இந்தியாவில் சொத்து உரிமை மாற்றத்திற்கு சட்டப்படியான வாரிசுகளிடமிருந்து தடையின்மை சான்றிதழ் : NOC வடிவங்கள் மற்றும் NOC இன் அனைத்து வகைகளும்

தடையின்மை சான்றிதழ் அல்லது NOC என்பது ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனையின் சட்டபூர்வமான தன்மையை நிறுவும் மிக முக்கியமான ஆவணமாகும். இந்தியாவில் சொத்தின் உரிமை மாற்றம் செய்வதற்கு சட்டப்பூர்வ வாரிசுகளிடம் இருந்து தடையின்மை சான்றிதழைப் பெறவேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.

தடையின்மை சான்றிதழ்கள் அல்லது NOC என்பவைகள் சட்டப்பூர்வ ஆவணங்கள் ஆகும், அவை பல பணிகளை மேற்கொள்ள ஒருவருக்கு அவசியமாகத் தேவைப்படுகிறது. எவ்வாறாயினும், சொத்து உரிமை மாற்ற பரிவர்த்தனைகளின் போது  வரும்போது NOC மிக முக்கிய்யத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது ஒரு குடியிருப்பு கட்டிடத் திட்டத்தைத் தொடங்க பில்டர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான என்ஓசிகள் தேவை; விற்பனையாளர்கள் தங்கள் சொத்தை விற்பனை செய்வதற்கு  NOCகள் தேவை; வீடு வாங்குபவர்களுக்கும் சொத்து வாங்க  சிலகுறிப்பிட்ட  NOCகள் தேவைப்படலாம். அதனால்தான் சொத்தை  விற்பனை செய்ய அல்லது வாங்கும் முயற்சியில்  ஈடுபடும் எவருக்கும் இந்த மிக முக்கியமான ஆவணத்தைப் பற்றிய தெளிவான புரிதல் மிக அவசியம்.

Table of Contents

ஒரு தடையின்மைசான்றிதழ் அல்லது NOC என்பது எந்தவொரு தனிநபர், அதிகாரம், அமைப்பு அல்லது நிறுவனத்தால் வழங்கக்கூடிய சட்டப்பூர்வ ஆவணமாகும், இது அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் குறித்து எந்த ஒரு  ஆட்சேபனையும்  இல்லை என்பதைக் குறிப்பிடுகிறது.

மேலும் காண்க : விடுதலை ஆவணம்  பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் 

 

இந்தியாவில் சொத்து உரிமை மாற்றத்திற்கு சட்டப்படியான வாரிசுகளிடமிருந்து தடையின்மை சான்றிதழ் 

சட்டப்பூர்வ வாரிசுகள், ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவரது பெயரில் பதிவுசெய்யப்பட்திருந்த சொத்தின் உரிமையைப் பெறுவதற்கான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும். ஒரு உயில் ஆவணம் இருந்தால் இந்த நடைமுறைகள் மிக  எளிதானவை ., சொத்து சுயசம்பாத்தியதின் மூலம் வாங்கப்படாமல் அது மரபுரிமையாக பெறப்பட்டிருந்தால்  இருந்தால், சட்டப்பூர்வ வாரிசுகள் உயிலை மறுத்து உரிமை கோரலாம். இருப்பினும், உயில் இல்லாத நிலையில், வாரிசுரிமை சட்டம் செயல்முறைக்கு வருகிறது. சொத்தின் உரிமை மாற்றத்திற்கு  ஒரு பிரமாணப் பத்திரத்துடன் ஒரு தடையின்மைச் சான்றிதழ் (இது NOC என்பதன் முழு விரிவாக்கம்), ஆகியவை மற்ற சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து  பெறவேண்டிய முக்கியமான ஆவணங்களாகும். 

ஒருவர் தனது பங்கைப் பெற அதற்கு ஈடாக ஏதேனும் ஒரு வாரிசு அல்லது உரிமைகோருபவருக்கு பொருள் அல்லது பணமாக ஏதேனும் தொகை செலுத்தியிருந்தால், அது உரிமை மாற்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட வேண்டும். மேலும், பாகத்தின் உரிமை மாற்றத்திற்கான விடுதலைஆவணம் பதிவு செய்யப்படவேண்டும்..

கைதுறப்பு ஆவணம் (ரெலிங்க்விஷ்)  பற்றிய அனைத்தும் 

 

What-is-a-no-objection-certificate-NOC-and-why-is-it-important

மேலும் காண்க : தமிழ் நாட்டில் ஆன்லைனில்  சட்டபூர்வ வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்ய மேலும் எங்கள்  சட்டபூர்வ வாரிசு சான்றிதழ் குறித்த வழிகாட்டுதல்களையும் வாசியுங்கள் 

 

இந்து வாரிசுரிமைச்சட்டம் 1956 அமல்படுத்தப்பட்டபிறகு, ஒரு தந்தை சொத்தின் பாகப்பிரிவினை குறித்து எந்த ஒரு உயிலையும் விட்டுச்செல்லவில்லை என்றால் அந்தக்  குடும்பத்திலுள்ள ஒரு பெண் சொத்தில் அவரது சரி சமமான பங்கை கோரும் உரிமை வழங்கபபட்டது சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி, 2005 ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த பெண்களுக்கு சொத்தில் பங்கு கோரும் உரிமை உள்ளது. இருப்பினும், பெண்கள் தங்கள் தந்தையின் சொத்தில் பங்கு கோராத பல நிகழ்வுகள் இன்னும் உள்ளன. அது போன்ற சந்தர்ப்பங்களில், சொத்தின் பாகப்பிரிவினையின் போது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அவளது பங்கு உரிமையைப் பெற வேண்டியிருக்கும் நிலையில் தடையின்மைச்சான்றிதழ் அத்தியாவசியமாகிறது. அம்மாதிரியான சொத்துரிமை பரிமாற்றத்திற்கு தடையின்மை சான்றிதழில் கையொப்பம் பெறுவதன் மூலம்  சொத்துரிமையை மாற்றலாம். மற்றொரு வழியாக , ஒரு விடுதலைப் பத்திரத்தை நிறைவேற்றலாம் .

