ஒரு வீட்டின் நுழைவாயில் என்பது பழங்காலத்திலிருந்தே அனைத்து கலாசாரங்களிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. உதாரணமாக, நுழைவு கதவு என்பது அதிர்ஷ்டமும், செல்வ நிலைக்கும் முன்னோடியாக திகழ்கிறது என்று சீன வாஸ்து என்று சொல்லப்படும் ஃபெங் சுய் (Feng shui) குறிப்பிடுகிறது. இதேபோல், வாஸ்து சாஸ்திர முறைப்படி, அது நேர்மறை ஆற்றலின் வாயிலாக உள்ளது. இந்தக் கருத்துகளை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் ஒரு நேர்த்தியான நுழைவாயில் என்பது வீட்டில் குடியிருப்போருக்கு ஒரு நல்ல நேர்மறை மனநிலையை அளிக்கிறது. எனவே, இங்கே பிரதான கதவுக்கான நேர்த்தியான இரட்டைக் கதவு டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை சுற்றத்தார் மத்தியில் உங்களுக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும்.
பிரதான கதவுக்கான லேட்டஸ்ட் இரட்டைக் கதவு டிசைன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதையும் வாசிக்க: பிரதான கதவுக்கான வாஸ்து குறிப்புகள்
மர இரட்டைக் கதவு வாயில் டிசைன்
Source: Pinterest
நாகரிகத்தின் தொடக்கத்தில் இருந்தே கதவுகளை உருவாக்க மரம் என்பது பாரம்பரியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில், அதன் அழகையும் நேர்த்தியையும் வேறு எந்தப் பொருட்களுடனும் ஒப்பிட முடியாது. இந்தப் பாரம்பரிய இரட்டைக் கதவு எளிமையானது. ஆயினும் கலைநயம் மிக்கது. மேலும், பக்கவாட்டு கண்ணாடி பேனல்கள் வழியாக ஒளி கடந்து செல்லும்போது ஒரு நுட்பமான கலைநயம் மிக்க தோற்றத்தை அளிக்கிறது. மரக் கதவுகளை வடிவமைப்பது எளிது என்பதே அவற்றின் முக்கிய சிறப்பு அம்சம். பக்கவாட்டு பேனல்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடி டிசைன்களைக் கூட நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கலாம்.
ஆடம்பர சிற்ப வேலைப்பாடுகளுடன் பிரதான மரக் கதவு டிசைன் இரட்டைக் கதவு
Source: Pinterest
கைகளால் செதுக்கப்படும் டிசைன்களால் கதவுகள் அழகையும் நேர்த்தியையும் ஒருங்கே இணைந்துப் பெறுகின்றன. மரத்தில் மிக நுட்பமாக செதுக்கப்படும் டிசைன்களைக் கொண்ட அந்தக் கதவுகள் காண்பவர்களுக்கு இதமான மனநிலையைத் தருவதுடன், கம்பீரமான தோற்றத்தையும் கொண்டிருக்கும். பாரம்பரியமிக்க இந்திய அரண்மனை கட்டிடக் கலையானது, நவீன கதவு வடிவமைப்புகளுக்கு எப்போதுமே உந்து சக்தியாகத் திகழ்கிறது. மேலும், அவ்விடங்களின் கலாசார வரலாற்றை மரக் கதவுச் சிற்பங்கள் பறைசாற்றுவதாகவும் அமைகின்றன. பழமையான வால்நட் பேனல் (Walnut panel) அல்லது நேர்த்தியான மஹோகனி (Mahogany) மரங்களை கதவுகளுக்குப் பயன்படுத்தலாம். நீங்கள் தேர்வு செய்யும் எந்த வகையான மரமாக இருந்தாலும் அல்லது நிறமானாலும் கைகளால் செதுக்கபடும்போது அதன் வடிவமைப்பு மிகவும் அழகாக இருக்கும். எனினும், நீங்கள் பணத்தை தாராளமாக செலவு செய்யத் தயாராக இருங்கள். ஏனெனில் அத்தகைய ஆடம்பரமான கைவினைத் திறன் செய்யப் பயன்படும் மரங்கள் சிறிது விலை உயர்ந்தவை.
