எஸ்பிஐ தனிநபர் கடன்கள் பற்றிய முழு விவரம்

எஸ்பிஐ தனிநபர் கடன்கள் பெறுவதற்கு நீங்க தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.

திருமணம், விடுமுறை, கல்லூரிக்கு கட்டணம் செலுத்துதல், எதிர்பாராத மருத்துவச் செலவுகள் மற்றும் வேறு ஏதேனும் எதிர்பாராத நிதி தேவைகள் இருந்தால், உங்களுக்கு உதவுவதற்காகத்தான் தனிநபர் கடன்கள் (Personal loans) வழங்கும் வசதி உள்ளன. இன்றைய காலகட்டத்தில், தனிநபர் கடன் சந்தை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் தனிப் பயனாக்கப்பட்டதாகவும் மாறியுள்ளது. பொதுவாக, பாதுகாப்பான கடனுக்கான வட்டியை விட தனிநபர் கடனுக்கான வட்டி அதிகமாக இருக்கும். இந்த வழிகாட்டி, இந்தியாவின் மிகப் பெரிய பொதுக் கடன் வழங்குநரில் மிகவும் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்றான எஸ்பிஐ தனிநபர் கடன் பற்றிய அனைத்து அம்சங்களையும் புரிந்துகொள்ள வழிகாட்டுகின்றது.

 

எஸ்பிஐ தனிநபர் கடன் சிறப்பு அம்சங்கள்

எஸ்பிஐ (SBI) வங்கியில் பல்வேறு வகையான தனிநபர் கடன்கள் உள்ளன. இந்தக் கடன்களுக்கு நீங்கள் சிக்கலற்ற முறையில் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். இது ஒவ்வொருவரின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப கடன்களை வழங்குகின்றது. எந்தவொரு அவசர தேவைகளுக்கும் அவை சிறப்பு உடனடி கடன்களை வழங்குகின்றன. எஸ்பிஐ கடன்களின் சில அடிப்படை அம்சங்கள் கீழ்வருமாறு:

கடன் தொகை

எஸ்பிஐ உங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000 முதல் ரூ.20 லட்சம் வரை அல்லது உங்கள் வரிக்குப் பிந்தைய நிகர மாதாந்திர வருமானத்தில் (post-tax net monthly income) 24 மடங்கு, இவற்றில் எது குறைவோ அந்தத் தொகையை கடனாக வழங்குகிறது. எஸ்பிஐ ஓவர் டிராஃப்ட் கடன்கள் உங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5,00,000 முதல் ரூ.20 லட்சம் வரை அல்லது உங்கள் என்.எம்.ஐ-யின் 24 மடங்கு, இவற்றில் எது குறைவோ அந்தத் தொகையினை கடனாக வழங்குகிறது.

திருப்பிச் செலுத்தும் காலம்

எஸ்பிஐ வங்கியில் இருந்து உடனடி தனிநபர் கடனை திருப்பிச் செலுத்த உங்களுக்கு 72 மாதங்கள் அல்லது 6 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.

வட்டி விகிதங்கள்

எஸ்பிஐ தனிநபர் கடன்கள் குறைந்தபட்ச வட்டி விகிதமான 8.60% முதல் ஆண்டுக்கு 15.65% வரை மாறுபடும். இது கடன் வகை, கடன் வாங்குபவரின் வருமானம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் போன்ற சில விஷயங்களைப் பொறுத்தது.

அனைவருக்கும் தனிநபர் கடன்கள்

ஒவ்வொருவருக்கும் அவர்களின் தொழில் மற்றும் கடன் தாங்கும் திறனைப் பொறுத்து மாறுபடும். பல திட்டங்களை வங்கியே உறுதி செய்கிறது. பலதரப்பட்ட நபர்கள் கடன் வாங்குகின்றனர். அவரவர்களின் நிதி தேவைகளைப் பூர்த்தி செய்ய, எஸ்பிஐ பலவிதமான கடன்களை வழங்குகிறது. உதாரணமாக, அரசு ஊழியர்களுக்கு தனிநபர் கடன் உள்ளது.

