கிழக்கு திசை நோக்கிய வீட்டிற்கான வாஸ்து விதிகள்: கிழக்கு நோக்கி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான திசை மற்றும் பயனுள்ள மற்ற குறிப்புகள்

வாஸ்து சாஸ்திரப்படி கிழக்கு நோக்கி அமைந்துள்ள சொத்து உங்களுக்கு அதிர்ஷ்டமானதா? அந்த விவரங்களை இங்கு நாம் காண்போம். கிழக்கு நோக்கி அமைந்த வீட்டின் வாஸ்து திட்டத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன..

வாஸ்து சாஸ்திரத்தை கணக்கில் கொண்டு அதன்படி பொருத்தமான ஒரு சொத்தை இந்தியாவில் வாங்குவது என்பது ஒரு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் ஓரு கடினமான செயலாகும்.  வாஸ்து சாஸ்திர வல்லுநர்கள் அனைத்து திசைகளும் சமமாகவே நல்லவை என்று கூறினாலும், இந்த விஷயத்தில் பல கட்டுக்கதைகள் நிலவுகின்றன. எடுத்துக்காட்டாக, தெற்கு அல்லது மேற்கு நோக்கிய வீட்டின் வாஸ்து உரிமையாளர்களுக்கு குறைவான சாதகமாகவும் அதேசமயம் கிழக்கு நோக்கிய சொத்து குடியிருப்பாளர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டம்  அளிக்கிறது என்றும் நம்பப்படுகிறது.  வாஸ்து சாஸ்திரத்தின்படி  கிழக்கு நோக்கிய வீடு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது எனவே பெரும்பாலான வீடு வாங்குபவர்கள் இதையே விரும்புகின்றனர்.  இதற்காக சில நேரங்களில், மக்கள் வாஸ்து பொருத்தம் அதிகம் அமைந்த வீடுகளுக்கு கூடுதல் விலை கொடுக்கவும் தயாராக உள்ளனர்.   இது பொருத்தமான ஒன்றா இல்லையா என்பதை இங்கே காணுவோம்.  

Table of Contents

 

கிழக்கு நோக்கிய வீட்டின் வாஸ்து விதிகள்

நீங்கள் கிழக்கு நோக்கி ஒரு வீட்டைக் கட்டத் திட்டமிட்டால், வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க, வாஸ்து பொருத்தமுள்ள திட்டத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம். உங்கள் தேவைகளுக்கு ஏற்ப, கிழக்கு நோக்கிய வீட்டிற்கான வாஸ்துப் பொருத்தம் சரிவர அமைய ஒரு சிறந்த கட்டிடக் கலைஞர் அல்லது திட்டமிடுபவரை நீங்கள் ஆலோசிக்கலாம். கிழக்கு நோக்கிய வீடு இருந்தால், உங்கள் வீட்டுத் திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி இங்கே சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. 

 

East-facing house Vastu plan

 

கிழக்கு திசை நோக்கிய வீட்டின் வரை படம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.  இது வடக்கிலிருந்து தெற்கு வரை ஒன்பது பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு திசை நோக்கிய வீடு கட்டும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய சில முக்கிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

  • உங்கள் வீடு கிழக்கு நோக்கியிருந்தால், பிரதான கதவுகளை ஐந்தாவது பாதத்தில் வைக்கவும். இது மரியாதை, புகழ் மற்றும் அங்கீகாரத்தை ஈர்க்கிறது. ஐந்தாவது பாதம் சிறியதாக இருந்தால், நீங்கள் மூன்றாவது, நான்காவது, ஆறாவது அல்லது ஏழாவது பாதங்களையும் பயன்படுத்தலாம்.
  • பிரதான கதவை அமைக்க முதல், இரண்டாவது, எட்டாவது மற்றும் ஒன்பதாவது பாதங்களைத் தவிர்க்கவும்.
  • கிழக்கு நோக்கிய வீட்டின் பிரதான நுழைவாயிலை எட்டு மற்றும் ஒன்பதாவது பாதங்களில் பொருத்துவது வாஸ்து சாஸ்திரங்கள் படி தடை செய்யப்பட்டுள்ளது, ஏனெனில் அதன் மூலம் தான் வீட்டிற்குள் நோய்கள் நுழையக்கூடும்.   அவ்வாறு ஏதேனும் பிரதான கதவு இருக்குமேயானால், நிவர்த்தி செய்ய வாஸ்து பரிகாரங்கள் செய்யப்படவேண்டும்.  
  • நீங்கள் முதல் பாதத்தில் கதவைப் பொருத்துவதாக இருந்தால், வடகிழக்குச் சுவரில் இருந்து குறைந்தபட்சம் ஆறு அங்குல இடைவெளி விட்டுப் பொருத்தவும்.  

மேலும் காண்க : அதிர்ஷ்டத்திற்கான யானை உருவங்கள்  

 

கிழக்கு நோக்கிய வீடு என்றால் என்ன?

