TNRERA: தமிழ்நாடு RERA பற்றிய முழுமையான தகவல்கள்

தமிழ்நாடு ரெரா (TNRERA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் என்பது ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பரிவர்த்தனைகள் மற்றும் தகவல்களை முடிந்தவரை வெளிப்படையாகவும் சிறப்பாகவும் வழங்கும் அமைப்பாகும். தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமானது தமிழ்நாடு மாநிலத்துடன் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளையும் உள்ளடக்கிய அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. புரோமோட்டர்கள், வாங்குபவர்கள் மற்றும் முகவர்களுக்கு இந்த அமைப்பு உதவும் விதங்கள் குறித்து விரிவாக இங்கே வாசிக்கலாம்.

தமிழ்நாட்டில் சொத்து மீது முதலீடு செய்ய விரும்புகிறீர்களா? உங்களுக்காக இருக்கவே இருக்கிறது ‘தமிழ்நாடு ரெரா’ என்று வெகுவாக அறியப்படும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்முறை ஆணையம். இதற்கான சட்ட விதிகளுக்கு 2017-ம் ஆண்டு ஜூலை 22-ல் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தது. ரியல் எஸ்டேட் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு ரெரா (TNRERA) ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பரிவர்த்தனைகள் மற்றும் தகவவல்களை இயன்றவரையில் வெளிப்படையாகவும் சிறந்த முறையிலும் அளித்து வருகிறது. தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமானது தமிழ்நாடு மாநிலத்துடன் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளையும் உள்ளடக்கிய அதிகார வரம்பைக் கொண்டுள்ளது.

Table of Contents

தமிழ்நாட்டில் வீடு வாங்குபவர்கள், டெவலப்பர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முகவர்கள் ஆகியோர் தமிழ்நாடு ரெரா பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை இங்கே.

 

வீடு வாங்குபவர்களுக்கு

தமிழ்நாடு ரெராவில் பதிவுசெய்யப்பட்ட புராஜெக்ட்களை தெரிந்துகொள்வது எப்படி?

படி 1: TNRERA தளத்தின் முகப்புப் பக்கத்தைப் பார்வையிடுங்கள் (இங்கே க்ளிக் செய்க)

படி 2: ‘Registrations’ என்ற செக்‌ஷன் மீது க்ளிக் செய்தால் ஒரு டேப் விரியும். அதில் ‘Projects’ மீது க்ளிக் செய்யுங்கள். அப்போது Registered Projects என்ற ஆப்ஷன் வரும். அதில் க்ளிக் செய்தால் வரும் Tamil Nadu / Andaman ஆப்ஷனை க்ளிக் செய்து 2017 முதல் 2022 வரையில் பதிவுசெய்யப்பட்ட புராஜெக்ட்டுகள் பற்றிய முழுத் தகவலையும் உங்களுக்கு தமிழ்நாடு ரெரா தளம் வழங்கும்.

 

TN RERA

 

தமிழ்நாடு அரசு வலைதளத்தில் வலம் வந்து வழிகாட்டி மதிப்பு உள்ளிட்ட பல்வேறு பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள TNREGINET பற்றிய எங்களின் எளிய வழிகாட்டுதல்களை வாசிக்கவும்.

 

TNRERA-வில் பதிவு செய்யப்பட்ட முகவர்களை தெரிந்துகொள்வது எப்படி?

படி 1: தமிழ்நாடு ரெராவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

படி 2: ‘Registrations’ என்ற செக்‌ஷன் மீது க்ளிக் செய்தால் ஒரு டேப் விரியும். அதில் ‘Agents’ மீது க்ளிக் செய்யுங்கள். அப்போது Registered Agents என்ற ஆப்ஷன் வரும். அதில் க்ளிக் செய்தால் வரும் Tamil Nadu / Andaman ஆப்ஷனை க்ளிக் செய்து பதிவுசெய்யப்பட்ட ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளின் விவரங்கள் ஆண்டு வாரியாக நமக்குத் திரையில் தோன்றும்.

 

TN RERA for agents

 

TN RERA list of agents

 

TNRERA-வில் ஆன்லைன் மூலம் புகார் அளிப்பது எப்படி?

