நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 குறித்த அனைத்துத் தகவல்களும்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் முக்கியமான விதிகள் மற்றும் மேலோங்கிய சந்தைத் திறன்களுக்கு எதிராக வீடு வாங்குபவர்கள் உட்பட அனைத்து வாடிக்கையாளர்களின் நலன்களையும் இச்சட்டம் எவ்வாறு பாதுகாக்கிறது என்பது குறித்தும் இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளின்  சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் விநியோகிக்கும் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு இடையே, மேம்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தும் விதமாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ஐ அமல்படுத்தியதன் மூலம், சட்டத்தின் முந்தைய பதிப்பு முப்பதாண்டு காலம் அமலில் இருந்த, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986-ஐ இந்தியா மாற்றியமைத்தது. 

Table of Contents

முந்தைய சட்டத்தில் இருந்து சில விதிகளத் தொடர்வதோடு பல புதிய விதிகளையுள் உள்ளடக்கிய, 2019 ஆம் ஆண்டு சட்டம் நுகர்வோருக்கு சிறந்த அளவிலான பாதுகாப்பை வழங்கும் நோக்கில் முன்பே உள்ள விதிகளைக் கடுமையாக்குகிறது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-இன் புதிய விதிகளில் அடங்குபவை:

  • இ-காமர்ஸ், நேரடி விற்பனை போன்றவற்றை உள்ளடக்குதல்
  • மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தை (CCPA) நிறுவுதல்
  • தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் மீதான கடுமையான விதிமுறைகள்
  • தயாரிப்புசார் பொறுப்பு மீதான கடுமையான விதிமுறைகள்
  • பணம்/பேமென்ட் சார்ந்த அதிகார எல்லையில் மாற்றங்கள்
  • பூசல்களைத் தீர்ப்பதை எளிமைப்படுத்துதல்
  • நியாயமற்ற வர்த்தக நடைமுறையின் பிரிவில் இணைப்பு
  • நியாயமற்ற ஒப்பந்தங்கள்
  • மத்தியஸ்தம் மூலம் மாற்று பூசல் தீர்வு முறை

 

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் முக்கியமான விதிகள் மற்றும் மேலோங்கிய சந்தைத் திறன்களுக்கு எதிராக வீடு வாங்குபவர்கள் உட்பட அனைத்து வாடிக்கையாளர்களின் நலன்களையும் இச்சட்டம் எவ்வாறு பாதுகாக்கிறது என்பது குறித்தும் இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

 

நுகர்வோர் என எவர் கருதப்படுகிறார்?

சட்டத்தின் பார்வையில் நுகர்வோர் என எவர் கணக்கில் கொள்ளப்படுகிறார்கள் என்பதை 2019 சட்டத்தின் பிரிவு 2(7) விளக்குகிறது.

“குறிப்பிட்ட விலையைச் செலுத்தி அல்லது வாக்குறுதியளித்து அல்லது ஓரளவு செலுத்தி மற்றும் ஓரளவு வாக்குறுதியளித்து, அல்லது ஒத்திவைக்கப்பட்ட பேமென்ட் முறையின் கீழ், எந்தவொரு பொருட்களையும் அல்லது சேவைகளையும் வாங்கும் மற்றும் அத்தகைய பொருட்கள் அல்லது சேவைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் நபர் நுகர்வோர் எனக் கருதப்படுகிறார். இச் சட்டத்தின் கீழ், “எந்தவொரு பொருட்களையும் வாங்குபவர்” மற்றும் “எந்தவொரு சேவையையும் வாடகைக்கு எடுப்பவர் அல்லது உபயோகிப்பவர்” என்பதில் எலக்ட்ரானிக் முறைகள் அல்லது டெலிஷாப்பிங் அல்லது நேரடி விற்பனை அல்லது மல்டி லெவல் மார்கெட்டிங் மூலம் ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகள் அடங்குகிறது.