 

எஸ்பிஐ தனிநபர் கடன் வகைகள்

எஸ்பிஐ கவச் தனிநபர் கடன்

உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் கோவிட்-19 சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் வரை கவச் பர்சனல் லோன் (SBI Kavach Personal Loan) என்ற பெயரில் எஸ்பிஐ தனிநபர் கடனிலிருந்து உடனடி கடனைப் பெறலாம். இந்தக் கடன் திட்டத்தின் மூலம், எஸ்பிஐ அதன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கோவிட்-19 தொற்றுநோய்களின்போது உடனடி நிதி உதவிகளை வழங்குகிறது.

இதில் 3 மாத தடைக்காலமும் அடங்கும். கொரோனா மருத்துவ அறிக்கை 30 நாட்களுக்கும் பழையதாக இருக்கக் கூடாது. கூடுதலாக, நீங்கள் முன்னர் செலுத்திய கோவிட்-19 சிகிச்சை செலவுடன் தொடர்புடைய எந்தவொரு மருத்துவ செலவுகளையும் திரும்பப் பெற உங்களுக்கு உரிமை உண்டு. இந்த எஸ்பிஐ கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு வெறும் 8.50 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. இந்தக் கடன் 5 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தப்படலாம். இந்தக் கடன், வங்கியின் சம்பளக் கணக்கு உள்ளவர்கள் அல்லது சம்பளக் கணக்கு இல்லாத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

எஸ்பிஐ எக்ஸ்பிரஸ் கிரெடிட்

எஸ்பிஐ எக்ஸ்பிரஸ் கிரெடிட் (SBI Xpress Credit) திட்டத்தின் கீழ் நீங்கள் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் பெறுபவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மத்திய அல்லது மாநில அரசுகள், மத்திய மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள், தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், அரசு சார்புடை நிறுவனம் அல்லது எஸ்பிஐ உடன் மட்டுமே தொடர்புடைய வேறு எந்த கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியம் ஊழியர்களாக இருக்க வேண்டும். இந்த கடனுக்கான செயலாக்க கட்டணம் கடன் தொகையில் 1.50% ஆகும். இது ரூ.1,000 + ஜிஎஸ்டி கட்டணத்துக்குக் குறைவாக இல்லாமலும், மேலும் ரூ.15,000 + ஜிஎஸ்டிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

அவர்களின் ஈஎம்ஐ / என்எம்ஐ விகிதம் 50%-க்கு மேல் இருக்கக் கூடாது. இந்த எஸ்பிஐ தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் எப்போதும் 10.60% முதல் 13.85% வரை இருக்கும்.

நிறுவனங்கள் குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு உட்பட்டவை. மேலும், இந்நிறுவனங்கள் எஸ்பிஐ-யுடன் வர்த்தக உறவு கொண்டிருத்தல் கூடாது. மேலும் எந்த ஒரு குடியேற்ற சரிபார்ப்புத் தேவைகளும் இருத்தல் கூடாது.

YONO-வில் முன் ஒப்புதல் பெறப்பட்ட தனிநபர் கடன்கள் (PAPL)

எஸ்பிஐ-யில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வசதிக்கேற்ப சிரமமின்றி 24/7 என்ற அடிப்படையில் முன் ஒப்புதல் பெறப்பட்டதனிநபர் கடன்கள் (Pre-approved Personal Loans) பெற முடியும். இதற்காகத்தான் YONO app என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் கடனை சுலபமாகப் பெற முடியும். தற்போது, இந்தக் கடன் ஏற்கெனவே நிறுவப்பட்ட எஸ்பிஐ அளவுகோல்களின் அடிப்படையில் முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட நுகர்வோர் குழுவுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

எஸ்பிஐ தனிநபர் கடன் கால்குலேட்டரைப் பயன்படுத்தி கடன் வட்டி மற்றும் மொத்த திருப்பிச் செலுத்தும் தொகையை எளிதாகக் கணக்கிடலாம். இதன்மூலம் உங்களுக்கு ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் எஸ்பிஐ கடனை பெற்றுத் தரும். நீங்கள் யோனோ செயலி மூலம் விண்ணப்பித்தால், முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடனுக்கு எஸ்பிஐ மிகக் குறைந்த செயலாக்கக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்கிறது. இது மட்டுமல்லாமல், இந்த முன் அங்கீகரிக்கப்பட்ட கடனின் வட்டி ஆண்டுக்கு 9.60% முதல் 12.60% வரை வேறுபடுகிறது.

