Building tax: கட்டிட வரி பற்றி நீங்கள் அறிய வேண்டிய முக்கிய அம்சங்கள்

அதிகம் அறியப்படாத கட்டிட வரி பற்றியும், அதனால் உரிமையாளருக்கு ஏற்படும் வெவ்வேறு தாக்கங்கள் குறித்தும் இந்தக் கட்டுரையில் தெளிவாகப் பார்ப்போம்.

ஒரு சொத்தின் உடைமையாளராக அந்தச் சொத்தின் மீது நீங்கள்  செய்யும் செலவுகள் குறித்து அறிந்திருக்க அவசியம் வேண்டும்.  வருமான வரி (Income tax – IT)  சட்டங்களின் கீழ் அந்த சொத்து ஈட்டும் வருமானத்திற்கு நீங்கள் வரி செலுத்தியிருக்கலாம். எனினும், நீங்கள் அந்தச் சொத்தின் மீது ஆண்டுக்கு ஒரு முறை சொத்து வரியும்  செலுத்த வேண்டும். சொத்து வரியைப் பொறுத்தவரையில் நிலம், கட்டிடம் ஆகியவற்றிற்கான வழிமுறைகள் வேறு வேறானவை. இந்தக் கட்டுரையில் கட்டிட வரி பற்றி அதிகம் அறியப்படாத விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

 

 

கட்டிட வரி, சொத்து வரி, வீட்டு வரி அனைத்தும் ஒன்றுதானா?

கட்டிட வரி, சொத்து வரி, வீட்டு வரி ஆகிய மூன்றும் ஒரே மாதிரியான பொருளைக் குறிப்பதாகத் தோன்றினாலும், பயன்பாட்டு  அடிப்படையில் அவை ஒன்றுக்கொன்று வேறுபட்டது. சொத்து வரி என்பது அந்தச் சொத்து ஈட்டும் ஆண்டு வாடகையின் அடிப்படையில் வருடத்திற்கு ஒருமுறை உள்ளாட்சி அமைப்புக்கு சொத்தின் உரிமையாளர் செலுத்தும் வரிக்கான பொதுவானப் பெயராகும். வீட்டு வரி என்பது (இந்தச் சொல் இந்தியாவில் வருமான வரி துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தில், சொத்து வரியின் கீழ் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.) உங்களுடைய சொத்தின் உடமை மற்றும் அந்தச் சொத்தின் மூலம் நீங்கள் ஈட்டும் உத்தேசமான ஆண்டு லாபம் ஆகியவை உங்களுடைய ஆண்டு வருமானத்தில் இருந்து கழித்துக் காட்டப்படும். முதலில் இந்த உத்தேச லாபம் உங்களுடைய மொத்த வருமானத்தில் ஒரு வருமானமாக கணக்கிடப்பட்டு, அதன் பின்னர் உங்களுடைய வருமானத்தின் கழிவுகளுக்கு ஏற்ப மொத்த தொகையும் கழித்துக் கொள்ளப்படும்.

இந்தப் பயன்பாடு இந்தியாவில் பொதுவில் இல்லை என்றாலும், சில நாடுகளில் கட்டிட வரியானது ‘மைலேஜ் வரி’ என்று அழைக்கப்படுகிறது.

இதையும் வாசிக்க: சொத்து வரி வழிகாட்டுதல்: முக்கியத்துவம், கணக்கீடு மற்றும் ஆன்லைன் பேமன்ட்

 

கட்டிட வரி கணக்கிடப்படுவது எப்படி?