வீட்டின் உட்புறத்திலிருந்து உங்கள் முன் உள்ள நுழைவு வாயில் கதவு வழியே வெளியேறும் போது எதிர்புறம் நீங்கள் காணும் திசையே உங்கள் வீடு நோக்கும் திசையாகும்.  வீட்டை விட்டு வெளியேறும் போது உங்களுக்கு எதிரே கிழக்கு திசை தென்பட்டால் உங்கள் வீடு கிழக்கு நோக்கிய வீடாகும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி கிழக்கு நோக்கிய வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு மிகவும் சிறந்ததாகும்.  விஞ்ஞான ரீதியாக இதை நோக்கும்போது, சூரியன் கிழக்கில் உதிப்பதால், கிழக்கு நோக்கிய வீட்டில் உள்ளவர்களுக்கு அதிகாலை சூரியக் கதிர்கள் பெறும் வாய்ப்பு மிகவும் அதிகம்.   அதிகாலை சூரியக் கதிர்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.  மேலும் கிழக்கு திசையானது அதிகபட்ச நேர்மறை ஆற்றலை அளிக்கவள்ளது.

 

கிழக்கு திசை நோக்கிய வீடு அல்லது அடுக்கு மாடி குடியிருப்பு

கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள கட்டிடங்கள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகள் மிகவும் அதிர்ஷ்டமானவை என்று வாஸ்து சாஸ்திர விதிகள் கூறுகின்றன.   இருப்பினும், தனி  வீடுகள் மற்றும் பங்களாக்களுக்கு கிழக்கு திசை  ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுவதில்லை.   மேலும், கிழக்கு திசை நோக்கிய சொத்துக்களுக்கு வாஸ்து சாஸ்திரங்களின் படி சில குறிப்பிட்ட வாஸ்து விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகள் போன்றவை பின்பற்றப்பட வேண்டும்.

 

கிழக்கு திசை நோக்கிய வீட்டின் சமையலறைக்கான வாஸ்து விதிகள்:

கிழக்கு திசை நோக்கிய வீட்டின் சமையலறை வீட்டின் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும் என்று வாஸ்து விதிகள் அறிவுறுத்துகிறது. அது சாத்தியமில்லை என்றால், வடமேற்கு திசையில் இருப்பதும் நல்லதே.   ஆனால், வடக்கு, வடகிழக்கு மற்றும் மேற்கு திசைகளைத் தவிர்க்கவும். உணவு சமைக்கும் நபர், தென்கிழக்கு சமையலறையில் கிழக்கு திசையையும், வடமேற்கு சமையலறையில் மேற்கு திசையையும் எதிர்கொள்ள வேண்டும்.   வீட்டில் நல்ல சக்திகள் மேலோங்க சமையல் அடுப்பு,  ஓவன் மற்றும் டோஸ்டர்களை தென்கிழக்கு பகுதியில் வைக்கவும். கிழக்கு நோக்கிய வீட்டின் வாஸ்து விதிகளின்படி சேமிப்பு மற்றும் குளிர்சாதன பெட்டி தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும்.

தெற்கு நோக்கிய வீடுகளுக்கான வாஸ்து குறிப்புகளை அறியுங்கள் 

 

கிழக்கு திசை நோக்கிய வீட்டின் பிரதான கதவிற்கான வாஸ்து விதிகள்

கிழக்கு திசை நோக்கிய வீட்டில் பிரதான கதவை எங்கு வடிவமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய முதலில் வீட்டின் கிழக்குப் பக்க  நீளத்தை வடகிழக்கு மூலையிலிருந்து தென்கிழக்கு மூலை வரை ஒன்பது பாகங்கள்/பிரிவுகளாக சமமாக பிரிக்கவும். கிழக்கு திசை நோக்கிய வீட்டிற்கான பிரதான கதவிற்கான வாஸ்து வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு பிரிவும் பாதம் அல்லது படி என குறிப்பிடப்படுகிறது. ஐந்தாம் பாதம் புகழின் கடவுளான சூரியனின் இருப்பிடமாக இருப்பதால் பிரதான கதவுக்கு இதுவே மிகவும் உகந்தது.  இதனால் குடியிருப்பாளர்களுக்கு பெயர், புகழ் மற்றும் மரியாதை அதிகரிக்கும். 

கிழக்கு திசை  நோக்கிய வீட்டில் பிரதான நுழைவாயில் கதவை பொருத்தும்போது கவனமாக இருங்கள். வாஸ்து விதிகளின்படி, கிழக்கு நோக்கிய சொத்தில் பிரதான கதவை வைப்பதற்கு இந்த இரண்டு மூலைகளும் துரதிர்ஷ்டவசமாக கருதப்படுவதால், உங்கள் நுழைவாயில் தென்கிழக்கு அல்லது வடகிழக்கில் இல்லாமல் நடுவில் இருப்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் பிரதான நுழைவு வாயில் வடகிழக்கு மூலையில் இருந்தால், பிரதான கதவு வடகிழக்கு மூலையைத் தொடாமல் இருக்குமாறு அமைக்கவும்.  இதற்காக, சுவருக்கும் பிரதான கதவுக்கும் இடையில் குறைந்தது 6 அங்குலங்கள் (1/2 அடி) இடைவெளி விடலாம்.

உங்கள் வீட்டின் பிரதான வாசல் தென்கிழக்கு திசை நோக்கி இருந்தால், வாஸ்து தோஷத்தைப் போக்க கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்யலாம். 

