிறது.
பூஜைக்கு முந்தைய நாளில் பூஜை மண்டபம் மலர்கள் மற்றும் ஒரு வாழை மரத்த்தைக் கொண்டு அலங்கரிக்கப்படுகிறது. அரிசி மாவைப் பயன்படுத்தி ரங்கோலி வடிவமைப்புகள் அல்லது மாகோலங்கள் வரையப்படுகின்றன.
- பூஜை அறையின் அறையின் கிழக்கு மூலையில் ஒரு மரப்பலகையை வையுங்கள்.
- பலகை மீது அல்லது ஒரு தட்டில் வாழை இலையை வைக்கவும். கொஞ்சம் பச்சை அரிசி சேர்க்கவும்.
- இப்போது, கலசத்தை வைத்து மஞ்சள் மற்றும் குங்குமம் சேர்க்கவும்.
- நாணயங்கள், கருப்பு மணிகள், வெற்றிலைகள், வெற்றிலை பாக்குகள், எலுமிச்சை மற்றும் மா இலைகள் போன்ற பொருட்களை அரிசியோடு சேர்த்து கலசத்திற்குள் வைக்கவும்.
- கலசத்தின் மீது தேங்காயை வைத்து மஞ்சள் பூசவும்.
- வரலக்ஷ்மி அம்மன் சிலையை தேங்காய் மீது வைத்துக் கட்டி, சிவப்பு அல்லது மெரூன் நிற துணி மற்றும் நகைகளால் அம்மனை அலங்கரிக்கவும்.
- இப்போது, ஆரத்தி எடுத்து , அம்மனுக்கு பழங்கள் மற்றும் பிற பொருட்களை காணிக்கையாக்குங்கள்
மூலம்: Pinterest
வீட்டில் பூஜை கோவில்களுக்கான இந்த எளிய அமைப்புக்கள் குறித்து மேலும் வாசிக்க :
இந்த பூஜை நிகழ்ச்சிகளுக்கு ஆக்கச்சிந்தனையுடன் கூடிய விளக்குக் கம்பங்களைத் தேர்ந்தேடுங்கள். கருப்பொருளாக மயில் வடிவத்தைக் கொண்ட கம்பம் பூஜை நிகழ்விடத்தை கண்கவரும் வகையில் ஒளிரச்செய்யும். .
மூலம்: Pinterest
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
வரமஹாலக்ஷ்மிக்கு கலசத்தில் என்னென்ன வைப்பீர்கள்?
வரமஹாலக்ஷ்மி பூஜை கலசத்தை முழு தேங்காய், பச்சை அரிசி மற்றும் மஞ்சள் கொண்டு நிரப்பவும். இதில் அரிசி செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. உலர் பழங்கள், வெற்றிலை பாக்குகள், வெற்றிலைகள், நாணயங்கள் மற்றும் பேரீச்சம்பழங்கள் போன்ற பிரசாதங்களையும் கலசத்தில் சேருங்கள். தேவிக்கு வளையல்கள் மற்றும் சீப்புகள் போன்ற பெண்கள் பயன்படுத்தும் பொருட்களையும் காணிக்கையாக வழங்கலாம்.
வரலட்சுமி சிலை எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும்?
பூஜை நடக்கும் ஆலயத்தின் வடகிழக்கு மூலையில், கிழ மேற்கு திசையை நோக்கி வரலட்சுமி தேவி சிலையை வைக்கவேண்டும்.