பல்வேறு காரணிகளின் அடிப்படையி்ல் நகராட்சி அமைப்புகள் ஒரு கட்டிடத்தின் மதிப்பினைக் கணக்கிடுகின்றன. இதற்காக இந்தியாவில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு வழிமுறைகள் பின்பற்றுகின்றன. அவை:

ஆண்டு வாடகை மதிப்பீட்டு முறை: சென்னை மற்றும் ஹைதரபாத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளில் இந்த முறை நடைமுறையில் உள்ளது.  அதன்படி சொத்தின் மதிப்பைக் கணக்கிட அந்த சொத்து ஈட்டித் தரும் மாதாந்திர வாடகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

முன்னதாக, நீதித் துறை சொத்து வரியின் அடிப்படையைக் கணக்கிடுவதற்கான அந்த மாநிலங்களி்ல் நடைமுறையில் உள்ள  வாடகைக் கட்டுப்பாடுகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நியாயமான வாடகையையே எடுத்துக் கொண்டது. பின்னர், உச்ச நீதிமன்றம் தனது பல்வேறு தீர்ப்புகளில் சொத்து வரி கணக்கீடு செய்வதற்கான அடிப்படை வாடகை குறித்து தெரிவித்திருக்கிறது.

யூனிட் ஏரியா மதிப்பீட்டு முறை: ஒரு குறிப்பிட்ட ஏரியா அல்லது தெரு ஆகியவற்றின் ஒரு சதுர அடியின் அடிப்படையில் கணக்கிடப்படும் யூனிட் அல்லது அதன் விகிதத்தால் பெருக்கப்பட்டு சொத்தின் மதிப்பீடு கணக்கிடப்படுவதால் இந்த முறைக்கு யூனிட் ஏரியா மதிப்பீட்டு அமைப்பு என்று பெயர். அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பாட்னாவில் உள்ள நகராட்சிகளில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த முறையில், கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கும் பில்-டப் பகுதி அல்லது கார்பெட் பகுதி (built-up area or carpet area) அடிப்படையில் ஒரு யூனிட் விலை கணக்கிடப்படுகிறது. யூனிட்களுக்கான மதிப்பு என்பது கட்டிடம் அமைந்திருக்கும் இடத்துக்கான மூன்று விதிமுறைகள் (முதன்மையான பிரதான சாலைகள், பிரதான சாலைகள், இன்ன பிற), கட்டிடத்தின் தன்மை (கான்கிரீட் கூரையுடன் கூடிய வீடு, ஆஸ்பெஸ்டா ஷீட்டினால் ஆன வீடு, இன்ன பிற) மூன்று விதமான பயன்பாடு (வணிகம், தொழில் வகை, வீடு, இன்ன பிற) ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கிறது. இறுதியாக இவைகளின் அடிப்படையில் 27  காம்பினேஷன்கள் உருவாக்கப்படுகின்றன.

பாட்னா நகராட்சி நிர்வாகம்தான் இடம், பயன்பாடு, கட்டப்பட்ட பகுதி, கட்டுமானத்தின் வகை ஆகியவற்றின் அடிப்படையில் உத்தேசமான மதிப்பீட்டிற்கு மாற்றப்பட்ட முதல் நகராட்சி அமைப்பு ஆகும்.

மூலதன மதிப்பு சார்ந்த முறை: இந்த நடைமுறையின் கீழ், சொத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் நில வரி தீர்மானிக்கப்படுகிறது.

இதையும் வாசிக்க: நில மதிப்பை கணக்கிடுவது எப்படி?

 

மாநிலத்திற்கு மாநிலம், நகரத்திற்கு நகரம், பகுதிக்கு பகுதி மாறுபடும் மதிப்பீடு

பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக நகராட்சி அமைப்புகளால் விதிக்கப்படும் இந்த கட்டிட வரியை (சொத்து வரி) கணக்கிட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன. உதாரணாக ஒரு கட்டிடத்தின் மதிப்பைக் கணக்கிட ஹைதராபாத் நகராட்சி நிர்வாகம் பயன்படுத்தும் வழிமுறையை டெல்லி நகராட்சி நிர்வாகங்கள் பயன்படுத்துவதில்லை.

*இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மாநிலப் பட்டியலின் பிரிவு 49, ‘நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் மீதான வரிகளை’ குறிப்பிடுகிறது. இது, நகராட்சி அமைப்புகளுக்கு, அந்தந்த மாநிலச் சட்டங்களின்படி கட்டிட வரி விதிக்க அதிகாரம் அளிக்கிறது.