பிரதான கதவுக்கான ஃபைபர் கண்ணாடி இரட்டைக் கதவு டிசைன்
Source: Pinterest
ராஜ அம்சத்துடன் கூடிய குறைந்த பராமரிப்புச் செலவுகள் மற்றும் பட்ஜெடிற்குள் அடங்கக் கூடிய விதமாக, வீட்டிற்கு முன் கதவைத் தேடுகிறீர்கள் என்றால், ஃபைபர் கண்ணாடி (Fibreglass) இரட்டைக் கதவு டிசைன்கள் நிச்சயம் உங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். நன்கு டிசைன் செய்யப்பட்ட ஒரு மரக் கதவு கொடுக்கும் நேர்த்தியையும், இதமான மனநிலையையும் இந்த ஃபைபர் கண்ணாடி இரட்டைக் கதவுகள் தரும் என்பது கவனத்துக்குரிய சிறப்பு அம்சம் ஆகும். ஃபைபர் கண்ணாடி கதவுகளுக்கு வுட் ஃபினிஷ் செய்வதோடு மட்டுமல்லாமல் கவர்ச்சிகரமான நிறங்களிலும் வண்ணம் தீட்டலாம். நல்ல தரமான ஃபைபர் கண்ணாடிக் கதவுகளை மரம் மற்றும் இரும்புக் கதவுகளுடன் ஒப்பிடும்போது, அது ஒரு குறிப்பிடத்தக்க சிறந்த பண்பைக் கொண்டுள்ளது. அவை துருப்பிடிக்காது, கரையான் அரிப்புக்கு உட்படாது. எனவே, உங்கள் வீட்டின் வாசல் கதவு மிகவும் பிரமாண்டமாக சிறப்பாகத் தெரியும்படியும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கதவுகளை அமைப்பதன் மூலம் உங்கள் தனிதன்மையை நிலைநாட்டவும் நீங்கள் இந்த ஃபைபர் கண்ணாடி இரட்டைக் கதவுகளை தேர்வு செய்யலாம்.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரதான கதவு டிசைன்
Source: Pinterest
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless steel) கொண்டு வடிவமைக்கப்பட்ட இரட்டைக் கதவுகள் கொண்ட வீடானது பார்ப்பதற்கு நவீனமானதாகவும், அங்கு குடியிருப்பவர்களுக்கு பாதுகாப்பானதாகவும் இருக்கும். மேலும், நீங்கள் பாதுகாப்பைப் பற்றி மிகவும் யோசித்தால் கதவின் பேக் பேனலுக்கு ஒரு திடமான ஸ்டீலை பயன்படுத்தலாம் அல்லது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடி பேனலைச் சேர்த்து அக்கதவை மேலும் அழகு ஊட்டலாம். மேலே கூறியவற்றில் எதுவாக இருப்பினும் புதுமையான வடிவமைப்புடன் கூடிய இந்தக் கதவு அதிக நாள் நீடிக்கும். ஏனெனில் இது துருப்பிடிக்காது. இந்தப் புதுமையான நவீனமயமான இரட்டைக் கதவு டிசைன்களுக்கு குறைந்த அளவு பராமரிப்பு போதுமானது. எனவே, இந்த நுட்பமானதும் உறுதியானதுமான இரட்டைக் கதவு டிசைன்களை வீட்டில் பொருத்தி உங்களது ரசனைகளை வெளிப்படுத்துங்கள்.