Downloads & Link பிரிவில் க்ளிக் செய்தால் தெரியும் Downloads ஆப்ஷன் மீது அழுத்தினால் வரும் Complaint Registration என்ற ஆப்ஷனில் காட்டும் ஃபார்ம்களை பயன்படுத்தி, நீங்கள் யாரை அணுக விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து, தனித்தனி படிவங்களை நிரப்ப வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகார் செய்ய விரும்பினால், படிவம் M-ஐ நிரப்ப வேண்டும். நீங்கள் தீர்வு தரும் அதிகாரியை அணுக விரும்பினால், படிவம் N-ஐ நிரப்ப வேண்டும்.

தமிழ்நாடு ரெரா பல்வேறு வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் நீங்கள் ‘Complaint’ செக்‌ஷனை க்ளிக் செய்தால் விரியும் ஆப்ஷன்களில் க்ளிக் செய்து பார்க்கலாம்.

இதையும் வாசிக்க: தமிழ்நாடு வழிகாட்டி மதிப்பு முழு விவரம்

 

தமிழ்நாடு RERA ஆணையத்திடம் புகார் அளிக்க

நீங்கள் ஆணையத்திடம் புகார் செய்ய விரும்பினால் கீழ்கண்ட விதிகளை பின்பற்ற வேண்டும்:

  • M படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுங்கள். அதில் விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு, ஆன்லைன் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.
  • புகாரின் விவரங்கள் மூன்று நகல்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். இந்த நகல்களுடன் தேவையான ஆவணங்களை இணைத்து, அவற்றின் அனைத்துப் பக்கங்களிலும் முறையாக அளிக்கப்பட்ட சான்றுகளுடன் பிரதிவாதிக்கு அனுப்பப்பட வேண்டும். இதைப் பதிவுத் தபால் மூலம் ஆணையத்துக்கு அனுப்பலாம் அல்லது அலுவலகத்திற்கு நேரில் சென்று தரலாம்.
  • தமிழ்நாடு சார்ந்த வழக்குகளுக்கு ஆன்லைனில் புகார் அளித்த ஏழு நாட்களுக்குள்ளும், அந்தமான் சார்ந்த வழக்குகளுக்கு 10 நாட்களுக்குள்ளும் அலுவலகத்தை நகல்கள் சென்றடைய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
  • மனுதாரர் அல்லது வழக்கறிஞர் மூலம் புகார் அளிக்கலாம்.
  • ஆணையத்தின் தபால் செலவினங்களுக்காக புகார்தாரர் ஆன்லைன் மூலம் ரூ.600 தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைனில் கட்டண கட்டணம் செலுத்த தேவையான விவரம்:

 

வங்கி: இந்தியன் வங்கி, CMDA கிளை

நடப்புக் கணக்கு எண்: 65430 57988

பெயர்: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (டிஎன்ஆர்ஆர்ஏ)

IFSC குறியீடு: IDIB000I010

 

புரோமோட்டர்களுக்கு

TNRERA தளத்தில் உங்கள் புராஜெக்ட்டை பதிவு செய்வது எப்படி?

உங்கள் திட்டத்தைப் பதிவு செய்ய விரும்பினால், முகப்புப் பக்கத்தில் உள்ள  Downloads & Link பிரிவில் க்ளிக் செய்தால் தெரியும் Downloads ஆப்ஷன் மீது அழுத்தினால் வரும் Project Registration ஆப்ஷன்களில் உங்களுக்கானதை தேர்ந்தெடுத்து, உங்கள் திட்டம் எங்கு செயல்படுத்தபட உள்ளது, அதன் வகைமையைப் பொறுத்து ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

 

TN Rera portal

 

TNRERA-ல் புராஜெக்ட் பதிவு செய்வதற்கான கட்டணம்

வகை கட்டண விவரங்கள்
குடியிருப்பு கட்டிடங்கள் 60 சதுர மீட்டருக்குக் குறைவாக இருக்கும் குடியிருப்புத் திட்டத்திற்கான FSI பகுதியில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.10; மற்ற குடியிருப்புத் திட்டங்களுக்கு FSI பகுதியில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.20
வணிக கட்டிடங்கள் FSI பகுதியில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 50
வேறு ஏதேனும் திட்டங்கள் FSI பகுதியில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.25;
லேஅவுட்டுகள், துணைப் பிரிவுகள் மற்றும் மனை ஒப்புதல்கள் EWS ப்ளாட்டுகள் (சாலைகள் மற்றும் OSR தவிர்த்து) தவிர்த்து ப்ளாட் பகுதிக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.5