  1. கதவின் இருபுறமும் ஒவ்வொன்றும் பிரதான கதவின் மேல் புறம் ஒன்றும் ஆக மொத்தம்  மூன்று வாஸ்து பிரமிடுகளை வைக்கவும். 
  2. ஓம், ஸ்வஸ்திக் மற்றும் திரிசூலம் ஆகியவற்றின் சின்னத்தையும் கதவின் இருபுறமும் வைக்கலாம்.
  3. வீட்டிலிருந்து தோன்றும் எதிர்மறை சக்திகளை அகற்ற சித்த சுக்ரா யந்திரத்தை நிறுவவும்.
  4. இல்லையெனில், இந்த மூலையில் உருவாகும் நேர்மறை சக்தியை அதிகரிக்க சித்த வாஸ்து கலசத்தையும் பயன்படுத்தலாம்.

வீட்டின் பிராதன கதவுக்கான வாஸ்து  பற்றி அனைத்தையும் அறியுங்கள்

 

கிழக்கு திசை நோக்கிய வீட்டிற்கான பிரதான படுக்கையறை வாஸ்து

வீடுகளுக்கான வாஸ்து விதிகளின் படி, கிழக்கு திசை நோக்கிய வீடுகளில் தென்மேற்கு திசையில் ஒரு பிரதான படுக்கையறை இருக்க வேண்டும்.  பிரதான படுக்கையறை வீட்டில் உள்ள மற்ற அறைகளை விட பெரியதாக இருக்க வேண்டும்.  வாஸ்து விதிகளின்படி, படுக்கையை வைக்க சரியான இடம் அறையின் தெற்கு அல்லது மேற்கு சுவர் ஆகும், அதனால் தலை தெற்கு அல்லது மேற்கு திசையிலும், கால்கள் வடக்கு அல்லது கிழக்கு திசையிலும் இருக்கும். பிரதான படுக்கையறையில் உடை மாற்றும் அறைக்கு சிறந்த இடம் அறையின் மேற்கு அல்லது வடக்குப் பகுதி ஆகும்.   மேலும், படுக்கைக்கு நேர் எதிரே குளியலறை இருக்கக்கூடாது.,  மற்றும் குளியலறையின் கதவு எல்லா நேரங்களிலும் மூடப்பட்டு இருக்க  வேண்டும்.

மேலும் காண்க: வாஸ்துப்படி உறங்குவதற்கான சிறந்த திசை

 

கிழக்கு திசை நோக்கிய வீட்டின் வாழ்வறைக்கான வாஸ்து

கிழக்கு திசை நோக்கிய வீட்டில், வாஸ்து விதிகளின்படி, மங்களகரமானதாகக் கருதப்படும் வடக்கு-கிழக்கு பகுதியில் வாழும் அறையை (டிராயிங் ரூம்) வைக்கவேண்டும். மேலும், வடக்கு மற்றும் கிழக்கு பக்க சுவர்கள் தெற்கு மற்றும் மேற்கு சுவர்களை விடச் சற்று குறுகியதாகவும் மெல்லியதாகவும் இருப்பதை உறுதி செய்யவும். இது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் செழிப்பு மற்றும் வெற்றியை அளிக்கும். 

 

கிழக்கு நோக்கிய வீட்டில் சாப்பாட்டு அறைக்கான  வாஸ்து விதிகள்

கிழக்கு நோக்கிய வீட்டில், சாப்பிடும் அறை கிழக்கு, மேற்கு அல்லது தெற்கு பக்கத்தில் சமையலறையின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். மேலும், சாப்பாட்டு அறையின் கதவு நுழைவாயிலை நோக்கி இருக்கக்கூடாது.  வாஸ்து விதிகளின்படி உணவு உண்பவர் கிழக்கு, வடக்கு அல்லது மேற்குப் பக்கம் நோக்கி அமர்ந்திருக்க வேண்டும். குடும்பத் தலைவர் கிழக்கு நோக்கியும் மற்றவர்கள் கிழக்கு, வடக்கு அல்லது மேற்கு நோக்கியும் அமரலாம்.

 

கிழக்கு நோக்கிய வீட்டில் பூஜை அறைக்கான வாஸ்து விதிகள்

கிழக்கு நோக்கிய வீட்டில் பூஜை அறைக்கான வாஸ்து விதிகளை நிர்ணயிக்கும் போது, அது  கடவுள் சிலைகள் வைக்கப்படும் மந்திர் அல்லது புனிதமான மேடை என்பதால் என்பதால் வாஸ்து கொள்கைகளை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.

பூஜை அறைக்கான வாஸ்து வழிகாட்டுதல்களின்படி, கிழக்கு திசை நோக்கிய வீட்டிற்கு, பூஜை அறை வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும்.  இருப்பினும், கிழக்கு திசை நோக்கிய வீட்டில் பூஜை அறைக்கு இந்த இடம் பொருந்தவில்லை என்றால், வாஸ்து விதிகள் வடக்கு அல்லது கிழக்கு மூலை போன்ற மாற்று திசைகளையும் அனுமதிக்கிறது.   பிரார்த்தனை செய்யும் நபர் இந்த திசைகளை நோக்கியே பிரார்த்தனை செய்ய வேண்டும்.  பூஜை அறையின் மேல் புறச்சுவர் மற்ற அறைகளை விட தாழ்வாக இருக்க வேண்டும்.