இந்த வகை செயலி மூலமான எஸ்பிஐ கடன்களை உடனடியாக ப்ராசஸிங் செய்து வழங்க முடியும். இந்தக் கடன்களுக்கு கடன் பெறுவோர் வங்கிக் கிளைக்கு வருகை தர வேண்டிய தேவையில்லை அல்லது ஆவணங்களின் சாஃப்ட் நகல்களே போதும். ஹார்டு காப்பி எதுவும் தேவையில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கடன் கிடைப்பதால், “PALP” என 5676767 என்ற நம்பருக்கு டெக்ஸ்ட் செய்வதன் மூலம் தகுதி நிலையைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

எஸ்பிஐ துரித தனிநபர் கடன்

எஸ்பிஐ துரித தனிநபர் கடன் (SBI Quick Personal Loan) என்பதை எஸ்.பி.ஐ.யில் சம்பளக் கணக்கை பராமரிக்காத சம்பளதாரர்கள் மட்டுமே இந்த எஸ்பிஐ கடனைப் பெற முடியும். இந்தக் கடனின் திருப்பிச் செலுத்தும் அதிகபட்ச காலம் 72 மாதங்களாகும். எஸ்பிஐ தனிநபர் கடன் கால்குலேட்டர் திருப்பிச் செலுத்தும் காலம் முடிவதற்குள் செலுத்த வேண்டிய தொகையைக் கணக்கிட உதவுகிறது.

இந்தக் கடனின் செயலாக்க கட்டணம் (processing fee) கடன் தொகையில் 1.50% ஆகும். இது ரூ.1,000 + ஜிஎஸ்டி கட்டணம் ஆகியவற்றின் கூட்டுத் தொகைக்கு மிகாமலும் மற்றும் ரூ.15,000 + ஜிஎஸ்டி கட்டணம் என்ற தொகைக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வருடாந்திர வட்டி விகிதம் 10.85% முதல் 12.85% வரை இருக்கும். விண்ணப்பதாரர் ஈஎம்ஐ / என்எம்ஐ விகிதம் 50%-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 21 முதல் 58 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், அவர்களின் குறைந்தபட்ச மாத வருமானம் குறைந்தது ரூ.15,000 ஆக இருக்க வேண்டும்.

எஸ்பிஐ ஓய்வூதியக் கடன்

எஸ்பிஐ ஓய்வூதியக் கடன் (SBI Pension Loan) என்பது ராணுவ வீரர்கள், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கடன் ஆகும். 76 வயதிற்குட்பட்ட ஓய்வூதியதாரர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். அரசு கருவூலங்களால் சலுகைகள் வழங்கப்படும் ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வூதியத் தொகையை குறிப்பிட்ட வங்கிக் கிளைக்கு அனுப்ப கருவூலத்திற்கு ஓய்வூதியதாரர் அதிகாரம் அளிக்க வேண்டும்.

இந்த வகை எஸ்பிஐ தனிநபர் கடன்களின் வட்டி விகிதம் 9.75-10.25% வரை இருக்கும். எஸ்பிஐ அங்கீகரிக்கும் கடன் தொகை என்பது நபரின் வயது, ஓய்வூதிய வருமானம், திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் வேறு சில காரணிகளின் அடிப்படையில் இருக்கும்.

ராணுவ வீரர்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு திருப்பிச் செலுத்தும் காலம் அதிகபட்சம் 84 மாதங்களாகவும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 60 மாதங்களாகவும் உள்ளது. ராணுவ வீரர்கள், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் ரூ.14 லட்சத்துக்கு மிகாமலும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ரூ.5 லட்சத்துக்கு மிகாமலும் கடன் பெறலாம்.

