இந்தியாவின் தென்மேற்கு முனையில் அமைந்துள்ள கடவுளின் சொந்த தேசம் என்று அழைக்கப்படும் கேரளா, உலகில் மிக அதிகளவு விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்தக் கட்டுரையில், கேரளாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 12 இடங்களையும், அங்கு செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களையும் பட்டியலிட்டுள்ளோம்.
வாழ்நாளில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 50 இடங்களில் கேரளாவும் ஒன்று என்று நேஷனல் ஜியோகிராஃபிக் டிராவலர் கருத்துத் தெரிவித்துள்ளது. ஒரு சமச்சீரான பருவ காலநிலை, அழகான கடற்கரைகள், அமைதியான கடற்காயங்கள், பசுமையான மலைவாசஸ்தலங்கள், ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் மற்றும் வனவிலங்குகள் ஆகியவை இதை ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக திகழச்செய்கின்றன.
மேலும் காண்க : வயநாட்டில் காண வேண்டிய 15 தலைசிறந்த சுற்றுலாத் தலங்கள்
கேரளாவின் சிறந்த சுற்றுலாத் தலங்கள் #1: ஆலப்புழா (Alleppey) கடற்காயல் பகுதிகள்
கொச்சியில் இருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆழப்புழா (அல்லப்பி) கேரளாவில் அவசியம் காண வேண்டிய மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஆலப்புழா (அல்லது ஆலப்புழா), பிரகாசமான பசுமையான கடற்காயங்கள் , பனை மரங்கள் சூழ்ந்த ஏரிகள், பசுமையான நெல் வயல்கள், வண்ணமயமான கடல் உப்பங்கழிகள் மற்றும் 150 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ‘கிழக்கின் வெனிஸ்’ என்று குறிப்பிடப்படும் புத்துணர்ச்சியூட்டும் அழகு கொழிக்கும் அமைதியான கடற்காயல்நீர் (பேக்வாட்டர்ஸ்) பகுதிகள் கேரளாவில் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களாகும். கடற்காயல்நீர் (பேக்வாட்டர்ஸ்) பகுதிகளில் அரை நாள் அல்லது முழு நாள் படகு பயணத்தைத் தேர்வு செய்யுங்கள். மேலும் அதிக சாகச பயணத்தை விரும்புபவர்கள் ஒரு முழு இரவு பயணத்தை மேற்கொள்ளலாம். அலப்பி(ஆழப்புழா) கடற்கலையானது தென்னிந்தியாவின் மிகத்தலைசிறந்த கடற்கரைகளில் ஒன்றாகும்; மேலும் இது கடல் நீர் பகுதிகள் (லாகூன்), ஆறுகள் மற்றும் கடற்காயங்களின் சங்கமமாக விளங்குகிறது மன்னாரசாலா ஆலயம் மற்றும் செயின்ட் மேரீஸ் சைரோ மலபார் கத்தோலிக் ஃபோரேன் தேவாலயம் ஆகியவையும் கண்டுகளிக்க் உகந்தவை. பத்தினருகெட்டு என்று அழைக்கப்படும் கிருஷ்ணாபுரம் அரண்மனையைத் காணத் தவறவிடாதீர்கள். இந்த கம்பீரமான அரண்மனை முன்னாள் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் கட்டப்பட்டது மற்றும் அதன் கேரள பாணி கட்டிடக்கலை, அரசவம்ச கலைப்பொருட்கள் மற்றும் சுவரோவியங்கள் ஆகியவற்றிற்கு மிகப் புகழ்பெற்றது, இது ஆலப்புழாவில் அவசியம் காண வேண்டிய மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும்.
கேரளாவின் சிறந்த சுற்றுலாத் தலங்கள் #2:: கொச்சி
கொச்சி (கொச்சின்), ‘கேட்வே டு கேரளா’ (கேரளாவின் நுழை வாயில்) என்றும் அழைக்கப்படுகிறது, இது கேரளாவின் சிறந்த சுற்றுலா இடமாக கருதப்படுகிறது. இது கேரளாவின் சிறந்த துறைமுக நகரங்களில் ஒன்றாகும். கேரளாவின் மிகப் பரபரப்பாக இயங்கிவரும் விமான நிலையமான கொச்சின் சர்வதேச விமான நிலையம், உலகின் முதல் முதலான சூரிய சக்தியால் இயங்கும் விமான நிலையமாக திகழ்வதற்காக ஐக்கிய நாடுகளின் 2018 சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருதைப் பெற்றது. ‘அரபிக்கடலின் ராணி’ (க்வீன் ஆஃப் அராபியன் சீ) என்று பிரபலமாக அறியப்படும் கொச்சி, உலகின் மிகச்சிறந்த இயற்கை துறைமுகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது மற்றும் பல நூற்றாண்டுகளாக உலகளாவிய அளவில் மசாலா வர்த்தகத்தின் மையமாகவும் திகழ்கிறது. கொச்சியின் அடையாளச்சின்னமாக திகழும் சீன மீன்பிடி வலைகள் 14 ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டுவருகிறது. பல கலாச்சாரங்கள் மற்றும் மதங்களின் அமைவிடமாகத் திகழும் கொச்சியின் காலனித்துவ அழகு மற்றும் பாரம்பரியத்தை ஐரோப்பிய கட்டிடக்கலையழகு ததும்பும் ஒரு பழைய புராதான நகரமான ஃபோர்ட் கொச்சியில் காணலாம். செயின்ட் பிரான்சிஸ் தேவாலயம் இந்தியாவில் ஐரோப்பியர்களால் கட்டப்பட்ட மிகப் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும். 1568 இல் கட்டப்பட்ட யூத வழிபாட்டுத் தலம், சீன ஓடுகள் மற்றும் பெல்ஜிய சரவிளக்குகளால் அழகுததும்பும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. டச்சு அரண்மனை மற்றும் செராய் கடற்கரை ஆகியவையும் முக்கியமாக காண வேண்டியவை.