பெரும்பாலும் நகரப் பகுதியில் உள்ள கட்டிடங்களுக்கு அதிக அளவு கட்டிட வரி செலுத்த வேண்டும். உதாரணமாக, மகாராஷ்டிரா வரிச் சட்டம், 1974, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு வளாகங்களுக்கு வரி விதிக்க அனுமதி வழங்குகிறது. இதன்படி கிரேட்டர் பாம்பேயில் 125 சதுர மீட்டருக்கும், மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் 150 சதுர மீட்டருக்கும் அதிகமாக இருக்கிறது.

 

காலி மனை, கட்டிடங்களுக்கும் வரி

நம் நாட்டில் ஓர் இடம் காலியாக இருந்தாலும் அதற்கும் சொத்து வரி செலுத்த வேண்டும். இந்தியாவில் நீண்ட காலமாக, நிலங்களுக்கு எந்தவிதமான சொத்து வரியும் விதிக்கப்படவில்லை. எனினும், வரி வசூலின் மோசமான நிலையை சரி செய்ய, மற்ற வரிகளை விட நிலம் மற்றும் மனைகளுக்கான வரிகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், அவற்றையும் வரி விதிப்பின் கீழ் கொண்டுவரலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இதன்படி, விவசாய நிலங்களுக்கு மட்டும் தற்போது வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்கள் நகர எல்லைகளில் உள்ள காலி  மனைகளுக்கு வரி விதிக்கத் தொடங்கியுள்ளன.

 

பல்வேறு வகையான கட்டிடங்களுக்கான கட்டிட வரி

கட்டிடங்கள் குடியிருப்பு, வணிக வளாகம், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு வகைகளால் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான வருமானம் ஈட்டும் திறன் கொண்டுள்ளதால், அவற்றிற்கு விதிக்கப்படும் வரிகளும் வேறுபடும். உண்மையில், சொத்துக்கள் 70-80 தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கு வெவ்வேறு வகையான வரிகள் விதிக்கப்படுகின்றன. பொதுவாக, அதிகமான வருமானம் ஈட்டும் திறன் கொண்டுள்ளதால் வணிகக் கட்டிடங்களுக்கான வரி என்பது ஒப்பீ்ட்டளவில் அதிகமாக இருக்கும்.

 

வரி விதிப்பில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள்

மக்கள் நலன் பேணும் அரசாக, இந்தியாவில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், புராதன, வரலாற்று நினைவுச் சின்னங்கள், இறுதிச் சடங்கு நடத்தும் இடங்கள், இலவச பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிலம் மற்றும் கட்டிடங்கள், தொழிற்சங்கங்களின் அலுவலகங்கள், அந்தந்த மாநில அரசு சட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட நகர்ப்புற மேம்பாட்டு அதிகாரிகளுக்கான கட்டிடங்கள், இலவச மருத்துவம், கல்விச் சேவை வழங்கும் நிறுவனங்கள், போரில் கணவரை இழந்தவர்கள், மற்றும் வீர விருது வென்றவர்களின் சொத்துக்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், மத்திய அரசின் சொத்துகள், முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கான விருந்தினர் மாளிகை முதலான்  கட்டிடங்களுக்கு எந்த விதமான வரியும் விதிக்கப்படுவதில்லை. இந்த பரந்த அளவிலான வரி விலக்குகள், இந்தியாவின் மோசமான கட்டிட வரி வசூல் சூழலுக்கு முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

எனவேதான் சில மாநிலங்கள் வரிவிலக்கு பெற்ற சொத்துகளுக்கு சேவைக் கட்டணம் செலுத்துவதை கட்டாயமாக்கியுள்ளன. இதற்கான தனி வரித் தாக்கல் கணக்கை உரிமையாளர் தாக்கல் செய்ய வேண்டும்.

 

கட்டிய வரி விலக்கு பெற விண்ணப்பிப்பது எப்படி?

முதல் முறையாக சொத்து வரியி்ல் இருந்து விலக்கு பெற விரும்புவோர், அதற்கான விண்ணப்பப் படிவத்துடன், உரிய ஆவணங்கள், படிவங்கள், சேவைக் கட்டணங்களுடன் ஆணையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், சொத்தின் உரிமையாளர் வழக்கமான சொத்து வரியைச் செலுத்த வேண்டும்.