இதையும் கவனிக்க: வீட்டின் முன்வாயில் டிசைன்கள்
வீட்டுக்கான அலுமினிய இரட்டைக் கதவுகள்
Source: Pinterest
மற்றொரு திறன்மிக்க பயனுள்ளதும் உறுதியானதுமான இரட்டைக் கதவுகளை வடிவமைக்க ஏற்ற பொருள்தான் அலுமினியம் (Aluminium). இதில் வடிவமைக்கப்படும் இரட்டைக் கதவுகள் மற்றவர்களை வரவேற்கத்தக்க நேர்த்தியான நுழைவாயிலுக்கு ஏற்றதாகும். மரத்தைப் போன்று பிரதிபலிக்கக் கூடிய வுட் மிமிக்கிங் ஃபினிஷ் கொண்ட இந்தக் கதவுகளுக்கு குறைந்த அளவு பராமரிப்பே போதுமானது. மேலும், இக்கதவுகள் பார்ப்பதற்கு மரக் கதவுகளைப் போன்று அதே அழகும் மிடுக்குடனும் திகழ்கிறது. சிறிய மாற்றங்கள் செய்தால் இவை ஸ்டோர்ம் கதவுகளாகவும் செய்யல்படும். இந்த எளிய மற்றும் அழகான டிசைன் கொண்ட கதவுகள் உங்களின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும்.
இதையும் வாசிக்க: ஒவ்வோர் அறைக்கும் ஏற்ற மரக் கதவு டிசைன்கள்
வீட்டுக்கான இரும்பு இரட்டைக் கதவு டிசைன்
Source: Pinterest
இது மற்றொரு அற்புதமான கதவு டிசைன் ஆகும். இரும்புக் கலவையால் ஆன இந்த இரட்டைக் கதவு டிசைன் முதல் பார்வையிலேயே உங்களைக் கவரும். இரும்பில் வார்த்தெடுக்கப்படும் கதவுகள் முரட்டுத்தனமாகவும், நாகரீகம் அற்றதாகவும் இருக்கும் என யார் கூறினார்கள்? இந்த அழகான இரட்டைக் கதவுகள் கொண்ட பிரதான கதவுகள் மரக்கதவுகளைப் போன்று அதிநவீன தோற்றத்தைக் கொடுக்கிறது. மேலும், இது மிகவும் உறுதியானது மட்டுமின்றி நுணுக்கமான கண்ணாடி வேலைப்பாடுகளையும் கொண்டிருக்கும்.
இதையும் வாசிக்க: உங்கள் வீட்டுக்கான டாப் கிரில் கதவு டிசைன் யோசனைகள்
கண்ணாடியுடன் இரட்டைக் கதவு டிசைன்
வீட்டின் அழகை மேலும் மெருகூட்டி காட்டக் கூடிய கண்ணாடியினால் ஆன இரட்டைக் கதவு டிசைன்கள் (Double Door Design with Glass) அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
Source: Pinterest
இரட்டை வண்ண இரட்டைக் கதவு டிசைன்
உங்கள் வீட்டின் பிரதான கதவை வேறுபடுத்திக் காட்டும் விதமாக இரண்டு வண்ண டோன்கள் கலந்து இந்த விதமான இரட்டைக் கதவுகள் வடிவமைக்கப்படுகின்றன.
Source: Pinterest
மரத்திலான ஆர்ச் வடிவ இரட்டைக் கதவு டிசைன்
மரக்கதவுகளில் வேலைப்பாடு செய்வது மிகவும் எளிதானதும், நல்ல தரமானதும், வலிமையானதும் கூட. உங்கள் வீட்டிற்கென தனி பாணியை நீங்கள் ஏற்படுத்த விரும்பினால், இந்த மரத்தாலான ஆர்ச் வடிவ (Wooden Arched) இரட்டைக் கதவுகள் மிகச் சரியான தேர்வாக இருக்கும்.
Source: Pinterest
கிளாசிக் வெள்ளை நிற இரட்டைக் கதவு டிசைன்
வெள்ளை நிறம் ஒருபோதும் தவறான தேர்வாக இருக்காது. அடிப்படையில் வெள்ளை நிறத்தில் கதவுகள் அமைப்பது பாரம்பரியமானது. மேலும், வெள்ளை நிறக் கதவுகள் வீட்டிற்கு நேர்த்தியான வரவேற்பை அளிக்கும்.