நுகர்வோர்களாக இருக்கத் தகுதியற்ற நபர்களையும் இச்சட்டம் வரையறுக்கிறது. இவற்றில் அடங்குபவை:

*தயாரிப்புகளை இலவசமாகப் பெறுபவர்கள்

* சேவைகளை இலவசமாகப் பெறுபவர்கள்

*மறுவிற்பனைக்காகவோ அல்லது மற்ற வணிக நோக்கங்களுக்காகவோ தயாரிப்புகளை வாங்குபவர்கள்

*ஏதேனும் வணிக நோக்கம் சார்ந்து சேவைகளைப் பெறுபவர்கள்

*சேவை ஒப்பந்தத்தின் கீழ் சேவைகளைப் பெறுபவர்கள்

 

பாதுகாப்புச் சட்டம், 2019-இன் மூலம் நுகர்வோர் பெறும் உரிமைகள்

இச்சட்டத்தின் கீழ் ஆறு வகையான உரிமைகளை நுகர்வோர் பெறுகின்றனர்:

  • பாதுகாப்பு சார்ந்த உரிமை
  • தகவல் பெறும் உரிமை
  • தேர்ந்தெடுக்கும் உரிமை
  • கருத்துரைக்கும் உரிமை
  • குறைதீர் உரிமை
  • நுகர்வோர் விழிப்புணர்வுக்கான உரிமை

 

நுகர்வோர் பூசல் தீர்வு முகமைகள்

2019 சட்டத்தின் கீழ் நுகர்வோருக்கு மூன்று அடுக்கு மேல் முறையீட்டு அமைப்பு வழங்கப்படுகிறது:

*மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அல்லது DCDRCகள் (மாவட்ட ஆணையம்)

*மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் அல்லது SCDRCகள் (மாநில ஆணையம்)

*தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் அல்லது NCDRC (தேசிய ஆணையம்)

 

நியாயமற்ற ஒப்பந்தம் என்றால் என்ன?

நியாயமற்ற ஒப்பந்தங்கள் குறித்து 2019 சட்ட பிரிவு 2(46)-இல் வரையறுக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் கீழ் நுகர்வோர் பெறும் உரிமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்ட விதிகளுடன் கூடிய ஒப்பந்தங்கள் நியாயமற்ற ஒப்பந்தம் என வரையறுக்கப்படுகின்றன. இந்த விதிமுறைகளில் பின்வருவன அடங்கும்:

*ஒப்பந்தத்திலுள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்கு வசதியாக நுகர்வோர் அதிக செக்யூரிட்டி டெபாசிட் செலுத்த வேண்டிய  அவசியம்

*ஒப்பந்தத்தை மீறியதற்காக அத்தகைய மீறல் காரணமாக ஏற்பட்ட இழப்பு விகிதத்தை விட அதிகமாக நுகர்வோர் மீது அபராதம் விதித்தல்

*பொருந்தக்கூடிய அபராதத்துடன் முன்கூட்டியே கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஏற்க மறுத்தல்

*எவ்வித நியாயமான காரணமும் இன்றிஅல்லது ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்து ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ஒரு தரப்பினரை அனுமதித்தல்

*நுகர்வோரின் அனுமதியின்றி நுகர்வோருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையாக ஒப்பந்தத்தை அமைக்க ஒரு தரப்பினருக்கு உரிமை வழங்குதல்

*நுகர்வோருக்குப் பாதகமான நிலையை ஏற்படுத்தும் வகையில் நியாயமற்ற நிபந்தனை, கடமை அல்லது கட்டணத்தை சுமத்துதல்

 

ஆணையங்களின் நிதி மற்றும் பிராந்திய அதிகார வரம்பு

நுகர்வோர் எவ்விதமான தவறுகளுக்கும் எதிராக நிவாரணம் பெற உதவும் வகையில் 2019 சட்டத்தின் கீழ், நுகர்வோர் குறைததீர் ஆணையங்கள் (CDRCகள்) மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் அமைக்கப்படும். 