 

கட்டிட வரி செலுத்தாவிட்டால் அபராதங்கள்

முதல் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் சொத்து வரி வசூல் மிகவும் மோசமாகவே உள்ளது. குறைந்த வருமானம் என்பது சட்டவிரோதமான கட்டுமானங்களுக்கு வழிவகுப்பதால், அவை வரிவிதிக்கும் அதிகாரிகளின் அதிகார வரம்புக்குள் வராமால் தப்பிவிடுகின்றன. எனினும், அவற்றையும் சட்டப்பூர்வமாக வரிவிதிப்புக்குள் கொண்டுவருவதற்ககும் சொத்து வரி செலுத்தாதவர்களுக்க அபராதம் விதிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

நொய்டா மற்றும் குர்காவ் போன்ற நகரங்களில், சமீபகாலமாக பெரிய அளவிலான சொத்து வரி செலுத்தத் தவறும் உரிமையாளர்களின் கட்டிடங்களை ஜப்தி செய்யும் நடவடிக்கைகளை நகராட்சி அமைப்புகள் தொடங்கியுள்ளன. சிலவேளைகளி்ல் தொடர்ந்து வரி செலுத்தாமல் பண ஏய்ப்பு செய்யும் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகின்றன. பெரும்பாலும் சொத்து வரி செலுத்தாதற்காக தண்டனையை வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இணைப்புகளைத் துண்டிப்பதன் மூலம் நகராட்சி அலுவலர்கள் தொடங்குகிறார்கள். இதன்மூலம், கட்டிட உரிமையாளர் சொத்து வரி செலுத்த கட்டாயப்படுத்தப்படுகிறார்.

 

ஆன்லைன் மூலம் கட்டிட வரி செலுத்த முடியுமா?

டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், புனே, குர்கான், நொய்டா, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களைத் தவிர, பெரும்பாலான மாநிலத் தலைநகரங்கள் மற்றும் அடுக்கு-II, அடுக்கு-III நகரங்களும் இணையதளங்களை நிறுவி, கட்டிட வரியை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளன. தனிப்பட்ட, சொத்து குறித்த தகவல்களை வழங்குவதன் மூலமாக, சொத்தின் உரிமையாளர் இணையதளத்தில் தன்னைப் பதிவு செய்து கொள்வதன் மூலம் ஆன்லைன் வழியாக கட்டிட வரி செலுத்த முடியும்.

 

கட்டிட வரி பற்றிய முக்கிய கேள்விகள்

குடியேறிய / குடியிருப்புச் சான்றிதழ் (occupation certificate) பெற்ற நாளிலிருந்து கட்டிட வரி செலுத்த வேண்டுமா?

சொத்தின் உடமையாளர் குடியிருப்புச் சான்று அல்லது கட்டிடம் முடியக்கப்பட்டதற்கான கம்ப்ளிஷன் சான்றிதழ் இரண்டில் எதை முதலில் பெறுகிறாரோ அந்தத் தேதியில் இருந்து கட்டிய வரி செலுத்த வேண்டும்.

 

குடியிருப்புச் சான்றிதழோ அல்லது கட்டிடத்திற்கான திட்டமோ பெறப்படாத அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரே ஒரு வீட்டிற்கு மட்டும் தனியாக கட்டிட வரி செலுத்தலாமா?

ஆமாம். குடியிருப்புச் சான்று அல்லது கட்டிடத் திட்டம் பெறப்படாத அடுக்குமாடி குடியிருப்பி்ல் உள்ள தனி ஒரு வீட்டிற்கு கட்டிட வரி செலுத்த வேண்டும். என்றாலும், அது சொத்திற்கான முறைப்படுத்துதலுக்கு உத்தரவாதமாக அமையாது.

 

கட்டிட வரியைக் குறைத்து கணக்கிட்டால் (short calculate) என்னவாகும்?

