2023 ஆண்டுக்கான PM கிசான் பயனாளிகள் பட்டியலை காண்பது எப்படி?

PM கிசான் பயனாளிகளின் பட்டியலை ஆன்லைனில் பார்க்கும் வசதியை பி.எம் கிசான் இன் (PM Kisan )அதிகாரப்பூர்வ இணையதளம் வழங்குகிறது. அதை எப்படி காண்பது என்பது இங்கே

பிஎம் – கிசான் 13வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27-ம் தேதி கர்நாடகாவில் இருந்து வெளியிடுகிறார். இந்த 13-வது தவணையை பெறத் தகுதி வாய்ந்த விவசாயிகள் பிப்ரவரி 10, 2023-க்குள் இ-கேஒய்சி நடைமுறையை பூர்த்தி செய்திருக்க வேண்டும். தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ள தவணத் தொகையான ரூ.2000-க்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பிஎம் கிசான் பயனாளிகள் பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா என்பதை கீழ்கண்ட படிப்படியான வழிகாட்டுதல் மூலம் அறியலாம்.

 

PM கிசான் திட்டத்தின் கீழன பயனாளிகளின் எண்ணிக்கை

1 ஆவது தவணை      :   3.16 கோடி விவசாயிகள்

2 ஆவது தவணை   :  6 கோடி விவசாயிகள்

3 ஆவது தவணை   :  7.66 கோடி விவசாயிகள்

4 ஆவது தவணை   :  8.20 கோடி விவசாயிகள்

5 ஆவது தவணை   :  9.26 கோடி விவசாயிகள்

6 ஆவது தவணை   :  9.71 கோடி விவசாயிகள்

7 ஆவது தவணை   :  9.84 கோடி விவசாயிகள்

8 ஆவது தவணை   :  9.97 கோடி விவசாயிகள்

9 ஆவது தவணை   : 10.34 கோடி விவசாயிகள்

10 ஆவது தவணை : 10.41 கோடி விவசாயிகள்

11 ஆவது தவணை : 10.45 கோடி விவசாயிகள்

12 ஆவது தவணை :  8.42 கோடி விவசாயிகள் 

 

மேலும் காண்க : PM கிசான் போர்ட்டலை எவ்வாறு பயன்படுத்துவது?

 

PM கிசான் பயனாளிகளின் பட்டியலை சரிபார்ப்பதற்கான படிநிலைகள்

இந்திய மத்திய அரசு, பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா radhan Mantri Kisan Samman Yojana (பி.எம். (PM) கிசான்) திட்டத்தின் கீழ், நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவியை 3 சம தவணைகளில் வழங்குகிறது. பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்க்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிநிலைகளைப் பின்பற்றவும்:

படிநிலை  1: PM கிசான்  பயனாளிகள் பட்டியலைச் சரிபார்க்க பின்வரும் இணைப்பின் மீது  கிளிக் செய்யவும்: https://pmkisan.gov.in/Rpt_BeneficiaryStatus_pub.aspx

 

How to view PM Kisan beneficiary list?

 

படிநிலை 2: காட்சிப்படுத்தப்படும் திரையில், தோன்றும் கீழ் விரிப்பட்டியலில் உங்களிடம் பின் வருபவை கேட்கப்படும்:

01. மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்

How to view PM Kisan beneficiary list?

 

02. மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்

 

03. துணை மாவட்டத்தைத் தேர்ந்தெடுங்கள்

How to view PM Kisan beneficiary list?

 

04. வட்டாரத்தை தேர்ந்தெடுங்கள்

How to view PM Kisan beneficiary list?

 

05. கிராமத்தைத் தேர்ந்தெடுங்கள்

How to view PM Kisan beneficiary list?

 

படிநிலை  3: அனைத்தையும் தேர்ந்தெடுத்தத பிறகு , அறிக்கையை பெறுங்கள்”  (‘Get Report’ )   என்ற          விருப்பத்தேர்வில்  கிளிக் செய்யவும்.

 

 

படிநிலை  4: PM கிசான் பயனாளிகளின் பட்டியல் உங்கள் திரையில் தோன்றும். பட்டியல் முழுவதையும் காண கீழிறங்கி ஒவ்வொன்றாக காணவும்.

 

How to view PM Kisan beneficiary list?

 

PM கிசான் நிலை சரிபார்ப்பு  என்ற எங்களது முழுமையான வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம் உங்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தின் நிலை குறித்து  நீங்கள் சரிபார்த்குக்கொள்ளலாம் . உங்கள் PM கிசான்  e-KYC ஐ எவ்வாறு மேற்கொள்வது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

PM கிசான் திட்டம் எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது ?

PM கிசான் யோஜனா 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி , முதல் அமலுக்கு வந்தது.

PM கிசான் மானியத்திற்கு யாரெல்லாம் தகுதி பெறுவார்கள்?

PM கிசான் மானியத்திற்கு கீழே குறிப்பிட்டுள்ளவர்கள் தகுதி பெறுவார்கள்.: பயிரிட தகுதியான நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்கள், நகர்ப்புற அத்துடன் கிராமப்புறங்களைச் சேர்ந்த விவசாயிகள். சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்கள்.

பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் மானியம் எவ்வாறு வழங்கப்படுகிறது?

PM கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள அனைத்து விவசாயிகளி குடும்பங்களுக்கும் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 என்ற அளவில் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி 3 சம தவணைகளில் வழங்கப்படுகிறது.

PM கிசான் பயனாளிகள் பட்டியலில் என்னென்ன விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் ?

PM கிசான் பயனாளிகள் பட்டியலில், பயனாளியின் பெயர், அவரது தந்தையின் பெயர், அவரது பாலினம் மற்றும் அவரது முகவரி ஆகியவற்றை நீங்கள் காணலாம்.

PM கிசான் பயனாளிகளின் பட்டியலை சரிபார்ப்பதற்கான நேரடி இணைப்பு என்ன?

https://pmkisan.gov.in/Rpt_BeneficiaryStatus_pub.aspx என்பது PM கிசான் பயனாளிகளின் பட்டியலை அணுகுவதற்கான நேரடி இணைய இணைப்பாகும்.

Was this article useful?
  • 😃 (0)
  • 😐 (0)
  • 😔 (2)

Recent Podcasts

  • ஹைதராபாத் ஜனவரி-ஏப்.24ல் 26,000 சொத்துப் பதிவுகளை பதிவு செய்துள்ளது: அறிக்கை
  • சமீபத்திய செபி விதிமுறைகளின் கீழ் SM REITs உரிமத்திற்கு ஸ்ட்ராட்டா பொருந்தும்
  • தெலுங்கானாவில் நிலங்களின் சந்தை மதிப்பை சீரமைக்க முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்
  • AMPA குழுமம், IHCL சென்னையில் தாஜ் முத்திரை குடியிருப்புகளை தொடங்க உள்ளது
  • மஹாரேரா மூத்த குடிமக்கள் வீட்டுவசதிக்கான விதிகளை அறிமுகப்படுத்துகிறது
  • எம்பியின் முதல் நகர அருங்காட்சியகம் போபாலில் நிறுவப்படும்