 

ஆன்லைன் பரிவர்த்தனைக்கான விவரங்கள்:

A/C எண். 6543057988

பெயர்: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (Tnrera)

A/C வகை: CA (நடப்பு கணக்கு)

வங்கி: இந்தியன் வங்கி, CMDA கிளை

Ifsc குறியீடு: IDIB000I010

 

புரோமோட்டர்கள் பதிவேற்ற வேண்டிய முக்கிய ஆவணங்கள்

  1. படிவம் ‘B’
  2. திட்ட அனுமதி ஒப்புதல் கடிதம்
  3. திட்ட அனுமதி
  4. கட்டிட உரிமக் கடிதம்
  5. உள்ளாட்சி அமைப்பு முத்திரையுடன் அங்கீகரிக்கப்பட்ட திட்டம்
  6. பட்டா / PLR (அல்லது) ஆவணம்
  7. பதிவு செய்ய விண்ணப்பிப்பதற்கு முன் 30 நாட்களுக்குள் பெறப்பட்ட வில்லங்கச் சான்றிதழ்
  8. கட்டமைப்பு உறுதித்தன்மை சான்றிதழ்
  9. வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டம்
  10. பான் கார்டு
  11. ஆதார் அட்டை
  12. TNRERA இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போன்ற ப்ரோஃபார்மா வங்கிச் சான்றிதழ்
  13. ப்ரோஃபார்மா ஒதுக்கீடு கடிதம்
  14. தலைவர் அல்லது நிர்வாகக் குழு தலைவர் / பங்குதாரர் / இயக்குநரின் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  15. தணிக்கைக்குட்படுத்தப்பட்ட பேலன்ஸ் ஷீட்

 

இவற்றை அப்லோடு செய்த பிறகு நடைமுறைகளைத் தொடரலாம். அப்போது உங்கன் இ-மெயில் ஐடி கேட்கப்படும். விவரங்களை நிரப்பிய பின் வரும் பக்கத்தில் நீங்கள் அனைத்து விவரங்களையும் நிரப்பலாம்.

 

TN Rera

 

 

 

முகவர்களுக்கு

TNRERA தளத்தில் உங்களை ஒரு முகவராக பதிவு செய்வது எப்படி?

இந்த செயல்முறை மிகவும் எளிதானது. ‘Registrations’ என்ற செக்‌ஷன் மீது க்ளிக் செய்தால் ஒரு டேப் விரியும். அதில் ‘Agents’ மீது க்ளிக் செய்யுங்கள். அப்போதும் வரும் ‘Apply Online’ என்ற ஆப்ஷன் மூலம் பதிவு செய்யலாம். பதிவு செய்யும்போது நினைவில் கொள்ளவேண்டிய விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கட்டண விவரம் வருமாறு:

 

வகை கட்டண விவரம்
தனிநபர் ரூ.25,000
நிறுவனம் ரூ.50,000

 

பதிவுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்:

A/C NO. – 6543057988

பெயர்: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (TNRERA)

A/C வகை: CA (நடப்புக் கணக்கு)

வங்கி: இந்தியன் வங்கி, CMDA கிளை

IFSC குறியீடு: IDIB000I010

 

முகவர்கள் பதிவேற்ற வேண்டிய முக்கிய ஆவணங்கள்

  • நிறுவனமாக இருந்தால் அந்நிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ்
  • ரியல் எஸ்டேட் முகவர் ஒரு தனிநபராக இருந்தால் அவரது புகைப்படம் அல்லது பிற நிறுவனங்களில் பார்ட்னராக இருந்தால் அந்நிறுவனத்தின் பார்ட்னர்கள், இயக்குநர்கள் புகைப்படம் முதலானவை
  • வேறு ஏதேனும் மாநிலத்தில் ரியல் எஸ்டேட் முகவராக இருந்தால் அதன் பதிவுச் சான்றிதழ்
  • பான் கார்டு
  • தனிநபராக இருப்பின் அவரின் முகவரிக்கான ஆதாரம் (ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / வாக்காளர் ஐடி / பாஸ்போர்ட் / வங்கி பாஸ்புக் / தொலைபேசி பில் / மின்சார பில்) அளிக்க வேண்டும்
  • நிறுவனமாக இருந்தால் முகவரிச் சான்று (உத்யோக் ஆதார் / தொலைபேசி பில் / மின்கட்டண ரசீது / பதிவுச் சான்றிதழ்) வழங்க வேண்டும்

 

பின்வருமாறு தொடரவும்:

 

 

சொத்து சந்தை மற்றும் வீடு வாங்குபவர்கள் மீதான தாக்கம்

வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனுடம் திட்டங்களை சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் நுகர்வோரின் நம்பிக்கையை பெறுவதல் போன்றவை மூலம் டெவலப்பர்களுக்கான ஒரு சமநிலைத் தன்மையை ‘ரெரா’ (RERA) ஏற்படுத்தித் தருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், தொடக்கத்தில் டெவலப்பர்கள் மற்றும் புரோமோட்டர்களுக்கு இடையேயான இணக்கம் ஒரு சவாலாக இருக்கலாம்; ஏனெனில் பதிவு செய்வதற்கு முன் அனைத்து கட்டுமானங்களுக்கும் ஒப்புதல்கள் தேவைப்படுகின்றன.

மேலும், ஒருவேளை இணக்கமற்ற சூழல் அல்லது நில உரிமை மீறல்கள், திட்டமிடப்பட்டபடி முடித்தல் மற்றும் திட்டத்தைப் பராமரித்தல் போன்றவற்றில் தோல்வி ஏற்பட்டால் மூன்று ஆண்டுகள் வரையிலான பிணைப்புடன் ப்ரோமோட்டர்கள் சட்டபூர்வமாக இணைக்கப்பட்ட பொறுப்பாளர்கள் ஆவார்கள் அல்லது மொத்த திட்ட மதிப்பில் 10 சதவீதம் வரை இழப்பீடு வழங்க வேண்டும். எனவே, எங்கள் கருத்துப்படி, டெவலப்பர்கள் தங்கள் திட்டங்கள் மற்றும் விற்பனை ஒப்பந்தம் தொடர்பான மதிப்பீடுகளை துல்லியமாக வழங்குவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

“இந்திய ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஓர் ஒழுங்குபடுத்தும் அமைப்பின் தேவை நீண்ட காலமாக இருந்து வந்தது. அந்த அடிப்படையில் இந்திய ரியல் எஸ்டேட் கண்காணிப்பாளராகவே ரெரா செயல்படும். இதன் காரணமாக சென்னை ரியல் எஸ்டேட் சந்தை நேர்மறையாக இயங்கத் துவங்கும். எனவே, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் RERA-வின் தேவை வலுவானதாக மாறுகிறது. சென்னையின் திறமையான முதலீட்டாளர்கள், வெளிப்படைத் தன்மையை வலியுறுத்தி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதைத் தவிர்த்து, ‘லா கார்டே’ பட்டியலைத் தேர்ந்தெடுத்து, அதனை நன்கு தெரிந்துகொண்டு, புத்திசாலித்தனமான முடிவுகளை செயலாற்றுகிறார்கள” என்கிறார் காலியர்ஸ் இன்டர்நேஷனல் இந்தியாவின் அலுவலக சேவைகள் இயக்குநர் ஷாஜு தாமஸ்.

 

தமிழ்நாடு RERA: டெவலப்பர்கள் மீதான தாக்கம்

காலியர்ஸ் ஆய்வின்படி, டெவலப்பர்களுக்கான ஹோல்டிங் செலவு நிச்சயமாக அதிகரிப்பதுடன் விலைகளும் கூடலாம். ஏனெனில் டெவலப்பர்கள் தங்களது தற்போதைய மற்றும் எதிர்காலத் திட்டங்களுக்கு, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடுமையான வழிகாட்டுதல்களுடன் இணங்குவதை உறுதி செய்வது கட்டாயம் ஆகும். எனினும், குடியிருப்புச் சந்தையில் நிலவும் மந்த நிலையைக் கருத்தில் கொண்டு, பணமதிப்பு நீக்கம் மற்றும் ரெரா அறிவிப்புக்குப் பிறகு, விலை அதிகரிப்பினால் ஏற்பட்ட அழுத்தம், குறுகிய காலத்திற்கு வீடு வாங்குபவர்களுக்கு ஏற்புடையதாக அமையாது.

மேலும், 2017-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சென்னை சுமார் 2,300 யூனிட் புதிய திட்டங்களை பதிவு செய்தது. இது பெரும்பாலும் பிரபல டெவலப்பர்களின் பங்களிப்பு கொண்டதாகும். அதேசமயம் சிறிய டெவலப்பர்கள் காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு அணுகுமுறையை ஏற்றுக்கொண்டனர். டெவலப்பர்கள் தங்களின் தற்போதைய திட்டங்களை முடிப்பதிலும், தங்கள் இருப்பு நிலைகளை சரிசெய்வதிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர். RERA-வை வெற்றிகரமாக செயல்படுத்தினால், ரியல் எஸ்டேட் சந்தையில் சிறிய பில்டர்கள் மற்றும் ஃப்ளை-பை-நைட் டெவலப்பர்கள் வெளியேறுதல் அல்லது ஒருங்கிணைக்கப்படுவதை நாம் காணலாம். அதே நேரத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனமாக டெவலப்பர்கள் பெரிய முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

இதையும் வாசிக்க: RERA என்றால் என்ன, அது ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் வீடு வாங்குபவர்களுக்கு தரும் தாக்கம் என்ன?

இணையதளம் / தயாரிப்பு ப்ரெளஷரில் குறிப்பிட்டுள்ளபடி, அங்கீகரிக்கப்பட்ட லேஅவுட் மற்றும் விவரக் குறிப்புகளின்படி தங்களது  இறுதி தயாரிப்பில் எந்தவித மாறுபாடும் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பதால், டெவலப்பர்கள் தங்களது திட்டங்களை சந்தைப்படுத்துவதில் மிகவும் யதார்த்தப் போக்கை கொண்டிருக்குமாறு காலியர்ஸ் ரிசர்ச் (Colliers Research) அறிவுறுத்துகிறது. அதேபோல், புராஜெக்ட் தொகையில் 70%-ஐ அதற்கென ஒதுக்கப்பட்ட புராஜெக்ட் கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும் என்பதால், டெவலப்பர்கள் தங்களது புராஜெக்ட் – ஸ்பெசிஃபிக் பிளான்ஸ் மற்றும் செலவு மதிப்பீடுகளை முறையாக திட்டமிட வேண்டும் என்கிறது.

எனவே, மேம்படுத்தப்பட்ட புரஜெக்ட் திட்டமிடல், தேவையான அனைத்து ஒப்புதல்களையும் சரியான நேரத்தில் பெறுதல் மற்றும் கட்டுமான செயல்முறையை விரைவுபடுத்த நவீன கட்டுமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் போன்றவை டெவலப்பர்கள் தாமதங்களைத் தவிர்க்க மிகவும் உதவிகரமாக உள்ளன. மேலும், திட்ட நிதிகளை திறமையாக நிர்வகிக்கவும்ம், RERA-வின் அனைத்து வழிகாட்டுதல்களுடன் கூடிய மேன்மையான மாற்றத்தினை ஏற்படுத்திக்கொள்ளவும் இவை உதவுகிறன.

 

RERA பதிவுகளில் பாதிக்கக் கூடிய தாமதங்கள்

தமிழ்நாட்டில் ரெரா விதிகளை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதில் மேலும் தாமதத்தை  தவிர்க்க, மாநில அரசு சில நடைமுறைகளை செயல்படுத்துவது இப்போது முக்கியமானதாக உள்ளது. ஒழுங்குமுறை அமைப்பு நிறுவப்படும் வரை, மாநிலத்திற்கான ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் பங்கை ஏற்று செயலாற்ற, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் புரோமோட்டர்கள் தற்போதைய குடியிருப்புத் திட்டங்களைப் பதிவுசெய்வது அவசியமாகும். ரியல் எஸ்டேட் முகவர்களுக்கும் இது பொருந்தும்.

மேலும், நிரந்தர ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் புராஜெக்ட் பதிவுக்கான முறையான இணையதளம் செயல்பாட்டில் இல்லாத சூழலில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம், இடைக்கால கண்காணிப்பளரிடம் நேரடியாக விண்ணபிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், திட்டப் பதிவுகளை உடனடியாகத் தொடங்க வலியுறுத்துகிறது. இதனால் டெவலப்பர்கள், புரோமோட்டர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளுக்கு முழு செயல்முறையையும் முடிக்க மூன்று மாத கால அவகாசம் மட்டுமே இருப்பதால், பதிவுகள் அவசரமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழ்நாடு RERA-வின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டிய புராஜெக்ட்டுகள்

RERA-வில் பதிவு செய்யும் நிறுவனங்களில் 500 சதுர மீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பு கொண்ட புராஜெக்ட்கள், அனைத்து கட்டங்களையும் உள்ளடக்கிய எட்டுக்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஆக்குப்பன்சி சான்றிதழ் (OC) அல்லது நிறைவுச் சான்றிதழ் (CC) பெறப்படாத அனைத்து தற்போதைய திட்டங்களும் அடங்கும்.

வரைவு விதிகளில், தற்போது செயல்பாட்டில் உள்ள புராஜெக்ட்களுக்கான வரையறையை கருத்தில் கொண்டு, இறுதியாக அவ்விதிகளில் அரசு கூடுதல் தெளிவை உருவாக்கியுள்ளது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் புராஜெக்ட்கள் தவிர்த்து, நிலம் பிளாட்களாக உருவாக்கப்பட்டு, சாலைகள் மற்றும் திறந்தவெளிகளை உள்ளடக்கிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கிய லேஅவுட் புராஜெக்ட்களுக்கும், சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) தொடர்புடைய கட்டிடக் கலைஞர் / உரிமம் பெற்ற சர்வேயர் / கட்டமைப்புப் பொறியாளர் ஆகியோரால் சான்றளிக்கப்பட்ட பிறகு, கட்டமைப்பு நிறைவடைந்ததற்கான புகைப்படங்களுடன் கூடிய சான்றிதழ் வழங்கபட்டு, ஏற்கெனவே நிறைவுச் சான்றிதழுக்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ள புராஜெக்ட்களுக்கும் விதிவிலக்கு அளிக்கபட்டுள்ளது.

CMA தாண்டி வெளியே செயல்படும் புராஜெக்ட்களில் புரோமோட்டர்கள், விதிகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள், அது RERA பதிவில் இல்லாத பட்சத்தில், நகர இயக்குநரின் அலுவலகத்திற்கும், அதற்குரிய உள்ளூர் திட்ட ஆணையத்திற்கும், திட்டங்களின் கட்டமைப்பு நிறைவு குறித்து உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேஷன் ‘அனைவருக்கும் வீடு’ என்ற தொலைநோக்குப் பார்வையை ஆதரித்து, மலிவு விலையில் வீடுகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு குடிசைப் பகுதி ஒழிப்பு வாரியத் திட்டங்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மலிவு வீட்டு வசதித் திட்டங்கள் மற்றும் வீட்டு வசதித் திட்டங்களுக்கு பதிவுக் கட்டணத்தை விலக்கியுள்ளது.

 

TNRERA குறித்த சமீபத்திய செய்தி

வீடு வாங்குபவர்கள் UDS பதிவு செய்திருந்தால், நில உரிமையாளர்கள் வழக்குத் தொடர முடியாது

வீடு வாங்குபவர்களுக்குப் பங்கு பிரிக்கப்படாத நிலம் பதிவு செய்யப்பட்டிருந்தால் நில உரிமையாளர்கள் அதற்கு பொறுப்பேற்க தேவையில்லை என்று தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. எட்டு நில உரிமையாளர்கள் உட்பட 12 பேருக்கு எதிராக, வீட்டு வசதித் திட்டத்திற்கு எதிரான புகார் மனு மீதான விசாரணையின்போது இந்த விதிமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நில உரிமையாளர்களையும் சேர்க்க வேண்டுமா என்ற குழப்பம் எழுந்தது.

இதனை தெளிவுபடுத்தும் விதமாக தமிழ்நாடு ரெராவின் தீர்வு அதிகாரி ஜி.சரவணன், “தளத்தின் நில உரிமையாளர்கள் டெவலப்பருக்கு பவர் ஆப் அட்டர்னி (ஜிபிஏ) உரிமையை செயல்படுத்தியதால், வாங்குபவர்களுக்கு ஆதரவாக பிரிக்கப்படாத பங்குக்கான விற்பனைப் பத்திரத்தை டெவலப்பர் செயல்படுத்தியதாகக் கூறினார். இதனால் நிறுவனமான முதல் பிரதிவாதி மட்டுமே ‘புரோமோட்டர்’ வகையின் கீழ் வருகிறார், நில உரிமையாளர் அல்ல” என்கிறார்.

வீட்டு உரிமையாளர் பில்டருக்கு அல்லாமல், மூன்றாம் தரப்பினருக்கு ஆதரவாக ஒரு பவர் ஆஃப் அட்டர்னியை நிறைவேற்றியிருந்தால், வழக்கு வேறுவிதமாக இருந்திருக்கும். எனினும், இந்த வழக்கு ஒரு கூட்டு முயற்சி நிறுவனத்திற்கானது (JV) இதனால், இந்த வழக்கில் நில உரிமையாளர்கள் புரோமோட்டர்கள் அல்ல என்று தமிழ்நாடு ரெரா தெரிவித்துள்ளது.

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

TNRera அலுவலகம் எங்கு உள்ளது?

முகவரி இதுதான்: கதவு எண்.1A, 1வது தளம், காந்தி இர்வின் பாலம் சாலை, எழும்பூர், சென்னை - 600008. அலுவலக நேரம்: காலை 10.00 முதல் மாலை 5.45 வரை (சனி மற்றும் ஞாயிறு விடுமுறை).

தமிழ்நாடு ரெரா விதிகள் எப்போது அறிவிக்கப்பட்டன?

தமிழ்நாடு அரசு G.O.Ms.No.112, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சட்டம் 2016-ன் கீழ், ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டத்தின் விதிகளைச் செயல்படுத்த 22.06.2017-இல், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) விதிகளுக்கு ஒப்புதல் அளித்தது.

ஒரு புரோமோட்டர் அல்லது முகவர் TNRera-வில் பதிவு செய்யாவிட்டால் என்ன ஆகும்?

ஒரு புரோமோட்டர், ரியல் எஸ்டேட் முகவர், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யத் தவறினால், அபராதம் அல்லது சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.

ப்ராப்பர்டி போர்ட்டல்கள் TNRera-வின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டுமா?

ஆம், ப்ராப்பர்டி போர்ட்டல்கள், தரகர்கள், இடைத்தரகர்கள், டீலர்கள் - அனைவருக்கும் RERA ஐடி வைத்திருக்க வேண்டும்; அவற்றை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும்.

 

Was this article useful?
  • ? (3)
  • ? (1)
  • ? (0)

Recent Podcasts

  • மஹாதா சத்ரபதி சம்பாஜிநகர் போர்டு லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல் ஜூலை 16 அன்று
  • மஹிந்திரா ஹேப்பினெஸ்ட் கல்யாண் – 2 இல் 3 டவர்களை மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் அறிமுகப்படுத்துகிறது
  • குர்கானின் செக்டார் 71ல் 5 ஏக்கர் நிலத்தை பிர்லா எஸ்டேட்ஸ் கையகப்படுத்துகிறது
  • குர்கானில் ரூ.269 கோடி மதிப்பிலான 37 திட்டங்களை ஹரியானா முதல்வர் தொடங்கி வைத்தார்
  • ஹைதராபாத்தில் ஜூன்'24ல் 7,104 குடியிருப்பு சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன: அறிக்கை
  • இந்திய அல்லது இத்தாலிய பளிங்கு: எதை தேர்வு செய்ய வேண்டும்?