இப்படியாக  சட்டபூர்வமான வாரிசு ஒருவர் அவன்/அவளது சொத்தின் மீதான உரிமை கோரலை விட்டுத்தர விரும்பினால் அந்த நபர் ஒரு NOC சான்றிதழை இதர சட்டபூர்வமான வாரிசாக உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு அந்த ஆவணத்தில் அதைக் குறிப்பிட்டு வழங்கவேண்டும். அந்த நபரின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் அந்த குறிப்பிட்ட சொத்தில் பங்கு கேட்கும் உரிமை இருக்காது 

மேலும் காண்க  வாடகை ஒப்பந்தத்தில் காவல்துறை சரிபார்ப்பு நடவடிக்கை  : இது கட்டாயமா?  

 

சொத்துரிமை மாற்றத்திற்கு தடையினமை சான்றிதழ் 

தடையின்மை சான்றிதழ் என்ற அர்த்தத்தைக் கொண்ட ஒரு NOC என்பது அடிப்படையில் அரசு மையங்கள், உள்ளூர் அதிகாரிகள், வங்கிகள், மற்றும் தனிமனிதர்களும் கூட ஒரு சொத்தின் சில உண்மைகள் பற்றி அறிவித்து வழங்கக் கூடிய ஒரு ஆவணம். சொத்துக்களின் உரிமை மாற்றத்தின் போது அந்த எற்ப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால்  NOC வழங்குபவரின் தரப்பிலிருந்து எந்த ஒரு சட்டச்சிக்கலும் எழாது என்பதற்கான  ஒரு விளக்கமளிக்கும் ஆவணமாக NOC செயல்படுகிறது   

சொத்துரிமை மாற்றம் மற்றும் நிலபதிவு செய்வது போன்றவைகளுக்கு தடையின்மை சான்றிதழை அல்லது ஒரு NOC ஐ பெறுவது மிக அத்தியாவசியமான நடைமுறைகளில் ஒன்றாகிவிட்டது இதன் மூலம் சட்டத்துக்குப் புறம்பான குடியிருப்புக்கள் உருவாவதை தவிர்க்க அரசு கண்காணிக்க முடியும். நில உரிமை மாற்றம் அல்லது குடியிருப்புப் பகுதி மேம்பாடு ஆகியவற்றுக்கு சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளிடமிருந்து NOC க்களை பெறுவது கட்டாயம். 

பதிவுச்சட்டம் 1908 பிரிவு 21 இன் கீழ் அசையாச்சொத்து அல்லது நில உரிமை மாற்றத்தின் போது அதிகாரியிடமிருந்து ஒரு NOC பெறப்படவேண்டும் என்பது கட்டாயம். ஒரு நிலம் அல்லது சொத்தின் உரிமைமாற்றத்தின் போதான நடைமுறைகளில், அந்த நிலத்திற்கான ஒரு NOC க்கு தேவைப்பட்ட ஆவணங்களை இணைத்து, அந்த சம்பந்தப்பட்ட வட்டார அலுவலகத்தில் குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி  விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான NOC துணை ஆணையரால் வழங்கப்படும். அந்த நிலத்திற்கான NOC வழங்கப்பட்ட பிறகு விண்ணப்பதாரர் அந்த சொத்தை பதிவு செய்ய மற்றும் உரிமை மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்   

 

சொத்துரிமை மாற்றத்திற்கு தடையின்மை சான்றிதழ்:  விண்ணப்பிக்கும் நடைமுறைகள்  

சொத்து அல்லது நிலத்தின் உரிமை மாற்றம் அதன் உரிமையாளரின் உடைமை உரிமையை மாற்றும் செயல்பாடாக  இருக்கிறது. ஒரு அசையாச்சொத்தை வாங்கும் போது, ஒருவர் அதற்கான அதிகாரவழங்கலைப் பெற்று அந்த சொத்து பரிமாற்றத்தை  அதிகாரியிடம்  பதிவு செய்து கொண்டு சட்டப்படியான உடைமை உரிமையைப் பெறவேண்டும். 

சொத்து பரிமாற்றத்திற்கு தடையின்மை சான்றிதழ் அல்லது NOC அவசியம். பதிவுச் சட்டம் 1908 பிரிவு 21 இன் படி முறையான அதிகாரியிடம் இருந்து அதைப் பெறலாம். வட்ட அலுவலரிடமிருந்து சான்றிதழைப் பெறுவதும், விண்ணப்பத்தை துணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்புவதும் இதன் நடைமுறைகள் ஆகும் . துணை ஆணையர் NOVசான்றிதழை வழங்குவார். சான்றிதழைப் பெற்றவுடன், விண்ணப்பதாரர் அந்த சொத்தை பதிவு செய்ய மற்றும் உரிமை மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்   

செயல்முறை

NOC பெறுவதற்கான நடைமுறைகள் கீழே விளக்கப்பட்டுள்ளது:

  • கீழே பகிரப்படும் சொத்துக்கான தடையின்மை சான்றிதழின் வடிவமைப்பின்படி NOC வரைவுவை உருவாக்கவும்.
  • விண்ணப்பதாரர்கள் ரூ. 100 செலுத்தி அருகிலுள்ள கூட்டுறவு வங்கி, நீதிமன்றம் அல்லது துணைப் பதிவாளர் அலுவலகத்திலிருந்து நீதிமன்றம்சாரா மின்னணுவியல் -முத்திரைத் தாள்களைப் பெற வேண்டும். இதற்கு அவர்கள் பின்வரும் விவரங்களை வழங்க வேண்டும்:
    • விண்ணப்பதாரர் பெயர்
    • ஆவணத்தின் விளக்க விவரங்கள்  (பிரமாணப்பத்திரம்)முதல் தரப்பினரின் பெயர் (விண்ணப்பதாரரின்)
    • இரண்டாம் தரப்பினர் பெயர்: NA
    • வாங்குபவர்: (விண்ணப்பதாரரின் பெயர்)
    • முத்திரை கட்டணம்: ரூ. 100, இ-முத்திரைத்தாளுக்கான கட்டணம் மற்றும் விற்பனையாளர் செயலாக்கக் கட்டணம் ரூ. 10, ஆக மொத்தம் ரூ. 110.
    • விண்ணப்பதாரரின் தொடர்பு எண்
  • பூர்த்தி செய்யப்பட்ட வரைவை நீதிமன்றம் சாராத அல்லாத மின்னணுவியல்-முத்திரைத் தாளில் அச்சிடவும்.
  •  அச்சிடப்பட்ட NOC, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்ற இன்னும்பல  அடையாளச் சான்றுகள் உள்ளிட்ட ஆவணங்களை நோட்டரி பப்ளிக் இடம் சமர்ப்பிக்கவும். NOC ஐ நோட்டரி பப்ளிக் சரிபார்த்த பிறகு, NOC யில் கையொப்பமிடவும் அது  சீல் வைக்கப்பட்டு என்ஓசி யில் கையெழுத்திட்டு . நோட்டரி புத்தகத்தில் உள்ளிட்டப்படும் . நோட்டரிக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