இது மூன்று அடுக்கு அமைப்பு கொண்டிருருப்பதால், ஆணையங்களின் அதிகார வரம்பைப் பிரிக்க இச் சட்டம் நிதிசார் செயல்முறைகளை நிறுவியுள்ளது.

ஒரு கோடி ரூபாய் வரை சம்பந்தப்பட்ட புகார்கள் குறித்து நுகர்வோர் மாவட்ட அளவிலான ஆணையத்தில் புகார் பதிவு செய்யலாம்.

மாநில அளவிலான கமிஷன்களில், 1 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரையான பூசல்கள் குறித்த புகார்களைப் பதிவு செய்யலாம்.

தேசிய அளவிலான கமிஷன்களில், 10 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள புகார்களை நுகர்வோர் பதிவு செய்யலாம்.

நியாயமற்ற ஒப்பந்தத்திற்கு எதிரான புகார்களை மாநில மற்றும் தேசிய ஆணையங்களில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்க.

மாவட்ட CDRC-இலிருந்து வரும் மேல்முறையீடுகள் மாநில CDRC-ஆல் விசாரிக்கப்படும், அதே நேரத்தில் மாநில CDRC-இன் மேல்முறையீடுகள் தேசிய CDRC-ஆல் விசாரிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். உச்ச நீதிமன்றத்தில் (SC) இறுதி மேல்முறையீதடை மேற்கொள்ளலாம்.

நுகர்வோர் தாங்கள் வசிக்கும் அல்லது பணியாற்றும் இடத்தில் புகார் அளிக்கும் சுதந்திரத்தை இச்சட்டம் வழங்குகிறது. முந்தைய சட்டத்தில் எதிர் தரப்பினர் தனது வணிகத்தை மேற்கொண்ட அல்லது வசிக்கும் இடத்தில் மட்டுமே நுகர்வோர் புகார் அளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது,

 

புகாரை தாக்கல் செய்வதற்கு காலக்கெடு உள்ளதா?

இச்சட்டத்தின் கீழ், புகார் சார்ந்த காரணத்திற்கான நாளிலிருந்து அதாவது சேவையில் குறைபாடு அல்லது பொருட்களில் குறைபாடு ஏற்பட்ட/கண்டறியப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் புகார் அளிக்கப்பட வேண்டும். இது புகாரைத் தாக்கல் செய்வதற்கான வரம்பு காலம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

ஆணையத்தில் தனது வழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்த வழக்கறிஞரை நியமிப்பது அவசியமா?

விரைவான நிவாரணம் வழங்குவதற்காக நிறுவப்பட்ட நுகர்வோர் ஆணையங்கள் பகுதியளவு நீதித்துறை அமைப்புகளாக இருப்பதால் நுகர்வோர் ஒரு வழக்கறிஞரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை, நுகர்வோர் தானே புகார்களைத் தாக்கல் செய்யலாம் மற்றும் விசாரணையின் போது தாங்களே பிரதிநிதித்துவப்படுத்தலாம். நுகர்வோர் விரும்பினால், ஒரு நுகர்வோர் சட்ட ஆலோசகரின் சேவைகளைப் பெறுவதும் அனுமதிக்கப்படுகிறது.

 

நுகர்வோர் நீதிமன்றங்களில் புகார் பதிவு செய்யும் முறை என்ன?

 புகாரை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் முறையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும். http://www.edaakhil.nic.in/என்ற தளத்தின் மூலம் ஆன்லைனில் புகாரைப் பதிவு செய்யலாம் அல்லது நேரிலோ அல்லது அவரது முகவர் மூலமாகவோ புகார் அளிக்கலாம். நீதிமன்றக் கட்டணத்துடன் பதிவு தபாலில் கூட புகாரை அனுப்பும் வசதி உள்ளது. பொதுவாக, புகாரின் மூன்று நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

 

புகாரில் வழங்க வேண்டிய விவரங்கள் யாவை? 