கிழக்கு திசை நோக்கிய வீட்டில் வாஸ்து விதிகளின்படி பூஜை அறையை  குளியலறை போன்ற மற்ற பகுதிகளில் இருந்து தள்ளி வடிவமைப்பது நல்லது.  ஒரு போதும் பூஜை அறை குளியலறையை ஒட்டி இருக்கக் கூடாது.

 

கிழக்கு நோக்கிய வீட்டில் படிப்பறைக்கான வாஸ்து

கிழக்கு நோக்கிய வீட்டில் வாஸ்து விதிகளின்படி, படிப்பறை வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசையை எதிர்கொள்ள வேண்டும், அதே நேரத்தில் வடக்கு திசை இரண்டாவது சிறந்த திசையாகும். மேலும், படிக்கும் நாற்காலிக்கு நேர் பின் புறம் கதவு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளவும்.   படிக்கும் மேஜைக்கு முன்புறம் சற்று திறந்த வெளி இருக்க வேண்டும். சுவருடன் டேபிளை ஒட்டிப் போட வேண்டியிருந்தால்,  நேர் மறை சக்திகள் சுழற்சிக்காக, படிக்கும் மேசைக்கும் பக்கத்து சுவருக்கும் இடையில் சற்று இடைவெளி விடலாம்.

 

கிழக்கு நோக்கிய வீட்டில் படிக்கட்டிற்கான  வாஸ்து

வாஸ்து விதிகளின்படி கிழக்கு நோக்கிய வீடுகளில், வீட்டின் வடகிழக்கு மூலையில் படிக்கட்டுகளைத் தவிர்க்கவும். கிழக்கு நோக்கிய வீட்டில் படிக்கட்டிற்கு உகந்த இடம் தென்கிழக்கு மூலை அல்லது வடமேற்கு மூலையாகும்.  ஒருபோதும் வீட்டின் மையப் பகுதியில் படிக்கட்டுகளை அமைக்கக்கூடாது.  படிகள் எப்போதும் வலதுபுறம் இருந்து இடது புறம் (கடிகார திசையில்) திரும்ப வேண்டும். படிக்கட்டுகளின் கீழ் எந்த அறையும் கட்டப்படக்கூடாது,  இருப்பினும் அந்த இடத்தை சேமிக்கும் இடமாகப் பயன்படுத்தலாம்.

 

கிழக்கு திசை நோக்கிய வீட்டில் வாஸ்து விதிகளின் படி குளியலறைக்கான இடம்

வாஸ்து விதிகளின்படி கிழக்கு நோக்கிய வீட்டை வடிவமைக்கும் போது, குளியலறை தென்கிழக்கு அல்லது வடமேற்கு பக்கத்தில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையில் குளியலறை மற்றும் கழிப்பறை கட்டுவதை அறவே தவிர்க்கவும்.

 

வாஸ்து விதிகளின்படி கிழக்கு நோக்கிய வீடு வடிவமைக்கும் போது தவிர்க்க வேண்டியவை

  • சமையலறை வடகிழக்கு மூலையில் இருக்கக்கூடாது.
  • வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பெரிய மரங்கள் இருக்கக்கூடாது
  • வடக்கு மற்றும் வடகிழக்கு மூலையில் தேவையற்ற பொருள்கள், அழுக்கு, குப்பை தொட்டிகள் போன்றவை இருக்கக்கூடாது.
  • வடகிழக்கு திசையில் படிக்கட்டுகளை அமைப்பதைத் தவிர்க்கவும்.
  • வடக்கு-கிழக்கு திசையில் கேரேஜ் வடிவமைக்கப்படக்கூடாது.

 

கிழக்கு நோக்கிய வீடு வாஸ்து: சுவர் நிறங்கள்

வாஸ்துவின்படி கிழக்கு நோக்கிய அடுக்கு மாடிக்குடியிருப்பு வீடுகளின்  சுவர் வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பது, வீடு பிரகாசமாகவும் வரவேற்கும் தன்மையையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில்  இருக்க வேண்டும்.அப்படியாக  இது போதுமான சூரிய ஒளியைப் பெறுவது முக்கியம். மேலும், பிரகாசத்தை அதிகரிக்க, சுவர்களுக்கு  சரியான வண்ணப்பூச்சுக்களை  தேர்வுசெய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். கிழக்கு நோக்கிய அடுக்கு மாடிக்குடியிருப்பு வீட்டுக்கு  பச்சை மற்றும் நீலம் சிறந்த வண்ணத் தேர்வுகள். அமைதியை அளிப்பதுடன் அவை அறையை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் அதிநவீனமாகவும் ஆக்குகின்றன. மிகக்குறைந்த கருத்தோற்றத்திற்கு , வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தின் நுட்பமான வண்ணக்கூறுகளின் வண்ண கலவையைப் பயன்படுத்தவும்.