 

எஸ்பிஐ தனிநபர் கடன் செயலாக்க கட்டணங்கள்

எஸ்பிஐ எக்ஸ்பிரஸ் கிரெடிட்: ப்ரீபெய்ட் தொகையில் 3% முன்செலுத்தல் கட்டணம் மற்றும் மாதத்திற்கு 2% அபராத வட்டி வசூலிக்கப்படுகிறது.

எஸ்பிஐ துரித தனிநபர் கடன்: ப்ரீபெய்ட் தொகைக்கு 3% முன்செலுத்தல் கட்டணம் மற்றும் மாதத்திற்கு 2% அபராத வட்டி வசூலிக்கப்படுகிறது.

எஸ்பிஐ கவச் கடன்: செயலாக்க கட்டணம் 0 முன்செலுத்தல் அபராதம் மற்றும் முன் முடிப்புக் கட்டணங்கள் கிடையாது.

எஸ்பிஐ ஓய்வூதிய கடன்: ப்ரீபெய்ட் தொகையில் 3% முன்செலுத்தல் கட்டணம், முன்முடிப்புக் கட்டணம் இல்லை, இஎம்ஐ / என்பிஐ விகிதம் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 33% வரை மற்றும் பிற ஓய்வூதியதாரர்களுக்கு 50% வரை இருக்க வேண்டும்.

 

எஸ்பிஐ தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  1. எஸ்பிஐ – கடன்கள், கணக்குகள், அட்டைகள், முதலீடு, வைப்புகள், நெட் பேங்கிங் – தனிநபர் வங்கி வலைதளம் செல்லுங்கள்.
  2. உங்கள் கர்சரை “Loan” என்ற டேபில் கொண்டு வாருங்கள், அப்போது டிராப் டவுன் மெனு ஒன்று காணக்கிடைக்கும்
  3. மெனுவிலிருந்து “Personal Loans” என்பதைக் க்ளிக் செய்க.
  4. க்ளிக் செய்தால் கிடைக்கக்கூடிய அனைத்து கடன்களின் பட்டியல் காணக் கிடைக்கிறது. உங்கள் தேவைகளுக்கு ஏற்ற உங்கள் அனைத்து தகுதிகளுக்கும் பொருந்தக்கூடிய கடனை சரிபார்த்து தேர்வு செய்யவும்.
  5. “Apply now” என்பதைக் க்ளிக் செய்க. ஒரு புதிய வலைப்பக்கம் திறக்கும்.
  6. அது கேட்கும் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் பிரதியை கணினிப் பிரதியை வழங்கவும்.
  7. “Submit” என்பதை க்ளிக் செய்க.
  8. அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை வங்கியின் பிரதிநிதி உங்களுக்கு விளக்குவார்.

யோனோ செயலி (YONO app) பயன்பாட்டில் இருந்து முன்கூட்டியே ஒப்புதல் வழங்கப்பட்ட எஸ்பிஐ கடனுக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள அடுத்தடுத்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  1. உங்கள் செல்பேசியில் YONO app-க்குள் லாகின் செய்க.
  2. உங்கள் கணக்கில் “Pre-Approved personal loan” ஆப்ஷனை கண்டறியுங்கள்.
  3. கடன் தொகை மற்றும் திருப்பிச் செலுத்தும் காலத்தை உள்ளிடவும்.
  4. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு விரைவில் ஓடிபி வரும். ஓடிபி எண்ணை உள்ளிடவும்.
  5. “Submit” என்பதை க்ளிக் செய்க.
  6. கடன் தொகை உடனடியாக உங்கள் கணக்கில் செலுத்தப்படும்.

 

யோனோ செயலி தனிநபர் கடனுக்கான தகுதி

யோனோ செயலி மூலமாக எஸ்பிஐ பர்சனல் லோன் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மிகவும் எளிதானவை. கீழ்கண்ட வழிகளில் நீங்கள் பின்பற்றலாம்:

  1. சிஎஸ்பி (கஸ்டமர் சர்வீஸ் பாயின்ட் – CSP – Customer Service Points) வாடிக்கையாளர்கள் மற்றும் சிஎஸ்பி அல்லாதோர் (non-CSP) இந்த கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  2. எஸ்பிஐ பர்சனல் லோன்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.
  3. எஸ்பிஐ கடனுக்கான முன் ஒப்புதலுக்குரிய தகுதி உள்ளதா என்பதை அறிய எஸ்பிஐ சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் “PAPL####” என்று 567676 என்ற நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். (“####” என்பது உங்களது சேமிப்புக் கணக்கு எண்களின் கடைசி நான்கு டிஜிட் நம்பர் ஆகும்.)