புகார் அளிக்கும் நுகர்வோர் ஒருவர் அவரது புகாரில் பின்வரும் விவரங்களைக் குறிப்பிடவேண்டும் :

*புகாரளிப்பவரின் பெயர், விளக்கம் மற்றும் முகவரி

*எவருக்கு எதிராக புகார் தாக்கல் செய்யப்படுகிறதோ அத்தரப்பினரின் பெயர், விவரம்  மற்றும் முகவரி

*புகார் சம்பந்தப்பட்ட நேரம், இடம் மற்றும் பிற தகவல்கள்

*புகாரை ஆதரிக்கும் ஆவணங்கள்

 

ஆணையத்தின் தீர்ப்பில் நுகர்வோர் மன நிறைவு அடையவில்லை என்றால் அடுத்து எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?

ஆணையத்தின் தீர்ப்பு மனநிறைவு அளிக்காத நிலையில், தீர்ப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தீர்ப்புக்கு எதிராக உயர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யலாம். தேசிய நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பும் திருப்தி அளிக்கவில்லை எனில், அத்தீர்ப்பு வெளியான 45 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.

 

புகார் பதிவு செய்வதற்கான கட்டணம்

புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள குறைந்தபட்சக் கட்டணத்தை நுகர்வோர் செலுத்த வேண்டும். புகாருடன் சம்பந்தப்பட்ட நிதியில் அளவைப் பொறுத்து கட்டணங்கள் மாறுபடும்.

ஆணையம்/ தயாரிப்பு சேவைகளின் மதிப்பு கட்டணம்
மாவட்ட ஆணையம்
5 லட்சம் வரை ஏதுமில்லை
5 லட்சம் முதல் 10 லட்சம் வரை ரூ 200
10 லட்சம் முதல் 20 லட்சம் வரை ரூ 400
20 லட்சம் முதல் 50 லட்சம் வரை ரூ.1,000
50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை ரூ.2,000
மாநில ஆணையம்
ரூ. 1 கோடி முதல் 2 கோடி வரை ரூ.2,500
ரூ. 2 கோடி முதல் 4 கோடி வரை ரூ.3,000
ரூ. 4 கோடி முதல் 6 கோடி வரை ரூ.4,000
ரூ. 6 கோடி முதல் 8 கோடி வரை  ரூ.5,000
ரூ. 8 கோடி முதல் 10 கோடி வரை ரூ. 6,000
 
தேசிய ஆணையம்
ரூ. 10 கோடிக்கு மேல் ரூ. 7,500

 

கட்டணமானது வரைவோலையாகவோ அல்லது கிராஸ் செய்யப்பட்ட போஸ்டல் ஆர்டர் மூலமாகவோ மாநில ஆணையத்தின் பதிவாளரின் பெயரில் செலுத்தப்பட வேண்டும்.

நுகர்வோர் மன்றத்தின் உதவியுடன் மத்தியஸ்தம் மூலம் பூசலைத் தீர்க்க தரப்பினர் முடிவு செய்தால், அவர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது.

 

தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் மீது எவ்வித தண்டனையை ஆணையம் வழங்குகிறது?

தவறான அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் மீது அத் தயாரிப்பின் உற்பத்தியாளர் அல்லது விளம்பர ஆதரவு அளிப்பவருக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் உரிமையை நுகர்வோரின் உரிமைகளை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் அமலாக்கம் செய்வதற்கான உச்ச அமைப்பாக நிறுவப்பட்டுள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) கொண்டுள்ளது. தொடர் குற்றங்களுக்கு ரூ. 50 லட்சம் வரை அபராதமும், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்

 