 

கிழக்கு நோக்கிய வீட்டிற்கான வாஸ்து:  கலை வேலைப்பாடுகள் மற்றும் கலைப்பொருட்களை வைப்பதற்கான குறிப்புகள்

கிழக்கு நோக்கிய அடுக்குமாடி குடியிருப்புக்கான வாஸ்து விதிகளின்படி உதயசூரியன் ஓவியத்தை கிழக்குப் பகுதியில் வைப்பதால், குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உறவுகள் மேம்படும் மற்றும் புகழ் ஓங்கும்.   வரவேற்பறையின் கிழக்கு சுவரில் ஏழு குதிரைகள் தண்ணீரின் குறுக்கே ஓடும் ஓவியத்தை தொங்க விடுவது செல்வத்தை ஈர்க்கும்.  இளங்காற்றைக் குறிக்கும் நிறம் பச்சை மற்றும் அது கிழக்கு திசையை நிர்வகிக்கிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி பசுமையான மரங்கள், வயல்வெளிகள், காடுகள் போன்றவற்றின் ஓவியம் வளர்ச்சியைக் குறிக்கிறது. அத்தகைய ஓவியங்களை கிழக்குச் சுவரில் மாட்டலாம்.   மேலும்,  கிழக்கு நோக்கி வைக்கப்படும் சிரிக்கும் புத்தர் சிலை குடும்பத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்தும்.  

 

கிழக்கு திசை நோக்கிய வீட்டில் தண்ணீர் தொட்டிக்கான  வாஸ்து

நிலத்தடி நீர் தொட்டிக்கு ஏற்ற இடம் வடக்கு – வடகிழக்கு.   நிலத்தடி நீர் தொட்டி வைப்பதற்கு கிழக்கு – வடகிழக்கு திசையும் பொருத்தமானதே.  மேல்நிலை நீர் தொட்டி அமைக்க சிறந்த திசை தென்மேற்கு அல்லது மேற்கு.   வாஸ்து விதிகளின்படி எந்த ஒரு தண்ணீர் தொட்டியையும் மையப்பகுதியில் வைக்க கூடாது.

 

கிழக்கு திசை நோக்கிய வீட்டில் பால்கனி அல்லது திறந்தவெளி இடங்களுக்கான வாஸ்து

கிழக்கு நோக்கிய வீட்டிற்கு வாஸ்து விதிளின்படி, பெரும்பாலும் கிழக்குப் பகுதி திறந்த வெளியாக விடப்படும். சூரிய ஒளி தடையின்றி வீட்டிற்குள் படுவதை உறுதி செய்ய இவ்வாறு செய்யப்படுகிறது.   மேலும் எதிர்மறை ஆற்றல்களை நீக்கி நேர்மறை ஆற்றலை ஊக்குவிக்கிறது. எனவே, இந்த வகையான கிழக்கு நோக்கிய வீட்டின் வாஸ்து திட்டம் அதில் குடியிருப்பவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தருகிறது.   கிழக்கு மூலையை அடைத்து வைப்பதால், பிரசவத்தின் போது ஏற்படும் சிரமம் உள்ளிட்டபல  உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.

வீட்டின் கிழக்குப் பகுதியில் போதுமான இடவசதியை வழங்கவும். போதுமான அளவு இடவசதி  இல்லை என்றால் சிறிய பால்கனியை உருவாக்கவும்.

கிழக்கு திசை நோக்கிய வீட்டில் வாஸ்து விதிகளின்படி செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