மேலும் காண்க: பல்வேறு வகையான கேரளாவின் பாரம்பரிய வீடுகள்
கேரளாவின் சிறந்த சுற்றுலாத் தலங்கள் #3: தேக்கடி
வனஉயிரினம் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு தேக்கடி, ஒரு சொர்க்கமாக விளங்குகிறது மற்றும் இதன் குளிர்ந்த பருவகாலநிலை, பசுமைநிறைந்த வெளிகள், வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேயிலை, காபி மற்றும் நறுமணம் வீசும் மசாலாபயிர் தோட்டங்கள் நிறைந்த இந்த மலைப்பிரதேசம் கேரளாவில் அவசியம் காண சிறந்த இடங்களில் ஒன்றாகும். இங்கு 777 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பெரியார் வனவிலங்கு சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது மற்றும் தேக்கடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். 777 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இதில் , 360 சதுர கிலோமீட்டர்கள் அடர்ந்த பசுமையான காட்டுப் பகுதியாகும்.. பெரியார் வனப்பகுதி ஒரு வனவிலங்கு காப்பகமாகும், அங்கு படகில் இருந்தபடிய பாதுகாப்பாக வனவிலங்குகளை கண்டுகளிக்க முடியும். ஏரியில் யானைகள் விளையாடுவதும், புலிகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதும் காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக அமையும். யானைகளைத் தவிர, சிங்கவால் குரங்குகள் (மக்காக்), சம்பார் இன மான்கள், சிறுத்தை மற்றும் காட்டுப்பன்றி போன்ற விலங்குகளையும் காணலாம். பம்பா மற்றும் பெரியார் ஆறுகள் அடர்ந்த காட்டுப்பகுதியி பூங்கா வழியாக பாய்ந்து தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் செழிக்க ஆதரவாக அமைந்துள்ளது.. இது மலபார் கிரே ஹார்ன்பில், ஒயிட் பெல்லி ப்ளூ ஃபிளைகேட்சர், சன்பேர்ட், கிரேட் ஹார்ன்பில், கருப்பு கழுத்து நாரை மற்றும் நீலகிரி உட் பிஜியன் போன்ற பல வலசை போகும் (மைக்ரேட்டரி) பறவைகள் வந்தடையும் இடமாகவும் திகழ்கிறது. ட்ரீ ஹவுஸ் ரிசார்ட்டுகளில் தங்கி வனவிலங்குகளையும் பசுமை நிறைந்த வெளிகளையும் கண்டு ரசித்து அனுபவிக்கலாம்.
கேரளாவின் மிக அழகான இடங்கள் #4: குமரகம்(Kumarakom)
குமரகம் (கொச்சியிலிருந்து 56 கி.மீ. தொலைவில் உள்ளது) சதுப்புநில காடுகள், மரகத பச்சை நெல் வயல்கள் மற்றும் தென்னந்தோப்புகள் நிறைந்த கேரளாவின் மிக அழகான கண்கவரும் இடங்களில் ஒன்றாகும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, கேரள அரசு குமரகத்தை சிறப்பு சுற்றுலா மண்டலமாக அறிவித்துள்ளது. உப்பங்கழிகள், இயற்கை காட்சிகள், பறவைகள், நீர்வீழ்ச்சிகள், பாரம்பரிய வரலாறு மற்றும் உணவை விரும்பிகள் அனைவரும் அவசியம் காண வேண்டிய பசுமையான இயற்கை எழில் கொஞ்சும் சொர்க்கம் இது. இது கேரள மாநிலத்தின் மிகப்பெரிய ஏரியான வேம்பநாடு ஏரியின் பின்னணியில் அமைந்துள்ளது. குமரகத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்களில் வீட்டுப் படகு சவாரியும் ஒன்றாகும். 14 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இங்குள்ள பறவைகள் சரணாலயம், வலசை வரும் (மைக்ரேட்டரி) பறவைகளின் விருப்பமானதாகவும் பறவையியல் வல்லுனர்களின் மகிழ்ச்சிக்குகந்த இடமாகவும் உள்ளது. ஈக்ரெட்ஸ், டார்டர்ஸ், ஹெரான்ஸ், டீல்ஸ், நீர்ப்பறவைகள், குயில்கள், காட்டு வாத்துகள் மற்றும் சைபீரியன் நாரை போன்ற வலசை வரும் பறவைகள் கூட்டம் இங்கு வந்து செல்கின்றன. அருவிக்குழி நீர்வீழ்ச்சி, குமரகத்தின் முக்கியமான வசீகரிக்கும் இடமாகும். தாழத்தங்காடி மசூதி கேரளாவின் பாரம்பரிய பகுதிகளில் ஒன்றாகும். குமரகம் கடற்கரைக்கருகே அமைந்துள்ள பே ஐலேண்ட் ட்ரிஃப்ட் மியூசியத்தை வரலாற்று ஆர்வலர்கள் பார்வையிட உகந்த இடமாகும். . அந்தப் பகுதிக்கே உரித்தான சிறந்த பாரம்பரிய மீன் உணவுகளை உண்ணாமல் குமரகம் வருகை முழுமையடையாது.