 

எஸ்பிஐ தனிநபர் கடன் ஆவணங்கள்

உங்கள் கடனுக்கு ஒப்புதல் பெற நீங்கள் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். எவை தேவை என்பதை அறிய கொடுக்கப்பட்ட பட்டியலை சரிபார்க்கவும்:

  1. அடையாளச் சான்று: ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட்
  2. இருப்பிடச் சான்று: சொத்து வரி ரசீது, மின் கட்டணம் அல்லது டெலிபோன் பில் நகல், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை
  3. வருமானச் சான்று: நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் நகல், சம்பளம் வரவு வைக்கப்பட்ட கணக்கின் முந்தைய ஆறு மாதங்களுக்கான வங்கி அறிக்கை, வருமான வரி அறிக்கை (ஐடிஆர்), முந்தைய ஆறு மாதங்களுக்கான சம்பள சீட்டு அல்லது வங்கி அறிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளின் ஐடிஆர் மற்றும் சுயதொழில் செய்பவர்களின் கணக்கு அறிக்கைகள்.

 

எஸ்பிஐ தனிநபர் கடன் விண்ணப்ப நிலையை சரிபார்ப்பது எப்படி?

  1. விண்ணப்ப நிலை அறிய (sbi.co.in) வலைதளம் செல்க.
  2. தனித்துவமான சுட்டு எண்ணை (URN) உள்ளிடவும்
  3. உங்கள் மொபைல் எண் மற்றும் ஐ.எஸ்.டி குறியீட்டை உள்ளிடவும் (இந்தியாவுக்கு 91)
  4. “Track” பட்டனை க்ளிக் செய்க.
  5. விண்ணப்பத்தின் நிலை திரையில் காண்பிக்கப்படும்.

 

எஸ்பிஐ தனிநபர் கடன் மாதாந்திர தவணை கணக்கீடு

  1. கால்குலேட்டர்களைப் பார்வையிடவும் – இந்தியாவில் ஆன்லைனில் பல்வேறு வகையான கடன்களுக்கான உங்கள் இஎம்ஐ கணக்கிட எஸ்பிஐ – பர்சனல் பேங்கிங் வலைதளம் செல்லுங்கள்.
  2. நீங்கள் பயன்படுத்த வேண்டிய கால்குலேட்டரை க்ளிக் செய்க.
  3. கடன் தொகை, வட்டி விகிதம் மற்றும் கடன் காலத்தை அட்ஜஸ்ட் செய்யவும்.
  4. இந்தச் செயல்களின் முடிவுகள் கீழே தெரியும்.

 

இதையும் பார்க்க: உங்கள் எஸ்பிஐ IFSC code அறிக

Was this article useful?
  • ? (3)
  • ? (2)
  • ? (1)

Recent Podcasts

  • மஹாதா சத்ரபதி சம்பாஜிநகர் போர்டு லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல் ஜூலை 16 அன்று
  • மஹிந்திரா ஹேப்பினெஸ்ட் கல்யாண் – 2 இல் 3 டவர்களை மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் அறிமுகப்படுத்துகிறது
  • குர்கானின் செக்டார் 71ல் 5 ஏக்கர் நிலத்தை பிர்லா எஸ்டேட்ஸ் கையகப்படுத்துகிறது
  • குர்கானில் ரூ.269 கோடி மதிப்பிலான 37 திட்டங்களை ஹரியானா முதல்வர் தொடங்கி வைத்தார்
  • ஹைதராபாத்தில் ஜூன்'24ல் 7,104 குடியிருப்பு சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன: அறிக்கை
  • இந்திய அல்லது இத்தாலிய பளிங்கு: எதை தேர்வு செய்ய வேண்டும்?