  • வடக்கு மற்றும் கிழக்கு திசைச் சுவர்கள் தெற்கு மற்றும் மேற்கில் உள்ளவற்றை விட சற்று குறுகியதாகவும் மெல்லியதாகவும் இருக்க வேண்டும்.
  • சமையலறை தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் திட்டமிடப்பட வேண்டும்.
  • சமையல் செய்யும் போது, தென்கிழக்கு பகுதியில் உள்ள சமையலறையில் கிழக்கு திசை நோக்கியும்   வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள  சமையலறையில் மேற்கு திசை நோக்கியும் இருக்கும் வகையில் சமையலறையைத் திட்டமிடவேண்டும். 
  • வடகிழக்கு திசையில் உள்ள பூஜை அறை மற்றும் வரவேற்பறை அறை, மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
  • விருந்தினர் அறையை வடமேற்கு திசையில் திட்டமிடலாம்.
  • தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சாய்வாக இருக்கும் மனை மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.
  • கிழக்கில் உயரமான மரங்களை நட வேண்டாம், இது விலைமதிப்பற்ற சக்தி வாய்ந்த இளங்காலைச் சூரிய ஒளியைத் தடுக்கும்.
  • தென்மேற்கு திசையில் அமைக்கப்பட்ட பிரதான படுக்கையறை சிறந்ததாகக் கருதப்படுகிறது.
  • வடகிழக்கு மூலையில் படுக்கையறை, கழிப்பறை மற்றும் கழிவுநீர் தொட்டிகள் இருக்கக்கூடாது.
  • வீட்டின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் அதிக திறந்த வெளியை விடவும்.
  • கதவு கிழக்கு திசையில் இருந்தால் மரத்தால் செய்யப்பட்ட பெயர்ப்பலகை பொருத்தமானது.
  • மனையின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியின் எல்லைச் சுவர் உயரமாக இருக்க வேண்டும்.
  • தெற்கு அல்லது மேற்கு திசையில் உள்ள நிலத்துடன் இணைந்த சொத்துக்களை வாங்குவதைத் தவிர்க்கவும்.
  • பிரதான நுழைவாயிலின் வெளிப்புறத்தில் நீரூற்று அல்லது அலங்காரப் பொருட்களை வைக்க வேண்டாம்.
  • ஷூ ரேக்கை ஒருபோதும் தென்கிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்க வேண்டாம்.
  • எந்தப் பக்கம் இருந்தும் ‘T’ சந்தியில் அமைந்துள்ள வீட்டு மனையை தவிர்க்கவும். தென்கிழக்கு மூலையை நோக்கி  துருத்திக்கொண்டு தெருப்பார்வை படும் வீட்டு மனையைத் தவிர்க்கவும்.
  • கிழக்கு நோக்கிய வீட்டை வடிவமைக்கும் போது, ​​கூரையின் சரிவு கிழக்கு நோக்கி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது மங்களகரமானது என்பதால் கூரை அல்லது தகரங்கள் கீழ் நோக்கி வளைந்திருக்க வேண்டும்.
  • வடக்கு திசையில் காலி மனை இணைந்த சொத்தை தவற விடாதீர்கள், அது மிகுந்த அதிர்ஷ்டம் வாய்ந்ததாக கருதப்படுகிறது  அது செழிப்பையும் செல்வத்தையும் அள்ளித் தருகிறது.
  • வீட்டில் மாணவர்கள் யாராவது இருந்தால், வடகிழக்குப் பகுதியில் ஒரு கிரிஸ்டல் (ஸ்படிக) உருண்டையை வைக்கவும்.
  • ஆற்றல்மிக்க நல் அதிர்வுகளை அதிகரிக்க, வாரத்திற்கு இரண்டு முறை மலை உப்பைக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்தவும்.

 

கிழக்கு திசை நோக்கிய வீடு நல்லதா?

கிழக்குப் பகுதி விசாலமாக உள்ள வீடு மிகுந்த அதிர்ஷ்டம் கொண்டவையாகவும் செல்வ செழிப்பு அளிப்பவையாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.   மற்ற திசைகளை விட கிழக்கில் அகலமாகவும் மற்றும் தாழ்வாகவும் இருக்கும் வீடுகள் மிகவும்  அதிர்ஷ்டமான ஒன்றாக கருதப்படுகிறது.

 

கிழக்கு நோக்கிய வீடுகளில் வசிக்கப் பொருத்தமானவர்கள் யார்?

வாஸ்து ஆலோசகர்களின் கூற்றுப்படி, மனிதர்களைப்  போல ஒவ்வொரு வீடும் தனித்துவமானது.  அனைத்து வீடும் அனைவருக்கும் பொருந்தாது. கிழக்கு திசை நோக்கிய வீட்டில் சூரியன் ஆதிக்கம் செலுத்தும் எனவே அது அதிகாரம், சக்தி மற்றும் நேர்த்தியுடன் கூடிய வேலை போன்றவற்றுடன் தொடர்புடையது. கிழக்கு திசையானது காற்று, சுறுசுறுப்பு, படைப்பாற்றல், கவனம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. கிழக்கு நோக்கிய வீடுகள் அரசு அலுவலகங்களில் இருப்பவர்கள் அல்லது வணிகம் செய்பவர்களுக்கு ஏற்றது.   இது தவிர, கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் போன்ற படைப்பாளிகளுக்கு கிழக்கு நோக்கிய வீடுகள் மிகவும் நன்மை அளிக்கும்.  

ஜோதிட சாஸ்திரப்படியான கிழக்கு நோக்கிய வீட்டு வடிவமைப்பு

கிழக்கு நோக்கிய சொத்து ஒன்றை  வாங்குவது குறித்து நீங்கள் ஆலோசிக்கிறீர்கள் என்றால், அந்த சொத்து குடியிருப்பவரின் ஜன்ம நட்சத்திரத்துடுடன் ஒன்றிணைந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இதற்கு வீட்டில் வசிப்பவர்களின் ஜோதிடவியலின் படியான  கணக்கீடுகளைக் கருத்தில் கொள்வது அவசியம்.  இதன் மூலம் , அந்த நபருக்கு மிகவும் பொருத்தமான சாதகமான திசையை ஒருவரால் அறிந்து கொள்ளமுடியும். ஜோதிட சாஸ்திரப்படி சூரியன் கிழக்கு திசையை ஆளும் ஒரு கிரகம். எனவே, ஒருவரின் ஜோதிட கட்ட அமைப்புக்களின் படி சூரியனின் இருப்பிடம் அவருக்குப் பொருந்தவில்லை என்றால், கிழக்கு நோக்கிய வீடு அந்த நபருக்கு சாதகமாக இருக்காது.

கிழக்கு நோக்கிய வீட்டிற்கு எந்த ராசி பொருத்தமானது

கிழக்கு நோக்கிய வீடுகள் துலாம் ராசி (லிப்ரா- துலாம்)க்காரர்களுக்கு  சாதகமாக கருதப்படுகிறது.