கட்டிட வரியை நீங்கள் குறைத்து கணக்கிட்டால், கட்ட வேண்டிய கட்டிட வரி வித்தியாசத்தை இருமடங்காக வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டியது இருக்கும்.

 

திருத்தப்பட்ட கட்டிட வரி தாக்கல் செய்ய முடியுமா?

நீங்கள் செலுத்த வேண்டிய கட்டிட வரி தாக்கலில் உங்களுக்கு பொருந்தக் கூடிய ஏதாவது ஒன்றி்ல் மாற்றம் செய்ய விரும்பினால், திருத்தப்பட்ட கட்டிட வரி தாக்கல் செய்யலாம்.

 

கட்டிடத்தில் குடியிருப்பவரும் கட்டிட வரி செலுத்த வேண்டுமா?

கட்டிடத்தின் உரிமையாளர் கட்டிட வரி செலுத்தாமல் இருந்தால் அந்தக் கட்டிடத்தில் குடியிருப்பவர் கட்டிட வரி செலுத்த வேண்டிய பொறுப்புடையவர் ஆவார்.

 

என்னென்ன பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு கட்டிட வரி ரசீது அவசியம்?

கீழ்கண்ட பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு  கட்டிட வரி ரசீது கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது:

  • சார் பதிவாளர் அலுவலகங்களில் சொத்துகளை பதிவு செய்வதற்கு
  • கட்டா (khata) சான்றிதழ் பெறுவதற்கு
  • சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து திட்ட அனுமதியைப் பெறுவதற்கு
  • வர்ததகம் செய்வதற்கான உரிமம் போன்றவற்றைப் பெறுவதற்கு

 

அடுக்குமாடி குடியிருப்புகளில், சூப்பர்பில்ட் அப் பகுதி அல்லது கார்பெட் பகுதியை கட்டிட வரி கணக்கிட எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமா?

அடுக்குமாடி குடியிருப்புகளில் கார்பெட் ஏரியா என்று சொல்லப்படும் கட்டிட உட்பரப்பு பகுதிகள் கட்டிட வரி கணக்கீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

 

பில்ட் அப் ஏரியா என்றால் என்ன?

கட்டிட பரப்பு என்பது தரை மட்டத்திற்கு மேலே கட்டிடம் கட்டப்பட்டிருக்கும் மொத்த பரப்பையும் குறிப்பதாகும். இது, தரைதளம், இடைமட்ட மாடி, பால்கனி, கார் நிறுத்துமிடம், கட்டிடத்திற்கு உள்ளே இரு்ககும் நீச்சல் குளம், தரைக்கு கீழே அல்லது மேலே கட்டப்பட்டிருக்கும் எரிபொருள் சேமிப்புத் தொட்டி, மரம், செங்கல், கிரானைட் போன்றவற்றை அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் திறந்த வெளி, மூடிய பகுதிகள், பார்க்கிங் பகுதி, கட்டிடத்தின் மேல் அல்லது திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் தொலைத் தொடர்பு  கோபுரங்கள், இதர பதாகைகள் உள்ள பகுதிகள் இதில் அடங்கும்.

பில்-டப் ஏரியாவில் கீழ்கண்டவை அடங்காது:

  • தரைமட்டத்தில் உள்ள முற்றம்
  • தோட்டங்கள்
  • பாறைப் பகுதிகள்
  • கிணறு மற்றும் அதன் கட்டிடங்கள்
  • மரம் செடிகள்
  • நர்சரிகள்
  • மரத்தைச் சுற்றியிருக்கும் நடைபாதை
  • மேல்நிலை நீர்தேக்க தொட்டி
  • அழகுக்கான நீரூற்றுக்கள்
  • திறந்த வெளியில் இருக்கும் பெஞ்ச்
  • வடிகால்கள்
  • கால்வாய்கள்
  • திறந்தவெளியி்ல் செல்லும் குழாய்கள்
  • கேட்ச் பிட்ஸ்
  • கல்லி பிட்ஸ்
  • வெளிப்புறச்சுற்றுச் சுவர்கள்
  • சஜ்ஜா
  • மூடப்படாத மாடிப்படிகள்
  • காவலருக்கான அறை
  • சம்ப் தொட்டி
  • மூடிய மழைநீர் வடிகால்

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

கட்டிட வரி, நில வரி இரண்டும் ஒன்றா?