 

பதிவுச்சட்டம் 1908 பிரிவு 21

பதிவுச்சட்டம் 1908 பிரிவு 21 இன் கீழ் சொத்து மற்றும் நிலவரைபடங்கள் அல்லது திட்ட விவரிப்புக்களை அளிக்க வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது தடையில்லாச்சான்று குறித்து குறிப்பிடத்தக்க வகையில் எதையும் சொல்லவில்லை ஆனால் அசையாச்சொத்துக்களை பதிவு செய்யும் போது பின்வருபவற்றை உள்ளடக்கிய விருப்பமுறியல்லாத (நான் டெஸ்டாமெண்டரி) ஆவணத்திற்கான ஒரு உரிமை வழங்கபட்டுள்ளது உள்ளது.

  • சொத்தை அடையாளம் காண போதுமான அளவிலான  சொத்து குறித்த விவரங்கள்.
  • சொத்தின் தற்போதைய மற்றும் முன்பு குடியிருந்தவர்கள்.
  • நகரங்களில் உள்ள வீடுகள் பின் வருமாறு விவரிக்கப்படவேண்டும் :
    • அது நோக்கியிருக்கும் திசை
    • வீட்டின் எண்கள் அல்லது அவர்கள் இருக்கும் வீட்டின் தெரு/சாலை எண்கள்
    • வீட்டின் பெயர் அல்லது அவை அமைந்துள்ள நிலம்
    • பதிவு நோக்கங்களுக்காக, வரைபடம் அல்லது திட்டத்தின் உண்மையான நகலைக் கொண்ட சொத்துத் திட்டம் அல்லது வரைபடத்தைக் கொண்ட ஒரு விருப்பமுறியல்லாத (நான் டெஸ்டாமெண்டரி) ஆவணம்.

 

சொத்துரிமை மாற்றத்திற்கு தடையின்மை சான்றிதழ்:  என்ன ஆவணங்கள் தேவைப்படும் 

NOC ஐப் பெறும்போது பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்:

  • சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம் மற்றும் புகைப்பட அடையாளச் சான்று
  • நிலத்தின் மொத்தபரப்பு   மற்றும் நிலத்தின் ஒதுக்கப்பட்ட பங்கின் பரப்பு ஆகிய இரண்டின் நிர்ணயைக்கப்பட்ட மதிப்பாக  இருந்தால் 
  •  சமீபத்திய வருவாய் ரசீது
  • பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் ஐடி போன்ற வாங்குபவரின் குடியுரிமை
  • நிலப் பட்டா
  • வாங்குபவர் மற்றும் விற்பவரின் /பவர் ஆஃப் அட்டார்னி ஆவணம் வைத்திருப்பவரின் பிரமாணப்பத்திரம்
  •  பொருத்தமான இடங்களில்  பவர் ஆஃப் அட்டர்னி ஆவண  நகல்
  • POA வைத்திருப்பவருக்கு ஆதரவாக ஒரு பிரமாணப்பத்திரத்தை பட்டாதாரர் சமர்பிக்க வேண்டும் 
  • அடுக்கு மாடி குறியிருப்பு என்றால், இணை பங்குதாரரின் அதிகாரம்வழங்கல் / NOC
  •  PAN/ TAN அட்டை
  •  GMC/ GMDA/ முனிசிபாலிட்டி/ டவுன் கமிட்டி ரசீது/   குடியிருப்பு சான்றிதழ்

 

தடையின்மை சான்றிதழ் வடிவமைப்பு: NOC இல் என்ன அடங்கியிருக்கிறது ? 

வணிகம், வர்த்தகம், வழங்கல் போன்ற இன்னும் பல  செயல்பாடுகளின்  நோக்கத்திற்காக தடையின்மை சான்றிதழ் வழங்கப்படுகிறது மற்றும்  இது  எந்த ஒரு பணியமர்த்துனர், பணியாளர், நில உரிமையாளர், வாடகைதாரர் போன்றோராலும் வழங்கப்படலாம்.

ஒரு NOC கடித வடிவம் சம்பந்தப்பட்ட தரப்பினரின் அடிப்படை விவரங்களைக் கொண்டுள்ளது மற்றும் அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கும். சொத்து தொடர்பான பயன்பாட்டிற்கான தடையின்மை சான்றிதழின் வடிவம் இங்கே:

 

NOC வடிவ மாதிரி
 

இது யாருக்கு சம்பந்தப்பட்டதோ அவர்களுக்கு:

 

சொத்து அடையாள எண் [NUMBER]  கொண்ட 25,746 சதுர மீட்டர் பரப்பளவுள்ள சொத்தின் உரிமையாளர் (முகவரி) என்ற முகவரியில் வசிக்கும் திரு (பெயர்)    என்று இதன் மூலம் சான்றளிக்கப்படுகிறது  . .

மேலும் (நிறுவனத்தின் பெயர்) குறிப்பிட்ட அந்த  (நிறுவனத்தின் பெயர் ) சொத்தின் மீது எந்தவிதமான மறுப்பையும் தெரிவிக்கவில்லை 

(பெயர்) அவன் /அவளின்  ——————————————- விண்ணப்பத்திற்கு ஆதரவு வேண்டி கோரப்பட்டதற்கு  இணங்க இன்று 2010 செப்டம்பர் 18 ஆம் நாளன்று வழங்கப்பட்டது 

 

கையொப்பம் ————————

தேதி ——————————-

 

மேலும் காண்க:  குடியிருப்பு சான்றிதழ்  என்றால் என்ன? 