மேலும் காண்க:சுவர் கடிகாரம் குறித்த வாஸ்து குறிப்புகள் 

 

கிழக்கு திசை நோக்கி அமைந்த வீட்டில் உள்ள பொதுவான வாஸ்து குறைபாடுகள்

  • நீங்கள் பொது வாழ்வில் தகுந்த அங்கீகாரம் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டால் அல்லது உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டால் அல்லது குடும்பத்திற்குள்ளேயே உறவில் விரிசல் ஏற்பட்டால், கிழக்கு திசையில் உள்ள எதிர்மறை சக்திகள் காரணமாக இது இருக்கலாம். கிழக்கு திசையில் படிக்கட்டுகள், குளியலறைகள் அல்லது சமையலறைகள் போன்றவை அமைந்து இருப்பதால் இருக்ககூடும்.  
  • கிழக்கு நோக்கி வெளிப்புறம் திறக்கும் கதவுகள் மற்றொரு பொதுவான வாஸ்து குறைபாடு ஆகும்.    மேலும், வாஸ்து விதிகளின்  படி, மொத்த கதவுகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையாகவும் மற்றும் அதன் எண்ணிக்கை பூஜ்ஜியத்துடன் முடிவதாகவும் இருக்கக்கூடாது.  
  • கிழக்கு திசையில் அதிக குப்பை கூளங்கள் மற்றும் இடிபாடுகள் இருந்தால் அவை எதிர்மறை சக்திகளை உண்டாக்குகிறது.  வீட்டின் உரிமையாளர்கள் கிழக்கு நோக்கிய வீடுகளை காற்றோட்டமாக, வைத்திருக்க வேண்டும்.

 

கிழக்கு நோக்கிய வீட்டிற்கான தாவரங்கள்

கிழக்கு திசை நோக்கிய வீட்டில் நன்றாக வளரக்கூடிய சில தாவரங்களின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.  

  • துளசி செடி
  • அதிர்ஷ்டம் தரும் மூங்கில் செடி
  • மணி பிளான்ட்
  • வேப்ப மரம் 
  • வாழை மரம்
  • சாமந்தி பூ செடி 
  • பிளம் பூக்கள்
  • எலுமிச்சைச் செடி 
  • டாஃபோடில்ஸ்
  • தாமரை
  • கற்றாழை

 

கிழக்கு நோக்கிய வீட்டின்  வாஸ்துவை எப்படி தீர்மானிப்பது?

கிழக்கு நோக்கிய வீட்டிற்கான வாஸ்துவைப் புரிந்து கொள்ளும்போது, கிழக்குப் நோக்கியது என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டு, ஒரு கிழக்குப் பார்த்த வீட்டை  சரியாக அடையாளம் காண்பது அவசியம். இருப்பினும், சூரியன் உதிக்கும் திசையை நோக்கியிருக்கும் வீட்டையே  கிழக்கு நோக்கிய வீடு என்று பொதுவாக பலர் தவறாக நினைக்கிறார்கள். இதைப் புரிந்து கொள்ள, பூமி சுழலும் அச்சு 23.5 டிகிரி சாய்வாக உள்ளது என்பதையும், சூரிய உதயத்தின் திசை ஒரு வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மாறுகிறது என்பதையும் ஒருவர் அறிந்திருக்க வேண்டும். அதாவது, பூமி சூரியனை ஒரு சுற்று   சுற்றி  முடிக்கும்போது பருவ கால மாற்றங்கள் ஏற்ப்படுகின்றன சூரியன் ஒரு வருடத்தில் இரண்டு முறை, மார்ச் 20 அல்லது மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 22 அல்லது செப்டம்பர் 23 ஆகிய தேதிகளில் மிகச் சரியாக  கிழக்கு திசையில் உதயமாகும். வாஸ்து படி வீட்டின் கிழக்கு திசையை தீர்மானிக்க, வடக்கு திசையை துல்லியமாக சுட்டிக்காட்டும் திசைகாட்டி பயன்படுத்தவும். இப்போது, பிரதான நுழைவாயில் வழியாக வீட்டை விட்டு வெளியே  வரவும் . நீங்கள் எதிர்கொள்ளும் திசை கிழக்காக இருந்தால், உங்கள் கதவு கிழக்கு நோக்கிய கதவாக அமைந்திருக்கும், அப்படியானால் அதுவே  கிழக்கு நோக்கிய வீடு. 

 

கிழக்கு திசை நோக்கிய வீடு கட்டுவதற்கான குறிப்புகள்

கிழக்கு திசை நோக்கிய ஒரு வீட்டை கட்டுவதற்கு முன் , கிழக்குப் புறம் போதுமான திறந்தவெளியை விட்டு வைக்கவும். இது  அங்கு குடியிருப்பவர்கள் நிறைந்த செல்வம் மற்றும் சந்ததியுடன் நீண்டு வாழ்வதை உறுதி செய்யும்.

பிரதான வாயில் வடகிழக்கில் இருக்க வேண்டும், ஆனால் கிழக்கு முகப்பு சுவரின் உயரம் சொத்தின் மேற்கு பின்புறச்  சுவரை விட குறைவாக இருக்க வேண்டும்.