கட்டிட வரி என்பது கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது, நகராட்சி அமைப்புகளால் விதிக்கப்படும் வரியாகும். கட்டிடங்கள் எதுவும் கட்டப்படாத காலியான நிலத்திற்கு விதிக்கப்படும் வரிதான் நில வரி (land tax) என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் விவசாய நிலம், கிராமப்புறங்களில் உள்ள நிலங்களுக்கு நில வரி விதிக்கப்படுவதில்லை.

சொத்து வரியும், கட்டிட வரியும் வேறு வேறானவையா?

சொத்து வரி (property tax), கட்டிட வரி இரண்டும் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு வேறு சொல்கள் ஆகும். நகராட்சி அல்லது குடிமை அமைப்புகள் ஆண்டு மதிப்பீட்டின் அடிப்படையில் சொத்தின் மீது வருடத்திற்கு ஒரு முறை சொத்து வரி விதிக்கும்.

சொத்து வரி உங்களுடைய வருமானத்தில் இருந்து கழிக்கப்படுகிறதா?

ஒரு சொத்தின் மூலம் நீங்கள் சம்பாதிக்க நினைக்கும் உத்தசே வருமானத்திற்கு நீங்கள் வருமான வரி செலுத்துவதுடன் (இது உங்களுடைய ஆண்டு வருமானத்தில் சேர்க்கப்படும், உங்களுக்குரிய வகையின்படி வரி விதிக்கப்படும்) சொத்தின் மீது நகராட்சி அமைப்புகள் விதிக்கும் வரியையும் செலுத்த வேண்டும். இதன் மூலம் சொத்தின் உரிமையாளருக்கு இரட்டிப்பு வரி விதிக்கப்படுகிறது.

ஒரு சொத்து காலியாக இருந்தால் அது சொந்தமாக குடியிருப்பதாகவே அல்லது வாடகைக்கு விடப்பட்டதாகவோ கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா?

அந்த சொத்து வெளியே யாருக்கும் வாடகைக்கு விடாத வரையில் அதனை சொந்தமாக குடியிருப்பதாகவே அறிவிக்கலாம். யாருக்காவது வாடகைக்கு விடப்பட்ட பின், நீங்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்து அதன் நிலை மாற்றத்தை அறிவிக்க வேண்டும்.

எனது கட்டிடம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தால் நான் சொத்து வரி செலுத்த வேண்டுமா?

உங்கள் இடத்தில் இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டாலும், அதில் புதிய கட்டிடம் கட்ட்படாவிட்டாலும் காலியாக உள்ள நிலத்திற்கு நீங்கள் வரி செலுத்தியாக வேண்டும்.

 

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (0)
  • 😔 (1)

Recent Podcasts

  • ஒப்பந்தம் கட்டாயப்படுத்தினால், டீம்ட் கன்வேயன்ஸை மறுக்க முடியாது: பாம்பே உயர்நீதிமன்றம்
  • இந்தியாபுல்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மும்பையில் உள்ள ஸ்கை ஃபாரஸ்ட் திட்டங்களின் 100% பங்குகளை வாங்குகிறது
  • MMT, டென் நெட்வொர்க், அசாகோ குழுமத்தின் உயர் அதிகாரிகள் குர்கானில் பிளாட் வாங்குகிறார்கள்
  • நியூயார்க் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் மேக்ஸ் எஸ்டேட்ஸில் ரூ.388 கோடி முதலீடு செய்கிறது
  • லோட்டஸ் 300 இல் பதிவை தாமதப்படுத்த நொய்டா ஆணையம் மனு தாக்கல் செய்தது
  • 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 693 மில்லியன் டாலர்கள் கொண்ட ரியல்டி முதலீடுகளின் வருகைக்கு குடியிருப்புத் துறை தலைமை வகிக்கிறது: அறிக்கை