Source: Pinterest
ஸ்லைடிங் இரட்டைக் கதவு டிசைன்
உங்கள் விருந்தினர்களின் வாயில் நீர் ஊறும் வகையான செயலைச் செய்ய வேண்டும் என நீங்கள் யோசிக்கிறீர்களா? ஸ்லைடிங் (Sliding) கதவுகள் நீடித்து நிலைக்கக் கூடியவை. அத்துடன், திறன் மிக்க இன்சுலேட்டர்களாகவும் செயல்படுகின்றது.
Source: Pinterest
குரோம் பூச்சு இரட்டைக் கதவு டிசைன்
குரோம் பூச்சு (Chrome-based) கொண்ட இரட்டைக் கதவு டிசைன்கள், சுவர்களை அழகாக வேறுபடுத்திக் காட்டும்.
Source: Pinterest
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
பிரதான இரட்டைக் கதவுகளை எந்தப் பொருளில் தயாரிப்பது சிறந்தது?
வீட்டு உரிமையாளரின் விருப்ப உணர்வுக்குத் தகுந்ததும், பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும் பார்க்கும்போது மரத்தாலான கதவுகளையே வீட்டின் பிரதான வாயில் கதவாக அமைப்பது சிறந்தது. இருப்பினும், மரக்கதவுகள் விலை உயர்ந்தவையாகவும், அதற்கு அதிக பராமரிப்பும் அவசியமானதாகவும் உள்ளன. எனவே, இதற்கு மாற்றாக உயர்ந்த ரக ஃபைபர் கண்ணாடி மற்றும் இரும்பால் வார்க்கப்பட்ட கதவுகள் சிறந்த தேர்வாக இருக்கின்றன.
வெளிப்புறக் கதவு தயாரிக்கும் பொருள்களில் மிகவும் விலை உயர்ந்தது எது?
அனைத்து வகையான கண்ணாடிகளிலும் தயாரிக்கப்படும் வெளிப்புறக் கதவுகளே மிகவும் விலை உயர்ந்தவை.
மிகவும் உறுதியானதும், ஆற்றல் திறன்மிக்கதுமான வெளிப்புறக் கதவுகள் தயாரிக்க சிறந்த பொருள் எது?
மிகவும் ஆற்றல் திறன் கொண்ட ஃபைபர் கண்ணடியினால் ஆன கதவுகள் வெளிப்புறக் கதவுகளுக்கு ஏற்றது. ஏனெனில், அதன் பாலியுரித்தின் நுரைக் கட்டுமானம் வானிலை மாறுபாடுகளுக்கு ஏற்ப சிறந்த பாதுகாப்பினை அளிக்கிறது.
எனது வீட்டின் பிரதான இரட்டைக் கதவை இறுதி செய்வதற்கு முன் நான் என்னென்ன விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்?
பொருள்களை தேர்வு செய்வதில் இருந்து தொடங்கவும். நீடித்து நிலைக்கக் கூடிய அதேசமயத்தில் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏதுவானதாக இருக்க வேண்டும். அடுத்தது, அது எந்த அளவு திறன் மிக்கது என்பதை பார்க்க வேண்டும். பின்னர், பாதுகாப்பு அம்சத்தை பற்றி யோசிக்க வேண்டும். எதிர்காலத்தில் வெளிப்புறக் கதவுகளை வடிவமைப்பதில் 2020-ஆம் ஆண்டின் இரட்டை கதவு டிசைன்களை ஒப்பிட்டுப் பார்த்து, பாதுகாப்பு அம்சத்தை முக்கியமானதாக கருத்தில் கொண்டு தெரிவு செய்ய வேண்டும். ஏனெனில், அந்த ஆண்டு நமது வாழ்க்கை முறையை முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளது. நீங்கள் கதவை திறப்பதற்கு முன் வெளியே யார் நிற்கிறார்கள் என்பதை பார்த்து, தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கிக் தவிர்த்துக் கொள்ளலாம்.