கட்டுமான காலத்தில், கிழக்குப் பகுதியில் ஒரு வராண்டா அல்லது உள் முற்றம் இருக்குமாறு திட்டமிடவும், ஏனெனில் இது அங்கு குடியிருப்போருக்கு செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.

கட்டுமான நேரத்தில் கூட, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்கவும்.    குவித்து வைக்கப்படும் குப்பைகள் அல்லது கட்டிட இடுபாடுகள் நம்மைச் சூழ்ந்துள்ள விண்வெளியில் இருந்து பிரதான நுழைவாயிலை நோக்கி வரும் நேர்மறை ஆற்றலைத் தடுக்கிறது.

 

கிழக்கு நோக்கிய வீட்டு மனைகளுக்கான வாஸ்து குறிப்புக்கள்.

கிழக்கு நோக்கிய வீட்டுமனையில் அமைந்திருக்கும் வீட்டின்  பிரதான நுழைவாயில் எப்போதும் கிழக்கு நோக்கியே  இருக்க வேண்டும். மனை நோக்கியிருக்கும் திசை அதிருஷ்டத்திற்கான ஒரு அமைப்பாக பொதுவாக நம்பப்படுகிறது. இருப்பினும், நுழைவு வாயில் கதவு எந்தத் திசையை நோக்கி அமைந்திருக்கிறதோ அதுவே அந்த  கிழக்கு நோக்கிய வீட்டுமனையின்  அதிர்ஷ்டத்தை நிர்ணயிக்கும் என்று கருதப்படுகிறது.

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs): 

கிழக்கு திசை நோக்கிய வீடு என்றால் என்ன?

வீட்டிலிருந்து வெளியே வரும்போது உங்கள் கையில் உள்ள திசைகாட்டி காண்பிக்கும் திசையே கிழக்கு ஆகும்.

வாஸ்து விதிகளின்படி கிழக்கு நோக்கிய வீடு நல்லதா?

கிழக்கு திசை என்பது வாழ்க்கை, வெளிச்சம் மற்றும் சக்தியைக் குறிக்கும் ஏனென்றால் சூரியன் அங்கிருந்துதான் உதிக்கிறது. இதன் காரணமாகவே இது மிகுந்த அதிர்ஷ்டம் உள்ளதாகக் கருதப்படுகிறது.

கிழக்கு திசை நோக்கிய வீட்டின் கதவுகள் வாஸ்து சாஸ்திரத்தின்படி எவ்விதப் பொருள்களால் செய்வது நல்லது?

மரத்தால் ஆன மற்றும் உலோகப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட கதவு கிழக்கு திசை நோக்கிய வீடுகளுக்கு மிகவும் உன்னதமானதாகும்.

கிழக்கு திசை பார்த்த வீடு நல்லதா கெட்டதா?

வாஸ்து விதிகளின்படி, கிழக்கு திசை நோக்கிய வீடு சிறந்ததாகக் கருதப்படுகிறது, அதிலும் குறிப்பாக அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு மிகவும் உன்னதமானதாகும்.

கிழக்குத்திசை நோக்கிய வீட்டினால் விளையக்கூடிய இடர்பாடுகள் என்ன?

வாஸ்து படி, கிழக்குத்திசை நோக்கிய வீடுகள் மங்களகரமானதாகக் கருதப்படுவதால், வாஸ்துபடி அதற்கு இணக்கமான முறையில் வீட்டை வடிவமைப்பது, நேர்மறை ஆற்றலையும் செழிப்பையும் வீட்டின் உரிமையாளருக்கு ஈர்த்து வழங்குகிறது. எப்படியிருந்தாலும், கிழக்கு நோக்கிய வீட்டின் முக்கியமான குறைபாடுகளில் ஒன்று, குறிப்பாக கோடைக் காலங்களில் அதிகப்படியான வெப்பத்தை யாளவேண்டியதிருக்கும்.

(சுர்பி குப்தா மற்றும் பூர்ணிமா கோஸ்வாமி ஷர்மாவின் உள்ளீடுகளுடன்)

 

Was this article useful?
  • 😃 (2)
  • 😐 (2)
  • 😔 (0)

Recent Podcasts

  • கோடைகாலத்திற்கான உட்புற தாவரங்கள்
  • பிரியங்கா சோப்ராவின் குடும்பம் புனேவில் உள்ள பங்களாவை இணை வாழும் நிறுவனத்திற்கு குத்தகைக்கு எடுத்துள்ளது
  • HDFC கேப்பிட்டலில் இருந்து பிராவிடன்ட் ஹவுசிங் ரூ.1,150 கோடி முதலீட்டைப் பெறுகிறது
  • ஒதுக்கீடு கடிதம், விற்பனை ஒப்பந்தம் பார்க்கிங் விவரங்கள் இருக்க வேண்டும்: மஹாரேரா
  • சுமதுரா குழுமம் பெங்களூருவில் 40 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துகிறது
  • Casagrand சென்னையில் பிரெஞ்சு கருப்பொருள் குடியிருப்பு சமூகத்தை அறிமுகப்படுத்துகிறது