 

இப்போது ஒரு உரிமையாளரிடமிருந்து அவர் /அவளது வளாகத்தை குத்தகைக்கு எடுப்பதற்காக ஒரு NOCயின் மாதிரி வடிவமைப்பைப் பார்ப்போம்:

 

 இது யாருக்கு சம்பந்தப்பட்டதோ அவர்களுக்கு

 

————————————-மகன்/மகளான ——————————–என்ற  நான்/நாங்கள் இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்வது எண்ணவ்வென்றால் 

 

  • —————————- என்ற முகவரியில் (இதன் பிறகு “ குறிப்பிட்ட வளாகம் என்று குறிப்பிடப்படும்) அமைந்திருக்கும் வளாகத்தின் சட்டபூர்வமான உரிமையாளர்(கள்) நான் / நாங்கள் 

 

  • -திரு (பெயரை உள்ளிடவும்) ————————————-அந்தக் குறிப்பிட்ட வளாகத்தை அவரது கூட்டு நிறுவானம்/LLP/தினியார் நிறுவனம்/பொது நிறுவனம் ஆகியவற்றின் பதிவு பெற்ற அலுவலகமாகப் பயன்படுத்திக் கொள்வதி -எனக்கு /எங்களுக்கு எந்தவிதமான ஆச்சேபணையும்  இல்லை 

 

தேதி ————— ——— கையொப்பம் ————————————–(உரிமையாளர்) 

இடம் ———————————–

 

அதேபோல், வேறு மாநிலத்தில் வேறு ஒரு தரப்பினருக்கு வாகனத்தை விற்கும் நபர் கூட, அதை வேறு இடத்தில் பதிவு செய்வதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு முன்பு, முதலில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் (RTO) NOC பெற வேண்டும். இப்போதெல்லாம், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ள பரிவாஹன் சேவாஇணையதளத்தில் இருந்தும் இந்த வகையான தடையின்மைச் சான்றிதழை (NOC) ஆன்லைனில் பெறலாம்.

சுருக்கமாகசொல்வதென்றால், வீட்டுப் பதிவு அல்லது குடியேற்றம், கட்டிடம் கட்டுதல் அல்லது எந்தவொரு பரிவர்த்தனையுடன் தொடர்புடைய எதற்கும் NOC பெறுவது என்பது ஒரு முக்கிய நடைமுறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். NOC சான்றிதழ் வடிவம், அதில் உள்ள விவரங்கள் மற்றும் அதைப் பெறுவதற்கான நடைமுறை ஆகியவை குறித்து ஒருவர் அறிந்திருக்க வேண்டும்.

 

சொத்துரிமை மாற்றத்திற்கான சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து பெறப்படவேண்டிய NOC யின் வடிவம்

சொத்துரிமை மாற்றத்திற்கான சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து தடையின்மை சான்றிதழின் (NOC) மாதிரி வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

அறிவிப்பு

தற்போது __________________ என்ற முகவரியில் குடியிருக்கும் ——————– மகன்/மகள்/மனைவி ஆன  நான் —————— வயது ———— ஒரு இந்திய குடிமகன் / NRI இதன் மூலம் கீழ்க்கண்டவாறு உறுதியளித்து அறிவிக்கிறேன். 

  1. __________, இறந்தவர்,  ஃபோலியோ எண். _______ மற்றும் பங்குச் சான்றிதழ் எண்(கள்) —————-குறிப்பிட்ட ———–எண் தொடங்கி ———– எண்வரையிலானவற்றின்  கீழ் (நிறுவனத்தின் பெயர்) _____ பங்குகளை வைத்திருந்தார்.
  2. இப்போது,  (பங்குதாரரின் பெயர்), __________ தேதியாண்டு இறந்துவிட்டார்
  3. நான் இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசு நான் இறந்தவரின் (என்ன உறவில்) ஆக  இருக்கிறேன்.
  4. இறந்தவர் வைத்திருந்த  மேற்கூறிய ஆவணங்களின்  உரிமையை நான் கோர விரும்பவில்லை. மேற்கூறிய பத்திரங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் எனக்குச் சேரக்கூடிய எனது அனைத்து உரிமைகளையும் துறக்க நான் இதன்மூலம் ஒப்புக்கொள்கிறேன்.
  5. குறிப்பிட்ட ஆவணங்களை விண்ணப்பதாரரின் பெயருக்கு உரிமை மாற்றம் செய்வதில்  எனக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை என்று உறுதியளிக்கிறேன்

நிறுவனத்தின் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்பிப்பதற்காக இந்த அறிவிப்பை நான் நிறைவேற்றுகிறேன்.

மேலே கூறப்பட்டுள்ளவை அனைத்தும் எனது அறிவுக்கு எட்டிய வரையில் உண்மையே என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

________ இல் மனப்பூர்வமாக  உறுதிப்படுத்தப்பட்டது புகைப்படம்

இந்த ____ நாளில் ______ 20__அன்று  ) (சட்டபூர்வ வாரிசின் கையொப்பம்)

சான்றளிப்பவர்: 

என் —————————- முன் என்னால் அடையாளம் காணப்பட்டது 

வழக்கறிஞர்     S.E.O./ உறுதிமொழி ஆணையர்/ நோட்டரி

 

சொத்துரிமை மாற்றத்திற்கான தடையின்மை சான்றிதழின் மேற்கூறிய வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு, தேவையான அடையாளச் சான்றிதழுடன் ஒவ்வொரு சட்டப்பூர்வ வாரிசும் தனித்தனியாக மேற்கொள்ளப்படவேண்டும் . பிரகடனம் நீதித்துறை சாராத் முத்திரைத் தாளில் செயல்படுத்தப்பட வேண்டும் மற்றும் S.E.O அல்லது உறுதிமொழி ஆணையர் அல்லது நோட்டரி ஆல் முறையாக சான்றளிக்கப்பட வேண்டும்.. 