நுகர்வோர் ஆணையங்கள் மற்றும் வீடு வாங்குபவர்கள்

:நுகர்வோர் நீதிமன்றங்கள் //எதிர் //  ரியல் எஸ்டேட் ரெகுலேட்டரி அத்தாரிட்டீஸ்

வீடு வாங்குபவர்கள் மற்றும் கட்டிட அமைப்பாளர்களிடையே ஏதேனும் பூசல் ஏற்பட்டால் வீடு, நில உடைமைகள் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு) சட்டம் -2016-இன் கீழ் அமைக்கப்பட்டுள்ள மாநில வீடு, நில உடைமைகள் ஒழுங்குமுறை ஆணையத்தை இரு தரப்பினரும் அணுகலாம். இதற்கு, வீடு வாங்குபவர்கள் நிவாரணம் பெற நுகர்வோர் நீதிமன்றங்களை அணுக முடியாது என்று பொருளாகாது. ஏனென்றால், 2019 சட்டமானது அதன் வரையறையின் கீழ் கட்டிட அமைப்பாளரை “தயாரிப்பு விற்பனையாளர்கள் என உள்ளடக்கியுள்ளது. கட்டப்பட்ட வீடுகளை விற்பனை செய்பவர் அல்லது வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிப்பதில் ஈடுபட்டுள்ளோர் தயாரிப்பு விற்பனையாளராகக் கருதப்படுகின்றனர்.

டெல்லியை தளமாகக் கொண்ட இம்பீரியா கட்டமைப்புகளுக்கு எதிரான பல புகார்களை விசாரித்த வேளையில், 2020 ஆம் ஆண்டில், உச்ச நீதி மன்றம் இக்கூற்றை மீண்டும் வலியுறுத்தியது.

பிரகடனப்படுத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் (நுகர்வோர்), எந்தவொரு புகாரையும் ஆணையம் அல்லது மன்றம் விசாரிப்பதை RERA சட்டத்தின் பிரிவு 79 எவ்வகையிலும் தடை செய்யாது. CP சட்டத்தின் கீழ் பொருத்தமான நடவடிக்கைகளைத் தொடங்க விரும்புகிறாரா அல்லது RERA சட்டத்தின் கீழ் ஒரு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய விரும்புகிறாரா என்பதைத் தேர்வு செய்யும் உரிமை ஒதுக்கீட்டாளருக்கு (Allotte) உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒரு நபரை அத்தகைய புகாரை வாபஸ் பெறும்படி RERA சட்டப்பூர்வமாகக் கட்டாயப்படுத்தமுடியாது அல்லது RERA சட்டத்தின் கீழ் உள்ள அமைப்புகளுக்கு அத்தகைய நிலுவையில் உள்ள நடவடிக்கைகளை மாற்றுவதற்கான எந்த வழிமுறையையும் RERA சட்டத்தின் விதிகள் உருவாக்கவில்லை என்றும் அது கூறியது.

எவ்வாறாயினும், RERA-இன் கீழ் முடிவு செய்யப்படும் விஷயங்களில் பொது நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை வீடு, நில உடமை சட்டத்தின் பிரிவு 79 குறிப்பிடுவதை வீடு வாங்குபவர்கள் அறிவது அவசியம். வீடு வாங்குபவர்கள் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகும் அதே வேளையில், ​​கட்டிற அமைப்பாளருக்கு எதிராக சிவில் வழக்கைத் தாக்கல் செய்யலாம் என்பது இதன் பொருளாகும்.

மேலும் அறிக: RERA மற்றும் NCDRC: வீடு வாங்குபவர்களைப் பாதுகாப்பது யார்?

 

வீடு வாங்குபவர் மற்றும் NCLT

வீடு வாங்குபவர்கள் ஒரு பில்டருக்கு எதிராக திவால்நிலை நீதிமன்றத்தை அணுக முடியுமா? சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நிலையில் அவர்களால் அணுக முடியும் என்பதே இதன் பதில்.