கேரளாவில் காண வேண்டிய மிகச் சிறந்த இடங்கள் #5: திருச்சூர்
Source: Pinterest
திருச்சூர் கேரளாவில் அமைந்துள்ள மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். சாவக்காடு கடற்கரை, நாட்டிகா கடற்கரை, வடனப்பள்ளி கடற்கரை, சினேகதீரம் கடற்கரை மற்றும் பெரியம்பலம் கடற்கரை ஆகியவை கட்டாயம் காண வேண்டிய கடற்கரை பகுதிகளாக்கும்.. இந்த நகரம் தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு பிரபலமானது, மற்றும் இங்கு உற்பத்தி செய்யப்படும் நகைகளில் 70% கேரளாவில் நுகரப்பட்டுவிடுகிறது.. கேரளாவின் உன்னதமான கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட வடக்குநாதன் கோயில் திருச்சூரில் அவசியம் காணவேண்டிய மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். தேக்கிங்காடு மைதானத்தின் மேல் அமர்ந்திருக்கும் இக்கோயில் பிரமாண்ட புராணம் போன்ற பண்டைய இந்து நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இது பரமாத்மாஸ்ரீ. பரசுராமரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. குருவாயூர் கோவில் இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய கோவில்களில் ஒன்றாகும். விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரமான குருவாயூரப்பனை வழிபடும் இந்துக்களுக்கு இது ஒரு முக்கியமான வழிபாட்டுத் தலமாகும். திருச்சூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய மற்றொரு இடம் டோலோரஸ் அன்னையின் பசிலிக்கா தேவாலயம் ஆகும், இது நாட்டிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படும் இந்தோ-கோதிக் தேவாலயமாகும். இது ஒரு வெள்ளை முகப்பைக் கொண்டுள்ளது, இது ஒரு பெரிய (நேவ்) மேடையோடு 11 பலிபீடங்கள் மற்றும் கிறிஸ்தவ புனித நூல்களின் காட்சிகளை சித்தரிக்கும் பிரமிக்க வைக்கும் சுவரோவியங்களுடன் கூடிய உட்புறத்துடன் அடையாளம் காணக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
மேலும் காண்க: இந்தியாவில் காண வேண்டிய தலை சிறந்த 10 இடங்கள்
கேரளாவின் மிகச்சிறந்த சுற்றுலாதலங்கள் #6: பூவார் தீவு
தங்கமாக ஜொலிக்கும் மணல் பரப்பு, அமைதியான நீர் பரப்பு மற்றும் தனித்துவமான தாவர மற்றும் விலங்கு உயிரினங்களைக் கொண்ட பூவார் தீவு கேரளாவின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும், மேலும் தீவு, ஆறு மற்றும் கடல் சந்திக்கும் கடற்கரை முகத்துவாரத்தையும் கொண்டுள்ளது. பூவார் திருவனந்தபுரத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மற்றும் கேரளாவின் மிக அழகான இடங்களில் ஒன்றாகும். இந்த கற்பனைவளம் மிக்க இந்த முகப்புப் பகுதியில் மாசுபடாத கடற்கரைகள் அமைந்துள்ளன. மிதக்கும் தங்கும் குடில்கள், நிலப்பகுதியில் அமைந்துள்ள தங்கும் குடில்கள் ஆகியவையும் இங்கே இருக்கின்றன. அடர்ந்த சதுப்புநிலக் காட்டுப் பகுதிகளினூடே படகு சவாரி செய்யுங்கள் அல்லது மன அழுத்தத்தைக் குறைக்க மணிக்கணக்கில் அடிவானத்தின் மீது கவனம் செலுத்தி அமைதியாக ஓய்வெடுங்கள் . இந்த ஒரு சிறிய கடற்கரை கிராமத்தில், மோட்டார் படகு பயணங்கள், ஷிகாரா படகு பயணங்கள், சிறப்பு தேனிலவு பயணங்கள், சூரிய உதயம்-சூரிய அஸ்தமனம், மதிய உணவு மற்றும் இரவு உணவு பயணங்கள், பறவைகளை கண்டு களிக்கும் கப்பல் பயணங்கள் மற்றும் தீவைச்சுற்றி உலா வரும் பயணங்கள் ஆகிய பல்வேறு அம்சங்கள் உள்ளன. . பூவார் உப்பங்கழிகளின் வழியாக பயணிக்கும் போது, கிங்ஃபிஷர், பிராமினி கைட், நைட் ஹெரான், கடல் எக்ரெட் மற்றும் பிளாக் டார்ட்டர் போன்ற நீர்ப் பறவைகளைக் காணலாம். பூவார் கடற்கரை, நாள் முழுவதும் உலா வருவதற்கு சூரிய ஒளியில் தங்கம் போன்று மின்னும் மணல் பரப்பை வழங்குகிறது.
கேரளாவின் மிக அழகான இடங்கள் #7: மூணார்
கேரளாவில் உள்ள மூணாறு மிக அழகான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும். ஏறக்குறைய 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மூணாறு, மூடுபனியால் போர்த்தப்பட்ட , இயற்கை எழில் கொஞ்சும் பள்ளத்தாக்குகள், எண்ணற்ற நீரோடைகள், பெரிய நீர்வீழ்ச்சிகள், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் போன்ற பிரமிக்க வைக்கும் இயற்க்கைக் காட்சிகளால் நிரம்பியுள்ளது. மூணாறு மற்றும் அதைச் சுற்றிலும் பல அழகிய கண்கவர் நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஆடுக்காடு நீர்வீழ்ச்சிகள், லக்கம் நீர்வீழ்ச்சிகள் மற்றும் நைமக்காடு நீர்வீழ்ச்சி ஆகியவற்றுக்கு சுற்றுலா பயணிகள் அடிக்கடி வருகை தருகின்றனர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அரிய தாவரமான நீலக்குறிஞ்சிக்கு பெயர் பெற்ற தலம் மூணாறு. தேயிலை தோட்டங்களுக்கான தென்னிந்தியாவின் மிகப்பெரிய பகுதியான மூணாறு ஆண்டு முழுவதும் 0°C முதல் 20°C வரையிலான ஏற்ற இறக்கத்தோடான சுகமான சீதோஷ்ண நிலையோடு விளங்குகிறது. கொழுக்குமலை தேயிலை தோட்டம் மிக மிக உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் குறிப்பிடத்தகுந்த வகையில் புகைப்படங்களை எடுத்து மகிழும் வாய்ப்புகளுக்கான மிகச் சிறந்த பின்னணியை வழங்குகிறது. சுற்றுலாப்பயணிகள் தேநீரின் வெவ்வேறு சுவைகளை ருசிக்கலாம் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைகளின் நேரடி விற்பனை நிலையங்களில் இருந்து தேயிலையை வாங்கலாம். அன்னுமுடி சிகரம் தென்னிந்தியாவின் மிக உயரமான மலைச் சிகரமாகும். சராசரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,842 அடி உயரத்தில் உள்ள இந்த சிகரத்தின் அழகு அதன் தோற்ற அமைப்பில் வெளிப்படுகிறது. பிரமிடு அல்லது கூம்பு வடிவ சிகரங்களைப் போலல்லாமல், இது யானையை ஒத்த ஒரு பெரிய ஒற்றைப்பாறை போன்று காட்சியளிக்கிறது. . சலீம் அலி பறவைகள் சரணாலயத்தைத் காணத் தவறவிடாதீர்கள், இங்குதான் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கண்ணுக்குத் எளிதாக தென்படாத நீலகிரி தஹ்ர் ஐ காண முடியும்.
மேலும் காண்க : கோட்டயத்தில் காண வேண்டிய இடங்கள் t
கேரளாவில் காண சிறந்த இடங்கள் #8: கோவளம்
மயங்கச்செய்யும் கடல் பரப்பை காட்சிப்படுத்தும் கோவளம் கடற்கரை கேரளாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு இடமாகும். மணல்செறிந்த நான்கு கடற்கரைகரைகளாலான ஒரு நகரமான கோவளம், இந்தியாவின் மிகச் சிறந்த சர்ஃபிங் (அலைச்சறுக்கு விளையாட்டு) இடமாக உள்ளது. இது கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கோவில்களுக்கும் சூரிய அஸ்தமன காட்சிகளுக்கும் புகழ் பெற்ற இடமான கோவளத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம். 17 கிலோமீட்டர் நீலம் பரந்து விரிந்த கோவளம் கடற்கரை, ஹவா பீச், லைட்ஹவுஸ் பீச் மற்றும் சமுத்ரா பீச் ஆகிய மூன்று அழகிய, பிறை வடிவ கடற்கரைகளால் உருவாகியிருக்கிறது. இந்த இடம் யோகா பயிற்சி, உள்ளூர் உணவு வகைகள் மற்றும் புகைப்படக்கலை ஆகியவற்றுக்கு புகழ் பெற்றது. கலைக்கூடங்கள், உணவகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவை ரசிக்கத்தக்கவை. கோவலமண்டில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் லைட்ஹவுஸ் கடற்கரை ஒன்றாகும், மற்றும் ஜன நெரிசல் மிக்க ஒன்றாகும். இந்த கலங்கரை விளக்கத்தின் உயரம் சுமார் 30 மீட்டர். 140 படிக்கட்டுகளில் ஏறிச்சென்று மனதை மயக்கும் காட்சியை கண்டு அனுபவியுங்கள்.
கேரளாவின் மிகச் சிறந்த சுற்றுலாத்தலங்கள் #9: திருவனந்தபுரம்
திருவனந்தபுரம் அல்லது த்ரிவாண்ட்ரம் கேரளாவின் தலைநகரமும் மற்றும் மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றுமாகும். இது அதன் கண்கவர் கடற்கரைகளுக்கு பிரசித்திபெற்றது. உலகிலேயே அதிகளவில் செல்வம் நிறைந்த ஒன்றாகக் கருதப்படும் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயில் கட்டாயம் காண வேண்டிய ஒரு இடம். திருவனந்தபுரம் நகரை ஆளும் தெய்வமாக நம்பப்படும் ஸ்ரீ பத்மநாபசுவாமிக்கு இந்த கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மகாராஜா சுவாதி பலராம வர்மாவால் கட்டப்பட்ட குதிரைமாலிகா அரண்மனை அருங்காட்சியகத்தை கண்டு மகிழுங்கள். . இந்த அருங்காட்சியகத்தில் அரச குடும்பத்தின் மதிப்புமிக்க பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இரண்டு அரச சிம்மாசனங்கள் – ஒன்று பின்புற சாய்வுப் பகுதியில் சங்குச் சின்னம் பொறிக்கப்பட்ட போஹேமியன் படிகங்களால் ஆனது, மற்றொன்று தந்தத்தால் ஆனது – இவைகள் அருங்காட்சியகத்தின் முக்கியமாக கவனத்தை ஈர்ப்பவை. முக்கியமான மற்றொன்று நேப்பியர் அருங்காட்சியகம் ஆகும், இதில் கேரளாவின் பல்வேறு காலகட்டங்களைச்சேர்ந்த பிரமிக்கவைக்கும் சிற்பங்கள் மற்றும் நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 1880 ஆம் ஆண்டு முதல் மரக் கட்டிடத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் புத்த சிற்பங்கள், கோயில் வண்டிகள், தந்தச் சிற்பங்கள் மற்றும் கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கோயிலின் மரத்தால் செதுக்கப்பட்ட மாதிரி ஒன்றும் உள்ளது. அருங்காட்சியகத்தின் சிறந்த பகுதிகளில் ஒன்று கேரளாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் காலங்களிலிருந்து வரும் இசைக்கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாகும். . வெள்ளையணி ஏரி திருவனந்தபுரத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியாகும், மற்றும் இது திருவனந்தபுரத்தின் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கிராமம் மற்றும் உப்பங்கழியின் சில வசீகரக் காட்சிகளை வெளிப்படுத்துமிடமாக இந்த ஏரி அமைந்துள்ளது. ஒரு மலையின் உச்சியில் அமைந்திருக்கும் கனகக்குன்னு அரண்மனை அதைச் சுற்றியுள்ள தோட்டங்களின் மிக அழகிய நிலப்பரப்புகளை காட்சிப்படுத்துகிறது.. இந்த அரண்மனைக்கு தவறாமல் சென்று திருவிதாங்கூர் வம்சத்தின் பொன்னான நாட்களை நினைவுகூருங்கள்.
கேரளாவின் மிகச்சிறந்த சுற்றுலா தலங்கள் #10: கோழிக்கோடு
வாஸ்கோடகாமா முதன்முதலில் தனது காலடியை எடுத்து வைத்து இந்தியாவைக் கண்டுபிடித்த ஒரு புகழ்பெற்ற துறைமுக நகரம் கோழிக்கோடு (காலிகட்) ஆகும். வரலாற்று ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் இதற்குள்ள முக்கியத்துவதை தவிர, கூடுதலாக அமைதியான கடற்கரைகள், அகன்ற பரந்து விரிந்த கிராமப்புற பகுதிகள், வனவிலங்கு சரணாலயங்கள், அருங்காட்சியகங்கள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் மலைகள் ஆகியவைகள் இந்த புகழ்பெற்ற சுற்றுலாத்தலத்தில் அமைந்துள்ளன. கோழிக்கோடு நகரம் தேங்காய், மிளகு, ரப்பர், காபி, எலுமிச்சை எண்ணெய் மற்றும் முந்திரி ஆகியவற்றுக்கான ஒரு மையமாக உள்ளது. இன்றைய தேதியில் கோழிக்கோடு கேரளாவின் மிகச்சிறந்த நகரங்களில் ஒன்றாகும். கோழிக்கோடு கடற்கரை ஓய்வெடுக்கவும், அமைதியாக பொழுதைப் போக்கவும் உகந்த இடமாகும். ஒளிமயமான சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தைக் காண்பதற்கு இந்த கடற்கரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. படகு சவாரி செய்ய உகந்த இடமாகத் திகழும் கலிபோய்க, குரூஸிங், துடுப்புப் படகு சவாரி மற்றும் பெடல் படகு சவாரிகள் போன்றவற்றை அனுபவிக்க கண்டிப்பாக செல்ல வேண்டிய ஒரு இடமாகும். சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான மற்றொரு முக்கியமான இடம் மன்னஞ்சிரா சதுக்கம் ஆகும், இது முன்னாள் ஜாமோரின் மன்னர் மானவேதவன் உருவாக்கிய தெளிவான நீர் குளத்தின் நினைவாக பெயரிடப்பட்டது. இந்த இடத்தை சுற்றிலும் ஆங்காங்கே கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் உள்ளன. அரபிக்கடலில் இருந்து வரும் கடலுண்டி ஆற்றுக்கு அருகிலுள்ள, கடலுண்டி பறவைகள் சரணாலயம் ஏராளமான தீவுகள் மற்றும் குன்றுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது மற்றும் நன்கு அறியப்பட்ட சுற்றுலா தலங்களில் இது ஒன்றாகும். இந்த பறவைகள் சரணாலயத்தின் அழகு அற்புதமானது, ஏனெனில் இது கிட்டத்தட்ட 100 உள்ளூர் மற்றும் சுமார் 60 வலசை வரும் பறவை இனங்களால் நிறைந்து இயற்கையின் அழகை இசைக்கிறது.
கேரளாவில் மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்கள். # 11
வேகமன் கேரளாவில் இடுக்கி மாவட்டத்திலுள்ள கண் கவரும் அற்புதமான இயற்கை காட்சிகள் நிறைந்த ஒரு மலைவாசஸ்தலம். ஓய்வாக நாட்களைக் கழிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வீர சாகச செயல்களில் ஈடுபட விரும்புவோருக்கு இது மிக விருப்பமான ஒரு சுற்றுலாத்தலமாகும். மக்கள் இங்கு, மலையேறுதல்,வனஉலா,பாறையேறுதல், பாராகிளைடிங் போன்ற இன்னும் பல சாகச நடவடிக்கைகளை மேற்கொண்டு அனுபவித்து மகிழலாம். இது வருடம் முழுவதும் சுற்றுலா செல்ல கூடிய மிகச்சிறந்த இடமாக கருதப்படுகிறது.
கேரளாவில் மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்கள். # 12
ஒரு இனிய பழமையான நகரமான கொல்லம் அருகில் அமைந்துள்ள அஷ்டமுடி ஒரு மிகச்சிறந்த அமைதியான சூழலோடு கூடிய சுற்றுலாத்தலமாகும். இங்கு அமைந்துள்ள அஷ்டமுடி ஏரி சுற்றுலாப்பயணிகளை இந்தத் தலத்துக்கு கவர்ந்திழுக்கிறது. இந்த சுற்றுலாத்தளம், தென்னை நார்பொருட்கள் உற்பத்தி, பாரம்பரிய மீன் பிடித்தொழில் மற்றும் முந்திரிப்பருப்பு பதப்படுத்துதல் போன்ற தொழில்களுக்கு மிகப்பிரசித்தி பெற்ற இடமாகும்.
கேரளாவில் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்
இந்த கண்கவர் அழகிய கேரள நாட்டிற்கு வருகை தரும் தம்பதிகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கான ஏராளமான சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கு உள்ளன. சாகச விளையாட்டுகள் அல்லது குணப்படுத்தும் மசாஜ்கள் தொடங்கி அனைவருக்கும் உகந்த வகையில் ஏதாவது ஒன்று கேரளாவில் இருக்கிறது.
யானை சவாரி
கேரளாவில் மூணாறு மற்றும் தேக்கடியில் மேற்கொள்ளவேண்டிய அவசியமான சிறந்த விஷயங்களில் யானை சவாரி என்பது ஒன்றாகும். யானை குளியல், யானை சஃபாரி மற்றும் யானைகளுக்கு உணவளித்தல் போன்ற உற்சாகமான செயல்பாடுகளுக்காக கொச்சியில் உள்ள கோடநாடு யானைகள் சரணாலயத்திற்கும் சுற்றுலாப் பயணிகள் செல்லலாம்.
உப்பங்கழியில் படகுவீடு சவாரி
கேரள உப்பங்கழிபகுதிகளை கண்டு அனுபவிக்காமல் போனால் கேரளப் பயணம் முழுமையடையாது. பசுமையான, பனை மாற வரிசைகளால் சூழப்பட்ட நிலப்பரப்பு, பலதரப்பட்ட வனவிலங்குகள் மற்றும் உப்பங்கழி ஓரங்களில் அமைந்திருக்கும் கிராமங்கள் ஆகியவை படகு வீட்டு பயணத்தை ஒரு ஆழ்ந்த மன அமைதிநிறைந்த அனுபவமாக ஆழப்புழா அல்லது குமரகமில் ஒரு மறக்கமுடியாத ரம்மியமான பயணத்தின் ஒரு பகுதியாக அமையும். கேரளாவில் உள்ள படகுவீடுகளில் படுக்கையறைகள், வாழும் அறைகள் மற்றும் மேல் தளம் ஆகிய வசதிகள் இயற்கை காட்சிகளை ரசித்து மகிழும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆயுர்வேத மசாஜ் உடன் ஓய்வெடுங்கள்
கேரளாவில் உள்ள பல்வேறு ஆயுர்வேத ரிசார்ட்கள் காரணமாக, இந்த ‘கடவுளின் சொந்த தேசம்’ புத்துணர்ச்சியூட்டும் ஒரு அனுபவத்தைப் பெற உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை தன்னை நோக்கி ஈர்க்கிறது .மருத்துவ குணம் மிக்க மூலிகைகள் மற்றும் தாவரங்கள் மற்றும் சிறந்த ஆயுர்வேத ரிசார்ட்டுகள் நிறைந்த இந்த மாநிலம் ஒரு முழுமையான சுகாதார மையமாக மாறியிருக்கிறது. உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலத்திற்கு வழிவகுக்கும் அற்புதமான மசாஜ்கள் மூலம் பயிற்சி பெற்ற வல்லுநர்கள் உங்கள் மனம் குளிரச்செய்கிறார்கள். ஒரு ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு மேற்கொள்ளப்படும் ஒரு பயணத்தில் அங்கு ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெறுவது மற்றும் நச்சுப் பொருள் அகற்றும் சிகிச்சை (பஞ்சகர்மா என்று அழைக்கப்படும்) நடைமுறை ஆகியவை இடம்பெறுகின்றன. வழங்கப்படும் சிகிச்சைகளில் ஏதேனும் ஒன்றுக்கு நீங்கள் பதிவு செய்யலாம்.
கதகளி நடனத்தை கண்டு ரசியுங்கள்
தனித்துவமான ஒரு நடன வடிவமான கதகளி கேரளாவில் உருவானது. இப்பகுதியில் நிலவும் கலாச்சாரத்தின் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளில் இது ஒன்றாகும். சுற்றுலாப் பயணிகள் கேரளாவில் கதகளி நிகழ்ச்சியை கண்டிப்பாக பார்த்து அனுபவிக்க வேண்டும். இது ஆண் நடிகர்-நடனக் கலைஞர்கள் பாரம்பரியமாக அணியும் பரந்துபட்ட ஒரு விரிவான வண்ணமயமான அலங்காரம், ஆடை அணிகலன்கள் மற்றும் முகமூடிகளை உள்ளடக்கியது.
மசாலா பயிரிடப்படும் தோட்டங்களைப் பார்வையிடவும்
தேயிலை மற்றும் காபி தவிர, கேரளாவில் பல்வேறு வகையான மசாலாப் பொருட்கள் பயிரிடப்படுகின்றன. கேரளாவின் நறுமணமிக்க மசாலா தோட்டங்களுக்குச் சென்று மிளகு, அன்னாசிப் பூ, கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, வெணிலா மற்றும் ஜாதிக்காய் ஆகியவற்றை காணவும். தேக்கடி, வயநாடு மற்றும் மூணாறில் உள்ள மசாலா தோட்டங்களுக்குச் சென்று பார்வையிடலாம்.
கேரளாவில் கண்டிப்பாக உண்ண வேண்டிய உணவுகள்
கேரளாவின் பிரதான உணவு, மாநிலத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைந்தது. இது சைவ மற்றும் அசைவ உணவுகளின் விருப்பத்தேர்வுகளின் கலவையாகும். அரிசி, மீன் மற்றும் தேங்காய் ஆகியவை பொதுவாக பயன்படுத்தப்படும் உட்பொருட்கள். கேரளா இந்தியாவின் மசாலா மையம் என்று அழைக்கப்படுகிறது, எனவே, இயற்கையாகவே, மிளகாய், கறிவேப்பிலை, கடுகு, புளி, கருப்பு மிளகு, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, இலவங்கப்பட்டை மற்றும் பெருங்காயம் ஆகியவற்றி மணமும் சுவையும் நிறைந்திருக்கிறது. புதிய இளநீரை பருகி அனுபவியுங்கள். . உப்புமா, மசாலா தோசை, புட்டு, இட்லி, ஆப்பம் போன்றவை காலை உணவுக்கு பிரபலமானவை. கேரளாவின் மற்றொரு பிரபலமான உணவுகளில் ஒன்று இடியப்பம். கேரள சமையலில் நூலப்பம் என்றும் அழைக்கப்படும், இடியாப்பம் அரிசி மாவு, உப்பு மற்றும் தண்ணீரில் பல மெல்லிய இழைகள் அல்லது சேவை ஒன்றிணைந்த உணவாகும். . . புட்டு மற்றும் கண்டலா கறி கேரளாவின் புகழ்பெற்ற பாரம்பரிய் உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. புட்டு என்பது ஒரு உருளை வடிவ ஆவியில் வேகவைக்கப்பட்ட அரிசி கேக் ஆகும், இது தேங்காய் துருவலோடு சேர்த்து அச்சில் சமைக்கப்படுகிறது. பழுத்த வாழைப்பழம், தேங்காய் துருவல் மற்றும் கண்டலா கறி (காலா சன்னா வின் கேரள வகை ) ஆகியவற்றுடன் இதை பரிமாறலாம். திருவிழாக்கள் மற்றும் திருமணங்களின் போது பல்வகை உணவான சத்யா, வழங்கப்படுகிறது. இந்த மதிய உணவில் ரசம், பச்சடி, கிச்சடி, புளிச்சேரி, ஓலன், சாம்பார், பப்பட், வரவு, தோரன், அவியல் மற்றும் பாயசம் ஆகியவை வாழை இலையில் சூடான சாதத்துடன் பரிமாறப்படும்.
காரமான அசைவ உணவு வகைகளுக்கு கேரளா மிகவும் பிரபலமானது. கேரளாவின் சிறப்பு இனிப்பு வகைகளான பாலாடைப்பயசம் மற்றும் அல்வா ஆகியவை கட்டாயம் சுவைக்க வேண்டிய இனிப்பு வகைகளாகும். பாலாடைப்பயசம், மொறுமொறுப்பான சேமியா மற்றும் அரிசியை பாலில் வேகவைத்து, ஏலக்காய், சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்து சமைக்கப்படுகிறது.. உப்பங்கழி பிரதேசத்திற்கு செல்லும்போது வாழைப்பழ அல்வா கண்டிப்பாக சுவைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று. சுவைத்துப் பார்க்க வேண்டிய கேரள இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகளின் பட்டியலில் நெய்யப்பம் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். நெய்யப்பம் பொதுவாக அரிசி மாவு, தேங்காய், ஏலக்காய், பால் மற்றும் நெய் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டு வெல்லக்கலவை பொதிக்கப்படுகிறது.
கேரளாவில் ஷாப்பிங்
தேக்கடி, பெரியார், குமிளி, மூணாறு மற்றும் ஃபோர்ட் கொச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏலக்காய், மிளகு, இலவங்கப்பட்டை, காபி, கிராம்பு மற்றும் ஜாதிக்காய் போன்ற பல்வேறு மசாலாப் பொருட்களை வாங்கக்கூடிய ஒரு முக்கியமான ஷாப்பிங் மையமாகவும் கேரளா உள்ளது. அரோமாதெரபி மற்றும் மசாஜ்களை விரும்புபவர்கள் பலவிதமான எண்ணெய்களை எடுத்துக் கொள்ளலாம். கசவுமுண்டு என்பது கேரளாவின் பாரம்பரிய பருத்தி துணியாகும், இது பருத்தி இழையால் நெய்யப்பட்டு மற்றும் ஜரி பார்டரால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வாழைக்காய் சிப்ஸ் மாநிலத்தின் மற்றொரு பிரபலமான மற்றும் வாங்க வேண்டிய ஒரு பொருளாகும். கேரளா அதன் அளவுக்கதிகமான தேங்காய் உற்பத்திக்கு பெயர் பெற்றது மற்றும் தென்னை நார் பொருட்களுக்கும் பிரசித்திபெற்றது. கொச்சி தெருக்களில் விரிப்புகள், சுவரில் தொங்கவிடப்படும் பொருட்கள், சுத்தமான தேங்காய் எண்ணெய், பாய்கள், படகுகள் மற்றும் உருஸ் (படகு பந்தயத்தில் பயன்படுத்தப்படும் கேரளாவின் பிரபலமான பாம்பு படகுகளின் சிறிய மாதிரிகள்) ஆகியவற்றை வாங்கவும். நீங்கள் மினியேச்சர் யானைகளை வாங்கலாம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைத்தரும் அலங்கார ஆபரணமான நெட்டிப்பட்டத்தை எடுத்துக் கொள்ளலாம், இது ஒரு அழகான வீட்டு அலங்காரப் பொருளாகவும் வைத்துக்கொள்ளலாம். . கேரளாவில் ஷாப்பிங் செய்ய நீங்கள் செல்ல வேண்டிய சில பிரபலமான உள்ளூர் சந்தைகள் கொச்சியில் உள்ள கன்னிமாரா மார்க்கெட், மூணாறில் உள்ள மாட்டுப்பெட்டி அணை சந்தை, கொச்சியில் உள்ள மட்டஞ்சேரி மசாலா சந்தை, திருவனந்தபுரத்தில் உள்ள சாலை மார்க்கெட், மூணாரின் உள்ளூர் நகர சந்தை மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வார் சந்தை ஆகியவைகளாக்கும்.. கேரளாவில் 17 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள லோச்சி லுலு இன்டர்நேஷனல் ஷாப்பிங் மாலுக்குச் செல்லுங்கள்,
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
கேரளாவுக்கு சுற்றுலா செல்ல எது சிறந்த நேரம்?
இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவிற்குச் சுற்றுலா செல்ல வருடத்தின் எந்த நேரமும் உகந்த காலமாக இருந்தாலும், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான குளிர்கால மாதங்களே இனிமையானதாக இருக்கும் சிறந்தது. மூணாறு போன்ற கேரளாவில் உள்ள மலை வாசஸ்தலங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரை செல்லலாம். மழைக்காலம் கேரளாவின் அழகை அனைத்து வகையிலும் மேம்படுத்தி அற்புதமாக காட்சியளிக்கச்செய்யும்.
கேரளாவிற்குள் நான் எப்படி பயணிப்பது?
கேரளா முழுவதூம், சொகுசு பேருந்துகள் மற்றும் சுற்றுலாவுக்கான வாடகைக் கார்கள் கிடைக்கின்றன மற்றும் நல்ல சாலைகளால் இணைக்கப்ப்ட்டுள்ளது. சாலைகள் தவிர, படகுகள் மற்றும் ரயில் பாதைகள் போன்ற மாற்றுப் போக்குவரத்து வசதிகள் உள்ளன. . கொச்சி, திருவனந்தபுரம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு போன்ற முக்கிய நகரங்களில் ஆப் அடிப்படையிலான வாகன சேவைகள் கிடைக்கின்றன. கேரளா சுற்றுப்பயணத்தின் போது மிகவும் முதன்மையான ஒரு அனுபவத்தைப் பெற, புகழ்பெற்ற டூர் ஆபரேட்டரிடமிருந்து ஒரு தனியார் வண்டியை முன்பதிவு செய்வது சிறந்தது.
தேனிலவை அனுபவிக்க கேரளா ஒரு சிறந்த இடமா?
தேனிலவுக்கு செல்லும் ஒரு தம்பதியர், நிதானமான மசாஜ்களை அனுபவித்து , காதல் உப்பங்கழிகள், மலை வாசஸ்தலங்கள், தேயிலை வயல்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் கண்டு இன்புற்று தேனிலவை முழுமையாக அனுபவிக்கும் ஒரு தலமாக கேரளா அமைந்துள்ளது . தம்பதியர் வழக்கமான ஓய்வு விடுதிகளைத் தவிர்த்து மர வீடு அல்லது படகில் தங்கலாம்.