 

GST க்கான  NOC (தடையில்லாச்சான்று) வடிவம்

GST க்கான  NOC (தடையில்லாச்சான்று) வடிவத்தின் மாதிரி ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

—————————–(முகவரி) என்ற முகவரியில் குடியிருக்கும் —————- (உரிமையாளரின் பெயர்) என்ற நான், இதன் மூலம் ஒப்புக்கொண்டு உறுதி செய்வது என்னவென்றால்,:

  1. நான் ———————– (முகவரி) என்ற முகவரி கொண்ட சொத்தின் உரிமையாளரும் மற்றும் சட்டப்பூர்வமாக அதை அனுபவித்துவரும் உரிமை உடைமை கொண்டவன் ஆவேன், மற்றும் நான் ————— என்பவரால் பிரதிநிதித்துவப்பட்ட மெசர்ஸ் —————- (குடியிருப்பவரின் பெயர்) என்பவருக்கு மேலே குறிப்பிட்ட சொத்தை ———————–(குடியிருப்பு/வணிக/வியாபார) நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதியளித்திருக்கிறேன்.
  2. மேலே குறிப்பிட்ட சொத்தின் மீது மெசர்ஸ் ————————(குடியிருப்பவரின் பெயர்) GST பதிவு மேற்கொள்ள விண்ணப்பிப்பதற்கு எனக்கு எந்த ஒரு ஆட்சேபணையும் இல்லை

சரிபார்ப்பு

—————– (இடத்தின் பெயர்) இல் ————– (தேதி XYZ)அன்று மேலே குறிப்பிட்ட அறிக்கை என் அறிவுக்கு எட்டியவரை உண்மை என்பதை சரிபாரித்து உறுதி கூறி கையொப்பமிட்டேன்.

சான்றுரைப்பவர்

 

வங்கி NOC (தடையில்லா) சான்றிதழுக்கான மாதிரி கடிதம்

தேதி/மாதம்/ வருடம்

கிளை மேலாளர்,

வங்கி பெயர்

வங்கிக்கிளை

பொருள்: என்ஓசிக்காக(NOC- தடையிலாச்சான்றுக்காக)  வங்கிக்குக் கடிதம்

அன்புள்ள ஐயா,

வங்கியில் 1234XXX எண் கொண்ட கணக்கு வைத்திருக்கிறேன், மற்றும் எனது விவரங்களுக்கு எதிராக எனக்குத் தடையில்லாச் சான்றிதழை வழங்குமாறு இதன் மூலம் நான் கேட்டுக்கொள்கிறேன். எனது புதிய அலுவலகத்தில் எனது சம்பள பரிவர்த்தனைகளின் செயல்முறையைத் தொடங்க அந்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதால், கூடுமான வரை அதை விரைவாக செயல்படுத்த வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி

உண்மையுள்ள,

பெயர்

 

பயிற்சி அல்லது கல்விக்கான மாதிரி NOC வடிவம்

இதன் தொடர்பாக பொருத்தமுள்ளவர்களுக்கு

தேதி: தேதி/மாதம்/வருடம்

பெறுநர்:

முகவரி:

இந்தக் கடிதம், __________(அமைப்பு/கல்லூரி பெயர்) இல் ________________________ என்ற தகுதியின் அடிப்படையில் ————————-பாடத்திட்டத்தில் நேர்மையான பணியாளராக/ மாணவராக இருந்த திரு/ செல்வி/ திருமதி ABC அவர்கள் தொடர்பானது _______________

அவர்/அவள் ___<DD/MM/YYYY>__________.அன்று இந்தப் பாடத்திட்டத்தில் சேர்ந்த/தொடங்கிய நாளிலிருந்து கல்வி/தொழில்சார் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தினார்.

அவர்/அவள் __________ பாடத்திட்டத்தில்/பயிற்சியின் முழு காலத்திற்கும் பங்கேற்க இதன்மூலம் அனுமதிக்கப்படுகிறார்.

உண்மையுள்ள,

துறைத் தலைவர்/ மேற்பார்வையாளரின் கையொப்பம் மற்றும் பெயர், பதவி

முகவரி மற்றும் தொடர்பு எண்

 

தடையின்மை சான்றிதழ் எப்போது வழங்கப்படும்?

நீங்கள் ஒரு வழங்கல் அல்லது வணிக ஏற்பாடு அல்லது ஒரு பரிவர்த்தனையில் ஈடுபடும் போது NOC கோரப்படுகிறது அல்லது வழங்கப்படுகிறது. ரியல் எஸ்டேட்டில், சொத்து வாங்குபவருக்கு, கேள்விக்குரிய சொத்தில் சட்டப்பூர்வமான  சிக்கல்கள்/ஆக்கிரமிப்புகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த, ஒரு அதிகாரி அல்லது முந்தைய உரிமையாளரிடமிருந்து ஒரு NOC சான்றிதழ் தேவை.

மேலும் காண்க :  வில்லங்க்ச்சான்றிதழ்   என்றால் என்ன?

 

NOC ஏன் முக்கியமானது?

எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதை நிறுவுவதைத் தவிர   நீங்கள் ஒரு சட்டப்பிரச்சினையில் சிக்கிக் கொண்டால், நீதிமன்றத்தில் அந்த NOC ஐ சமர்ப்பிக்கலாம் மற்றும் நீங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கப் பயன்படுத்தலாம்.

உதாரணமாக, உங்கள் வங்கி அல்லது கடன் வழங்கும் நிறுவனத்திடம் இருந்து NOC பெறுவது, வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தியவுடன், சொத்து தொடர்பான  அனைத்து சட்டப்பூர்வ ஆவணங்களையும் எந்த  பிரச்சினையும் இன்றி  திரும்பப் பெற்றுக்கொள்ள உங்களுக்கு உதவும். சொத்து மீதான பற்றுரிமையை நீக்கவும் NOC உதவும். சொத்து மீதான பற்றுரிமை என்பது வங்கிகள் அல்லது கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு உங்கள் சொத்தின் மீது சட்டப்பூர்வ உரிமைகோரல் உள்ளது மற்றும் உங்கள் கடனை நீங்கள் செலுத்தும் வரை சொத்தை விற்க உரிமை உள்ளது என்பதைக் குறிக்கும் .

மேலும் காண்க : தமிழ்நாடு ஆன்லைன் குறித்த அனைத்தும்

 

NOC இன் பொதுவான வகைகள்

  • சொத்து பரிமாற்றத்திற்கான NOC
  • நீதிமன்ற தேவைகளுக்காக NOC
  • விசாவிற்கு NOC [பணியாளர்கள்]
  • விசாவிற்கு NOC [மாணவர்கள்]
  • ஜிஎஸ்டிக்கான  NOC
  • நில உரிமையாளரிடமிருந்து NOC
  • வேலையை விட்டு விளக்குவதற்கான  NOC [பணியமர்த்துபவரால் வழங்கப்பட்டது]
  • வங்கித் தேவைக்கான NOC
  • NOC மற்றும் அனுபவச் சான்றிதழ்
  • ஒரு பாடத்திட்டத்தில் சேர அல்லது விலகுவதற்கு  NOC
  • ஒரு மாநாடு/நிகழ்சிசியில் கலந்து கொள்வதற்கான NOC
  • சுற்றுலா/வருகைக்கான NOC

 

தடையின்மைச்  சான்றிதழைப் பெறுவது எப்படி?

ஒரு அதிகாரி, நிறுவனம் அல்லது நிலையத்திடம் இருந்து தடையின்மைச் சான்றிதழைப் பெறு, உங்களைப் பற்றிய  (விண்ணப்பதாரர்) விவரங்களைக் குறிப்பிட்டு, NOC தேவைப்படுவதற்கான நோக்கத்தை விளக்கி ஒரு கடிதம் எழுத வேண்டும். அதன் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆதாரமாக வழங்குவதும் முக்கியம்.

 

வங்கியிடமிருந்து தடையின்மை சான்றிதழ் என்றால் என்ன?

வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது அதற்கான முஐயா  நடைமுறைகளை நீங்கள் பின்பற்றுவது போன்றே , தேவையான வீட்டுக் கடனை முடிப்பதற்கான  நடைமுறைகளை நிறைவு செய்வதும் அவசியம். அதாவது, நீங்கள் ஒரு வீட்டுக் கடனைப் பெற்றிருந்தால், கடன் கணக்கை முடித்தவுடன் நீங்கள் NOCயைப் பெற வேண்டும். வீட்டுக் கடனுக்கான NOC என்பது ஒரு சட்டப்பூர்வ ஆவணமாகும், இது கடன் வாங்கியவர் வீட்டுக் கடன் EMI கள் அனைத்தையும்  செலுத்தி விட்டார் மற்றும் நிலுவையில் உள்ள இதர கடன் தொகைகளையும் செலுத்திவிட்டார் என்பதை உறுதி செய்கிறது 

மேலும் காண்க :  முத்திரைக் கட்டணத்தை கணக்கிடுவது எப்படி?

 

கட்டிடம் கட்டுவதற்கான தடையின்மை சான்றிதழ் 

இந்தியாவில், வீடு, அடுக்குமாடி வளாகம் அல்லது எந்த ஒரு கட்டுமானத்தையும் மேற்கொள்ளும் போது, பல்வேறு அதிகாரிகள் மற்றும் அரசுத் துறைகளிடமிருந்து தடையின்மைச் சான்றிதழைப் பெறுவது அவசியம்.

வளர்ச்சிக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகள் மற்றும் தேசிய கட்டிடக் குறியீடு, 2016 இன் படி, சில  குறிப்பிட்ட வகை கட்டிடங்களுக்கு தீயணைப்பு சேவைத் துறையின் NOC தேவை. உதாரணமாக, தரை மட்டத்திலிருந்து 15 மீட்டர் உயரமுள்ள அல்லது மூன்று மாடிகளுக்கு மேல் உள்ள கட்டிடங்கள் உயரமான கட்டமைப்புகளாகக் கருதப்படுகின்றன. கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன், அவற்றுக்கு தீயணைப்புப் படை இயக்குனரின் ஒப்புதல் சான்றிதழ் தேவை.

கட்டிடத் திட்டம் மறுஆய்வு செய்யப்பட்டு கட்டுமானத்திற்கான அனுமதி வழங்கும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் தலைமை தீயணைப்பு அதிகாரி தடையின்மைச் சான்றிதழை (NOC) வழங்குகிறார்.

 

RERA வின் கீழ் தடையிமைச் சான்றிதழ் 

RERA வின் சட்டப் பிரிவு 15 இன் படி, ரியல் எஸ்டேட் திட்டம் தொடர்பான உரிமைகள் மற்றும் பொறுப்புகளை ஒரு மூன்றாம் தரப்பினருக்கு உரிமை மாற்றம் செய்ய  அல்லது ஒதுக்கீடு செய்ய , டெவலப்பர் அல்லது விளம்பரதாரர் மூன்றில் இரண்டு பங்கு ஒதுக்கீட்டாளர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமான முன் அனுமதியைப் பெற வேண்டும். ஒதுக்கீடு பெற்றவர்கள்  NOC ஐ வழங்கியவுடன், அதே  போன்ற சான்றிதழ் ஒன்று RERA அதிகாரியால் வழங்கப்படும்.

 

சொத்து பயன்பாட்டிற்கு தடையின்மை சான்றிதழ் 

ஒரு குத்தகைதாரர், வழக்கமாக ஒரு நிறுவனம், ஒரு சொத்தை குத்தகைக்கு எடுத்து, அந்த வளாகத்தை பதிவு செய்யப்பட்ட அலுவலகமாகப் பயன்படுத்த விரும்பினால், நில உரிமையாளரிடமிருந்து தடையின்மைச் சான்றிதழை (NOC) பெறுவது அவசியமாகிறது. அலுவலகத்தை நிறுவுவதற்கு முன் NOC  நிறுவனம் பெற வேண்டும்.

வளாகத்தை நிறுவனத்திற்கு மனப்பூர்வமாக வாடகைக்கு விடுவதாகவும், அந்த வளாகத்தை அல்லது அதன் ஒரு பகுதியை நிறுவனம் பயன்படுத்துவதில் எந்த ஒரு  ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்து  நில உரிமையாளர்கள் NOC வழங்க வேண்டும்.

NOC கடிதத்தின் வடிவம் பின்வரும் விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும்:

  • நில உரிமையாளரின் பெயர்.
  • சொத்து வாடகைக்கு விடப்படும் நிறுவனத்தின் பெயர்.
  • சொத்தின் முகவரி.
  • தேதி மற்றும் இடம்.
  • நில உரிமையாளரின் கையொப்பம் மற்றும் தொடர்பு விவரங்கள்.

 

நிர்வாகியால் நீதிமன்றத்தின் ஆட்சேபனை சான்றிதழ் இல்லை

இந்திய வாரிசுரிமைச்  சட்டம், 1925 பிரிவு 307 இன் கீழ் நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் ஒரு நிர்வகிப்பவரால் எந்த அசையாச் சொத்தையும் அடமானம் வைக்கவோ அல்லது உரிமை மாற்றம் செய்யவோ முடியாது. அத்தகைய சொத்துக்களை ஐந்தாண்டுகளுக்கு மேல் நிர்வகிப்பவர் குத்தகைக்கு எடுக்க முடியாது. கட்டுமான சட்டத்தின் விதிமுறைகளை ஒரு கட்டமைப்பு மீறும் பட்சத்தில், எந்தவொரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் அல்லது பிற சம்பந்தப்பட்ட அதிகாரிகள்   அதற்குத் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கக்கூடாது. கடுமையான, வெளிப்படையான மற்றும் நியாயமான ஆய்வுகளுக்கு அதை உட்படுத்திய பிறகே அதற்கு அதிகாரிகள் தடையில்லாச் சான்றிதழை வழங்கவேண்டும்

 

அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை விற்க, வீட்டுவசதி சங்கத்திடம் இருந்து தடையின்மை  சான்றிதழ் பெறுவது தேவையா?

சமீபத்தில், மகாராஷ்டிரா வீட்டுவசதி அமைச்சர் ஜிதேந்திரா அவ்ஹாத், ஒரு பிளாட் உரிமையாளர் ஒரு பிளாட்டை  விற்க அல்லது வாடகைக்கு விட  வீட்டுவசதி சங்கத்திடம் இருந்து எந்தவொரு NOC அல்லது தடையின்மை சான்றிதழும் பெற தேவையில்லை என்று கூறினார். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தனது வீட்டை ஒருவர்  விற்க விரும்பினால் வீட்டுவசதி சங்கங்கள் NOC வழங்காது என்று அவர் கூறினார். கூட்டுறவுத் துறை தடையின்மை  சான்றிதழ் தேவையில்லை என்றும், குடியிருப்போர் தங்கள் புகார்களை துணைப் பதிவாளரிடம் பதிவு செய்யலாம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும்   சொத்தின் உரிமையாளர், சொத்தை விற்க திட்டமிட்டால், வீட்டுவசதி சங்கத்திடமிருந்து செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகை எதுவுமில்லை என்ற  சான்றிதழைப் பெற வேண்டும்.

மேலும் காண்க: டீம்ட் கன்வேயன்ஸ் அர்த்தம்

 

2014 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் மாநில கூட்டுறவுத் துறையால் வழங்கப்பட்ட வீட்டுவசதி துணை விதிகளின்படி, ஒரு பிளாட்டை வாடகைக்கு விடவோ அல்லது விற்கவோNOC தேவையில்லை. கூட்டுறவு வீட்டுவசதி சங்க துணை விதி 38.குறிப்பிடப்பட்டுள்ளபடி பிளாடுகளை  விற்கவோ அல்லது  வாங்கவோ சொசைட்டியின் தடையின்மை சான்றிதழ் தேவையில்லை. மேலும், துணை விதி எண். 43, இன் படி ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வழங்குவதற்கு உள் வாடகைக்கு விட வீட்டுவசதி சங்கத்திடமிருந்து NOC சான்றிதழ் தேவை. மேலும், துணை விதிகளின்படி, ஒரு தனிநபருக்கு NOC தேவைப்பட்டால், அது 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.

மேலும் காண்க : முத்திரைக் கட்டணச்சட்டத்தில் வழங்கப்ட்டதற்கு இணங்க கூட்டு ஆவணம் முத்திரையிடப்படவேண்டும். 

 

வாகனத்திற்கான தடையின்மை  சான்றிதழ் 

ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தை வாங்கும் நபர்கள், உ.ம்., கர்நாடகாவில் வாங்கி  மற்றும் அதை வேறு மாநிலத்தில் எ.கா., குஜராத்தில் பயன்படுத்த திட்டமிட்டால், , NOC பெற வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வாகன விற்பனையாளர், அசல் மாநில (அதாவது, கர்நாடகா) வட்டாரப் போக்குவரத்து அதிகாரியிடம் (ஆர்டிஓ) தடையின்மை சான்றிதழைப் பெற்று, குஜராத்தில் வாகனம் வாங்குபவருக்கு அந்த ஆவணத்தை வழங்க வேண்டும்.

குறிப்பிடப்பட்ட வாகனத்தின் மீது  கர்நாடகாவில் அதற்கு முன் எந்த ஒரு  போக்குவரத்து குற்றங்களும் இல்லை என்பதையும், மற்றும் கர்நாடகாவில் வாகனத்திற்கு எதிராக அடமானம் ஏதாவது உள்ளதா இல்லையா என்பதையும் NOC குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். வாகனம் வாங்குபவர் வாகனத்தை மீண்டும் வேறொரு மாநிலத்தில் பதிவு செய்யும் போது இந்த ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்

 

NOC க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ள அரசாங்கத்தின் parivahan.gov.in  இணைய முகப்பு ஒரு வாகனத்திற்கான NOC க்கு விண்ணப்பிப்பது உட்பட வாகனம் தொடர்பான சேவைகளைப் பெறுவதற்கு வசதியான தளத்தை வழங்குகிறது. இந்த இணைய முகப்பில்  NOCக்கு விண்ணப்பிப்பதற்கு முன், உங்கள் மாநிலத்தில் இந்த வசதி செயலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். வாகனத்திற்கான NOC பெறுவதற்கான படிநிலைகள்  இங்கே:

  • பரிவஹன் போர்ட்டலுக்குச் சென்று, ‘ஆன்லைன் சேவைகள்என்பதன் கீழ் வாகனம் தொடர்பான சேவைகள்என்பதில் கிளிக் செய்யவும்.

 

No objection certificate for vehicle

 

  • அடுத்த படிநிலையில் , கீழிறங்கு மெனுவிலிருந்து உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது, வாகனப் பதிவு எண்ணைக் கொடுத்து, ஆர்டிஓவைத் தேர்ந்தெடுக்கவும். தொடரவும்என்பதைக் கிளிக் செய்யவும்

 

No objection certificate for vehicle

 

  • இருக்கும் சேவைகளில் இருந்து, ‘திட்டடையின்மை சான்றிதழுக்கான விண்ணப்பம்என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • வாகனத்தின் சேசிஸ் எண்ணை வழங்கவும் (கடைசி 5 இலக்கங்களை மட்டும் குறிப்பிடவும்).
  • தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, தொடர்புடைய ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  • எந்த ஒரு டிஜிட்டல் கட்டண முறையிலும் பொருந்தக்கூடிய கட்டணங்களைச் செலுத்துங்கள்.
  • NOC விண்ணப்பம் மற்றும் ஒப்புகை சீட்டை சேமிக்கவும்.

மேலும், NOC ஒப்புதல் நடைமுறையை எளிதாக்க, நிலுவையில் உள்ள சாலை வரி தொகைகளை செலுத்துவதை உறுதிசெய்யுங்கள். பின்னர், அடுத்த செயல்முறைக்கான விண்ணப்பப் படிவம், அனைத்து ஆவணங்கள் மற்றும் ஒப்புகை ரசீது ஆகியவற்றோடு  வாகனம் பதிவு செய்யப்பட்ட RTO வை சாந்தியுங்கள்  பார்வையிடவும். உங்கள் வாகனம் தொடர்பான ஏதேனும் நிலுவைத் தொகைகள் குறித்து அதிகாரிகள் சரிபார்த்து, வாகன உரிமையாளரையும்  சரிபார்ப்பார்கள். சரிபார்ப்பு செயல்முறை முடிந்ததும், தடையின்மை டையில்லா சான்றிதழை RTO வழங்குவார்.

 

தேவையான ஆவணங்கள் 

விண்ணப்பதாரர் பின்வரும் ஆவணங்களை வழங்க வேண்டும்:

  • வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC).
  • வாகனத்தின் காப்பீட்டு சான்றிதழ்
  • புகைப்பட அடையாளச் சான்று
  • முகவரி சான்று
  • வணிக வாகனமாக இருந்தால் அனுமதி மற்றும் ஃபிட்னஸ் சான்றிதழ்
  • உமிழ்வு சோதனைச் சான்றிதழ் (மாசு கட்டுப்பாட்டில் இருப்பதற்கான சான்றிதழின் – PUC)
  •  வாகனம் ஹைப்போதிகேஷன், HPA அல்லது குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் இருந்தால், CMV படிவம் 28 இல் நிதியுதவி அளித்தவரின் ஒப்புதல்
  • CMV 28 படிவத்திற்கான சேசிஸ் எண்ணின் பென்சில் அச்சு

 

NOC க்கு  ஆஃப்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

  • வாகன உரிமையாளர் உள்ளூர் ஆர்டிஓவை அணுகி என்ஓசிக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • முறையாக நிரப்பப்பட்ட CMV 28 படிவம் உட்பட சம்பந்தப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். CMV 28 படிவம் அரசாங்கத்தின் parivahan.gov.in இணைய முகப்பில் கிடைக்கிறது.
  • NOC விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
  •  RTO விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டு , வாகனம் ஏதேனும் கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ளதா அல்லது திருடப்பட்டதா என்பதைத் உறுதி செய்து கொள்ள  காவல்துறை அதிகாரியிடம் இருந்து வாகன அறிக்கையைக் கோருவார்.
  • தடை நீக்க அறிக்கை பெறப்படும், மேலும் வாகனத்திற்கு எதிராக எந்த ஒரு தொகை செலுத்தல்கள் அல்லது  DSA நடவடிக்கைகள் நிலுவையில் இல்லாத பட்சத்தில் NOC அனுப்பப்படும்.
  • NOC மூன்று வேலை  நாட்களுக்குள் RTO ஆல் வழங்கப்படும்.

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

சொத்துக்கான கொடை ஒப்பாவணத்திற்கு சங்கத்திடமிருந்து NOC பெறுவது அவசியமா?

ஒரு சொத்தின் உரிமையை நிரூபிக்க தேவையான அனைத்து ஆவணங்களும் உங்களிடம் இருந்தால், சொத்தை கொடையாக வழங்க சங்கத்திடமிருந்து NOC பெற வேண்டிய அவசியமில்லை.

ஒரு NOC வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகுமா?

இல்லை, நீங்கள் NOC ஐப் பெற்றவுடன், அது ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

ஒரு நிலத்திற்கான NOC ஐ நான் எப்படி எழுதுவது?

உங்கள் நிலத்தை வாடகைக்கு விட /விற்க உங்கள் விருப்பத்தை மட்டுமே நீங்கள் தெரிவித்து அதன் பின்னர் சொத்தின் அனைத்து விவரங்களையும் குறிப்பிடலாம்.

நிறுவன பதிவுக்கு NOC தேவையா?

ஒரு நிறுவனம் ஒரு சொத்தை பதிவு அலுவலகமாகப் பயன்படுத்தும் நோக்கத்திற்காக குத்தகைக்கு எடுக்கும்போது, நிறுவனம் நில உரிமையாளரிடமிருந்து NOC கடிதத்தைப் பெற வேண்டும். நிறுவனத்தை பதிவு செய்யும் போது NOC சான்றிதழை நிறுவனப் பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

(சினேகா ஷரோன் மம்மனிடமிருந்து கூடுதல் தகவல்களுடன்)

Was this article useful?
  • 😃 (1)
  • 😐 (0)
  • 😔 (0)

Recent Podcasts

  • சொத்து வியாபாரிகளின் மோசடிகளை எவ்வாறு கையாள்வது?
  • இரண்டு M3M குழும நிறுவனங்கள் நொய்டாவில் நிலப் பார்சல்களை மறுத்தன
  • இந்தியாவின் மிகப்பெரிய நெடுஞ்சாலைகள்: முக்கிய உண்மைகள்
  • கொச்சி மெட்ரோ டிக்கெட்டை மேம்படுத்த கூகுள் வாலட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது
  • மூத்த வாழ்க்கைச் சந்தை 2030ல் $12 பில்லியனைத் தொடும்: அறிக்கை
  • டிகோடிங் குடியிருப்பு சந்தை போக்குகள் Q1 2024: அதிக விநியோக அளவு கொண்ட வீடுகளைக் கண்டறிதல்