ஆகஸ்ட் 2019 இல், வீடு வாங்குபவர்களுக்கு நிதிக் கடன் வழங்குபவரின் அந்தஸ்தை வழங்கும் வகையில் திவால் மற்றும் திவால் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பிறகு இது சாத்தியமாகியுள்ளது. இருப்பினும், ஜனவரி 2021-இல் நிறைவேற்றப்பட்ட மற்றொரு உத்தரவில், 2020-ஆம் ஆண்டின் திவால்நிலை மற்றும் திவால்நிலைக் குறியீடு (IBC) இன் கீழ், திவாலான டெவலப்பருக்கு எதிராக திவால் நடவடிக்கைகளைத் தொடங்க ஒரு வீட்டுத் திட்டத்தின் மொத்த வீடு வாங்குபவர்களில் குறைந்தது 10 சதவிகிதத்தினர் ஒன்றிணைந்து திவால் நடவடிக்கை எடுக்கவேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தவறிய டெவலப்பருக்கு எதிராக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) திவால்நிலை விண்ணப்பத்தைத தாக்கல் செய்ய குறைந்தபட்சம் 100 வீடு வாங்குபவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று திருத்தங்கள் வலியுறுத்துகின்றன.

நிதிக் கடன் வழங்குபவராக, ஒரு வீடு வாங்குபவர்ர் ஒரு வழக்கை தொடர அனுமதிக்கப்பட்டால், மற்ற அனைத்து வீடு வாங்குபவர்களுக்கு அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அவர்களில் சிலர் RERA இன் கீழ் ஆணையத்தை அணுகலாம். மற்றவர்கள், அதற்குப் பதிலாக, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஃபோராவை நாடலாம், இருப்பினும், ஒரு சிவில் வழக்கு தொடர்வதும் நிராகரிக்கப்படவில்லை, ”என்று தனது 465 பக்க உத்தரவில், திவால் குறியீட்டில் செய்யப்பட்ட திருத்தங்களின் அரசியலமைப்பு செல்லுபடியை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. 

மேலும் காண்க: நுகர்வோர் நீதிமன்றம், RERA அல்லது NCLT: வீடு வாங்குபவர் இந்த மன்றங்களை ஒரே நேரத்தில் அணுக முடியுமா?

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 எப்போது இயற்றப்பட்டது?

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019, ஆகஸ்ட் 9, 2019 அன்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இது ஜூலை 20, 2020 முதல் அமலுக்கு வந்தது.

புகாரை மத்தியஸ்தம் மூலம் தீர்க்க முடியுமா?

புகாரின் எந்த நிலையிலும் எத்தரப்பினரும் மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண முடியும்.

வணிக நோக்கங்களுக்காக தயாரிப்பை வாங்குபவர் அல்லது சேவைகளை உபயோகிக்கும் நுகர்வோர், நீதிமன்றங்களில் புகார் செய்ய முடியுமா?

வணிக நோக்கங்களுக்காக பொருட்களை வாங்கும் அல்லது சேவைகளை உபயோகிக்கும் நுகர்வோர் நீதிமன்றங்களில் புகார் செய்ய முடியாது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Was this article useful?
  • 😃 (14)
  • 😐 (2)
  • 😔 (6)

Recent Podcasts

  • ரியல் எஸ்டேட் பிரிவில் 2024 அக்ஷய திரிதியாவின் தாக்கம்
  • நிதியாண்டில் அஜ்மீரா ரியாலிட்டியின் வருவாய் 61% அதிகரித்து ரூ.708 கோடியாக உள்ளது.
  • கிரேட்டர் நொய்டா ஆணையம், வீடு வாங்குபவர்களுக்கான பதிவேடு பற்றி பில்டர்கள் விவாதிக்கின்றனர்
  • TCG ரியல் எஸ்டேட் அதன் குர்கான் திட்டத்திற்காக எஸ்பிஐ யிலிருந்து ரூ 714 கோடி நிதியைப் பெறுகிறது
  • கேரளா, சத்தீஸ்கரில் NBCC 450 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறுகிறது
  • Rustomjee குழுமம் மும்பையின் பாந்த்ராவில் சொகுசு குடியிருப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது